Showing posts with label அண்ணல் நபிகள். Show all posts
Showing posts with label அண்ணல் நபிகள். Show all posts

Monday, July 25, 2011

இஸ்லாம் பார்வையில் "உபரியான வணக்கம்"

நஜ்த் என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் தலை பரட்டையாக நபி அவர்களிடம் வந்தார். அவருடைய குரல் செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை. நபி அவர்களின் அருகில் வந்ததும் இஸ்லாத்தைப்பற்றி கேட்டார். அப்போது நபி அவர்கள், "இஸ்லாம் (என்பது) இரவிலும் பகலிலும் ஐவேளை தொழுகைகள்" என்றார்கள். உடனே அவர், "அந்தத் தொழுகையைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது கடமை உண்டா?" என்றார். அதற்கு அவர்கள், "நீர் விரும்பிச் செய்தாலே ஒழிய வேறில்லை" என்றார்கள்

அடுத்து, "ரமலான் மாதம் நோன்பு நோற்பதும் ஆகும் "என்று நபி அவர்கள் கூறினார்கள். உடனே அவர், அதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என் மீது கடமை உண்டா?" என்றார். அதற்கு அவர்கள், "நீர் விரும்பி செய்தாலே ஒழிய வேறில்லை என்றார்கள்.

அவரிடம் நபி அவர்கள் ஸகாத் பற்றியும் சொன்னார்கள். அதற்கு அவர், "அதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என் மீது கடமையா?" என்றார். அதற்கு அவர்கள் "நீராக விரும்பிச் செய்தாலே தவிர வேறு தர்மங்கள் கடமை இல்லை" என்றார்கள். உடனே அந்த மனிதர், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன், குறைக்கவும் மாட்டேன்" என்று கூறியவாறு திரும்பிச் சென்று விட்டார். அப்போது நபி அவர்கள், "இவர் கூறியதற்கு ஏற்ப நடந்து கொண்டால் வெற்றி அடைந்து விட்டார்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரழி) நூல் : புகாரி

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான்: யார் எனது நேசரை பகைத்துக் கொள்கிறாரோ அவருடன் நான் போர் தொடுக்கின்றேன் . நான் என் அடியான் மீது கடமையாக்கியிருக்கும் வணக்கத்தின் மூலமாகவே என் அடியான் எனக்கு நெருக்கமாகின்றான். அதுவே எனக்குப் பிரியமான வணக்கமாகும். எனது அடியான் உபரியான வணக்கங்கள் மூலம் என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறான். அதன் பயனாக அவனை நான் நேசிக்கிறேன். நான் அவனை நேசிக்கும் போது அவன் செவியுறுகின்ற செவியாகவும், அவன் பார்க்கின்ற பார்வையாகவும், அவன் நடக்கின்ற காலாகவும் நான் ஆகி விடுகின்றேன். அவன் என்னிடம் கேட்டால், நான் அவனுக்குக் கொடுக்கின்றேன். அவன் என்னிடம் பாதுகாவல் தேடினால் பாதுகாப்பு அளிக்கிறேன். முஃமினுடைய உயிரைக் கைப்பற்றும் போது அடையும் சங்கடத்தைப் போன்று நான் செய்கின்ற வேறு எந்தக் காரியத்திலும் நான் சங்கடம் அடைவதில்லை. (ஏனெனில்) என் அடியான் மரணத்தை வெறுக்கின்றான். நான் அவனுக்கு வேதனை அளிப்பதை வெறுக்கிறேன். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறுகின்றார்கள் :
நிச்சயமாக ஒர் அடியான் மறுமையில் முதன் முதலில் தொழுகையைப் பற்றி தான் விசாரிக்கப்படுவான். அவனது தொழுகை நிறைவானதாகக் காணப்பட்டால் அவனது தொழுகை நிறைவானது என்று எழுதப்படும். அவனது தொழுகையில் குறை இருந்தால் அல்லாஹ் மலக்குகளை நோக்கி," என்னுடைய அடியானுக்கு உபரியான வணக்கங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து அவனுடைய கடமையான தொழுகையில் குறைவானதை நிறைவாக்குங்கள். பிறகு ஸக்காத்தைப் பாருங்கள். மற்ற வணக்கங்களையும் இதே கணக்கின் அடிப்படையில் பார்த்து நிறைவாக்குங்கள்" என்று அல்லாஹ் கூறுகின்றான். அறிவிப்பவர் : தமீமுத் தாரி(ரலி) நூல்: தாரமீ

உங்களில் ஒருவர் தன் நற்செயலினால் (மட்டும்) சொர்க்கத்தில் புகமுடியாது' என்றார்கள். இதைக்கேட்ட நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! தாங்களுமா? எனக் கேட்டனர். அதற்கு, ஆம் நானும் தான், என்றாலும் இறைவன் தன் அருளால் என்னை பாதுகாத்துக் கொண்டான். எனவே வணக்கத்தில் பேணுதலாகவும், இரவும் பகலும் நெருங்குங்கள். மேலும், இவற்றில் (வணக்கங்களில்) நடுநிலையை மேற்கொள்ளுங்கள்!. என்று நபி அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார். நூல்கள்: முஸ்லிம், புகாரி

Tuesday, November 23, 2010

அழகிய அணிகலன்கள் பகுதி 1


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ்,

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, இந்த வலைப்பூவில் எழுத வாய்ப்பு கிடைத்தும் சில பல காரணங்களால், என்னால் உடனே எழுத இயலவில்லை. இதற்கு மேலும் தள்ளிப்போடுவது நல்லதல்ல என்பதால் ஒரு சிறிய தொடரை ஏக இறைவனின் பெயரால் ஆரம்பிக்கிறேன்.  Husn-E-Akhlaq என்னும் இந்த தொடர், அழகிய குணங்களைப் பற்றியது. இந்த குணநலன்களுக்கு முஹம்மது நபி (ஸல்) அவர்கள்தான் முன்னோடி என்றால் அது மிகையாகாது. முற்காலங்களில், இஸ்லாம் வேகமாகவும் வேரூன்றியும் வளர்ந்து கொண்டிருந்தபோது பிள்ளைகளுக்கு akhlaaq அல்லது குணனலன்கள் கற்றுக்கொடுக்கவே தனி துறையும், அதில் ஆசிரியர்களும் இருந்தனர். இமாம் மாலிக் அவர்கள் முதன் முதலில் கல்வி கற்க செல்லும் பொழுது அவரின் தாயும் சொன்னது என்ன, ”முதலில் நீ, உன் ஆசிரியரின் குணங்களை கற்றுக் கொள், அவரைப்போல வாழ ஆசைப்படு, அதன் பிறகே இல்ம் அல்லது படிப்பு”. ஆக, நம் முன்னோர்கள், இஸ்லாத்தில் குணநலன்களுக்கு எவ்வளவு மதிப்பளித்திருக்கிறார்கள் என்பது தெரியும். ஆனால், இப்போதைய வாழ்க்கை முறையில், குணநலன்கள் ஒரு பொருட்டாகவே இல்லாமல் போய்விட்டது. உலகம் முழுதும் சேவை செய்த அன்னை தெரசாவிற்கு தரப்பட்ட நோபெல் விருதை போரினாலும், போலி சட்டங்கள் மூலமும் உலகின் கால்வாசி மனிதர்களை சிறையிலும், தன் நாட்டிலேயே கைதியாகவும் வைத்திருக்கும் அமெரிக்க அதிபருக்கும் தரும்போதே நாம் தெரிந்து கொள்ள இயலும், நாம் எந்த சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். க்ஹைர். அல்லாஹ் போதுமானவன். நம்மால் இயன்றது என்ன, நம்மையும் நம்மை சார்ந்தவர்களையும் அழகிய குணநலன்களை பேண வைப்பதும், அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதுமே ஆகும். இன்ஷா அல்லாஹ், இதன் முதல் பாகத்தை இப்பொழுது காண்போம்.


“மேலும் நபியே நிச்சயமாக நீர் மிக உயர்ந்த, மகத்தான நற்குணமுடையவராக இருக்கின்றீர்” [அல்-கலம்: 4]

இந்த திருக்குர்ஆனின் ஆயத்தில், அல்லாஹ் கூறுவது என்ன? மனிதர்களுக்கு எந்த குணங்கள் நல்லவை என  சொல்லப்பட்டனவோ அத்தனை பெருங் குணங்களும் அத்தனையும் நபி (ஸல்) அவர்களிடம் காணப்பட்டுள்ளன என்பதையே. சிறு வயது முதல் தன் வாலிப வயது வரை நபிகளார் (ஸல்) அவர்களுக்கு சேவை செய்வதையே பாக்கியமாய் பெற்ற அனஸ் (ரலி) அவர்களின் கூற்றே இதற்கு மீண்டும் அழகு சேர்க்கிறது,

“நான் நபிகள் நாயகத்திடம் 10 வருட காலம் வேலை செய்திருக்கிறேன். ஒரு போதும் அவர்கள் என்னைச் ‘சீ’ என்று கூடச் சொன்னதில்லை. ஏதாவதொரு விடயத்தைச் செய்தால் ‘ஏன் இப்படிச் செய்தாய்’ என்று கேட்டதில்லை. நான் ஏதாவது ஒன்றைச் செய்யவில்லையானால் ‘ஏன் இதைச் செய்யவில்லை’ என்றும் கேட்டதில்லை” [நூல்: புகாரி, முஸ்லிம்].
நம்மிடம் வேலை செய்யும் யாரும் நம்மைப்பற்றி இப்படி கூற முடியுமா? அல்லது நம்முடன் வேலை செய்யும் நண்பர்களாவது?? இத்தகைய ஒரு புகழுரையை நபிகள் நாயகம் (ஸல்) தவிர வேறெந்த உலக தலைவர்களிடம் நாம் காண இயலாது, உயிருடன் இருப்பவர்கள், இறந்தவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும். இன்னும் காணலாம்.

அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக; அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக; தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.(ஆலே இம்ரான் :159)


ஏற்கனவே பொறுமைக்கும் அழகிய குணங்களுக்கும் பெயர் பெற்ற திருத்தூதருக்கு(ஸல்), அல்லாஹ் இன்னும் அழகிய முறையில் இங்கு இன்னும் மெருகூட்ட வழிமுறைகளை சொல்லித்தருகின்றான். இறைத்தூதரின் அழகிய குணங்களை போற்றியதோடு நில்லாமல், அல்லாஹ் கூறுகின்றான், தலைவர் என்றால் செருக்குடன் தனியே நிற்காதீர், மாறாக, எல்லா விஷயங்களிலும் உங்களை பின் தொடர்பவர்களை கலந்தாலோசித்து செயல்படுத்துங்கள் என்று. இதே போல பத்ரு யுத்தத்தின் கைதிகளின் விஷயத்திலும் அல்லாஹ்வின் எச்சரிக்கை உங்களுக்கு நினைவிருக்கும். அவர் நபி என்பதற்காக அல்லாஹ் தன் கோபத்தை தடுத்து வைக்கவில்லை, மாறாக, அவர் மக்களின் அறிவுரைகளை கேட்டு அதன்படி நடந்தார் எனவே அண்ணலார் மேல் வரவிருந்த ஆபத்தை தடுத்து வைத்ததாக இறைவன் கூறுவான். எவ்வளவு உண்மை? இன்று வீட்டு விஷயம் முதல் நாட்டு மக்கள் விஷயம் வரை தான்தோன்றியாக நடந்துகொள்ளும் தலைவர்களுக்கு இது பாடமல்லவா? ஒரு தலைவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இதை விட சிறந்த ஓர் அறிவுரை எங்கேயும் காண இயலுமோ??

இன்னுமொரு விஷயம் என்னவெனில், நாம் லட்சங்கள் பல செலவு செய்து மாற்று மதத்தவர்களுடன் விவாதங்களில் ஈடுபடுவதை விட்டும், ஆயிரங்கள் செலவு செய்து குறும்படங்களோ, காணொளிகளோ படைத்து தாவாஹ் / Dawah செய்வதைக் காட்டிலும் மிக அதிக சக்தியை கொண்டது நாம் நடந்து கொள்ளும் விதம். உதாரணத்திற்கு சகோதரி யுவோன் ரிட்லியைப் பாருங்கள், நம்மிடம் இப்பொழுது பரப்பப்படும் பொய்களைப்போல உண்மையிலேயே இந்த சகோதரியை கைதியாக வைத்திருந்தபோது நடந்து கொண்டிருந்தால் இத்தகைய ஒரு சகோதரியை நாம் பெற்றிருக்க முடியுமா?? இன்னும் இந்த லின்க்கில் பார்த்தீர்களானால், சிறு குழந்தைகளின் நடவடிக்கைகளைக் கொண்டும் நாம் கவனிக்கப்படுகிறோம் என்பது புலப்படும். இன்ஷா அல்லாஹ், இன்னும் கற்றுக் கொள்வோம் அழகிய குண நலன்களை. அண்ணல் நபி நாயகம் (ஸல்) அவர்களின் குணங்களில் 10% சதவிகிதமாவது நம் வாழ்விலும் மேம்படுத்த முயல்வோம். மீண்டும் சந்திப்போம், இன்ஷா அல்லாஹ். வ ஸலாம்.

