Showing posts with label படிப்பினை. Show all posts
Showing posts with label படிப்பினை. Show all posts

Saturday, July 30, 2011

படிப்பினை


அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ் அளவற்ற அருளாலன்நிகரற்ற அன்புடையோன் என்பதற்கு மேற்காணும் திருமறை வசனம் மிகப் பெரிய சான்றாகும்.
சுவனத்திற்கள் நுழைந்து அதன் எண்ணிலடங்கா இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் நன்மைகள் அதிகம் சேர்த்தாக வேண்டும் அதனால் மக்கள் நற்செயல்கள் புரியம் போது அதை ஒன்றுக்குப் பத்தாக்குகிறான் அளவற்ற அருளாலன் அல்லாஹ்.
மக்கள் நற்செயல்கள் புரிந்து நன்மைகளை அதிகரித்துக் கொள்வதற்காகவும்தீய செயல்களிலிருந்து தங்களை தடுத்துக் கொள்வதற்காகவும் அவரவர்கள் பேசும் மொழியிலிருந்தே தூதர்கள் தேர்வு செய்யப்பட்டு அவ்வப்பொழுது தேவையான விளக்கங்களை ( வேதங்களை ) அனுப்பிக் கொண்டிருந்தான். 
திருமறைக்குர்ஆனுடன் வேதங்களின் வருகை முற்றுப் பெற்றது.
முஹம்மது நபி(ஸல்) அவர்களுடன் இறைத்தூதர்களின் வருகை முற்றுப்பெற்றது.
தூதர்கள்மற்றும் வேதங்களின் வருகை முற்றுப் பெற்றதன் பின்னரும் கூட இறுதி தூதர் முஹம்மது நபியின் சமுதாய மக்களில் திருமறைக் குர்ஆனையும்அவர்களின் தூய்மையான வாழ்க்கை வரலாற்றையும் படித்தறிந்தவர்களைக் கொண்டு மேற்காணும் நன்மை,தீமைகளைப் பிறித்தறிவிக்கும் அரும்பணியை மேற்கொள்ளும்படி இறைவன் ஏவினான். 3:104. நன்மையை ஏவிதீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
நன்மைக்குப் பத்து !
நன்மைதீமைகளைப் பிரித்தறிவிக்கும் அரும் பணிகளை செய்யக்கூடிய நன்மக்களாலும்அதை ஏற்றுக் கொண்ட நன்மக்களாலும் அவர்களும் மனிதர்கள் என்ற ரீதியில் சில நேரம் தவறிழைத்து விடும் சூழ்நிலைகள் ஏற்பட்டு விடுவதுண்டு அதனால் பதியப்படும் பாவத்தால் அவர்களுடைய முந்தைய தியாகங்கள் அடிபட்டு விடாமல் இருப்பதற்காக அவர்களின் மீது கருணை கொண்ட அல்லாஹ் அதை ஒன்றாக மட்டுமேப் பதியச்செய்தான். 6:160. நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு (பரிசு) உண்டு. தீமை செய்தவர்தீமை அளவே தண்டிக்கப்படுவார். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
தீமைக்கு ஒன்று !
நற்காரியங்களுக்கு பதியப்படும் ஒன்றுக்குப் பத்து என்ற அளவே தீயகாரியங்களுக்கும் பதியப்பட்டால் மக்களில் யாரும் அதை அநீதி என்று சொல்லப்போவதில்லை ஒன்றுக்கு ஒன்று கணக்கு சரிதான் என்றே கணிப்பர்;. உலகில் நற்காரியங்களை விட தீயகாரியங்களே மிகைத்திருப்பதால் தீமைக்கும் ஒன்றுக்கு பத்து மடங்குகளாக்கினால் தீமைகள்,நன்மைகளை முந்தி விடும் அதன் மூலம் சுவனம் தடுக்கப்பட்டால் அது அவனுக்கு இழைக்கப்படும் அநீதி என்று அனைத்து மக்களின் மீதும் அளப்பரிய அன்புள்ளம் கொண்ட அல்லாஹ் தொலைநோக்கு சிந்தனையுடன் அதை ஒன்றாக மட்டுமேப பதிகிறான்.  
அந்த ஒன்றையும் செயலிழக்கச் செய்வதற்கான அல்லாஹ்வின் சலுகை !
நிரந்தரமான சுவனத்தின் இன்பத்தை அனுபவிப்பதற்காக அந்த ஒரு பாவமும் அவருடன் நிரந்தரமாக தங்கி விடாமல் அதையும் செயலிழக்கச் செய்வதற்காக அதன் பின்னர் செய்யும் நன்மையைக் கொண்டு அதை அழித்து விடுவதாகவும் பலஹீன மனிதனின் மீது கருணை கொண்ட நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ் மேலும் ஒரு மகத்தான சலுகையை வழங்குகிறான். ...நன்மைகள் தீமைகளை அழித்து விடும். இது படிப்பினை பெறுவோருக்குப் படிப்பினை. 11:114.
அந்த ஒன்றையும் தடுத்துக் கொள்வதற்கான அண்ணலாரின் அழகிய உபதேசங்கள்.
நீ எங்கிருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! ஒரு தீங்கைத் தொடர்ந்து நல்லதை செய்துகொள்! அந்த நன்மை தீங்கை அழித்துவிடும்மக்களிடம் நற்குணத்துடன் நடந்துகொள் என்று இறைத்தூதர் (ஸல்)அவர்கள் கூறியதாக அபூதர் மற்றும் முஆத் இப்னு ஜபல்(ரலி)ஆகியோர் அறிவிக்கின்றனர்.நூல்: திர்மிதி.
மேலே கூறப்பட்ட நபிகளாரின் எங்கிருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! மக்களிடம் நற்குணத்துடன் நடந்துகொள் என்ற முத்தான இரண்டு உபதேசங்களை யார் தன் வாழ்நாளில் முறையாக கடைப்பிடித்தொழுகுவார்களோ அவர்களால் அதிகபட்சம் தீய காரியங்களிலிருந்து விலகி வாழ முடியும்.
எங்கிருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சிக் கொன்டால் !
Ø              எங்கிருந்தாலும்என்ன செய்து கொண்டிருந்தாலும்,எல்லா நிலைகளிலும் அல்லாஹ் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் என்ற அச்ச உணர்வு ஒருவருக்கு உருவானால்  அவர் முதலாளியின் அறிவுக்கு எட்டாது என்றெண்ணி வேலை செய்யும் நிருவனத்தில் தனது திறமைக்கேற்ப செய்யத் துணிய மாட்டார்நேர்மையாக பணியாற்றுவார்சொந்த நிருவனம் போல் கருதி நடந்து கொள்வார்.

Ø  மக்களில் அதிகமானோருக்கு விளங்கிக் கொள்ள முடியாது என்றுக் கருதி சீனாவிலிருந்து குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து ஜப்பான்அமெரிக்கா என்ற ஸ்டிக்கர் ஒட்டி அதிக விலைக்கு விற்பனை செய்து மக்களை ஏமாற்ற துணிய மாட்டார்குறைந்த லாபமாக கிடைத்தாலும் உண்மையைப் பேசி விற்பனை செய்வார். 

Ø  அடுத்தவனின் (அப்பாவிகளின்) சொத்தை அபகரிக்க ஆசைப்பட மாட்டார்அடுத்தவனின் மனைவியை அனுபவிக்க ஆசைப்பட மாட்டார் தனக்கு உரிமையற்றவைகளிலிருந்து விலகி விடுவார்.
மக்களிடம் நற்குணத்துடன் நடந்து கொண்டால் !
Ø  தன்னைப் போன்ற பிற மனிதர்களிடம் நற்குணத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற நற்சிந்தனை உருவானால்,அவரிடம் பொதுநலச் சிந்தனை மேலோங்கிவிடும்.

Ø  பொதுநலம் பேணும் உயர் சிந்தனை உருவாகி விட்டால் சுயநலம் செயலிழந்து விடும்சுயநலமே பெரும்பாலான தவறுகள் இழைப்பதற்கு காரணமாகிறது, 

Ø  பொதுமக்களிடம் நற்குணத்துடன் நடந்து நன்மதிப்பைப் பெற்றவர் தவறு செய்யத் துணிய மாட்டார். 

Ø  தனிமையில் அல்லாஹ்வுக்கு அஞ்சுவார்வெளியில் மக்களின் விமர்சனத்திற்கு வெட்குவார்,
கன்ட்ரோலை மீறி விடும் அன்றாட காரியங்கள்
அண்ணலாரின் அறவுரைகளின் படி அல்லாஹ்வை அஞ்சிக் கொண்டும்பொதுமக்களிடம் நற்குணத்துடனும் பழகிக் கொண்டும் ஒருப் பாவம் கூட செய்யாமல் வாழ வேண்டும் என்று நினைக்கும் மக்களால் கூட கீழ்காணுமாறு சிறிய பாவங்கள் அவர்களுடைய கன்ட்ரோலை மீறி விடுவதை அன்றாட வாழ்;க்கையில் காண்கிறோம். 
உதாரணத்திற்கு
Ø  வாகனம் ஓட்டும் பொழுது ஒருவர் ஓவர்டேக் செய்து விட்டால் அல்லது நகரச் சொல்லி காதைக் கிழிக்கும் ஹாரன் கொடுத்து விட்டால் அதனால் கோபம் தலைக்கேறி கண்ணாடியைத் திறக்காமல் அவரை இன்ன வார்த்தைகள் என்றில்லாமல் திட்டிவிடுகிறோம்கண்ணாடியைத் திறக்காமல் திட்டுவதால் அதை அவர் செவியுறாமல் இருக்கலாம் எந்நேரமும் கண்காணித்துக் கொண்டிருக்கின்ற அல்லாஹ் செவியுறாமல் இருப்பானா நம்முடன் இருக்கும் மலக்குகள் அதை பதியாமல் விட்டு விடுவார்களா ? 

