Showing posts with label முடிந்தப்பின்னே முட்டிக்கொள்வதில் பலனில்லை. Show all posts
Showing posts with label முடிந்தப்பின்னே முட்டிக்கொள்வதில் பலனில்லை. Show all posts

Wednesday, October 26, 2011

முடிந்தப்பின்னே முட்டிக்கொள்வதில் பலனில்லை

dd.jpgகொழுத்தச்
செல்வத்தில் செழித்துக்
கொடுக்க மனமில்லையா;
வழங்கிய வாய்ப்பினை
கெடுத்து வணங்கவில்லையா;
இரக்கம் என்பதை
இதயத்தில் இருந்து
இறக்கிவைத்தவனா;
மது மாதுகளில் மூழ்கி
மதி இழந்தவனா!

இறுதி இடம் உனக்குண்டு;
தனிமைச் சிறை
தரையுண்டு;
அனைவரும் அழுது
அனாதையாய்
இருட்டறையில் நீ!

வினாவிற்கு
விடையில்லாமல்;
விழிகள் சொறுகி;
புடைத்த உன் எலும்புகள்
படைத்தவனால் நொறுக்கப்பட்டு;
படுகுழியில் பரிதாபமாய்!

முடிந்தப்பின்னே
முட்டிக்கொள்வதில்
பலனில்லை;
படைத்தவனைப் பயந்து
வாழ்ந்துக் கொண்டால்
பயமில்லை! 

-- 
-யாசர் அரஃபாத்

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!