Showing posts with label தலித். Show all posts
Showing posts with label தலித். Show all posts

Friday, June 17, 2011

தலித் சிறுவன் தாக்கப்பட்டான்


தலித் சிறுவன் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து தமிழக அரசு 4 வாரங்களில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது தேசிய மனித உரிமைகள் ஆணையம்.


கோவை மாவட்டம் கரிக்கிலிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் வசந்தகுமார். தலித் இனத்தைச் சேர்ந்தவன். அங்கு நிலவி வந்த வறட்சியின் காரணமாக கிராமத்திலுள்ள பொது குடிநீர்க் குழாயில் தண்ணீர் பிடித்துள்ளான்.


இதை வேறோர் இனத்தைச் சார்ந்த 3 பெண்களும் மற்றொரு நபரும் கண்டித்ததுடன் சிறுவனை அடித்துள்ளனர்.


காயமடைந்த சிறுவன் வசந்தகுமார் சிகிச்சைக்காக அன்னூர் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டான். இந்த நிகழ்வு பத்திரிகையொன்றில் செய்தியாக வந்துள்ளது.
மேலும் தலித்துகள் வீட்டுக்கு வெளியே செல்போன் பேசவும், உள்ளூரில் முடி வெட்டிக் கொள்ளவும் கிராமத்தினர் தடை விதித்துள்ளதாகவும் பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.


இந்தப் பத்திரிகை செய்தியையே தன்னேற்பு மனுவாக எடுத்துக்கொண்ட தேசிய மனித உரிமைகள் ஆணையம் இது குறித்து 4 வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும்படியும், இதுபோன்று தலித்துகளின் மீதான
தாக்குதலில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளிக்கும்படி கேட்டுள்ளது.
மேலும் இந்தச் சம்பவம் குறித்து குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்ற விவரத்தையும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நிவாரணம் ஏதும் வழங்கப்பட்டதா என்பது குறித்தும் அறிக்கையில் தெரிவிக்கும்படி கேட்டுள்ளது.


பத்திரிகையில் வந்த செய்தி உண்மையாக இருந்தால் அது 1989-ம் ஆண்டின் "தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் பாதுகாப்புச் சட்டத்தை'
மீறியதாகக் கருதப்படும் என மனித உரிமைகள் ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.
DINAMANI
 (இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு.3;105
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.4;1
THE QURAN

Thursday, September 16, 2010

திருமாவளவனின் முஸ்லிம் அரசியல், மாற்றமா ஏமாற்றமா? - ஆளூர் ஷாநவாஸ்

ஆண்டாண்டு காலமாக அடிமைகளாகவும், கூலிகளாகவும் கைகட்டி நின்ற சமுதாயத்தை, "டை" கட்ட வைத்தவர் அண்ணல் அம்பேத்கர்.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் அடையாளமாக உதித்த அவர், தமது அறிவாலும், ஆளுமையாலும், தலித் மக்களைத் தலைநிமிரச் செய்தார்.

சாதியின் பெயரால்… மனுநீதியின் பெயரால்… ஒதுக்கப்பட்டு, வதைக்கப்பட்ட அடித்தட்டு மக்களுக்குச் சமூக நீதியைப் பெற்றுத் தந்தார்.

இந்துத்துவத்தின் வேருக்கு வெந்நீர் ஊற்றிய அந்தத்தலைவர், தமது இறுதி மூச்சு உள்ளவரை இந்துத்துவ எதிர்ப்பில் தீவிரம் காட்டினார். “இந்துவாகச் சாகமாட்டேன்” என்று சூளுரைத்துச் செயல்படுத்தினார்.

அந்தப்புரட்சியாளரின் தொடர்ச்சியாய், தமிழ்மண்ணில் களமாடுபவர்தான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.

சேரிகளில் அடுப்பு எரியவும், விளக்கு எரியவும் வழிவகுத்தவர் அம்பேத்கர் என்றால், சேரிகள் எரிக்கப்படுவதை தடுத்துக் காத்தவர் திருமாவளவன்.

சட்டங்கள் ஆளவும், பட்டங்கள் அடையவும் திட்டங்களைத் தந்தவர் அம்பேத்கர் என்றால், குண்டர் சட்டங்கள் மூலம் சேரி மக்கள் வதைக்கப்படுவதை எதிர்த்து எழுந்தவர் திருமாவளவன்.

தனித்தொகுதியும், அரசியல் உரிமையும் பெற்றுத் தந்தவர் அம்பேத்கர் என்றால், அரசியலில் பொம்மைகளாய் இருக்காமல் தனித்தன்மையோடு வளர அடித்தளமிட்டவர், திருமாவளவன்.

இவ்வாறு அம்பேத்கரின் வழித்தடத்தில் அரசியல் அதிகாரத்தை நோக்கி திமிறி எழுந்த திருமாவளவன், தலித் பிரச்சினைகளை மட்டுமில்லாமல், தமிழக முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் கையில் எடுத்துப் போராடி வருகின்றார்.

இந்தியச் சூழலில் தலித்துகளுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையேயான உறவை "தொப்புள்கொடி உறவு" என்று அழைப்பதுண்டு. நெருக்கமும், இணக்கமும் கொண்ட சிறப்பு மிக்க உறவு அது.

இந்துத்துவத்தின் கோரத் தாக்குதலுக்கு இலக்காகும் இரட்டைச் சமூகம் என்ற அடிப்படையில் தலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்குமான உறவு அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.

அம்பேத்கரை அரசியல் நிர்ணய சபைக்கும், வட்டமேசை மாநாட்டிற்கும் அனுப்பி வைத்து ஆதரவளித்த முஸ்லிம் லீக்கின் காலத்திலிருந்தே அந்த உறவு வலுப்பெற்றுத் தொடர்கிறது.

தலித்துகளைக் கருவியாக்கி, முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களைத் தூண்டிவிடும் இந்துத்துவ சூழ்ச்சியை வேரறுக்க வேண்டிய அவசியம் இருப்பதால், தலித் தலைவர்களோடும், இயக்கங்களோடும் முஸ்லிம்களுக்கு நல்லுறவே நீடித்து வருகிறது.

தொல். திருமாவளவனுடன் ஆளூர் ஷாநவாஸ்தமிழச் சூழலில் தலித்துகளின் தலைவரான இளையபெருமாள் காலத்திலிருந்து டாக்டர் அ.சேப்பன், திருமாவளவன் என இன்றுவரை அனைவருடனும் நட்புறவு நீடித்து வருகிறது.

இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிகுந்த உறவைச் சீர்குலைத்து, தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்காக இந்துத்துவக் கும்பல் துடியாய்த்துடிக்கிறது. அம்பேத்கரின் பெயரைச் சொல்லி, அரசியல் களத்திற்கு வந்த பலரையும் பார்ப்பனீயம் மென்று விழுங்கிவிட்டது.

தமிழகத்தில் தடா பெரியசாமி முதல் டாக்டர் கிருஷ்ணசாமி வரை எல்லா சாமிகளும், சங்கராச்சாரி சாமியிடம் சரணடைந்தது விட்ட நிலையில், சங்கராச்சாரியாருக்குப் பணிய மறுத்த திருமாவளவன் மீது முஸ்லிம்களுக்கு எப்போதும் நன்மதிப்பு உண்டு.

2009, நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகளோடு கூட்டணி உடன்பாடு கண்ட பின்னர், பச்சைத் துரோகம் புரிந்துவிட்டு, பா.ஜ.க. உடன் கூட்டணி வைத்த கிருஷ்ணசாமி போல் அல்லாமல் பா.ஜ.க.வின் பக்கமே செல்லாமல் இந்துத்துவ எதிர்ப்பில் தீவிரமாக இயங்கி வருபவர், தொல். திருமாவளவன்.

பா.ஜ.க.வின் நேரடிப் போட்டியாளர்களான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்களைத் தவிர, ஏனைய அனைவரும் தமிழகத்தில் பா.ஜ.க.வுடன் கைகோர்த்துவிட்டனர். தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., மற்றும் புதிய தமிழகம் மட்டுமன்றி, நேற்று முளைத்த நடிகர் சரத்குமாரின் ச.ம.க.முதல் நடிகர் கார்த்திக்கின் நா.ம.க. வரை எல்லா கட்சிகளும் பா.ஜ.க.வைத் தழுவிய கட்சிகள்தான்.

மாற்றத்தை நிகழ்த்தப் புறப்பட்டிருக்கும் தே.மு.தி.க.வின் விஜயகாந்தும் பா.ஜ.க.வுடன் பெரும் பேரம் நடத்தியவர்தான்.

அரசியலில் பல நெருக்கடியான தருணங்களை எதிர்கொண்டபோதும் தடுமாறிவிடாமல், பா.ஜ.க.வின் பக்கம் சாய்ந்துவிடாமல் கொள்கை உறுதி காப்பவராக திருமாவளவன் விளங்குகின்றார்.

1999 ஆம் ஆண்டுதான் திருமாவளவன் தேர்தல் பாதைக்கு வந்தார் என்றாலும், 1990 களிலிருந்தே சமூக அமைப்பாக இயங்கிக்கொண்டிருந்த காலம் தொட்டே அவர் முஸ்லிம்களுக்காக குரல் எழுப்பி வருகின்றார்.

1992, டிசம்பர் 6 அன்று பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது மதுரை வீதிகளில் களமிறங்கி உடனடியாக தமது எதிர்ப்பை பதிவு செய்தவர் அவர்.

“எரிபடும் சேரிகளில், இடிப்படும் மசூதிகளில் புறப்படும் விடுதலைச் சூறாவளி” என்னும் முழக்கத்தை முன்வைத்து முஸ்லிம்களை ஈர்த்தவர். ஈழத்தை ஆதரிப்பதுபோலவே பாலஸ்தீனத்தையும் ஆதரித்து வருபவர். சதாம் ஹுஸைனின் தீரத்தால் ஈர்க்கப்பட்டவர். தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்.

தமிழக முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டு கோரிக்கையைச் சட்டப் பேரவையில் முழங்கியவர். அதை வலியுறுத்தி தனியொரு மாநாட்டை நடத்தியவர். முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக்காகப் போராடியவர். எல்லா முஸ்லிம் அமைப்புகளோடும் தோழமை போற்றுபவர்.

இப்படியாக… தமது ஒவ்வொரு அசைவுகளாலும் முஸ்லிம்களுடனான உறவை உறுதிப்படுத்தி வந்த திருமாவளவன், கடந்த சில ஆண்டுகளாக அதில் ஒரு தீவிரப் போக்கை கையாண்டு வருகின்றார்.

“மக்களே மசூதியைக் கட்டி எழுப்புவோம்” என்று சொல்லி பாபர் மஸ்ஜித் மீட்புப் போராட்டத்தை முன்னெடுத்தார். வேலூர் கோட்டை பள்ளிவாசலுக்குள் தொழுகை நடத்த உரிமை கோரி மசூதி நுழைவுப் போராட்டத்தை நடத்தினார்.

முஸ்லிம்களின் செலவில் ஏற்பாடு செய்யப்படும் இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்று விருந்துண்டு செல்லும் பிற அரசியல்வாதிகளைப் போலல்லாமல், முஸ்லிம்களை அழைத்து இப்தார் விருந்து கொடுத்து அசத்தினார்.

முஸ்லிம்களைப் போல் தாமும் நோன்பிருந்து ஒரு நோன்பாளியாக இப்தாரை மேற்கொண்டார். மேலும் தம்மைப் போலவே தமது தொன்டர்களையும் நோன்பு நோற்கச் செய்தார்.

தலைவர்களின் பெயரால் தமிழக அரசு வழங்கிவரும் விருதுகளில் காயிதே மில்லத் பெயரில் ஏன் ஒரு விருது இல்லை எனக் கேள்வி எழுப்பினார்.

அரசுக்கு உறைக்கும் வண்ணம் தமது கட்சியின் சார்பில் காயிதே மில்லத் பெயரில் விருது அறிவித்து அதை அப்துல் நாசர் மதானிக்கும், குணங்குடி ஹனீபாவுக்கும் கொடுத்து அனைவரையும் அதிர வைத்தார்.

தமது கட்சியின் பொருளாளர் பொறுப்பை முகமது யூசுப் என்ற முஸ்லிமுக்கு தந்ததோடு, ஏராளமான முஸ்லிம்களைக் கட்சி நிர்வாகிகளாக்கினார்.

