Showing posts with label குர்ஆன். Show all posts
Showing posts with label குர்ஆன். Show all posts

Tuesday, October 25, 2011

குர்ஆன் - கேள்வி - பதில்கள்


Q1) குர்ஆன் என்பதற்கு என்ன பொருள்?
A) ஓதுதல்! (that which is recited; or that which is dictated in memory form)
Q2) குர்ஆன் யாரால் அருளப்பட்டது?
A) அகிலங்கள் அனைத்தையும் படைத்த அல்லாஹ்வால் அருளப்பட்டது
Q3) குர்ஆன் எந்த இரவில் அருளப்பட்டது?
A) லைலத்துல் கத்ர் இரவில்
Q4) குர்ஆன் யார் மூலமாக அருளப்பட்டது
A) கண்ணியமிக்க வானவர் ஜிப்ரயீல் (அலைஅவர்களின் மூலமாக.
Q5) குர்ஆன் எந்த தூதருக்கு அருளப்பட்டது?
A) இறுதி தூதர் முஹம்மது (ஸல்அவர்களுக்கு.
Q6) முதன் முதலாக குர்ஆன் எந்த இடத்தில் வைத்து அருளப்பட்டது?
A) மக்காவிலுள்ள ஹிரா குகையில் அருளப்பட்டது
Q7) எந்த கலிபாவின் ஆட்சிக் காலத்தில் குர்ஆன் எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டது?
A) அபூபக்கர் (ரலிஅவர்களின்ஆட்சிக்காலத்தில்
Q8) எந்த கலிபாவின் ஆட்சிக் காலத்தில் குர்ஆன் முதன் முதலாகபிரதியெடுக்கப்பட்டது?
A) உதுமான் (ரலிஅவர்களின் ஆட்சிக் காலத்தில்.
Q9) கலிபா உதுமான் அவர்களின் காலத்தில் பிரதியெடுக்கப்பட்ட குர்ஆன் தற்போதுஎங்கிருக்கிறது?
A) ஒன்று தாஸ்கண்டிலும்மற்றொன்று துர்கியின் இஸ்தான்புல் அருங்காட்சியகத்தில்உள்ளது.
Q10) அல்லாஹ்விடத்தில் உயர்ந்த அந்தஸ்து உடையவர்கள் யார் என குர்ஆன்கூறுகிறது?
A) தக்வா (இறையச்சம்உடையவர்கள்
Q11) குர்ஆனில் மிகப்பெரிய அத்தியாயம் எது?
A) சூரத்துல் பகரா (இரண்டாவது அத்தியாயம்)
Q13) குர்ஆனில் மிகச் சிறிய அத்தியாயம் எது?
A) சூரத்துல் கவ்ஸர் (108 வது அத்தியாயம்)
Q14) குர்ஆனை பாதுகாப்பது யார் பொறுப்பில் உள்ளது?
A) அதை இறக்கிய இறைவனே அதன் பாதுகாவலன் ஆவான்.
Q15) நபி (ஸல்அவர்களின் எத்தனையாவது வயதில் முதன் முதலாக குர்ஆன்அருளப்பட்டது?
A) 40 ஆவது வயதில்
Q16) குர்ஆனுக்கு இருக்கும் மற்ற பெயர்களில் சிலவற்றைக் கூறுக:
A) அல்-ஃபுர்கான்அல்-கிதாப்அத்-திக்ர்அல்-நூர்அல்-ஹூதா
Q17) இறைவன் நம்மோடு இருக்கிறான் என கூறிய நபி யார்?
A) முஹம்மது (ஸல்அத் தவ்பா(9:40)
Q18) ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியுமா?
A) ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியாதுஅஸ் ஸபா(34:14) மற்றும் அல்ஜின்னு(72:10)
Q19) குர்ஆனில் மூன்றில் ஒரு பகுதி என சிறப்பித்துக் கூறப்பட்ட சூரா எது?
A) சூரத்துல் இக்லாஸ் (112 வது அத்தியாயம்)
Q20) குர்ஆனில் எத்தனை அத்தியாயங்கள் இருக்கிறது?
A) 114 அத்தியாயங்கள்
Q21) நபி முஸா (அலைஅவர்களோடு இறைவன் பேசிய பள்ளத்தாக்கின் பெயர் என்ன?
A) துவா பள்ளத்தாக்குஅந் நாஜிஆத்(79:16), தாஹா(20:12). இது தூர் மலையின் அடிவாரத்தில்உள்ளது. (19:52)
Q22) அல்-குர்ஆனை மனனம் செய்த முதல் மனிதர் யார்?
A) முஹம்மது நபி (ஸல்அவர்கள்
Q23) நபி (ஸல்அவர்களின் பெயர்கள் குர்ஆனில் எத்தனை முறை இடம் பெற்றுள்ளது?
A) முஹம்மது (ஸல்என நான்கு முறையும்அஹ்மது என ஒரு முறையும் இடம்பெற்றுள்ளது.
Q24) இறைவனை வணங்குவதற்காக கட்டப்பட்ட முதல் இறையில்லம் எது என குர்ஆன்கூறுகிறது?
A) கஃபா
Q25) எதிர்கால சந்ததியினருக்கு அத்தாட்சியாக விட்டு வைக்கப்பட்டுள்ளவற்றில்இரண்டைக் கூறுக:
A) நூஹ் (அலைஅவர்களின் கப்பல் (54:15), மற்றும் பிர்அவ்னின் உடல் (10:92)
Q26) நூஹ் நபியின் கப்பல் எங்கு ஒதுங்கியது என குர்ஆன் கூறுகிறது?
A) ஜூதி மலையில் (11:44 )
Q27) குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே ஒரு ஸஹாபியின் பெயர் என்ன?
A) ஜைத் பின் ஹாரித் (ரலிஅஹ்ஜாப் (33:37)
Q28) ஷைத்தான் எந்த இனத்தைச் சேர்ந்தவன் என குர்ஆன் குறிப்பிடுகிறது?
A) ஜின் இனம்
Q29) இஸ்ராயிலின் வழித்தோன்றல்களுக்கு கடமையாக்கப்பட்ட வணக்கங்கள் எனகுர்ஆன் குறிப்பிடுபவை எவைகளை?
A) தொழுகை மற்றும் ஜக்காத்
Q30) ‘பிஸ்மில்லாஹ்’ கூறி ஆரம்பம் செய்யப்படாத சூரா எது?
A) சூரத்துத் தவ்பா
Q31) ‘பிஸ்மில்லாஹ்’ இரண்டு முறை வரும் சூரா எது?
A) சூரத்துந் நம்ல் -எறும்புகள் (27:30)
Q32) குர்ஆன் முழுவதுவதுமாக இறக்கியருளப்பட எத்தனை வருடங்கள் ஆனது?
A) 23 வருடங்கள்
Q33) தொழுகையில் அவசியம் ஓதப்பட வேண்டிய சூரா எது?
A) அல்-பாத்திஹா
Q34) துஆ (பிரார்த்தனைஎன குறிப்பிடப்படும் சூரா எது?
A) அல்-பாத்திஹா
Q35) திருமறையின் தோற்றுவாய் என குறிப்பிடப்படும் சூரா எது?
A) அல்-பாத்திஹா
Q36) குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்ட ஒரே ஒரு பெண்மணி யார்?
A) மர்யம் (அலை)
Q37) நபிமார்களின் பெயரால் எத்தனை சூராக்கள் இருக்கின்றன?
A) 6 சூராக்கள் (யூனுஸ்ஹூத்யூசுப்இப்ராஹீம்நூஹ்முஹம்மது (ஸல்))
Q38) ஆயத்துல் குர்ஸி குர்ஆனில் எந்த பாகத்தில்சூராவில் உள்ளது?
A) மூன்றாவாது பாகத்தின் ஆரம்பத்தில்இரண்டாவது அத்தியாயத்தின் 255 ஆவது வசனம்.
Q39) அல்-குர்ஆனில் இறைவனின் திருநாமங்களாக எத்தனை பெயர்கள்குறிப்பிடப்பட்டுள்ளது?
A) 99 பெயர்கள்
Q40) மதினா வேறெந்த பெயரில் குர்ஆனில் குறிப்பிடப்படுகிறது?
A) யத்ரிப் (33:13)
Q41) பனி இஸ்ராயில் என யாரை குர்ஆன் குறிப்பிடுகிறது?
A) யாகூப் (அலைஅவர்களின் சந்ததியினர்களை
Q42) ஈமான் கொணடவர்களுக்கு உதாரணமாக அல்லாஹ் தன் திருமறையில் கூறும்இரு பெணமணிகள் யாவர்?
A) பிர்அவ்னின் மனைவி (66:11), இம்ரானின் புதல்வி மர்யம் (அலை) (66:12)
Q43) காபிர்களுக்கு உதாரணமாக இறைவன் தன் திருமறையில் கூறும் இரு பெண்கள்யாவர்?
A) நூஹ் (அலைஅவாகளின் மனைவி (66:10), லூத் (அலைஅவர்களின் மனைவி (66:10)