Sunday, August 22, 2010

நேரடி ஒளிபரப்பு

மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மதினாவில் உள்ள மஸ்ஜிதுந் நபவியை இணையதளம் மூலம் மிகத்து துள்ளியமாக பல கோணங்களில் நேரடியாக பின் வரும் இணைப்பின் மூலம் காணலாம்!
மக்கா மதினாவில் ரமளான் மாதத்தில் அலைமோதும் மக்கள் கூட்டத்தை நேரடியாக கண்டு மகிழுங்கள்!
மக்கா
மதினா

Wednesday, August 11, 2010

மறைவான வணக்கம்

இஸ்லாமிய சகோதரர்களே! இறைவன் கடமையாக்கி இருக்கின்ற மற்றொரு வழிபாடு நோன்பாகும். தொழுகையைப் போல இந்த வழிபாடும் ஆரம்பத்திலிருந்து எல்லாத் தூதர்களின் மார்க்கங்களிலும் கடமையாகவே இருந்து வந்திருக்கிறது. முதலில் தோன்றிய சமுதாயத்தவர்களும் நோன்பு பிடித்துக் கொண்டிருந்தார்கள். என்றாலும், நோன்பின் சட்டங்கள், அதன் எண்ணிக்கை, அது நீடிக்க வேண்டிய நேரம் ஆகியவற்றில் ஒரு மார்க்கத்தும் மற்றொரு மார்க்கத்துக்கும் இடையில் வேற்றுமை இருந்து வந்தது. இன்றும் கூட பெரும்பாலான மதங்களில் ஏதேனும் ஒரு வடிவத்தில் நோன்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் மக்கள் தம் சார்பில் பலவற்றை இணைத்து அதன் வடிவத்தை கெடுத்திருந்தாலும் சரி! திருக்குர்ஆன் கூறுகிறது:

    ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். 2:183
    இதிலிருந்து நீங்கள் சிந்திக்கவேண்டும். எல்லாக் காலத்திலும் இந்த இறைவழிபாட்டைக் கடமையாக்குவதற்கு நோன்பில் என்னதான் இருக்கிறது?
    நோன்பை தவிர்த்து மற்ற இறை வழிபாடுகள் எல்லாம் ஏதேனும் ஒரு விதத்தில் வெளிப்படையான செயல்களாகவே நிறைவேற்றப்படுகின்றன. உதாரனமாக தொழுகை, ஹஜ் போன்ற இறைவழிபாடுகள் பார்வைக்கு மறையாதவை. நீங்கள் நிறைவேற்றுகிற அதே நேரத்தில் அது மற்றவர்களுக்கு தெரிந்து விடுகிறது. நீங்கள் நிறைவேற்றாவிட்டாலும் தெரிந்து விடுகிறது.
    ஆனால் நோன்பு நிறைவேற்றுகின்ற மனிதனையும் இறைவனையும் தவிர்த்து வேறு யாருக்கும் தெரிய முடியாது. ஒரு மனிதன் எல்லோருக்கும் எதிரில் 'ஸஹ்ரில்' சாப்பிட்டு நோன்பு பிடிக்கலாம். நோன்பு திறக்கும் நேரம்வரை அவன் வெளியில் தெரியும்படி சாப்பிடாமலும் குடிக்காமலும் இருக்கலாம். ஆனால் ஒளிந்து மறைந்து தண்ணீர் குடித்தால் அது இறைவனைத்தவிர வேறு யாருக்கும் தெரிய முடியாது. அவன் நோன்போடு இருக்கிறான் என்றே எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். உண்மையில் அவன் நோன்பாளி அல்லன்.
    உறுதியான நம்பிக்கையின் அடையாளம்
    நோன்புக்குறிய இந்தத் தனித்தன்மையை முன்னால் வைத்துக் கொள்ளுங்கள். அப்புறம் சிந்தனை செய்யுங்கள்; ஒரு மனிதன் உண்மையாகவே நோன்பு நோற்கிறான். திருட்டுத்தனமாக அவன் சாப்பிடுவதில்லை; குடிப்பதுமில்லை. கடும் வெப்பத்தினால் தொண்டை வரண்ட நிலையிலும் அவன் ஒரு துளி தண்ணீர் அருந்துவதுமில்லை. கடும் பசியினால் கண் பார்வை குன்றிப்போனாலும் அவன் ஒரு கவளம் உணவும் உண்ண நினைப்பதுமில்லை.
    அந்த மனிதனுக்கு இறைவன் எல்லா மர்மங்களும் தெரிந்தவன் என்பதில் எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது! தன்னுடைய செயல்கள் முழு உலகத்துக்கும் மறைந்து விட்டாலும் இறைவனின் பார்வையிலிருந்து மறைய முடியாது என்று எவ்வளவு உறுதியாக அவன் நம்புகிறான்!
    மிகப்பெரும் சிரமங்களையெல்லாம் அவன் ஏற்றுக் கொள்கிறான்; ஆனால், இறையச்சத்தால் தான் நோற்கின்ற நோன்பை முறிக்கும் எந்தக் காரியத்தையும் அவன் செய்வதில்லை என்றால், அவன் உள்ளத்தில் எப்படிப்பட்ட உறுதியான இறையச்சம் இருக்க வேண்டும்!
    இந்த இடைக்காலத்தில் மறுமை குறித்து ஒரு வினாடி கூட அவன் மனதில் எவ்விதச் சந்தேகமும் தோன்றுவதில்லையென்றால், மறுமையில் கிடைக்கும் நற்கூலிகள், தண்டனைகள் பற்றி அவனுக்கு எவ்வளவு திடமான நம்பிக்கை இருக்க வேண்டும்! 'மறுமை வருமா வராதா? அதில் நற்கூலியும் தண்டனையும் உண்டா இல்லையா? என்று அவன் மனதில் சிறிதளவாகிலும் சந்தேகம் ஏற்பட்டு விட்டால், அவனால் தனது நோன்பை என்றைக்கும் நிறைவேற்றவே முடிந்திருக்காது.
    சந்தேகம் ஏற்பட்ட பிறகு இறைக்கட்டளையைச் செயற்படுத்துவதற்கென்று எதையும் சாப்பிடக்கூடாது; எதையும் அருந்தக் கூடாது எனும் எண்ணத்தில் மனிதன் நிலையாக இருப்பது சாத்தியமான ஒன்று அல்ல.
    இவ்வாறு ஒவ்வொரு வருடமும் முழுமையாக ஒரு மாதத்திற்கு தொடர்ந்தால்போல் முஸ்லிம்களின் இறை நம்பிக்கைக்கு தேர்வு வைக்கிறான் இறைவன். இந்த தேர்வில் மனிதன் எந்த அளவு வெற்றி பெற்றுக்கொண்டே போகிறானோ, அந்த அளவுதான் அவனுடைய இறை நம்பிக்கை வலிமை பெற்றுக்கொண்டே போகும். இது தேர்வுக்குத் தேர்வு போன்றது, பயிற்சிக்குக் பயிற்சி போன்றது.
    யாரேனும் ஒருவரிடம் ஒரு பொருளை நீங்கள் அமானிதமாக ஒப்படைத்திருந்தால், அவருடைய நாணயத்தை பரிட்சை செய்து பார்க்கிறீர்கள். இந்த பரிட்சையில் அவர் முழுவெற்றி வெற்றியடைந்து தம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற பொருளுக்குத் துரோகம் செய்யவில்லை என்றால் அமானிதம் சுமையைத் தாங்குவதற்குறிய தகுதி இன்னும் அதிகமாக அவருக்கு வந்துவிடும். அவருடைய நாணயம் மேலும் வளர்ந்துகொண்டே போகும். இந்த பரிட்சையில் நீங்கள் தேர்ந்துவிட்டால், இறைவனுக்கு பயந்து மற்றப் பாவங்களிலிருந்தும் ஒதுங்கும் மனப்பக்குவம் உங்களுக்கு அதிகமாக ஏற்பட்டுவிடும்.
    அனைத்து மர்மங்களையும் இறைவன் நன்கு அறிகின்றான் என நீங்கள் உறுதியாக நம்புகிறீர்கள். எனவே எந்த சந்தர்ப்பத்திலும் இறைக்கட்டளையை மீறுவதிலிருந்து விலகி நிற்கிறீர்கள். யாரும் உங்களை பார்க்கது இருந்தாலும் சரியே! மேலும் வாழ்வின் ஒவ்வொரு திருப்பத்திலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மறுமை நாள் உங்கள் நினைவிற்கு வந்து விடுகிறது. அன்றைய நாளில் அனைத்து இரகசியங்களும் அம்பலமாகிவிடும்.
    செய்யும் நன்மைக்கு நற்கூலியும், தீமைக்கு தண்டனையும் யாதொரு தயவு தாட்சண்யமும் இல்லாமல் கிடைக்கும் என்ற எதார்த்த உண்மையை நீங்கள் உணர்கிறீர்கள். எனவே இறையச்சம் உள்ளவர்களாக திகழ முழு முயற்சி மேற்கொள்கிறீர்கள்.

Tuesday, July 20, 2010

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்?

சமீபத்தில் பெரியார்தாசன் ‘அப்துல்லாஹ்’ ஆக இஸ்லாத்தில் இணைந்த செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.           தமிழகத்தில் ஓசைப்படாமலேயே இஸ்லாத்தை உணர்ந்து இணையும் நிகழ்வுகள் ஆங்காங்கே அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரைச் சேர்ந்தவர் சு. ராஜேஸ்வரன்.

திருச்சி தேசிய கல்லூரியில் M.Sc., (Geology) பயின்று சுய தொழிலாக மெடிகல் ஷாப் வைத்துச் சமூக சேவை ஆற்றி வருபவர். இவரது பெற்றோர் சுப்புசாமி – அழகம்மாள் இந்து தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த விவசாயக் கூலிகள் ஆவர். தீவிர அம்பேத்கர் இயக்கத் தவராகத் திகழ்ந்த சு. ராஜேஸ்வரன் மொழி, இனம், பொதுவுடைமை, கம்யூனிசம் எனும் இவையெல்லாம் சமூக ஏற்றத்தாழ்வை ஒழிக்க இயலாதவை; உண்மையான சமத்துவத்தை ஏற்படுத்த இயலாதவை என்பதைத் தெளிந்து, ஏகத்துவத்தை ஏற்று அதன் வழிதான் சமூக நீதியையும், சமத்துவத்தையும் நிலைநாட்ட முடியுமென்பதை உணர்ந்து இஸ்லாத்தில் இணைந்துள்ளார். சு. ராஜேஸ்வரன் இப்போது சு. ராஷித் அலியாகவும் இவரது மனைவி சாந்தி இப்போது சாரா பீவியாகவும் சமுதாயச் சேவையிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்கள்.

இஸ்லாத்தில் இணைவதற்குத் தனக்கு அடிப்படைச் சிந்தனையாக அமைந்தது எது என்பதை இதோ அவர் விளக்குகிறார். மொழியாலோ, இனத்தாலோ, பொதுவுடைமையாலோ, கடவுள் மறுப்பாலோ சமூகத்தில் புரட்சி ஏற்பட்டு அதன் மூலம் ஒரு சமுதாயம் உருவாக்கப்படுவதாக வைத்துக் கொண்டாலும் சாதிய கட்டமைப்பு ஒழிக்கப்படாதவரை அது ஓர் உண்மையான நிலையான சமத்துவமிக்க சமுதாயமாக இருக்க சாத்தியமே இல்லை என்கிற புரட்சியாளர் அம்பேத்கர் கருத்தியலை மையமாக கொண்டதே எனது கருத்தியல்.

மொழி, இனம், பொதுவுடைமை, கடவுள் மறுப்பு என்கிற கருத்து நிலைகளை மையமாக வைத்துக் கொண்டு சதுரங்கம் விளையாடுகிற அலங்காரமான அரசியல்வாதிகளை அல்லது சீர்திருத்தவாதிகளைக் கடந்த காலங்களிலும் சமகாலத்திலும் பார்க்க முடிகிறது. ஆனால் இவர்களெல்லாம் சமத்துவத்தை உருவாக்க கூடிய மூல செயல் வடிவமான சாதி ஒழிப்பை மட்டும் லாவகமாகத் தவிர்த்துவிட்டே வந்திருக்கிறார்கள் என்பதையும் உணர முடிகிறது. சாதி ஒழிப்பைக் கூர்மைப்படுத்தினால் இந்துத்துவம் உடைந்து சுக்கு நூறாகி இருக்கும் இடம் தெரியாமல் அழிந்துபோய்விடும்… என்பதை இவர்களெல்லாம் அறியாதவர்கள் அல்ல.

இவர்களை பொறுத்தவரை முதலில் இந்துத்துவத்தைக் காப்பாற்றி வைத்துக் கொண்டுதான் மற்ற எல்லா வகையான சீர்திருத்தத்தையும் பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். காரணம் என்ன வென்றால் அடிமைகள் இருந்தால்தானே தனக்கான தளம் இருக்கும். அப்படிப்பட்ட தளம் இருந்தால்தானே அதன் மேலே வலுவாக நின்று கொண்டு தொடர்ந்து கூச்சல் போட முடியும். அப்படி கூச்சல் போட்டால் தானே தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு தனது பிழைப்பை நடத்த முடியும் என்கிற தீர்க்கமான முற்போக்கான அறிவாளிகள்தாம் இந்த தேசம் முழுக்கப் பரவிக் கிடக்கிறார்கள் என்பதையும் உணர்ந்து கொள்ள முடிகிறது.

கருத்துநிலை சீர்திருத்தங்கள் எல்லாம் வெறும் வெற்றுப் பேச்சுகள் தாம் அவற்றால் விளிம்பு நிலை மனிதர்களுக்கு எவ்விதமான சமூக விடுதலையையும் ஏற்படுத்தித் தரமுடியாது என்பதையும் உணர முடிந்தது. விளிம்பு நிலை மனிதர்களுக்கான தீர்வு சமூக சீர்திருத்தமா? அல்லது சமூக விடுதலையா? என்கிற கேள்வி வருகிறபோது சமூக விடுதலைதான் என்கிற புரட்சியாளர் அம்பேத்கர் கருத்தியல்தான் நிரந்தரமானது என்கிற உண்மையை அறிவுத் தளத்தில் அனைவரும் ஏற்றுக் கொண்டாக வேண்டும். ஆனால், தனது அற்ப பிழைப்பு வாதத்துக்காக விளிம்பு நிலை மக்களின் சமூக விடுதலையை விட்டு விட்டு வெறும் சீர்திருத்தநோக்கிலேயே செயல்பட்டு வரும் இவர்களை எண்ணி நெஞ்சம் ரணமாகிறது.

