Monday, April 9, 2012

வாக்கெடுப்பில் மோடியின் தோல்வி

அஸ்ஸலாமு அலைக்கும்,

சமீபத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் - அதிக அளவில் எதிர் வாக்குகளை பெற்று மோடி தலைக்குனிவு அடைந்தார். சில வினாடிகள் செலவளித்து எதிர்ப்பு வாக்குகள் அளிக்கச்சொல்லி விடுத்த வேண்டுகோளுக்கு சில சகோதரர்கள் - இதெல்லாம் தேவையில்லை - டைம்ஸ் பத்திரிக்கை விளம்பரத்திற்காக நடத்தப்படும் இத்தகைய 'பப்ளிசிட்டி ஸ்டண்ட்'டுக்காக நம்முடைய பொன்னான நேரத்தை வீணாக்கவேண்டாம் என்று கருத்து தெரிவித்திருந்தனர்.  

சகோதரர்கள் சொல்வது போல டைம்ஸ் பத்திரிக்கையில் மோடி சிறந்த தலைவர் என வந்து விட்ட காரணத்தால், சிறந்தவராக இந்த பயங்கரவாதி ஆகி விட முடியாது ஆனா ல்:

வாக்கெடுப்பு முடிவதற்கு ஒரு நாள் முன்பு வரை -  அதிக வாக்குகளோடு முன்னிலை வகித்த மோடிபுகழ் இறுதி நாளன்று - இடிந்து விழுந்தது. மோடி ஆதரவு சக்திகளுக்கு இது பெரும் பின்னடைவு. மாநில அரசு இயந்திரத்தை பயன்படுத்தி - அரசு ஊழியர்கள் ஊக்கப்படுத்தி - அமெரிக்கா வாழ் குஜராத்திகள் ஒத்துழைப்போடு - கட்சி தொண்டர்கள் பொய் வாக்குகளோடு மற்றும் சங் பரிவாரின் - ஆசியுடன் வெற்றி நிச்சயம் என்றிருந்த மோடி கும்பலுக்கும் மரண அடி விழுந்தது.

வாக்கெடுப்பில் மோடி வெற்றிபெற்றிருந்தால் மோடி கும்பல் அளவுக்கு மீறி ஆட்டம் போட்டிருக்கும்.  மோடியின் வெற்றியை வைத்து - மேற்கத்திய நாடுகளின் - மற்றும் இந்திய மனித உரிமை ஆர்வலர்களின் மோடி எதிர்ப்பு பிரச்சாரத்துக்கு - பதிலடி கொடுக்கலாம் என்று திமிரோடிருந்தவர்களின் எண்ணத்தில் மண் விழுந்தது.

வாக்கெடுப்பில் மோடி வெற்றிபெற்றால்  - குஜராத் படுகொலை காரணம் கா ட்டி மோடிக்கு மறுக்கபட்ட விசாவை கொடுத்தே தீரவேண்டும் என்று அமெரிக்காவை நிர்பந்திக்க போட்ட- சதிக்கு சாவு மணி அடிக்கப்பட்டது.

வாக்கெடுப்பில் மோடி வெற்றிபெற்றால் - அவர்தான் இந்தியாவின் எதிர்கால நடசத்திரம் என்று பிரச்சாரம் செய்து வெளிநாட்டு முதலீடுகளை குஜராத்துக்கு கொண்டு வரபோட்ட திட்டம் - நிறைவேறாமல் போனது. 

இந்த வெற்றியை வைத்து 'மதச்சார்பின்மை பேசுபவர்களின்' முகத்தில் கரியை பூச எண்ணியிருந்தவர்களின் முகத்தில் கரி பூசப்பட்டது.

இந்த வெற்றி - மனித உரிமை ஆர்வலர்களுக்கும் - மத வெறி எதிர்ப்பாளர்களுக்கும் கிடைத்த வெற்றி என்பதில் சந்தேகம் இல்லை.


பிறைநதிபுரத்தான்

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!