Ø  வீதியில் போகின்ற பெண்களை வீட்டுக்காரம்மா உடன் வராததால் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பார்த்து ரசிக்கச் சொல்லி ஷைத்தான் தூண்டுகிறான் வீட்டில் விட்டு வந்த வீட்டுக்காரம்மாவுக்கு இது தெரியாமல் போகலாம். எந்நேரமும் கண்காணித்துக் கொண்டிருக்கின்ற அல்லாஹ் இதைப் பார்க்காமல் இருப்பானா நம்முடன் இருக்கும் மலக்குகள் இதைப் பதியாமல் விட்டு விடுவார்களா ? 

Ø  பணி புரியும் அலுவலகத்தின் நிர்வாக மேலாளரிடம் கோப்புகளை காண்பிக்கும் பொழுது அவர் எதாவது குறையை சுட்டிக்காட்டினால் அங்கு தலையை அசைத்து விட்டு வெளியில் வந்ததும் மனதுக்குள் அல்லது சக ஊழியரிடம் அவரை வசைப்பாடுகிறோம்மேலாளர் அதை செவியுறாமல் இருக்கலாம் ஆனால் எந்நேரமும் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்ற அல்லாஹ் செவியுறாமல் இருப்பானா?நம்முடன் இருக்கும் மலக்குகள் அதை பதியாமல் விட்டு விடுவார்களா ?   

Ø  ீட்டிற்குள் நுழைந்தால் வெளியில் நடந்த டென்ஷன்களை மனைவியின் தலையில் கொட்டித் தீர்க்கின்றோம்.

Ø  தொலைகாட்சியின் முன்பு அமர்ந்தால் நியூஸ் மட்டும் பார்க்காமல் எண்ணிலடங்கா சேனல்களில் புகுந்து கொண்டு எப்பொழுது அதிலிருந்து விடுபடுவோம் என்றே தெரியாத நிலை.

Ø  வீட்டில்அல்லது அலுவலகத்தில் இருக்கும் இன்டர்நெட்டில் புகுந்து விட்டு வெளியேறும் பொழுது கண்கள் கற்புடன் திரும்பபுவதற்கு உத்தரவாதமில்லாத நிலை.

Ø  இவ்வாறாக வீட்டை விட்டு புறப்பட்டு சொந்த அலுவல்களை முடித்துவிட்டு மீண்டும் வீட்டை வந்தடைந்து தொலைகாட்சிமற்றும் இணையத்திற்குள் புகுந்து வெளியே வருவதற்குள் நம்முடைய கன்ட்ரோலை மீறுகின்ற எத்தனையோ சிற் சிறிய பாவகாரியங்கள் சொல்லி மாளாது. 
என்ன தான் தீர்வு !
புள்ளிகள்கோடுகளாகவும்கோடுகள் ஓவியங்களாகவும் உறுப்பெறுவதுபோல் சாதாரணமாக நினைத்து விட்டு விடும் இந்த செயல்பாடுகளால் பதியப்படும் ஒவ்வொரு பாவங்களும் மலைபோல் ஆகி  நன்மைகளை முந்தி விடக்கூடாது என்பதால் தன்னை மீறிவிட்டப் பாவத்தைக் கழுவுவதற்கு அதற்கடுத்து விரைந்து நற்காரியமாற்ற வேண்டும்,
அன்றாடம் நம்மைக் கடந்து செல்லும் ஏனைய செயல்பாடுகளில் எது பாவகாரியம் என்று நம்மால் துல்லியமாக அறிந்து கொள்ள முடியாத அளவுக்கு கலாச்சார சீரழிவுகள் மலிந்து விட்டதால் சொந்த அலுவல்கள் போக எஞ்சிய நேரத்தை
Ø  அல்லாஹ்வும்அல்லாஹ்வின் தூதரும் நமக்கு ஏவிய அழைப்புப் பணியை மேற்கொள்வதுஅதற்காக செலவு செய்வதுஅதை செய்பவர்களுக்கு பொருளாதாரம் மற்றும் ஆலோசனைகள் மூலமாக உதவுவது,

Ø  தர்ம காரியங்களில் ஈடுபடுவது,

Ø  நம்முடைய பராமரிப்பிற்கு கீழுள்ளவர்களை முறையாக கவனிப்பது,

Ø  நமக்கு கீழ்நிலையில் உள்ள பொதுமக்களின் மீது இறக்கம் கொண்டு பொதுநலப்பணிகளில் பங்கு வகிப்து.
போன்ற நற்காரியங்களில் அதிகம் ஈடுபட்டால் நன்மைகள் அதிகரிக்கும் தெரிந்து செய்யும் பாவங்களும்தெரியாமல் செய்யும் பாவங்களும் செயலிழக்கும். ...நன்மைகள் தீமைகளை அழித்து விடும். இது படிப்பினை பெறுவோருக்குப் படிப்பினை. 11:114.
இறுதியாக இரண்டு செய்திகள்
*      தீய காரியத்திற்கு பாவம் ஒன்றுஅதையும் அதற்கடுத்து செய்யும் நற்காரியத்தில் ஈட்டும் நன்மையைக் கொண்டு அழித்து விடலாம் என்கின்ற அல்லாஹ்வின் அருட்கொடையை தவறாக பயன்படுத்த ( தீயசெயலை தாமாக விரும்பி செய்து விட்டு அதற்கடுத்து நற்செயல் என்று திட்டமிட்டு தொடருவதற்கு ) முயற்சிக்க கூடாது. சலுகையை சலுகையாக பயன்படுத்த வேண்டும்வரம்பு மீறக்கூடாது வரம்பு மீறுவோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். ...இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும்,அருளுமாகும். இதன் பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.2:178

*      அல்லாஹ்வும்அல்லாஹ்வின் தூதரும் தீமைக்கடுத்து ஒரு நன்மையை செய்யும்படி கட்டளைப் பிறப்பித்திருப்பதால் அதற்கு முன் அட்வான்ஸாக செய்து அனுப்பிய நன்மைகளில் ஒன்றை எடுத்து புதிய பாவத்தை இறைவன் அழித்துக் கொள்ளட்டும் என்றுக் கருதி வெறுமனே இருந்து விடாமல் தீமைக்கடுத்து விரைந்து நற்செயல் ஒன்றை செய்தேயாக வேண்டும் அவ்வாறு செய்தால் மட்டுமே செவியுற்றோம்;கட்டுப்பட்டோம்...2:285 என்ற திருமறை வசனத்தை செயல்படுத்திய குர்ஆனிய சமுதாயாவோம். 
அல்லாஹ் மிக அறிந்தவனாக இருக்கின்றான்.

Sunday, January 18, 2009

பள்ளிப் பருவ செக்ஸ் அவலங்கள்,ஒரு அதிர்ச்சி ரிபோர்ட்!

பள்ளியறை' என்ற சொல்லே தமிழில் கொஞ்சம் விவகாரமான சொல்தான்! அது பள்ளி வகுப்பறையையும் குறிக்கும். காதலர்கள் துயில் கொள்ளும் கட்டிலறையையும் குறிக்கும். இப்படி இரண்டு பொருள் தரும் பள்ளியறை என்ற வார்த்தையை எந்த மகானுபாவன் எந்த நேரத்தில் உருவாக்கினாரோ தெரியவில்லை? அந்த இரண்டு அர்த்தங்களுமே ஒன்றுதான் என்ற நிலை மெல்ல மெல்ல உருவாகி வருகிறது.

ஐ.டி. எனப்படும் ஹைடெக் மையங்கள்தான் இதுநாள் வரை முறை தவறிய பாலுறவுகளுக்கு மொத்தக் குத்தகைக்கான இடம் என்று நினைக்கிற ஆளா நீங்கள்? இதோ அந்த எண்ணத்தை ரப்பர் வைத்து அழித்து விடுங்கள். ஐ.டி. நிறுவனங்களுக்கு ஏன் போக வேண்டும்? நம்மூர்ப் பள்ளிகளில் கூட பாலியல் உறவுகள், அதிலும் பிஞ்சில் பழுத்த பாலுறவுகள் கொடிகட்டிப் பறக்கின்றன. ``ஒரே ஓர் அரசுப்பள்ளியில் மட்டும் ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு படிக்கும் 32 மாணவர்கள் மன்மதக் கலையில் வெளுத்து வாங்கியிருக்கிறார்கள். ஆளுக்கு இரண்டு பெண்கள் வீதம் அவர்கள் செக்ஸ் உறவு வைத்திருக்கிறார்கள். அந்தப் பெண்களில் மாணவிகளும் அடக்கம்'' என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிடுகிறார் கோவையைச் சேர்ந்த மனோதத்துவ மருத்துவர் மொஹைய்தீன்.

