Thursday, April 11, 2019

அசத்தல் கருத்துக் கணிப்பு India goes to vote 2019

Tamil Nadu 
—————-
Congress,dmk,Muslim league,viduthalai siruthaikal,mdmk,communist alliance will win in 38 seats 
Admk 2
Pmk 0
Bjp 0
Naam thamizhar katchi 0
Mayyam 0
Ammk 0
Sdpi 0
———————————
India level 

Congress 200
Bjp 175
Other parties 168
Total 543 seats 

There will be a coalition government by congress 






Allah knows best



Friday, December 28, 2018

லைட்டுப் போடுங்கள்,பாதுகாப்பு பேணுங்கள்

அதிரையின் அழகான நீண்ட தெருக்கள்,நாற்பதுக்கும் 
மேற்பட்ட பள்ளிவாசல்களின் அணிவகுப்புக்கள்,தன்னலம் 
கருதாமல்,பொது நலம் பேணி,ஏழைக்காக உழைக்கும் 
செல்வந்தர்கள் இப்படி இன்னும் பல அருமைகளைக் கொண்ட ஊர் 
அதிராம்பட்டினம்.


இப்போது,கஜா புயல் பாதிப்புக்குப்பின்,சாலைகளில் உள்ள மின்சார கம்பங்களில்
உள்ள லைட்டுக்கள் எரிவதில்லை. அதே போன்று பல வீடுகளில் உள்ள வெளி வாசல் 
விளக்குகள் எரிவதில்லை.அதனால் பல தெருக்கள் கும்மிருட்டாக,சமூக விரோத செயல்களில்
ஈடுபடுவோருக்கு வசதியாக உள்ளது. குறிப்பாக,புதுமனைத் தெரு,CMP லைன் போன்ற 
தெருக்கள் அதிக இருட்டாக இருப்பதால் எந்த நேரமும் அசம்பாவிதம் நடக்க வாய்ப்புண்டு. தங்கள் பொன்னான உயிரையும்,உடமைகளையும்,கற்பையும் பாதுகாத்துக் கொள்ள,உங்கள் வீட்டு
வெளிவாசல் விளக்குகளைப் போட்டு வையுங்கள்.

Saturday, November 24, 2018

Gaja cyclone, adirampattinam attacked

https://www.youtube.com/user/rajaadirai

More than 80 videos about Gaja cyclone adirampattinam attacked
https://www.youtube.com/user/rajaadirai

Saturday, June 23, 2018

நூஹு நபி கப்பல்

நூஹு நபி கப்பலில் 
ஓட்டை விழாது,
அல்லாஹ்வின் அருள் 
இருப்பதால் 
அதிரை ஹி.ரிபாஃத்

Monday, July 3, 2017

Adirai EID gathering in California

அதிரை நியூஸ்: ஜூலை 03
அமெரிக்காவில் அதிகமான அதிரையர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அமெரிக்கா வாழ் அதிரையர்களின் நலன் கருதி கடந்த 2012 ஆம் ஆண்டு அதிரை அமெரிக்கன் கூட்டமைப்பு (AAF) தொடங்கப்பட்டது. இதையடுத்து கால் ஆண்டிற்கு ஒரு முறை அனைவரும் குடும்பத்துடன் ஒன்று கூடி தங்களின் அன்பை பரிமாறிக் கொள்வதுடன் பலதரப்பட்ட கருத்துக்களை ஆலோசனை செய்துவருவது வழக்கம். குறிப்பாக பெருநாள் பண்டிகைகள், விடுமுறை காலங்களில் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அதிரை அமெரிக்கன் கூட்டமைப்பு சார்பில் அரையாண்டு சந்திப்பு மற்றும் பெருநாள் சந்திப்புக் கூட்டம், கலிபோர்னியா மகாணம் பேர்பீல்ட் நகரில் உள்ள லாரல் கிரீக் பார்க்கில் ஞாயிற்றுக்கிழமை பகல் நடைபெற்றது.

ஜே. சேக் அப்துல் காதர் கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு அவ்வமைப்பின் தலைவர் புகாரி தலைமை வகித்து, உரை நிகழ்த்தினார். கூட்டமைப்பின் செயல்பாடுகள் மற்றும் தீர்மானங்களை அவ்வமைப்பின் செயலாளர் நஜ்முதீன் விளக்கிப் பேசினார். கூட்டமைப்பின்
நிதிநிலை அறிக்கையை பொருளாளர் முகமது வாசித்தார்.

கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக சவூதி அரேபியா அதிரை பைத்துல்மால் நிர்வாகி எஸ்.தாவூது கலந்து கொண்டு, அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பு கடந்த 24 ஆண்டுகளாக அதிராம்பட்டினம் பகுதி ஏழை, எளிய மக்களுக்கு ஆற்றிவரும் சிறப்பான செயல்பாடுகள் பற்றி விளக்கமாக எடுத்துக்கூறினார். மேலும், அதிரை அமெரிக்கன் கூட்டமைப்பின் ஆற்றிவரும் சேவையைப் பாராட்டியதுடன், அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பிற்கு ஆதரவும் கோரினார்.

கூட்டத்தில், அமெரிக்கா வாழ் அதிரையர்களின் அடுத்த தலைமுறையான இளைஞர்களின் பங்கு பற்றி அவ்வமைப்பின் துணைச் செயலாளர் அதிரை சித்தீக் உரையாற்றினார். இக்கூட்டத்தில் அதிரை அமெரிக்கன் கூட்டமைப்பினர் பலர் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர்.
 
 

 
 
 
 
 
 
 
 
 
Courtesy adirainews 

Monday, June 12, 2017

கலிபோர்னியாவில் அதிரை ஸ்டைலில் இப்தார்

கலிபோர்னியாவில் அதிரை ஸ்டைலில் இப்தார்


கலிபோர்னியாவில் உள்ள ஃபேர்பீல்ட் என்ற ஊரில் மஸ்ஜித் அந் நூர் பள்ளி வாசலில் அதிரை,பரங்கிபேட்டை,மீமிசல் ,கமுதி ,நீடூர் வாசிகள் இணைந்து இப்தார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர் .


இதில் அதிரை நோன்புக் கஞ்சி,வடை,சுண்டல் ,ஆந்திரா ஸ்டைலில் கோழி பிரியாணி ,ஜூஸ்,ஐஸ் கிரீம் போன்ற உணவு வகைகள் பரிமாறப்பட்டன.


இதில் ,பேர்பீல்ட் முகல்லாவாசிகள்,

ஃபிஜி,இந்தியா,அரபு நாட்டு மக்கள் மற்றும் இஸ்லாத்தை தழுவிய உள்ளூர் மக்கள் என சுமார் 150 பேர்கள் பங்கேற்றனர் .இதில் திரளான பெண்களும் கலந்து கொண்டனர்.

வந்திருந்த அனைவரும் உணவு நன்றாக இருந்ததாகவும் ,துவா செய்வதாகவும் சொன்னது ,நிகழ்சி ஏற்பாட்டாளர்களுக்கு மன நிறைவாக இருந்தது .






இப்தார் நிகழ்சியை அதிரையை சேர்ந்த அஷ்ரப்,அமீன்,இம்ரான்,அப்துல் லத்தீப்,ஜாபர் சாதிக் ,பைசல் ,பரங்கிபேட்டை ஷாகுல்,அப்துல் ரஹிம்,மீமிசல் இப்ராஹீம்,கமுதி கணபதி ,நீடூர் ஆசிப் ஆகியோர் செய்திருந்தனர் .

Tuesday, May 16, 2017

Sahar - food on the road

வருகிற ரமலானை முன்னிட்டு இரவு நேர பயணத்தில் இருக்கும் இஸ்லாமியர்களுக்காக...
     திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை (தொழுதூர் அருகே) உள்ள டோல்வேயில் இரவு 1 முதல் 3.30 மணி வரை சஹர் உணவு வழங்க இருக்கிறோம்.
     தேவை உடையோர் முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ளவும்.