Q44) உள்ளங்கள் எவ்வாறு அமைதி பெறுகிறது என அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்?
A) அல்லாஹ்வை நினைவு கூறுவதன் முலம் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன. (13:28)
Q45) நபி ஈஸா (அலைஅவாகள் செய்ததாக இறைவன் குறிப்பிடும் அற்புதங்கள்யாவை?
A) 1) குழந்தையில் பேசியது, 2) களிமண்ணினால் பறவையை செய்துஇறைவனின்அனுமதியைக் கொண்டு உயிர் கொடுத்தல், 3) பிறவிக் குருடனுக்குப் பார்வையளித்தல், 4)வெண்குஷ்ட ரோகியைக் குணப்படுத்துதல், 5) இறந்தவரை அல்லாஹ்வின் உத்தரவுகொண்டு உயிர் பெறச் செய்தல் (5:110), 6) பிறா உண்பதை வீடடில் உள்ளவற்றை பார்க்காமலேஅறிவித்தல் (3:49)
Q46) சுவனத்தில் இருக்காது என்று இறைவன் குறிப்பிடுவது எவை?
A) 1) பசி, 2) நிர்வானம், 3) தாகம், 4) வெயில் (20:118,119)
Q47) வீரமுள்ள செயல் என குர்ஆன் எதைக் கூறுகிறது?
A) எவரேனும் (பிறர் செய்யும் தீங்கைபொறுத்துக் கொண்டு மன்னித்து விடடால் அது மிகஉறுதியான (வீரமுள்ளசெயலாகும். (42:43), (31:17), (3:186)
Q48) நபி முஸா (அலைஅவர்கள் கற்பாறையில் அடித்த போது எத்தனை நீர் ஊற்றுக்கள்பீறிட்டு எழுந்ததாக இறைவன் கூறுகிறான்?
A) பன்னிரணடு நீர் ஊற்றுகள் பீறிடடு எழுந்தது. (2:60) & (7:160)
Q49) தொழாதவர்களுக்காக இறைவன் சித்தப்படுத்தி வைத்திருப்பதாகக் கூறும்நரகத்தின் பெயர் என்ன?
A) ஸகர் என்ற நரகம்அல் முத்தஸ்ஸிர்(74:41,42,43)
Q50) இறைவன் என்னோடு இருக்கிறான் என்று கூறிய நபி யார்?
A) முஸா (அலைஅஷ் ஷுஃரா(26:62)
 

Wednesday, March 2, 2011

குழப்பத்தைத் தேடாதே


அல்லாஹ் உனக்குத் தந்தவற்றில் மறுமை வாழ்வைத் தேடு! இவ்வுலகில் உன் கடமையை மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லுதவி செய்தது போல் நீயும் நல்லுதவி செய்! பூமியில் குழப்பத்தைத் தேடாதே! குழப்பம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான் (என்றும் கூறினர்). அல்குர்ஆன் 28:77
-----------------------------

எவர் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம்பழத்தின் அளவு தர்மம் செய்தாரோ, அல்லாஹ் பரிசுத்தமானதைத் தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டான், அதை அல்லாஹ் தனது வலக்கரத்தால் ஏற்றுக் கொண்டுபிறகு நீங்கள் உங்கள் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலை போல்உயரும் அளவிற்கு வளர்த்து விடுவான் 
என்று 

நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்அபூஹுரைரா (ரலி)

நூல் 
புகாரி 1410 

Saturday, August 21, 2010

திருக்குர்ஆனும் அறிவியல் அற்புதங்களும் (மலை, மின்னல், எரிமலை)

