Thursday, December 11, 2008

இஸ்லாத்தில் சிறந்த அறம்

மழை விட்டாலும்,தூறல் விட்டபாடில்லை.ஆனாலும்,சலீம் நானாவும்,பஷீர் காக்காவும் அதையெல்லாம் பற்றிக் கவலை கொள்ளவில்லை.சலீம் நானா சாயாவை ஆற்றிக்கொண்டே பேச்சை ஆரம்பித்தார்.அவர்க்கு ஒரு நாளைக்கு இரு தடவைகள் சாயா குடிக்க வேண்டும்.பஷீர் காக்காவும் அப்படித்தான்.கேட்டால் இரண்டு பெரும் சொல்வார்கள்,"ஒரு நாளைக்கு ரெண்டு தடவ சாயா குடிச்சா,ஹார்ட்டுக்கு நல்லதாம்,அல்லாஹ் ஆலம். "

என்ன நானா,என்ன காக்கா,இன்னிக்கி என்ன நியூசு வச்சிருக்கியே?கேட்டுக்கொண்டே வந்த சுலைமானை அதட்டினார்,பஷீர் காக்கா. "யாம் சுலைமான்,ஒருவருக்கொருவர் சந்திக்கும்போது சலாம் சொல்லனுமுன்னு ஒனக்கு தெரியாதா?எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சொல்லக்கூடிய ஒரே வாழ்த்து இது மட்டுந்தேன்.அல்லாஹ் ஆதம் நபிக்கு கற்றுக் கொடுத்து,இது உங்க மக்களுக்கான முகமன் அப்படின்னு சொல்லி இருக்கான்,பல ஹதீஸ் மூலமும் நாம அதனோட மகத்துவம் பற்றி தெரிந்து கொள்ளலாம்,

அதே மாதிரி ஒரு கல்யாண வீடு,அங்க போய் சலாம் சொன்னா,எவ்வளவு பொருத்தம்,அதே மாதிரி இறந்த வீடு அங்கன போய் சலாம் சொன்னா என்ன பொருத்தம்,பாரு.சந்தோஷமானாலும்,துக்கமானாலும் அல்லாஹ்வுடைய சாந்தியும்,சமாதானமும் எல்லாருக்கும் வேண்டும் தானே,

இதையே துக்க வீட்டுல போய் குட் மார்னிங்
சொல்லமுடியுமா?வீட்டுக் காரங்களுக்கு பேட் மார்நிங்கா இருக்கும்."என்ற பஷீர் காக்காவின் சலாம் குறித்த பேச்சைக்கேட்டுக்கொண்டிருந்த சுலைமான் உறுதியாக சொன்னார்,"காக்கா,இவ்ளோ அருமை இருக்கிற சலாமை இன்ஷா அல்லாஹ்,இனி நானும் கடைபிடிப்பேன்".

இதைக்கேட்ட பஷீர் காக்காவுக்கு மகிழ்சி தாங்க முடியவில்லை."ஆஹா ஒரு மார்க்க விஷயத்தை அல்லாஹ்வுக்காக எத்தி வச்சிட்டோம்,இதுக்கு நமக்கு கூலி கிடைக்கும்,இன்ஷா அல்லாஹ்".என்னும்போது அவர் கண்கள் பனித்தன.

**********************************************
நீங்கள் ஈமான் கொள்ளாதவரை சுவர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கும் வரை ஈமான் கொள்ள முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கத்துணை செய்யும் காரியத்தை நான் கூறட்டுமா? உங்களுக்கிடையே ஸலாம் கூறுவதைப் பரவலாக்குங்கள். அபுஹுரைரா(ரலி) - நூல்: முஸ்லீம்

ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் - (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது)(அல்-குர்-ஆன்24:27)

ஒருவர் ஒரு வீட்டில் நுழையும் முன் 'அஸ்ஸலாமு அலைக்கும்' என அனுமதி கோரட்டும்.அருமை மகனே! நீ உனது குடும்பத்தினரிடம் சென்றால் ஸலாம் கூறு? அது உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் பரக்கத்தாக அமையும். (அனஸ்(ரலி) - நூல்: திர்மிதீ)

இஸ்லாத்தில் சிறந்த அறம் எதுவென ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட போது (பசித்தோருக்கு) உணவளிப்பதும், தெரிந்தவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் ஸலாம் கூறுவதாகும் என விடையளித்தார்கள். (அப்துல்லாஹ்பின் ஆஸ்(ரலி) - நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

யார் முதலில் ஸலாம் கூறுகிறாரோ அவரே அல்லாஹ்வுக்கு மிகவும் நெருக்கமானவராவார். (அபூஉமாமா(ரலி) - நூல்: அபூதாவுத்)

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!