Showing posts with label யூதர். Show all posts
Showing posts with label யூதர். Show all posts

Thursday, June 11, 2009

இஸ்ரேலிய பெண்ணைக் காப்பாற்றிய பாலஸ்தீனியர்!

இஸ்ரேலிய அரசின் கடுமையான நடவடிக்கைகளுக்கு உட்பட்டு பிரச்சனைகளின் இடையே வாழ்ந்து வரும் பாலஸ்தீனியர்கள், விபத்துக்குள்ளான ஒரு இஸ்ரேலிய தாய் மற்றும் குழந்தையின் உயிரைக் காத்து மனிதாபிமானத்துக்கு முன்னுதாரணம் ஆகியுள்ளனர்.

மேற்கு கரையிலுள்ள திகுவா நகரத்தில் வேகமாக கார் ஓட்டிச் சென்ற இஸ்ரேலிய பெண்ணின் கார், கட்டுப்பாடு இழந்து கவிழ்ந்தது. காரினுள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அப்பெண் மற்றும் நான்கு மாதமே ஆன அப்பெண்ணின் குழந்தையைப் பலஸ்தீனியர்கள் உடனடியாக மீட்டெடுத்து மருத்துவமனை சேர்த்தனர். தற்போது அப்பெண்ணும் குழந்தையும் நலமாக உள்ளதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.

இச்சம்பவத்தை இஸ்ரேலிய பத்திரிக்கைகளும் ஆச்சரியத்துடன் செய்தியாக்கியுள்ளன. திகுவா, இஸ்ரேல் ஆக்ரமித்து யூதர்களைக் குடியேற்றியுள்ள பிரதேசமாகும். இப்பகுதியில் வாழும் பாலஸ்தீனியர்களும் இஸ்ரேலியர்களும் இடையே அவ்வபோது கைகலப்பும் ஏற்படுவதுண்டு. எனவே இப்பகுதியில் வாழும் யூதர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே சாலையில் இரும்பு திரை நிர்மாணிக்க இஸ்ரேல் ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
**************************************************
"நற்குணம் வளர்ச்சியாகும், துற்குணம் அழிவாகும், உபகாரம் ஆயுளை அதிகப்படுத்தும், தர்மம் தீய மரணத்தைத் தடுக்கும்.'' (முஸ்னத் அஹ்மத்)



நபி அவர்கள் "அபூதர்ரே! உமக்கு நான் இரண்டு குணங்களைப் பற்றி அறிவிக்கட்டுமா? அவை இரண்டும் செய்வதற்கு மிக இலகுவானவை. மறுமையின் தராசுத்தட்டில் எல்லாவற்றையும் விட மிகக் கனமானவை'' என்று வினவினார்கள். அபூதர் (ரழி) "அல்லாஹ்வின் தூதரே! கூறுங்கள்'' என்றார். நபி அவர்கள், ""நற்குணத்தையும் நீண்ட மெªனத்தையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். எவனது கைவசம் என் ஆன்மா இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! இந்த இரண்டைப் போன்ற வேறு எதனாலும் மனிதகுலம் அழகு பெறவில்லை'' என்று கூறினார்கள். (முஸ்னத் அபூ யஃலா)



நபி அவர்கள் கூறினார்கள்: "தராசுத் தட்டில் வைக்கப்படுவதில் நற்குணத்தைவிட மிகக் கனமான அமல் வேறெதுவுமில்லை. நற்குணம் உடையவரை அவரது நற்குணம் தொழுகை, நோன்பால் கிடைக்கும் அந்தஸ்திற்கு உயர்த்திவிடுகிறது.'' (ஸுனனுத் திர்மிதி, முஸ்னதுல் பஸ்ஸார்)



நற்குணத்தை, ஈமான் பூரணமடைந்ததற்கான அடையாளமாக இஸ்லாம் கூறுகிறது. நபி அவர்கள் கூறினார்கள்: "ஈமானால் பரிபூரணமானவர் யாரெனில் அவர்களில் குணத்தால் மிக அழகானவரே.'' (ஸுனனுத் திர்மிதி)



நபி அவர்கள் கூறினார்கள்: "மறுமை நாளில் முஃமினின் தராசுத் தட்டில் நற்பண்புகளைவிட கனமானது வேறெதுவுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் இழி நடத்தை உள்ளவனையும் அருவருப்பாகப் பேசுபவனையும் கோபிக்கிறான்.'' (ஸுனனுத் திர்மிதி)



நபி அவர்கள் கூறினார்கள்: அசிங்கமான சொல், செயல்கள் இஸ்லாமில் உள்ளவை அல்ல. மனிதர்களில் அழகானவர் யாரெனில் அவர்களில் நற்குணத்தால் அழகானவரே. (முஸ்னத் அஹ்மத்)