     செல்: 9585358565

News forwarded by Mohamed, Dammam 

Tuesday, May 9, 2017

free sahar food in Chennai

சென்னைக்கு நோன்பு காலங்களில் வேலையாக செல்லக்கூடிய சகோதரர்கள் சஹர் உணவிற்கு எவ்வித சிரமும் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.
இறைவனின் மாபெரும் கிருபையினால் சென்னை தி நகரில் ஜி.என்.செட்டி சாலையில் அமைந்துள்ள விருதுநகர் ஹலால் ஹோட்டலில் இலவச சஹர் உணவு வழங்கப்படுகிறது. கடந்த வருடங்களிலும் இதேப்போன்று இலவசமாக சஹர் உணவு வழங்கப்பட்டுள்ளது. நோன்பு காலங்களில் 30 நாட்களுக்கும் அதிகாலை 3:30 முதல் நோன்பாளிகளுக்கு சுவையான தரமிக்க அசைவ சாப்பாடு வழங்கப்படுகிறது.
ஒரு நாளைக்கு சுமார் 250 முதல் 300 நபர்கள் வரை ஏழை பணக்காரர்கள் என்ற வித்தியாசமின்றி சஹர் உணவு சாப்பிட்டு செல்கிறார்கள்.
இது தொடர்பாக உரிமையாளரிடத்தில் இத்தனை பேருக்கு அதுவும் இலவசமாக மாதம் முழுவதும் எப்படி சேவை செய்கிறீர்கள் என்று விசாரித்தபோது….
இந்த சென்னைக்கு சாதாரண ஹோட்டல் வைத்து பிழைக்க ஊரிலிருந்து வந்தோம்…
அல்லாஹ்வுடைய மிகப்பெரிய கருணையால் இன்று நல்ல நிலையில் இருக்கிறோம் என்ற ஒரே வார்த்தையோடு நிறுத்திக்கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ்…
அல்லாஹ் அவருக்கு தம்முடைய அருளை மென்மேலும் வாரி வழங்குவானாக….
(அதிகப்படியாக Share செய்து நோன்பாளிகளுக்கு பயனுள்ளதாக ஆக்குங்கள்…)
Courtesy: adirai pirai 

Wednesday, April 19, 2017

பாபர் மசூதி வழக்கு: அத்வானி மீதான விசாரணையின் பின்னணியில் மோடி; லாலு பரபரப்பு

பாபர மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் உயிர்ப்பளித்துள்ள நிலையில் இதன் பின்னணியில் பிரதமர் மோடியின் தந்திர அரசியல் இருப்பதாக லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

அதாவது, குடியரசுத்தலைவர் பதவிப் போட்டிக்கு அத்வானி பெயர் வந்து விடக்கூடாது என்பதற்காக பிரதமர் மோடியின் ‘நன்கு சிந்தித்த தந்திர அரசியல்’ இது என்று லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

“பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கில் இருந்து வருகிறது சிபிஐ. அதனால்தான் உச்ச நீதிமன்றத்தில் நின்று அத்வானி உள்ளிட்டோருக்கு எதிரான விசாரணையை உயிர்ப்பித்துள்ளது.

பிரணாப் முகர்ஜிக்குப் பிறகு அத்வானி அடுத்த குடியரசுத் தலைவராகலாம் என்ற செய்திகள் எழுந்த நிலையில் மோடியின் தந்திர அரசியல் இந்த வழக்கின் பின்ணணியில் உள்ளது. 

அரசு என்ன விரும்புகிறதோ அதைச் செய்வதுதானே சிபிஐ வேலை. 

தனக்கு எதிரி யார் என்றாலும் சரி அவரை எதிர்கொள்ள அபாயகரமான அரசியலில் ஈடுபடுவதில் பாஜக-வுக்கும் மற்ற அரசியல் கட்சிகளுக்கும் எந்த ஒரு வேறுபாடும் இல்லை” என்று கூறிய லாலு, பாஜக தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஏன் உடல் நலமின்றிப் போனார் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று இன்னொரு குண்டைத் தூக்கி போட்டார். 

“ஒரு புறம் காந்தியின் சிலைக்கு மாலையிடுவார்கள், மறுபுறம் அவரைக் கொன்ற நாதுராம் கோட்ஸேவுக்கு சல்யூட் அடிப்பார்கள், இதுதான் பாஜக.” என்றார் லாலு பிரசாத் யாதவ்.

http://m.tamil.thehindu.com/india/பாபர்-மசூதி-வழக்கு-அத்வானி-மீதான-விசாரணையின்-பின்னணியில்-மோடி-லாலு-பரபரப்பு/article9649759.ece

Monday, April 17, 2017

An accident in California,for adirai boy!

அமெரிக்காவில் விடுமுறை நாளான நேற்று ஏப்ரல் 16 2017 அன்று பொது மக்கள் பலர் சுற்றுலா செல்வது வழக்கம்.
இதே போன்று கலிபோர்னியா மாநிலம் பேர்பீல்டு என்ற ஊரிலிருந்து தமிழ் நாட்டை சேர்ந்த சில குடும்பங்களை சேர்ந்தவர்கள் Lake Tahoe என்ற பனிச் சுற்றுலா தளத்துக்கு சென்றனர்.

இதனிடையே அவ்விடத்துக்கு சற்று முன்னர் கார்களை நிறுத்தி ஆசுவாசப் படுத்தி செல்ல முடிவெடுத்தனர்.

இந்த நிலையில் , திடீரென வந்த கார் மூலம் விபத்து ஏற்பட்டுள்ளது.அந்தப் பையனுக்கு வயது 15 ஆகும். தந்தை பெயர் அஹ்மத் அமீன்.அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர்கள்.உடனடியாக வந்த ஹெலிகாப்டர் மூலம் Roseville அவசர பிரிவு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளது.
தற்போதைய செய்திப்படி . அந்த பையனுடைய உடல் நலம் முன்னேற்றம் அடைந்து வருகிறது .
அல்ஹம்து லில்லாஹ்.

பூரண நலம் பெற,எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி துவா செய்யுமாறு வேண்டுகிறோம் .

Thursday, June 2, 2016

குரல் வலையை நெறிக்கும் நாடு

சில பல நேரங்களில் எனக்கு கிடைத்த-கிடைக்கும் ஒரு சிறு அனுபவமே இது.இதே போல உங்களுக்கும் கிடைத்திருக்கலாம்.

நான் செல் போன்,கண்ணாடி போன்ற கடைகளில் - இங்கு கலிபோர்னியாவில் வேலை செய்யும் போது,.கிடைத்த அனுபவம் .

பலர் வருவர்,விலை கேட்டு,பிடித்து விட்டால் உடன் வாங்கி சென்று விடுவார்கள்.பொதுவாக யாரும் பிசுவுவது கிடையாது.ஆனால் மெக்சிகன் நாட்டவர் பிசுவினாலும் வாங்கி விடுவார்கள்.

சிலர்,இது எந்த நாட்டு தயாரிப்பு எனக் கேட்பர்,நான் அந்த நாட்டை சொல்வேன். சீனா என்று தனியாக சொல்லவும் வேண்டுமோ.?அண்டா,குண்டா முதல் அனைத்தும் சீனாதானே.

உடனே,எனக்கு சீனா என்றால் வேண்டாம்.என்பர்.

நான் சொல்வேன்,சார் அல்லது மேடம்,சைனா பொருட்கள்தானே உலக முழுக்க,ஏன் அமெரிக்காவிலும் கூட  குவிந்து இருக்கிறது.மற்ற நாடுகளின் பொருட்கள் வருவதில்லை,வந்தாலும் பரவலாகக் கிடைப்பதில்லை,கிடைத்தாலும் நீங்கள் அதிகம் செலவழிக்க வேண்டிவரும் என்பேன்.

அதற்கு,சொல்லி வைத்தாற்போல் அனைவரும் சொல்லும் பதில் இதுதான்.

"நீங்கள் சொல்வது சரிதான்.ஆனால்,அது மனித நேயத்துக்கு எதிரான,மக்களின் கருத்துக்களுக்கு எதிரான,அவர்களின் குரல் வலையை நெறிக்கும் நாடு என்பதால்தான்"

கள்ளங் கபடமில்லாத அமெரிக்கர்களின் கூற்று சரிதானே!

Wednesday, May 25, 2016

ஹிந்தி படிப்போம்



முப்பது நாளில் ஹிந்தி படிக்கலாம் என்ற விளம்பரங்களைப் பார்த்திருக்கிறோம். அதற்கான புத்தகங்களும் இருக்கின்றன. ஆனால், "ஹிந்தி எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ள, இருபது மணி நேரமே போதும்" என்கிறார் மதுரையைச் சேர்ந்த விஸ்வநாதன் தம்பியண்ணா என்ற ஹிந்தி ஆசிரியர்.

