Thursday, October 27, 2011

சகோ PJ அவர்களுக்கு அவசர வேண்டுகோள்

அன்புச் சகோதரர் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... இந்த மடல் தூய இஸ்லாமியச் சிந்தனையுடனும், பூரண உடல் நலத்துடனும் உங்களைச் சந்திக்கட்டுமாக!

தங்களின் ஆன்லைன்பிஜே இணைய தளத்தின் தொடர் வாசகன் என்ற முறையில், கண்ணில் படும் மிக முக்கியப் பிழையொன்றினைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

கடந்த ஜுன் மாதம் 22 ந்தேதி கூகுள் தளம் தனது பல்வேறு இலவச சேவைகளில் ஒன்றாக தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கும் வசதியை வெளியிட்டது. இதற்கு மறுநாள் ஆன்லைன் பிஜே தளத்தில் கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியாகியிருந்தது.

http://www.onlinepj.com/katturaikal/onlinepj-in-international-language/

கூடவே "பிற மொழியறிந்த உங்கள் நண்பர் அல்லது உறவினருக்கு தஃவா செய்ய இனி சிரமப்பட தேவையில்லை. கூகுள் மொழிமாற்றி வசதி மூலம் அவர்களுக்குக் கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை அனுப்பலாம்" என்ற தள அறிவிப்பினைக் கண்டு அதிர்ந்தேன்.

அதற்குக் காரணம் கூகுள் ஏற்படுத்தியுள்ள இவ்வசதியில் ஏகப்பட்டப் பிழைகள் இன்னும் சீர் செய்யப்படாமலே இருப்பது தான்.

Google Translate Disclaimer என்ற தலைப்பில் இணையத்தில் தேடலை மேற்கொண்டால், இதே இலவச வசதியைப் பயன்படுத்தும் நூற்றுக் கணக்கான தளங்கள் (இஸ்லாமிய தளங்கள் அல்ல) இப்பிழை ஏதேனும் ஏற்பட்டால் அவை எங்களுடைய தவறு அல்ல... மாறாக, கூகுளின் மொழிபெயர்ப்பினால் ஏற்படும் தவறு என்று மறுதலிப்பதைக் காணலாம். (கீழ்க்கண்ட விக்கிபீடியா சுட்டியையும் காணவும்:
http://en.wikipedia.org/wiki/Google_Translate#Translation_mistakes_and_oddities ) - குர் ஆன், ஹதீஸ்களைப் போதிக்கும் ஆன்லைன் பீஜே தளத்திலும் மேற்கூறிய வாக்கியங்கள் இடம் பெற்றிருப்பது எவ்வகையில் பொருந்தும் என்று சிந்திக்கவும்.

ஓரிடத்தில், இத்தளத்தில் காணப்படும் தவறுகளுக்கு நீங்களே பொறுப்பு என்று குறிப்பிட்டுள்ளீர்கள் : http://onlinepj.com/AboutUs/
ஆனால் அதற்கு நேர் முரணாக, கூகுள் மொழிமாற்றத்தில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பல்ல என்றும் எழுதியுள்ளீர்கள்.

உங்கள் தளத்தை நம்பிக்கையுடன் அணுகி வாசிக்கும் ஓர் பிற மொழிச் சகோதரரின் நிலை என்ன? அவருக்குப் பரிந்துரை செய்தவரின் நிலை என்ன?  உங்கள் தள கூற்றைக் கண்டு இவ்வசதியை பயன்படுத்தி மொழிமாற்றம் செய்யப்பட்ட பிற மொழிப் புத்தகங்கள், கட்டுரைகளின் நிலை என்ன? உதாரணத்திற்காக, தளத்தின் ஓரிரண்டு பக்கங்களைப் பார்வையிடும் போது மட்டும் கண்ணில் பட்ட அபத்தங்களை மட்டும் கீழே உங்கள் பார்வை முன் வைத்துள்ளேன்.

---------------------------------------------------------------------------
untitled.JPG

----------------------------------------------------------------------------

aa.JPG
----------------------------------------------------------------------------

22.JPG
----------------------------------------------------------------------------

bb.JPG

----------------------------------------------------------------------------

5.JPG

----------------------------------------------------------------------------

4.JPG

----------------------------------------------------------------------------

2.JPG

----------------------------------------------------------------------------

1.JPG

----------------------------------------------------------------------------

இறைமறை, நபிமொழிகளுக்கான மொழிபெயர்ப்பினைத் தலைகீழாகக் காண்பித்து, பிற மொழி அறிந்தவர்களை நகைப்பிற்குள்ளாக்கவோ அல்லது மோசமான வழியில் இட்டுச் செல்லவோ வாய்ப்பளிக்கும் ஆபத்தான இந்த தானியங்கி மொழிபெயர்ப்பு வசதியை தங்கள் தளத்தில் இருந்து உடனடியாக நீக்கி, உரிய அறிவிப்பினை வெளியிடக் கோருகிறேன்.

எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்குக் கண்ணியத்தைத் தொடர்ந்து அளிப்பானாக!

நன்றி!

அன்புடன்,
முஹம்மத் சர்தார்

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!