மொழியால், இனத்தால், பொதுவுடைமையால் கடவுள் மறுப்பால் மக்களை ஒன்று சேர்ப்பதாகவும் அதன் மூலம் சமத்துவம் உருவாகும் என்றும் சொல்பவர்களைப் பார்த்து ஒரு கேள்வி எழுகிறது. மொழியாலும் அந்த மொழி பேசுகிற இனத்தாலும் ஒன்றுபடலாம் என்பதில் மிகுந்த மகிழ்ச்சிதான். ஆனால் ஊரை உருவாக்கும்போதே சேரியை உருவாக்கி அந்த மக்களைத் தீண்டதகாதவர்களாக்கிப் பொதுப் பாதை, பொதுக்குளம், பொதுக்கோயில் இப்படி அனைவருக்கும் பொதுவான அனைத்து வகையான இடத்திலிருந்தும் தள்ளிவைத்து அவர்கள் வாழும் சேரி, குடிசைகளைக் கொளுத்திக் கொலை வெறித் தாண்டவம் ஆடியது யார்? ஜெர்மானியமொழி பேசுகிற ஜெர்மானியர்களா? அல்லது சீனமொழி பேசுகிற சீனர்களா? இல்லையே விளிம்பு நிலை மனிதர்கள் தாய்மொழியாக கொண்ட அதே தமிழ் மொழி பேசுகிற தமிழ் இனம்தானே.

பொதுவுடையைப் பேசுகிற கம்யூனிசவாதிகளாவது உழைக்கும் வர்க்கமெல்லாம் ஒரே வகைப்பாடுகளில் உள்ளவர்கள், நமக்குள் வர்க்க வேற்றுமைதவிர சாதிய வேற்றுமைகள் எதுவும் கிடையாது. உழைக்கும் வர்க்கம் என்கிற அடிப்படையில் ஒரே இடத்தில் வாழ் விடங்களை அமைத்துக் கொள்வது, சமூக ஒழுங்கிற்கு உட்பட்டு உழைக்கும் வர்க்கத்தாரின் யாருடைய வீட்டிலும் யாரும் திருமண பந்தம் வைத்துக் கொள்வது என்கிற செயலாக்கத்தைக் கொண்டு வந்தார்களா? மாநில அளவில் வேண்டாம் குறைந்தபட்சம் ஒரே ஒரு கிராம அளவிலாவது இந்தியாவின் எந்த மூலைப் பகுதியிலேனும் ஒரு புரட்சிகரமான கிராமத்தை அவர்களால் உருவாக்க முடிந்ததா? (சாதிய கட்டமைப்புகளைக் கொண்ட இந்தியாவில் மார்க்சியம் செல்லுபடியாகாது) என்று சொன்ன புரட்சியாளர் அம்பேத்கர் கருத்தியல்தானே இன்று உண்மைக்குச் சாட்சியாக நிற்கிறது.)

கடவுள்தான் சாதிய கட்டமைப்புகளை உருவாக்கி வழிநடத்துகிறது என்றும் ஏற்றத்தாழ்வுகள் அனைத்திற்கும் சாமிதான் காரணம் என்றும் “கடவுளை மற மனிதனை நினை” என்று சொல்லி வந்தார்களே இவர் களாவது சாதி ஒழிப்பை முன்னெடுத்தார்களா? சாதி மறுப்புத் திருமணங்கள், வாழ்விடங்கள் குடியிருப்புகள் என ஒரே இடத்தில் அமைத்துக் கொண்டு வாழ்வது போன்ற அடிப்படையான விஷயங் களில் ஒன்றிணைந்தார்களா? கடவுள் மறுப்பாளர்கள் என்பதால் புரோகிதர் மறுப்பில் கவனம் செலுத்தியவர்களால் பாவம் சாதி மறுப்பில் கவனம் செலுத்த முடியவில்லை போலும். (இப்படி கூறுவதனால் பகுத்தறிவாதிகளைக் குற்றம் குறை சொல்லுவதாகவோ அவர்கள் விளிம்புநிலை மக்களுக்காக நடத்திய போராட்டங்களைக் கொச்சைப்படுத்துவதாகவே எண்ணி மிகுந்த பிணக்கு கொள்வார்கள்.)

மேற்படி கொள்கைவாதிகளிடம் கேட்பதற்கு இன்னும் ஆயிரக் கணக்கான கேள்விகள் உண்டு. இங்கே சொல்லப்பட்டவைகள் அனைத்தும் மிக மிக சாதாரண அடிப்படையானவைகள் மட்டும்தான். இதற்கே இவர்களிடம் பதில் இருக்காது. அவர்களைப் பார்த்து, அம்பேத் கரியம் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான்; உங்களின் போராட்டங்கள், தியாகங்கள், உயிரிழப்புகளுக்கான கருத்தியலால் சாதி ஒழிக்கப்பட்ட சமத்துவ சமூகத்தை இன்றுவரை ஏன் உருவாக்க முடிய வில்லை. அப்படியானால் “சாதிய கட்டமைப்பை அழித்தொழிக்காமல் எந்த கருத்தியலும் மக்களிடம் புரட்சியை உருவாக்காது. அப்படி ஒரு புரட்சி நடக்காமல் சமத்துவ சமூகத்தைக் கட்டமைக்க முடியாது” என்று கூறிய இருபதாம் நூற்றாண்டின் பேரறிஞர் புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னவைதாமே இன்றைக்கும் விளிம்புநிலை மனிதர் களாக, பஞ்சைப் பராரிகளாக குடிசைகளிலே வாழ்க்கை நடத்தும் கடைசி மனிதர்களுக்கு உண்மைகாட்சியாய் நிற்கிறது. அத்தனை பெரிய அறிவு படைத்த மேதை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் 1936 ம் ஆண்டில் சாதியை ஒழிக்கும் வழிகளாக (Annihilation Of caste) மிகத் தீர்க்கமான கருத்தியலை முன் வைத்தார்கள். யாராவது கண்டு கொண்டார்களா?

தன் வாழ்நாளின் இறுதி மூச்சு நிற்கும் வரை விளிம்பு நிலை மனிதர் களுக்காகவே வாழ்ந்த அந்த மாமனிதர் இறுதியாக தனது நெஞ்சம் நிறைந்த துன்பத்தோடும் மிகுந்த ஆதங்கத்தோடும் அதிர்ச்சியோடும் சொன்னார்கள்.

சாதியத்தின் மூலம் இழிவுகளையும் ஏற்றத்தாழ்வு பாகுபாடுகளையும் உருவாக்கியது இந்துத்துவம்தான். இப்படி மனிதனைச் சாதி ரீதியாகக் கொடுமைப்படுத்திய கொடூரம் உலகத்தின் எந்த மூலையிலும் நடத்தப் படவில்லை. ஆகவே இந்திய தேசத்தில் சமத்துவ சமூகத்தை உருவாக்க முனையும் எவராக இருந்தாலும் இந்துத்துவம் என்கின்ற ஒன்று ஒழிக்கப்பட்டால்தான் சமத்துவம் சாத்தியமாக்கப்படும் என்பதையும் இந்துத்துவத்தை ஒழிக்க முனையும் முன்பாக முதலில் தன்னை இந்து அல்லாதவனாக்கிக் கொள்ள வேண்டும் என்பதையும் உணர்ந்தே இருக்கிறார்கள். ஆனாலும் தன்னை ஒரு இந்துவாகவே நிலைப்படுத்திக் கொண்டேதான் இந்துத்துவத்தை வேரறுக்கப் போகிறேன் என்கிறார்கள். இது விந்தையாக இருக்கிறது.

ஒரு மரத்தின்மீது அமர்ந்துகொண்டு அந்த மரத்தை ஆணி வேரோடு சாய்க்கமுடியாது என்பது எந்த அளவிற்கு அறிவுப்பூர்வமான உண்மையோ அதைப் போன்றுதான் மேற்படியாளர்களின் இந்துத்துவ ஒழிப்பு என்பதும் என்று கூறிய புரட்சியாளர் அம்பேத்கர், நம்மை சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் தள்ளிக் கடைசி மனிதனாகக் குடிசையிலே உட்காரவைத்து சமூகத்தில் உள்ள அனைத்துக் கொடூரங் களையும் செய்து வருகின்ற இந்து சமூகத்தில் இருந்து நம்மை நாமே வெளியேற்றிக்கொண்டு தான் நம்மீது திணிக்கபட்டுள்ள சாதிய இழிவைத் துடைக்க முடியுமே ஒழிய வேறு எத்தகைய தீர்வும் சாத்தியமானது அல்ல என்று உறுதிபட கூறினார்.

அதனடிப்படையிலேயே மொழியும் இனமும் எம்மைசமமாகப் பார்க்க வில்லை. பொதுவுடைமையும் கம்யூனிசமும் எமது இழிந்த நிலையை ஒழிக்கவில்லை, ஆகவே கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டு சாதிய சகதியில் உழலுவதைவிட இறைவனை ஏற்று கொண்டாவது சாதியத்தை ஒழிப்பதுதான் எமக்கான சமூக விடுதலை என்று உறுதியாக எண்ணியே “லா இலாஹ இல்லல்லாஹ் முகம்மதுர் ரஸுலுல்லாஹ்” என்கிற உயிர்ப்பான வரிகளை நெஞ்சம் நிறையச் சொல்லி இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டேன்”

நன்றி : இனிய திசைகள்.(ஏப்ரல் 2010)

Saturday, December 5, 2009

இதுக்கு முந்தப்போவது யாரு?

அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக...

அன்புடையீர்,

தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய நிலையில் முஸ்லிம்கள் வாழும் பகுதி தேனி மாவட்டம். தாழ்த்தப்பட்ட சமூகத்தவராக இருந்து 20-30 ஆண்டுகளுக்குமுன் இசுலாத்தை ஏற்ற மக்கள் தேனி மாவட்டத்தின் பல கிராமங்களில் வசித்து வருகின்றனர். அன்றாடம் உழைத்தால்தான் உணவுக்கு உத்திரவாதம் என்ற நிலையில் வாழும் மக்களில், ஆணும் பெண்ணும் கூலிவேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

ஒருவர் இறந்தபின் அவருடன் வருபவை மூன்று. அதில் ஒன்று நிலையான கல்வி; மற்றொன்று நிரந்தர தர்மம். ஒரு தலைமுறையையே முன்னேற்றுவதற்குத் தேவையான கல்வியைக் கொடுத்தல் என்பது இவ்வுலகம் அழியும் வரையிலான நன்மையை நிரந்தரமாகப் பெற்றுத் தரும் நற்செயலாகும்.

நம் சமுதாயம் இன்று எல்லா நிலையிலும் அடங்கி ஒடுங்கி, அனைத்து மட்டங்களிலும் பின் தங்கியிருப்பதற்குக் கல்வியில் கவனமின்றி இருப்பது மிக முக்கிய காரணமாகும்.


"தாழ்ந்திருக்கும் கையை விட உயர்ந்திருக்கும் கை மேலானது" என்பது எம்பெருமானார் (ஸல்) அவர்களின் வாக்கு. ஒருவரது தற்காலிகத் தேவையை அவ்வப்போது தீர்த்து வைப்பது என்பது, அவரைப் பிறரிடமிருந்து எதிர்பார்க்கும் நிலையில் தொடர்ந்து நீடிக்க வைப்பதற்கு மறைமுகமான ஊக்கமளிப்பதாகும். அதைவிட, அவரது தேவையை அவரே தீர்த்துக் கொள்ளும் வகையில் கவுரவமான வழிகளை ஏற்படுத்திக் கொடுப்பது என்பது மிக உயர்ந்த நற்செயலாகும். மார்க்கச் சகோதரர்களைப் பொருத்தவரை ஒருவரின் கவுரவத்தைப் பாதுகாப்பதும் மற்ற முஸ்லிம்களின் மீது கடமையாகும்.

அதன் அடிப்படையில், T. மீனாட்சிபுரம் எனும் கிராமத்தின் எதிர்காலத்தையே முழுமையாக மாற்றி அமைக்கவல்ல இளம் தலைமுறையினரின் கல்விக்காகச் செலவழிக்க வேண்டியது நம் சமுதாயத்தின் கடமையாகும். அதற்காக அக்கிராமக் குழந்தைகளின் ஆண்டுக் கல்விக்கான முழு தொழுகையினையும் ஒவ்வொரு ஆண்டும் முழுமையாகக் கொடுத்து உதவி, அவர்களின் கல்வி இறுதிவரை தடைப்பட்டு விடாமல் முழுமையடையும் வகையில் அக்கிராமத்தைத் தத்தெடுக்கவும் நம்மில் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும் என சத்தியமார்க்கம்.காம் அன்போடு கேட்டுக் கொள்கிறது.

மாணவரில் ஒருவருக்கும் மாணவியரில் ஒருவருக்கும் பள்ளிப் படிப்பின் இறுதி வரைக்குமான செலவுகளுக்கு சத்தியமார்க்கம்.காம் பொறுப்பேற்கிறது. இந்த நல்வாய்ப்பை வழங்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.


வாழ்க்கைத் தரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள இக்கிராமத்து முஸ்லிம்களின் பிள்ளைகள் பஞ்சாயத்து போர்டு பள்ளிகளிலேயே பயின்று வருகின்றனர். குடும்பச் சூழல் காரணமாக இடையில் படிப்பை விடும் பிள்ளைகளின் எண்ணிக்கையும் அதிகம். மதிய நேர சத்துணவுக்காகவே பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பும் அவல நிலையும் தொடர்கிறது. மெட்ரிகுலேசன் படிப்பு என்பது அவர்களுக்குத் தூரத்துக் கனவு.