மழையும் மாமறையும்
நாம் சுவாசிக்கின்ற ஆக்ஸிஜன், நமக்குப் பலனளிக்கும் நைட்ரஜன், வெப்பத்தைத் தக்க வைக்கும் கார்பன் டை ஆக்ஸைடு ஆகியவற்றைத் தாங்கி நிற்பது வளி மண்டலம்! அந்த வளி மண்டலம் இண்டு இடுக்குகள் இல்லாமல் ஐந்து அடுக்குகளாக அமையப் பெற்று சூரியனின் புற ஊதாக் கதிர்களை உள்ளே ஊடுருவாமல், பிரமாண்டமான வால் நட்சத்திரங்களை உள்ளே நுழைய விடாமல் இந்தப் புவியைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது. அந்த வளி மண்டலத்தைத் தன் கைவசம் வைத்திருப்பது புவி ஈர்ப்பு விசை என்பதை அறிந்தோம். இந்தப் புவி ஈர்ப்பு விசையின் இன்னொரு பயன் வானிலிருந்து மழையைப் பெற்றுத் தருவதாகும். அது எப்படி? என்ற கேள்விக்கு விடை காண்பதற்கு முன்னால் தாகம் தீர்க்கும் மேகத்தைப் பற்றி முதலில் பார்ப்போம்.
பென்னம் பெரும் மலைகளைப் போல் வானத்தில் திரண்டு நிற்கும் கன்னங்கருத்த மேகத்தை நாம் பார்க்கின்றோம். இந்த மேகம் இவ்வாறு திரள்வதற்கு முன்பாக இரண்டு கட்டங்களைச் சந்திக்கின்றன. மூன்றாவது கட்டமாகத் தான், சூழ் கொண்ட இந்தத் திரட்சி நிலையை அடைகின்றன.
பஞ்சுகளைப் போல் திட்டு திட்டாக தனித்தனியாக மிதந்து நிற்கும் குட்டி குட்டி மேகங்களைக் காற்று தள்ளிக் கொண்டு செல்கின்றது.
இவை அனைத்தும் ஒன்றிணைகின்றன.
இவ்வாறு ஒன்றிணைந்த மேகங்கள் செங்குத்தாக விண்ணை நோக்கி எழுகின்றன. குவியக் கூடிய இந்த மேகங்களின் மத்திய தொகுதி ஓர் இழுவை சக்தியாக செயல்பட ஆரம்பித்து தன் இரு பக்கவாட்டிலும் உள்ள மேக சகாக்களை அரவணைத்து விண்ணை நோக்கி செங்குத்தாக இழுத்துச் செல்கின்றது. விண்ணகத்தின் குளிர்ந்த பகுதியை நோக்கி இது இழுத்துச் செல்லப் படுகின்றது. அவ்வாறு இழுத்துச் செல்லும் போது அந்த மத்தியப் பகுதியான இழுவை சக்தி குளிரினால் பொழிந்து சிந்தி விடாமல் பக்கவாட்டிலுள்ள மேகங்கள் பார்த்துக் கொள்கின்றன.
விண்வெளியின் குளிர் பகுதியின் உச்சி நிலைக்குச் செல்லச் செல்ல மேகத்தின் வயிற்றில் ஆலங்கட்டிகள், நீர் திவளைகள் சூல் கொண்டு மேகத் தொகுப்பின் எடை கூடுகின்றது. ஆக, அந்தரத்தில் கன்னங்கருத்த கனமான இமயத்தை விஞ்சும் அளவுக்கு 25,000 முதல் 30,000 அடி வரை ஒரு பெரும் மலை உருவாகின்றது.
தனது எல்லைக்குள் இப்படி ஆலங்கட்டிகள் தொகுப்பாக கனமான ஒரு மலையாக ஏறுவதை அனுமதிக்காக புவி ஈர்ப்பு விசை அம்மலையை கீழ் நோக்கி இழுக்கின்றது. அது தான் நம் மீது அருளாகப் பொழிகின்ற மழை! இது மழையைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு! இப்போது விஷயத்திற்கு வருவோம்.
வானிலை ஆராய்ச்சியாளர்கள் இன்று இந்த மேகங்களை நாம் மேற்கண்டவாறு வகைப்படுத்துகின்றனர். இப்படி சூல் கொண்டு திரண்டெழுந்து நிற்கும் இந்த மேகக் கூட்டத்திற்கு ஈன்ம்ன்ப்ர்ய்ண்ம்க்ஷன்ள், ஈப்ர்ன்க் என்று குறிப்பிடுகின்றனர். இன்று வானியல் வல்லுநர்களால் வகைப்படுத்தப் பட்ட இந்த மேகத் திரட்சியை, மழைப் பொழிவை எந்தப் பல்கலைக் கழகத்திலும் போய் படித்து மேதையாகிடாத, ஏடெத்துப் படித்திராத முஹம்மது (ஸல்) அவர்களால் எப்படிச் சொல்ல முடிந்தது? மேற்கண்ட நவீன கண்டுபிடிப்புகளை அச்சுப் பிசகாமல் அப்படியே அல்குர்ஆன் சொல்வதைப் பாருங்கள்!
அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது. (அல்குர்ஆன் 24:43)
இதிலிருந்து புனித ரமளான் மாதத்தில் இறங்கத் தொடங்கிய இந்த வேதத்தின் வசனங்கள் படைத்த எல்லாம் வல்ல அல்லாஹ்வின் வார்த்தைகள் தான் என்று சான்று கூறி நிற்கின்றன! இந்த வசனத்தில் அல்லாஹ், மேகங்களுக்குப் (பனி) மலைகள் என்ற பதத்தைப் பயன்படுத்தியிருக்கின்றான். இன்று வானியல் ஆய்வாளர்கள் சொல்லும் இந்தக் கருத்தை அல்குர்ஆன் அன்றே சொல்லி முடித்திருக்கின்றது எனும் போது இது நூற்றுக்கு நூறு அல்லாஹ்வின் வேதம் தான் என்ற நம்பிக்கை மென்மேலும் அதிகரிக்கின்றது.
மேற்கண்ட வசனத்தை அல்லாஹ் முடிக்கும் போது, “அதன் மின்னொளி கண்ணைப் பறிக்கப் பார்க்கின்றது” என்று சொல்லி முடிக்கின்றான். அதன் மின்னொளி என்றால் எதன் மின்னொளி? இதற்கான விளக்கத்தை அடுத்து வரும் மின்னல்’ என்ற தலைப்பில் பார்ப்போம்.
மின்னல்
அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது. (அல்குர்ஆன் 24:43)
இந்த வசனத்தில் மின்னலைப் பற்றிக் குறிப்பிடும் போது, அதன் மின்னல் என்று மின்னலை ஏதோ ஒன்றுடன் இணைத்து அல்லாஹ் கூறுகின்றான். எதன் மின்னல்? என்ற கேள்விக்கு நாம் விடையைத் தேடினால் இந்த வசனத்திலேயே இதற்கு முன்பாக ஆலங்கட்டியைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுவதைப் பார்க்க முடிகின்றது. அதன் மின்னல்’ என்பது ஆலங்கட்டியின் மின்னல்’ என்று திருக்குர்ஆன் பதில் கூறுகின்றது.
அது சரி! ஆலங்கட்டிக்கும் மின்னலுக்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்வி இப்போது எழுகின்றது. எனவே இந்த மின்னலைப் பற்றி அறிவியல் உலகம் என்ன கூறுகின்றது என்று பார்ப்போம்.
ஒன்றாகத் திரண்டு நிற்கும் மேக மலையின் மேற்பகுதியில் உள்ள ஆலங்கட்டிகள், அதிகம் குளிர்ந்து போன நீர்ப்பகுதிகள் மற்றும் பனித்துகளின் மேல் விழும் போது மேகங்கள் மின் காந்தப் புலன்களைப் பெற்று விடுகின்றன. இந்த நேரத்தில் குளிர்ந்த நீர்பபகுதிகள் மற்றும் பனித்துகள்களிலிருந்து எலக்ட்ரான்கள் கிளம்பி சூடான ஆலங்கட்டிகளை நோக்கித் தாவுகின்றன. அதனால் ஆலங்கட்டி எதிர் மின்னூட்டத்தையும் குளிர்ந்த நீர்ப்பகுதிகள் மற்றும் பனித்துகள்கள் நேர் மின்னூட்டத்தையும் பெறுகின்றன.
இதன் விளைவாக நேர் மின்னூட்டம் பெற்ற சின்னஞ்சிறு பனித்துகள்கள் உடைந்து சிதறுகின்றன. சிதறிய சின்னஞ்சிறு சிதறல்கள் மேகத்தின் மேற்பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுகின்ற போது அங்கு ஏற்கனவே எதிர் மின்னூட்டத்தைப் பெற்றிருக்கின்ற ஆலங்கட்டிகள் மேகத்தின் அடிப்பாகத்தில் விழுகின்றன.
கீழே விழுந்த ஆலங்கட்டிகளின் எதிர் மின்னூட்டங்கள் தான் மின்னல் வெட்டுவதன் மூலம் வெளியேற்றப் படுகின்றன. இந்த மின் வெட்டு தன்னைச் சுற்றிலும் உள்ள காற்றை 30,0000 C அளவுக்கு வெப்பப் படுத்துகின்றது. இது சூரியனின் மேற்பரப்பிலுள்ள வெப்பத்தை விட 5 மடங்கு அதிகமாகும். (சூரியனின் மேற்பரப்பு வெப்பம் 60000 C) இந்த அளவுக்கு வெளியாகும் வெப்பம் காற்றை வெகு வேகமாக விரிவுபடுத்துகின்றது. இதில் உருவாவது தான் இடி முழக்கம்!
இங்கு நாம் கவனிக்க வேண்டிய அம்சம், அதன் மின்னல் என்று கூறியதன் மூலம் மின்னலுக்குக் காரணம் ஆலங்கட்டி தான் என்று அல்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன் சொன்ன உண்மையை இன்று வானிலை ஆய்வாளர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். இதுவும் அல்குர்ஆன் தூய நாயனான அல்லாஹ்வின் வேதம் என்பதற்கு ஓர் அற்புதமான அறிவியல் சான்றாகும்.
விண்ணகத்தில் வெப்பத்தைப் பிரசவித்து வெளிவரும் இந்த மின்னல் மண்ணகத்தில் என்ன சாதித்துக் கொண்டிருக்கின்றது? இதைப் பற்றியும் அல்லாஹ் திருக்குர்ஆனில் நாம் வியக்கும் வண்ணம் கூறுகின்றான்.
அச்சத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தக் கூடியதாக அவனே மின்னலை உங்களுக்குக் காட்டுகிறான். பளுவான மேகங்களையும் அவன் உருவாக்குகிறான். இடியும் அவனைப் புகழ்ந்து போற்றுகிறது. அவனைப் பற்றிய அச்சத்தினால் வானவர்களும் (புகழ்ந்து போற்றுகின்றனர்). இடி முழக்கங்களையும் அவனே அனுப்புகிறான். தான் நாடியோரை அவற்றின் மூலம் தண்டிக்கிறான். அவர்களோ அல்லாஹ்வைப் பற்றி தர்க்கம் செய்கின்றனர். அவன் வலிமை மிக்கவன். (அல்குர்ஆன் 13:12,13)
இவ்விரண்டு வசனங்களும் மின்னல், இடியைப் பற்றி விளக்குகின்றன. இடி, மின்னல் எவ்வாறு உருகின்றன என்பதை மேலே நாம் கண்டோம். எல்லாம் வல்ல அல்லாஹ் இவ்விரண்டில் மின்னலைப் பற்றி குறிப்பிடும் போது, அச்சத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தக் கூடியதாக அவனே மின்னலைக் காட்டுகின்றான் என்று கூறுகின்றான்.
மின்னல் பளிச்சென்று வெட்டி மறையும் போது நம்முடைய நாடி நரம்புகளில் அச்ச அலைகள் ஓடிப் பரவுகின்றன. 30,0000 ஈ வெப்பத்தை ஏற்படுத்தும் மின்னலைப் பற்றி அச்சம் தரக் கூடியது என்று அல்குர்ஆன் கூறுவதை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் மின்னலில் எதிர்பார்ப்பு, ஆதரவு உள்ளது என்று அல்லாஹ் கூறுவதிலிருந்து என்ன கருத்தை அவன் சொல்ல வருகின்றான் என்று எளிதில் புரிந்து கொள்ள முடிவதில்லை.
மின்னலுக்கு ஏன் எதிர்பார்ப்பு என்ற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்த வேண்டும்? என்ற விளக்கத்தைக் காண நாம் களமிறங்குவோம்.
வளி மண்டலத்தில் நைட்ரஜன் 78 சதவிகிதமும், ஆக்ஸிஜன் 21 சதவிகிதமும், கார்பன் டை ஆக்ஸைடு 0.033 சதவிகிதமும், ஆர்கான், நியான், ஹீலியம், மீதேன், ஹைட்ரஜன் ஆகிய வாயுக்கள் மிகக் குறைந்த அளவிலும் கலந்துள்ளன என்பதை வளி மண்லத்தில் கலந்திருக்கும் வாயுக்கள் என்ற தலைப்பில் முன்னர் கண்டோம்.
ஒரு தடவை மின் வெட்டி மறையும் போது, ஏதோ மின் வெட்டி மறைகின்றது என்று நாம் கண் சிமிட்டி விட்டு அதைக் கண்டு கொள்ளாது விட்டு விடுகின்றோம். ஆனால் ஒரு தடவை மின்னல் வெட்டுகின்ற போது அங்கு ஒரு கல்யாணமே நடந்து முடிகின்றது.
ஆம்! காற்றிலுள்ள 78 சதவிகித நைட்ரஜனும் 21 சதவிகித ஆக்ஸிஜனும் ஒன்றாகக் கலந்து கை கோர்க்கின்றன. இதனால் பிறக்கின்ற குழந்தை தான் நைட்ரேட்டுகள்! நைட்ரஜனும் ஆக்ஸிஜனும் ஒன்று சேர்ந்ததும் நைட்ரேட் உருவாகின்றது. இந்த நைட்ரேட்டுகள் மழை நீருடன் கலந்து நீர்த்த நைட்ரிக் அமிலமாக மாறி மழையாகப் பொழிகின்றது.
வளி மண்டலத்திலுள்ள இந்த நைட்ரஜனை ஏற்கனவே மண்ணில் உள்ள பாக்டீரியாக்கள் கவர்ந்து நைட்ரேட்டுகளாக மாற்றுகின்றன! இந்தப் பணியை மின்னல் வந்து பாய்ந்து வளி மண்டலத்தில் உள்ள நைட்ரஜன்களை உடைத்து அமிலமாக, சத்தாக, சாறாக மாற்றி மழை நீருடன் ஆறாக ஓடச் செய்கின்றது.
மண்ணுக்குள் கால்சியம், இரும்பு, அலுமினியம் போன்ற கனிமங்கள் இருக்கின்றன. அந்தக் கனிமங்களுடன் இது கலக்கும் போது அவற்றின் நைட்ரேட்டுகள் உருவாகின்றன. கால்சியத்துடன் கலக்கும் போது கால்சியம் நைட்ரேட்டு உருவாகின்றது. இவை தான் மண்ணில் விளைகின்ற தாவரங்களுக்கு இயற்கை உரமாகப் பயன்படுகின்றன. இவற்றை நேரடியாக மனிதன் சாப்பிடுவதன் மூலமோ அல்லது இவற்றைச் சாப்பிடும் ஆடு, மாடுகளின் இறைச்சியைச் சாப்பிடுவதன் மூலமோ மனிதன் நைட்ரஜனைத் தன் உடலில் சேர்த்துக் கொள்கின்றான்.
மனிதனுடைய உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த நைட்ரஜன் அவன் இறந்தவுடன் மீண்டும் அது மண்ணிலேயே போய் சேர்ந்து விடுகின்றது. மனித உடலில் மட்டுமல்லாது மொத்த உயிரினங்களின் உடலிலும் நைட்ரஜன் கலந்து அந்த உயிரினங்கள் மடிந்ததும் மண்ணில் கலந்து விடுகின்றது. பின்னர் மீண்டும் காற்றிலேயே கலந்து விடுகின்றது. இதற்குப் பெயர் தான் நைட்ரஜன் சுழற்சி என்று வழங்கப் படுகின்றது.
சுப்ஹானல்லாஹ்! அல்லாஹ் மின்னலுக்கு ஏன் எதிர்பார்ப்பு என பெயர் வைத்தான் என்ற உண்மை நமக்கு மின்னல் போல் பளிச்சிடுகின்றதல்லவா? மிகப் பெரிய ஆற்றலாளனான அவன் நைட்ரஜன், ஆக்ஸிஜன் என்ற பின்னல்களில் மின்னலைப் பாய்ச்சி நம்மை வாழ வைக்கின்றான். நாம் எப்படி அவனுக்கு நன்றி செலுத்த மறந்தவர்களாக இருக்கின்றோம் என்பதை எண்ணிப் பார்ப்போம்!
மின்னலில் பொதிந்திருக்கும் இந்த ஆற்றலை அறிவியல் உலகம் கண்டு பிடிப்பதற்கு முன்னால் அன்றே நபி (ஸல்) அவர்கள் மூலம் குர்ஆனில் சொல்லி முடித்த அந்த நாயன் மிகப் பெரியவனே! அல்லாஹு அக்பர்!
எரிமலையும் இறைமறையும்
வானியல் ஆராய்ச்சியாளர்களிடம் மிகவும் பிரபலமானது பெரு வெடிப்புக் கொள்கை (Big bang theory) ஆகும். இந்தப் பிரபஞ்சத்தில் காணப்படும் பூமி உள்ளிட்ட அனைத்து கோள்களும் துணைக் கோள்களும் நட்சத்திரங்களும் ஒரே பொருளாகத் தான் இருந்தன.
இந்தப் பொருள் பூமியை விட 318.5 மடங்கு எடையைக் கொண்டதாகவும் மிக மிக அடர்த்தியானதாகவும் இருந்தது. அந்தப் பொருள் ஏதோ ஒரு வானியல் மாற்றத்தால் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் அண்டம் முழுவதும் ஒரே தூசுப் படலமாகப் பரவியது. இது சுமார் 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.
இதற்குப் பிறகு புகை மூட்டமாக இருந்த அந்தத் தூசுப் படலம் ஈர்ப்பு விசையின் காரணமாக சிறிது சிறிதாக இணைந்து பெரிதாகி இப்போதுள்ள கோள்கள், துணைக் கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவை தோன்றின. இவ்வாறு தூசுப் படலத்திலிருந்து பிரிந்து கோள்கள் உருவான நிகழ்வு சுமார் 500 கோடி முதல் 750 கோடி வருடங்களுக்கிடையில் நடைபெற்றது. இது தான் பெரு வெடிப்புக் கொள்கை (இண்ஞ் க்ஷஹய்ஞ் ற்ட்ங்ர்ழ்ஹ்) ஆகும்.
மனிதன் தன்னுடைய விஞ்ஞான அறிவையும் நவீன கருவிகளையும் கொண்டு இந்தப் பேரண்டம் எவ்வாறு தோன்றியது என்ற வரலாற்றை தற்போது கண்டறிந்துள்ளான். ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன் இதைப் பற்றி யாருக்காவது தெரிந்திருந்ததா? பூமி, சூரியன், சந்திரன் ஆகியவற்றைப் பற்றி வெறும் கதைகளையும் கற்பனைகளையும் நம்பிக் கொண்டிருந்த காலம். இன்று கூட மற்ற மதங்களின் வேதங்களில் இந்தக் கதைகள் தான் கூறப்படுகின்றன. பேரண்டத்தின் தோற்றம் குறித்து திருக்குர்ஆன் என்ன கூறுகின்றது என்று பார்ப்போம்.
வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் 21:30)
பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான். விரும்பியோ விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அதற்கும் பூமிக்கும் கூறினான். விரும்பியே கட்டுப்பட்டோம் என்று அவை கூறின. (அல்குர்ஆன் 41:11)
என்ன அற்புதமான வார்த்தைகள்! பூமியும் இதர கோள்களும் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒரே பொருளாக இருந்தன என்பதையும் அதன் பிறகு புகை போன்றிருந்த நிலையில் தான் அனைத்தும் உருவாயின என்பதையும் இவ்விரு வசனங்களும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. மேலே நாம் கூறியுள்ள பெரு வெடிப்புக் கொள்கையையும் (இண்ஞ் க்ஷஹய்ஞ் ற்ட்ங்ர்ழ்ஹ்) இந்த இரு வசனங்களையும் படித்துப் பாருங்கள்! உண்மையிலேயே நமது உடலைப் புல்லரிக்கச் செய்கின்றதல்லவா? இந்தப் பேருண்மை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதருக்கு எப்படித் தெரியும்? படைத்த இறைவனின் வார்த்தையாக திருக்குர்ஆன் இருந்தால் மாத்திரமே இதைக் கூற முடியும். எனவே திருக்குர்ஆன் இறை வேதம் என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்திருக்கிறது.
அடுப்பிலிருந்து ஒரு தீக்கங்கை கிடுக்கியில் தனியாக எடுத்து ஓரிடத்தில் வைக்கின்றோம். நேரமாக நேரமாக அந்தத் தீக்கங்கின் மேற்பகுதி குளிர்ந்து விடுகின்றது. ஆனால் அதன் உட்பகுதியோ நெருப்புக் குழம்பாகக் கனன்று கொண்டிருக்கின்றது. சூரியனிலிருந்து பிரிந்து வந்த பூமி மேற்பகுதியில் குளிர்ந்து, அதன் மீது தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் அதன் உட்பகுதியோ நெருப்புக் குழம்பாகக் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றது. அதனால் தான் அது அவ்வப்போது எரிமலைகளைக் கொப்பளிக்கின்றது. இந்தப் பூமி ஒரு காலத்தில் சூரியனுடன் ஒன்றாக இருந்தது என்பதற்கு இந்த எரிமலைகள் அக்கினி சாட்சிகளாகத் திகழ்கின்றன! நெருப்பைப் பஞ்சு மெத்தையாக்கி எங்களை வாழ வைக்கும் இறைவா! நீ தூயவன்! என்று தினமும் அந்த வல்ல இறைவனைத் துதிப்போமாக!
source: tntj.net