"உங்களில் எனக்கு மிகவும் நேசத்திற்குரியவரும், மறுமையில் சபையால் எனக்கு மிகவும் நெருக்கமானவரும் யாரெனில் உங்களில் குணத்தால் மிக அழகானவரே. உங்களில் எனக்கு மிகவும் கோபத்திற்குரியவர், மறுமை நாளில் என்னிடமிருந்து மிகவும் தூரமானவர் யாரெனில் அதிகமாகப் பேசுபவர், அடுக்குமொழியில் பேச முயற்சிப்பவர், அகந்தை உடையவர் ஆகியோரே.'' (ஸுனனுத் திர்மிதி)



அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ""நான் நபி அவர்களுக்கு பத்து ஆண்டுகள் பணிவிடை செய்தேன். அவர்கள் என்னிடம் ஒருபோதும் "சீ' என்று கூறியதில்லை. நான் செய்த எந்த காரியத்துக்கும் ஏன் செய்தாய் என்றோ நான் செய்யாத எந்த காரியத்திற்கும் ஏன் அதைச் செய்யவில்லை? என்றோ கூறியதில்லை.'' (ஸஹீஹுல் புகாரி)



நபி அவர்கள் ஆபாசமாகவோ அருவருப்பாகவோ பேசியதே இல்லை. நபி அவர்கள் கூறினார்கள்: "உங்களில் சிறந்தவர் யாரெனில் உங்களில் நற்குணத்தால் அழகானவரே.'' (ஸஹீஹுல் புகாரி)



அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நபி அவர்கள் கருணையாளராக இருந்தார்கள். அவர்களிடம் எவர் வந்தாலும் அவருக்கு வாக்களித்து தன்னிடமிருப்பதைக் கொடுத்து உதவுவார்கள். ஒருமுறை ஜமாஅத் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. அப்போது ஒரு கிராமவாசி நபி அவர்களிடம் வந்து அவர்களின் ஆடையைப் பிடித்துக் கொண்டார். அவர் "என் தேவைகளில் சில நிறைவேறவில்லை; (இப்போது செய்யவில்லையெனில்) அதை நான் மறந்து விடுவேனோ என அஞ்சுகிறேன்'' என்றார். நபி அவர்கள் அம்மனிதருடன் சென்று அவரது வேலையை முடித்து வந்தபின் தொழவைத்தார்கள்.'' (அல் அதபுல் முஃப்ரத்)



**********************************************

Friday, November 21, 2008

திரை விலகுகிறது! கிறிஸ்தவமும் பவுலும்!!பாகம் 1

இன்றைய கிறிஸ்தவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய
பைபிளின் புதிய ஏற்பாட்டின் மொத்தமுள்ள 27 புத்தகங்களில் 14 புத்கங்களுக்கு சொந்தக்காரர் இந்த பவுல் என்று சொல்லப்படுகின்றது. இவர் எழுதியதாக சொல்லப்படும் புத்தகங்கள் அவர் வாழ்ந்த காலத்தில் உள்ளவர்களுக்கு கடிதங்களாக எழுதப்பட்டது என்றாலும், அவற்றையே தற்போது வேதம் என்றப்பெரில் பைபிளில் இனைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், புதிய ஏற்பாடு முழுவதும் இயேசுவுக்கோ அல்லது இயேசுவின்
சீடர்களுக்கோ சொந்தமானதல்ல.


பவுலும் கிறிஸ்தவமும்! (பாகம் - 1)
- அபூ இப்றாகீம்

நன்றி: ஏகத்துவம்


இன்றைய கிறிஸ்தவமதத்தின் அனைத்து கோட்பாடுகளுக்கும் சொந்தக்காரர்...

கிறிஸ்தவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் புதிய ஏற்பாட்டின் அதிகமான புத்தகங்களுக்கு ஆசிரியர் என்று நம்பப்படுபவர்...

இயேசுவே அறியாத பல புதிய கொள்கைகளை அவரின் பெயராலேயே போதித்தவர்...

இவர் இல்லையேல் இன்றைய கிறிஸ்தவமதமோ அதன் கொள்கைகளோ இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அந்த மதத்தில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்...

இயேசு, சத்தியத்தை உரத்து போதித்தார் என்பதன் காரணமாக யூதர்களின் கொலை வெறிக்கு ஆளாகி (பைபிளின் படி) சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை, ஆதாம் செய்த பாவத்தின் காரணமாக - அந்த பாவத்தைப் போக்கும் வகையில், இயேசு நமக்காக தன்னைத்தானே பலியிட்டுக்கொண்டார் என்று சொல்லி, அந்த கொலை சம்பவத்தை தியாகத்தின் சின்னமாக மாற்றி பிரச்சாரம் செய்தவர் ...

