Wednesday, October 26, 2011

முடிந்தப்பின்னே முட்டிக்கொள்வதில் பலனில்லை

dd.jpgகொழுத்தச்
செல்வத்தில் செழித்துக்
கொடுக்க மனமில்லையா;
வழங்கிய வாய்ப்பினை
கெடுத்து வணங்கவில்லையா;
இரக்கம் என்பதை
இதயத்தில் இருந்து
இறக்கிவைத்தவனா;
மது மாதுகளில் மூழ்கி
மதி இழந்தவனா!

இறுதி இடம் உனக்குண்டு;
தனிமைச் சிறை
தரையுண்டு;
அனைவரும் அழுது
அனாதையாய்
இருட்டறையில் நீ!

வினாவிற்கு
விடையில்லாமல்;
விழிகள் சொறுகி;
புடைத்த உன் எலும்புகள்
படைத்தவனால் நொறுக்கப்பட்டு;
படுகுழியில் பரிதாபமாய்!

முடிந்தப்பின்னே
முட்டிக்கொள்வதில்
பலனில்லை;
படைத்தவனைப் பயந்து
வாழ்ந்துக் கொண்டால்
பயமில்லை! 

-- 
-யாசர் அரஃபாத்

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!