நாடாளுமன்றத்தில் தனது முதல் கன்னிப் பேச்சிலேயே முஸ்லிம்களின் பல்வேறு பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தார்.

பெரியார்தாசன் இஸ்லாத்தைத் தழுவியபோது எல்லா பெரியாரிஸ்டுகளும் அவரை கடுமையாக விமர்சித்த வேளையில், பெரியார்தாசனை ஆரத்தழுவி வாழ்த்தினார், திருமாவளவன். இவ்வாறு, தொடர்ச்சியாக… அதிரடிமேல் அதிரடிகளை அரங்கேற்றி வருகின்றார்.

முஸ்லிம்களின் பிரச்சினைகளைக் கையில் எடுத்து, திருமாவளவன் இவ்வளவு தீவிரமாக இயங்கி வருவது தமிழக அரசியல் சமூகக் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது என்பதே உண்மை.

முஸ்லிம்களின் பிரச்சினைகளை மக்கள் மயப்படுத்துகின்றாரே என்ற வெறுப்பில் இந்துத்துவ சக்திகளும்…

நாம் பேசி வருவதை எல்லாம் இவரும் பேச ஆரம்பித்துவிட்டாரே என்ற பதற்றத்தில் சில இஸ்லாமிய அமைப்புகளும்…

முஸ்லிம்களுக்காகப் பொதுத் தளத்தில் நின்று போராடி நமக்கும் நெருக்கடி தருகின்றாரே என்ற படபடப்பில் அரசியல் கட்சிகளும்…

"தலைவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை" என்ற புறக்கணிப்பில் சில விடுதலைச் சிறுத்தைகளுமாக அந்த அதிர்வுகள் வேறுபடுகின்றன.

இவர்களைத் தாண்டி, பொதுவான இஸ்லாமிய மக்களிடம் திருமாவின் செயல்பாடுகள் வேறுவகையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

"பொதுத்தளத்தில் நமக்காக வீரியமாக குரல் எழுப்புகின்றாரே" என்ற நன்றி உணர்வும், "இஸ்லாம் மார்க்கம் குறித்து இவ்வளவு தெளிவாகப் புரிந்து வைத்திருக்கின்றாரே" என்ற வியப்பும் திருமா மீது முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

எனினும், நன்றி உணர்வும், வியப்பும் இருக்கின்ற அளவுக்கு ஒரு வித தயக்கமும் முஸ்லிம்களிடம் இருக்கிறது என்பதையும் சொல்லியாக வேண்டும்.

“என்னதான் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்காகக் குரல் எழுப்பினாலும், இஸ்லாத்தைப் பற்றி மேடை தோறும் முழங்கினாலும், அடிப்படையில் திருமா ஓர் அரசியல்வாதி ஆயிற்றே! அவரை எந்த அளவுக்கு நம்பலாம்? நம்பி எந்த எல்லை வரை செல்லலாம்? என்று மனதுக்குள் எழுகின்ற கேள்விகளே முஸ்லிம்களிடம் தயக்கமாக வெளிப்படுகிறது.

முஸ்லிம்களின் இத்தகைய மனநிலையைச் சாதாரணமாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. ஏனெனில், திருமாவை நம்பலாமா என்பதில் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் தயக்கம், திருமா மீதான அவ நம்பிக்கையினால் ஏற்பட்டது அல்ல.

அது, காலங்காலமாக அவர்கள் புறக்கணிக்கப்பட்டதனால் ஏற்பட்ட வடு. வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வஞ்சிக்கப்பட்டதன் வெளிப்பாடு. எல்லோராலும் ஏமாற்றப்பட்டதனால் ஏற்பட்டிருக்கும் எச்சரிக்கை உணர்வு.

தங்களை நோக்கி வரும் அரசியல்வாதிகளைக் கண்டு முஸ்லிம்கள் இன்று அச்சப்படுகின்றார்கள் என்றால், அதன் பின்னணியில் ஒரு நூற்றாண்டு கால வரலாறு புதைந்திருக்கிறது.

ஒருவரை நம்புவதும், நம்பிய பின் கழற்றி விடப்படுவதும், களமிறங்கிய பின் கவிழ்க்கப்படுவதுமாக முஸ்லிம்கள் சந்தித்துவரும் துரோக வரலாறு காங்கிரஸ் கட்சியிலிருந்து தொடங்குகிறது.

ஒருங்கிணைந்த இந்தியாவில் முஸ்லிம்களின் அரசியல், சமூக, பொருளாதார நலன்களை இலக்காகக் கொண்டு 1906 ஆம் ஆண்டில் அகில இந்திய முஸ்லிம் லீக் தொடங்கப்பட்டது. முஸ்லிம் லீகை தொடங்கிய தலைவர்களில் பெரும்பாலானோர் காங்கிரஸ் இயக்கத்தைச் சார்ந்தவர்களே.

காங்கிரசின் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை பொய்த்துப்போனதும் முஸ்லிம்களின் நலன் காக்க தனியொரு அமைப்பை நிறுவ வேண்டிய கட்டாயத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.

காங்கிரஸ் முன்னொடியான முஹம்மது அலி ஜின்னா, முஸ்லிம் லீக் தொடங்கப்பட்ட போது அதை எதிர்த்தார். காங்கிரஸ் கட்சியின் மூலம்தான் நாம் நினைத்ததைச் சாதிக்கமுடியும் என்று விடாப்பிடியாக நம்பினார். இறுதியில் அவருக்கும் அவநம்பிக்கையே பரிசாகக் கிடைத்தது. தீவிர மதச்சார்பற்றவாதியாக தன்னை முன்னுறுத்திய அவர், காங்கிரசின் வகுப்புவாதத்தினால், முஸ்லிம் லீக்கில் இணைந்து அதன் தலைவராக உயரும் நிலை வந்தது.

1906-ல் அகில இந்திய அளவில் முஸ்லிம் லீக் தொடங்கப்பட்டபோதும், 1938ல் தான் தமிழகத்தில் அவ்வியக்கம் வேரூன்றியது. அதுவரை இங்குள்ள முஸ்லிம்கள் காங்கிரசே கதி என நம்பியிருந்தனர். அந்த நம்பிக்கைக்கும் வேட்டு வைத்தது காங்கிரஸ் கட்சி.

தென்னகத்தில் வணிகப்பெரு வள்ளலாகவும், காங்கிரசில் செல்வாக்கு செலுத்திய தலைவராகவும் விளங்கிய ஜமால் முஹம்மது சாஹிப், 1936 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண சட்டசபை தேர்தலில் பொதுவேட்பாளராகப் போட்டியிட்டார். காங்கிரசில் மேலோங்கி இருந்த வகுப்புவாதமும், பிரித்தாளும் சூழ்ச்சியும் ஜமால் முஹம்மது சாஹிபை தோற்கடிக்கச் செய்து அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டி.டி. கிருஷ்ணமாச்சாரியை வெற்றிபெற வைத்தது.

காங்கிரசின் இத்தகைய நயவஞ்சகத்தனத்தால் நிலைகுலைந்தார் ஜமால் முஹம்மது சாஹிப் ஜின்னாவின் தலைமையிலான முஸ்லிம் லீக்கில் இணைவது குறித்து, அதுவரைச் சிந்தித்துக் கூட பார்த்திடாத அவர், உடனடியாக காங்கிரசில் இருந்து விலகி, முஸ்லிம் லீகில் இணைந்தார்.

ஜமால் முஹம்மது சாஹிபுக்கு இழைக்கப்பட்ட துரோகம், தீவிர காங்கிரஸ்வாதியான அவரது உறவுக்காரர் ஒருவரின் உள்ளத்தை உலுக்கியது. காங்கிரசின் நம்பிக்கைத் துரோகத்தை உணர்ந்து தெளிந்த அவரும் தன்னை முஸ்லிம் லீகில் இணைத்துக்கொண்டார். அவர்தான் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்.

காங்கிரசை நம்பி முஸ்லிம்கள் இழந்தவற்றைப் பட்டியலிட்டால் அது எதற்குள்ளும் அடங்காமல் நீண்டு செல்லும். பாகிஸ்தான் பிரிவினை முதல் பாபர் மஸ்ஜித் பிரச்சினை வரை இந்தியாவில் முஸ்லிம்கள் சந்தித்த மிகப்பெரும் இழப்புகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சியால் நேர்ந்தவையே.

முஸ்லிம்களுக்கு எப்போதுமே எதிரியைத் தீர்மானிப்பதில் பிரச்சினை இருந்ததில்லை. பா.ஜ.க.வை நம்பி அவர்கள் மோசம் போனதாக வரலாற்றில் ஒரு வரி கூட இல்லை. அவர்களின் பிரச்சினைகள் எல்லாம் நண்பர்களை நம்பியதில் தான் இருக்கிறது.

காங்கிரசின் வகுப்புவாத அரசியலுக்கு மாற்றாக ஒடுக்கப்பட்டோரின் உரிமை அரசியலை முன்னெடுத்து தமிழகத்திலும், கேரளத்திலும் மிகப்பெரும் அரசியல் மாற்றம் ஏற்பட அச்சாணியாய் இருந்தவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்.

காங்கிரசை வீழ்த்தி தமிழகத்தில் திராவிட இயக்க ஆட்சியும், கேரளாவில் இடதுசாரி ஆட்சியும் ஏற்பட வழிவகுத்தவர் அவர். அப்படிப்பட்ட காயிதே மில்லத்தும் கடைசியில் ஏமாற்றப்பட்டார்

தமிழகத்தில் நமது அணி வெற்றிபெற்றால் கூட்டணி ஆட்சி என்று கரம் பற்றிச் சொன்னவர்கள், வென்ற பின்னர் காலை வாரினார்கள். பதவி ஏற்றபின் வந்து கரம் கூப்பினார்கள்.

500 ஆண்டுகள் ஆனாலும் முஸ்லிம் லீகை அழிக்க முடியாது என்று சூளுரைத்தார் காயிதே மில்லத். அந்த மகத்தான தலைவர் உயிர் கொடுத்து வளர்த்த அந்த இயக்கத்தை அவரது மறைவுக்குப் பின் நிர்மூலமாக்கிய பெருமை திராவிடக் கட்சிகளையே சாரும்.

முஸ்லிம் லீகின் இரண்டாம் மட்டத் தலைவர்களிடையே குழு அரசியலை உருவாக்கி, ஈகோவை கூர்தீட்டி, ஒன்றுபட்ட ஓர் இயக்கத்தை உருக்குலைத்தன திராவிடக்கட்சிகள்.

எந்த திராவிடக் கட்சியை காயிதே மில்லத் நண்பன் என்று நம்பினாரோ அந்த திராவிடக் கட்சிதான் அவரது மறைவுக்குப் பின் தனது சுயநலனுக்காக முஸ்லிம் லீகை சூறையாடியது.

இது ஒருபுறமென்றால், தமது கட்சிக்காக காலமெல்லாம் உழைத்த முஸ்லிம்களைத் திராவிடக் கட்சிகள் கைவிடும் அவலம் மறுபுறம் தொடர்கிறது.

தி.மு.க தொடங்கப்பட்டபோது அறிஞர் அண்ணாவுக்குக் களம் தந்தவர்கள் முஸ்லிம்கள். "நபிகள் நாயகம் பிறந்த தின விழா" என்ற பெயரில் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் நடத்தப்பட்ட "மீலாது விழா"க்கள் தான் தி.மு.க.வின் பிரச்சாரக்களம்.

முஸ்லிம்களின் பங்களிப்பைப் பெற்று வளர்ந்த தி.மு.க.வில் முன்னணி தலைவராக இன்று ஒரு முஸ்லிம் கூட இல்லை. தலைவர், செயலாளர், பொருளாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் என நீளும் தலைமை நிர்வாகிகளில் எவரும் முஸ்லிம் இல்லை. சமூக நீதியை வலியிறுத்தும் தி.மு.க.வின் நிர்வாக அமைப்பில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.

ஆயிரம் விளக்கு உசேன், தி.மு.க. முன்னோடிகளில் ஒருவர். மு.க.ஸ்டாலினை அரசியலில் ஒளிரச் செய்வதற்காக தன்னையே உருக்கிக்கொண்ட மெழுகுவர்த்தி அவர். நெருக்கடி நிலை கால சிறைவாசிகளில் ஒருவர். கட்சிக்காக பல தியாகங்களைச் செய்த சிறப்புக்குரியவர்.

