Showing posts with label காங்கிரஸ். Show all posts
Showing posts with label காங்கிரஸ். Show all posts

Sunday, October 2, 2011

பேரூராட்சித் தேர்தல்.காங்கிரஸ் MMS பஷீர் வெற்றி முகம்.

தாஜுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட பகுதிகளில் யாருக்கு மக்கள் ஆதரவு என அறிய சர்வே செய்தோம்.


கட்சி வாரியாக திமுக,அதிமுக ,திமுக போட்டி வேட்பாளர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்கள் இங்கு டெபாசிட் வாங்குவதே கடினம்,மற்ற கட்சிகளும் சுத்த பூஜ்யம்  என்றுதான் சொல்ல வேண்டும்.காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை MMS பஷீர் வெற்றி முகத்துடன் இருக்கிறார்.


இதற்கு சில காரணங்கள் இல்லாமல் இல்லை.
காரணம் ஒன்று)தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் கட்டுப்பாட்டை மதிக்கும் மக்கள்.
இரண்டு) பஷீர் அவர்களை பொறுத்தவரை விஷய ஞானம் உள்ளவர்.அவர் வெற்றி பெற்றால் நம் பகுதிக்கு எதோ செய்வார்,எம் எல் ஏ வுக்கும் வேண்டப்படாவர் என்ற தகுதி,
மூன்று)எம் எம் எஸ் குடும்ப உறுப்பினர் என்ற மரியாதை

இப்படி இவருக்கு சில பிளஸ்கள் இருக்கின்றன.

மேலும் இந்த ஏரியாவில் ஓட்டைப் பிரிக்கும் அளவுக்கு - வேறு யாரும் களத்தில் இல்லை.

அதுமட்டுமல்ல,கீழத்தெரு முஹல்லாவாசிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் பஷீர் அவர்களையே ஆதரிக்கிறார்கள்.மற்ற கட்சிகளைப் பொறுத்தவரை- திமுக ,அதிமுக, முஸ்லீம் லீக் குக்கும் லேசான ஆதரவு இருப்பதை பார்க்க முடிகிறது.இருப்பினும் காங்கிரசுக்கு இருக்கும் ஆதரவு அதிக அளவில் இருப்பதால் - மேலத்தெரு,கீழத்தெரு முஹல்லாக்களில் காங்கரஸ் பஷீர் அவர்கள் கொடி பறக்கிறது,

இன்ஷா அல்லாஹ்,நாளை வேறொரு ரவுண்டப்பில் சந்திப்போம்....

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!