Friday, June 18, 2010

Wednesday, June 2, 2010

எதிர்க்குரல்


This article has been updated at 18.30 hrs, 30th may 2010.
Few more information added at the end of this article.
இந்த பதிவின் இறுதியில் சில தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 

நீங்கள் அறிந்து கொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள் --- குர்ஆன் 2:42

பரிணாமவியல் என்ற ஆதரமற்ற, அறிவியலுக்கு ஒத்துவராத, Hypothesis (Educated Guess) ஆக கூட இருக்க தகுதியில்லாத ஒரு கொள்கை எப்படி லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க காரணமாய் இருந்தது என்று சென்ற பதிவுகளில் பார்த்தோம். 

இன்ஷா அல்லாஹ், இந்த பதிவிலிருந்து, பரிணாமம் என்ற கோட்டை எத்தகைய கற்பனைகளால் கட்டப்பட்டது என்று பார்ப்போம். 

பதிவிற்கு செல்லும் முன் ஒரு சிறு விளக்கம். பரிணாமம் என்பது ஒரு பொதுவான சொல் (Evolution in a broader sense means a merely change).  அது பலவற்றையும் குறிக்கும், eg. galaxies, languages, and political systems etc. ஆனால் பரிணாமம் என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது உயிரியல் பரிணாமம் (Biological Evolution) தான். அதாவது, இவ்வுலகில் உயிரினங்கள் எப்படி வந்திருக்கும் என்று விளக்க முயற்சிக்கும் உயிரியல் பரிணாமம் தான். 

இப்போது பதிவிற்கு செல்வோம்....


உயிரியல் பரிணாமம் என்றால் என்ன? 

ஒரு நிமிஷம்.....பதில் சொல்லுவதற்காக இந்த கேள்வியை கேட்கவில்லை. உண்மையிலேயே பரிணாமம் என்றால் என்னவென்று உங்களிடம் தான் கேட்கிறேன். 

What is the definition of Evolution? or Define Evolution?  

பரிணாமவியலின் உள்ளே சென்று பார்த்தால் தான் குளறுபடிகள் என்றால், பரிணாமம் என்ற தலைப்பை விளக்குவதிலேயே பல குளறுபடிகள்.   

"படிப்படியாக" உயிரினங்கள் மாறியிருக்கும் என்று சொல்லுவார்களே, அவையெல்லாம் பரிணாமத்தின் விளக்கம் இல்லையாம். என்ன குழப்பமாக இருக்கிறதா?. பரிணாமவியல் என்றாலே குழப்பங்களின் கூடாரம் தானே!  இந்த பதிவில் மற்றொரு குழப்பத்திற்கும் உங்களை தயார் படுத்திக்கொள்ளுங்கள்.  

விஷயத்திற்கு வருவோம். ஏன் அந்த விளக்கம் தவறு?   

1. பரிணாமத்தின் மிகப் பெரிய ஆதரவாளரான Talk Origins தளத்தின் படி, "பரிணாமம் என்றால் என்ன"வென்று ஆக்ஸ்போர்ட் அறிவியல் அகராதி (Oxford Concise Science Dictionary) சொல்லுகிறதென்றால்,   

"evolution: The gradual process by which the present diversity of plant and animal life arose from the earliest and most primitive organisms, which is believed to have been continuing for the past 3000 million years" - Oxford Concise Science Dictionary.   
"பரிணாமம்: தற்காலத்திய, பல்வேறு வகைப்பட்ட தாவர வகைகளும், மிருகங்களும் எப்படி மிகப் பழங்கால உயிரினங்களிருந்து படிப்படியாக வந்திருக்கும் என்று கூறுவது பரிணாமம். இது கடந்த முப்பதாயிரம் லட்சம் ஆண்டுகளாக தொடர்வதாக நம்பப்படுகிறது" - Oxford Concise Science Dictionary

இந்த விளக்கம் சரியா? தவறா? 

உங்களில் பலர், ஆக்ஸ்போர்ட் அறிவியல் அகராதி சரியாகத் தானே கூறுகிறது என்று நினைக்கலாம். அங்குதான் பிரச்சனையே...

Talk Origins தளம் என்ன தெரியுமா கூறுகிறது? ஒரு அறிவியல் அகராதி இப்படி விளக்கியிருப்பது  மன்னிக்க முடியாததாம்.  

"This is inexcusable for a dictionary of science" - Talk Origins

அதாவது, பரிணாமவியலை பலமாக ஆதரிக்கும் இந்த தளத்தை பொறுத்தவரை, அந்த விளக்கம் தவறானது. அவர்களைப் பொறுத்தவரை இந்த விளக்கம் பரிணாமத்தின் வரலாற்றை தான் பேசுகிறதாம், பரிணாமம் என்றால் என்னவென்று விளக்கவில்லையாம். அதுமட்டுமல்லாமல் "படிப்படியாக" என்ற வார்த்தை பரிணாமத்தை விளக்க வரக்கூடாதாம். 