முன்னர் உள்ள தீர்க்கதரிசிகளும் இயேசுவும் பின்பற்றவேண்டும் என்று வலியுறுத்தி சொல்லப்பட்ட பழைய ஏற்பாட்டையோ அல்லது அதன் கட்டளைகளையோ நாம் பின்பற்றத் தேவையில்லை, அது பலவீனமடைந்துவிட்டது, அது பயனற்று போய்விட்டது என்று போதித்தவர் ... அவற்றில் தடுக்கப்படவைகளை அனுமதித்தவர்... அவற்றில் செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டதை செய்யலாம் என்று போதித்தவர்...

இவர் எதை போதித்தாரோ அதுதான் இன்றைய கிறிஸ்தவமதத்தின் ஆணிவேர், அது தான் இன்றைய கிறிஸ்தவ மதத்தின்தலையாய கொள்கை, இவர் சொன்ன கொள்கைகளை நம்பாதவன் கிறிஸ்தவனே அல்ல, அவன் இரட்சிப்பை பெற முடியாது - அவன் நித்திய ஜீவனை அடைய முடியாது என்று சொல்லப்படும் அளவுக்கு கிறிஸ்தவ மதத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதப்படும் அவர் யார்? என்றால்,

அவர் தான் கிறிதவர்களால் மிக உயர்வாக மதிக்கப்படும் புனிதப் பவுல் !

இப்படி சொன்னது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். ஆனால் அது தான் மறுக்கமுடியாத சத்தியமான உன்மை!

இவரைப்பற்றி வரலாற்று ஆசிரியர் மைக்கேல் ஹெச். ஹார்ட் அவர்கள் தனது 'THE 100' என்ற புத்தகத்தில் சொல்லும்போது,

'புதிய கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதில் முன்னனியில் இருந்தவர். பிற கிறிஸ்தவ எழுத்தாளரையும் சிநிதனையாளரையும் விட இவரே கிறிஸ்துவ இறையியலில் நிலையான, மிகப் பரந்த விளைவுகளை ஏற்படுத்தியவராவார்' என்கிறார். மற்றோர் இடத்தில்,

'கிறிஸ்துவத்தின் முக்கியமான அறநெறி, ஒழுக்க இயல் ஆகியவற்றுக்கு இயேசுநாதரே காரணமாக இருந்தாலும், அதன் இறைமையியலை (THEOLOGY) உருவாக்கியதில் முதன்மையானவரும், அதன்பால் மக்கள் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும், புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியின் ஆசிரியருமான தூய பவுல்தான்' என்கிறார்.

என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா பவுலைப் பற்றிக் கூறும் போது :

எழுத்தாளர்களின் ஒரு அங்கம், உதாரணத்திற்கு W. Wrede அவர்களைப் போன்றவர்கள் பவுலை கடுமையாக எதிர்க்கின்றார்கள். கிறிஸ்தவ மதத்தின் இரண்டாவது நிறுவனர் என்று ஆகும் அளவுக்கு பவுல் அதை மாற்றி விட்டார் என அவர்கள் கருதுகின்றனர். உண்மையைச் சொல்லப் போனால், அவர் தான் சர்ச்சினுடைய கிறிஸ்தவ மதத்தின் நிறுவனரே ஆவார். அந்த சர்ச்சினுடைய கிறிஸ்தவமோ இயேசு போதித்த கிறிஸ்தவத்திற்கு முற்றிலும் முரணானதாகும். நீங்கள் இயேசுவைப் பின்பற்றலாம் அல்லது பவுலைப் பின்பற்றலாம். ஆனால் இருவரையும் ஒரே நேரத்தில் பின்பற்ற முடியாது என அவர்கள் கூறுகின்றார்கள்.

தலைசிறந்த கிறிஸ்தவ வரலாற்றாசிரியரான ஜேம்ஸ் மாக்கினோன் பகிரங்கமாக உன்மைகளை ஒப்புக்கொள்கின்றார் :

'அவர் போதித்த கருத்தோட்டஙகள் அவரிலிருந்து உதித்தது தான் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. அவருக்கு இயேசு நேரடியாகப் போதித்தார் என்று அவர் கூறினாலும் அவர் போதித்தது இயேசுவின் போதனைகளுக்கு ஒத்ததா என்பது தெளிவில்லாமல் இருக்கின்றது. அதே நேரத்தில், நியாயப் பிரமாணம் பற்றி இயேசுவின் கொள்கை பவுலின் கொள்கையோடு ஒத்துப் போகவில்லை. இதை வைத்துப் பார்க்கும் போது, தான் இயேசுவிடமிருந்து நேரடியாக செய்திகளைப் பெற்றேன் என்று பவுல் கூறுவது பிரச்சினைக்குரிய ஒன்றாகத் தான் இருக்கின்றது' என்று கூறுகின்றார்.

