Showing posts with label அசாம். Show all posts
Showing posts with label அசாம். Show all posts

Wednesday, May 18, 2011

விழித்துக்கொண்ட முஸ்லிம்கள், அலறும் அரசியல் கட்சிகள்

அசாம் மற்றும் கேரளா சட்டசபை தேர்தலில், சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள், அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இந்த மாநிலங்களில் முஸ்லிம் மக்கள், மதம் சார்ந்த கட்சிக்கு இம்முறை ஓட்டளித்திருப்பது, முன்பு எப்போதும் நடக்காதது என்று, அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அசாம் மாநிலத்தில், மவுலானா பத்ருதின் அஜ்மல் குவாஸ்மி தலைமையிலான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, 75 இடங்களில் தனித்து போட்டியிட்டு, 18 இடங்களில் வெற்றி பெற்றது. கேரளாவில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியில், குனாலிகுட்டி தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீக், 24 இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களில் வெற்றி பெற்றது. அசாமில், எதிர்க்கட்சி வரிசையில் அமரும் அளவிற்கு, அதிக இடங்களில், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது. இந்த இரு மாநிலங்களிலும், இக்கட்சிகள், அதிகாரம் படைத்த கட்சிகளாக, இம்முறை உருவெடுத்துள்ளன.


முஸ்லிம் சமுதாய கட்சிக்கு, அந்த சமுதாயத்தினரின் ஓட்டு என்ற நிலை உருவாகியுள்ளது. அசாமில் முஸ்லிம்கள் 30 சதவீதமும், கேரளாவில் 25 சதவீதமும் உள்ளனர். வெற்றி வாய்ப்பை எதிர்பார்த்து, இச்சமுதாய மக்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் மட்டும், இக்கட்சி தலைவர்கள், அதிகளவில் கவனம் செலுத்தி உள்ளனர்.இந்த மாநிலங்களுக்கு மாறாக, மேற்குவங்கத்தில், எப்போதும், இடது சாரி கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வந்த முஸ்லிம்கள், சமீபத்திய தேர்தலில், திரிணமுல் தலைமையிலான கூட்டணிக்கு ஓட்டுகளை அளித்துள்ளனர். அதேசமயம், அசாம் மற்றும் கேரளா தேர்தல் முடிவுகளை முன்னிறுத்தி, அதிகளவில் விளம்பரம் செய்தால், இந்த மாநிலங்கள், தவறான முன் உதாரணங்களாக மாறிவிடும் என்று அரசியல் வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.பீகார் மாநிலத்திலும், முஸ்லிம்கள் அதிகம். கடந்தாண்டில், அம்மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஓட்டுகள் அனைத்தும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பக்கம் சாய்ந்தன. இதே நிலைமை தான் இம்முறை மேற்குவங்கத்திலும் பிரதிபலித்துள்ளது.



அதேபோன்று தமிழகத்திலும் முஸ்லிம்களின் பாரம்பரியமான் திமுக ஒட்டு வங்கியை மனித நேய மக்கள் கட்சி உடைத்து,அதிமுக அணிக்கு பெற்றுத்தந்ததால் திமுக தோற்றுப்போனது என்ற திமுகவின் புலம்பலும் கவனிக்கத் தக்கது.

விழித்துக் கொண்டால் பிழைத்துக் கொள்ளலாம் என்பதை முஸ்லிம்கள் இந்திய அளவில் நன்கு உணரத்தொடங்கியுள்ளனர்.இது ஒரு நல்ல முன்னேற்றம்.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!