அப்படிப்பட்ட உசேனுக்கு 2006 சட்டமன்றத் தேர்தலில் சீட் மறுக்கப்பட்டது. அவரது தொகுதியான திருவல்லிக்கேணியில் கலைஞரின் நண்பர் பேராசிரியர் நாகநாதன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

உசேனுக்கு நேர்ந்த இந்த அவலம், தி.மு.க.வின் வேறு எந்த தலைவருக்காவது நேர்ந்திருக்குமா?

வன்னியர்கள் நிறைந்து வாழும் தொகுதியில் வீரபாண்டி ஆறுமுகத்துக்குப் பதிலாக வேறு ஒரு சமுதாயத்தைச் சார்ந்தவரை வேட்பாளராக நிறுத்த தி.மு.க.வுக்குத் துணிவு வருமா?

காட்பாடியில் துரைமுருகனுக்குப் பதிலாக, துறைமுகம் காஜாவுக்கு சீட் தருமா?

திருவல்லிக்கேணியில் உசேனை மறுத்து, நாகநாதனை நிறுத்துகிறார்கள் என்றால், அது எவ்வளவு பெரிய நம்பிக்கைத் துரோகம்?

எனினும், முஸ்லிம்கள் முன்புபோல் இல்லாமல் தெளிவாக முடிவு எடுத்து நாகநாதனை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க.வின் முஸ்லிம் வேட்பாளர் பதர் சயீதை வெற்றிபெற வைத்தார்கள். தம்மை வஞ்சிப்பவர்களுக்கு வாக்குகள் மூலம் பதிலடி தந்தார்கள். தாங்கள் விழிப்புணர்வு அடைந்து விட்டோம் என்பதை நிரூபித்துக் காட்டினார்கள்.

தி.மு.க.வில் இத்தகைய நிலை என்றால், அ.தி.மு.க. பற்றி சொல்லவே வேண்டியதில்லை. தமது அமைச்சரவையில் ஒரு முஸ்லிமுக்குக் கூட இடம்தராமல் புதிய வரலாறு படைத்தார் ஜெயலலிதா. முஸ்லிம்களுக்கு எதிரான அவரது பாசிசப் போக்கை விவரிக்க முடியாத அளவுக்கு அது நீளமானது; ஆழமானது.

தமிழக அரசியல் களத்தில் சமூகப் நீதிப் போராட்டத்தின் மூலம் அரசியல் கட்சியாய் பரிணமித்த பாட்டாளி மக்கள் கட்சியாலும் முஸ்லிம்களுக்குப் படிப்பினைகளே அதிகம். பா.ம.க.வின் வளர்ச்சிக்காக ஊர்தோறும் அலைந்து மேடைகள் தோறும் முழங்கியவர் போராளி பழனிபாபா.

“டாக்டர் இராமதாசை நம்பினால் கைவிடப்பட மாட்டோம்” என்று சொல்லி முஸ்லிம்களிடம் நம்பிக்கை விதைகளைத் தூவியவர் அவர். இறுதியில் அவரே அவநம்பிக்கை அடையும் அளவுக்கு இராமதாசின் சுயமுகம் வெளிப்பட்டது.

தி.மு.க.வின் முன்னணிப் பொறுப்புகளில் முஸ்லிம்கள் இல்லை என்று குறிப்பிட்டிருந்தேன். அந்த வகையில் பார்க்கும் போது தி.மு.க அளவுக்கு இராமதாஸ் மோசமானவரில்லை. கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் அவர் சமூக நீதி அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிவிடுவார். ஆனால் தேர்தல் நேரங்களில் வேட்பாளர்களை நிறுத்தும் போது மட்டும் சமூக நீதிக் கொள்கையை மறந்து விடுவார். இதுவரை எந்த தேர்தலிலும் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளருக்குக் கூட அவர் வாய்ப்பளித்ததில்லை.

இடதுசாரிகளைப் பொறுத்தவரை அவர்கள் முஸ்லிம் லீகை மதவாதக் கட்சி என்றும் சொல்வார்கள். அதே முஸ்லிம் லீக்கோடு கூட்டணியும் வைத்துக் கொள்வார்கள்.

கேரளாவில் இளம்தலைமுறை தலைவரான அப்துல் நாசர் மதானியின் மக்கள் ஜனநாயகக் கட்சியோடு 2009 தேர்தலில் கம்யூனிஸ்டுகள் கூட்டணி அமைத்தனர். தேர்தலில் தோல்வியடைந்த உடன், தமது கூட்டணி சகாவான மதானியைத் தீவிரவாதியாகச் சித்தரிக்கும் மலிவான அரசியலை கம்யூனிஸ்டுகள் கையில் எடுத்தனர். பொய் வழக்குப் போட்டு மதானியின் மனைவியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் நீதிமன்றம் தலையிட்டு அரசின் பழிவாங்கும் போக்கை அம்பலப்படுத்தி மதானியின் மனைவியை விடுதலை செய்தது.

கம்யூனிஸ்டுகளை நம்பிய மதானி ரணப்பட்டார்.

பா.ம.க.வை நம்பிய பழனிபாபா மனம் புண்பட்டார்.

தி.மு.க.வை நம்பிய காயிதே மில்லத் ஏமாற்றப்பட்டார்.

காங்கிரஸை நம்பிய ஜமால் முஹம்மது சாஹிப் தோற்கடிக்கப்பட்டார்.

நாம் எப்படி திருமாவளவனை நம்புவது?

இதுதான் இன்றைய தமிழக முஸ்லிம்களின் தயக்கத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் ஒற்றைக் கேள்வி.

திருமாவிடம் விடை இருக்கிறதா?


[சமநிலைச் சமுதாயம், ஜூலை-2010 இதழில் ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரை]
ஆளூர் ஷாநவாஸ் எழுப்பியிருந்த கேள்விக்கு திருமாவளவன் பதில்!
திருமாவளவனின் முஸ்லிம் அரசியல் மாற்றமா ஏமாற்றமா என்றத் தலைப்பில், சமநிலைச் சமுதாயம் ஜூலை இதழில், ஆளூர் ஷாநவாஸ் எழுதியிருந்த கட்டுரை அரசியல் சமூக அரங்கில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முஸ்லிம்களின் உள்ளுணர்வுகளை அப்படியே உள்ளது உள்ளபடி படம் பிடித்துக் காட்டிய அந்தக் கட்டுரை வெளியான நாள் முதல் இன்று வரை அது குறித்த உரையாடல் கூர்மையாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பல தரப்பினரும் சமநிலைச் சமுதாயத்தையும், கட்டுரையாளரையும் தொடர்பு கொண்டு தங்கள் கருத்துக்களையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வந்தனர்.

திருமாவின் முஸ்லிம் அரசியல் குறித்த அந்தக் கட்டுரையை திருமாவளவன் படித்தாரா? அதற்கு அவர் பதில் சொல்வாரா? அல்லது மற்ற அரசியல் வாதிகளைப் போல சிக்கலான விசயங்களுக்கு பதிலளிக்காமல் மெளனம் காப்பாரா? என்றெல்லாம் பல்வேறு கேள்விகளும் சமுதாய மக்களிடம் எழுந்தது.

இந்நிலையில்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னையில் 05 -09 -2010 அன்று நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய தோழர் திருமாவளவன், தமது முஸ்லிம் அரசியல் குறித்து எழுப்பப்படும் சந்தேகங்களையும், கேள்விகளையும் தான் வரவேற்பதாகவும், அதற்கு செயல்பூர்வமாக விடை அளிக்க இருப்பதாகவும் கூறினார். முஸ்லிம்களும் தலித்துகளும் இணைந்து அரசியல் எழுச்சி அடைவதற்கான தொலை நோக்குத் திட்டங்களையும் அவர் அறிவித்தார்.
திருமாவின் இப்தார் உரை முழுவதும்,சமநிலைச் சமுதாயத்தில் வெளியான கட்டுரைக்கான பதிலுரையாக இருந்தது. ஆளூர் ஷாநவாஸ் எழுப்பியிருந்த கேள்விக்கு தமது பதில் இந்த உரைதான் என்று திருமாவும் அறிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு, தலித் - இஸ்லாமியர் அரசியல் கூட்டணி.. திருமா அறிவிப்பு !

இந்த இனிய இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிற இஸ்லாமியப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் எனது இனிய ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், இந்த இப்தார் விருந்து கொடுக்கப்பட்டு வருகிறது. தலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஒரு உன்னதமான சமூக உறவு வலுப்பெறவும், அதன் மூலம் அரசியல் அரங்கில் ஒரு நிரந்தரக் கூட்டணியை இரண்டு சமூகங்களும் இணைந்து உருவாக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடனும்,இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம்.

திருமாவளவன் எதற்காக இதையெல்லாம் செய்கிறார்? வழக்கமாக நடைபெறும் இப்தார் நாடகங்களைப் போல இதுவும் ஒரு நாடகமா? என்கிற ஐயம் இஸ்லாமிய சமூக மக்களிடம் உருவாகி இருக்கலாம். அல்லது இனி உருவாகலாம். இது தொடர்பாக ஆளூர் ஷாநவாஸ் கூட ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

'திராவிடக் கட்சிகளிடம் முஸ்லிம்கள் பட்ட காயங்களும் அதனால் ஏற்பட்ட வடுக்களும் இன்னும் ஆறவில்லை; இந்த நிலையில் திருமா வளவனும் இங்கே தொப்பி போட்டுக் கொண்டு வருகின்றாரே என்ற ஐயம் பலருக்கும் இங்கு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு திருமாவளவன் பதில் சொல்வாரா' என்று அவர் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தார். இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வதை விட, நான் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன் தோழர்களே..

நீங்கள் என்னை நோக்கி என்ன கேள்வி எழுப்பினாலும், எவ்வளவு சந்தேகமடைந்தாலும் அல்லது பழி சுமத்தினாலும் நான் அதைப் பற்றி கவலைப் படாமல் சகிப்புத்தன்மையோடு இருந்து, தலித்துகளும் முஸ்லிம்களும் இணைந்து ஒரு அரசியல் சக்தியாய் எழுச்சி பெற உறுதியாகப் பணியாற்றுவேன் என்பதை இந்த வேளையில், விடையாகச் சொல்லிக் கொள்கிறேன்.

திருமாவளவன் இப்படி எல்லாம் தொப்பி போட்டுக் கொண்டு வந்து, விருந்து உண்ணுவது ஏன் என்பது ஒரு இயல்பானக் கேள்வி தான்.அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை,எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

நான் எதற்காக நோன்பு இருக்க வேண்டும்? நீங்கள் முப்பது நாட்கள் நோன்பிருக்கின்றீர்கள், முப்பது நாட்களும் இல்லாவிட்டாலும், ஒரு மூன்று நாளாவது நோன்பிருக்க வேண்டுமே என்ற உள்ளுணர்வின் அடிப்படையில், நானே விரும்பி அறிவித்து கடந்த ஐந்து ஆண்டுகளாக அதை கடைபிடித்தும் வருகிறேன் தோழர்களே.

வாழ்விலும் இருக்க வேண்டும், தாழ்விலும் இருக்க வேண்டும் என்பதை.. வார்த்தையில் மட்டும் இருக்காமல் செயலிலும் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் உள்ளவன் நான். இப்தாரிலே மட்டும் இருக்க வேண்டும் சகரிலே இருக்கக் கூடாது என்றில்லாமல், இப்தாரிலும் இருப்பான் திருமாவளவன் சகரிலும் இருப்பான் திருமாவளவன், சகரிலும் இருந்து விட்டு இப்தாரிலும் இருந்து விட்டு இடையில் நோன்பில் மட்டும் இல்லாமல் இருக்கக் கூடாது. நோன்பிலும் இருப்பான் திருமாவளவன் என்பதை உறுதிப் படுத்தக் கூடிய வகையில் தான் நான் செயல் பட்டு வருகிறேன்.

இப்படி நான் செயல் படுவதும்,முஸ்லிம்களின் பிரச்சனைகளை கையில் எடுத்து நான் போராடுவதும், அரசியல் ஆதாயத்துக்காக இருக்குமோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.அதற்கு விடை சொல்ல விரும்புகிறேன்.. ஆம், அரசியல் ஆதாயத்திற்காகத்தான். எனக்கு மட்டுமல்ல நமக்கு, அந்த அரசியல் ஆதாயம் நமக்கு..