"...it specifically includes a term "gradual process" which should not be part of the definition. More importantly the definition seems to refer more to the history of evolution than to evolution itself" - Talk Origins

இப்போது நம்மிடத்தில் எழும் சில கேள்விகள், 
  • ஒரு அறிவியல் அகராதியே இப்படி தவறாக எழுதியிருப்பது எதனால்? 
  • இதை எழுதுவதற்கு முன் அவர்கள் பரிணாமவியலாளர்களிடம் கருத்து கேட்கவில்லையா? 
  • அவர்களுக்கு பரிணாமம் என்றால் என்னவென்று புரியவில்லையா? அல்லது விளக்கத் தெரியவில்லையா?  
  • இப்படி தவறான ஒரு தகவலை தந்து மக்களை ஏமாற்றுகிறதா ஆக்ஸ்போர்ட் அகராதி? 
  • இல்லை, Talk Origins தளம் தவறா?   


தயவு கூர்ந்து துறைச்சார்ந்த சகோதரர்கள் பதிலளியுங்கள். 

Talk Origins தளம் இத்தோடு நின்று விடவில்லை. மற்ற பிரபல அகராதிகளான Webster's மற்றும் Chambersசும் தவறாம். இவைகளின் விளக்கம் ஆக்ஸ்போர்ட் அறிவியல் அகராதியை விட மோசமாம். 

"evolution: ...the doctrine according to which higher forms of life have gradually arisen out of lower.." - Chambers
"evolution: ...the development of a species, organism, or organ from its original or primitive state to its present or specialized state; phylogeny or ontogeny" - Webster's    

நான், எங்கள் நகர பொது நூலகத்தில் உள்ள Academic American Encyclopedia வில் இது குறித்து  பார்த்தது பின்வருகிறது. இதனுடைய விளக்கமும் ஆக்ஸ்போர்ட் அகராதியை போலத்தான் இருக்கிறது.   

"Evolution is the process by which all living things have developed from primitive organisms through changes occurring over billions of years, a progression that includes the most advanced animals and plants" - Academic American Encyclopedia, Vol-7, p-318. 

இப்போது நம்முள் எழும் சில கேள்விகள், 
  • எப்படி இத்தனை பிரபல அகராதிகள் மற்றும் கலைக்களஞ்சியங்கள் (Encyclopedia) தவறான விளக்கத்தை தந்திருக்கின்றன? 
  • ஒருவேளை, Talk Origins தளத்தினுடைய வாதம் தான் தவறா? 


அதெல்லாம் சரி, இவையெல்லாம் தவறான விளக்கமென்றால் சரியான விளக்கம் தான் என்ன? 

இதற்கு talk origins தளம் என்ன பதில் சொல்லுகிறது?



2. பிரபல பரிணாமவியலாரான Douglas J.Futuyma அவர்கள் கூறிய ஒரு விளக்கத்தை கூறுகிறது இந்த தளம். அது என்ன விளக்கம்? 

"Biological evolution ... is change in the properties of populations of organisms that transcend the lifetime of a single individual. The ontogeny of an individual is not considered evolution; individual organisms do not evolve. The changes in populations that are considered evolutionary are those that are inheritable via the genetic material from one generation to the next. Biological evolution may be slight or substantial; it embraces everything from slight changes in the proportion of different alleles within a population (such as those determining blood types) to the successive alterations that led from the earliest protoorganism to snails, bees, giraffes, and dandelions." - Douglas J. Futuyma in Evolutionary Biology, Sinauer Associates 1986. 

மேலே உள்ளதை சுருக்கமாக விவரிக்க வேண்டுமென்றால், 

"Evolution is a process that results in heritable changes in a population spread over many generations" - Talk Origins website.
"பல தலைமுறைகளுக்கு மக்கள் தொகையில் ஏற்படும் பரம்பரை மாற்றங்களின் விளைவுகளே பரிணாமம்" - Talk Origins website   
(மொழிபெயர்த்துள்ள இந்த வாக்கியம் சரியா?, தவறென்றால் சரியான மொழிபெயர்ப்பை தரவும். திருத்திக் கொள்ளப்படும்)

நாம் மேலே பார்த்த யாவையும் talk origins தளத்தில் எழுதியது Lawrence A. Moran அவர்கள். அவருடைய இந்த பதிவு நீட்டிக்க பட்ட போது (V2.15, 2006) அதில், Douglas J. Futuyma அவர்களின் குழு, 1997 ல் பரிணாமம் குறித்து கூறிய விளக்கம் தவறென்கிறார் அவர். 

அதாவது 1986ல் Douglas J. Futuyma அவர்கள் கூறிய விளக்கம் சரி, ஆனால் 1997 ல் அவர் தலைமையில் இருந்த குழு கூறிய விளக்கம் தவறு. 

சற்று விளக்கமாக சொல்லுவதென்றால், 1997ல் பரிணாமம் குறித்த ஒரு அறிக்கை அளிப்பதற்காக Douglas J. Futuyma அவர்களின் தலைமையில் இருபது அறிவியலாளர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு இறுதியாக சமர்ப்பித்த அறிக்கையில், "பரிணாமம் என்றால் என்ன" என்ற கேள்விக்கு விளக்கமாக பின்வரும் பதில் வருகிறது, 

"Biological evolution consists of change in the hereditary characteristics of groups of organisms over the course of generations. From long-term perspective, evolution is the descent with modification of different lineages from common ancestors. From a short-term perspective, evolution is the ongoing adaptation of organisms to environmental challenges and changes." - Final Draft, a group of twenty scientists chaired by Douglas J. Futuyma issued a working draft of a "white paper" on Evolution, Science, and Society, 1997. 

இந்த விளக்கத்தை பற்றி கருத்து தெரிவிக்கும் Lawrence A. Moran அவர்கள், இந்த விளக்கத்தின் ஒரு பகுதி துருதிஷ்டவசமானது என்று கூறுகிறார். அதுமட்டுமல்லாமல்,  Douglas J. Futuyma அவர்களின் குழு பரிணாமம் குறித்து அளித்த விளக்கம் தவறு என்கிறார் அவர். 

"This last sentence is really unfortunate. These twenty scientists have now agreed to a definition that specifically mentions the mechanism of adaptation. This is not how one should define evolution. One wonders whether they mean to exclude random genetic drift or whether they simply lost sight of their goal in trying to work out a compromise definition" -  Lawrence A. Moran

ஆக, 1986ல் Douglas J. Futuyma அவர்கள் பரிணாமம் குறித்து கூறிய விளக்கம் சரி, ஆனால் 1997ல் அவர் சார்ந்த குழு கூறிய விளக்கம் தவறு. 

இது என்ன குழப்பம்? 

இப்போது நாம் கேட்க நினைக்கும் கேள்விகள்,

  •  Douglas J. Futuyma போன்ற பெரிதும் மதிக்கத்தக்க ஒரு பரிணாமவியலாளர் ஏன் இருவேறு விளக்கங்களை தர வேண்டும்?  
  • இந்த இரு விளக்கங்களில் எது சரி? எது தவறு? 

ஆக மொத்தத்தில் "பரிணாமம் என்றால் என்ன" என்ற கேள்வி அப்படியே இருக்கிறது. தலைப்பிலேயே இவ்வளவு குழப்பங்களா? 

இத்தனை வருடங்களாக "(உயிரியல்) பரிணாமம்" என்ற சொல்லுக்கு சரியான விளக்கம் இல்லாமல் இருப்பது நன்றாகவா இருக்கிறது? 

அதனால், துறைச்சார்ந்த சகோதரர்கள் இதை படிக்க நேர்ந்தால் பரிணாமத்திற்கு தெளிவான "Definition" யை ஆதாரங்களுடன் தாருங்கள். 


ஆனால் இதிலும் ஒரு பிரச்சனையுள்ளது. என்னவென்றால், அறிவியலாளர்களுக்குள்ளாகவே இது குறித்து குழப்பங்களாம்.
"confusion among scientists themselves about how to define such an important term" - Talk Origins
"முக்கியமான இந்த சொல்லை விளக்குவதில் அறிவியலாளர்களுக்குள்ளாகவே குழப்பங்கள் இருக்கின்றன" - Talk Origins   

அடடா, என்னவொரு தெளிவாக, ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்குள்ளாகவே குழப்பங்களாம்....
  •  பரிணாமம் என்ற conecpt க்கு உண்டான definition னிலேயே இவ்வளவு பிரச்சனைகளா? 
  • ஏன் சரியாக விளக்க முடியவில்லை? 
  • அவர்களுக்கே புரியவில்லையா? 

புரியாத புதிர்தான்...



ஒரு நிமிஷம், நீங்கள் விடைபெறுவதற்கு முன் ஒரு சிறு கேள்வி. தற்போதைய ஆக்ஸ்போர்ட் விலங்கியல் அகராதி (Oxford Dictionary of Zoology, Indian Edition, 2008 sixth impression, p-198) இது குறித்து என்ன தெரியுமா கூறுகிறது?..................     



இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.   

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 


My Sincere thanks to: 
1. Talk Origins website
2. Br. Lawrence A.Moran. 

Source of Information: 
1. http://www.talkorigins.org/faqs/evolution-definition.html
2. http://bioinfo.med.utoronto.ca/Evolution_by_Accident/What_Is_Evolution.html

References: 
1. What is Evolution - Talk Origins
2. Evolution - Academic American Encyclopedia, Vol-7, p-318.
3. Evolution - Oxford Dictionary of Zoology, Indian Edition, 2008 sixth impression, p-198


உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹ்மத் அ    

நன்றி 
http://ethirkkural.blogspot.com/

Tuesday, May 18, 2010

"இஸ்லாமிற்கு வழிகாட்டியது பைபிள்".....

சகோதரர் யூஸா எவன்ஸ் (Yusha Evans), இருபத்தொன்பது வயது இளைஞரான இவர், இஸ்லாத்திற்கு வந்த கடந்த பனிரெண்டு வருடங்களில் செய்த பணிகள் இன்றியமையாதவை. மாதம் இருவராவது இவரது தாவாஹ் பணியால் இஸ்லாத்தை தழுவி வருகிறார்கள். பல்கலைக்கழகங்களால் விரும்பி அழைக்கப்படும் நபர்களில் ஒருவராய் இருக்கிறார்.

இன்றைய இளைய தலைமுறை முஸ்லிம்களுக்கு பெரும் உத்வேகமாய் இருக்கக்கூடிய இவர் மனோதத்துவம் பயின்றவர். இவர் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கலிபோர்னியாவில் "How the Bible Led me to Islam" என்ற தலைப்பில் தான் இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி கூறிய கருத்துக்கள் இங்கே உங்கள் பார்வைக்காக.

