Sunday, October 16, 2011

வழக்குரைஞர் A.முனாஃப் அவர்களுக்கு வாக்களியுங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

பெருமதிப்பிற்குரிய வாக்கால பெருமக்களே, உங்கள் பொன்னான வாக்குகளை உங்கள் கண்ணான  வேட்பாளருக்கு  அளிக்க இருக்கும் இத்தருணத்தில் கடல்கடந்து, உற்றார் உறவினரை துறந்து தூர தேசங்களில் பொருளீட்டும் நோக்கில், சவுதியில் புனித மக்காவிற்கும், மதீனாவிற்கும், அருகில் உள்ள,  ஜித்தாவில் வசித்து  வரும் AYDA (அதிரை இளைஞர் மேம்பாட்டுக் கழகம்) ஊர் மக்களிடம் ஒரு வேண்டுகோளை வைக்கிறோம்.
கடந்த 20 வருடங்களாக, ஒரு குழுமமாக இயங்கி வரும் நாங்கள்(அய்டா), ஊர் நலனில் அக்கறை கொண்டு நல்ல பல திட்டங்களுக்கு உறுதுணையாக இருந்து பல தர்ம காரியங்களை அல்லாஹ்வுக்காக செய்து வருகிறோம்.

மேலும் அதிரை பைத்துல்மால் உருவாவதற்க்கு முக்கிய காரணியாகவும் அதன் வளர்ச்சியில் தொன்று தொட்டு தோள் கொடுத்து வருகிறோம்.
தற்போதைய உள்ளாட்சி தேர்தலில் நமதூரின்  தலைவர் பதவிக்கு நமது சகோதரர்கள் பலர் போட்டியிடுகின்றனர். அவர்கள் அனைவரும் சிறப்பானவர்களே, எனினும் அவர்களில் நமது சகோதரர் வழக்குறைஞர். A முனாஃப் அவர்கள் ஊர் தலைவர் பொருப்புக்கு மிகச் சிறந்தவர் ஆவார் ஏனெனில்,

  • ஹராம், ஹலால் பேணக்கூடிய படித்த பண்பாளர்.
  • பொது வாழ்வில் இளம் பிராயத்திலிருந்தே தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
  • எளிய அணுகுமுறை கொண்ட இனிய நண்பர்.
  • உள்ளூரிலேயே உத்தியோகம், ஊர் சேவை என்று உழன்று திரிபவர்.
  • மற்றுமத அண்பர்களின் மாசற்ற நட்புக்குறியவர்.
  • வரியவர்களோ, மகளிரோ எந்த நேரத்திலும் அச்சமின்றி சந்திக்க ஏதுவானவர்.
  • மத்திய, மாநில மற்றும் தொண்டு நிருவனங்களின் அலுவலர்களுடன் நெருக்கமானவர்.
மேற்கண்ட சிறப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு ஜித்தா வாழ் அதிரைவாசிகள் அனைவரும் வழக்குறைஞர் முனாஃப் அவர்களை, ஆதரிப்பது என்று ஏகோபித்த மனதுடன் எங்கள் பொதுக்குழுவில் முடிவு எடுத்துள்ளோம்.

வாகளிக்க இயலாத வெகு தூரத்தில் இருக்கும் நாங்கள் உங்கள் பொண்ணான வாக்குகளை சிந்தாமல் சிதராமல் வழக்குரைஞர் 
A. முனாஃப்  அவர்களுக்கு பேரூந்து சின்னத்தில் வாக்களித்து, இந்த நல்ல மனிதரை வெற்றியடைய செய்ய வேண்டுமாய் மிக பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இங்ஙணம்,

அதிரை இளைஞர் மேம்பாட்டுக் கழகம் - AYDA,
ஜித்தா, சவூதி அரேபியா.

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!