இன்றைய கிறிஸ்தவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய பைபிளின் புதிய ஏற்பாட்டின் மொத்தமுள்ள 27 புத்தகங்களில் 14 புத்கங்களுக்கு சொந்தக்காரர் இந்த பவுல் என்று சொல்லப்படுகின்றது. இவர் எழுதியதாக சொல்லப்படும் புத்தகங்கள் அவர் வாழ்ந்த காலத்தில் உள்ளவர்களுக்கு கடிதங்களாக எழுதப்பட்டது என்றாலும், அவற்றையே தற்போது வேதம் என்றப்பெரில் பைபிளில் இனைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், புதிய ஏற்பாடு முழுவதும் இயேசுவுக்கோ அல்லது இயேசுவின் சீடர்களுக்கோ சொந்தமானதல்ல. (இது குறித்து மேலும் விரிவான கட்டுரை விரைவில் இன்ஷா அல்லாஹ்) மாறாக இவரும் இவரைச்சார்ந்தவர்களும் எழுதியதே. இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், இவரும் இவரைச் சார்ந்தவர்களும் ஏற்படுத்தியதே புதிய ஏற்பாடும், அதைச் சார்ந்துள்ளதாக சொல்லப்படும் இன்றைய கிறிஸ்தவ மதமும்.

பவுலின் நன்பரான லூக்காவால் எழுதப்பட்ட புதிய ஏற்பாட்டின் - அப்போஸ்தலர்களின் செயல் பாடுகள் பற்றி கூறும் - Acts of Appostle - என்ற புத்தகத்தில் மற்றவர்களைக் காட்டிலும் பவுலுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. Acts of Appostle என்ற ஆகாமம் இயேசுவின் சீடர்களின் செயல்பாடுகளைப் பற்றிக் கூறப்படும் புத்தகம் என்று கிறிஸ்தவர்கள் நினைத்துக்கொண்டிருந்தாலும் 28 அதிகாரங்கள் உள்ள புத்தகத்தில் 9 முதல் 28 வரையிலான அதிகாரங்கள் - கிட்டத்தட்ட 19 அதிகாரங்கள் - பவுலின் செயல்பாடுகள் பற்றித்தான் பேசுகின்றது. இந்த புத்தகத்தை அப்போஸ்தலர்களின் செயல் பாடுகள் என்று குறிப்பிடுவதை விட பவுலின் செயல்பாடுகள் என்று குறிப்பிட்டால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றுச் சொல்லலாம், என்கிற அளவுக்கு அந்த புத்தகத்தில் இவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

பவுலும் பவுலைச் சார்ந்தவர்களும் எதை எல்லாம் எழுதிவைத்தார்களோ அவை அனைத்துமே வேதவாக்கியம் என்ற சாயத்தை பூசி அவை அனைத்தும் கடவுளால் அருளப்பட்டது என்று சான்றிதழ் கொடுத்தவரும் இவரே. அதனால் தான் புதிய ஏற்பாட்டாளர்கள் எதை எழுதிவைத்தாலும் எப்படி எழுதி வைத்திருந்தாலும், அது எந்த அளவுக்கு முரண்பாடாகவும் குழப்பமானதாகவும் அறிவுக்கு பொருந்தாததாக இருந்தாலும், ஏன் இயேசுவின் வார்த்தைகளுக்கும் அவரது போதனைகளுக்குமே நேர் முரணாக இருந்தாலும் அவை அனைத்தையும் இன்றைய கிறிஸ்தவர்கள் அப்படியே கண்மூடி பின்பற்றுவதற்கு காரணம், பவுல் 2 திமோத்தேயு 3:16ன் மூலம் 'அவை அனைத்து வேதவாக்கியங்கள்' என்று கொடுத்த சான்றிதழே.

பவுலும் அவர் சொன்ன கொள்கைகளும் இல்லையேல் இன்றைய கிறிஸ்தவமதமே இருந்திருக்க வாய்ப்பு இல்லை என்கிற அளவுக்கு அம் மதத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதப்படும் பவுல் என்பவர் யார்? அவர் இயேசுவின் சீடரா? அல்லது இயேசுவின் உறவினரா? அல்லது இயேசு வாழ்ந்த காலத்தில் ஏதாவது ஒரு வகையில் அவருக்கு உதவி செய்தவரா? உன்மையில் அவர் யார்?

தொடரும்...
நன்றி ஏகத்துவம்

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!