------------------------------------------------------------------------------------------------------------------------

அந்த சொற்பொழிவு சுமார் ஒன்றரை மணி நேர ஒன்று. முழுவதுமாக இங்கே எழுதினால் மிக நீண்ட பதிவாகிவிடும் என்பதால் சில விஷயங்கள் விடப்படுகின்றன.            


"நான் தெற்கு கரோலினாவின் Greenville பகுதியைச் சேர்ந்தவன். சிறிய வயதிலேயே என் தாய் எங்கள் குடும்பத்தை விட்டு வெளியேறிவிட்டார். என் தந்தையோ இரண்டு வேலைகளில் இருந்தார். அதனால் நான் என் தாத்தா-பாட்டி கவனிப்பில் தான் வளர்ந்தேன். மிகுந்த கட்டுப்பாடு உள் குடும்பம். அதிக கடவுள் நம்பிக்கை உடையவர்களும் கூட (Methodist church).

நான் கிருத்துவத்தை விரும்பி என்னை அதனுடன் இணைத்துக் கொண்டவன். 12-13 வயதில் என்னை சர்ச்சின் இளைஞர் சேவைகளில் (Youth Services) இணைத்துக் கொண்டேன்.

அப்போது எனக்கு பதினைந்து வயதிருக்கும், என் நெருங்கிய நண்பருக்கு பதினேழு வயதிருக்கும். அவர் பாரம்பரியமிக்க பாப் ஜோன்ஸ் பல்கலைகழகத்தில் (Bob Jones University) புத்தக ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்திருந்தார். அப்படியென்றால், ஒரு நூலை எடுத்துக்கொண்டு அது எங்கிருந்து வந்தது, யார் எழுதினார்கள் என்பது போன்ற விஷயங்களை ஆராய்வது. 

ஒருமுறை அந்த நண்பர் கேட்டார்,

"நீ பைளிளை படித்திருக்கிறாயா"

எனக்கு ஆச்சர்யம், "அதைத் தானே நாம் சர்ச்களில் செய்து கொண்டிருக்கிறோம்"

"இல்லை இல்லை நான் கேட்பது, நீ பைபிளை முழுவதுமாக படித்திருக்கிறாயா, முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை"  

நாங்கள் பைபிளை அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்தவர்கள். முழுவதுமாக படித்தவர்கள் என்று எனக்கு தெரிந்து யாரும் கிடையாது.  புரிந்தது, அதைத்தான் அவர் கேட்கிறார்.

அவர் தொடர்ந்தார், "பைபிள் இறைவனின் வார்த்தைகள் என்று சொல்லக்கூடிய நாம் அதை ஏன் முழுமையாக படிக்க முயலவில்லை"

அவருடைய கேள்வி என்னை மிகவும் யோசிக்க வைத்து விட்டது. ஆம் அவர் கேட்பது நியாயம்தான்.  


பிறகு அவர் கூறினார், "நாம் ஏன் பைபிளை முழுமையாக படிக்கத் துவங்கக்கூடாது?"
சரி, முழுவதுமாக படித்து விடுவோம் என்று "Genesis" (The first book of Old Testament) இல் இருந்து துவங்கினேன்.

அதிர்ச்சிகள் பல காத்திருந்தன...

ஏற்றுக்கொள்ள முடியாத அதிர்ச்சிகள். நான் என் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாய் கொண்டிருந்த நபிமார்களா இவர்கள்?

உதாரணத்துக்கு, பைபிள், நூஹ் (அலை) அவர்கள் குடிகாரராக இருந்ததாக குறிப்பிடுகிறது. லூத் (அலை) மற்றும் தாவூத் (அலை) அவர்களையோ............ .....
(மிகவும் சென்சிடிவ் தகவல்கள் என்பதால் தவிர்க்கப்படுகிறது).

இந்த நபிமார்களின் நல்ல தன்மைகளையே பாதிரியார்கள் எங்களுக்கு சொல்லியிருக்கிறார்கள். ஆனால் உள்ளே போய் படித்துப் பார்த்தால் என்னென்னவோ இருக்கிறது.

  • நபிமார்கள் இறைவனின் நற்செய்தியை கொண்டு வந்தவர்கள் அல்லவா? 
  • அவர்கள் தானே நமக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்? 
  • அவர்களைத்தானே நாம் வாழ்விற்கு எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும்? 

ஆனால் இங்கே அவர்களே பெரும் தவறு செய்பவர்களாக இருக்கிறார்களே...இதை எப்படி என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்? எப்படி இவர்களை பார்த்து என் வாழ்வை அமைத்துக்கொள்ள முடியும்?

புரியவில்லை. மிகுந்த அதிர்ச்சி. Old Testament முழுவதும் இப்படி பல முரண்பாடுகள். என் பாஸ்டரிடம் சென்று கேட்டேன். அதே பதில், program செய்யப்பட்ட பதில். எல்லா பாஸ்டர்களும் சொல்லுவார்களே,

"இது நம்பிக்கை சம்பந்தபட்ட விஷயம், கடவுளை உள்ளூர உணர வேண்டும், கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது"...

அதையேத்தான் அவரும் கூறினார். "சரி, நீ New Testament படி, அதுதான் ஜீசஸ் (அலை) பற்றி பேசுகிறது".

சரியென்று "New Testament" டை படிக்க ஆரம்பித்தேன்.

இங்கே துவக்கத்திலேயே குழப்பம். ஏனென்றால், Mathew, Mark, Luke and John என்று இவற்றை எழுதியவர்கள் யார் என்று யாருக்கும் தெரியாது. இப்போது மேலும் குழப்பம்.

ஈசா (அலை) அவர்கள் மூவரில் ஒருவர், கடவுளின் மகன் என்றெல்லாம் சர்ச்களில் படித்திருக்கிறோமே, இங்கே "New Testament"ல், ஈசா(அலை) அப்படியெல்லாம் கூறவில்லையே? அதுமட்டுமல்லாமல் old Testament முழுவதும் ஒரே கடவுள், ஒரே கடவுள் என்றுதானே இருக்கிறது. இது இன்னும் முரண்பாடாக அல்லவா இருக்கிறது. இப்போது மேலும் மேலும் குழப்பம்...

என்ன செய்வது? மறுபடியும் பாஸ்டரிடம். இந்த முறையும் அதே பதில்.

"இது நம்பிக்கை சம்பந்த பட்ட விஷயம், நம்ப வேண்டும்"

பிறகு என் நண்பர் பைபிளை பற்றி நன்கு தெரிந்த தன் பேராசிரியர் ஒருவரிடம் என்னை அழைத்துச் சென்றார். அவர் கூறினார்,

"இங்கே பாருங்கள், பைபிள் பல காலங்களில் பல பேரால் மாற்றப்பட்டு வந்துள்ளது.  அதனால் இது perfect Book இல்லை. நம்பிக்கையால் தான் இந்த புத்தகம் பூரண படுத்தப்பட்டுள்ளது. இதை நம்பிக்கையால் தான் நம்புகிறார்கள். (This is not a textually perfect book. But this is the book perfected through faith)"         

என்ன? இறைவன் நமக்கு அறிவைக் கொடுத்து, அதை உபயோகப்படுத்த வேண்டாம் என்று சொல்லுவானா?


அதற்கு நம்மை சிந்திக்கும் திறன் இல்லாமலேயே படைத்திருக்கலாமே?

என் பாட்டி என்னை முட்டாளாக வளர்க்கவில்லை. பல காலங்களில் மாற்றப்பட்ட ஒரு நூலை எப்படி நான் கடவுளின் வார்த்தையாக நம்ப முடியும்? இதை எப்படி வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ள முடியும்?  நிச்சயமாக எனக்கு இதில் உடன்பாடு இல்லை.

1982 மாடல் காரை ஒருவர் கொண்டுவந்து, "நம்பு இது லேட்டஸ்ட் மெர்சிடிஸ் கார். நீ நம்பிக்கையுடன் பார்த்தால் அது உனக்கு மெர்சிடிசாக தெரியும்" என்று ஒருவர் சொன்னால் எப்படி இருக்கும். அப்படித்தான் இருந்தது எனக்கு.    

கிருத்துவத்தை விட்டு வெளியே வந்துவிட்டேன்.



சரி பைபிளில் தான் பதிலில்லை, மற்ற மதங்களில் தேடுவோம் என்று Judaism, Hinduism, Buddism, Taoism என்று எல்லா இசத்திலும் (ism) தேடினேன். மற்ற மதத்துக்காரர்களை பார்க்கும்போது நான் அவர்களிடம் விளக்கமெல்லாம் கேட்க மாட்டேன், ஒரே ஒரு கேள்வியைத் தவிர.

அது, உங்களிடம் உங்கள் மதம் பற்றிய புத்தகம் ஏதாவது இருக்கிறதா என்பது மட்டும்தான்.

ஏனென்றால் அவர்கள் பேசக் கூடாது, அவர்கள் புத்தகம் தான் பேச வேண்டும். அதுமட்டுமல்லாமல், "உங்கள் மதம் உண்மையென்றால் அதற்கு சான்றாக நீங்கள் எதையாவது எடுத்து வையுங்கள். இனிமேலும் நம்பிக்கையால் தான் இது உண்மை என்பது போன்ற வாதங்களை நம்ப நான் தயாரில்லை. ஆதாரத்தை எடுத்து வையுங்கள்".

பகவத் கீதை முதற்கொண்டு பல நூல்களை படித்தேன். ஏன், மந்திரம் சூனியம் சம்பந்தப்பட்ட நூல்களைக் கூட படித்திருக்கிறேன். அதில் கூட உண்மையை தேடியிருக்கிறேன்.    

நான் பார்த்தவரை எல்லா புத்தகங்களிலும் கடவுளைப் பற்றிய  பல கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அவை ஒன்று கூட முழுமையாக அறிவுக்கு ஒத்துவரவில்லை.

நான் இஸ்லாமை கணக்கிலேயே கொள்ளவில்லை. ஏனென்றால் இஸ்லாம் மிகச்சிறிதே அறியப்பட்ட காலம் அது.