இவர் ஏதேனும் மாயாஜாலம் செய்கிறாரோ என்று யோசித்தபடியே மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள விஸ்வநாதன் தம்பியண்ணாவைச் சந்தித்தோம்.
 ''யார் வேண்டுமானாலும் எளிதில் ஹிந்தி பேச எழுதக் கற்றுக்கொள்ளலாம். என்ன கற்கிறோம் என்பதை விட எந்த பாடத்தை, எப்படி கற்கப்போகிறோம் என்பதில்தான் விஷயமே அடங்கியிருக்கிறது" என்று சொல்லும் தம்பியண்ணா,  அதற்கான சாத்தியத்தையும் விளக்குகிறார்.

“ஹிந்தியின் வாக்கிய அமைப்புகள் 70% சதவீதம் தமிழ் போன்றும், 25 சதவீதம் ஆங்கிலம் போன்றும் இருக்கும். ஆக, 95 சதவீத வாக்கிய அமைப்புகள் நமக்குத் தெரிந்த மொழிகளிலேயே இருக்கிறது. அதனால் தமிழ் வழி ஹிந்தியையும், அதனை பின்பற்றி ஆங்கிலமும் சொல்லிக்கொடுப்பதால் மாணவர்கள் விரைவாக கற்றுகொள்கின்றனர். அதற்காக ஒரு அகராதியை நானே தயாரித்துள்ளேன். இந்த புத்தகம் மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்க உதவுகிறது" என்று கூறும் விஸ்வநாதன் தம்பியண்ணா, "மாணவர்களுக்கு நகைச்சுவை மற்றும் கதை வழியாக ஹிந்தி சொல்லிக்கொடுப்பதால், மாணவர்கள் உற்சாகமாக கற்றுக் கொள்கின்றனர்" என்கிறார்.

''எலி குடும்பம் ஒன்று சுற்றுலா புறப்படுகிறது. அதில் ஒரு சிறு எலியானது வழியில் பூனையை வழிமறிக்கிறது. அதற்குப் பெரிய எலியானது, அனைவரையும் அருகிலுள்ள மரத்தின் பின்னால் ஒளிந்துகொள்ளச் சொல்லிவிட்டு ஒரு கல்லை, அருகில் இருக்கும் தகரத்தின் மீது எறிகிறது. அந்தச் சத்தம் கேட்டு நாய் குரைத்ததும் பூனை ஓடிவிடுகிறது. எலிக் குடும்பம் பயணத்தைத் தொடர்கிறது.

இது வெறும் கதை போலத் தோன்றலாம். ஆனால், உலகச் சுகாதார நிறுவனம் அறிவுறுத்தும் தன்னை அறிதல், மற்றவர்களைப் புரிந்துகொள்ளுதல், தொடர்பாற்றல், உறவு பேணுதல், ஆழ்ந்து சிந்தித்தல், ஆக்க சிந்தனை, முடிவெடுத்தல், சிக்கல் தீர்த்தல், மன அழுத்தத்தைக் கையாளுதல், உணர்ச்சிகளைக் கையாளுதல் ஆகிய பத்து வாழ்க்கைத் திறன்களும் இந்த எலிக் கதைக்குள் இருக்கிறது.

பெரிய எலி, தன்னை அறிவதுடன் மற்றவர்களை பற்றியும் தெரிந்துவைத் திருந்ததால், மரத்தின் பின்னால் ஒளியச் சொல்லி, தனது தொடர்பாற்றலை வெளிப்படுத்தி, உறவைப் பேணுகிறது. அடுத்ததாக, பிரச்னையை சமாளிக்க ஆழ்ந்து சிந்தித்து, ஆக்கத்துடன் ஒரு முடிவை எடுத்து,  பிரச்னையை சிக்கலின்றி தீர்க்கிறது.

தனக்கிருந்த மன அழுத்தத்தைத் தனக்குள்ளேயே கையாண்டதுடன் ‘என்னால்தான் பிழைத்தீர்கள்’ என்று உணர்ச்சிவசப்படாமல் ‘நாயின் மொழியும் தெரிந்திருந்ததால் தப்பித்தோம்’என்கிறது பெரிய எலி. ஆகவே, இன்னொரு மொழியும் தெரிந்திருந்தால் அது நமது வாழ்க்கைக்கு நிச்சயம் பயன்படும். இந்த கதையை ஒவ்வொரு பயிற்சியின் போதும் தவறாமல் சொல்லி வருகிறேன்.
யாராவது ஹிந்தி படிக்க விரும்பினால், அவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று, அவர்களுக்கு இருபது நிமிடங்கள் டெமோ கிளாஸ் எடுப்போம். அந்த நேரத்திலேயே ஹிந்தி கற்கவேண்டும் என்ற ஆர்வம் வந்துவிடும். பொதுவாக ஹிந்தி ஆசிரியர் என்றாலே பலருக்கு எரிச்சல் ஏற்படும். அதை சமாளிக்க, ஹிந்திக்கு நடுவே, வாழ்வியல் பயிற்சி, வாழும் திறன் ஆகியவையும் சொல்லித்தரப்படுவதால், மாணவர்கள், வகுப்புகளை ஆர்வத்துடன் கவனித்து வருகிறார்கள்.

கடந்த முப்பது ஆண்டுகளில் லட்சம் பேருக்கு இந்தி கற்றுத்தந்திருக்கிறேன்.  ஹிந்தி மட்டும் அல்ல, எந்த மொழியை கற்கும்போதும் கேள்வி-பதில் அடிப்படையில் படித்தால் அனைவரும் எளிதில் கற்றுக்கொள்ளமுடியும்” என்கிறார் தம்பியண்ணா.

-சே.சின்னதுரை

ஆனந்த விகடன் 

Saturday, May 14, 2016

தமிழக தேர்தல் : இழுபறி ஆட்சிக்கு வாய்ப்புக்கள்

கருத்துக் கணிப்பு இது , ஆனால்,அல்லாஹ் நாடுவதே நடக்கும்.
அதிமுக 95
திமுக கூட்டணி 84
ம ந கூ 51
எஸ் டி பி ஐ 1
நாம் தமிழர் 1
பா ஜ க 1
பா ம க 1

மொத்தம் 234

அல்லாஹ் மிக அறிந்தவன்


 (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.”
(அல்குர்ஆன்: 3:26)

Sunday, March 6, 2016

நல்லதை நாடி,அல்லதை சாடி !

ஒரு செய்தியை சொல்ல எத்தனையோ வழி முறைகள் இப்போது .ஆனால்,ஆதிக் காலம் தொட்டு,பல வித முறைகள் மாறிக் கொண்டே வருகின்றன.

அல்லாஹ் தன தூதர்களை ஏகத்துவம் என்ற ஒற்றை செய்தியை கொடுத்து,மக்களிடையே பிரச்சாரம் செய்ய அனுப்பும் போது,அந்த தூதர்கள் தங்கள் வாய்களைக் கொண்டே அழைத்தனர்.வேறு சாதனங்கள் இல்லை.வேறு சாதனங்கள் இல்லையென்றாலும் அந்த ஏகத்துவ செய்தியை இறைவன் எவ்வாறு கட்டளை இட்டானோ,அதே மாதிரி,எவ்வித பிசிறும் இல்லாமல் செய்தனர்.தங்கள் பேச்சு மட்டுமே (வாய்)அன்றைய ஒரே மீடியா.

(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். 16:125
நபிமார்கள் அனைவருமே,மிக மிக அழகிய முறையில் மக்களை "அல்லாஹ் ஒருவனே" "அவனை மட்டுமே வணங்க வேண்டும்"என்ற உயரிய கொள்கையில் மக்களை அழைத்தனர்.சிலர்  ஏற்றனர்,பலர் பகைத்தனர்.

இருப்பினும்,மனம் தளராமல் - அவர்களின் பணியை செம்மையாய் செய்தனர்.அவர்களின் அன்றைய ஒரே மீடியா தங்களின் வாய்.பிறகு வந்த சஹாபாக்கள்,இமாம்கள்,தாபியீன்கள்,த்பவுத் தாபியீன்கள் போன்ற நல்ல மக்களின் காலங்கள் கூட குரான்,சுன்னாவை மக்களிடையே கொண்டு செல்ல அவர்களின் ஒரே மீடியாவாக இருந்தது அவர்களின் வாய் மட்டுமே.அவர்களும்,ஏகத்துவ செய்திகளை ,அல்லாஹ்வுக்கு பயந்து சொல்லி சென்றனர்.
நாட்கள் செல்ல செல்ல மக்களும் மாறினர்,மீடியாக்களும் மாறிவிட்டன.அதனால் அவதூறு செய்திகளும் பரவ ஆரம்பித்தன.

நவீன கண்டு பிடிப்புக்கள் மூலம் மீடியாக்கள் இன்று பல வகைகளிலும் மேலோங்கி எங்கோ சென்று விட்டது.