நமக்கு அரசியல் ஆதாயம் வேண்டும். நாம் எந்த ஆதாயமும் கருதாமல் எல்லோரையும் தோளில் தூக்கிச் சுமக்கிறோம். தலித்துகளும் அப்படித்தான் முஸ்லிம்களும் அப்படித்தான். பிற சிறுபான்மை மக்களும் அப்படித்தான். ஆக அரசியல் ஆதாயம் கருதாமல் இவ்வளவு காலம் உழைத்தது போதும். இனி நாம் அரசியல் ஆதாயம் கருத வேண்டும். நமக்கு அதிகாரம் வேண்டும்.

ஆளும் வர்க்கம், ஆளப்படும் வர்க்கம் என்பதுதான் உலகம் முழுவதும் இருக்கிற இரண்டு வர்க்கம். ஆளப்படுவோர் எப்போதும் அடக்கப்படுவார்கள். ஆளப்படுவோர் எப்போதும் சுரண்டப்படுவார்கள், ஆளப்படுவோர் எப்போதும் பழிசுமத்தப்படுவார்கள்; இழிவுபடுத்தப்படுவார்கள், நசுக்கப்படுவார்கள். ஆள்வோர் எப்போதும் தமது ஆளுமையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் ஏவிக் கொண்டே இருப்பார்கள்.
சர்வதேச அரங்கில் தான் மட்டுமே 'தாதா' வாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்ற அமெரிக்கா, அதற்கான வேலைகளைச் செய்வதிலேயே எப்போதும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றது. இந்தியாவுக்கு யார் பிரதமர் என்று நீயும் நானும் கவலைப்படவில்லை, அமெரிக்காகாரன் கவலைப்படுகிறான். இலங்கையிலும் பாகிஸ்தானிலும் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதில் அந்தந்த நாட்டு மக்களை விட அமெரிக்கா காரனுக்குத்தான் அதிக கவலை..ஏன் அவனுக்கு அந்தக் கவலை? அவனது ஆளுமையையும், சர்வதேச 'தாதா' தனத்தையும் நிலைநிறுத்திக் கொள்ள அவனுடைய ஆதரவாளர்கள் உலக நாடுகளை ஆள வேண்டும் என்று விரும்புகிறான்.உலகம் முழுவதும் தனக்கு வேண்டியவர்களின் ஆட்சி நடைபெறும் போதுதான் தனது ஆதிக்கம் நிலைபெறும் என்று அவன் சிந்திக்கிறான்.

எதற்கு இதை நான் சொல்கிறேன் என்று சொன்னால்.., யார் ஒருவர் அல்லது எந்த ஒரு சமூகம் தான் ஆளப்படுவதில் இருந்து மீளப்படுவதை விரும்புகிறார்களோ, ஒடுக்கப்படுவதிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று எண்ணுகிறார்களோ, சுரண்டலில் இருந்தும் ஆதிக்கத்திலிருந்தும் தன்னைத் தற்காத்துக்கொள்ளத் துடிக்கிறார்களோ, அவர்கள் அதிகாரத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற தேடல் வேண்டும்.

இறைவனிடத்திலே நாம் அமைதியைத் தேடுகின்றோம். ஆனால் 'இறை' என்கிற அரசிடம் நமக்கான அதிகாரத்தை இன்னும் நாம் தேடவில்லை. ஆக, அதிகாரத்தைப் பற்றிய சிந்தனை இல்லாமல், அதிகாரத்தைப் பற்றிய தேடல் இல்லாமல், அதிகாரத்தைப் பற்றிய வேட்கை இல்லாமல், நம்மீதான அடக்குமுறைகளில் இருந்தும் ஒடுக்குமுறைகளில் இருந்தும் நம்மால் மீளவே முடியாது.

அந்த அடிப்படையில் தான் தலித் மக்களிடத்திலே, புரட்சியாளர் அம்பேத்கர், ஆட்சி அதிகாரத்தைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கினார்.அந்த விழிப்புணர்வு இன்றைக்கு தலித் மக்களிடத்தில் வளர்ச்சியடைந்திருக்கிறது என்பதன் அடையாளமாகத்தான் விடுதலைச் சிறுத்தைகள் இங்கே எழுந்து வந்திருக்கிறது. இதை நான் நெஞ்சுயர்த்திச் சொல்கிறேன். அம்பேத்கரின் அந்தக் கொள்கை வழியில் தான் தலித் மக்களை நாங்கள் அமைப்பாக்கி வருகிறோம்..

இன்றைக்கு திருமாவளவன் மீது முஸ்லிம் சமூகத்தினர் சந்தேகப்படுகிறார்கள் என்று சொன்னால், அதை எண்ணி நான் வருத்தப்படவில்லை, மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் சந்தேகப்படுவது என்றைக்குத் தொடங்கி விட்டதோ அப்போதே விழிப்புணர்ச்சியும் தொடங்கி விட்டது என்று பொருள். நம்மைப் பிறர் ஏய்க்கிறார்களா இல்லையா என்பதைப் பற்றி விழிப்புணர்வே இல்லை என்றால் நமக்கு சந்தேகமே வராது. எங்கே சந்தேகம் வருகிறதோ அங்கே விழிப்புணர்வு வந்துவிட்டது என்று பொருள். ஆக இஸ்லாமியர்கள் விழிப்படைந்து விட்டார்கள். தமிழ்நாட்டு இஸ்லாமியச் சமூகம் விழிப்படைந்து விட்டது. கடந்த கால வடுக்களைத் தடவிப் பார்த்து, தம்முடைய இயலாமையையும் தமது தோல்விகளையும் தமது ஏமாற்றங்களையும் எடை போட்டுப் பார்க்கத் தொடங்கியிருக்கிறது.

ஆக இந்தச் சூழ்நிலையில் இப்போது நான் சொல்கிறேன்...
2016 ஆம் ஆண்டு நடைபெற இருக்கிற சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இப்போதே நான் அறைகூவல் விடுக்கிறேன். அரசியல் கூட்டணிக்கு அழைக்கிறேன்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகமே, தவ்ஹீத் ஜமாஅத் இயக்கமே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கமே, தேசிய லீக் இயக்கமே, பாப்புலர் பிரன்ட் எனப்படும் மக்கள் முன்னணியே, இன்னும் என்னென்ன இஸ்லாமிய அமைப்புகள் இருக்கின்றனவோ அத்தனை அமைப்புகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் அழைப்பு விடுக்கிறேன்.

2016 ஆம் ஆண்டு தலித் - முஸ்லிம் கூட்டணி தமிழகத்தில் மலர வேண்டும். ஆட்சி அதிகாரத்தை நோக்கிய நமது பயணம் வெற்றியடைய வேண்டும். நமக்கான அரசியல் அதிகாரம் தேவை. அதை அடையாமல் நம்மீதான ஒடுக்குமுறைகளை நாம் தடுத்து நிறுத்த முடியாது.

இஸ்லாம் என்பது ஒரு வாழ்க்கை முறை.ஆனால் அது மதம் என்கிற ஒரு மிகப்பெரிய ஆளுமை மிக்க அமைப்பாக மாறி இருக்கிறது. இதற்கு அடிப்படையாக நம்முடைய நபிகளார் விளங்குகின்றார். தமது நாற்பது வயதுக்குப் பின்னர் தான் நபிகளார் பொதுப் போதனைகளைத் தொடங்கி இருக்கிறார். மிகக் குறுகிய வட்டத்தில் தமது நண்பர்களோடு முதலில் கருத்துக்களைப் பரிமாறி இருக்கிறார்.

பொதுப் போதனைகளில் அவர் இறங்கிய உடனேயே அன்றைய ஆட்சியாளர்கள் அதைக் கடுமையாக எதிர்த்தனர். நபிகளாரின் உயிருக்கு அவர்கள் உலை வைக்கத் தொடங்கினர். அப்போது அவர் தான் பிறந்த மண்ணை விட்டு மதீனாவை நோக்கிப் போனார். மக்காவிலிருந்து நபிகளார் மதீனாவை நோக்கிப் போனது 'ஹிஜ்ரா' என்றழைக்கப் படுகிறது. அது ஒரு புனிதப் பயணம் என்றழைக்கப்படுகிறது.

ஆனால் அவர் எதற்காக அந்தப் பயணத்தை மேற்கொண்டார்? தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவும், தன் உயிர் கொள்கையைக் காப்பாற்றிக் கொள்ளவும் தான் அவர் அந்தப் பயணத்தை மேற்கொண்டார். அதுவரையில் மதீனாவுக்கு யாத்ரிப் என்றுதான் பெயர் இருந்திருக்கிறது. நபிகளார் அங்கு சென்றபிறகு, இவர் மதீனத்து நபி, ஆகவே நபிகளின் பட்டணம் என்று பெயர் மாற்றிக் கொண்டார்கள்.

அங்கு தான் நபிகளாருக்கு ஆதரவாளர்களின் எண்ணிக்கைப் பெருகியது. அவரது போதனைகளைக் கேட்கும் கூட்டம் அதிகரித்தது. அங்கு தான் நபிகளார் ஒரு அமைப்பாக திரட்சியுற்றார். தனி நபராக இருந்தவர் மக்காவிலே ஒரு சிறு குழுவாக மாறினார். பின்பு மதீனாவிலே ஒரு அமைப்பாக வளர்ந்தார். அந்த அமைப்பு ஆளும் வர்க்கத்தை எதிர்த்துப் போரிடும் படை வலிமை உள்ளதாக மாறியது.அந்தப் படை வலிமையோடு மக்காவிற்குத் திரும்புகிறார். மக்காவில் ஆளும் வர்க்கத்தோடு மிகப்பெரும் யுத்தத்தை நடத்துகிறார்..அதன் பிறகு தான் அது ஒரு இயக்கமாக மாறியது.

ஆக, நபிகளாரிடம் இருந்த அந்த ஆளுமைப் பண்பு, அந்தத் தலைமைப் பண்பு, அந்தப் போர்க்குணம் தான் ஒரு அமைப்பாக மாறி ஒரு இயக்கமாக மாறி இன்று மிகப்பெரிய நிறுவனமாக உலகையே வியாபித்து நிற்கிறது. இன்றைக்கு உலகத்தில் எத்தனையோ மதங்கள் இருந்தாலும், இஸ்லாத்தைப் போல, கட்டுப்பாடும் ஒழுங்கும் உள்ள ஒரு மதத்தை எங்கும் அடையாளம் காட்ட முடியாது. நான் இஸ்லாமியர்கள் மத்தியில் பேசுகிறேன் என்பதற்காக உணர்ச்சிவயப்பட்டு இதை சொல்லவில்லை.

மக்காவிலே கோடிக்கணக்கான மக்கள் கூடுகிற அந்த இடத்திலே, எத்தனைக் கோடிப் பேர் திரண்டாலும் ஒருவருக்கொருவர் இடித்துக் கொள்ளாமல், முட்டிக் கொள்ளாமல், அவர்கள் இறைவனை வழிபடுவதில் சரிசமமாக இருந்து மண்டியிட்டுத் தொழுகை நடத்துவதை ஒரு மிகப் பெரிய ஓவியமாக நம்மால் பார்க்க முடிகிறது. வேறு எந்த மார்க்கத்திலும், மதத்திலும் அந்தக் கட்டுப்பாட்டை பார்க்க முடியவில்லை.அப்படிப்பட்ட ஒரு ஒழுக்கத்தையும், நல்ல தலைமைப் பண்பையும் கற்றுத் தருகின்ற ஒரு மிகப்பெரிய மத நிறுவனத்தை ஒரு தலைவரால் கட்டியமைக்க முடிந்தது என்று சொன்னால்., அதற்கு எவ்வளவு பெரிய அர்பணிப்பும் போர்க்குணமும் தியாக உள்ளமும் இருந்திருக்க வேண்டும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அப்படிப்பட்ட நபிகளாரைப் போல வியூகமும் தொலைநோக்கும் கொண்ட தலைவர்கள் நமக்குத் தேவை. அவரை நான் இறைவனின் தூதர் என்று பார்ப்பதை விட, அரசியல் தளத்தில் நின்று கொண்டு, ஒரு மகத்தான அரசியல் தலைவராகப் பார்க்கிறேன்.அதைப் போல தலைமைப் பண்புள்ளத் தலைவர்கள் இன்றைக்கு இஸ்லாமிய சமூகத்திற்குத் தேவை.