கோவையில் `ஞானவாணி' என்ற எஃப்.எம். வானொலியில் `மாணவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம், அதைத் தீர்க்கும் முறைகள்' பற்றி கடந்த இரண்டாண்டுகளாகப் பேசி வருகிறார் மருத்துவர் மொஹைய்தீன். உளவியல் தொடர்பான நேயர்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் அதில் அவர் பதிலளிப்பார். அதுமட்டுமல்ல, மதுரை, திண்டுக்கல், திருச்சி, கோவை, ஊட்டி, கூடலூர், ஈரோடு, சேலம், நாமக்கல் போன்ற பல பகுதிகளுக்குச் சென்று அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இலவச மனோதத்துவ ஆலோசனைகளை வழங்குகிறார்.

மருத்துவர் மொஹைய்தீனை நாம் சந்தித்துப் பேசினோம். பள்ளிகள் தற்போது பாலியல் கூடங்களாக மாறிவரும் பிரச்னை, மாணவர்கள் மதன், ரதியாக மாறும் பிரச்னைக்குள் போகும் முன்னால் அதற்கு முத்தாய்ப்பாக சில விவரங்களைச் சொன்னார் அவர்.

```இந்தியா முன்னேற வேண்டுமானால் வருங்கால இளைஞர்களான மாணவ மணிகளின் மன சலனங்கள் அகற்றப்பட வேண்டும்' என்று நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அடிக்கடி கூறுவார். இது என்னை மிகவும் ஈர்த்த கருத்து. தற்போது பள்ளிப் பருவத்திலேயே மாணவ, மாணவிகள் மனரீதியாக பல்வேறு பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள் என்பது உலகறிந்த உண்மை.

சில மாணவர்கள் படிப்பில் நாட்டமில்லாமல் எதையோ பறிகொடுத்ததைப் போல இருப்பார்கள். நன்றாகப் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவர்களால் படிக்க முடியாது. அந்த வேளையில் அவர்களுக்குத் தகுந்த மனப்பயிற்சி அவசியம். இல்லாவிட்டால் அதுவே அவர்களை மனநோயாளிகள் ஆக்கிவிடும்.

இப்படியான மாணவ, மாணவிகளை `சைக்காலஜிஸ்ட்' எனப்படும் மனோதத்துவ மருத்துவர்களிடம் கூட்டிப்போக வேண்டுமே தவிர, `சைக்கியாட்ரிஸ்ட்' எனப்படும் மனநோய் மருத்துவர்களிடம் கூட்டிப்போய் சிகிச்சை தரக் கூடாது. அவர்கள் மயக்க மருந்து தந்து தூங்க வைத்து, ஒருகட்டத்தில் அந்த மாணவர்களை மன நோயாளிகளாகவே மாற்றி விடுவார்கள். ஆனால் நாங்களோ, அவர்களுக்கு ஒரு சில பயிற்சிகளைக் கொடுத்து எங்கள் வசமாக்கி, அவர்களின் ஆழ்மன எண்ணங்களை வெளிப்பட வைத்து, `இந்த சமூக முறையில் இதுதான் சாத்தியம், வேலி தாண்டினால் வாழ்க்கை சிக்கலாகவும், கேலிக்குரியதாகவும் ஆகி விடும்' என்று பேசி அவர்களை இயல்புநிலைக்குக் கொண்டு வருகிறோம்.

ஒருமுறை ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவனை என்னிடம் கூட்டி வந்தார்கள். நூற்றுக்குத் தொண்ணூறு மார்க் வாங்கும் அவன் அண்மைக்காலமாக ஐந்து, பத்து மார்க் வாங்குகிறான் என்பதுதான் அவனிடம் இருந்த பிரச்னை. இங்கே வருவதற்கு முன் அவனை மனநோய் மருத்துவர் ஒருவரிடம் கூட்டிப்போய் இருக்கிறார்கள். அவர் தூக்க மாத்திரை தந்ததில் அந்த மாணவன் வகுப்பறையில் கூட அசந்து தூங்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. அவனை என்னிடத்தில் கூட்டி வந்தபோது அவனுக்கு மனரீதியாக என்ன பிரச்னை என்று நான் ஆராய்ந்தேன். அது டீன்ஏஜ் பருவத்தில் எல்லாருக்கும் வரும் பிரச்னைதான்.

அந்த மாணவனுக்கு அதே பள்ளியில் படிக்கும் ஒரு மாணவி மீது ஒரு தலையாய்க் காதல். அதை அவளிடம் சொல்ல முடியாமல் ஒருவித குற்ற உணர்ச்சியுடன் அவன் இருந்திருக்கிறான். அதனாலேயே படிப்பில் கோட்டை விடவும் ஆரம்பித்திருக்கிறான். அவனிடம் நான், `இதற்கான வயது இதுவல்ல, அந்தப் பெண் உன்னைவிட படிப்பில் சூரப்புலியாக இருக்கிறாள். நீ படிப்பில் கவனம் செலுத்தி தொடர்ந்து அதிக மதிப்பெண் வாங்கியிருந்தால் அவள் அல்லவா உன்னைக் கவனித்திருப்பாள்? தவிர, அவளைவிட சிறப்பான, அழகான பெண் உனக்கு அமைவாள். அதை நீ ஏன் யோசிக்கவில்லை?' என்று பேசி மனரீதியான சிகிச்சை கொடுத்தேன். அவன் இப்போது படிப்பில் முன்பு போலவே அதிக மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்து விட்டான்.

ஆக, மூளை என்பது ஒரு கம்ப்யூட்டரில் வெளிப்படையாகத் தெரியும் ஹார்டுவேரைப் போன்றது. அதற்குள் மெமரி செய்து வைக்கப்பட்டுள்ள பொருட்களை நாம் சாஃப்ட்வேர் என்கிறோம். அந்த சாஃப்ட்வேருக்கு சிகிச்சை தருவதற்குப் பதில் ஹார்டுவேருக்கு சிகிச்சை தருவது சரியில்லை அல்லவா? அதைப்போலத்தான் சிலர் மனோதத்துவ மருத்துவர்களான எங்களிடம் வந்து பெற வேண்டிய சிகிச்சைக்குப் பதில், மனநோய் மருத்துவர்களிடம் தெரியாமல் போய் விடுகிறார்கள். மனநோய் மருத்துவர்களும் மனநல மருத்துவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்வதால் சைக்காலஜிஸ்ட் என அழைக்கப்படும் எங்களிடம் செல்ல வேண்டிய சிலர் திசைமாறி அவர்களிடம் போய் விடுகிறார்கள்.

இப்போது விவரம் தெரிந்து என்னிடம் சிகிச்சைக்கு வரும் அதிகம் பேர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள்தான். அவர்களை `கோஹினிட்டிவ் தெரபி' எனப்படும் விழிப்புணர்வு சிகிச்சையின் மூலம் குணப்படுத்தி வருகிறேன். பொதுவாக தம்பதிகளுக்கிடையேதான் பாலுறவு தொடர்பான மனப்பிரச்னைகள் வரும். அந்தப் பிரச்னை இப்போது எட்டாவது, ஒன்பதாவது படிக்கும் மாணவ மாணவிகளிடம் வருவதுதான் எனக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியாக இருக்கிறது.

கடந்த இரண்டாண்டுகளாக மதுரை, பெங்களூரு, அருப்புக்கோட்டை, திருச்சி, உடுமலை, கோவை, பாலக்காடு உள்ளிட்ட நகரங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் தனியார் பள்ளிகள், ஐ.டி. நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்காக நான் மனோதத்துவ சிகிச்சை முகாம்களை நடத்தியிருக்கிறேன். பள்ளி மாணவர்களுக்குத் தரும் பயிற்சியைப் பொறுத்தவரை பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் இருக்கின்றன'' என்றவர், சற்று நிறுத்தி விட்டு தொடர்ந்தார்.

