Showing posts with label சபாஷ். Show all posts
Showing posts with label சபாஷ். Show all posts

Friday, September 16, 2011

சபாஷ்! சரியான போட்டிதான்.


'விக்கி லீக்'. இந்த பெயரைக் கேட்டாலே நம்மூர் அரசியவாதிகள் முதல் நாடறிந்த நாட்டாமை அமெரிக்கா வரைக்கும் ஒரு கலக்கம் ஏற்படுவது அனைவரும் அறிந்த உண்மையே. காரணம் இந்த இணைய தளம் பல்வேறு நாடுகளின், நபர்களின் ரகசியங்களை அம்பலப்படுத்தி வருகிறது. இந்த இணையதளத்தில் செய்தி எந்த அளவுக்கு உண்மையோ தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு செய்தியும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. 
 
இந்த விக்கி லீக் உரிமையாளர் ஜூலியன் அசாங்சே '' உ.பி. முதல்வர் மாயாவதியின் ஒரு விஷயத்தை சமீபத்தில்வெளியிட்டுள்ளார். ''உத்தரபிரதேச மாநில முதல்வர் மாயாவதி கடந்த 2007ம் ஆண்டு ஒரு விளம்பரத்தில் பார்த்த தனக்கு பிடித்தமான செருப்பை வாங்க விரும்பினார். அந்த செருப்பு மும்பையில் மட்டும் இருப்பதாக அறிந்து அதை வாங்க ஒரு ஜெட் விமானத்தை மும்பைக்கு அனுப்பி வைத்தார். அதில் விமானியுடன் மாயாவதிக்கு வேண்டிய அரசு அதிகாரியான மந்திரி சபை செயலாளர் ஷஷாங்க் சேகர் சிங், அவரது கட்சியின் தேசிய செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ரா மற்றும் சில பாதுகாப்பு அதிகாரிகளையும் அனுப்பி வைத்தார். சில நூறு ரூபாய் மதிப்புள்ள ஒரு செருப்பை வாங்க மாயாவதி பல லட்சம் ரூபாய் செலவிட்டது அவரது ஆடம்பரத்தை காட்டுகிறது''
இதுதான் அவர் சொன்ன தகவல் ஆகும்.
 
இதுபற்றி அறிந்து கடும் ஆவேசத்துக்கு ஆளான மாயாவதி, ''விக்கி லீக் கூறிய தகவல் ஆதாரமற்றது. என் மீதும், என் அரசாங்கத்தின் மீதும் பழி சுமத்துவதற்காக வேண்டுமென்றே சொல்லப்பட்ட அவதூறு செய்தி என்று கூறியுள்ள மாயாவதி,  ஒரு தலித் அரசாங்கத்துக்கு எதிராக பா.ஜனதா செயல்படுகிறது. அந்த கட்சிக்கு ஜூலியன் அசாங்சே துதிபாடுகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று நினைக்கிறேன். அவரை அவரது நாடு (சுவீடன்) அங்குள்ள நல்ல மனநல ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும் என்று அந்த நாட்டுக்கு கோரிக்கை விடுக்கிறேன். இல்லையென்றால் அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தால், ஆக்ராவில் உள்ள எங்களது மனநல ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்க தயாராக இருக்கிறோம் என்று  ஜூலியன் அசாங்சே  மீது ஆவேச தாக்குதல் தொடுக்க,
 
மறுபுறமோ மன நல காப்பகத்தில் சேரத்தயார் என்றும், உடனடியாக ஜெட் விமானம் அனுப்புங்கள் என்றும்,  வரும்போது இங்கிலாந்தில் பிரபலமான, மிக அருமையான ஒரு ஜோடி செருப்பும் மாயாவதிக்காக வாங்கி வருகிறேன். ஜூலியன் அசாங்சே பதிலடி கொடுத்துள்ளார். சபாஷ்! சரியான போட்டிதான்.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!