தலைமைப் பண்புள்ளத் தலைவர்கள் வருகின்ற போது, எத்தனைக் குழுக்கள் இருந்தாலும் அவை ஒற்றை வடிவமாய், ஒற்றை முகமாய் இருக்கும். தலைமைப் பண்புள்ள தலைவர்கள் உருவாகாத வரையில் குழுக்கள் மேலும் மேலும் பல குழுக்களாகச் சிதறும். ஒற்றுமை பாழ்பட்டு விடும்.

ஆக, இதையெல்லாம் மனதில் கொண்டு நாம் நமது பயணத்தை திட்டமிட வேண்டும். இன்றைக்கு விதைத்து நாளைக்கே அறுவடை செய்கிற அவசரம் நமக்கு வேண்டாம். 2016 வரை நாம் உழைப்போம், நமக்காகத் திட்டமிட்டு உழைப்போம், அரசியல் சக்தியாய் எழுச்சி பெறுவோம். அதற்கான முன்முயற்சிகளை மேற்கொள்வோம்.

இதைத் தவிர வேறு எந்த உள்நோக்கத்த்தோடும் திருமாவளவன் உங்களோடு அமரவில்லை; எந்த எதிர்பார்ப்போடும் திருமாவளவன் உங்களோடு உரையாடவில்லை. 2016 தலித் - இஸ்லாமியர் ஆண்டு என்கிற முடிவை நான் எடுக்கிற போது, எந்த அரசியல் கட்சித் தலைவர்களோடும் சேர்ந்து எடுக்கவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருக்கக் கூடிய இஸ்லாமியத் தோழர்களோடு சேர்ந்துதான் இந்த முடிவை நான் எடுத்தேன்.

முஸ்லிம்களை நோக்கிய எனது பயணத்திற்கும், அரசியலுக்கும் சம்மந்தம் இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால் ஒரு சமூகத்தின் விடுதலை அரசியல் களத்தோடு தொடர்புடையது. அதை நாம் மறந்து விடக் கூடாது. மதமும் அரசும் இரட்டை விழிகள் மாதிரி.இரண்டு விழிகளால் ஒற்றை உருவத்தைப் பார்ப்பது போல மதமும், அரசும் சேர்ந்து தான் மக்களை வழிநடத்துகிறது. அரசு என்பது அதிகாரத்தோடு தொடர்புடையது. அதிகாரம் என்பது யாருக்கோ சில நபர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. குறிப்பிட்ட சில இனத்துக்குச் சொந்தமானதும் அல்ல. உன்னாலும் என்னாலும் உருவானது தான் அதிகாரம் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

ஆகவே, மண் ஒரு சொத்து என்பதைப் போல,கட்டிடம் ஒரு சொத்து என்பதைப் போல, வண்டி வாகனம் ஒரு சொத்து என்பதைப் போல, செல்வம் ஒரு சொத்து என்பதைப் போல, பிள்ளைகள் ஒரு சொத்து என்பதைப் போல அதிகாரம் ஒரு சொத்து. இந்த மண்ணில் எனக்கு ஒரு பங்கு உண்டு என்பதைப் போல, இந்த நீரில் எனக்கு ஒரு பங்கு உண்டு என்பதைப் போல அதிகாரத்திலும் எனக்குப் பங்கு உண்டு.

ராஜீவ் காந்தி குடும்பத்துக்கு மட்டுமே இந்திய அதிகாரம் சொந்தமானதில்லை. இதில் திருமாவளவனுக்கும் பங்குண்டு, இந்த அதிகாரத்தில் யூசுபுக்கும் பங்கு உண்டு.

நான் இந்த மண்ணில் குடிமகனாக இருக்கிற காரணத்தினால், நான் ஓட்டுப் போடுகிற உரிமை பெற்றிருக்கிற காரணத்தினால், நாம் சேர்ந்து இந்த நாட்டையும், அதன் சட்ட திட்டங்களையும் உருவாக்கி இருக்கிற காரணத்தினால், நாம் இந்தச் சட்டங்களை மதிக்கிற காரணத்தினால் உருவானது தான் அரசு, உருவானது தான் அதிகாரம். ஆகவே அந்த அதிகாரத்தில் எனக்கும் பங்குண்டு, உனக்கும் பங்குண்டு.

இந்த எனக்கும் உனக்கும் என்கிற சொல்லுக்கு இடையில் உள்ள சுவரை உடைத்து விட்டு, நமக்கு என்ற 
ஒற்றை சொல்லால் அழைப்போம். நன்றி

Sunday, January 11, 2009

மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்?வெளிவரும் நிஜங்கள்!!! பாகம் 5

ஆசிரியர்: இங்கு மொத்தம் எத்தனை குடும்பங்கள் மதம் மாறியிருக்கு?

உமர்: மொத்தம் 300 குடும்பத்தில் 210 குடும்பங்கள் மதம் மாறியிருக்காங்க.

ஆசிரியர்: ஒரு குடும்பத்துக்கு எத்தனை பேர்?

உமர்: சராசரி 5 பேரு.

ஆசிரியர்: அப்ப ஒரு ஆயிரம் பேர் இருக்கும்.

உமர்: ஆமாம்!

முக்கியமானவரை மறப்பதா?

ஆசிரியர்: இப்ப சாதாரணமா தீண்டாமையினால தொந்தரவு, சுயமரியாதையில்லாம நடத்தப்படுவது, நமக்கு படிச்சும் கவுரவம் இல்லை – இது மாதிரி தொந்தரவு இருக்குது.

இந்து மதத்தில் தீண்டாமையெல்லாம் அனுசரிக்கிறது இல்லைன்னு சங்கராச்சாரி சொல்றாரே?. மதாச்சாரியார்கள் அப்படி சொல்லியும் நடைமுறையில் இங்க இருக்கறவங்க கடைபிடிக்கறதில்லையேன்னாலும் - நமக்கு சங்கராச்சாரி தானே முக்கியம்! அவுங்கள விட்டுட்டு எப்படி போறதுன்னு நீங்க நினைக்கலியா?

உமர்: இந்து மதம்னு ஒண்ணு இருக்கத்தான் செய்யுது; இல்லேன்னு சொல்லல. இங்கே தாழ்த்தப்பட்டவங்களுக்கு எந்தப் பயனும் கிடையாது. தாழ்த்தப்பட்டவன் இந்துவா இருக்கிறதில அர்த்தமேயில்லை.

ஏன்னா, அவங்க ‘சாதி இந்து’ன்னு வைச்சுக்கிறாங்களே தவிர ‘அரிஜன்’ என்பதை அப்படியே தான் வைச்சிருக்காங்க. அதை மாத்தலியே.

அவங்க அன்னைலேயிருந்து இன்னைய வரைக்கும் ஒரு ‘அரிஜனை’ இந்துவா ஏத்துகிறதில்ல.

ஆக முடியாது

இவன் தான் அவங்களோட போயிடுறானே தவிர இவனை அவுங்க ஒத்துக்கறதில்ல. இங்கே கலவரம் நடக்குதுன்னா சாதி ‘இந்து’க்களுக்கும் ‘அரிஜனனு’க்கும் தான் சண்டைன்னு சொல்றானே தவிர இந்துக்கும் இந்துக்கும் சண்டேன்னு சொல்றதில்ல. அப்படியிருக்கும் போது எப்படி ‘அரிஜன்’ இந்து ஆக முடியும்?

ஆசிரியர்: சமஸ்கிருதத்தில் சாதி இந்துக்களுக்கு வர்ணஸ்தர்கள் மற்றவர்களுக்கு ஈழவர்களையும் சேர்த்து அவர்ணஸ்தர்கள் என்று சொல்கிறார்கள். அந்த அவர்ணஸ்தர்களுக்கும் கீழே எல்லோருக்கும் கீழே கடைசியாக தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலை வைத்துள்ளனர்.

இப்ப சங்கராச்சாரியார் துக்ளக் பேட்டி மற்ற செய்திகளை எல்லாம் பார்த்து விட்டு தலைவர்கள்லாம் வந்தாங்களே, உங்களை வந்து பாக்கலியா?

உமர்: சந்திக்கலிங்க.

ஆசிரியர்: வாஜ்பேயி எல்லாம் வந்தாரே, வந்து பாக்கலியா? நியாயமாக உங்கள தானே வந்து சந்திக்க வேண்டும்?

உமர்: அவரு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தோட போனாரே தவிர எங்களை வந்து சந்திக்கல. மதம் மாறாதவர்களைக் கூட போய்ச் சந்திக்கல. ஒரு கூட்டத்தைப் போட்டாங்க! இஸ்லாம் மதத்தைப் பத்தி தாக்கித் தாக்கி பேசினாங்க.

‘மதம் மாறாதே’ ‘மதம் மாறாதே’!

‘அரபு நாட்டுப் பணத்துக்கு அடிமையாகாதே’

அப்படீன்னு இன்னும் மோசமான வார்த்தைகளால திட்டினாங்க. அப்புறம் முடிச்சுட்டு போயிட்டாங்க.

ஆசிரியர்: மற்றவங்க யாரும் சந்திக்கலயா?

உமர்: வாஜ்பேயை நாங்களா போய் சந்திச்சோம். “இந்த மதக் கொடுமையினால் தான் நாங்க மதம் மாறினோம். இருக்கிறவங்களுக்காவது கொடுமையில்லாம நடத்துவீங்களான்னு? கேட்டோம்.

ஆசிரியர்: அதுக்கு என்ன சொன்னாரு?

உமர்: அவரு உடனே பேச்சை முடிச்சிக்கிட்டு போயிட்டாரு. போயி அங்க என்ன சொல்லி விட்டாருன்னா, “இஸ்லாம் மதத்துக்கு போனவங்கள்லாம் தாய் மதத்துக்குத் திரும்பப் போறாங்கன்னு” சொல்லிட்டுப் போயிட்டார்.

ஆசிரியர்: சரி இந்து மதத்தில் கொடுமையிருக்கிறதினாலே மதம் மாறினீர்கள். எத்தனையோ மதங்கள் இருக்க ஏன் இஸ்லாம் மதத்துக்கு மாறினீர்கள்?

உமர்: இந்து மதத்தை விட்டா கிறிஸ்தவ மதம் இருக்கிறது. நாங்கள்லாம் இஸ்லாம் மதத்துக்கு மாறனும்கிறதுக்கு முன்னாடி ஒரு 50 குடும்பங்கள் கிறிஸ்தவர்களாக மாறினார்கள்.

கிறிஸ்தவ மதம் மாறினால்….

ஆசிரியர்: எத்தனை வருஷத்திற்கு முன்பு?

உமர்: சுமார் 20 வருஷத்திற்கு முன்னாடி, அங்க தாழ்த்தப்பட்டவன் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவனாக இருக்கிறானே தவிர தாழ்த்தப்பட்டவன் நாடார் கிறிஸ்தவனுக்கு பெண் கொடுப்பதே நாடார் கிறிஸ்தவன். தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவனுக்குப் பெண் கொடுப்பதோ இல்லை. அங்க சாதி அப்படியே இருக்கிறது. ஆனால் இஸ்லாம் மதம் அப்படி இல்லை. யார் ஒருவன் அல்லாவைத் தொழுகிறானோ அவன் எல்லாமே முஸ்லிம் தான். அங்க தீண்டாதவன் என்ற வித்தியாசம் கிடையாது.

அபூ சுமையா

Saturday, January 10, 2009

மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்?வெளிவரும் நிஜங்கள்!!! பாகம் 4

மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்?
(ஒலிநாடா பதிவிலிருந்து தரப்படுகிறது)

இந்து மதத்திலிருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ள உமர்செரீப் கூறியதாவது:-

உமர்செரீப்:

இங்கே வந்த மணியன் கேட்டார், “நீங்க பெரியார் கொள்கைக்காரங்கறீங்க; இந்த மதத்திலும் சாமி கும்பிட வேண்டியது தானே இருக்கிறது? பின் ஏன் மதம் மாறினீங்கன்னு கேட்டார்.” நாங்க சொன்னோம், “இந்து மதத்திலே சாதி இருக்குது. இங்க சாதி வித்தியாசம் இல்லை. எனக்கு கடவுள் மறுப்பு கொள்கை இருக்கலாம். ஆனல், எல்ல இடத்திலும் உன் சாதி என்னன்னு தானே கேக்கறாங்க” என்று சொன்னேன்!