``இந்த மனோதத்துவ முகாம்களின் மூலம் மாணவர்களில் வெறும் ஐந்து சதவிகிதம் பேர்தான் எந்தவித பாலியல்ரீதியான மனஉளைச்சலும் இல்லாமல் இருக்கிறார்கள் என்ற தகவல் எனக்குத் தெரிய வந்தது. மற்ற மாணவர்களோ பெற்றோரின் பாசத்துக்கு ஏங்குபவர்களாகவும், சக மாணவியின் அரவணைப்புக்கு ஏங்குபவர்களாகவும், பாலியல்ரீதியாக ஏதோ ஒன்றைச் செய்துவிட்டு குற்ற உணர்வுடன் படிப்பில் நாட்டமில்லாமல் இருப்பவர்கள் எனவும் தெரிய வந்தது. நன்றாகப் படிக்கிற நிறைய மாணவர்களுக்கு ஏழாவது, எட்டாவது வகுப்பை எட்டும்போதுதான் பாலியல் பிரச்னை பாடாய்ப்படுத்துகிறது. என்னிடம் வந்த ஒரு மாணவன் `மூன்றாம் வகுப்பிலிருந்தே சுயஇன்பப் பழக்கத்திற்கு தான் அடிமையாக இருப்பதாகச் சொன்னான். `ஏன் அப்படிச் செய்தாய்?' என்று கேட்டபோது, `அப்படிச் செய்தால்தான் அது பெரிசாகும் என்று நண்பன் சொன்னதாகச் சொன்னான். அவனை ஒருமாதம் வரை மனப்பயிற்சிக்கு உட்படுத்திய நான்," அப்படிச் செய்வதால் உன் சக்தி வெளியேறுகிறது. அதனால் படிப்பில் கவனம் குறைகிறது. நாளை உனக்குத் திருமணம் ஆகும்போது உன்னிடம் தேவைப்படும் சக்தி இருக்காது. அதனால் இந்தப் பழக்கத்தை நீ கைவிட வேண்டும்' என்று பேசிப் புரிய வைத்தேன். இப்போது அவன் நார்மலாகி நல்ல மதிப்பெண் எடுத்து வருகிறான்.

கோவை நகரின் நடுப்பகுதியில் குடிசைகள் நிறைந்த பகுதியில் உள்ள ஓர் அரசுப்பள்ளியில் தொண்ணூறு சதவிகித மாணவர்கள் மது, பீடி, சிகரெட், கஞ்சா, ஒயிட்னர் திரவப் போதை போன்றவற்றுக்கு அடிமையாக இருக்கிறார்கள். அவர்களது பெற்றோர்களும் அதைக் கண்டுகொள்வதில்லை. சில நல்ல மாணவர்களும் இவர்களைப் பார்த்து இந்த மது, பீடி, சிகரெட், கஞ்சாவுக்கு அடிமையாகி விடுகிறார்கள். அந்தப் பள்ளியில்தான் இன்னொரு அதிர்ச்சிகரமான விஷயமும் நடந்திருக்கிறது'' என்றவர், அதுபற்றி விளக்க ஆரம்பித்தார்.

``இங்கே பத்தாவது படிக்கும் மாணவன் ஒருவன் என்னிடம் உளவியல் சிகிச்சைக்காக வந்தான். அவன் பள்ளி செல்லும் வழியில் ஒரு லேத் பட்டறை இருந்திருக்கிறது. அதில் ஒரு பெண் தினம்தினம் இவன் பள்ளிக்குச் சென்றுவரும்போது தொடர்ந்து ஆபாச வார்த்தைகளால் பேசி கேலி செய்து வந்திருக்கிறாள். ஒருமுறை அவளது வீட்டில் ஆளில்லாத சமயம் இவனை வலுக்கட்டாயமாக கூட்டிப்போய் பாலியல் உறவும் வைத்துக் கொண்டிருக்கிறாள்.

அதன்பின் அவளது தோழிக்கும் இந்தத் தகவல் தெரிந்து, அவளும் இவனை செக்ஸ் பசிக்கு உட்படுத்தி யிருக்கிறாள். `ஒரு வருடமாக நடந்து வரும் இந்தத் தொல்லையை என்னால் தவிர்க்க முடியவில்லை' என்று அவன் அழுதான். அவனிடம் நான், `உன்னிடம் எந்தத் தவறும் இல்லை. அந்தப் பெண்களிடம்தான் தவறு. இனி அந்த வழியில் போகாதே. அப்படியே அந்தப் பெண்கள் அழைத்தாலும் அம்மா, அப்பாவைக் கூட்டி வந்து விடுவேன் என்று மிரட்டு. படிப்பில் மட்டும் கவனம் செலுத்து' என்று அனுப்பி வைத்தேன்.

என்ன கொடுமை? அடுத்த நாள் பார்த்தால், அவனைப் போலவே முப்பத்திரண்டு மாணவர்கள் என்னிடம் வந்து அவர்களுக்கும் தலா இரண்டு, மூன்று பெண்களுடன் தொடர்பிருப்பதாகக் கூறி அழ ஆரம்பித்தார்கள். நான் அதிர்ந்து போனேன். இவர்களுக்கு இப்படி ஒரு பழக்கம் ஏற்பட அந்த முதல்மாணவன் சொன்ன கதைதான் காரணமாக இருந்திருக்கிறது. இப்படி பள்ளி மாணவர்களை பாலியல் வலைக்குள் இழுத்தவர்களில் விதவைப் பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்களும் அடங்குவார்கள். தவிர, இந்த மாணவர்களின் பெண்கள் பட்டியலில் பல மாணவிகளும் இருந்ததுதான் கொடுமை. அந்த மாணவர்களுக்கெல்லாம் நம் கலாசாரத்தையும், பண்பாட்டையும் எடுத்துக் கூறி நிறையப் பேச வேண்டியிருந்தது. அவர்களில் பலர் இன்னும் மனோதத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அந்த மாணவிகள் யார் யார் என்று தெரிய வந்தபோது பெற்றோர்களும் சரி, ஆசிரியைகளும் சரி, `சொல்லுடி, யாரடி அவன்?' என்று கேட்டு மாணவர்கள் முன் அந்த மாணவிகளை அடித்து அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு பெண்ணுக்குத் தொடையில் காயம் என்றால் அதை மருந்து போட்டுக் குணமாக்குவதுதான் மருத்துவரின் வேலை. அதை விட்டு அந்தக் காயத்தை வெளியே சொல்லி, நோயாளியின் மனதை நோய்க்கு உள்ளாக்குவது சரியல்ல. இது தொடர்பாக சில ஆசிரியைகளுக்கும் நான் மனப்பயிற்சி அளிக்க வேண்டியிருந்தது'' என்றவர், இன்னும் சில பகீர் சம்பவங்களை எடுத்துரைத்தார்.

``ஒரு பன்னிரண்டு வயது மாணவியை, `மார்பு எடுப்பாகத் தெரிகிற மாதிரி துணி போடாதே' என்று அவளது அம்மா பாடாய்ப்படுத்தி வந்திருக்கிறார். மார்பு பெரிதாவது ஒரு குற்றம் என்பது போல புரிந்து கொண்ட அந்த அப்பாவிப் பெண், மார்பகத்தை தினமும் ஒரு கயிறால் இறுக்கிக் கட்டி வந்திருக்கிறாள். விளைவு? காலப்போக்கில் மார்பகம் இரண்டாகப் பிளந்து நான்கு மார்பகங்கள் போல ஆகிவிட்டது. அந்தப் பெண்ணுக்குத் திருமணம் நடந்து, முதலிரவின்போது அதைப்பார்த்த கணவன் அதிர்ச்சியடைந்து விட்டார். அவளது மார்பகத்தில் ஏதோ நோய் இருந்து அறுவை சிகிச்சை நடந்திருப்பதாக கணவன் சந்தேகித்து, பிறகு அந்தத் திருமணம் விவாகரத்து வரை போய்விட்டது. அப்பா அம்மாவும், `எங்களுக்குத் தெரியாமல் நீ ஏதோ செய்து விட்டாய்?' என்று குற்றம்சாட்ட, அந்தப் பெண் கிட்டத்தட்ட மனநோயாளி போல ஆகி விட்டாள்.

அந்தப் பெண்ணை மனநோய் மருத்துவரிடம் கூட்டிப்போய், அவளை அவர் உண்டு இல்லை என்று ஆக்கிய பின் என்னிடத்தில் கூட்டி வந்தார்கள். நான் பேசி, மார்பகத்தில் அறுவை சிகிச்சை செய்ய வைத்து வேறொரு திருமணம் செய்யச் செய்தேன். இன்று அந்தப் பெண் சௌக்கியமாக இருக்கிறார்'' என்றார் மொஹைய்தீன்.

இதேபோல ஒர்க்ஷாப் வைத்திருக்கும் பையன் ஒருவன் ஒரு மாணவியுடன் பாலியல் தொடர்பு வைத்திருக்கிறான். ருசிகண்ட பூனையாக மாறிய அந்த மாணவி இன்னும் இரண்டு மாணவிகளை அந்தப் பையனுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறாள். இரு மாணவிகள் வாசலில் காவல் காக்க, ஒரு மாணவி உள்ளே அந்தப் பையனோடு சல்லாபிப்பது வழக்கமாகி இருக்கிறது. ஆறுமாத காலமாக நடந்த இந்த காமக்களியாட்டத்திற்குப் பின் அந்த மாணவிகளில் ஒருத்தி மருத்துவர் மொஹைய்தீனிடம் குற்றஉணர்ச்சி காரணமாக இதைச் சொல்லியிருக்கிறாள். அதன்பிறகு மற்ற இரண்டு மாணவிகளையும் அழைத்து அவர்களுக்கும் உளரீதியான பயிற்சி தந்தாராம் இவர்.

ஒன்பதாவது படிக்கும் மாணவி ஒருவருக்கு மாதவிடாய் நின்றுபோய் வயிறு வீங்கியிருப்பதாக அவளது தாய் என்னிடம் அழைத்து வந்தார். அந்தப் மாணவியிடம் பேசியபோது, `மயக்க மருந்து கொடுத்து மாணவன் ஒருவன் அவளது கற்பைக் கவர்ந்து கர்ப்பமாக்கிய விஷயம்' அவருக்குத் தெரிய வந்திருக்கிறது. அவளுக்கு முறையான சிகிச்சை அளித்து படிப்பில்நாட்டம் வரச் செய்தாராம் இவர்.

எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் கம்ப்யூட்டரில் பலான சி.டி.க்களைப் பதிவு செய்து தன் சக மாணவர்களுக்கு தலா இருபது ரூபாய், முப்பது ரூபாய்க்கு விற்றுவந்த சம்பவத்தையும், அந்த சி.டி.க்களை பார்த்த மாணவர்கள் பிஞ்சிலேயே பழுத்து பல மாணவிகளுடன் மன்மதலீலை நடத்திய கொடுமைகளையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார் மொஹைய்தீன்.

``இந்தச் சீரழிவுக் கலாசாரத்துக்கு வெறும் மீடியா, சினிமா மட்டுமே காரணமல்ல. பெற்றோர்களும் கூட காரணம்தான். சில குடும்பத் தலைவர்கள், `பிள்ளை தூங்கி விட்டான்' என்று நினைத்து செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள். அதை எக்குத்தப்பாகப் பார்த்து விடும் குழந்தைகள் தனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதை வாகாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். `நம் நாட்டைப் பொறுத்தவரை திருமணத்துக்குப் பிறகுதான் செக்ஸ் என்பது உகந்ததாக இருக்கும்' என்பதை ஆசிரியர்களும், பெற்றோர்களும் குழந்தைகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்த அவலம் அகலும். இல்லாவிடில் இது அதிகமாகி சமுதாயத்தையே பாதித்து விடும். இதுதான் சைக்காலஜிஸ்ட்களான நாங்கள் சொல்லும் செய்தி'' என்று ஒரு மெசேஜோடு முடித்துக் கொண்டார் மொஹைய்தீன்.

reporter

Sunday, December 7, 2008

சிலைகளை போட்டுடைத்த ஏகத்துவவாதி!!இந்துக்களே, இறைவனின் தூதர் இப்ராஹீம் நபி அவர்களிடம் படிப்பினை பெறுங்கள்!

இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் பேரால் இந்த உம்மத்துக்கு அறிமுகப்படுத்தியது இரண்டு ஈத்கள் (பெருநாள்கள்) மட்டுமே. "ஒன்று ஈகைத் திருநாள். மற்றொன்று தியாகத் திருநாள். இரண்டு பெருநாட்களும் மாபெரும் இலட்சிய அடிப்படையில் அமைந்துள்ளன.

ரமழான் முழுதும் நோன்பு நோற்று, தனது அத்தியாவசியத் தேவைகளை இறை ஆணைக்குக் கட்டுப்பட்டு, தடுத்துக் கொள்வதன் மூலம். ஏழைகளின், இல்லாதவர்களின் நிலை எப்படி இருக்கும்? அவர்களின் கஷ்டங்கள் எப்படிப்பட்டவை? என்பவற்றை அனுபவத்தால் உணர வைத்து. இல்லாதோருக்கு ஈந்து மகிழ்ந்து கொண்டாட்டம் ஒரு நன்நாளாக ஈகைத் திருநாள் அமைந்துள்ளது.

அதே போல், நாம் அல்லாஹ்வின் அடியார்கள். அடியான் எஜமானனின் கட்டளைகளுக்குப் பூரணமாக கட்டுப்பட வேண்டும். அப்து( அடியான்) விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சரியே என்று அடிமைத் தன்மையை முழுமையாகப் பிரதிபலிக்கும் பொன்னாளாகத் தியாகத் திருநாள் அமைந்துள்ளது. நமக்கு "முஸ்லிம்" என்று பெயரிட்ட நபி இப்றாஹிம்(அலை) அவர்களது வாழ்வோடு இணைந்த இறை அடிமைத் தன்மையின் முழுமையான வடிவத்தை நாம் ஞாபகப்படுத்துவதன் மூலம், அதன் பிரதிபலிப்புகள் நம்மிலும் ஏற்பட, முயற்சிகள் செய்வோமாக.

நபி இப்றாஹிம் (அலை) அவர்களது வாழ்வின் ஆரம்பக்கட்டத்திலிருந்தே, இளமைப் பருவத்திலிருந்தே, அல்லாஹ் ஒருவனுக்கே வழிப்பட வேண்டும்; அவனை மட்டுமே வணங்க வேண்டும்; அவனல்லாத யாருக்கும், எதற்கும் வழிப்படுவது மாபெரும் குற்றம் என்ற அடிப்படை உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்வதால் ஏற்படும் பயங்கரமான எதிர்ப்புகள், இன்னல்கள், சகிக்க முடியாத கஷ்டங்கள் அனைத்தையும் பொறுமையோடு சகித்துக் கொண்டு, தான் கொண்ட தெளஹீதை நிலை நாட்டும் பணியிலேயே கண்ணாயிருத்தல், எந்த நிலையிலும் தனது 'ரப்'பின் திருப்பொருத்தமே தனது வாழ்வின் இலட்சியம், அதற்காக அன்பு மனைவியை இழக்க நேரிட்டாலும், அன்பு மகளை இழக்க நேரிட்டாலும், அது சாதாரண தியாகமே என்ற உயர்ந்த எண்ணம், தனக்கு விபரம் தெரிந்ததிலிருந்து, மடியும் வரை அல்லாஹ்வுக்கென்றே வாழ்ந்து, மடிந்த தியாக வாழ்க்கை இவை அனைத்தும் நமக்கு அழகிய முன்மாதிரிகளாக அமைந்துள்ளன. "இப்ராஹிமுடைய மார்க்கத்தைப் பின்பற்றுங்கள்." (அல்குர்ஆன் 3:95)

இப்றாஹிம்(அலை) அவர்களின் தந்தை ஆஜர் ஒரு புரோகிதர். பெரியார்களின் சிலைகளை வடித்து, தெய்வங்கள் என்று மக்களை நம்பவைத்து, அவற்றை வியாபாரம் செய்வது கொண்டு பிழைப்பு நடத்துபவர். இந்தத் தீய செயல் இப்றாஹிம்(அலை) அவர்களின் சின்னஞ்சிறு பிஞ்சு உள்ளத்திலே தீ எனச் சுடுகின்றது. பால் மணம் மாறாத அந்தப் பாலப் பருவத்திலேயே தன் தந்தையை நோக்கிச் சொல்கிறார்கள்.

"என் அருமைத் தந்தையே, உங்கள் கைகளால் வடித்தெடுத்த இந்தப் பெரியார்களின் சிலைகளை தெய்வமென்று நம்பி, மக்களை வழிபடச் சொல்கிறீர்களே? இது நியாயந்தானா? நமது அற்ப உலக வாழ்வுக்காக மக்களை நரகப் படுகுழியில், படு நாசத்தில் விழச்செய்வது சரிதானா? நாளை நம்மைப் படைத்த அந்த அல்லாஹ் நம்மைத் தண்டிக்காமல் விடுவானா?" என்று கேள்விக் கணைகளை அடுக்கடுக்காக அள்ளி வீசினார்கள். பெற்ற தந்தைக்கோ அளவு கடந்த கோபம் வருகின்றது. நான் பெற்ற பிள்ளை என்னையே எதிர்ப்பதா? எனது குடும்ப, வயிற்றுப் பிரச்சனையில் மண்ணை அள்ளிப் போடுவதா? என்று அங்கலாய்க்கிறார். "மகனே! இதுதான் நமது பிழைப்படா! இதை விட்டால் நாம் உயிர்வாழ்வது எப்படியடா! குலத்தைக் கெடுக்கும் கோடாரிக் காம்பாக வந்து முளைத்திருக்கிறாயே!" என்று அதட்டுகிறார்.

நபி இப்ராஹிம்(அலை) அவர்கள் இந்த இடத்தில் பெற்று வளர்த்த தன் தந்தைக்கு வழிப்படுவதை விட, தன் தந்தையையும் தன்னையும் மற்றும் அகிலமனைத்தையும் படைத்துப் போஷித்துப் பரிபாலித்து வரும், அந்த அல்லாஹ் ஒருவனுக்கு வழிப்படுவதே தனது தலையாய கடமை என்ற தெளிவான முடிவுக்கு வருகிறார்கள். தனது செயல் தன்னையும் தனது குடும்பத்தையும் உலக வாழ்வில் பாதிக்கிறதே என்பதையும் பொருட்படுத்தாமல், மக்களிடம், "மக்களே இந்தப் பெரியார்களின் சிலைகள் மனிதக் கைகளால் செய்யப்பட்டவை - வெறும் சிலைகளே! இவற்றாலோ, இவற்றுற்குரிய பெரியார்களாலோ, உங்களுக்கு ஆகப் போவது ஒன்றுமில்லை! இவற்றையோ, இவற்றிற்குரியவர்களையோ வணங்குபவர்கள் அறிவீனர்களே! நஷ்டவாளிகளே! அப்படிப்பட்டவர்கள் இப்பெரியார்களின் சிலைகளை வாங்கிக் கொள்ளலாம்" என்று பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இந்தப் பிரச்சாரம் தந்தை ஆஜருக்கு வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சியது போல் வேதனையைக் கொடுத்தது. கடுங்கோபமுற்று மகனைப் பார்த்து, "நீ என் கண்ணிலும் விழிக்காதே; உன்னைக் கல்லால் அடித்துக் கொன்று விடுவேன்", என்று வீட்டை விட்டே துரத்தி அடிக்கிறார்.