வாயின் மூலம் தொடங்கிய மீடியா,நபிமார்கள்,சஹாபாக்கள்,இமாம்கள்,தாபியீன்கள்,த்பவுத் தாபியீன்கள் வரை நன்றாகவே இருந்தது.
வாய் மூலம் தொடங்கப்பட்ட அந்த மீடியா,பிறகு சங்கு ஊதியும்,பறை அடித்தும்,நெருப்பு மூட்டியும்,நகரா அடித்தும் வளர்ந்து,பிரிண்டிங்  முறை தொடங்கப்பட்டு,ஒரு புரட்சி ஏற்படத் தொடங்கியது.

முற்காலத்தில் பலகையிலும் கல்லிலும் தமக்கு வேண்டிய எழுத்துக்களையோ, முத்திரைகளையோ, குறிகளையோ செதுக்கினர். அவற்றின் மீது மையைத் தடவி நகல் எடுக்கும் பழக்கம் ஏற்பட்டது. மேடு பள்ளங்களைக் கொண்ட பரப்பு ஒன்றின் மேல் மையைத் தடவிக் காகிதத்திலோ அல்லது வேறு ஒரு பொருளின் மீதோ அழுத்திப் பதிவெடுக்கும் முறை அடுத்துக் கையாளப்பட்டது. களிமண் அல்லது மெழுகில் இவ்வகையான அச்சுப் பதிவுகள் செய்யப்பட்டன.

முத்திரையிடுதலும் இலச்சினையிடுதலும் பாபிலோனியாவிலும், சீனாவிலும் தொடக்க காலத்தில் ஏற்பட்ட வரலாறாகும். செதுக்குத் தகடுகளில் எழுத்துக்கள் பதிக்கப்பட்டன. அடுத்து, கல்வெட்டுக்களில் மையைத் தடவிப் பதிப்பு எடுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதுவே மரத்தில் எழுத்துக்களை வடிவமைத்துப் புத்தகங்கள் பதிப்பிக்க முதன்முதலில் அடிப்படையாக அமைந்தது. கல்வெட்டிலிருந்து உண்மை நகல் எடுப்பதற்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். கல்வெட்டுத் துறைகளிலிருந்து மர அச்சுப்படி முறையும் அதிலிருந்து நகல் எடுப்பு முறையும் வளர்ச்சியடைந்தன.

அடுத்த நிலையில் நெசவுத் துணியில் அச்சிடும் முறை பரவியது. மரத்துண்டுகளில் செதுக்கப்பட்ட விதவிதமான உருவங்களைக் கொண்டு துணியில் அச்சிடுவது இம்முறையாகும்.

இத்தாலி நாட்டில் 15ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் அரபுமொழியில் அச்சு வேலைகள் சில நடைபெற்றன. திருக் குரானும் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

அச்சுக்கலையில் புதிய முறையைப் புகுத்தச் சீனநாட்டினர் விரும்பினர். 11ஆம் நூற்றாண்டில் சீனாவை ஆட்சிபுரிந்த ‘சிங்கிலி’ மன்னன் காலத்தில் ‘பி.செங்’ என்பவர் தனி அச்சை முதன்முதலில் கண்டுபிடித்தார்.

‘பி.செங்’ என்பவரே எழுத்துக்களை முதலில் களிமண்ணால் செய்தும் பிறகு தகரத்தால் செய்தும் உருவாக்கினார். தனித்தனி எழுத்துக்களுக்காக மரத்தினால் செய்த எழுத்துகளைப் பயன்படுத்தினார். மங்கோலியர் காலத்திலேயே இந்த அச்சுமுறை வழக்கத்திற்கு வந்தது. இது மற்ற நாடுகளுக்கும் பரவியது.

அடுத்த நிலையில் உலோகத்தால் அச்சு எழுத்துக்கள் உருவாக்கப்பட்டன. கொரியா, சீனா ஆகிய நாடுகளில் 18ஆம் நூற்றாண்டு வரை இம்முறை வழக்கில் இருந்தது.

15ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் கையால் எழுதப்பட்ட எழுத்துகளையே மாதிரியாகக் கொண்டு அச்சு உருவாக்கி நூல்களை வெளியிட்டனர். இம்முறையால் கையெழுத்திற்கும் அச்சிற்கும் வேறுபாடு காணப்படவில்லை. ஜான் கூட்டன்பர்க் எனும் ஜெர்மானியர் முதன்முதலில் ஐரோப்பாவில் தனித்தனி உலோக எழுத்துகளை 1437இல் உருவாக்கி, அச்சுப்பொறியையும் கண்டுபிடித்தார். இதனால் இவர் ‘அச்சுக்கலையின் தந்தை’ என்று போற்றப்படுகின்றார்.

இன்று அச்சடிக்க பல நவீன முறைகள் வந்துவிட்டன.

அதோடு,இணைய வழி மீடியா ,தொலைக் காட்சி என முன்னேறி - செய்திகள் ஒரே நொடியில் முழு உலகும் சுற்றி வந்து விடுகிறது.நல்ல செய்தியோ,கெட்ட செய்தியோ,உண்மையோ,பொய்யோ - அவதூறோ இப்படி இன்று உலகம் முழுதும் செய்திகள் சுற்றிக் கொண்டுதான் இருக்கின்றன.சில செய்திகள் வெல்லும்,சிலது கொல்லும்.

எனவே,நவீன மீடியாக்களின் உலகத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.எனக்கு   எது சரி என்று படுகிறது,அதையே  பின்பற்றுவேன் என்பதை விட,அல்லாஹ்வுக்கும்,அவனது உண்மைத் தூதர் ,மாமனிதர் நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு எது சரியோ ,அதையே நானும்,நீங்களும் பின்பற்ற வேண்டும்,இன்ஷா அல்லாஹ் அவ்வாறு பின்பற்ற அல்லாஹ் அருள் செய்வானாக.

நல்லதை நாடி,அல்லதை சாடுவோம்,இன்ஷா அல்லாஹ்.







Friday, March 4, 2016

எத்தகைய சந்தேகமும் இல்லை

இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்;, இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.
 
THE QURAN 2:2

Sunday, February 7, 2016

போலித் தொப்பிகள்

போலித் தொப்பிகள்

அது ஒரு இஸ்லாமிய மேடை.தமிழ் இலக்கியம்,மற்றும் முஸ்லிம்களின் தமிழுக்கான தொண்டு பற்றி பலர் பேசிக் கொண்டிருந்தனர்.மேடையில் இருந்த எல்லாரும் மற்ற மதங்களின் இதிகாசங்களைப் பற்றி விலா வரியாக அலசிக் கொண்டிருந்தனர்.

இஸ்லாம் பற்றி அல் குரானும்,ஹதீசும் என்ன சொல்கிறது என அவர்கள் பேசவில்லை,அல்லது தெரியவில்லை.மற்றபடி,அவர்கள் தங்களை எல்லாரும் இலக்கியவாதிகள் என பாராட்ட வேண்டும் என்ற நோக்கில்,இப்படி இதிகாசங்களைப் பற்றி பீற்றிக் கொண்டிருந்தனர்.பெயர்கள் எலாம் இஸ்லாமிய பெயர்கள்,ஆனால் பிரசங்கமோ - இஸ்லாத்திற்கு சம்பந்தம் இல்லாமல்.

அந்தக் கூட்டத்தில் இருந்த முபாரக் மட்டும் எரிச்சல் பட்டுக்  கொண்டிருந்தான்.என்னே அறிவீனம்?ஏன் இப்படி செய்கிறார்கள்.இதற்கு இஸ்லாமிய மேடைகள்தான் கிடைத்ததா?இதே போன்றுதான்,சிலர் பிலாகுகளில் இதே போன்று,செய்து கொண்டிருக்கிறார்கள்.அல்லாஹ்தான் அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.எடுத்து சொன்னாலும் திருந்துவார் இல்லை. ம்ஹூம்.
இவைகள் எல்லாமே தவறான போக்கு கொண்டவைகள் என சுட்டிக் காட்டினால்,கண்டு கொள்வது கூட இல்லை.மேடை பேச்சாளர்களும் சரி,பிளாக் எழுத்தாளர்களும் சரி,என்ன செய்வது.அவர்களுக்கு அவர்களுடைய மேடைகளும்,இணைய பிலாகுகளும் தான் முக்கியமாகப் போய்விட்டது.

சரி,இந்த முறையும்,மேடை ஏறி,அவருடைய பேச்சு தவறு என சொல்லிப் பார்ப்போம்.

