Showing posts with label AAF. Show all posts
Showing posts with label AAF. Show all posts

Monday, July 3, 2017

Adirai EID gathering in California

அதிரை நியூஸ்: ஜூலை 03
அமெரிக்காவில் அதிகமான அதிரையர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அமெரிக்கா வாழ் அதிரையர்களின் நலன் கருதி கடந்த 2012 ஆம் ஆண்டு அதிரை அமெரிக்கன் கூட்டமைப்பு (AAF) தொடங்கப்பட்டது. இதையடுத்து கால் ஆண்டிற்கு ஒரு முறை அனைவரும் குடும்பத்துடன் ஒன்று கூடி தங்களின் அன்பை பரிமாறிக் கொள்வதுடன் பலதரப்பட்ட கருத்துக்களை ஆலோசனை செய்துவருவது வழக்கம். குறிப்பாக பெருநாள் பண்டிகைகள், விடுமுறை காலங்களில் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அதிரை அமெரிக்கன் கூட்டமைப்பு சார்பில் அரையாண்டு சந்திப்பு மற்றும் பெருநாள் சந்திப்புக் கூட்டம், கலிபோர்னியா மகாணம் பேர்பீல்ட் நகரில் உள்ள லாரல் கிரீக் பார்க்கில் ஞாயிற்றுக்கிழமை பகல் நடைபெற்றது.

ஜே. சேக் அப்துல் காதர் கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு அவ்வமைப்பின் தலைவர் புகாரி தலைமை வகித்து, உரை நிகழ்த்தினார். கூட்டமைப்பின் செயல்பாடுகள் மற்றும் தீர்மானங்களை அவ்வமைப்பின் செயலாளர் நஜ்முதீன் விளக்கிப் பேசினார். கூட்டமைப்பின்
நிதிநிலை அறிக்கையை பொருளாளர் முகமது வாசித்தார்.

கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக சவூதி அரேபியா அதிரை பைத்துல்மால் நிர்வாகி எஸ்.தாவூது கலந்து கொண்டு, அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பு கடந்த 24 ஆண்டுகளாக அதிராம்பட்டினம் பகுதி ஏழை, எளிய மக்களுக்கு ஆற்றிவரும் சிறப்பான செயல்பாடுகள் பற்றி விளக்கமாக எடுத்துக்கூறினார். மேலும், அதிரை அமெரிக்கன் கூட்டமைப்பின் ஆற்றிவரும் சேவையைப் பாராட்டியதுடன், அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பிற்கு ஆதரவும் கோரினார்.

கூட்டத்தில், அமெரிக்கா வாழ் அதிரையர்களின் அடுத்த தலைமுறையான இளைஞர்களின் பங்கு பற்றி அவ்வமைப்பின் துணைச் செயலாளர் அதிரை சித்தீக் உரையாற்றினார். இக்கூட்டத்தில் அதிரை அமெரிக்கன் கூட்டமைப்பினர் பலர் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர்.
 
 

 
 
 
 
 
 
 
 
 
Courtesy adirainews 

Saturday, August 8, 2015

அமெரிக்க அதிரை கூட்டமைப்பும் ,அதன் முக்கியத்துவமும்...

சென்ற வாரம் ஞாயிற்றுக் கிழமை அதாவது ஆகஸ்ட் இரண்டாம் தேதி,அமெரிக்க வாழ் அதிரைக் கூட்டமைப்பின் ஒன்று கூடல் ஒன்று கலிபோர்னியா மாநிலத்தின் வல்லெஹோ என்ற ஊரின் ஒரு பூங்காவில் நடந்தேறியது.

பொதுவான,ஒரு நிகழ்வாக அது நடந்து இருப்பின்,அதைப் பற்றிய செய்திகளை பரிமாறும் எண்ணம் வந்து இருக்காது.ஆனால்,அங்கு வந்து கூடி இருந்த மக்கள் அனைவரும் அதிரை மக்களின் மீதான ஒரு கரிசன உணர்வுடன் கூடிப் பேசி இருந்ததைக் கண்டவுடன்,பகிரவேண்டும் என்ற நல எண்ணம் ஏற்பட்டதில் வியப்பில்லை தானே.

அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கு வாழும் அதிரை முஸ்லிம் மக்கள் அனைவரும் எவ்வித தெரு வேறுபாடும் இல்லாமல்,எந்த சங்கத்துக்கும் கொடி பிடிக்காமல்,ஒன்று பட்ட ஒரே அமைப்பாக இருக்கிறார்கள்.எந்த ஒரு தெருவுக்கும் இங்கு அமைப்புக்கள் இல்லை.அனைவரும் அமெரிக்கன் அதிரை போரம் என்ற அமைப்பின் கீழ் ஒற்றுமையாக செயல் பட்டுக் கொண்டுள்ளனர்.இது வேறு எங்கும் காணக் கிடைக்காத ஒரு அறிய நிகழ்வாகும்.

வளைகுடா நாடுகளில் உள்ள எந்த நாட்டையும் எடுத்துப் பார்ப்போம் என்றால்,அங்கெல்லாம்,முஹல்லாகள் முஹல்லாக்களாக பிளவு பட்டு,தெருவுக்கு ஒரு சங்கமாக பிரிந்து கிடக்கிறார்கள்.ஆஸ்திரேலிய,பிரிட்டன் போன்ற நாடுகளின் கதியும் இதுதான்.

குறிப்பிட்ட இந்த தெரு வாசிகளின் கூட்டம் நடை பெற உள்ளதால்,குறிப்பிட்ட அந்த தெரு வாசிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று விளம்பரங்கள் வருகின்றன.

ஆனால்,அமெரிக்காவின் நிலையே வேறு,இங்கு அதிரைவாசிகளே கலந்து கொள்ளுங்கள் என்றுதான் விளம்பரங்கள் வரும்.

அதேயே,கூட்டத்தில் ஒருவராக கலந்து கொண்ட சவூதி ஐடாவின் முன்னாள் தலைவர்,ஆபிதீன் காக்கா அவர்கள்,இதை ஒரு யுனிக் என்று குறிப்பிட்டு பாராட்டினார்கள்.

இன்ஷா அல்லாஹ்,இது இனியும் தொடர வேண்டும் என்பதே நம் அவாவும்,துவாவும். 

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!