"இதிலிருந்து நீ விலகிக் கொள்ளவில்லையானால் உன்னை நிச்சயமாகக் கல்லால் எறிவேன்; என்னை விட்டும் என்றென்றும் தூரப்போய்விடு" (அல்குர்ஆன் ் 19:46) என்றார்.

ஆதரிப்பார் யாரும் இல்லாமலும் ஒதுங்குமிடம் இன்னதென்று தெரியாத நிலையிலும் அந்த இளம் வயதிலேயே அல்லாஹ் மீது பூரண நம்பிக்கை வைத்துத் தனித்துத் தனது உலக வாழ்வைத் துவக்குகிறார்கள் இப்ராஹீம்(அலை)அவர்கள். அடுக்கடுக்காக இடுக்கண்கள் வந்த போதிலும் கொண்ட கொள்கையை, ஏகத்துவ பிரச்சாரத்தை, சிலை, கபுரு உடைப்புப் பிரச்ாரத்தை இப்ராஹிம்(அலை)அவர்கள் கை விடுவதாக இல்லை. துணிவாகத் தொடர்கிறார்கள். ஒரு இடத்திலே வைக்கப்பட்டிருந்த சிலைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து விட்டு. ஒரு பெரிய சிலையின் தோளிலேயே ஆயுதத்தை மாட்டிவைத்து விட்டுச் சென்று விடுகிறார்கள். தாங்கள் வணங்கும் தெய்வங்கள் இவ்வாறு சின்னா பின்னப்படுத்தப்பட்டு நொறுங்கிக் கிடப்பதைக் கண்ட ஊர் மக்கள் பதை பதைக்கிறார்கள். கடுமையான கோபத்திற்குள்ளாகிறார்கள். விசாரிக்கும் போது, இப்ராஹிம் என்ற பெயராம், வாலிபனாம், அவன் தான் நமது தெய்வங்களை ஏளனம் செய்கிறவன்; அவன் தான் இந்தக் காரியத்தைச் செய்திருக்க முடியும் என்று சந்தேகப்பட்டு அழைத்து வந்து - இல்லை இழுத்து வந்து இப்ராஹிம் (அலை) அவர்களை விசாரிக்கின்றனர். "என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? அதோ அந்தப் பெரிய சிலையிடம் கேட்டுப் பாருங்கள்" என்று அந்த மக்களைச் சிந்திக்கத் தூண்டுகிறார்கள். "தன் முன்னால் நடந்தது கூடத் தெரியாத வெறும் சிலைகளையா தெய்வம் என்று வணங்குகிறீர்கள்" என்று குத்திக் காட்டுகிறார்கள்:- (அல்குர்ஆன் ் 21:60-67) துணிச்சலாக, சிலை, கபுரு வணக்கம் கூடாது என்று எடுத்துரைக்கிறார்கள். பிரச்சனை முற்றி இறுதியில் மன்னன் நம்ரூதின் முன்னால் கொண்டு போய் நிறுத்தப்படுகிறார்கள். மன்னன் என்ற பயமோ நடுக்கமோ இப்றாஹிம்(அலை) அவர்களுக்குச் சிறிதும் இல்லை. தைரியமாக நெஞ்சுயர்த்தி தான் கொண்டுள்ள அல்லாஹ் ஓருவன் மட்டுமே என்ற கொள்கையை மன்னனிடம் எடுத்து சொல்கிறார்கள், முடிவு, நெருப்புக் குண்டத்தில் தூக்கி எறியப்படுகிறார்கள். அல்லாஹ் (ஜல்) உத்தரவு கொண்டு, கரிக்கும் நெருப்புக் குண்டம் சுகம் தரும் சோலையாக மாறுகின்றது. (அல்குர்ஆன் 21:68,69)

நபி இப்றாஹிம்(அலை) அவர்களுக்கு, இதோடு சோதனை முடிந்து விட்டதா? இல்லை! மீண்டும் தொடர்கின்றது -தொடர்கதை போல், அன்புக்கினிய ஆசை மனைவியையும், பல்லாண்டு காலம் ஏங்கி, இறைவனிடம் பன்முறை வேண்டிப் பெற்ற அருமைப் பச்சிளம் பால்குடி மகனையும், மனித சஞ்சாரமே அற்ற பக்கா(மக்கா) பாலைவனத்தில் கொண்டு விடுமாறு இறை உத்தரவு வருகின்றது. இதனால் இறைவனுக்கு என்ன லாபம் என்று சிந்திக்கவில்லை இப்ராஹிம் (அலை). பந்தம், பாசம், ஆசை அனைத்தையும் மூட்டை கட்டி வைத்து விட்டு இறை உத்தரவைத் தலைமேல் கொண்டு செயல்படுவதே அடியானின் கடமை என எண்ணி, இறை உத்தரவை நிறைவேற்றத் துணிகிறார்கள்.

ஆதரிப்பார் யாரும் இல்லாத கடும்பாலை வனத்திலே அருமை மனைவியையும், அன்பு மகனையும் கொண்டு போய் விட்டு விட்டு நெஞ்சைக் கல்லாக்கிக் கொண்டு திரும்புகிறார்கள் நபி இப்றாஹிம்(அலை). "எங்களுக்கேன் இந்தக் கடுஞ்சோதனை? இதைத்தான் உங்கள் இறைவன் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறானா?" என்ற பாச மனைவியின் கேள்விக்கு, "ஆம்!" என்ற பதிலே இப்றாஹிம்(அலை) அவர்களிடமிருந்து கிடைக்கின்றது. அப்படியானால் அந்த இறைவன் எங்களுக்குப் போதுமானவன் என்று அன்பு மனைவியாரும் ஆறுதல் அடைகிறார்கள்.

நாட்கள் செல்கின்றன. கொண்டு வந்த உணவுப் பொருள், தண்ணீர் அனைத்தும் தீர்ந்து விட்டன. பசியின் கொடுமையினால் பச்சிளம் பாலகனுக்குப் பால் இல்லை. பல நாட்கள் தாயும், சேயும் பட்டினி. பசி தாங்காது சேய் வீறிட்டு அழுகின்றது. தனயனின் பசித்துயர் தாங்காது, தாயின் உள்ளம் படாத பாடு படுகின்றது. மகனின் பசி போக்குவது ஒரு பக்கம் இருக்கட்டும். குறைந்த பட்சம் வரளும் நாவை ஈரப்படுத்திக் கொள்ளக் கொஞ்சம் தண்ணீராவது கிடைக்காதா? என்று ஏங்குகின்றது பெற்ற உள்ளம். அதற்காக இங்கும் அங்கும் ஓடுகிறார்கள் - அன்று அவர்கள் ஓடிய ஓட்டத்தை அல்லாஹ் பொருத்திக் கொண்டான். தனயனின் கால்களுக்கடியிலேயே "ஜம் ஜம்" நீரைப் பெருக்கெடுத்தோடச் செய்து, ஹஜ்ஜுக்கு வரும் ஆண்கள், பெண்கள் அனைவரும் அவர்கள் அன்று ஓடிய அந்த மலைகளுக்கிடையே ஓடுவதை ஹஜ்ஜின் ஒரு அமலாகவும், ‘ஜம்ஜம்" தண்ணீரை ஒரு புனிதப் பொருளாகவும் ஆக்கி விட்டான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன். துன்பம் முடிவுற்றதா? இல்லை! சோதனை இன்னும் தொடர்கின்றது.

பச்சிளம் பாலகன் வளர்ந்து ஒடியாடித் திரிகின்ற பருவம். இடையிடையே இப்ராஹிம்(அலை) பக்கா(மக்கா) வந்து அன்பு மனைவியையும், ஆசை மகனையும் பார்த்துச் செல்கிறார்கள். ஒரு நாள் நபி இப்றாஹிம்(அலை) அவர்கள், பல்லாண்டு ஏங்கிப் பன்முறை இறைவனிடம் வேண்டிப் பெற்ற அருமை மகனை தன் கைகளாலேயே அறுத்துப் பலியிடும் கனவொன்றைக் காண்கிறார்கள். இங்கு, நபிமார்களின் கனவில் ஷைத்தான் வர முடியாது என்பதால் இறை உத்தரவு என்பதைப் புரிந்து கொள்கிறார்கள். அல்லாஹ்வின் நாட்டம் அது தான் போலும். அவனது நாட்டத்தை நிறைவேற்றுவதே அடியானாகிய தனது கடமை என முடிவெடுத்து, தனது கனவைச் செயல்படுத்த அன்பு மகனிடம் விபரிக்கிறார்கள். அந்தப் பிஞ்சு உள்ளம் இஸ்மாயில்(அலை) அவர்கள் அதற்குச் சொன்ன பதில் என்ன தெரியுமா? அந்தப் பதில் நமது சிந்தனைக்குரியது. "அன்புத் தந்தையே அல்லாஹ்வின் கட்டளைப்படிச் செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் அதில் என்னை நீங்கள் பொறுமையாளர்களாகவே காண்பீர்கள்" (அல்குர்ஆன் 37:102) என்று மிக அழகாகப் பதில் கூறுகிறார்கள்.