அஸ்ஸலாமு அலைக்கும் பாய்.

வ அலைக்கும் சலாம்

என்ன பாய்,நல்லா இருக்கீங்களா?

அல்ஹம்துலில்லாஹ் ,நான் நல்ல இருக்கேன் நீங்க?

இருக்கேன் பாய்,அல்ஹம்துலில்லாஹ்
ஒரு சந்தேகம் பாய்,கேட்கலாமா?

என்ன சந்தேகம்,தாராளமா கேளுங்கோ?


இப்போ நீங்க பேசினீங்களே,இதுக்கும் இஸ்லாத்துக்கும் எதுனா சம்பந்தம் உண்டா?அல்லாஹ்வைப் பத்தி மத்தவங்க உவமானம் சொல்லுவாங்க,அத நம்ம எப்படி சொல்ல முடியும்.
இப்படி பேசுவது மிகப் பெரும் பாவம் இல்லையா?அவங்க இப்படி சொல்வதுக்கும்,இஸ்லாமிய கருத்துக்கும் சம்பந்தமில்லை,இஸ்லாமியக கருத்து என்பது குர் ஆனும்,நபிகள் நாயகம் ஸல் அவர்களின் பொன் மொழிகளும் மட்டுமே என்று சொல்லி மக்களுக்கு புரியவைப்பதை விட்டு விட்டு,அந்த இதிகாசங்களைப் பற்றியே பேசுகின்றீர்களே ,இது சரியா?

அது வந்து,நாமெல்லாம்,மதச் சார்பற்ற நாட்டில் இருக்கிறோம்,மேலும் நம் தமிழ் மொழியில் உள்ள இலக்கியத்தில் உள்ளதை சொன்னேன்,அது தப்பா?(அது தப்பு என்றால்,நான் படித்த இலக்கியம் பற்றி மற்றவர்கள்  தெரிந்து கொள்ள வேண்டாமா?).

என்ன பாய்,அப்படி என்றால்,எம் மதமும் சம்மதம் என்கிறீர்களா?இஸ்லாத்தை மட்டுமே அல்லாஹ் அங்கீகரித்துக் கொண்டான் என்று உங்களுக்கு தெரியாதா?தமிழ் தான் பெரிது என்றால்,அது அழிந்து போகக் கூடியது,இறைவனைப் பற்றி,இலக்கியங்கள் தப்பும் தவறுமாக போதிக்கின்றன.ஆனால் அல்லாஹ்,நித்திய ஜீவன்,என்றுமே அழியாதவன்.எனவே,அவனைப் பற்றி குரானும்,ஹதீசும் எப்படி போதிகின்றனவோ ,அப்படி அல்லவா பேசவேண்டும்.

தயவு செய்து,திருக் குரானின்,3:83 திரு வசங்களை புரட்டிப் பாருங்கள்.

இனியாவது ,மேடையில் பேசினாலும்,பிலாகுகளில் எழுதினாலும்,அல்லாஹ் இருக்கிறான் என்பதை மறந்து விடாமல்,பேசுங்கள்,எழுதுங்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

முபாரக் விறு விறுவென நடந்தான்.இன்ஷா அல்லா,இனி சரியாகிவிடும் என்ற எண்ணத்தில்.

Saturday, December 26, 2015

சிரியா அகதிகள் சென்னையில் .......

 கடந்த 2 மாதங்களில் மட்டும் சிரியாவைச் சேர்ந்த 20 குடும்பத்தினர் சென்னை வந்துள்ளனர். ஜெர்மனி நாட்டுக்குச் செல்ல விசா பெறுவதற்காக அவர்கள் இங்கு வந்துள்ளனர்.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரிய நாட்டிலிருந்து புகலிடம் தேடும் அகதிகள் அண்மைக்காலமாக இந்தியாவுக்கு வருவது அதிகரித்துள்ளது. இந்தியாவின் பெருநகரங்களில் உள்ள ஜெர்மனி தூதரகங்கள் வாயிலாக அந்நாட்டுக்குச் செல்ல விசா பெறுவதற்காக சிரிய மக்கள் இந்தியா வருவதாக தெரியவந்துள்ளது.

கடந்த 2 மாதங்களில் மட்டும் சிரியாவைச் சேர்ந்த 20 குடும்பத்தினர் சென்னை
வந்துள்ளனர்.

சிரிய நாட்டுத் தலைநகர் டமாஸ்கஸில் இருந்து சென்னை வந்துள்ள பெண் ஒருவர் கூறும்போது, "இது கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்காலம் என்பதால் தூதரகத்துக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜெர்மனி விசாவுக்காக ஏற்கெனவே காத்திருப்போர் பட்டியலும் மிக நீளமாக உள்ளது. எனவே இன்னும் சில காலம் நான் காத்திருக்க வேண்டும்.

எனது கணவர் படகு மூலம் ஜெர்மனி சென்று விட்டார். ஆனால், பெண்கள், குழந்தைகள் அவ்வாறாக படகில் ஜெர்மன் செல்வது மிகவும் ஆபத்தானது. எனவேதான் இங்கு வந்துள்ளோம். எனது குடும்பத்துடன் மீண்டும் இணைய வேண்டும். சிரியாவில் இருந்த எங்களது உடைமைகள் அனைத்தையும் விற்றுவிட்டோம். துருக்கி, ஜோர்டான் நாடுகளிலும் ஜெர்மனி விசா பெற முடியும்.

ஆனால் அந்த நாடுகளில் எங்களை மிகவும் தரக்குறைவாக நடத்துகின்றனர். எனவேதான்
ஈரான், இந்தியா, மலேசியா போன்ற நாடுகளுக்கு வருகிறோம். ஜெர்மனி விசா பெறும் நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இந்தியா வந்திருக்கிறோம். இது என் கதை மட்டுமல்ல இங்கு ஜெர்மன் விசாவுக்காக காத்திருக்கும் பல குடும்பங்களின் நிலையும் இதுவே" என்றார்.

சிரியாவைச் சேர்ந்த அகமது ஹூசைன் ஹைதராபாத்தில் கணினி படித்து வருகிறார். இவர் ஜெர்மன் தூதரங்களை விசாவுக்காக அணுகும் சிரிய மக்களுக்கு மொழிபெயர்ப்பாளராக பணியாற்றி வருகிறார்.

அவர் கூறும்போது, "இந்தியாவுக்கும் வரும் சிரிய மக்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். அவர்கள் இங்கு தங்குவதற்கு நிறைய செலவழிக்க வேண்டியிருக்கிறது. ஒரு நாளைக்கு 100 டாலர் வரை செலவாகிறது. பெரும்பாலான பெண்கள் அவர்களது கணவரையோ, தந்தையையோ பார்த்து ஆண்டுகள் பல கடந்துவிட்டன. அவர்களது குடும்ப, பொருளாதார நிலையைக் கருதி ஜெர்மனி தூதரகங்கள் விரைந்து நடவடிக்கை எடுத்தால் அவர்களுக்கு பேருதவியாக இருக்கும்" என்றார்.

அதேபோல் சென்னை விமான நிலையத்துக்கு வரும் சிரிய அகதிகள் மொழிப் பிரச்சினையால் பல்வேறு இன்னல்களை சந்திப்பதாக அகமது ஹூசைன் கூறுகிறார்.

சென்னை விமான நிலையத்தின் குடியேற்று அலுவலகங்களில் சிரியாவிலிருந்து வருபவர்களிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்படுவதாகவும் ஆனால் அரபு மொழியைத் தவிர வேறு மொழி தெரியாத அவர்கள் தவிப்புக்குள்ளாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னையில்  
உள்ள அரபு மொழிபெயர்ப்பாளர்கள் சிரிய அகதிகளிடம் அதிகக் கட்டணம் கோருவதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

இப்படி மொழிப் பிரச்சினை, பணப் பிரச்சினையில் சிக்கியுள்ள சிரிய அகதிகள் பலரும் முன்வைக்கும் ஒரே கோரிக்கை "தயவு செய்து எங்களுக்கு விரைவாக விசா வழங்குங்கள்" என்பதேயாகும். 


 http://tamil.thehindu.com/india/
 ஞாயிறு, டிசம்பர் 27, 2015

Monday, October 12, 2015

வாழ்த்துக்கள்,சேக்கனா நிஜாம் !

அதிரையின் பிரபல வலைதள எழுத்தாளரும், அதிரை நியூஸ் இணையதள ஊடகத்தின் தலைமை நிர்வாகி சேக்கனா நிஜாம் அவர்களின் திறமைக்கு மகுடம் சூட்டும் விதமாக பிரபல மாலை தினசரி இதழான 'மாலை முரசு' பத்திரிகை,  அதிரையின் செய்தியாளராக சேக்கனா நிஜாமை நியமனம் செய்துள்ளது.