இந்நிலையில் இம்மக்களின் வறுமை மற்றும் கல்வி ஆசையை சாதகமாய் பயன்படுத்திக் கொள்ள சில கிருஸ்துவ அமைப்புகளும் நிறுவனங்களும் சமீப காலமாக முயன்று வருகின்றன. நான் இங்கு சிபாரிசு செய்துள்ள T. மீனாட்சிபுரம் கிராமத்துப் பிள்ளைகளை அருகில் தேவாரம் என்கிற ஊரில் அமைந்துள்ள குட்செப்பர்டு மெட்ரிக் பள்ளி நிர்வாகம், இலவசக்கல்வி, சீருடை என ஆசைக்காட்டி 2007-2008 கல்வியாண்டில் அழைக்க, இம்மக்களும் மெட்ரிக் படிப்பு கனவில் பிள்ளைகளைச் சேர்க்க, அப்பிள்ளைகளைப் பைபிள் வகுப்புகளுக்கும் சர்ச்களுக்கும் ஜெபக் கூட்டங்களுக்கும் அழைத்துச் சென்றிருக்கின்றனர்.இந்த ஆபத்து நமது கவனத்திற்கு வந்தவுடன் அக்கிராமத்துப் பிள்ளைகள் 9 பேரையும் மேலும் ஒரு கிராமமான திம்மிநாயக்கன் பட்டி கிராமத்துப் பிள்ளைகள் 9 பேரையும் அப்பள்ளியிலிருந்து இடமாற்றம் பெற்று, உத்தமபாளையம் அல்-ஹிக்மா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்துள்ளோம்.

அப்பள்ளி நிர்வாகம் கல்விக் கட்டணம் முழுவதையும் தள்ளுபடி செய்துள்ளனர். சீருடை மற்றும் புத்தகங்களுக்கான செலவைப் பெற்றோர் ஏற்க வேண்டும் என்றும் மீதமுள்ள போக்குவரத்து மற்றும் இதர கட்டணங்களைத் தங்களைப் போன்ற சமூகம் நலன் நாடும் அமைப்புகள் மூலம் பெற்றுத் தருவது என்றும் முயன்று, இறையருளால் ஓராண்டு (2008-2009) சமாளித்து விட்டோம். 2009-2010 கல்வி ஆண்டில் மேலும் அதிகப் பிள்ளைகள் சேர்ந்துள்ளனர்.

T. மீனாட்சிபுரம் பிள்ளைகள் 18 பேரின் கல்விக் கட்டணம் விவரங்களைத் தங்கள் உதவி வேண்டி இத்துடன் இணைத்துள்ளேன். திம்மிநாயக்கன் பட்டி கிராமத்தைச் சார்ந்த 12 பிள்ளைகளுக்கான செலவினை வேறு அமைப்பினர் - சமுதாய ஆர்வலரிடம் பெற வேண்டிய தேவையும் உள்ளது. அதற்கும் நீங்களே வழிகாட்டினால் பேருதவியாக அமையும். இசுலாத்தைப் புதிதாக ஏற்ற இந்த மக்களின் எதிர்கால வாழ்விற்கு தங்கள் மூலம் வழிகாட்ட வல்ல இறையை வேண்டி வேண்டுகோள் விடுக்கிறேன். தங்கள் பேருதவியைப் பள்ளி முகவரிக்கே அனுப்பி வைக்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வுதவி ஆண்டுதோறும் தொடரும் அளவிற்கு வல்ல இறைவன் தாங்கள் அனைவரது வளனும் சிறக்க அருள் புரிவானாக!

நிறைய அன்புடன்,
பேரா. மு. அப்துல் சமது
தமிழ்த்துறை விரிவுரையாளர்
ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி
உத்தமபாளையம் - 625 533
போன் : 04554 - 265225
தேதி : 17/08/2009
----------------------------------------------------

T. மீனாட்சிபுரம் முஸ்லிம் ஜமாஅத்தின் வேண்டுகோள் மடல்

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

எங்கள் கிராமத்து முஸ்லிம்களின் நிலையையும் இவ்வுதவி வேண்டுவதன் காரணத்தையும் பேராசிரியர் மு. அப்துல் சமது அவர்கள் விரிவாக எழுதியுள்ளதால், இங்கு அவற்றைக் குறிப்பிடவில்லை. இஸ்லாத்தைப் புதிதாக ஏற்ற எங்கள் மக்கள் தொடர்ந்து வல்ல இறைவனின் நேர்வழியாம் தீன் வழியில் நிற்பதற்குத் தங்களது பேருதவி துணை நிற்கும்.

உத்தம பாளையம் அல்-ஹிக்மா மெட்ரிக் மேநிலைப் பள்ளியில் பயிலும் எங்கள் ஜமாஅத்தைச் சார்ந்த 18 பிள்ளைகள்தாம் எங்கள் ஜமாஅத்தில் இருந்து மெட்ரிகுலேசன் கல்வி பெறும் முதல் தலைமுறை. அவர்களது கல்வி மேம்பாட்டிற்குத் தாங்கள் உதவி புரியுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இத்துடன் பள்ளிக் கட்டண விபரங்களை இணைத்துள்ளோம். தாங்கள் அனைவரும் எல்லா நலமும் பெற்று வாழ எங்கள் ஜமாஅத்தினர் அனைவரும் துஆச் செய்கின்றனர். நன்றி.


வஸ்ஸலாம்.

தலைவர்
மீனாட்சி புரம் முஸ்லிம் ஜமாஅத்
T. மீனாட்சிபுரம் - 625 530
தேவாரம் வழி, உத்தமபாளையம் தாலுகா
தேனி மாவட்டம்.
ALHIKMAH MATRICULATION SCHOOL

(Regd. By Government of Tamilnadu)

P.T.R COLONY, UTHAMAPALAYAM

THENI DT. - 625 533 Ph: 04554(268202)



நன்றி http://www.satyamargam.com/1375

Monday, September 14, 2009

"தவக்குல்"

ஒருவர் இறைவனை முழுமையாகச் சார்ந்து நின்று, அவர்தம் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெற இறைவனே பொறுப்பேற்கக் கூடியவன் என்ற உறுதியுடன் செயல்படுவது "தவக்குல்' எனும் இறைச் சார்பு நெறியாகும்.

இந்த நெறியானது, "கடவுளை நம்பினோர் கைவிடப்படார்' என்ற முதுமொழியைப் பிரதிபலிப்பதாக உள்ளது. இதுபற்றி கீழ்க்காணும் திருக்குர்ஆன் வசனங்கள் விளக்கமளிப்பதாக உள்ளன.

"இறைவனே சிறந்த பொறுப்பேற்பவனாக இருக்கிறான்' (3:173); "நீங்கள் இறைவனையே சார்ந்து நில்லுங்கள்; அவனே உங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளப் போதுமானவன்' (33:3); "நிச்சயமாக இறைவன் (தன்னிடம்) பொறுப்பை ஒப்படைப்பவர்களை மிகவும் நேசிக்கிறான் (3:159).

இதன் மூலவசனங்களில் இடம் பெற்றுள்ள அரபி மொழிச் சொற்களான "தவக்குல்' என்பதும், "வக்கீல்' என்பதும் முறையே இறைவன் மீது முழு நம்பிக்கை கொண்டு அவனைத் தன் பொறுப்பாளனாக்கிக் கொள்வதையும், பொறுப்பேற்பவனாகிய இறைவனையும் குறிப்பவை.

இங்கு, "நம் காரியங்கள் அனைத்துக்கும் இறைவனே பொறுப்பேற்கிறான்' என்பதன் பொருள் என்னவெனில், "நம்மை முழுமையாக அவனிடம் ஒப்படைத்துவிட்டோம்; இனி அவனே நமக்கு வேண்டியவற்றை எல்லாம் வழங்குவான்' என்று வாளாவிருப்பதல்ல; மாறாக இறைவன் நமக்குத் தந்துள்ள அறிவையும், ஆற்றலையும் முறையாகப் பயன்படுத்தி முழுமையாக உழைத்த பின்னர், "அவ்வுழைப்பின் பயன் இறைவன் புறத்தே உள்ளது' என்று திடமாக நம்புவதேயாகும்.

இதனை, நபி (ஸல்) அவர்கள் நல்லதோர் எடுத்துக்காட்டின் மூலமாக மேலும் தெளிவுப்படுத்திக் கூறியுள்ளார். அதாவது, ""நீங்கள் இறைவனிடம் முழு நம்பிக்கை கொள்பவர்களாக இருந்தால், பறவைகளுக்கு உணவளிப்பது போன்று இறைவன் உங்களுக்கும் உணவளிப்பான். ஒட்டிய வயிற்றுடன் காலையில் கிளம்பிச் செல்லக்கூடிய பறவை, வயிறு நிரம்பிய வண்ணம் மாலையில் திரும்புகிறது.'' இவ்வெடுத்துக்காட்டில் முக்கியமாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது யாதெனில், "இறைவன் உணவளிப்பான்' என்பதற்காக பறவை கூட்டினுள் இருந்தால் அதற்குத் தேவையான உணவு, பறவையின் கூட்டினை வந்தடைவதில்லை. பறவை உணவைத் தேடிப் பறந்து செல்கிறது; அதற்கு உணவு கிடைக்கிறது. அதைப் போன்றுதான் மனிதனும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதற்கான பலனை இறைவன் வழங்குகிறான். (அறிவிப்பாளர் உமர் (ரலி); ஆதாரம்-மிஷ்காத்.)

இறை நம்பிக்கையும், முழு முயற்சியும் இணைந்தே நம் செயல்பாடுகள் இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்துகின்ற மற்றொரு நபிமொழி : "நீ இறைவனை நம்பு; ஆனால் உன் ஒட்டகத்தைக் கட்டி வை' என்பதாகும். (அறிவிப்பாளர் அனஸ் (ரலி); ஆதாரம் - திர்மதி)

"இறைவனைச் சார்ந்து நிற்றல்' என்ற இந்த நிலைப்பாடு, மனித வாழ்வின் எல்லாத் துறைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

உதாரணத்திற்கு உழவுத் தொழிலை எடுத்துக் கொண்டால், முதலில் உழவன் நிலத்தை உழுது, விதைவிதைத்து, நீர்ப்பாய்ச்சி, உரமிட்டு, களை எடுத்து- இவ்வாறெல்லாம் செய்த பின்னர் நல்ல விளைச்சலை ஆவலுடன் எதிர்பார்க்கிறான் அல்லவா? இறைவனிடமிருந்து அவன் இதனை எதிர்பார்க்க வேண்டும். அப்பொழுது இறைவன் உழவனுடைய இப்பயிர்களுக்குப் பாதுகாப்பு வழங்குகிறான்; பயிர் செழித்து வளர்வதற்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கி, உழவன் எதிர்பார்த்தவாறு நல்ல விளைச்சலை இறைவன் அளிக்கிறான்; இதனால் உழவன் உளம் மகிழ்கிறான்; மனநிறைவுடன் அந்த இறைவனுக்கு அவன் நன்றி செலுத்துகிறான். தவக்குலின் பொருளடக்கம் இதுதான்.

ஓர் அடியான் இறைவனிடம் பொறுப்பை ஒப்படைத்தலின் மற்றுமோர் முக்கிய அம்சம் என்னவென்றால், தன் விவகாரங்களை முடிந்த வரை முயற்சி செய்து முடித்துவிட்ட பிறகு, "இறைவா! நான் சக்தியற்றவனாக இருக்கிறேன்; பலவீனனாகவும் இருக்கிறேன். நீயே வல்லமை மிக்கவன்! எனவே நான் மேற்கொண்ட பணிகளில் குறைகளிருப்பின் நீயே நிறைவு செய்து நற்பயன் அருள்வாயாக!' என்று இறைவனை வேண்டி நிற்பதாகும்.

இவ்வாறாக, "தவக்குல்' எனும் இறைச் சார்பு நெறியை உறுதியாகக் கடைபிடிப்பதன் மூலமாக, நமக்கு இறைவனுடைய அருளும், உதவியும் கிடைக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இதனையே "நம்பிக்கை கொண்டோருக்கு உதவி செய்வது தம் கடமை' (30:47) என்றும், "தம் அருட்கொடையைப் பற்றி எவரும் நம்பிக்கை இழக்க வேண்டாம்' (39:53) என்றும் இறைவன் திருமறையில் திட்டவட்டமாக எடுத்துரைத்துள்ளான்.

எனவே, நாம் இறை நம்பிக்கையுடன் செயல்படுவோம்; அவன்தன் அருளைப் பெற்றிடுவோம்.

எம்.கே.எஸ். பாவா

Thursday, August 27, 2009

இதுதான்,இதுவேதான்,இது மட்டுந்தான்,ஒரே நேர்வழி!!!

இறைநம்பிக்கையில் மூட நம்பிக்கைகளைக் கண்ட சிந்தனையாளர்கள், இறைவனை மறுத்து நாத்திகக் கொள்கையைத் தழுவிக் கொண்டனர்.

அவர்கள் என்ன சொல்கிறார்கள்?

"மனித அறிவு வளர்ச்சியடையாத - முற்காலத்தில் - உலகில் இயற்கையாக நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுக்கும் - மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி அல்லது சக்திகளைக் காரணம் காட்டி வந்தான் - அன்றைய மனிதன்!

"ஆனால் மனித அறிவு வளர்ச்சி அடைந்து பல நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும் இயற்கை நிகழ்வுகள் ஒவ்வொன்றுக்கும் இறைவனே காரணம் என்று கூறுவது - மனித அறிவின் பிற்போக்குத் தனத்தையே காட்டுகிறது.

"விஞ்ஞானம் - இயற்கைப் பெருவெளியில் நிகழ்ந்து கொண்டிருக்கும் எல்லா அற்புதங்களுக்கும் காரணம் கண்டு பிடித்துச் சொன்ன பின்பும் எல்லாவற்றுக்கும் காரணம் இறைவன்.... இறைவன்.... என்று சொல்கின்ற பிற்போக்குத் தனத்தை என்னென்று சொல்வது?