முஸ்லிம் சகோதர, சகோதரிகளே! இந்த இடத்திலே, அல்லாஹ்வின் விருப்பத்திற்கு முன்னால், தங்கள் பந்தம், பாசம், ஆசை, அபிலாசைகள் அைனத்தும் ஒன்றுமே இல்லை; அல்லாஹ்வின் விருப்பத்தை நிறைவுச் செய்வதே அடியார்களின் தலையாய கடமை என்பதைத் தந்தையும், தனயனும் எந்த அளவு உணர்ந்திருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்து பாருங்கள். ஆம்! தாங்கள் கண்ட கனவைச் செயல்படுத்த, பெற்ற மகனைத் தன் கரங்களாலேயே அறுத்துப் பலியிடத் துணிந்து அழைத்துச் செல்கிறார்கள். எந்த உள்ளமும் பதை பதைக்காமல் இருக்க முடியாது. கடுமையான சோதனைக்கட்டம். இப்றாஹிம்(அலை) கொண்ட உறுதியில் தளர்வதாக இல்லை. இந்தக் கட்டத்தில் ஷைத்தான் வந்து தந்தையின் உள்ளத்தில் பிள்ளைப் பாசத்தை உண்டாக்கி, சோதனையின் தோல்வியடையச் செய்ய முயற்சி செய்கிறான். தந்தை ஷைத்தானின் வலையில் சிக்கவில்லை. ஷைத்தானைக் கல்லால் அடித்துத் துரத்துகிறார்கள். ஷைத்தான் பெற்ற தாயிடம் சென்று, கலைக்கப் பார்க்கிறான். பெற்ற மனம் பித்து என்பார்கள். ஆனால் இங்கு அந்தப் பித்து உள்ளமும் கலங்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் விருப்பம் அதுவானால், அதை நிறைவேற்றுவதைத் தவிர நமக்கு வேறு வழி என்ன இருக்கிறது என்று கூறி ஷைத்தான் அடித்துத் துரத்துகிறார்கள். இறுதியில் பலியிடப் போகும் மகனை நெருங்குகிறான். சாகச வார்த்தைகளைக் கூறுகின்றான். "தந்தையோ வயது முதிர்ந்தவர்; நீயோ வாழ வேண்டிய வயது. உலக வாழ்க்கையை இனிமேல் அனுபவிக்க வேண்டும். இந்த நிலையில் உன்னைப் பலியிடப் போகின்றாரே உன் தந்தை. அதற்கு நீ இடங் கொடுக்கலாமா?" தனயனும் ஷைத்தானின் சாகச வார்த்தையில் மயங்கவில்லை. ஷைத்தானுக்கு அங்கும் தோல்வி. இறைவனது விருப்பம் அதுவானால் தந்தைக்கோ, தாய்க்கோ, தனயனுக்கோ அதில் என்ன உரிமை இருக்க முடியும்? ஓடிப்போ! என்று கல்லால் அடித்து ஷைத்தானைத் துரத்துகிறார்கள். தந்தை, தாய், தனயன் மூவரின் செயல்களை அல்லாஹ் பொருத்திக் கொண்டு அதன் ஞாபகார்த்தமாக ஹாஜிகள் இன்றும் மூன்று இடங்களில் கல் எறிவதை, ஹஜ்ஜின் ஒரு அங்கமாக ஆக்கி இருக்கிறான். அல்லாஹ் (ஜல்) இறுதியில் இப்றாஹிம்(அலை) அவர்கள் மகன் இஸ்மாயில்(அலை) அவர்களைக் கீ கிடத்திக் கழுத்தில் கத்தியை ஒட்டத் தயாராகிறார்கள்.

ஆம்! மனிதன் தன்னுடைய கட்டளைகளுக்கு எந்த அளவு வழிப்பட்டு நடக்கிறான்? என்று அல்லாஹ் சோதிக்கிறானேயல்லாமல் அந்தச் சோதனையால் மனிதன் முன் காணப்படும் வேதனையில் சிக்க வைக்க வேண்டுமென்பது, அல்லாஹ்(ஜல்)வின் விருப்பமன்று. எண்ணற்ற தடங்கல்கள் ஏற்பட்ட பின்பும் தனக்கு வழிப்படும் ஒரே நோக்கம் தவிர வேறு நோக்கம், தந்தை, தாய், தனயன் மூவருக்கும் இல்லை; இல்லவே இல்லை என்று திட்டவட்டமாக நிருபிக்கப்பட்ட பின் அந்த வேதனை அவர்களுக்கு ஏன் ஏற்பட வேண்டும்? என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன், நாடினான் போலும்! இதோ இறைவன் கூறுகிறான், "ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு (இப்றாஹிம்) மகனைப் பலியிட முகம் குப்புறக் கிடத்திய போது, நாம் அவரை, யா இப்றாஹிம்! என்றழைத்தோம். திட்டமாக நீர் ஒரு கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கும் நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம். நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும். ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம். இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தமாக) விட்டு வைத்தோம். ஸலாமுன் அலா இப்றாஹிம் - இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுக்கிறோம்." (அல்குர்ஆன் 37 :103-110)

இப்றாஹிம்(அலை) அவர்களின் தியாக உணர்வை அல்லாஹ்(ஜல்) ஏற்றுக்கொண்டு இஸ்மாயில்(அலை) அவர்களுக்குப் பகரமாக ஒரு ஆட்டைப் பலியாக்கி உலகம் அழியும்வரை, மக்கா வந்து ஹஜ் கடமையை நிறைவேற்றும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும், ஹஜ்ஜுக்கு வராத மற்றும் வசதி படைத்த முஸ்லிம்களும் குர்பானி கொடுப்பதையும் விதியாக்கியுள்ளான். ஆம்! அல்லாஹ்வின் சோதனையில் உறுதியாக இருந்து அதில் வெற்றி பெற்றுவிட்டால், அதன் முடிவு எல்லை இல்லா மகிழ்ச்சியே அல்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்? சுமார் 5000 வருடங்களுக்கு முன்னால் நடந்த இந்தச் சம்பவங்கள் அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானதாக ஆகி விட்டதால், அந்தச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து நமக்கு ஒரு ஈதையே(பெருநாளைேய) அல்லாஹ்(ஜல்) கொடுத்திருக்கிறான். வருடா வருடம் ஹாஜிகள் நிறைவேற்றும் பல கடமைகள் இந்தச் சம்பவங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன.

தியாகத்தின் திருவுருவங்களாகத் திகழ்ந்த நபி இப்றாஹிம்(அலை), இஸ்மாயில்(அலை) இருவராலும் புணர் நிர்மாணம் செய்யப்பட்ட கஃபத்துல்லாவை வலம் (தவாஃப்) வருவதை ஒரு வணக்கமாகவே அல்லாஹ் ஆக்கிவிட்டான். அவர்கள் நின்று கஃபத்துல்லாவைக் கட்டிய இடத்தை (மகாமே இப்றாஹிம்) தொழும் இடமாக அல்லாஹ் ஆக்கி விட்டான். (அல்குர்ஆன் 2:125)

தியாகத் திருநாள் தரும் படிப்பினை இவைதான். நாம் அல்லாஹ்வின் அடிமைகள். அவனே நமது எஜமானன். நாம் அவனுக்காகவே வாழ்ந்து, அவனுக்காகவே மடிவதே நமது நீங்காத இலட்சியமாகும்.

"(நீர்) கூறும்!

எனது தொழுகை, எனது ஹஜ்ஜின் கிரியைகள், என் வாழ்வு, என் மரணம் (அனைத்தும்) ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ்வுக்கே." (அல்குர்ஆன் 6: 162)

எந்த ஒரு காரியத்திலும் நமது மனைவி மக்களது, உலக மக்களது அபிலாசைகளை விட, அல்லாஹ்(ஜல்)வின் கட்டளையை நிறைவேற்ற முற்படுவதே நமக்கு வெற்றியையும் இறுதியில் மகிழ்ச்சியையும் அளிக்கும். மறுமையில் ஈடில்லா பெரும் பேறுகளைத் தரும். நமது, நமது மனைவி மக்களது, உலக மக்களது அபிலாசைகளுக்கு இடம் கொடுத்தால், ஷைத்தானின் வலையில் சிக்கி விடுவோம். நாம் எதை எதிாபார்த்தோமோ, அந்தச் சந்தோசமும் நம்மை விட்டுப் போய்விடும். இறுதியில் ஷைத்தான் நம்மை மீளா நரகில் கொண்டு சேர்த்து விடுவான். அது தங்கும் இடங்களில் மிகக் கெட்டது. அதிலிருந்து மீட்சி இல்லாமலும் போகலாம். ஆகவே இது விஷயத்தில் நாம் மிக எச்சரிக்கையாக இருப்பது கடமை. படிப்பினை பெறுவோமாக! ஆமீன்.

