Showing posts with label அப்துர் ரஹ்மான் வெற்றி. Show all posts
Showing posts with label அப்துர் ரஹ்மான் வெற்றி. Show all posts

Monday, April 7, 2014

அப்துர் ரஹ்மான் வெற்றி பெற,எழுத்தாளர் இப்ராஹிம் அன்சாரி,வக்கீல் முனாப் பங்களிப்பு

வேலூர் தொகுதி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் அப்துல் ரஹ்மான் வெற்றிக்காக முஸ்லீம் லீக் நகர நிர்வாகிகள் வேலூரில் மும்முரமாக களத்தில் நின்று வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

முன்னதாக நகர தலைவர் K.K. ஹாஜா தலைமையில், மாநில இளைஞர் அணியின் துணை செயலாளர் வழக்கறிஞர் அப்துல் முனாப், A. சேக் அப்துல்லா, அபூபக்கர், மாவட்ட பிரதிநிதி ஜமால் முஹம்மது, 'மணிச்சுடர் நிருபர்' சாகுல் ஹமீது, சம்சுதீன், சாகுல் ஹமீது, அன்வர் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூருக்கு புறப்பட்டு சென்றனர்.

இதுகுறித்து கடந்த சில நாட்களாக வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மும்முரமாக களத்தில் நின்று வாக்கு சேகரித்து வரும் முஸ்லீம் லீக்கின் பொறுப்பளார் அதிரை சேக் அப்துல்லா நம்மிடம் கூறுகையில்...
'இந்திய டுடே பத்திரிகை நடத்திய கருத்து கணிப்பில் இந்தியளவில் சிறந்த சேவையாற்றிய 20 பாராளுமன்ற உறுப்பினர்களில் நமது வெற்றி வேட்பாளர் 6 வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளார். கடந்த காலங்களில் அவர் மேற்கொண்ட சிறந்த பணிகளுக்கு கிடைத்த அங்கீகாரமாக இவற்றை நாங்கள் கருதுகிறோம். இதற்கு வலுசேர்க்கும் விதமாக சென்ற இடமெல்லாம் வேட்பாளருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது' என்றார்.
 http://theadirainews.blogspot.com/2014/04/blog-post_4915.html

தேவையில்லாமல்,மார்க்கத்துக்கு புறம்பான வகையில் பேசிய முஸ்லிம் லீக் தலைவர் காதர் முகைதீன்
  மற்றும் முஸ்லிம் லீக்  கட்சி என்ற அடிப்படையில் அல்லாமல தனிப்பட்ட முறையில்
சகோ அப்துர் ரஹ்மான் mp அவர்கள் சேவை செய்யக் கூடிய நல்ல மனிதர் என்ற முறையில் அவர் வெற்றி பெற நாம் உழைப்பதோடு,துவாவும் செய்வோம்.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!