Showing posts with label அறிவிப்பு. Show all posts
Showing posts with label அறிவிப்பு. Show all posts

Friday, November 20, 2009

மரண அறிவிப்பு

மர்ஹூம் முஹம்மத் தம்பி மரைக்காயர் (கட்ட பிள்ளையார்)அவர்களின் மகனாரும்,சகோதரர்கள் முஹம்மத் தமீம்,சாதிக்,ரபீக்,தௌபீக் ஆகியோர்களின் தகப்பனாரும்,மர்ஹூம் ஷேய்க்காதியார்,மர்ஹூம் அபுல் ஹசன்,அப்துல் ரஜாக்,ஹாஜா அலாவுதீன் ஆகியோர்களின் சகோதரரும்,அப்துல் ரஜாக்,ஷேய்க் அப்துல் காதர்,அப்துல் ரஜாக்,ஹாஜா ஆகியோர்களின் மாமனாருமாகிய நடுத்தெருவில் வசித்து வந்த சாகுல் ஹமீத் அவர்கள் இன்று காலை சுமார் ஆறு மணியளவில் அதிராம்பட்டினத்தில் இறைவனடி சேர்ந்துவிட்டார்கள்.அன்னார் அவர்கள் மிக எளிமையான நடத்தையும்,மேன்மையையும் பேணி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அன்னாரின் மறுமை உலக நற் பேருக்காகவும்,ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவர்க்கம் கிடைக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி துவா செய்யுமாறு வேண்டுகிறோம்.

இப்படிக்கு

கட்டப்பிள்ளையார் குடும்பத்தார்.

Friday, December 12, 2008

முக்கிய அறிவிப்பு!

அன்புக்குரிய சகோதர,சகோதரிகளே அஸ்ஸலாமு அலைக்கும்.(எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக).

ஈகைத்திருநாள்(ஹஜ்)முதல் இஸ்லாம் சேனல் மூலம் நேரடி ஒளிபரப்பு நடைபெற்றுக் கொண்டுள்ளது.அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.அதில் பலவித நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன,24/7 மணி நேரமும் பார்க்கலாம்,கேட்கலாம்.

நீங்கள் பயன் பெறுவதோடு,மற்றவர்களையும் ஊக்கப்படுத்தி பயன் பெறுமாறு வேண்டுகிறோம். முஸ்லிம்கள்,முஸ்லீம் அல்லாதவர்கள்,பெண்கள்,குழந்தைகள் என எல்லா தரப்பாருக்கும் ஏற்ற நிகழ்சிகளும்,இடை, இடையே உலக செய்திகளும் இடம்பெறுவது இதன் சிறப்பம்சம்.

பாருங்க,கேளுங்க,அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவோம் வாருங்க!

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!