Wednesday, October 12, 2011

காஷ்மீர் விடுதலை


 காஷ்மீரில் மக்களின் விருப்பத்தை அறிய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் காஷ்மீர் மக்கள் தனியே பிரிந்து செல்ல ஆசைப்பட்டால் அது நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அதற்கு தோதாக இந்திய ராணுவம் வாபஸ் பெறப்பட வேண்டும் என்றும் தற்போது அன்னா ஹசாரே குழுவில் உள்ள மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷன் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக ஸ்ரீ ராம் சேனாவை சார்ந்த இருவர் அவரை அடித்து உதைத்தனர். காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் கடுமையாக கண்டித்தன. இச்சூழலில் இது குறித்து கருத்து தெரிவித்த பிரசாந்த் பூஷன் ஸ்ரீ ராம் சேனாவை தடை செய்ய வேண்டும் என்றும் மேலும் சமூக பகிஷ்கரிப்பு செய்ய வேண்டும் என்றும் பிரசாந்த் பூஷன் கோரிக்கை விடுத்தார்.

மேலும் தம் கருத்துக்கு உடன்படாதவர்களை கருத்து ரீதியாக எதிர்கொள்ளாமல் வன்முறை மூலம் எதிர்கொள்வது ஸ்ரீ ராம் சேனாவுக்கு இது புதிதல்ல என்றும் அது அவர்களின் வழமையான நடவடிக்கை என்றும் கூறிய பிரசாந்த் பூஷன் ஹிட்லரின் நாஜியிஸத்துக்கு ஒப்பானது அவர்களின் கொள்கை என்றும் கண்டனம் தெரிவித்தார்.

1 comment:

  1. நல்ல வேளை அந்த வக்கில் மேலே பாம் போட்டுட்டு இது இஸ்லாமிய திவிரவாதியின் செயல்ன்னு சொல்லாம் விட்டானுங்களே...ஹா..ஹா.. அது வரை சந்தோஷப்படுங்கள் :-))

    ReplyDelete

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!