ஆசிரியர்: அதுக்கு மணியன் என்ன சொன்னார்?

உமர்செரீப்: அதுக்கு அவர் ஒண்ணும் சொல்லல்லே.

ஆசிரியர்: உங்களுக்கு இந்த எண்ணம் திடீர்னு தோணுச்சா? இல்ல கொஞ்ச நாளாவே இருந்ததா?

20 வருடம் முன்பே

உமர்செரீப்:

20 வருஷத்துக்கு முன் எங்க தகப்பனார் அப்படி மாறணும்னு ஏற்பாடு பண்ணினார். ஆனா சில பெரியவங்கள்லாம் தடுத்து நிறுத்திட்டாங்க.
இப்ப நாங்கள்லாம் படிச்சவங்க. 10, 20 பேர் செர்ந்து இதிலேயே இருப்பதா? அல்லது ஒரு 50 வருஷம் கழித்தாவது விமோசனம் உண்டா அப்படீன்னு யோசிச்சோம். இன்னும் 50 வருஷம் கழிச்சும் நமக்கு தாழ்த்தப்பட்டவங்கற முத்திரை மறையாது என்று உணர்ந்த பிறகு தான் மதம் மாற முடிவு செய்தோம்.
ஆசிரிய: நீங்க படிச்சவங்கன்னு சொன்னீங்க; அதுவரைக்கும் படிச்சிருக்கீங்க?
உமர்செரீப்: பி.ஏ. வரை படிச்சிருக்கேன்.

ஆசிரியர்: எந்தக் காலேஜில்?

உமர்செரீப்: ஸ்ரீவைகுண்டம் காலேஜ்ல.

ஆசிரியர்: சரி, இவ்வளவு படிச்சிருக்கீங்க. உங்களுக்கு சலுகைகள்லாம் கிடைச்சிருக்குமே!

உமர்செரீப்: ஆமா கிடைச்சது.

ஆசிரியர்: உங்களுக்கு தாழ்த்தப்பட்டவங்க அப்படீங்கறதனாலதான் இந்த சலுகையெல்லாம் கிடைச்சது. அப்போ இந்தச் சலுகையெல்லாம் கிடைக்காதுன்னு தெரிஞ்சு தானே மாறுனீங்க?

உமர்செரீப்: ஆமா! தெரிஞ்சு தான் மாறுனோம். சலுகை கிடைக்காட்டிலும் பரவாயில்லை தாழ்த்தப்ப்ட்டவன் என்கிற முத்திரையில்லாம இருந்தால் போதும் என்று மாறினோம்.

இப்போது ஏன் இந்த முடிவு?

ஆசிரியர்: இதுக்கு முன்னால் இந்தக் கொடுமைகள்லாம் அனுபவிச்சுக்கிட்டுதானே இருந்தீங்க? இப்ப எப்படி திடீர்னு இந்த முடிவுக்கு வந்தீங்க?

உமர்:

நாங்கள் கொடுமை அனுபவிச்சாலும் பரவாயில்லை எங்க வருங்கால சந்ததியாவது நல்லா இருக்கட்டுமென்றுதான் இந்த முடிவுக்கு வந்தோம். வருங்கால சந்ததி மற்றவர்களோடு சரி சமமாக மானத்தோட இருக்கணும்னுதான் இந்த முடிவுக்கு வந்தோம்.

ஏது மரியாதை?

ஆசிரியர்: நீங்க பி.ஏ., வரைக்கும் படிச்சிருக்கீங்களே அதுக்காகவாவது கிராமத்தில் மரியாதை காட்டமாட்டார்களா?

உமர்: எங்கே காட்டுறங்க? இல்லையே!

ஆசிரியர்: உங்க சாதியாரைத் தவிர, பிற சாதியார் மரியாதை காட்டறாங்களா?

உமர்:

எங்க காட்டறாங்க?. வெள்ள வேட்டி, வெள்ள சட்டை மோட்டுகிட்டு போனாலே, அதோ போறான் பாரு வெள்ள வேட்டி கட்டிக்கிட்டு, படிச்சுப்புட்டானாம் அப்படீன்னு கிண்டல் செய்றாங்க. டிபார்ட்மெண்டில கூட படிச்சாலும் பட்டம் பெற்றாலும் துவேஷம் தான் பண்றாங்க.

ஆசிரியர்: இங்க பொருளாதாரத்தில் எப்படி? தொழில் முறை என்ன?

உமர்: இங்க பெரும்பாலும் விவசாயம் பண்றாங்க; எல்லாருக்குமே சொந்ததைடங்கள் இருக்கு.

ஆசிரியர்: நீங்க யாராவது தினக் கூலிகளாக இருக்கீங்களா?

உமர்: தினக்கூலிகளும் பத்து இருபது பேர் இருக்காங்க. அவங்கலும் மதம் மாறியிருக்காங்க.

துவேஷமே காரணம்

ஆசிரியர்:

மற்ற கிராமத்திலே இருக்கிற தாழ்த்தப்பட்டவங்களை விட, குறிப்பா திருநெல்வேலி பக்கத்தில் இருக்கிறவங்க படிப்புத்துறையில் முன்னேறுனவங்க பொருளாதாரரீதியில் - எடுத்துக்கிட்டாலும் மற்றவங்களைவிட நல்ல நிலையில் இருக்கிறீங்க. அப்படி இருந்தும் உங்களுக்கு இந்த எண்ணம் தோண வேண்டிய அவசியமென்ன?

உமர்:

துவேஷம் தான் காரணம். மனித உரிமை தான் வேண்டும். படிப்பு பரவப்பரவ மக்களுக்கு பகுத்தறிவு உண்டாகுது. அப்போது இதுல இருக்கிறதனால என்ன நன்மைன்னு சிந்திக்கிறாங்க. நம்மை மனுசனா மதிக்காத சாதியில ஏன் இருக்கணும்? நம்மை மதிக்கிற மதத்துக்கு போயிடலாமேன்னு நினைக்கிறாங்க.

இறைவன் நாடினால் வளரும்.

Thursday, January 8, 2009

மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்?வெளிவரும் நிஜங்கள்!!! பாகம் 3

இந்த மதமாற்றங்களுக்குப் பின்னணியில் உள்ள சமூக சீர்திருத்தம் என்னும் செயல்திட்டம் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது. சமூக அளவில் உரிமைகள் பலவற்றைப் பெற்றுள்ள, பிற்போக்கு மனப்பான்மை கொண்ட வி.இ.பரிசத்தின் பங்கு இவ்வாறு இருட்டடிப்பு செய்யப்பட்டதில் பெரிதாகும். உயர்ஜாதி இந்துக்கள் தொடர்ந்து தீண்டத்தகாத மக்களை ஒடுக்கி, கொடுமைப்படுத்திக் கொண்டே வருவது, இந்து மதத்திலிருந்தே முற்றிலுமாகத் தங்களை அவர்கள் துண்டித்துக் கொள்ளும் ஒரு நிலைக்கு வழி வகுக்கவே செய்யும். இந்த சமூக நிலையை வி.இ.ப. சிறிது கூடப் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. இத்தகைய சமூகச் சூழ்நிலையை வி.இ.ப. சரியாகப் புரிந்து கொள்ள இயலாமற் போனதன் காரணமாக, ஒரு சமூகத்தினர் தாங்களாகவே இந்து மதத்திலிருந்து விலகி, மற்றொரு மதத்தில் சேர்ந்து கொள்வதைத் தவிர வேறு எந்த வழியும் அற்றவர்களாகவே சமூக அளவில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகிவிட்டனர்.

இந்து மதத்துடனான தங்களது தொடர்பை இவ்வாறு அவர்கள் துண்டித்துக் கொண்டதை பிற்போக்கு மனப்பான்மை கொண்ட உயர்ஜாதி இந்துக்களால் ஏற்றுக் கொள்ளவோ, பொறுத்துக்கொள்ளவோ இயலாமல் போனது என்றே தோன்றுகிறது. இத்தகைய மதமாற்ற நிகழ்ச்சிகள் பெரும் அளவிலான தர்மசங்கடங்களை உருவாக்கும் என்பதும், இந்து சமூகத்தினுள் பார்ப்பனர்களின் இந்துக் கோட்பாட்டினால் ஏற்பட்டுள்ள ஜாதி அமைப்பு முறையின் விரும்பத்தகாத உண்மைகள் பலவற்றை வெளிப்படுத்தும் என்பதும் இதன் காரணங்களாக இருக்கக்கூடும் என்ற வாதமும் சரியாகவே தோன்றுகிறது.(ராஜ்: 233)

வி.இ.ப. மற்றும் இந்து முன்னணி, ஆர்ய சமாஜம் போன்ற அமைப்புகளால் மீனாட்சிபுரம் மதமாற்ற நிகழ்ச்சிக்குப் பரவலான விளம்பரம் அளிக்கப்பட்டது. அதன்பின், மதம் மாறியவர்களில் 7 பேர் மறுபடியும் இந்து மதத்திற்கு மாறியதாக அறிவிக்கப்பட்டது.(கான் அ991 : 49)

இந்த நிகழ்ச்சிக்குப்பின் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் சமஸ்கிருத ரட்சக யோஜனா என்ற அமைப்பை வி.இ.ப. தொடங்கியது. 1982 நவம்பர், டிசம்பர் மாதங்களில் மக்களின் விழிப்புணர்வுக்காக ஜன ஜக்ரண அபியானா என்ற அமைப்பையும் அது தொடங்கியது. இந்து மதத்தை அழிக்கும் அனைத்துலக சதித்திட்டத்தைப் பற்றி இந்துக்களுக்கு எச்சரிக்கை அளிப்பதே இதன் நோக்கம். இந்தப் பிரசாரங்களின் போது நன்கொடையாகப் பொதுமக்களிடமிருந்து ஓரளவுக்கு நிதி திரட்டிக் கொள்ளவும் வி.இ.பரிசத்தால் முடிந்தது. என்றாலும், நன்கொடை அளிப்பதற்கு மேலாக மக்கள் இந்தப் பிரச்சினை பற்றி அதிக அக்கறையோ, கவலையோ காட்டவில்லை.

தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்திப் பிரச்சாரக் கூட்டங்களும், மாநாடுகளும், பேரணிகளும் நடத்துவதில் 1980-ஆம் ஆண்டுக்குப் பின் வி.இ.ப. தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. மதமாற்றப் பிரச்சினை பெரிதுபடுத்தப்பட்டு, தேசிய பாதுகாப்புக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஒரு பெரும் அச்சுறுத்தலாகக் காட்டப்பட்டது. கிறிஸ்தவ மத அமைப்புகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் அரசின் தலையீட்டை வி.இ.ப. கோரியது.

பார்ப்பனீய ஆதிக்கம் ஆட்டம் கண்டுவிடுகிறது என்பதற்காகவே அவர்கள் மதமாற்றத்தை - அதுவும் சுமார் 100 கோடி மக்கள் கொண்ட நாட்டின் தென்கோடியில் எங்கோ ஒரு சிறு கிராமத்தில் ஏற்பட்டதை ஒரு பெரும் பூகம்பமாகக் கருதி, தங்கள் அமைப்பைப் பலப்படுத்தி, இன்று பகிரங்கமாக ‘திரிசூலம்’ வழங்கி, வன்முறையை வெளிப்படையான ஆயுதமாகக் கையாளுகின்றனர்.

மத்தியில் உள்ள ஆட்சி பெயரளவுக்குத் தேசிய ஜனநாயக முன்னணி என்ற 23 கட்சிகள் கூட்டணியாக முத்திரை குத்தப்பட்டுள்ளது என்றாலும், நடைமுறையில் அது பி.ஜே.பி. என்ற பெரிய அண்ணனின் தாக்கீது செல்லும் ஆட்சியாக நடைபெற்று வருவது உலகறிந்த உண்மையாகும்.

அக்கட்சியினர், இந்திய அரசியல் சட்டத்தினைத் தூக்கி எறிந்து விட்டு, பழைய மனுதர்மத்தையே சட்டமாக வைத்து ஆட்சி நடத்த வேண்டும் என்று வெளிப்படையாகத் தீர்மானம் போட்டு முழங்கும் அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளது.

