Showing posts with label ஏன் மண் வெட்டி கேட்கிறார் அதிரை அமீன் ?. Show all posts
Showing posts with label ஏன் மண் வெட்டி கேட்கிறார் அதிரை அமீன் ?. Show all posts

Tuesday, May 6, 2014

ஏன் மண் வெட்டி கேட்கிறார் அதிரை அமீன் ?

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
வானம் பார்த்த பூமியாக இருந்த நமதூரில் கடந்த இரு தினங்களாக அல்லாஹ்வின் ரஹ்மத் மழையாக பொழிகின்றது, அல்ஹம்துலில்லாஹ்.
தற்போது பாலைவன நிலை மாறி மழை நீர் வழிந்தோடவும் ஆங்காங்கே பள்ளமான பகுதிகளில் நீர் தேங்கி நிற்கவும் துவங்கியுள்ளது நிலத்தில் மட்டுமல்ல அனைவரின் மனதிலும் குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றாலும் இன்னொரு அத்தியாவசிய கடமையும் நம்முன் காத்திருக்கிறது.
அது, வீணாக வழிந்தோடும் மழை நீரையும், தேங்கி நிற்கும் தண்ணீரையும் அருகாமையிலுள்ள குளங்களுக்கு திருப்பி விட வேண்டுகிறோம், உங்களுடைய உயரிய உடல் உழைப்பை வழங்கிட பகுதிக்கு ஓர் மண்வெட்டி போதுமே! உங்கள் பகுதியின் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பும் வரை தொடர்ந்து உழைத்திடுங்கள்.
உடல் உழைப்பை வழங்க இயலாதோர் களப்பணியாற்றும் இளைஞர்களை ஊக்;கப்படுத்தலாமே மேலும் அவர்களுக்கு நீங்கள் அன்பாக வழங்கும் ஒரு குவளை தேநீர் அவர்களுக்கு மலையை புரட்டும் சக்தியை வழங்கும்.
ஊரின் நன்மையை நாடி தனி நபர்களாக, இயக்கங்களாக சுழழும் இளைஞர்கள் இதிலும் அரசியல் கலந்து விடாமல் ஊர் சேவை செய்திட வாரீர் என அழைக்கிறோம்.
உங்களுடைய அர்ப்பணிப்பு நமதூரின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திட, குளங்கள் நிறைந்திட, பசுமை பாதுகாக்கப்பட இதன்வழி உங்கள் அனைவருக்கும் இறையருள் நிறைந்திட எல்லாம் வல்ல ரஹ்மானிடம் இறைஞ்சுகிறோம்.
அதிரைஅமீன்
 
 http://aimuaeadirai.blogspot.com/2014/05/blog-post_6.html

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!