Wednesday, October 5, 2011

போட்டி இன்றி வெற்றிக்கனி,14 இடங்களில் மமக வெற்றி


நடைபெற இருக்கும் தமிழக உள்ளாட்சி மன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு ஆரம்பிக்கும் முன்னரே மனித நேய மக்கள் கட்சி தன்வெற்றிக் கணக்கைத் துவங்கியுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டு இரு சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்ற மனித நேய மக்கள் கட்சி, இம்முறை தனியாக போட்டியிடுகிறது.
உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், மமக போட்டியின்றி 14 வார்டுகளைக் கைப்பற்றியுள்ளது.
போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்களின் விவரம் வருமாறு:

1. லெப்பைக்குடிகாடு பேரூராட்சி(2வது வார்டு) - மீரான் மைதீன், பெரம்பலூர் மாவட்டம்.

2. லெப்பைக்குடிகாடு பேரூராட்சி(17வது வார்டு) - நூருல்ஹீதா, பெரம்பலூர் மாவட்டம்.

3. டி நெடுஞ்சேரி ஊராட்சி(3வது வார்டு) - ஏ.நிஜாம் அலி, கடலூர் தெற்கு மாவட்டம்.

4. வழுதாவூர் ஊராட்சி(2வது வார்டு) - சம்சாத் பேகம், விழுப்புரம்   மாவட்டம்.

5. கோணை ஊராட்சி(4வது வார்டு) - எஸ்.ஷேக் முஹம்மத், விழுப்புரம் மாவட்டம்.

6. பண்டாரவடை ஊராட்சி(3வது வார்டு) - சுல்தானா, தஞ்சாவூர் மாவட்டம்.

7. பேரிகை ஊராட்சி(1வது வார்டு) - பி. ஜீலான் பாஷா, கிருஷ்ணகிரி மாவட்டம்.

8. ஆய்யனார் ஊற்று(8வது வார்டு) - கே.அப்பாஸ், தூத்துக்குடி மாவட்டம்.

9. ஆய்யனார் ஊற்று(9வது வார்டு) - சுலைமான், தூத்துக்குடிமாவட்டம்.

10. ஆழ்வார்திருநகரி கீழமேடு(3வது வார்டு) - ஷேக் முஹம்மது, தூத்துக்குடி மாவட்டம்.

11. தொண்டி பேரூராட்சி(4வது வார்டு) - எம்.சாதிக் பாட்ஷா, ராமநாதபுரம் மாவட்டம்.

12. கந்தகுமாரன் ஊராட்சி(1வது வார்டு) - முகமது, கடலூர் தெற்கு மாவட்டம்.

13. மானியம் ஆடூர் ஊராட்சி(3வது வார்டு) - எஸ். ஜியாவுதீன், கடலூர் தெற்கு மாவட்டம்

14. கோவிலாம்பூண்டி ஊராட்சி(5வது வார்டு) - ஹாலிக் ரஹ்மான், கடலூர் தெற்கு மாவட்டம்.

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!