அடுத்து, இங்கு இன்னொரு படிப்பினையும் பெற முடிகின்றது. நபிமார்கள், வலிமார்கள், நல்லடியார்கள் இவர்கள் அனைவரும் இறைவனுக்குப் பூரணமாகக் கட்டுப்பட்டு, தியாக வாழ்க்கை வாழ்ந்ததன் காரணமாகத் தான் இறைவனிடத்தில் உயர் பதவிகளையும், இறை திருப்தியையும் பெற்றுக் கொண்டார்கள்; இன்று மக்களுக்கு மத்தியில் பெரிது படுத்திக் காட்டப்படும் மாயாஜல வித்தைகள் போன்ற மந்திர தந்திரக் கதைகளை வைத்து அல்ல! உதாரணமாக ஒரு பெரியார் இன்னொருவரது கோழியைப் பிடித்து அறுத்துச் சமைத்துச் சாப்பிட்டு விட்டார். கோழிக்குச் சொந்தக்காரன் வந்து சண்ைடயிட்டான். உடனே, சாப்பிட்டு எறிந்த எலும்புகளை எல்லாம் சேர்த்து, உயிர் பெற்றுவிடு என்று அந்தப் பெரியார் சொன்ன மாத்திரத்தில் கோழி உயிர் பெற்று எழுந்து விட்டது என்று கதை சொல்வார்கள். நபி(ஸல்) அவர்களுக்கே பிறரது பொருளை அனுமதி இன்றிச் காப்பிட உரிமை இல்லை என்றால், இந்தப் பெரியாருக்கு எங்கிருந்து அனுமதி கிடைத்தது. ஹறாமைச் சாப்பிட்டவர் எப்படி வலியாக இருக்க முடியும்? ஹறாமைச் சாப்பிட்டவர் எப்படி ‘கராமத்’ காட்ட முடியும்? ஊரான் வீட்டுக் கோழியை அறுத்துச் சாப்பிட்ட இந்தக் கதையையும் இறைவனுக்காகப் பெற்ற மகனையே அறுக்கத் துணிந்த, இப்றாஹிம்(அலை) அவர்களின் தியாக வரலாற்றையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இறைவன் எதைப் பொருத்திக் கொள்வான் என்று சிந்தியுங்கள்.

நபிமார்களுக்குரிய முஃஜிசாத்தாக இருப்பினும், வலிமார்களுக்குரிய கராமத்தாக இருப்பினும் அல்லாஹ்வின் அனுமதி இன்றி அவர்கள் விரும்பியவுடன் செய்ய முடியாது. "எந்த ஒரு தூதருக்கும் அல்லாஹ்வின் உத்தரவின்றி அற்புதம் செய்ய முடியாது. "எந்த ஒரு தூதருக்கும் அல்லாஹ்வின் உத்தரவின்றி அற்புதம் கொண்டு வர முடியாது". (அல்குர்ஆன் ் 40:78) மேலும் அவை அவர்களுக்குரிய சாதாரண அடையாளங்களில் ஒன்றே அல்லாமல் இன்று நம்மவர்கள் பெரிதுபடுத்திக் காட்டும் அளவுக்கு முக்கிய இடத்தைப் பெற்றவை அல்ல. அவர்களது சிறப்பெல்லாம், அவர்களது ஈமானையும் தக்வாவையும் வைத்துத் தான். (அல்குர்ஆன் ் 10:63, 49:13) இந்த மாயாஜலக் கதைகளை வைத்து அல்ல. இந்தக் கட்டுக் கதைகளைச் சொல்லித்தான் பெரியார்களின் மதிப்பை உயர்த்த வேண்டும் என்பதில்லை. அல்குர்ஆன் ், ஹதீதுக்கு ஒத்த அவர்களின் உண்மையான போதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொன்னாலே போதும்.

நபி இப்றாஹிம்(அலை) அவர்கள் வரலாற்றிலும், அவர்கள் கூர்மையான கத்தியைக் கொண்டு இஸ்மாயில்(அலை) அவர்களின் கழுத்தை அறுத்தார்கள்; கழுத்து அறுபடவில்லை; அல்லாஹ்விடம் குற்றவாளியாக ஆகி விடுவோமோ என்ற அச்சத்தில், ஆத்திரமுற்று பக்கத்திலிருந்த பாறாங்கல்லில் கத்தியை ஓங்கி அடித்தார்கள். பாறாங்கல் இரண்டாகப் பிளந்து விட்டது, என்று இங்கும் ஒரு மாயாஜால மந்திரக் கதையை இட்டுக் கட்டியிருக்கிறார்கள்.

கீழ்க் குறிப்பிடப்படும் அல்குர்ஆன் ் வசனங்களை மீண்டும் ஒருமுறை உற்று நோக்குங்கள்.

"ஆகவே அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, இப்றாஹிம் அலை, மகனைப் பலியிட முகம் குப்புறக் கிடத்திய போது, நாம் அவரை யா இப்ராஹிம் என்றழைத்தோம். திடமாக நீர் கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம். நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும். ஆயினும், நாம் ஒரு மகத்தான, பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம்." (அல்குர்ஆன் ் 37 : 103 - 107)

சாதாரண அறிவு படைத்தவனும் இவ்வசனங்களைப் பார்த்த மாத்திரத்தில் இப்றாஹிம்(அலை) மகனை குப்புறக்கிடத்தியவுடன், அல்லாஹ் அவரை அழைத்து விட்டான்; அறுக்கும் சந்தர்ப்பமே ஏற்படவில்லை; அப்படிப்பட்ட கதைகளெல்லாம் வெறும் கட்டுக் கதைகள் தான் என்பனவற்றைப் புரிந்து கொள்ள முடியும்.

உண்மைக்குப் புறம்பான, மாயாஜல மந்திரக் கட்டுக் கதைகளைப் பெரியார்கள் வலிமார்கள் விஷயத்தில் சொல்லிச் சொல்லிப் பழக்கப்பட்டு விட்ட ஒரு சாரார் அந்தப் பழக்க தோசத்தில் அல்குர்ஆன் ் தெளிவாக பறை சாற்றிக் சென்றிருக்கும், ஒரு சம்பவத்திலும், தங்கள் புழுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். இங்கு இன்னொன்றையும் கவனித்து விளங்கிக் கொள்ளுங்கள். அல்குர்ஆன் ைக் கொண்டு நிலைநாட்டப்பட்ட ஒரு உண்மைச் சம்பவத்திலேயே இப்படி மாயாஜல மந்திரக் கதைகளை உண்டாக்கியவர்கள் ஆதாரப் பூர்வமில்லாத வலிமார்கள் வரலாறுகளில் எந்த அளவு புழுகு மூட்டைகளை அள்ளி விட்டிருப்பாாகள் என்பதைச் சாதாரண அறிவு படைத்தவனும் விளங்கிக் கொள்ள முடியும். இந்த வகையில் உருவானது தான், செத்த கோழியும் உயிர் பெற்று எழுந்த கதையாகும்.

இவற்றிற்கெல்லாம் மூல காரணம் என்ன என்று பாாக்கும் போது வலிமார்கள் விஷயத்தில் அளவு கடந்த கட்டுக் கதைகளையும் மாயாஜாலக் கதைகளையும் கட்டி விட்டு, பாமர மக்களுக்கு மத்தியில் வலிமார்களைப் பற்றி ஒரு "இமேஜை" உண்டாக்கி, சுருங்கச் சொன்னால் குறைஷிக்காபிர்களைப் போல், அவர்களைக் குட்டித் தெயய்வங்களாக்கி, அதன் மூலம் சமுதாயத்தில் கபுரு வணக்கத்தை உண்டாக்கி வயிறு வளர்க்க வேண்டும்; பிழைப்பு நடத்த வேண்டும் என்பது இவர்களின் முக்கிய நோக்கமாகும். அல்லாஹ்(ஜல்) இந்தக் கயவர்களின் மாய வலையிலிருந்து இந்தச் சமுதாயத்தைக் காத்தருள்வானாக!

"மனிதரில் சிலர் இருக்கின்றனர். அவர்கள் (பொய்யான கட்டுக் கதைகள் முதலிய) வீணான செய்திகளை விலைக்கு வாங்கி (அவற்றை ஜனங்களுக்குச் சொல்லி) அல்லாஹ்வுடைய வழியிலிருந்து அறிவின்றி (ஜனங்களை) வழிகெடுத்து, அதனைப் பரிகாசமாகவும் எடுத்துக் கொள்கின்றனர். இத்தகையோருக்கு இழிவு தரும் வேதனை நிச்சயமாக உண்டு. (அல்குர்ஆன் 31:6)

அல்குர்ஆன் ் ஹதீதுகளுக்கு மாற்றமான, இட்டுக்கட்டப்பட்ட மாயாஜாலக் கட்டுக் கதைகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, அல்குர்ஆன் ் ஹதீதுகளை மட்டும் வைத்துச் செயல்படுவதை இந்த "ஈத்" இலட்சியமாக் கொள்வோமாக!

இப்னு ஹத்தாது

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!