பலவித தேடல்களுக்கு பிறகு வெறுத்து போய் விட்டேன். பதினேழு வயதிருக்கும், கடவுளைப் பற்றிய தேடலை நிறுத்தி விட்டேன்.

இறைவன் மீது மிகுந்த கோபம். நான் அவனை அறிந்து கொள்ள வேண்டும் என்று தேடுகிறேன். ஆனால் அவன் எனக்கு எந்த ஒரு உதவியும் புரியவில்லை.

பின்னர் திசை மாறியது. பார்ட்டிகள், குடி என்று வாழ்க்கை மாறியது. ஒரு நாள் நானும் என் நண்பரும் குடிபோதையில் கார் ஒட்டிச் சென்றபோது பெரும் விபத்து. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன். அப்போது ரோந்து வந்த அந்த அதிகாரி சொன்னார், "உன் மூலமாக கடவுள் ஏதோ செய்ய நினைக்கிறார், அதனால் தான் நீ இப்போது உயிரோடு இருக்கிறாய்"

நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வயதானவர் ஏதோ சொல்கிறார் என்று விட்டுவிட்டேன். நான் கடவுளை தேடினேன், அவன் எனக்கு உதவி புரியவில்லை என்றால் நான் என்ன செய்வது? இது என்னுடைய தவறில்லையே...

நாட்கள் சென்றன. அதுபோல மற்றுமொரு சம்பவம். இந்த சமயம் துப்பாக்கி முனையில் இருந்து தப்பினேன். இப்போது என் பாட்டி முன்னர் அந்த அதிகாரி சொன்ன அதே வார்த்தைகளை கூறினார், "உன் மூலமாக  கடவுள் ஏதோ செய்ய நினைக்கிறார்"

ஒருமுறை நான் நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த போது, இஸ்லாமைப் பற்றிய ஒரு புத்தகம் கண்ணில் பட்டது. நூலின் பெயர் மறந்துவிட்டது. அதில்,

"முஸ்லிம்கள் பாலைவனத்தில் இருக்கிற ஒரு பெட்டியின் உள்ளே வாழ்கிற அல்லாஹ் என்ற "Moon God" டை வணங்குகிறவர்கள். முஸ்லிம்கள் என்றாலே அரேபியர்கள் தான், பெண்களை அடிமையாக நடத்துகிறவர்கள். அதுமட்டுமல்லாமல், முஸ்லிம் அல்லாத யாரைக்கண்டாலும் கொன்று விட அவர்களுக்கு அனுமதி உண்டு. அதற்கு பெயர் ஜிஹாத், அப்படி அவர்கள் செய்தால் அவர்களுக்கு சுவர்க்கமும், எழுபது கன்னிகளும் கிடைப்பார்கள்" என்று என்னென்னவோ இருந்தது.                                                  

அவ்வளவுதான், அப்படியே அந்த புத்தகத்தை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். "நல்ல வேலை தெற்கு கரோலினாவில் முஸ்லிம்கள் யாரையும் நான் பார்த்ததில்லை"

பிறகு ஒரு முஸ்லிமை சந்தித்தேன். அவர் என்னுடன் பள்ளியில் படித்தவர்தான். ஆனால் அவர் முஸ்லிமாக இருப்பார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அதற்கு காரணங்கள். ஒன்று, அவர்தான் ஆப்ரிக்க அமெரிக்கர் ஆயிற்றே, முஸ்லிம்கள் என்றால் அரேபியர்கள் என்று தானே அந்த புத்தகத்தில் போட்டிருந்தது.
 

ஒரு வெள்ளிகிழமை, நண்பர்களுடன் மதங்கள் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, இந்த நண்பர் என் அருகில் வந்து,

"இஸ்லாமைப் பற்றி தெரியுமா?" என்று கேட்டார்..

"இஸ்லாமைப் பற்றி எல்லாம் எனக்கு தெரியும்" என்று நான் படித்தவை பற்றி கூறினேன்.

"So, இஸ்லாமைப்பற்றி என்ன நினைக்கிறாய்"

"நினைப்பதற்கு என்ன இருக்கிறது, நான் பார்த்த மதங்களிலேயே மோசமானது அதுதான்"    

"உனக்கு தெரியுமா, நான் ஒரு முஸ்லிம்"  

"நீ ஆப்ரிக்க அமெரிக்கன் அல்லவா?"

"ஆம், அதனால் என்ன?" 

"முஸ்லிம்கள் என்றாலே அரேபியர்கள் தானே"

"என்ன?" ஆச்சர்யத்துடன் கேட்டார் அவர்.

"இங்கே பார், நான் ஒரு நல்ல முஸ்லிமல்ல. ஆனால், என்னால் உனக்கு சிலரை அறிமுகப்படுத்த முடியும். அவர்கள் உனக்கு இஸ்லாமைப் பற்றி தெளிவாக கூறுவார்கள். நான் இப்போது ஜூம்மாஹ்விற்கு போகிறேன். என்னுடன் நீயும் வா" 

"ஜும்மாஹ் என்றால்?"

"ஞாயிற்றுகிழமை சர்ச்களில் நடக்குமே அதுபோன்றுதான். என்ன இங்கே நாற்காலிகள் கிடையாது" (அரங்கத்தில் சிரிப்பு)

"எங்கே இருக்கிறது மசூதி?"

அவர் கூறினார். அவர் சொன்ன அந்த இடம் என் தெருவில் தான் இருந்தது. அதற்கு பக்கத்தில் உள்ளே சர்ச்சில் தான் நான் மிசனரி பணிகளை செய்தேன். இத்தனை நாளாய் எனக்கு தெரியாது அங்கு மசூதி இருக்கிறதென்று.   

அப்போது ஒருவர் வந்தார், அவர் தான் இமாம் என்று பிறகு தெரிந்தது. அருமையான மனிதர். பண்பாக பேசினார். என்னை உள்ளே அழைத்து சென்றார். அந்த ஹாலின் கடைசியில் ஓரு நாற்காலி கொடுத்து உட்கார சொன்னார். என் முன்னே பலரும் அமர்ந்திருக்கிறார்கள். எனக்கு பின்னாலோ ஒரு திரை, திரைக்கு அந்த பக்கம் பெண்கள் குரல் கேட்டது.

என்னைச் சுற்றி முஸ்லிம்கள், நடுவில் நான். "என்னை ஜிஹாத் செய்யப் போகிறார்களா  இது அதற்குண்டான செட்அப்பா" ஒருவித பயம்.

பின்னர் குத்பா ஆரம்பித்தது "இன்ன அல்ஹம்துலில்லாஹ் நஹ்மதுஹு" என்று ஆரம்பித்தார் இமாம்.  

அவ்வளவுதான் பயம் அதிகரித்தது...

"அட கடவுளே, சரியாப் போச்சு, என்னைப் பார்த்து தான் பேசுகிறார். நிச்சயம் ஜிஹாத் தான் நடக்கபோகிறது", வெளியேறி விடலாம் என்றாலும் என்னைச் சுற்றி மக்கள்.                                

அந்த இமாம் நல்ல மனிதர் மட்டுமல்ல, அறிவாளியும் கூட. குத்பாவை  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கூறிக்கொண்டிருந்தார். எனக்கு புரிய வேண்டும் என்பதற்காகவா?, இல்லை அவர் எப்போதும் இப்படித்தான் உரை நிகழ்த்துவாரா?, தெரியவில்லை. ஆனால் எனக்காகவே நிகழ்த்தப்பட்ட ஒன்றாக எனக்கு தோன்றியது.

இன்று வரை நன்கு நினைவிருக்கிறது அந்த உரை. என் உள்ளத்தில் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்திய ஒன்று அது. உரையின் தலைப்பு, "இறைவன் யாவரையும் மன்னிப்பான், இணைவைப்பவரை தவிர". அதுமட்டுமல்லாமல், இப்ராஹீம் (அலை), மூசா (அலை) என்று பைபிளில் உள்ளே நபிமார்களின் பெயரை உச்சரித்தார். எனக்கு ஆச்சர்யம், இவர் எங்கிருந்து இதையெல்லாம் எடுத்தார்?  

குத்பா முடிந்தவுடன் எல்லாரும் எழுந்து வரிசையாக நிற்க ஆரம்பித்தார்கள்.

"என்ன செய்யப் போகிறீர்கள்" என்று பக்கத்தில் உள்ளவரிடம் கேட்டேன்.

"தொழ போகிறோம்"

"யாரை"

"இறைவனை"

"எந்த இறைவன்?"

"உலகில் உள்ள அனைத்தையும் படைத்தானே அவனை. பைபிளில் கூறப்படுகிறதே அவனை"

என்னுடைய கடவுளைத்தான் இவர்களும் வணங்குகிறார்களா?. எனக்கு புரிய ஆரம்பித்தது.
      
தொழுகை ஆரம்பித்தது. குரானின் வசனங்கள் ஓதப்படுவது அழகாக இருந்தது, மனதை ஊடுருவியது.

சஜிதா செய்தார்கள். "ஆ, இதுதானே நான் பல புத்தகங்களில் படித்தது". முஸ்லிம்களின் தொழுகை என்னை மிகவும் பாதித்தது. இது பிரார்த்தனை (Prayer) அல்ல, பிரார்த்தனை என்றால் கடவுளிடம் கேட்பது, ஆனால் இது வழிபாடு (Worship). இது தான் நான் இத்தனை நாளாய் எதிர்ப்பார்த்தது.

தொழுகை முடிந்தது. எனக்கு, என்னைப் பார்த்து மிக வெட்கமாய் இருந்தது (I am ashamed of myself). மற்ற மதத்து நூல்களையெல்லாம் தெளிவாக ஆராய்ந்தவன், இஸ்லாமைப் பற்றி மட்டும் ஒரு புத்தகத்தை வைத்து யூகித்து விட்டேனே. வெட்கமாய் இருந்தது.    

