தமிநாட்டு அரசு பேருந்தின் கோவை கோட்டத்துக்கு சொந்தமான ஒரு பேருந்து 16.04.2012 அன்று காலை 10 மணிக்கு ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சிவகாசிக்கு 35 பயணிகளுடன் கிளம்பியது.
அந்த பேருந்தை சத்தியமங்கலத்தை சேர்ந்த ஓட்டுனர் நவாப்ஜான் (வயது 53) என்பவர் ஒட்டிக்கொண்டு சென்றார். பேருந்து காலை 11.00 மணியளவில் ஈரோடு கரூர் சாலையில் உள்ள கனபதிபாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனர் பேருந்தை சாலையோரத்தில் கொண்டுபோய் நிறுத்தியுள்ளார்.
சம்மந்தம் இல்லாத இடத்தில் ஏன் பேருந்தை நிறுத்துகிறார் என்று பயணிகள் யோசித்துக்கொண்டிருக்கும் போதே, ஓட்டுனர் தனது இருக்கையிலிருந்து நெஞ்சை கையால் பிடித்தபடி கீழே இறங்கியுள்ளார். இறங்கியதும் அதே இடத்தில் சாலையில் மயங்கி விழுந்து விட்டார்.
தனது நெஞ்சை கையால் அழுத்தி பிடித்தபடி நெஞ்சுவலியால் துடித்துகொண்டிருந்தார் நவாப்ஜான். உடனடியாக பேருந்தில் பயணம் செய்த மற்றொரு ஒட்டுனர் பேருந்தை எடுத்துகொண்டு திரும்பவும் ஈரோடுக்கு வந்து நவாப்ஜானை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அனால், சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி நவாப்ஜான் உயிரிழந்தார்.
நவாப்ஜானுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் தான் உயிரிழந்துள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் பேருந்தை நிறுத்தாமல் போயிருந்தால் நாங்கள் பலர் இப்போது உயிருடன் இருந்திருக்க முடியாது. சிறந்த ஓட்டுனராக இருந்து எங்களின் உயிரை காப்பாற்றி விட்டார் என்று கூறியதுடன். நவாப்ஜானின் உடலுக்கு மரியாதை செலுத்திவிட்டு பிறகுதான் அந்த பேருந்தில் இருந்த பயணிகள் சிவகாசிக்கு புறப்பட்டனர்.
நவாப்ஜான் போற்றுதலுக்குரியவர் தான்.

என்ன நடந்தது.... என்று பயணிகள் யோசித்துக்கொண்டிருக்கும் போதே நடத்துனர் பேருந்திலிருந்து இறங்கி அந்த இடத்துக்கு ஒட்டியுளளார். பின்னால் பயணிகளும் இரங்கி போய் கீழே விழுந்து கிடந்த ஓட்டுனரை போய் பார்த்துள்ளனர்.

நக்கீரன்