"இதனை விடுத்து விஞ்ஞானம்.... விஞ்ஞானம்.... என்ற முற்போக்குக் கொள்கையை (POSITIVISM) மனிதன் ஏற்கும் போதே - நோய் பிடித்த சமுதாயத்தை (SICK SOCIETY) உயிர்த்துடிப்புள்ள சமுதாயமாக (DYNAMIC SOCIETY) மாற்றிட முடியும்!"

இதுவே மேற்கத்திய சமூகவியலாளர்களின் (SOCIOLOGISTS) தீர்க்கமான கருத்து!

உயிர்த் துடிப்புள்ள சமுதாயத்துக்கு அவர்கள் சுட்டிக் காட்டுவது - இன்றைய மேலை நாடுகளை!

அங்கே எல்லாரும் படித்திருக்கிறார்கள்!

அங்கே எல்லாரும் அறிவியல் வழியாகவே (SCIENTIFIC THINKING) சிந்திக்கிறார்கள்.

அங்கே மூட நம்பிக்கைகள் குறைவு!

அவர்கள் தொழில்நுட்பத்தில் வானளாவிய சாதனைகள் புரிகின்றார்கள்!

அவர்கள் தாம் உலகையே வழி நடத்திடும் ஆற்றலைப் பெற்றிருக்கிறார்கள்!

சுருங்கச் சொல்லின் - அவர்கள் தான் பூவுலக சுவர்க்கத்தை மேற்குலகில் நிர்மாணித்திருக்கிறார்கள்!

அவர்கள் காட்டும் "பூவுலக சுவர்க்கத்தை" "ஆ" வென வாய் பிளந்து பார்க்கின்ற நம்மவர்கள், அதே மேற்குலகக் கோட்பாடுகளை இங்கே இறக்குமதி செய்தால் நாமும் ஒரு சுவர்க்கத்தை உருவாக்கிடலாம் என்று மன்க் கோட்டை கட்டுகிறார்கள்!

தாழ்வு மனப்பான்மை பிடித்துப் போய் மேலை நாடுகளைக் காப்பியடிக்கத் துடிக்கின்ற நவீன தலைமுறையினர்க்கு, மேற்குலகம் அனுபவிக்கின்ற அவலங்களைப் படம் பிடித்துக் காட்டுதல் அவசியம்.

அமெரிக்காவில் ஹைட்ரஜன் குண்டை (HYDROGEN BOMB) தயாரித்த அமெரிக்க விஞ்ஞானி J.R. OPPENHEIMER - அவர்களின் கூற்றுப் படி - மனிதன் - கடந்த 40 நூற்றாண்டுகளில் தொழில்நுட்பத்தில் அடைந்த வளர்ச்சியை விட இருபதாம் நூற்றாண்டின் 40 ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சி மிக அதிகம்!

இந்த தொழில் நுட்பம் மனிதனுக்கு செய்து கொடுத்த வசதிகள் எண்ணிலடங்காதவை.

கணினி மற்றும் தகவல் தொடர்புச் சாதனங்கள் உலகையே ஒரு பெரிய கிராமமாகச் சுருக்கி விட்டிருக்கின்றது.

மனித உறுப்புகளை மாற்றுவது, சர்வ சாதாரணமான நிகழ்ச்சியாக மாறிக் கொண்டிருக்கிறது.

தூக்கத்தைக் குறைத்து - மனித ஆயுளை நீட்டிக்கச் செய்கின்ற ஆராய்ச்சி மும்முரமாக நடந்து கொண்டிருகிறதாம்.

செயற்கை முறையில் DNA - வைத் தயாரித்து "நாம் விரும்பும்" குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியுமாம்!

தொழில் நுட்பம் தந்த பொருளாதார வளர்ச்சி மேலும் மனிதனை சுக போக வாழ்க்கைக்கு அழைத்துச் சென்றுள்ளது.

அமெரிக்கர்கள் விடுமுறையைக் கழிக்க என்று - ஒவ்வொரு ஆண்டும் செலவழிக்கும் தொகை பில்லியன் டாலர்கள் கணக்கில்!

மேலை நாடுகளில் - மனிதனின் வாழ்க்கைத் தரம் 1800 - ல் இருந்ததை விட ஐந்து மடங்கு உயர்ந்திருக்கிறதாம்! அப்படியானால் - அவர்களுடைய மகிழ்ச்சி ஐந்து மடங்கு உயர்ந்திருக்கிறது, அவர்களுடைய வாழ்க்கை ஐந்து மடங்கு அர்த்தமுள்ளதாக ஆக்கப் பட்டிருக்கின்றது என்றா பொருள்?

அது தான் இல்லை!

மேற்குலக நாடுகளில் ஆண்டு தோறும் நடக்கும் குற்றங்கள் மில்லியன் கணக்கில் பதிவு செய்யப் படுகின்றன.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, நாகரிகம் அடைந்த நாடுகளில் மதுவின் வளர்ச்சி வேகம் பயமுறுத்தும் அளவுக்கு வளர்ந்துள்ளது. மதுவின் இந்த வளர்ச்சியில் பெண்களுக்கும் பங்குண்டு. மது குடிப்பதனால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாம்.

ஆபாசப் படங்களைத் தயாரித்து வெளியிடுவதில் முன்னணி வகிப்பவை மேற்குலக நாடுகளே! இப்படிப் பட்ட படங்களுக்கென்றே தனிப்பட்ட திரையரங்குகள் உள்ளனவாம். இயந்திர மயமான வாழ்க்கையை விட்டு - சற்றே வெளியேறி - இளைப்பாற நினைப்பவர்களைக் கவர்ந்து இழுக்கிறதாம் - இந்த ஆபாசப் படங்கள்.

சூதாட்டங்களும் - மனித நாகரிகத்தோடு சேர்ந்து வளர்ந்திருக்கின்றன! உலகின் மிகப் பெரும் சூதாட்ட நகரங்கள் (GAMBLING CITIES) அனைத்தும் "நாகரிக மயமான" நாடுகளில் தாம் அமைந்திருக்கின்றன.

போதைப் பொருட்களைப் பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கையும், அதற்கு அடிமையாகி விட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றது.

நாகரிகத்துடன் தற்கொலை செய்து கொள்வதும் வளர்ந்துள்ளது! தொழில் மயமாதல், நகர் மயமாதல், குடும்பங்கள் உடைந்து போதல் - இம்மூன்று காரணிகளும் அதிகரிக்க அதிகரிக்க தற்கொலையும் அதிகரிக்கிறதாம்.

மன நோயால் பீடிப்பவர்களின் எண்ணிக்கையும் அப்படித்தான். உலகத்திலேயே அதிகமான மன நோய் நிபுணர்கள் இருப்பது ஹாலிவுட்டில் தானாம்.

போதுமா சகோதரர்களே!

இறை மறுப்பும், அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கல்வித் திட்டமும் , அறிவியல் தொழில் நுட்பமும், மனிதனுக்குச் சாதித்துக் கொடுத்தவை இவை தான்!

இதனையே இங்கே இறக்குமதி செய்யத் துடிக்கின்றனர் மேல் நாட்டு மோகம் கொண்ட நம்மவர்கள்.

இன்றைய உலகம் சந்தித்துக் கொண்டிருக்கின்ற எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்து வைக்கின்ற - மனித வாழ்வில் - அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும் ஆற்றல் எந்தக் கொள்கைக்கு இருக்கிறது?

அது இஸ்லாத்துக்கு மட்டுமே இருக்கின்றது என்பது தான் மறுக்க இயலாத உண்மை!

மேலை நாட்டவர்கள் இஸ்லாத்தை "பயங்கரவாதத்துடன்" ஒப்பிட்டுப் பேசிடுவதில் அவர்களுக்கு இருக்கின்ற உள் நோக்கத்தை ஏன் நம்மவர்கள் புரிந்து கொள்ளக் கூடாது?

யார் யார் எல்லாம் இஸ்லாத்தை எதிர்க்கிறார்கள் என்று பட்டியலிட்டுப் பாருங்கள்? அவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்றும் சற்றே எடை போடுங்கள். உண்மை தெள்ளென விளங்கும்!

சகோதரர்களே!

இஸ்லாமிய இறை நம்பிக்கையில் மூட நம்பிக்கை கிடையாது!

இறைவனின் தூதர்களைக் கடவுளாக்கி வணங்குகின்ற அறியாமை இங்கே இல்லை!

இஸ்லாத்தின் கொள்கைகள் பாதுகாக்கப் பட்டவை! திருக் குர் ஆனும், நபிமொழிகளும் இடைச்செருகல்களுக்கு ஆளாகி விடாமல் பாதுகாக்கப் பட்டு ஒப்படைக்கப் பட்ட விதத்துக்கு ஈடு இணையே கிடையாது!

இஸ்லாம் - மனிதனின் "ஆன்மிகக் கொள்கை வெற்றிடத்தை" முழுமையாக நிரப்பும் சக்தி வாய்ந்தது!

இஸ்லாம் - மன நோய் மற்றும் தற்கொலை எண்ணங்களை அடியோடு நீக்கி விடுகிறது!

இஸ்லாம் ஒன்று மட்டுமே கொல்லப் படுகின்ற பெண் சிசுக்களைக் காப்பாற்ற வல்லது!

இஸ்லாம் மட்டுமே உலகை - விபச்சாரத்திலிருந்தும், எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்களிலிருந்தும் காத்திடும் ஆற்றல் பெற்றது!

இஸ்லாம் மட்டுமே உலகை - வட்டியில் இருந்து விடுவித்து பொருளாதாரச் சுரண்டலைத் தடுத்து நிறுத்திடும் ஒப்பற்ற திட்டத்தை தன்னகத்தே கொண்டது!

இஸ்லாம் ஒன்று மட்டுமே - அரசியலைத் தூய்மைப் படுத்திடும் ஆன்மிக வலிமை கொண்டது!

இஸ்லாம் ஒன்று மட்டுமே, இன்று உலகைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கின்ற இனவெறியிலிருந்து மக்களைக் காக்கின்ற ஆற்றல் வாய்ந்தது!

இஸ்லாம் எனும் இந்த முழுமையான வாழ்க்கை நெறி - காலம் கடந்து போன ஒரு வெற்றுச் சித்தாந்தம் அன்று! அது எல்லாக் காலத்துக்கும் பொறுத்தமானது!

இவ்வாறு எல்லாவிதமான் சிறப்பம்சங்களையும் இஸ்லாம் தன்னகத்தே கொண்டிருப்பதற்கு ஒரே காரணம் - இது இறைவனின் மார்க்கம் என்பதால் தான். இது முஹம்மது நபியின் சொந்த சிந்தனையும் கிடையாது. அது போலவே இஸ்லாம் என்பது பரம்பரை பரம்பரையாக வருகின்ற முஸ்லிம்கள் வீட்டுப் பாட்டன் சொத்தும் கிடையாது! அது உலக மக்கள் எல்லார்க்கும் சொந்தமானது!

ஏன் உங்களுக்கும் சொந்தமானதே! எனவே - ஏற்பீர்களா இஸ்லாத்தை?



S.A.MANSOOR ALI

Saturday, August 22, 2009

இந்துக்களே விழிமின்,எழுமின், கல்கி வந்துவிட்டார். வாருங்கள் அவரைப் பின்பற்றுவோம்!!மோட்சம் பெறுவோம்!!!

ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.

இதை நான் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.

ஆனால், கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, “பிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டி” என்னும் இந்த புத்தகம், வங்காளத்தில் இருந்து வெளிவந்ததாகும். இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய அத்தாட்சியாக இருக்கிறது. இதை எழுதியது, தலைசிறந்த ஆய்வாளரான பண்டிட் வைத் ப்ரகாஷ் என்னும், ஒரு பிராமண சமஸ்கிருத பண்டிட்டாவார்.

பண்டிட் வைத் ப்ரகாஷ, பன்னெடுங்கால கடின ஆராய்ச்சி மற்றும் அயரா உழைப்பில் உருவான இப்புத்தகத்தை, இதே போல ஆய்வு செய்யும் எட்டு கல்விமான்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களும், முழுக்க இப்புத்தகத்தை படித்துணர்ந்து, பலமான ஆதாரங்களினால், இப்புத்தகத்தின் தகவல், முழுக்க முழுக்க உண்மை தான் என்று சான்றளித்துள்ளனர்.

இந்தியாவின் தலைச்சிறந்த வேதங்கள், குறிப்பிடும் தூதரும் வழிகாட்டியுமான கல்கி அவதாரம், மக்காவில் பிறந்த முஹம்மது என்னும் மாமனிதரே ஆவார். ஆதனால், ஹிந்துக்கள், இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல், ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு, இவ்வுலகில் உதித்து, இறைத்தூதை எத்தி வைத்து, வாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றிய இறைவனின் கடைசி தூதரை ஏற்று இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். இவரது ஆராய்ச்சியின் இறையாண்மையை நிரூபிக்க, பண்டிட், தம் வேதத்திலிருந்து தக்க சான்றுகளை முன்வைக்கிறார்.

1.வேதங்கள், கல்கி அவதாரம் தான், பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இது, கடைசி தூதர், முஹம்மதுடைய விஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும்.

2.ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படி, கல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு இடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான் ‘ஜஸீரத்துல் அரப்’ என்று சொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும்.

3.ஹிந்து புனித நூல்களில், கல்கி அவதாரத்தின் தந்தையை, விஷ்னு பகத் என்றும் தாயை சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால், இறைவன், அதாவது அல்லாஹ் என்று பொருள். அதோடு, பகத் என்றால் அடிமை என்று அர்த்தம்.

ஆக, விஷ்னு பகத் என்பது, அல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில், அப்துல்லாஹ் என்னும் பதத்தைத் தருகிறது. சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு, சாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம் தான். ஆக, இறுதித் தூதர் முஹம்மதின் பெற்றோர் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா என்பது, உறுதிப்படுகிறது.