தொழுகை முடிந்தவுடன் நேராக அந்த இமாமிடம் சென்றேன். முன்னர் அவரிடம் சிறிது கடுமையாக நடந்து கொண்டதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டேன். பின்னர் அவர் என்னிடம் இஸ்லாத்தைப் பற்றி விளக்க முயன்றார். ஆனால் நான் அவரிடம்,

"இல்லை இல்லை, எனக்கு விளக்கம் தேவையில்லை. உங்களிடம் உங்களுக்கென்று புத்தகம் ஏதாவது இருக்கிறதா?"

"ஆம் இருக்கிறது, அதற்கு பெயர் குர்ஆன்"

"அதை நான் படிக்கலாமா"

"நிச்சயமாக, ஆங்கில மொழிபெயர்ப்பு இருக்கிறது. அதை எடுத்துக்கொள்ளுங்கள்"

எடுத்துக்கொண்டேன். அன்று இரவே படிக்கத் தொடங்கினேன். முதல் சூரா, அல் பாத்திஹா, பைபிளில் இருப்பது போன்று கடவுளை துதிக்கும் அழகான வார்த்தைகள். மேற்கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.

அதே பெயர்கள். ஆம் அதே நபிமார்கள். ஆனால் பெரிய வித்தியாசம். இங்கே இந்த நபிமார்கள், தூதர்களுக்குண்டான தன்மையுடன் இருக்கிறார்கள்.அவர்கள் கொண்டுவந்த இறைச்செய்திக்கேற்ப வாழ்ந்து காட்டிருக்கிறார்கள். நிச்சயமாக இவர்கள் நான் பின்பற்றுவதற்க்குரிய தகுதியைக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக மனிதர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணம் இவர்கள்.

ஆர்வம் கூடிக்கொண்டே இருந்தது. ஈசா (அலை) அவர்களைப் பற்றி என்ன கூறுகிறது இந்த புத்தகம் என்று பார்க்க மிகுந்த ஆவல். சூரத்துல் அல் இம்ரான் போன்ற சூராக்களில் கூறப்பட்டிருந்த ஈசா (அலை) அவர்களது வரலாறானது நான் இதுவரை New Testament டில் படித்த கதைகளையெல்லாம் விட மிக அழகாக, தெளிவாக இருந்தது. என் மனதில் இருந்த ஈசா (அலை) இவர்தான்.

குரானை மூன்று நாட்களில் படித்து முடித்துவிட்டேன். ஆனால் முதல் இரவில் சூரத்துல் அல் இம்ரான் படித்த போதே என் மனதை இந்த புத்தகத்திற்கு அர்ப்பணித்துவிட்டேன்.

முஸ்லிம்கள் என்றால் யார்,  எப்படி முஸ்லிமாவது என்று கூட அப்போது சரியாக எனக்கு புரிந்திருக்கவில்லை.

ஆனால் இதைப் பின்பற்றுபவர்கள் போல நானும் ஆக வேண்டும். இந்த புத்தகத்தில் இருக்கும் நபிமார்களை போலத்தான் நானும் வாழவேண்டும். இந்த புத்தகம் வாழ்க்கைக்கு  வழிகாட்டி.

"இது தவறென்றால் சோதனைக்கு வையுங்கள், இது தவறென்றால் இதுபோன்ற ஒன்றை கொண்டுவாருங்கள்" என்று சவால்விடும் இதுபோன்ற ஒன்றை நான் இது வரை பார்த்ததில்லை.

கடவுளைப்பற்றிய அனைத்து விளக்கங்ககளும் அர்த்தமுள்ளதாக, லாஜிக்காக இருந்தன. குரானின் போதனைகள் நேரடியானவை, நேர்மையானவை.

அந்த இரவு என் மனதை முழுவதுமாக இஸ்லாத்திற்கு அர்ப்பணித்து விட்டேன். அழுதேன், அழுதேன், அழுதுக்  கொண்டே இருந்தேன். உண்மையைத் தேடி அலைந்து கொண்டிருந்தவன் நான். எங்கெல்லாமோ அலைந்து திரிந்தவன்.

ஆனால் அதுவோ என் தெருவிலேயே, என் அருகிலேயே இருந்திருக்கிறது.

திங்கட்கிழமை அந்த பள்ளிக்கு இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள என்ன செய்யவேண்டும் என்று கேட்க போனேன். அதுமட்டுமல்லாமல், இத்தனை நாளாய் நீங்களெல்லாம் எங்கிருந்தீர்கள்? என்றும் கேட்க வேண்டும். ஆனால் பள்ளியோ பூட்டியிருந்தது. ஜும்மாஹ் மற்றும் இஷா தொழுகைக்கு மட்டும்தான் திறப்பார்களாம். எனக்கு தெரியாது. பின்னர் அடுத்த ஜும்மாஹ்வில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். அல்ஹம்துலில்லாஹ்...

இங்கு என் கதையை கூறுவதற்கு முக்கிய காரணம், என்னைப் போல எத்தனை பேர் இந்த உலகில் உண்மையைத் தேடி அலைகின்றனர் என்று பாருங்கள்.

நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட 1998 ஆம் ஆண்டு மட்டுமே லட்சகணக்கில் இருந்திருக்க வேண்டும். அமெரிக்கா முழுவதும், கலிபோர்னியாவில், நியூயார்க்கில் என்று எங்கு வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள்.

என்னைப் போல் நிறைய பேர் இருக்கிறார்கள். உண்மையை மறைப்பது முஸ்லிம்களாகிய நமக்கு அழகல்ல. அதனால் தயவுகூர்ந்து உங்களுடன் இஸ்லாம் என்ற உண்மையை மறைத்து வைத்துக் கொள்ளாதீர்கள். என்னைப் போல பலருக்கும் அது தேவைப்படுகிறது.

உலகில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் நம்மிடம் தீர்வு உண்டு. இதை புரிந்து கொள்ளுங்கள்.

என் நண்பன் ஒருவன் தீவிரமான நோயால் பாதிக்கப்பட்டு, அதை தீர்க்கக்கூடிய மருந்து எனக்கு கிடைத்து, அதை நான் அவனிடம் கொடுக்காமல் மறைத்தால் எப்படி இருக்கும்?

அதைத்தான் நம்மில் பலரும் செய்து கொண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றி பலரும் இணைவைத்தல் என்ற தீவிர நோயால் பாதிக்கப் பற்றிருக்கின்றனர். அறிகுறிகள் இல்லாத நோய் இது. நம்மிடம் அதற்கு இஸ்லாம் என்ற மருந்து இருந்தும் அதை நாம் மறைக்கிறோம், கொடுக்க மறுக்கிறோம்.

இங்கே நான் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இஸ்லாம் என்றால் என்னவென்று தெரியாமலேயே இறக்கின்றனர்.

தாவாஹ் பல வழிகளில் செய்யலாம். நம் அனைவராலும் முடிகிற ஒன்றென்றால், அது நாம் முஸ்லிமாக வாழ்ந்து காட்டுவதுதான். ஆம், அது ஒரு மிகச் சிறந்த தாவாஹ். நீங்கள் முஸ்லிமென்பதை மறைக்காதீர்கள். ஒரு உண்மையான முஸ்லிமாக வாழ்ந்து காட்டுங்கள். உங்கள் நற்பண்புகளுக்கு இஸ்லாம்தான் காரணம் என்று தெளிவாக புரிய வையுங்கள்.              

என்னுடைய முக்கிய தாவாஹ் பணிகளில் ஒன்று என்றால் அது DVD project. அமெரிக்காவில் உள்ள எவரும் இஸ்லாமைப்பற்றி தெரியாமல் இருக்கக்கூடாது. இஸ்லாமைப் பற்றிய தகவல்களை டிவிடிக்களில் பதிந்து முஸ்லிமல்லாதவர்களுக்கு கொடுக்கிறோம். நிச்சயமாக டிவிடிக்களை பலரும் பார்ப்பார்கள். இப்போது florida பகுதியில் என் கவனத்தை செலுத்தி வருகிறேன்.   

நூறு டிவிடிக்கள் தயாரிக்கிறோம் என்றால் அதில் இருபத்தைந்தை முஸ்லிம்கள் வாங்கக் கொடுப்போம். ஏனென்றால் அவர்களும் தங்களை தாவாஹ் பணியில் இணைத்துக் கொண்டது போலாகும்.

அல்ஹம்துலில்லாஹ்...இந்த செயல் திட்டத்தால் மாதம் இருவர் இஸ்லாத்தில் தங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள்.

நான் என் கதையை பொழுதுபோக்குக்காக சொல்லுவதில்லை. அதற்கு பின்னால் இருக்கும் செய்தியைத்தான் இதனால் சொல்ல விரும்புகிறேன்.

இப்போது நான் சொன்ன தகவல்கள் உங்களுக்கு உபயோகமாக இருந்தால் அந்த புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே. நான் சொல்லியதில் தவறேதும் இருந்தால் அது என்னுடைய அறியாமையால் ஏற்ப்பட்டது.

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்"


அல்ஹம்துலில்லாஹ்...
------------------------------------------------------------------------------------------------------------------

இஸ்லாம், அன்றும் சரி இன்றும் சரி, மிக வேகமாய் பலரையும் தன்பால் ஈர்த்து வருகிதென்றால், அதற்கு பின்னால் சகோதரர் எவன்ஸ் போன்ற கோடிக்கணக்கான உண்மையான முஸ்லிம்களும் ஒரு காரணம்.  இறைவன் இவருக்கு மென்மேலும் கல்வி ஞானத்தையும், மன உறுதியையும், உடல் வலிமையையும் அளிப்பானாக...ஆமின்.

நீங்கள் அமெரிக்காவில் வாழக்கூடிய மாணவராக இருந்தால், சகோதரர் எவன்ஸ் அவர்கள் உங்கள் கல்லூரிக்கு சொற்ப்பொழிவாற்ற வர வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், நான் கீழ கொடுத்துள்ள அவரது வலைதளத்தில் அவரை தொடர்பு கொள்ளலாம். இன்ஷா அல்லாஹ்...

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...
 
மேலும் விவரங்களுக்கு சகோதரரின் இணையதளம் சென்று பார்வை இடலாமே!

http://yushaevans.com/

by abu mahathi

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!