‘விசுவ இந்து பரிஷத்’ ஒரு கலாச்சார அமைப்புதானே, உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்களை இணைத்து ஒரு புது உணர்ச்சியைத் தோற்றுவிப்பது தானே என்ற கருத்தில் இதில் முக்கியப் பங்கு வகித்த டாகடர் கரண்சிங் போன்ற அறிஞர்கள், இந்த பிற்போக்குத் தனத்தை - அதாவது இந்திய அரசியல் சட்டத்திற்குப் பதிலாக மனுதர்மமே மீண்டும் அரசியல் சட்டமாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு அபாயகரமானது; அது மீண்டும் 2-ஆம் நூற்றாண்டுக்கு நாட்டைப் பின்னோக்கி அழைத்துச் செல்லும் என்பதால் அவர் அதிலிருந்து விலகி கொண்டார்(இவ்விவரங்கள் மேற்சொன்ன நூலில் 31-ஆம் பக்கத்தில் உள்ளது).

பசு பாதுகாப்பு, கணபதி ஊர்வலம், புதிய கோயில் கும்பாபிஷேகம், அனுமார் ஜெயந்தி விழாக்கள், இராமன் கோயில் கட்டும் விவகாரம் இவைகள் மூலம் தான் பாமர மக்களுக்குப் ‘பக்தி போதை’யைத் தந்து இந்து மதம் என்கிற பார்ப்பன மதத்தினை வலியுறுத்த அவர்கள் முயலுகின்றனர்!.

மதம் மாறுவதற்குரிய நிர்பந்தம் ஏன் ஒடுக்கப்பட்ட மக்காளுக்கு ஏற்படுகிறது என்பதை ஆயிரம் ஆராய்ச்சியாளர்கள், அறிவுஜீவிகள் விவாதம் செய்வது - அய்வர் யானையை வர்ணித்த கதைபோலச் செய்தாலும் - அந்த மக்களைYஏ நேரில் கண்டு அவர்கள் சொன்னதை அப்படியே வெளியிட்டுள்ளோம்!.

நோய் நாடி, நோய் முதல் நாடுவதே உயர்ந்த சிகிச்சை முறை; நோயின் கொடுமையால் அவதியுற்று அழுகின்றவனை அடித்து மாற்ற முயற்சிப்பது பலன் தருமா? வாசகர்களே முடிவு செய்யட்டும்.

அபூ சுமையா

Wednesday, January 7, 2009

மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்?வெளிவரும் நிஜங்கள்!!! பாகம் 2

It was reported that around 1,000 of 1,250 untouchables had converted to ISLAM, a step to protest against the denial of social equality. The rules of social conduct were laid down by the high-caste Thevars, and their infringement prompted harsh retaliation. Conversions to ISLAM had taken place in 1980-81 in some adjoining areas, but they did not provoke much of an outcry from the VHP or any other HINDU outfit, this was probably because the number was not as great as in Meenakshipuram, and also because bitter intercaste relations prevented reaction on the part of higher castes. The conversions in these areas seem to have been a reaction to the social and political humiliation suffered by the untouchables at the hands of the higher castes like the Thevars.

The incident was communally interpreted by the RSS and VHP as ‘an act performed by several thousand Muslims, both men and women, from the surrounding areas, who invaded the village and forced the Harijans to convert.’ It seems clear, however, that the VHP could not reconcile itself to the issues which were brought to the fore by the Meenakshipuram mass conversions, despite,, the linkages it had drawn in its early years between casteism (rules of purity and pollution) and conversions. The agenda of social reform contained in the original charter had become overshadowed. The VHP’s socially privileged and conservative character had much to do with this. That continued oppression by the high-caste HINDUS could lead to a point when untouchables would make a total break from the HINDU fold was something that had little place in the VHP social understanding. This understanding also denied agency to the socially depressed classes, who of their own volition, could detach from a community and join another.

It is this break that a conservative upper-caste HINDU seemed unable to bear and accept-primarily because, it can well be argued, this reveals a store of embarrassments and uncovers many unpleasant facts within HINDU society structured by Brahminical Hinduism(Raj 1993:233).The Meenakshipuram episode was widely publicized by the VHP and other organizations like the HINDU Munnani and the Arya Samaj, after which, it is reported, seven of the converts reconverted to Hinduism(Khan 1991:49). The VHP floated the Sanskriti Raksha Yojana(Programme to Protect Culture) immediately after the incident. In November and December 1982, it launched the Jana Jagrana Abhiyana(Campaign for People’s Awakening) to “warn” the HINDUS about “the international conspiracy to devour Hinduism”. During this campaign the VHP managed to collect some funds from the public as donations. However, apart from making monetary contributions people generally remained indifferent to the issue.

The 1980s thereafter saw the VHP preoccupied with planning and holding campaigns, conferences and processions at a regional level for “national integration”. The issue of religious conversion was much hyped, and was projected as a grave threat to national security and integrity. State intervention was demanded by the VHP to supplement its efforts to check the activities of Christian missionaries.

இதன் தமிழாக்கம்:

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் 1300 மக்கள்தொகை கொண்ட ஒரு சிற்றூர் மீனாட்சிபுரம். அங்கே வாழ்ந்து வந்தவர்களில் பெரும்பாலோர் தீண்டத்தகாதவர்களே. அவர்களில் பெரும் எண்ணிக்கை கொண்டவர்கள் 1981 பிப்ரவரியில் இஸ்லாம் மதத்திற்கு மாறினர். அதனால் ஒரு முரண்பாட்டின் மையமாக அது ஆயிற்று.

விசுவ இந்து பரிசத், அதன் தோழமை அமைப்புகளைப் பொறுத்தவரை, இந்தத் திடீர் மத மாற்றத்திற்கான காரணம் உள்ளூர் குறைபாடுகளின் வெளிப்பாடு இல்லை. ஆனால், எண்ணெய் வள நாடுகளால் நிதி உதவி அளிக்கப்பட்ட, இந்துக்களை, இந்து மதத்தை, இந்துஸ்தானத்தை அழிக்கும் ஒரு பழைய சதித்திட்டத்தின் ஒரு பகுதியே இந்த மதமாற்றங்கள் என அவை கருதின. சமூகத்தில் சமத்துவம் மறுக்கப்பட்டதை எதிர்க்கும் ஒரு நடவடிக்கையாகவே இங்கிருந்த 1,250 தீண்டத்தகாதவர்களில் 1,000-த்துக்கும் மேற்பட்டோர் இஸ்லாத்திற்கு மதம் மாறினர் என அறிவிக்கப்பட்டது.

சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்னும் விதிகளை உயர்சாதியினரான தேவர்கள் வகுத்தனர்; அந்த விதிகளை மீறுதல் கடுமையான எதிர்விளைவையே உருவாக்கிற்று. 1980-81 இல் இப்பகுதியைச் சுற்றியிருந்த சில இடங்களிலும் இஸ்லாத்திற்கு மதமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் இந்த மதமாற்றங்கள் வி.இ.ப. அல்லது மற்ற இந்து அமைப்புகளிடமிருந்து எந்தவிதப் பெருங்கூச்சலையும் எழுப்பவில்லை. ஏனெனில் மீனாட்சிபுர மதமாற்றங்கள் போல பெரும் எண்ணிக்கையிலான மதமாற்றங்கள் அல்ல அவை. மேலும் உயர் ஜாதியினரிடையே கசப்பு மிகுந்த (சாதிகலப்பு) உறவுகளும் உயர்சாதியினரின் எதிர்ப்பைத் தடுத்தன. தேவர் போன்ற உயர்சாதியினரிடம் தீண்டத்தகாத மக்கள் சமூக அளவிலும் அரசியல் நிலையிலும் பட்ட அவமானங்களின் எதிர்விளைவே இந்த மதமாற்றங்கள் எனத் தோன்றுகிறது.

மீனாட்சிபுரத்தைச் சுற்றியுள்ள சிற்றூர்களில் இருந்து ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் இந்த ஊர்களுக்குள் நுழைந்து, மதமாற்றத்திற்கு ஆதிதிராவிடரைக் கட்டாயப்படுத்தினர் என்பதாக இந்த நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ்., வி.இ.ப. போன்றோர் மதக்கண்ணோட்டத்துடன் விளக்கம் அளித்தனர். கடந்த காலங்களில் இங்கு நிலவிய தூய்மை, தீட்டு போன்ற கடுமையான ஜாதி வெறித்தனத்திற்கும், இந்த மத மாற்றங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை ஒப்புக்கொள்ள இயலாத வி.இ.பரிசத்தினால், மீனாட்சிபுரம் மதமாற்றங்கள் வெளிக்கொணர்ந்த பிரச்சினைகளை ஏற்றுக்கொள்ளவோ, எதிர்கொள்ளவோ இயலவில்லை என்றே தோன்றுகிறது.

இறைவன் நாடினால் வளரும்.

அபூ சுமையா

Tuesday, January 6, 2009

மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்?வெளிவரும் நிஜங்கள்!!!

"விசுவ இந்து பரிசத், அதன் தோழமை அமைப்புகளைப் பொறுத்தவரை, இந்த்த் திடீர் மத மாற்றத்திற்கான காரணம் உள்ளூர் குறைபாடுகளின் வெளிப்பாடு இல்லை. ஆனால், எண்ணெய் வள நாடுகளால் நிதி உதவி அளிக்கப்பட்ட, இந்துக்களை, இந்துமதத்தை, இந்துஸ்தானத்தை அழிக்கும் ஒரு பழைய சதித்திட்டத்தின் ஒரு பகுதியே இந்த மதமாற்றங்கள் என அவை கருதின. சமூகத்தில் சமத்துவம் மறுக்கப்பட்டதை எதிர்க்கும் ஒரு நடவடிக்கையாகவே இங்கிருந்த 1,250 தீண்டத்தகாதவர்களில் 1000 -த்துக்கும் மேற்பட்டோர் இஸ்லாத்திற்கு மதம் மாறினர் அன அறிவிக்கப்பட்டது".


19/02/1981 இந்திய வரலாற்றில் பொன்னால் குறிக்கப்பட்ட நாள். தாழ்த்தப்பட்ட, அடக்கி ஒடுக்கப்பட்ட தலித், அரிஜன மக்களின் வரலாற்றில் ஓர் புதிய திருப்பதையும் எழுச்சியையும் கொடுத்த நாள். காலம்காலமாக ஒடுக்கப்பட்டு வாழ்ந்த இந்த சமூகத்திற்கு ஒளிமயமான எதிர்காலத்தையும் சமூக அந்தஸ்தையும் பெற்றுத் தருவதை உறுதிப்படுத்த, தமிழ்நாட்டில் மீனாட்சிபுரம் என்ற குக்கிராமத்தில் வாழ்ந்த ஒரு கூட்டம் தாழ்த்தப்பட்ட மக்களால் திட்டமிட்டு உருவாக்கிய வரலாற்றின் சிறப்புமிகு நாள்.

ஆம். இந்திய நாட்டின் சொந்தம் குடிகள் என உரிமை கொண்டாடுவதற்கு தகுதியுள்ள ஒரே இனமான தாழ்த்தப்பட்ட, அரிஜன தலித் மக்கள் தங்கள் வாழ்வின் விடுதலை தேடி பலநூறு ஆண்டுகளாக அலைந்து கொண்டிருக்கும் சூழலில் மீனாட்சிபுரத்தை சேர்ந்த சுமார் 1000 க்கும் மேற்பட்ட தலித் மக்கள் குடும்ப சகிதம் சமத்துவம், சகோதரத்துவத்தை வேண்டி தாங்கள் ஒரு இந்து என பெயருக்கு முத்திரைக் குத்தப்பட்டு காலம்காலமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தால் அடக்கி ஒடுக்கப்பட்டு வந்ததிலிருந்து விடுதலை தேடி இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட நாள் தான் இந்த 19/02/1981.

உலகமே தங்களை உற்று நோக்க வைத்த அந்த மக்கள் திடீரென ஏன் இந்த முடிவை எடுத்தனர்? அவர்களின் இந்த திடீர் முடிவுக்கு தூண்டுகோலாக இருந்தது எது? இம்முடிவு திடீரென எடுக்கப்பட்டதா? அல்லது திட்டமிட்டே நிகழ்ந்ததா? பல்வேறு கேள்விகளுடன் இந்தியாவின் அனைத்து பாகங்களிலிருந்தும் அரசியல்வாதிகளிலிருந்து மதத் தலைவர்கள் வரை அனைவரும் மீனாட்சிபுரத்தை நோக்கி படையெடுத்தனர்.