4.அதோடு, கல்கி அவதாரம், ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார் என்றும், வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப்பார் என்றும் ஹிந்துக்களின் புத்தகங்களில் உள்ளது. ஆக, இது முஹம்மதின் விஷயத்தில் உண்மையாகிறது என்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார்.

5.கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று வேதங்கள் சொல்கின்றன. இதுவும், மிக உயரிய, மதிப்புமிக்க குறைஷி குலத்தில் பிறந்ததால், முஹம்மதுடைய விஷயத்தில் சரியாகிறது.

6.கல்கி அவதாரத்துக்கு, ஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம் கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆக, மக்காவிலேயே, அல்லாஹ்வின் தூதர் ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது ஒருவர் தான்.

7.மேலும், கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை வழங்கப்படுமென்றும், அதன் மூலம் அவர், இவ்வுலகத்தையும், ஏழு வானத்தையும் சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘மிஃராஜ்’ இரவில், ‘புராக்’ வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானது, இதைத்தானே சொல்கிறது?

8.அதோடு, கல்கி அவதாரத்துக்கு இறைவனின் உதவி பெருமளவில் இருக்கும் எனவும், இறைவனால் வலுவூட்டப்படுவார் எனவும் புத்தகங்களில் வந்துள்ளது. முஹம்மதுக்கு, பத்ரு போர்க்களத்தில், இறைவனின் உதவி நேரடியாக தன் ஏவலர்கள் மூலம் இறங்கியது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.

9.மேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது, கல்கி அவதாரம், குதிரையேற்றத்திலும், அம்பெய்துவதிலும், வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்குவார். இந்த இடத்தில், பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன சொல்கிறார் என்பது, அதி முக்கியமான, கவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும். அதாவது, குதிரை, வாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே போய் விட்டது, தற்போது, நவீன ஆயுதங்களான, துப்பாக்கிகள், பீரங்கிகள், ஏவுகணைகள் என போர்முறை முற்றிலும் மாறி விட்டது. அதனால், வாளுடனும் வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும் நம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. உண்மையில், வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்கி அவதாரம் என்பது, புனித குர்ஆன் வழங்கப்பட்ட தூதர் முஹம்மதேயன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.

பேராசிரியர் பண்டிட் வைத் ப்ரகாஷ் எழுதியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது மீர் அப்துல் மஜீத்.

இதை தமிழில் மொழி பெயர்த்த சகோதரி சுமஜ்லா அவர்களுக்கு நன்றி!!


--------------------------------------------------------
ஆங்கிலத்தில் படிக்க http://comparativestudy.blogspot.com

Sunday, August 9, 2009

சந்தேகத்துடன் சொல்லப்படும் விஷயம், அனைத்தையும் விட பொய்யான விஷயமாகும்

அண்ணலார் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: நீங்கள் தவறான எண்ணங்களை - சந்தேகங்களை விட்டு உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் , சந்தேகத்துடன் சொல்லப்படும் விஷயம், அனைத்தையும் விட பொய்யான விஷயமாகும். பிறரைப் பற்றி செய்திகள் சேகரித்துக் கொண்டு திரியாதீர்கள். பிறரைப் பற்றி துருவி துருவி ஆராயாதீர்கள். உங்களுக்குள் தரகு வேலையில் ஈடுபடாதீர்கள். ஒருவர் மீது ஒருவர் வெறுப்புக் கொள்ளாதீர்கள். ஒருவரையொருவர் துண்டிக்க முனையாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களாய் விளங்கி ஒருவருக்கொருவர் சகோதரர்களாக வாழுங்கள்! அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) (புகாரி, முஸ்லிம்)

Wednesday, July 1, 2009

அண்ணல் நபி அவர்களின் அமுத மொழி! நாம் ஒரு கண்ணாடி!!

நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: ஓர் இறை நம்பிக்கையாளன் மற்றோர் இறை நம்பிக்கையாளனுக்கு கண்ணாடியாவான். ஓர் இறை நம்பிக்கையாளன் மற்றோர் இறை நம்பிக்கையாளின் சகோதரன் ஆவான். அவன் தன் சகோதரனை அழிவிலிருந்து காப்பாற்றுகிறான், அவனுக்குப் பின்னாலிருந்து அவனைப் பாதுகாக்கின்றான். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) (முஸ்லிம்)

Saturday, June 13, 2009

நல்ல வீடும்,கெட்ட வீடும்!!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எந்த வீட்டில் ஒர் அநாதை இருந்து, அவனுடன் நல்லவிதமாக நடந்துகொள்ளப்படுகின்றதோ அந்த வீடே முஸ்லிம்களின் வீடுகளிலேயே மிகச் சிறந்த வீடாகும். எந்த வீட்டில் ஓர் அநாதை இருந்து, அவனுடன் கோபமாக நடந்து கொள்ளப்படுகின்றதோ அந்த வீடுதான் முஸ்லிம்களின் வீடுகளிலேயே மிகக் கெட்ட வீடாகும். ;(இப்னு மாஜா

Tuesday, March 3, 2009

இஸ்லாம் பார்வையில் "மறைவான இணைவைப்பு" الرياء

மஹ்மூத் பின் லபீத் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சொன்னார்கள். 'நான் உங்கள் விஷயத்தில் மிகவும் அச்சப்படுவது சிறிய இணைவைப்பைப் பற்றித்தான். சிறிய இணைவைப்பு என்றால் என்ன அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டபோது, அவர்கள் 'ாியா" என்று பதிலளித்தார்கள். ஆதாரம்: முஸ்னத் அஹ்மத்

அபுஸையீத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'நாங்கள் தஜ்ஜாலைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் வந்தார்கள். தஜ்ஜாலினால் விளையும் அபாயங்களை விட அதிகமாக நான் உங்கள் விஷயத்தில் அஞ்சுவது குறித்து தொிவிக்கவா? அது மறைவான ஷிர்க் (இணைவைப்பாகும்.) ஒரு மனிதர் தொழுகைக்காக எழுகின்றார். மனிதர்கள் தன்னை உற்று நோக்குகின்றார்கள் என்பதற்காக அவர் தனது தொழுகையை அலங்காித்துக் கொள்கிறார்." என்று கூறினார்கள். ஆதாரம்: இப்னுமாஜா

அல்லாஹ்வே! இந்த ஹஜ்ஜை ாியா இல்லாத அல்லது பகட்டு இல்லாத ஹஜ்ஜாக ஆக்கியருள்வாளாக" என்று பிரார்த்தனை புரிந்தார்கள். ஆதாரம்: ஸஹீஹ் அல் ஜாமி

அண்ணல் நபி அவர்கள் சொன்னார்கள்:
'ஒருமனிதர் தொழுவதற்கு எழுந்து நிற்கிறார். மக்கள் தன்னை நோக்குகின்றார்கள் என்று தொிந்து கொண்டதால் தனது தொழுகையை அழகுபடுத்திக் கொள்கிறார். இதுவே மறைவான இணை வைப்பாகும்." ஆதாரம்: இப்னு மாஜா, மிஷ்காத் அல் மஸாபீஹ்.

'இந்த உலகில் புகழின் ஸ்தானத்தில் இருந்து பகட்டாக அதனைக் காட்டிக் கொண்ட எந்தவொரு மனிதனையும், இறுதித் தீர்ப்பு நாளில் தனது படைப்புகள் அனைத்தின் முன்பும் அம்பலப்படுத்தாமல் அல்லாஹ் விட மாட்டான்" நூல்: சஹீஹ் அத்தா;கீப் வத் தா;ஹீப்

மனிதர்களிடையே புகழடைவதற்காக நற்செயல்களைப் புரிவது, சுவனத்திற்குள் நுழைவதையும் தடை செய்யும். அண்ணல் நபி அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்...

'அல்லாஹ்விற்காக என்ற நோக்கத்துடன் மட்டும் பெற வேண்டிய அறிவை இவ்வுலகில் அதனால் பயன் கிடைக்கட்டும் என்ற நோக்கத்தில் ஒருவர், கற்பாரேயானால், அவர் இறுதித் தீர்ப்பு நாளில் சுவனத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்." நூல்: அபூதாவூத், இப்னு மாஜா

அண்ணல் நபி அவர்கள் கூறியதாக அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹ் சொல்கிறான் 'பெருமை என்னுடைய மேலாடையாகவும், பெரும் வல்லமை என்னுடைய அங்கியாகவும் உள்ளது. இந்த இரண்டில் ஏதாவது ஒன்றில் எவன் என்னுடன் போட்டியிடுகிறானோ, அவனை நான் நரக நெருப்பில் வீசுவேன்" நூல்கள்: அபுதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்

இந்த வகையான ாியாவைப் பற்றி அண்ணல் நபி அவர்கள் குறிப்பிடும் போது, 'மனிதர்களே, மறைவான இணைவைப்பு குறித்து எச்சாிக்கையாக இருங்கள்" என்று குறிப்பிட்டார்கள். மக்கள், நாயகம் அவர்களிடம் 'அல்லாஹ்வின் தூதரே! மறைவான இணைவைப்பு என்றால் என்ன?" என்று வினவினார்கள். அண்ணல் நபி அவர்கள் 'ஒருமனிதர் தொழுகைக்காக எழுந்து நிற்கிறார். மக்கள் அவரை உற்று நோக்குவதைக் கண்டவுடன் தனது தொழுகையை அவர் அலங்காித்துக் கொள்கிறார். இது தான் மறைவான இணைவைப்பு" என்று நபி விளக்கம் அளித்தார்கள். ஆதாரம்: இப்னு குஸைமா மற்றும் சுனன் இப்னு மாஜா

அபூ மூஸா அல் அஷ்அாி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஒரு நாள் எங்கள் மத்தியில் இறைவனின் தூதர் அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது, அவர்கள் 'மறைவான இணைவைப்பு குறித்து அச்சம் கொள்ளுங்கள். ஏனெனில் அது எறும்பு ஊர்ந்து செல்வதை விட கண்ணுக்கு புலப்படாத வகையில் அமைந்துள்ளது" என்று கூறினார்கள். அப்போது ஒருவர் (எழுந்து) 'அல்லாஹ்வின் தூதரே, எறும்பு ஊர்ந்து செல்வதை விட மறைவாக இருக்கும் அதனை நாங்கள் எப்படி தவிர்த்துக் கொள்ள முடியும்?" என்று வினவினார்கள். அப்போது அண்ணல் நபி அவர்கள்...

'அல்லாஹ்வே! நாங்கள் அறியாது செய்யும் இணைவைப்பிலிருந்து உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகிறோம்" என்று (பிரார்த்தனை செய் என்று) சொன்னார்கள். நூல்: அஹ்மத்

Sunday, March 1, 2009

இஸ்லாம் பார்வையில் "சபை ஒழுங்கு"

ஒரு நாள் அண்ணல் நபி அவர்கள் கையில் தடியை ஏந்தியவர்களாக எங்களிடம் வந்தனர். அப்பொழுது நாங்கள் அவர்களுக்(கு மரியாதை செய்வதற்)காக எழுந்துவிட்டோம். அதற்கு அவர்கள் 'அரபியல்லாதவர்களில் சிலர், சிலருக்கு மரியாதை செய்யும் பொருட்டு எழுந்துவிடுவது போன்று நீங்கள் எழுந்து விடாதீர்கள்' என்று கூறினர். அறிவிப்பவர்: அபூ உமாமா(ரலி) நூல்: அபூதாவூத்

நபி அவர்களைவிட (அவர்களின்) தோழர்களுக்கு எவரும் மிகவும் உவப்பானவராக இருக்கவில்லை. எனினும் நபி அவர்களை அவர்கள் பார்ப்பின் எழுந்திவிட மாட்டார்கள். காரணம் இதை நபி அவர்கள் விரும்பமாட்டார்கள் என்பதைத் தோழர்கள் அறிந்திருந்ததால்தான். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) திர்மிதீ

முஆவியா(ரலி) அவர்கள் ஜுபைர் (ரலி) அவர்களின் மகனாரிடமும், ஸஃப்வான் (ரலி) அவர்களின் மகனாரிடமும் வந்தனர். அப்பொழுது அவ்விருவரும் அவர்களுக்காக எழுந்து நின்றனர். அப்பொழுது முஆவியா(ரலி) அவர்கள் அவ்விருவரையும் 'நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக எவருக்குத் தமக்காக மக்கள் எழுந்து நிற்பது மகிழ்ச்சியை நல்குகிறதோ அவர் நரகத்தை தம் இடமாக்கிக் கொள்ளவும் என்று நபி அவர்கள் கூற நான் கேட்டேன்' என்று கூறினர். அறிவிப்பவர்: அபூமிஜ்லஸ் நூல்: அபூதாவூத், திர்மிதீ

உங்களில் எவரும் சபையில் வீற்றிருப்பவரை எழுந்திருக்கச் செய்து அங்கு அமரவேண்டாம். எனினும் நீங்கள் நெருங்கி அமர்ந்து இடத்தை விசாலமாக்கி (அவருக்கு இடம்) அளியுங்கள். அல்லாஹ் உங்களுக்கு விசாலாமாக்கி வைப்பான் என்று நபி அவர்கள் கூறினர். அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரி,முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ

"ஒருவர் சபையிலுருந்து ஒரு வேலையாக எழுந்து சென்று பின்னர் திரும்பி வருவாரானால் அவரே அவ்விடத்திற்கு மிகவும் உரிமையுடையவராவார்" என்று நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: ஹுதைஃபா(ரலி)வின் மகனார் வஹ்பு நூல்: திர்மிதீ

நபி அவர்களிடம் நாங்கள் சென்றால் எங்களில் ஒவ்வொருவருக்கும் எங்கு இடம் கிடைக்கிறதோ அங்கு நாங்கள் அமர்ந்து விடுவோம். அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) நூல்: அபூதாவூத்

