Friday, October 7, 2011

அதிரை பேரூராட்சி தலைவர் தேர்தல்.கடற்கரைதெரு,தரகர்தெருவில் யாருக்கு வாய்ப்பு???


கடற்கரைத்தெரு முழுக்க காங்கிரஸ் மற்றும் திமுக,அதிமுக போன்ற கட்சிகளுக்கு பரவலான ஆதரவு காணப்படுகிறது.முஸ்லிம் லீக் வேட்பாளர் முனாபுக்கும் சிறு ஆதரவு சில குடும்பங்களில் காணப்படுகிறது.ஆனால் இங்கு முக்கிய போட்டி கை,உதய சூரியன்,இரட்டை இலை இவர்களுக்கு இடையேதான்.

சதவீத கணக்கு என பார்த்தால் கை சின்னத்திற்கு கூடுதல் வாக்குகள் கிடைக்க வாய்ப்பு உண்டு.இரண்டாம் இடத்தில் உதய சூரியன் மற்றும் மூன்றாம் இடத்தில் இரட்டை இலை இருக்கிறது.

தரகர் தெருவில் முஸ்லிம் லீக் படு வீக்.இரட்டை இலைக்கு அமோக ஆதரவு காணப்படுகிறது.காங்கிரஸ் மற்றும் திமுக மிக சொற்ப வோட்டுக்கள் வாங்கும் நிலையில்தான் இருக்கின்றன.

ஊரின் ஏனைய பகுதிகளின் வாக்குகளை ஒப்பிட்டு பார்த்தால்,தரகர் தெரு வாக்குகள் இரட்டை இலைக்கும்,மேலத்தெரு,கீழத்தெரு  வாக்குகள் கை சின்னத்துக்கும் சிந்தாமல் - சிதறாமல் விழும்போல் தெரிகிறது.ஆனால் ஷம்சுல் இஸ்லாம் சங்க ஏரியாக்களில் கை,உதய சூரியன்,பேருந்து,இரட்டை இலைக்கு இழுபறி நிலையே தற்போது காணப்படுகிறது.இதில் குறிப்பாக இந்த ஏரியாவில் கை வீக்.

ஷம்சுல் இஸ்லாம் சங்க ஏரியா போன்றே கடற்கரைத்தெரு ஏரியாவிலும் இழுபறி நிலையே காணப்படுகிறது.

இது முதற் கட்ட ரிசல்ட்.

அல்லாஹ் நன்கு அறிந்தவன்,

இன்ஷா அல்லாஹ் 

இரண்டாம் கட்ட சர்வே என்ன சொல்லப் போகிறது???

பொறுத்திருங்கள் அதுவரை 

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!