 இப்பணியின் மூலம் நன்மைகள் அதிரை மக்களுக்கு கிடைத்திடும் வகையில் உழைத்திட வேண்டுகிறோம்.

 பத்திரிக்கை துறைக்கு பொருத்தமானவர்,
இந்தப் பணி மூலம் இஸ்லாம்,முஸ்லிம்கள் பற்றிய தவறான அவதூறுகளை களைய நீங்கள் ஆவன செய்தல் வேண்டும்.செய்வார்  இன்ஷா அல்லாஹ்! வாழ்த்துக்கள்.

Thursday, October 1, 2015

இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை!ஐ நா தலை இட வேண்டும் !!

உத்தரப்பிரதேசத்தின் தாத்ரியில் வீட்டில் மாட்டின் மாமிசத்தை வைத்திருந்தார்கள் என்று கூறப்பட்டு, இஸ்லாமியர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டது எப்படி? பின்னணித் தகவல்கள்.

உத்தரப்பிரதேசத்தின் தாத்ரியில் மாட்டு மாமிசத்தை சாப்பிடதாகக் கூறப்பட்டு இஸ்லாமியர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதையடுத்து அந்தப் பகுதியில் ஏற்பட்ட பதற்றம் இன்னும் நீடித்துவருகிறது.

அக்லாக்கின் குடும்பத்தினர் திங்கட்கிழமையன்று இரவு நடந்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை.

அன்று இரவு அதாவது, அக்டோபர் 28ஆம் தேதி முஹம்மது அக்லாக் என்ற அந்த ஐம்பது வயது நபரின் வீட்டில் மாட்டின் மாமிசம் இருந்தது என்று ஒரு கும்பல் அவரது வீட்டிற்குள் புகுந்து அவரை அடித்துக் கொன்றது.

அன்று இரவு பத்தரை மணியளவில், விவசாயக் கூலியான முஹம்மது அக்லாக்கின் குடும்பம் வழக்கம்போலவே, சாப்பிட்டுவிட்டு படுக்கச் செல்லும்போதுதான் அந்த தாக்குதல் நடந்தது.

முஹம்மது அக்லா தனது மகன் படுத்திருந்த அறைக்கு பக்கத்து அறையில் அப்போது தூங்கிக்கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் பெரும் ஆவேசத்துடன் ஓடிவந்த கும்பல் ஒன்று கம்பு, கத்தி, நாட்டுத் துப்பாக்கிகளுடன் அவர்களுடைய வீட்டில் நுழைந்தது.
அக்லாவின் குடும்பம் ஒரு பசுவைக் கொன்று சாப்பிட்டுவிட்டதாக கும்பலைச் சேர்ந்தவர்கள் கூச்சலிட்டனர்.

"எல்லாப் பக்கமிருந்தும் அவர்கள் வந்தார்கள். சுவரின் மீது ஏறினார்கள். வாசல் வழியாக வந்தார்கள். வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து நாங்கள் பசுவைக் கொன்றதாகக் குற்றம்சாட்டினார்கள் என்கிறார் அக்லாக்கின் 75 வயதுத் தாயான அஷ்கரி அக்லாக்.

"அந்தப் பகுதியில் இருக்கும் யாரும் பார்க்காமல் நாங்கள் எப்படி வீட்டிற்குள் பசுவைக் கொண்டுவர முடியும். இந்தப் பகுதியில் நாங்கள் மட்டும்தான் இஸ்லாமியக் குடும்பம்" என்கிறார் அவர்.

வீட்டிற்குள் நுழைந்த அந்தக் கும்பல், குளிர்சாதனப் பெட்டியில் இருந்த மாமிசத்தை காட்டி கேள்வியெழுப்பியது. ஆனால், அது ஆட்டின் மாமிசம் என்று அக்லாக்கின் கூடும்பத்தினர் கூறினர். ஆனால், அந்தக் கும்பல் அதனை ஏற்கவில்லை.

அக்லாக்கின் குடும்பத்தினர் எவ்வளவோ கெஞ்சியும் பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் அடிக்க ஆரம்பித்தது அந்தக் கும்பல்.
சிலர் அக்லாக் தூங்கிக்கொண்டிருக்கும் அறைக்குள் நுழைந்தனர்.
அவருக்கு அருகில் இருந்த தையல் எந்திரத்தைத் தூக்கி அவர் தலையில் போட்டனர். பக்கத்து அறையில் இருந்த அவரது மகனையும் வெளியில் இழுத்துவந்தனர். அதற்குப் பிறகு கொடூரமாக இருவரையும் கும்பல் தாக்கியது.

அந்தக் குடும்பத்திற்கு அருகில் இருந்த இந்துக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இதனைத் தடுக்க முயன்று முடியாமல் போகவே காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஒரு மணி நேரம் கழித்து காவல்துறை அங்கு வந்தபோது, அக்லாக் இறந்துபோயிருந்தார். அக்லாக்கின் மகனான தானிஷ் மிக மோசமாக காயமடைந்திருந்தார்.

அருகில் உள்ள ஒரு கோவிலில் செய்யப்பட்ட அறிவிப்பே இந்தச் சம்பவத்திற்கு மூலகாரணமாக கூறப்படுகிறது. யாரோ ஓருவர் அந்தப் பகுதியில் பசுவைக் கொன்று சாப்பிட்டதாக கோவிலில் இருந்த ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது. ஆனால், யார் அந்த அறிவிப்பைச் செய்தார்கள் என்பது தெரியவில்லை.

அப்படி ஒரு அறிவிப்பு செய்யப்பட்டதை, தான் கேட்டதாக அந்தக் கோவிலுக்கு அருகில் கடை வைத்திருக்கும் பங்கஜ் குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.
"நான் கையைக் கழுவிக்கொண்டுவருவதற்கு முன்பாக பெரிய கும்பல் அந்த வீட்டிற்கு முன்பு குவிந்துவிட்டது. யாரும் எதுவும் செய்யமுடியவில்லை" என்கிறார் பங்கஜ்.

அடையாளம் தெரியாத சிலர் கோவிலுக்குள் குதித்து அங்கிருந்த ஒலிபெருக்கியைப் பயன்படுத்திவிட்டார்கள் என்றும் கோவிலுக்குப் பொறுப்பானவர்களுக்கு அன்று "உடல்நிலை சரியில்லை"யென்றும் சில உள்ளூர்க்காரர்கள் கூறுகின்றனர்.

அந்தக் கோவிலின் அர்ச்சகரையும் அவரது உதவியாளரையும் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறது.

"எங்களுக்கு இது பெரும் அதிர்ச்சி. நாங்கள் மட்டும்தான் இங்கே ஒரே இஸ்லாமியக் குடும்பம் என்றாலும், நான்கு தலைமுறைகளாக நாங்கள் இங்கு வசிக்கிறோம். இதற்கு முன்பாக இப்படி பிரச்சனை ஏற்பட்டதில்லை" என்கிறார் அக்லாகின் 55 வயது சகோதரரான ஜமீல் அகமது.

அக்லாக்கின் குடும்பத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் ஆறு பேர் தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் நான்கு பேர் தேடப்பட்டுவருகின்றனர்.

இந்த கைது நடவடிக்கைக்குப் பிறகு அங்கு பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. காவல்துறைக்கு எதிராக போராட்டங்களும் நடத்தப்பட்டன.
அந்தப் போராட்டங்களின் போது வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதோடு. அருகிலிருந்த கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன.

வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தி, காவல்துறை நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது.

செவ்வாய்க் கிழமையன்றும் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால் அருகிலுள்ள பகுதியிலிருந்து காவல்துறையினர் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

ஊரடங்கு உத்தரவு போடப்படவில்லையென்றாலும் தெருக்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

உத்தரப்பிரதேசத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதையடுத்து, அரசியல் நோக்கத்துடனேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த சப்பீர் குஜ்ஜர் தெரிவித்தார்.

"இரு சமூகங்களைப் பிரிப்பதற்காக வெளியிலிருந்து வந்த சக்திகள் வேண்டுமென்றே செய்த வேலை இது. பல வருடங்களாக இந்தப் பகுதியில் வசித்துவரும் குடும்பத்தினர் குறிவைக்கப்பட்டதற்கு வேறு காரணங்களைச் சொல்ல முடியவில்லை. சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிக்கலாம்" என்கிறார் அவர்.