"இருவருக்கிடையில் அவ்விருவரின் அனுமதியின்றிப் பிறர் அமர்வது கூடாது" என்று நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: அம்ருப்னு ஷுஐப் நூல்: அபூதாவூத், திர்மிதீ

பள்ளிவாயிலுக்குள் வந்த நபி அவர்கள் தோழர்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து அமர்ந்திருப்பதைக் கண்டு அவர்களை நோக்கி "உங்களுக்கு என்ன வந்துவிட்டது? நீங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து அமர்ந்திருப்பதைக் காணுகிறேன் என்று வினவினர். அறிவிப்பாளர்: ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) நூல்: முஸ்லிம், அபூதாவூத்

Saturday, February 28, 2009

இஸ்லாம் பார்வையில் "மனைவி"

''இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்'' என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலீ) நூல்: முஸ்லிம் 2915

உண்ணும் போதும், உடுத்தும் போதும் மனைவியை விட்டு விடாதீர்கள். மனைவியிடம் வெறுப்பை வீட்டிலே தவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள். அறிவிப்பாளர்: முஆவியா (ரலி) நூல்: அஹ்மத் 19160

பெண் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக் கிறாள். ஒரே (குண) வழியில் உனக்கு அவள் ஒருபோதும் இணங்கமாட்டாள் அவளை நீ அனுபவித்துக்கொண்டே இருந்தால் அவளின் கோணல் இருக்கவே அனுபவிக்க வேண்டியது தான். அவளை நீ (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அவளை ஒடித்தே விடுவாய். அவளை ஒடிப்பது என்பது அவளை மணவிலக்கச் செய்வதாகும் என நபி அவர்கள் சொன்னார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 2913

''அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட'' என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி) நூல்: புகாரி 56

''நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையைப் போல் அடிக்க வேண்டாம். பிறகு அதே நாளின் இறுதியில் அவர்களுடனேயே உறவு கொள்வீர்கள்'' என்று நபி கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) நூல்: புகாரி 5204

ஒரு மனிதர் நபியவர்களிடம் ''மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?'' என்று கேட்டார் அதற்கு நபி அவர்கள், ''நீ உண்ணும் போது அவளுக்கு உணவளிப்பதும் நீ அணியும் போது அவளுக்கு அணிவிப்பதும் (கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதிருப்பதும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதும் வீட்டில் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும் ஆகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதர் (ரலி) நூல்கள்: அபூதாவூத் 1830, அஹ்மத் 19162

''இறை நம்பிக்கை கொண்ட வர்களில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!'' என்று நபி அவரகள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மதி 1082

''தன் பொறுப்பில் உள்ளவர்களை (கவனிக்காமல்) வீணாக்குவது அவன் பாவி என்பதற்குப் போதுமானதாகும்'' என்று நபியவர்கள் சொன்னார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலீ) நூல்: அபூதாவூத் 1442

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானின் உடமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்'' என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலீ) நூல்: புகாரீ 5200

நபியவர்கள் தமது மனைவியர்களில் ஒருவரிடம் இருந்தார்கள். மூமின்களின் அன்னையரில் ஒருவர் பணிப்பெண் ஒருவரிடம் உணவுள்ள தட்டு ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள். வீட்டிலிருந்த நபி அவர்களின் (மற்றொரு) மனைவி அந்தப் பணிப் பெண்ணின் கையைத் தட்டி அதை உடைத்து விட்டார்கள். நபி அவர்கள் அந்த உடைந்த தட்டை ஒன்று சேர்த்து உணவை அதில் எடுத்து வைத்து (தம் தோழர்களிடம்) உண்ணுங்கள் என்று கூறினார்கள். அவர்கள் உண்டு முடிக்கும் வரை தட்டையும் அதைக் கொண்டு வந்த பணிப் பெண்ணையும் அங்கேயே நிறுத்திக் கொண்டார்கள். (அனைவரும் உண்டு முடித்த பின்பு) உடைந்த தட்டைத் தம்மிடமே வைத்துக் கொண்டு (உடையாத) நல்ல தட்டைக் கொடுத்து விட்டார்கள். அறிவிப்பாளர்: அனஸ் (ரலீ) நூல்: புகாரீ 2481

''இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!'' என நபியவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ் நூல்: முஸ்லிம் 2911

Thursday, February 26, 2009

இஸ்லாம் பார்வையில் "தர்மம்"

உங்களில் ஒருவர் பேரிச்சம் பழத்தின் ஒரு துண்டையாவது (தர்மம்) செய்து நரக நெருப்பிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியுமாயின் அதை அவர் செய்துக் கொள்ளட்டும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அதியீஇப்னு ஹாதம்(ரலி)நூல்கள்: புகாரி, முஸ்லிம்

ஒவ்வொரு முஸ்லிம் மீதும் தர்மம் செய்வது அவசியமாகிறது என்று நபி அவர்கள் குறிப்பிட நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே ஒருவர் (தர்மம் செய்ய எப்பொருளையும்) காணவில்லையாயின் என்று வினவ அவர் தன் கரங்களால் உழைத்து அதில் தானும் பலன் அடைந்து மேலும் தர்மம் செய்யட்டும்'' என்று நபி அவர்கள் கூறினார்கள். நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே ஒருவர் (தர்மம் செய்ய எப்பொருளையும்) காணவில்லையாயின் என்று வினவ ''அவர் தன் கரங்களால் உழைத்து அதில் தானும் பலன் அடைந்து மேலும் தர்மம் செய்யட்டும்'' என்று நபி அவர்கள் கூறினார்கள். நபித்தோழாகள் 'அவர் அதற்கும் இயலாவிடின் என்று வினவ அவர் நன்மையை (பிறருக்கு) ஏவட்டும் என்று நபி அவர்கள் கூறினார்கள். நபித்தோழர்கள் அம்மனிதர் அதற்கும் இயலாவிடின் என்று வினவ ''அவர் (பிறருக்கு) தீமை செய்வதை விட்டு தவிர்த்து கொள்ளட்டும். அதுவே தர்மமாகும் என்று நபி அவர்கள் விளக்கமளித்தார்கள். அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரி(ரலி)நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ

நபி அவர்கள் என்னிடம் கூறினார்கள். ''நான் உமக்கு நன்மையானவற்றின் வாயில்களை அறிவிக்கட்டுமா? நோன்பு கேடயமாகும் மேலும் தண்ணீர் நெருப்பை அணைப்பது போல தான தர்மம் பாவத்தை அழித்துவிடும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முஅத் இப்னு ஜபல்(ரலி)நூல்கள்: திர்மிதி, நஸயீ, அஹ்மத்

உங்களில் யார் இன்று நோன்பு நோற்றிருக்கிறார் என்று நபி அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர்(ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள். உங்களில் யார் இன்று ஜனாஸாவைப் பின் தொடர்ந்திருக்கிறார் என்று நபி அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள். உங்களில் யார் இன்று மிஸ்கீனுக்கு உணவு அளித்திருக்கின்றார் என்று நபி அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள் உங்களில் யார் இன்று நோயாளியை சந்தித்தார் என்று நபி அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள் இவையனைத்தும் ஒரு மனிதர் விஷயத்தில் ஒன்றுபட்டிருக்குமானால் அவர் சொர்க்கத்தில் புகுவார் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், நஸயி

தர்மம் செல்வத்தைக் குறைத்து விடுவதில்லை மன்னிப்பதன் மூலம் அல்லாஹ் மதிப்பை உயர்த்தாமாலிருப்பதில்லை. அல்லாஹ்வுக்காக யாரேனும் பணிவுடன் நடந்தால் அவரை அல்லாஹ் உயர்த்தாமலிருப்பதில்லை. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி

ஒரு மனிதன் இறந்துவிட்டால் மூன்று செயல்களைத்தவிர மற்றவை அவனை விட்டு அறுந்துவிடுகின்றன. நிலையான தர்மம் ,பிறருக்கு பயன்தரக்கூடிய கல்வி, தன் தந்தைக்காக பிரார்த்திக்கும் நற்பிள்ளை. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, திர்மிதி

விபசாரியான ஒரு பெண் ஒரு கிணற்றின் விளிம்பில் தன் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள் அந்த நாயை தாகம் சாகடிக்கவிருந்தது. அதைக்கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முந்தானையில் கட்டி கிணற்று நீரை இறைத்து அதற்கு கொடுத்தாள் ஆகவே அது பிழைத்து கொண்டது. அவள் ஒர் உயிருக்குக் காட்டிய இந்த கருணையின் காரணத்தினால் அவளுக்கு பாவமன்னிப்பு வழங்கப்பட்டது. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்

ஒருவர் நபி அவர்களிடம் வந்து; அல்லாஹ்வின் தூதரே! அதிக நன்மையுள்ள தர்மம் எது? எனக்கேட்டார் ''நீர் ஆரோக்கிய முள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும் வருமையைப் பயப்படுபவராகவும், செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு 'இன்னாருக்கு இவ்வளவு' என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உமது பொருட்களை மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே! என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

தர்மத்தில் சிறந்தது எது? என்று மக்கள் நபி அவர்களிடம் கேட்டதற்கு குறைந்த செல்வமே உள்ளவர் அதிலிருந்து தர்மம் செய்வது நீங்கள் உங்கள் தர்மத்தை உங்கள் வீட்டாரிலிருந்து தொடங்குங்கள் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: அபூதாவூத், அஹ்மத்

உபரியான தான தர்மங்களை அது செல்வமாகவோ அல்லது தானிய வர்க்கமாகவோ அல்லது அசைவற்ற பொருளாகவோ இருந்தால் முதலில் மனைவி, மக்கள் உறவினர், அண்டைவீட்டார் என ஆரம்பித்து தான தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

ஒரு மனிதர் நபி அவர்களிடம் ''என் தாயார் திடீரென இறந்துவிட்டார். அவர் (மரணமடையும் முன்புபே) முடிந்திருந்தால் தர்மம் செய்யச் சொல்லியிருந்திருப்பார் என்று நான் கருதுகிறேன். அவர் சார்பாக நான் தர்மம் செய்யலாமா? என்று கேட்டார். நபி அவர்கள் ''ஆம்'' சார்பாக தர்மம் செய்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், முஅத்தா

Tuesday, February 24, 2009

முஸ்லிம் சகோதரன்!!!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு அதிகமாக வெறுத்திருப்பது கூடாது. அவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். அனால் அவர் இவரையும் இவர் அவரையும் புறக்கணிக்கிறார். (இவ்வாறு செய்வது கூடாது). ஸலாமை முந்திச் சொல்பவரே அந்த இருவரில் சிறந்தவர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்: "முஃமினை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்திருக்க ஒரு மனிதருக்கு அனுமதி இல்லை. மூன்று நாட்களாகி விட்டால் அவரைச் சந்தித்து அவருக்கு ஸலாம் சொல்லட்டும். அம்மனிதர் இவருடைய ஸலாமுக்குப் பதிலளித்தால் நன்மையில் இருவரும் கூட்டாவார்கள். அவர் பதில் கூறவில்லையெனில் ஸலாம் கூறியவர் (முஃமினை) வெறுத்த பாவத்திலிருந்து நீங்கிவிட்டார்.'' (அல் அதபுல் முஃப்ரத்)

நபி (ஸல்) கூறினார்கள்: ""ஒருவர் தனது சகோதரரை ஒரு வருடம் வெறுத்திருந்தால் அந்தச் சகோதரரின் இரத்தத்தை சிந்தியவர் போலாவார். (அதாவது இச்செயல் கொலைக்கு ஒப்பானதாகும்).'' (அல் அதபுல் முஃப்ரத்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நீங்கள் ஒருவருக்கொருவர் துண்டித்து வாழாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். கோபப்படாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். அல்லாஹ் உங்களை எவியவாறு சகோதரர்களாக இருங்கள்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "சுவனத்தின் வாயில்கள் திங்களன்றும் வியாழனன்றும் திறக்கப்படுகின்றன. அல்லாஹ்வுக்கு இணைவக்காத ஒவ்வொரு அடியானுக்கும் மன்னிப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் தனது சகோதரனுடன் பகைமை கொண்டுள்ள மனிதன் மன்னிக்கப்படமாட்டான். அப்போது சொல்லப்படும் "இந்த இருவரும் சமரசம் செய்து கொள்வதற்கு அவகாசம் அளியுங்கள். இந்த இருவரும் சமரசம் செய்து கொள்வதற்கு அவகாசம் அளியுங்கள். இந்த இருவரும் சமரசம் செய்து கொள்வதற்கு அவகாசம் அளியுங்கள்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

அபூ தர்தா (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நோன்பு நோற்பதை விட, தர்மம் செய்வதை விட சிறந்தவொரு செயலை உங்களுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா? அது இருவரிடையே இணக்கத்தை எற்படுத்துவது. அறிந்து கொள்ளுங்கள்! பகைமை நன்மையை அழிக்கக் கூடியதாகும்.'' (அல் அதபுல் முஃப்ரத்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "இரு நண்பர்களில் ஒருவரின் தவறு, அவ்விருவருக்குமிடையே பிரிவினையை எற்படுத்தி விட்டால் அவ்விருவரும் அல்லாஹ்விற்காக அல்லது மார்க்கத்திற்காகநேசித்தவராக மாட்டார்கள்.'' (அல் அதபுல் முஃப்ரத்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சந்தேகப்படுவதிலிருந்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது மிகப்பெரிய பொய்யாகும். பிறரின் குறைகளை ஆராயாதீர்கள். பிறரைக் குறை தேடும் நோக்கத்துடன் கண்காணிக்காதீர்கள். ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொள்ளாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். மாறாக அல்லாஹ்வின் அடியார்களாகவும் சகோதரர்களாகவும் இருங்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

"ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாங்கும் நோக்கமில்லாமல் பிறரைத் தூண்ட வேண்டும் என்பதற்காகவே விலையை அதிகப்படுத்தாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். ஒருவரது வியாபாரத்தில் மற்றவர் குறுக்கிட்டு வியாபாரம் செய்யாதீர்கள். அல்லாஹ்வின் நல்லடியார்களாக, சகோதரர்களாக வாழுங்கள். ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரராவார். அவருக்கு அநீதி இழைக்கமாட்டார். மோசடி செய்யமாட்டார். அவரை அற்பமாகக் கருதமாட்டார். இறையச்சம் என்பது இந்த இடத்தில் என்று தனது நெஞ்சின் பக்கம் மூன்று முறை சைக்கினை செய்தார்கள் ஒருவர் தமது சகோதரரை இழிவாகக் கருதுவது அவரது கெடுதிக்குப் போதுமானதாயிருக்கும். ஒரு முஸ்லிமுக்கு பிற முஸ்லிமின் இரத்தம், அவரது சொத்து, அவரது கெªரவம் ஹராமாகும்'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

Monday, February 23, 2009

பள்ளியில் பெண்கள்

நபி அவர்கள் கூறினார்கள்: (தொழுகையில் இமாம் தவறு செய்தால் தவறைச் சுட்டிக்காட்டுவதற்கு) தஸ்பீஹ் கூறுவது ஆண்களுக்கும், கை தட்டுதல் பெண்களுக்கும் உரியதாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:புகாரி

உமர்(ரலி) அவர்களின் மனைவி (ஆதிகா) சுபுஹ் தொழுகைக்கும், இஷா தொழுகைக்கும் மஸ்ஜிதுக்கு வந்து ஜமாஅத்திலே கலந்துக் கொள்ளக் கூடியவர்களாக இருந்தார்கள். அப்போது அவர்களிடம் (உங்கள் கணவர்) உமர் அவர்கள் இதை விரும்பமாட்டார். இன்னும் ரோஷப்படுவார் என்று அறிந்திருந்தும் எதற்காக நீங்கள் வெளியேறி (மஸ்ஜிதுக்கு) வருகிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் (இதுவரை என்னை அவர் தடுக்கவில்லையே) என்னை மஸ்ஜிதுக்கு வராமல் தடுப்பதை விட்டும் அவரை எது தடுத்தது என்று வினவினார்கள். அதற்கு (அவர்களின் மகன் அப்துல்லாஹ்) இப்னு உமர் அவர்கள் அல்லாஹ்வினுடைய பெண் அடிமைகளை அல்லாஹ்வின் மஸ்ஜிதை விட்டும் தடுக்காதீர்கள் என்ற நபியின் சொல்தான் அவர்களை தடுத்துள்ளது என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி

உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சலாம் கொடுத்து முடித்ததும் பெண்கள் எழுந்து (சென்று) விடுவார்கள். நபி அவர்கள் எழுவதற்கு முன் சற்று அமர்ந்து இருப்பார்கள். பெண்கள் ஆண்களை சந்திக்காத வகையில் திரும்பிச் செல்வதற்காக நபி அவர்கள் இவ்வாறு தங்கியிருந்ததாக நான் கருதுகிறேன் என்று இப்னு ஹிஷாம் கூறுகிறார். நூல்:புகாரி

இறைநம்பிக்கையுள்ள பெண்கள் தங்களின் ஆடைகளால் போர்த்திக் கொண்டு நபி அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகை முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்குத் திரும்புவார்கள். இருட்டின் காரணமாக அவர்களை ஒருவரும் அறிந்து கொள்ளமுடியாது. அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி

நபி அவர்கள் கூறினார்கள்: உங்கள் துணைவியர் (பள்ளிவாசலுக்குச் செல்ல) அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி

"உங்களில் ஒரு பென் மஸ்ஜிதுக்கு வந்தால் அவள் நறுமணம் பூசவேண்டாம்" என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: ஜைனப் (ரலி) நூல்: முஸ்லிம்

நபி அவர்கள் கூறினார்கள்: நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குவேன். அப்பொழுது குழந்தையின் அழுகுரலை நான் கேட்பேன். (எனக்குப் பின்னால் தொழுதுகொண்டு இருக்கும்) அந்த குழந்தையின் தாயாருக்கு சிரமமளிக்க கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கி முடித்து விடுவேன். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி) நூல்:புகாரி

Friday, February 20, 2009

இஸ்லாம் பார்வையில் "வணிகம்"

அறிவிப்பாளர் : ஜாபிர் رَضِيَ اللَّهُ عَنْهُ
நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் நவின்றுள்ளார்கள்: “கொள்முதல் செய்வதிலும், விற்பனை செய்வதிலும், கடனைக் கோருவதிலும் மென்மையுடனும் நற்பண்புடனும் நடந்து கொள்ளும் மனிதர் மீது அல்லாஹ் அருளைப் பொழிவானாக!” (புகாாி)

அறிவிப்பாளர்: அபூஸயீத் குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் அருளினார்கள்: “உண்மை பேசி, நாணயத்துடன் நடந்து கொள்ளும் ஒரு வணிகர் மறுமை நாளில் நபிமார்கள், உண்மையாளர்கள், ஷஹீத் (இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தோர்) ஆகியோருடன் இருப்பார்.” (திர்மிதி)


அறிவிப்பாளர் : அபூகதாதா رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் (வணிகர்களுக்கு எச்சாிக்கை செய்த வண்ணம்) கூறினார்கள்: “உங்களுடைய பொருளை விற்பனை செய்வதில் அதிகமாகச் சத்தியம் செய்வதைத் தவிருங்கள். ஏனென்றால் அது (தற்காலிகமாக) வாணிபத்தைப் பெருக்கினாலும் இறுதியில் அருள்வளத்தை இல்லாதொழித்து விடும்.” (முஸ்லிம்)


அறிவிப்பாளர்: அபூதர் கிஃபாாி رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள்: “மூன்று வகையினாிடம் அல்லாஹ் மறுமை நாளில் பேசமாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மையாக்கி சுவனத்தில் நுழையவிக்க மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையே தருவான்.” அபூதர் கிஃபாாி رَضِيَ اللَّهُ عَنْهُ வினவினார்கள்: “அல்லாஹ்வின் தூதரவர்களே! தோல்வியுற்றும் நற்பேறற்றும் போன இவர்கள் யார்?” அதற்குப் நபிصلى الله عليه وسلم அவர்கள், “பெருமை கொண்டு தம் ஆடையைக் கணுக்காலுக்குக் கீழ்வரை தொங்கவிட்டுத் திாிபவன், உதவி செய்வதைச் சொல்லிக் காண்பிப்பவன், பொய் சத்தியத்தின் மூலம் தனது வாணிபப் பொருளைப் பெருக்கிக் கொள்பவன் ஆகியோர்தாம்” என்று மறுமொழி பகர்ந்தார்கள். (முஸ்லிம்)


அறிவிப்பாளர் : கைஸ் அபூகர்ஸா رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்களுடைய காலத்தில் வியாபாாிகளான நாங்கள் “ஸமாஸிரா” (புரோக்கர்கள்) என்று அழைக்கப்பட்டு வந்தோம். ஒரு சமயம் நபிகள் நாயகம்صلى الله عليه وسلم அவர்கள் எங்களுக்கு அருகில் நடந்து சென்றார்கள். அப்போது அண்ணலார் இந்தப் பெயரைவிட சிறந்த பெயரை எங்களுக்குத் தந்தார்கள். அண்ணலார் கூறினார்கள்: “வணிக்க கூட்டத்தாரே! சரக்கை விற்பதில் வீண்பேச்சுக்களைப் பேசுவதற்கும் பொய் சத்தியம் செய்வதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது, எனவே நீங்கள் உங்கள் வியாபாரத்தில் தர்மத்தையும் கலந்து விடுங்கள்!” (அபூதாவூத்)


அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் அளந்தும், நிறுத்தும் வணிகம் செய்யும் வியாபாாிகளை நோக்கி “நீங்கள் எத்தகைய இரு பணிகளுக்குப் பொறுப்பாளர்களாய் ஆக்கப்பட்டுருக்கிறீர்களெனில், அவற்றின் காரணமாக உங்களுக்கு முன் சென்றுபோன சமூகங்கள் அழிந்து விட்டிருக்கின்றன” என்றார்கள். (திர்மிதி)


அறிவிப்பாளர் : உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ
“தேவையான பொருள்களைப் பதுக்கி வைக்காமல் உாிய நேரத்தில் அவற்றை அங்காடிக்குக் கொண்டு வருபவன் அல்லாஹ்வின் அருளுக்கு உாித்தானவன்! மேலும், அவனுக்கு அல்லாஹ் வாழ்வாதாரத்தையும் வழங்குவான். இன்னும், அவற்றைப் பதுக்கி வைப்பவன் இறைவனின் சாபத்திற்குாியவனாவான்.”(இப்னு மாஜா)

அறிவிப்பாளர் : வாயிலா رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: “ஒருவன் ஒரு பொருளை விற்கின்றான். ஆனால் அதிலுள்ள குறையை அவன் சுட்டிக் காட்டவில்லையென்றால் அது அனுமதிக்கப்பட்ட செயல் அல்ல, ஒருவன் பொருளிலுள்ள குறையை அறிகின்றான். ஆனால் அதனைத் தெளிவாக எடுத்துரைக்கவில்லையென்றால் அதுவும் அனுமதிக்கப்பட்ட செயல் அல்ல.” (முன்தகா)

Wednesday, February 18, 2009

இஸ்லாம் பார்வையில் "திருமணம்"

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் رَضِيَ اللَّهُ عَنْهُ
“இளைஞர்களே! உங்களில் திருமணத்தின் பொறுப்பைச் சுமக்கும் சக்தி படைத்தவர் மணம் புரிந்து கொள்ளட்டும். ஏனெனில் திருமணம் பார்வையைத் தாழ்த்துகின்றது. வெட்கத்தலத்தைப் பாதுகாக்கின்றது. (பார்வை இங்கும் அங்கும் அலைபாய்வதை விட்டும் காம இச்சையினால் சுகந்திரமாகத் திரிவதை விட்டும் பாதுகாக்கிறது) திருமணத்தின் பொறுப்பை சுமக்கச் சக்தியற்றவர் இச்சையின் வேகத்தைத் தணித்திட அவ்வப்போது நோன்பு வைத்துக் கொள்ளட்டும்.” (புகாரி, முஸ்லிம்)


அறிவிப்பாளர் : அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக! நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்!” (புகாரி, முஸ்லிம்)


அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “பெண்களை அவர்களின் அழகுக்காக திருமணம் முடிக்காதீர்கள், அவர்களுடைய அழகு அவர்களை அழித்துவிடக் கூடும். பெண்களைச் செல்வந்தர்கள் என்பதற்காக மணம் முடிக்காதீர்கள், அவர்களுடைய செல்வம் வரம்பு மீறுவதிலும் அடங்காப் பிடாரித்தனத்திலும் அவர்களை ஆழ்த்திவிடக் கூடும். மாறாக மார்க்கப்பற்றின் அடிப்படையில் அவர்களை மணமுடித்துக் கொள்ளுங்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் மொழிந்தார்கள்: “எவருடைய மார்க்கப் பக்தியையும் நற்குணத்தையும் நீங்கள் விரும்புகின்றீர்களோ அத்தகைய மனிதர் உங்களிடம் திருமணம் கேட்டு வந்தால் அவருக்கு மணமுடித்துக் கொடுத்து விடுங்கள். நீங்கள் இப்படிச் செய்யாவிட்டால் பூமியில் குழப்பமும் தீமையும் விளைந்துவிடும்.” (திர்மிதி)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் رَضِيَ اللَّهُ عَنْهُ
எங்களுக்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகையில் ஓதும் தஷஹ்ஹுதை ஓதிக் காட்டியபின், “இது திருமணத்தின்போது ஓதக்கூடிய தஷஹ்ஹுது” எனச் சொல்லி அதனையும் ஓதிக்காட்டினார்கள். அதன் பொருள்:

நன்றியும் புகழும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தானவை. நாங்கள் அவனிடமே உதவி தேடுகின்றோம். அவனிடத்திலேயே மன்னிப்புக் கோருகின்றோம். எங்கள் மனத்தின் தீமைகளுக்கெதிராக எங்களை நாங்களே அல்லாஹ்விடம் தஞ்சம்தேடி ஒப்படைத்து விடுகின்றோம். எவருக்கு அல்லாஹ் நேர்வழி அளிக்கின்றானோ அவரை எவரும் வழிகெடுக்க முடியாது. அவன் எவனை வழி தவறச்செய்து விடுகின்றானோ அவனுக்கு யாரும் நேர்வழி அளிக்க முடியாது. மேலும் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் எவரும் இலர் என நான் சாட்சி கூறுகின்றேன். மேலும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனுடைய திருத்தூதர் என்றும் சான்று பகருகின்றேன்.

பிறகு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் மூன்று இறைவசனங்களை ஓதிக் காண்பித்தார்கள்.

1. இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சவேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும் நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணமடைய வேண்டாம். (3:102)

2. மனிதர்களே! உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனுக்கு அஞ்சுங்கள். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும் அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும் எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள். மேலும் இரத்த பந்த உறவுகளைச் சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள். திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்.(4:1)

3. இறை நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சிய வண்ணம் இருங்கள். மேலும் சொல்வதைத் தெளிவாக, நேரடியாகச் சொல்லுங்கள். இப்படிச் செய்தால் அல்லாஹ் உங்கள் செயல்களைச் சீர்திருத்துவான். பாவங்களை மன்னித்து விடுவான். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் அடிபணிந்து நடப்பவர்கள் பெரும் வெற்றியை அடைவார்கள். (33:70-71) (திர்மிதி)

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!