Showing posts with label திக்விஜய். Show all posts
Showing posts with label திக்விஜய். Show all posts

Thursday, December 5, 2013

காந்தி படுகொலை; பாபர்மசூதி இடிப்பு இவையே இரு பெரும் பயங்கரவாத நிகழ்வுகள்: திக்விஜய்

டெல்லியின் ஆஜ்தக் தொலைக்காட்சி ஓடை நடத்திய நேர்காணலில், "சுதந்திர இந்தியாவின் இரு பெரும் பயங்கரவாதச் சம்பவங்களாக
மஹாத்மா காந்தியின் படுகொலையும், பாபர் மசூதி இடிப்பும் தான் அமைந்தன" என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் கூறியுள்ளார். "இந்த இரண்டு சம்பவங்களால் தான் இந்தியா தனது மதச் சார்பின்மை என்னும் முகத்தில் தாக்குதல் கண்டது" என்றார் திக்விஜய்சிங்.
"சட்டமன்ற தேர்தல்களுக்கும் மக்களவைப் பொதுத் தேர்தலும் பெரும் வேறுபாடுகள் உள்ளன. இந்தக் கருத்துக்கணிப்பு குளறுபடிகளை ஏற்க இயலாது; மேலும், அவை குறித்து கவலை கொள்ளவும் தேவையில்லை" என்றும் திக்விஜய்சிங் கூறினார். மேலும், குஜராத்தில் இளம்பெண் வேவு பார்க்கப்பட்டது சட்டவிதிமீறல் தான். அதை அமித் ஷாவே ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றும் திக்விஜய் சிங் சுட்டிக் காட்டினார்.

http://inneram.com/news/india/3787-gandhi-murder-babri-masjid.html

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!