2017ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது.

இனிமேலும் தாங்கள் தாத்ரியில் வசிக்க விரும்பவில்லையென்று கூறியிருக்கிறது அக்லாக்கின் குடும்பம்.

"எங்களோடு நீண்ட காலமாக வசித்தவர்களே இப்படிச் செய்ததால் ஏற்பட்ட அதிர்ச்சி இன்னும் நீங்கவில்லை. என் தாயையும் சகோதரியையும் அழைத்துக்கொண்டு இங்கிருந்து போய்விடவே விரும்புகிறேன்" என தாக்குதல் நடந்தபோது சென்னையில் இருந்த அக்லாக்கின் மூத்த மகன் சர்தாஜ் பிபிசியிடம் தெரிவித்தார்.

"எங்களுக்கு இனி இங்கே இடமில்லை. அவர்கள் ஏற்கனவே என் சகோதரனைக் கொன்றுவிட்டார்கள். அடுத்து என்ன நடக்குமென யாருக்குத் தெரியும்?" என்கிறார் அக்லாக்கின் சகோதரர்.
இந்தியாவின் பல மாநிலங்களில் பசு வதை தடைச் சட்டம் அமலில் இருக்கிறது.

thanks
 http://tamil.thehindu.com/bbc-tamil

இது போன்று பல சம்பவங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இந்தியாவில் நடை பெற்று வருகின்றன.இதை ஐ நா தலை இட்டு,இந்தியாவைக் கண்டிக்க வேண்டும்.நீதியின் முன் ஆட்சியாளர்களும்,இது போன்ற ஈன செயலை செய்யும் காட்டுமிராண்டி கும்பல்களும் தண்டிக்கப்பட வேண்டும்.இந்து,முஸ்லிம்,கிறிஸ்தவ ஒற்றுமையை சீர்குலைக்கும் இது போன்ற செயல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

Tuesday, September 29, 2015

தந்திரமாக நடக்கும் கொலைகள்!அதிர்ச்சி தகவல்!!

Mohamed Anas


பண்டைய அரபு தேசத்தில் பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்கும் பழக்கம் இருந்தது. இஸ்லாம் அந்த மண்ணில் வந்தவுடன் அந்த பழக்கத்தை கடுமையாக தடை செய்தது. நபிகள் நாயகம் அவர்கள் ''யார் மூன்று பெண் குழந்தைகளைப் பெற்று அழகிய முறையில் வளர்த்து, திருமணம் செய்து கொடுத்து, அவர்களுடன் நல்ல முறையில் நடக்கிறாரோ அவருக்கு இறைவன் சுவர்கத்தை பரிசாக கொடுக்கிறான்'' என்ற நற்செய்தியை அந்த மக்களுக்கு கூறினார்கள். மேலும் திருக்குரான் வசனமோ ''மேலும், உயிருடன் புதைக்கப்பட்ட சிறுமியிடம் கேட்கப்படும்போது எக்குற்றத்திற்காக கொல்லப்பட்டாள் என்று'' போன்ற எச்சரிக்கையும் அந்த மக்களுக்கு விடுக்கப்பட்டது. இது அந்த சமூகத்தை முழுவதுமாக மாற்றியது. சமூகம் மாற வேண்டும். எண்ணங்கள் மாற வேண்டும். வரதட்சணை ஒழிய வேண்டும். அப்பொழுதே இந்த அவலங்கள் முற்று பெரும்.

----------------------------------------------------------------------

உசிலம்பட்டி பகுதியில் பெண் சிசுக்களை கள்ளிப்பால் ஊற்றி தளிரிலேயே பொசுக்கும் பயங்கரம் வெளிச்சத்துக்கு வந்து ஒரு தலைமுறை கடந்துவிட்டது. இந்த சமூக அவலத்தை தடுக்க அரசு எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தும் நிலைமை இன்னும் மாறவில்லை என்ற உண்மை முகத்தில் அறைகிறது. அங்கே, சிசுக்கொலைகள் குறைந்தாலும் நவீன வடிவத்தில் கருக்கொலைகள் அதிகரித்துவிட்டன என்பதே களம் நமக்குச் சொல்லும் தகவல். 

தாயே தன் மகளுக்கு கள்ளிப்பால் புகட்டி மண்ணுக்குள் புதைப்பது உசிலம்பட்டி பகுதிக்கு புதிதல்ல. ‘இதுவும் பொட்டப் புள்ளயா.. கழுதைய போட்டுத் தள்ளிரு.. வச்சிருந்தா வகை பண்ண முடியாது’ - சர்வ சாதாரணமாய் இப்படிச் சொல்லி, கருப்பையின் ஈரம் காய்வதற்குள் பெண் சிசுக்களை கல்லறைக்கு அனுப்பும் அவலத்தை 1984-ல் தான் வெளி உலகம் அறிந்தது. இதற்குப் பிறகுதான், சேலம், தருமபுரி மாவட்டங்களில் இதைவிட அதிகமாக பெண் சிசுக்கள் கொல்லப்படும் பகீர் தகவலும் கசிந்தது. 

சிசுக்கொலையின் அடிநாதம் 
 
முன்பெல்லாம் மதுரை, தேனி மாவட்டங் களில் ஆண்கள்தான் பரிசப் பணம் கொடுத்து பெண்களை மணம் முடித்தார்கள். பெண்ணுக்கு சீர்வரிசையாக ஆடு - மாடுகளை மட்டுமே கொடுத்தனுப்பினார்கள். பசுமைப் புரட்சியின் வரவால் விவசாயம் செழித்தபோது நகை, பணம் என வரதட்சணை கொடுத்து பெண்களைக் கட்டிக் கொடுக்கும் வழக்கமாக மாறியது. 

இது வானம் பார்த்த பூமி. பக்கத்திலேயே வைகை அணை இருந்தாலும், உசிலையின் ஒரு பகுதியை மட்டும் வளப்படுத்திவிட்டு இன்னொரு பகுதிக்கு வஞ்சகம் செய்கிறது வைகை நதி. வளமான பகுதியில் இருப்பவர்கள், பெண்களுக்கு அதிக நகைகளை போட்டு கட்டிக் கொடுத்தார்கள். அவர்களுக்குச் சரிநிகராக வறண்ட பூமிக்காரர்களால் வரதட்சணை கொடுக்க முடியவில்லை. கடனை வாங்கி சீர் செய்து விட்டு கடனாளி ஆனார்கள். வாகாக சீர்வரிசை கொண்டு வராத பெண்கள், புகுந்த வீட்டில் நெருக்கடிகளுக்கு ஆளானார்கள். 

கண்ணைக் கசக்கிக் கொண்டு வந்து நிற்கும் மகளுக்கு வழி சொல்ல வகை தெரியாத பெற்றோர், ‘இம்பூட்டுக் கஷ்டப்படுறதுக்கு பொறந்த வீட்டுக்குள்ளயே இந்தப் புள்ளய கள்ளிப்பால ஊத்திக் கொன்னுருக்கலாம்’ என்று அமில வார்த்தைகளை அள்ளி வீசுவது வழக்கமானது. பெண் சிசுக் கொலையின் அடிநாதம் இதுதான். 

ஆணுக்கு முக்கியத்துவம் ஏன்? 
 
எப்படியும் ஆண் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையில் அடுத்தடுத்து பெண் குழந்தைகளை பெற்றவர்கள், கள்ளிப்பாலோ எருக்கம் பாலோ, நெல் உமியோ கொடுத்து ஈவிரக்கமின்றி கொன்று புதைத்தார்கள். 

‘மூணு பொட்டப் புள்ளையல கொன்டோம்னா நாலாவதா ஆம்பளப் புள்ளதான்’ - இப்படிக் கிளப்பி விடப்பட்ட மூட நம்பிக்கைகளும் பெண் சிசுக்களுக்கு எமவேதமாக அமைந்து போனது. இப்படித்தான் பெண் சிசுக் காவுகளின் எண்ணிக்கையை உயர்த்திக் கொண்டே போனது உசிலம்பட்டி. என்னதான் கட்டுப்பாடுகளும் கண்காணிப்புகளும் இருந்தாலும் இன்னும் அங்கே சிசுக்கொலைகள் தொடர்கின்றன. அதைவிட அதிகமாக கருக்கொலைகள் பெருகிவிட்டன. 

