Showing posts with label காலமாகிவிட்டார்கள். Show all posts
Showing posts with label காலமாகிவிட்டார்கள். Show all posts

Monday, November 14, 2011

காலமாகிவிட்டார்கள்

நாம் பொதுவாக இறந்துவிட்டவர்களைப் பற்றிக் கூறும்பொழுது,இறந்துவிட்டார்கள்,மறைந்துவிட்டார்கள்,மரணமடைந்துவிட்டார்கள்,வபாத்தாகிவிட்டார்கள் என்று பயன்படுத்துவதுண்டு.அதே போன்று காலமாகிவிட்டார்கள் என்றும் பயன்படுத்துகிறோம்.இந்த வார்த்தையை நாம் சற்று சிந்திக்கும்போது - முஸ்லிம்களாகிய நாம் அந்த வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என் விளங்க தோன்றுகிறது.

சில மொழிகளில் பல வார்த்தைகள் இணைவைக்கும் தன்மையை அல்லது மார்க்கம் அனுமதிக்காத சொற்களைக் கொண்டுள்ளன.

உதாரணாமாக காலமாகிவிட்டார்கள் என்று சொன்னால்,அவர் காலமாக ஆகிவிட்டார் என்ற மறைமுக பொருளையும் கொடுக்கிறது.அல்லாஹ் தன்னைப் பற்றி கூறுவதாக கீழ்கண்ட நபிமொழி நமக்கு இவ்வாறு போதிக்கிறது,

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகிறான். அவன் காலத்தைஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்); என் கையிலேயே அதிகாரம் உள்ளது; நானே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
ஸஹீஹுல் புகாரி ஹதீஸ்
NUMBER 4826
 Volume :5 Book :65


தானே காலம் எனக் கூறுகிறான்.எனவே காலமாகிவிட்டார்கள் எனக் கூறும்போது,இங்கு இணைவைக்கும் சொல்லாக ஆகிவிடுகிறது.எனவே மிக எச்சரிக்கையாக இருப்போம்.இன்ஷா அல்லாஹ் 

 

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!