காலம்காலமாக இந்தியாவில் இஸ்லாம் வாளைக் கொண்டு பரப்பப்பட்டது என சங்க்பரிவார இயக்கங்களினால் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுவரும் சூழலில், இந்தியாவில் எந்த முகலாயர்களின் ஆட்சியோ, முஸ்லிம் நிஜாம்களின் ஆட்சியோ அல்லது இந்திய ஜனநாயக சுதந்திர அரசில் முஸ்லிம்களின் எவ்வித பிடியுமோ இல்லாத சூழலில் திடீரென ஒரு கிராமத்தில் உள்ள 1000க்கும் மேற்பட்ட இந்து சமூகத்தைச் சேர்ந்த தலித் மக்கள் இஸ்லாத்திற்கு மாறிய இந்த சம்பவம், மத தீயை வளர்த்து அந்த வெப்பத்தில் தங்கள் வளர்ச்சியை வார்த்தெடுத்து வரும் சங்க்பரிவார அமைப்புகளுக்கு வயிற்றில் புளியை கரைத்தது என்றால் அது மிகையல்ல.

அதன் பின் அந்த அமைப்புக்களால் முடுக்கி விடப்பட்ட பிரச்சாரத்தின் ஒரு பகுதி தான் துவக்கத்தில் காணப்படும் பத்தியிலுள்ள முதல் வாசகத்தின் ஊற்றுக்கண். உண்மையில் மீனாட்சிபுரத்தில் நடந்தது என்ன என்பது வெளிவராத நிலையில், திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கி.வீரமணி நேரடியாக அக்கிராமத்திற்குச் சென்று மதம்மாறிய தலித் மக்களுடனும் அவ்வூரில் வாழும் ஏனைய மக்களோடும் கலந்துரையாடி வந்தார். அப்பொழுது அவர் எடுத்த ஒலிவடிவில் இருந்த பேட்டியை “உண்மை விளக்கம் பதிப்பகம்” பதிப்பகத்தார் சிறுநூல் வடிவில் அதனை வெளியிட்டனர்.

இறைவன் நாடினால், வரும் பதிவுகளில் மீனாட்சிபுரம் மக்களோடு கி.வீரமணி கலந்துரையாடிய அந்த சம்பவத்தை காணலாம்.

அபூ சுமையா

Monday, November 24, 2008

சூத்திரனின் நாக்கை சூடு போடு???

இஸ்லாத்தை தவிர எல்லா மதங்களிலும் சாதிகளும் அதனால் சச்சரவுக்களும் ஏற்றத்தாழ்வுகளும் புரையோடிப்போய் காணப்படுகின்றன.ஆனால் சில விவரங்கெட்ட கூழ்முட்டைகள் இஸ்லாத்திலும் சாதிப்ப்ரச்சனைகள் இருப்பதுபோல் பேசுவதும் எழுதுவதும் வாடிக்கையாகிவிட்டது. இதற்க்கு அவர்கள் சில விவரங்கெட்ட விஷயங்களைக் கூறி மக்களை குழப்ப பார்க்கின்றனர்.உதாரணமாக,மரைக்காயர்,லெப்பை,ராவுத்தர் இப்படி முஸ்லிம்கள் பிரயோகிப்பதை வைத்து தவறாக எண்ணி சாதி பேதம் இஸ்லாத்திலும் உண்டு என மாயையை ஏற்படுத்த முயல்கின்றனர்.

ஆனால் அது உண்மை அல்ல என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.உதாரணமாக மரைக்காயர் என்பது வணிகம் செய்து வந்தவர்களை குறிக்கும் ஒரு வழக்காகும்.மடைக்கல ஆயர் என்பது மருவி மரைக்காயர் ஆனது.இதற்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம்?அதே போன்று குதிரை வியாபாரம் செய்து வந்தவர்களை ராவுத்தர் என அழைக்கலாயினர்.இதில் சாதி எங்கே இருக்கிறது?மார்க்க சேவை செய்வோர் லெப்பை என அழைக்கப்படலாயினர்.இதில் சாதி எங்கே உள்ளது.

மரைக்காயரும்,லெப்பை,ராவுத்தரும் ஒரே வரிசையில் நின்று தொழுவதும்,ஒரே தட்டில் உணவருந்துவதும்,சம்பந்தம் செய்து வாழ்க்கை பந்தத்தில் இணைவதும் இதற்க்கு உதாரணம்.

ஆனால்,இந்து மத சாதி பாகுபாடுதான் மக்களை இழிவு படுத்தக்கூடியது.ஆண்டான் அடிமை பேதம் காட்டக் கூடியது.பிராமணன் தலையில் பிறந்தவன்,சூத்திரன் காலில் பிறந்தவன் என சொல்லி அவனை தாழ்ந்தவன் என எட்டி மிதிக்கக் கூடியது. இந்து மத காயத்ரி மந்திரத்தை சூத்திரன் சொன்னால் ,அந்த சூத்திரனின் நாக்கை சூடு போடு,சூத்திரன் பிராமின் உடைய அடிமை என்றெல்லாம் சொல்லி பேதம் காட்டக் கூடியது.

அதே நிலையே கிறிஸ்தவத்திலும்.இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவம் நோக்கி செல்லும் மக்களிடமும் இந்து மதத்தில் என்ன சாதியில் இருந்தார்களோ அதே சாதி பெயர்தான் கிறிஸ்தவம் சென்றாலும் ஒட்டிக்கொண்டு இருக்கிறது.உதாரணம்,வன்னிய கிறிஸ்தவர்கள்,நாடார் கிறிஸ்தவர்கள்,தலித் கிறிஸ்தவர்கள் என சொல்லிக் கொண்டு போகலாம்.மேலும் சில மாதங்கள் முன்பு நெல்லை,தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் நடந்த கிறிஸ்தவ சாதி சண்டைகளை சொல்லலாம்.

ஆகவே இஸ்லாத்தில் எள்ளளவும் அதன் முனை அளவும் சாதி இல்லை பாகுபாடு இல்லை.அப்படி இருப்பதாக கூப்பாடு போடுபவர்கள் கடைந்தெடுத்த பொய்யையும் கற்பனையையுமே பரப்பி தங்கள் மேலேயே சேரை அள்ளி பூசிக் கொள்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.

அதற்கெல்லாம் அப்பாற்பட்டு உலகளாவிய அளவில் இஸ்லாம் மக்களை அரவணைத்து,படு வேகமாக பரவி வருகிறது என்பதே நிதர்சன உண்மை.

''அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தை நீங்கள் பின்பற்றுங்கள்" என அவர்களுக்குச் சொல்லப்பட்டால், அவர்கள் ''(அப்படியல்ல)! நாங்கள் எங்களுடைய மூதாதையவர்களை எதில் கண்டோமோ, அதைத் தான் நாங்கள் பின்பற்றுவோம்" என்று கூறுகிறார்கள். அவர்களை ஷைத்தான் கொழுந்து விட்டொியும் (நரக) நெருப்பின் வேதனையின் பக்கம் அழைத்தாலுமா (பின்பற்றுவர்?)31:21.

Monday, October 27, 2008

அடிமை இந்தியா மற்றும் சுதந்திர இந்தியாவில் தலித் மக்களின் நிலை?

- கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்!!
நன்றி: தலித் முரசு (அக். - நவம்பர் 2005)

கொடிக்கால் செல்லப்பாவாக இருந்த நீங்கள், எந்த ஆண்டு கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்வாக மாறினீர்கள்?

1986ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக மாறினேன். 8,9 வயது இருக்கும்போது எங்கள் பகுதியில் தலித், அதற்கு அடுத்தபடியாக நாடார்கள்தான் அதிகமாக இருந்தார்கள். “உயர்சாதி” என்று சொல்லப்படுகிறவர்கள் மற்றும் பார்ப்பனர்கள் அறவே எங்கள் பகுதியில் இல்லை.
நாடார்களும் தலித்துகளும் பல சாதிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட நாடார்களே, தலித்துகள் தங்களுக்குக் கீழ் இருக்க வேண்டும்; தங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று அவமானப்படுத்தினார்கள். நாடார்கள் தலித்துகளிடத்தில் நடந்து கொண்ட முறையும் செயல்பாடுகளும் எனக்குள் காயத்தை ஏற்படுத்தியது. இந்தத் தலைமுறை முடிந்து அடுத்த தலைமுறை யாவது நம்மை மனிதர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது.

கன்னியாகுமரியில் நடைபெற்ற கன்னியாகுமரியை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் 1954ஆம் ஆண்டு கலந்து கொண்டு, சிறை சென்று வெளியில் வந்தோம். சிறைக்குச் சென்று வந்ததால் சமுதாயத்தில் என்னைப் பற்றி ஒரு பார்வை வருகிறது. இது, மிகமுக்கியமான கட்டம். ஏனென்றால், சிறு வயதில் எனக்குப் படிக்கின்ற வாய்ப்பு இல்லை. பொது அறிவு எனக்கு அதிகமாக ஏற்படக்கூடிய நிலை வரும்போது எங்கள் பகுதியில் இருக்கும் இளைஞர்களின் பார்வை மாறுகிறது.

எந்தச் சமுதாயம் எங்களை அவமானப் படுத்தியதோ, என்னை ஒதுக்கி வைத்ததோ, அந்தச் சமுதாயத்தினுடைய அடுத்த தலைமுறை என்னை மதிக்கப் புறப்பட்டது.அடிமை இந்தியாவில், ஒடுக்கப்பட்ட மக்கள் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன்.

கலைஞர் கருணாநிதி, முதலமைச்சராக இருந்தபோது, சட்ட மன்றத்தில் ஆதிதிராவிடர் மானியக் கோரிக்கையின் போது ஒரு செய்தியைச் சொல்கிறார்: “எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் வெளியிடப்பட்ட ஒரு துண்டுப் பிரசுரம் எனக்குக் கிடைத்தது. அதில், சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் ஒற்றைவாடை தியேட்டரில் “ஆரியமாலா” என்ற நாடகம் நடத்த இருப்பதாகவும், அதுகுறித்த செய்திகளைக் குறிப்பிட்டுவிட்டு - அடிக்குறிப்பொன்று அதில் சொல்லப் பட்டிருந்தது. தொழு நோயாளிகள் மற்றும் பஞ்சமர்களுக்கு எக்காரணம் கொண்டும் நாடகம் பார்ப்பதற்கு அனுமதி இல்லை என்று அதில் குறிப்பிடப் பட்டிருந்தது.”

ஒரு சமுதாயம் எவ்வாறு இழிவுபடுத்தப் பட்டிருந்தது என்பதைச் சொல்வதற்கு வேறு வார்த்தைகளே இல்லை. இது, அடிமை இந்தியாவில் நடந்த விஷயம்.இன்னொரு சம்பவத்தையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

ஜெகஜீவன்ராம் அவர்கள், இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் மிகப்பெரிய தலைவர்களில் ஒருவர். தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், செல்வாக்கு மிகுந்த தலைவராகவும், துணைப் பிரதமராகவும் இருந்து, அவர் ராணுவ அமைச்சராக இருக்கும்போது ஒரு சம்பவம் நடக்கிறது. காசியிலே சம்பூராணந் சிலையை அவர் திறந்து வைத்துவிட்டு வந்த பிறகு, அவர் ஒரு தலித் என்ற காரணத்தால் அங்கு இருக்கிற சனாதனவாதிகள் எல்லாம் கங்கைக்குப் போய் - தண்ணீர் கொண்டு வந்து சிலையை சுத்தம் செய்து கழுவி, தங்களது சாதி வெறியை உலகிற்கு பகிரங்கமாக தெரிவித்தார்கள். இதை உலகமே பார்த்தது.

எத்தனையோ சட்டங்கள் இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலைமைகள் இருந்தால், இப்படிப்பட்ட செய்திகள் வந்தால் அவர்களுக்கு என்னென்ன தண்டனைகள் கொடுக்க வேண்டும் என்ற சட்டம் இருக்கக்கூடிய காலத்திலேயே இந்த சம்பவம் நடந்தது. அவர், முப்படைக்கும் தளபதியாக இருந்த காலத்திலேயே இது நடந்தது.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!