“ஆம்பளப் புள்ளை இல்லைன்னா ’அரசத்த வளே’ன்னு வைவாக. எங்க அம்மாச்சிக்கு மூணு பொட்டப் புள்ள, எங்கம்மாவுக்கு ரெண்டு, எனக்கும் ரெண்டாவது பொட்டப் புள்ளயா பொறந்துடக்கூடாதுன்னு எங்கம்மா என்னைய திருமங்கலத்துல இருக்குற ஸ்கேன் சென்டருக்கு கூட்டிப் போச்சு. கோயில் விசேஷத்துல (கடா) குட்டி பிடிக்க, செத்தாக்க கோடித்துணி கொண்டாந்து போட, வாணம் போட்டு, உருமி கொட்டி மையக்கரைக்கித் தூக்கிவிட இதுக்கெல்லாம் ஆம்பளப் புள்ளதானே வேணும்கிது சனம்’’ என்று ஆண் வாரிசுக்கு வக்காலத்து வாங்குகிறார் கொக்குடையான்பட்டி பிரியா. 

தந்திரமாய் சாகடிப்பு 
 
இதே ஊரைச் சேர்ந்த சமூக சேவகி மீனாட்சி, “ஏழு வருசத்துக்கு முந்தி வடகாட்டுப்பட்டியில சலவை தொழிலாளி ஒருத்தரு மூணாவதும் பொம்பளப் புள் ளயா பொறந்துருச்சுன்னு சொல்லி அந்தப் புள்ளைய வீட்டுக்குப் பக்கத்துல இருந்த குழியில உசுரோட தூக்கி அடிச்சு மண்ணைப் போட்டு மூடுனாரு. கதறக் கதற அந்தச் சிசுவை மண்ணுக்குள்ள போட்டு மூடுன கொடுமையை கண்ணால பாத்தவ நான். உசிலம்பட்டி பகுதியில இப்பையும் பொம்பள புள்ளைகள கொன்டுக் கிட்டுத்தான் இருக்காக. ஆனா, ரொம்ப தந்திரமா பண்றாக. இந்தப் பகுதியில இருக்கவங்க நிறையப் பேரு ஆந்திரா, கர்நாடகான்னு தொழில் பாக்குறாக. 

நெறமாச கர்ப்பஸ்திரிகள அங்க கூட்டிட்டுப் போயிடுறாங்க. ஆணா பொறந்தா அங்கருந்து உடனே தூக்கிட்டு வந்துருவாங்க. பொட்டப் புள்ளைனா நாலாம் பேருக்கு தெரியாம கொன்டு பொதைச்சிட்டு ஒரு மாசம் கழிச்சு, எதுவுமே நடக்காதது மாதிரி ஊருக்கு திரும்பிருவாக. ’என்னடி ஆச்சு?’ன்னு கேட்டா, ’’கொடி சுத்திப் பொறந்துச்சு. பெரிய உசுர காப்பாத்துறதே பெரும்பாடா போச்சுல்ல, புள்ளைக்கி ‘ஆர்ட்’டுல (ஹார்ட்) ஓட்டையாம், குழந்தைக்கு வளர்ச்சி இல்லை’ அப்படி இப்படின்னு ஏதாச்சும் காரணத்தச் சொல்லுவாக. இப்பெல்லாம் காசுக்காக டாக்டருங்களே பொம்பளப் புள்ளைய கொல்லத் தயாரா இருக்காங்க” என்கிறார்.
பெண் குழந்தைகளால் என்ன பிரச்சினை? 
 
“அப்பெல்லாம் அஞ்சு பொட்டப் புள்ளைகளக் கூட பெத்து வளத்துக் கட்டிக் குடுத்தாங்க. ஆனா இப்ப, பொம்பளப் புள்ளைய பெத்தாலே புருஷங்காரன் சண்டை புடிக்கிறான். அந்தக் கொடுமைய தாங்க முடியாம புள்ளைக நாண்டுக்குதுக. சரி.. பொட்டப் புள்ளையா இருந்தாலும் பரவால்ல. ஆளாக்கிக் கட்டிக் குடுத்துருவோம்னு படிக்க வைச்சா, எடப் போக்குல சாதிவிட்டுச் சாதி எவனையாச்சும் இழுத்துட்டு ஓடிருதுக. இந்தக் கச்சடாவெல்லாம் வேண்டாமுன்டு தான் பொம்பளப் புள்ளைகன்டா கழிச்சுக் கட்டிடுறாங்க’’ சிசுக்கொலைக்கு இப்படி நியாயம் கற்பிக்கிறார் ஆனையூர் அங்கம்மாள். 

“ஆம்பளப் பய எப்புடியும் பொழைச்சுக் குவான். அவனுக்கு ஒரு கோவணத்தக் கட்டிக்கூட வெரட்டிரலாம். பொட்டப் புள்ளைகள அப்படி வெரட்ட முடியுமா சாமி? அதுகளுக்கு பொறந்ததுலேயிருந்து மையக்கரை வரைக்கும் சீர் செய்யணும். அந்தக் காலத்துல நாங்க ஆறு மாசத்துக்கு ஒரு தடவ தான் அரிசிச் சோத்தப் பாப்போம். இந்த லட்சணத்துல புருசன் அடிக்கிறான்னு பொட்டப்புள்ள கண்ணக் கசக்கிட்டு வந்து நிக்கும். மூணுவாட்டி கூட தீத்து விட்டிருக்கோம். இதையெல்லாம் சகிச்சுக்க முடியாமத்தான் கள்ளிப்பாலை ஊத்துனாங்க’’ என்கிறார் இதே ஊரைச் சேர்ந்த கருத்தக்கண்ணன். 

“நாங்க தான் நெதானம் தெரியாம செஞ்சோம். இப்ப, காலம் பெரண்டுக்கிச்சுல்ல. ஊசி, மருந்து, மாத்தரைன்னு வந்துருச்சுப்பு. ஆணு பொண்ணுன்னு பாத்து கலைச் சுப்புடுறாங்கள்ல.. பொட்டப் புள்ளைகளப் பூரா கொன்னு போட்டுட்டு இப்ப பொண்ணுக கெடைக்காம வெளி வெளியா பொண்ணு தேடி கெளம்புறாங்கே.” கருக்கலைப்பின் அபாயகரமான தாக்கத்தை போகிற போக்கில் விதைக்கிறார் பி.முத்துப்பிள்ளை. 

“இப்பத்தான் ஏன் கொல்றே?’ன்னு வர்றாங்க. அந்தக் காலத்துல இந்த வெசாரணை எல்லாம் இல்லப்பு. பொட்டப்புள்ள பொறந்துருச்சா.. (தொடர்ந்து.. பெண் சிசுவைக் கொல்வதற்கு கையாளும் முறையை அவர் சொன்ன விதத்தை விலாவாரியாகச் சொல்ல முடி யாது என்பதால் தவிர்க்கிறோம்) மூணே நாழிகையில எல்லாம் முடிஞ்சிரும். புள்ளைய பெத்தவ ரெண்டு மூணு நாளைக்கு அழுதி சிந்திக்கிட்டுக் கெடப்பா. அந்தப் புள்ள வளந்து பெருசாகி வாக்கப்பட்டுப் போற எடத்துல அடிப்பட்டு மிதிபட்டுச் சாகுறதுக்கு இது தேவலைன்னு அப்புறம் அவளே தேத்திக்குவா’’ இது ஆனையூர் காசம்மாளின் வாதம். 

“அன்னைக்கி கிலோ கணக்குல நகை போட்டு புள் ளைகள கட்டிக் குடுத்தாங்க. இப்ப வெலவாசி ஏறிப் போச்சு. இப்பப் போயி கனமா பொட்டப் புள்ளைகள பெத்துப் போட்டு என்ன செய்ய..? இருக்குற வீட்டுப் புள்ளைகள பகுமானமா கட்டிக் குடுக்குறாங்க இல்லாத வீட்டுப் புள்ளைக நின்டு போகுதே. அதனால தான் பொட்டப் புள்ளையே வேணாம்னு சொல்லுது சனம்’’ 

கொக்குடையான்பட்டி காமாயியும் மின்னல் கொடியும் இப்படிச் சொல்கிறார்கள். அதிர்ச்சி தரும் வார்த்தைகளை அனாசயமாக கூறுகின்றனர். சிசுக்கொலைக்கான காரணத்தை இன்னும் சிலர் வேறு கோணத்தில் கூறுகிறார்கள். 

 thanks

 http://tamil.thehindu.com/opinion/columns/

 4:4. நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.



6:140. எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ; இன்னும் தங்களுக்கு அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் வழிகெட்டு விட்டனர், நேர்வழி பெற்றவர்களாக இல்லை.
 
17:31. நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்.
 




பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!