Monday, October 3, 2011

எலிஸபெத் ராணியின் கரங்களை உங்களால் குலுக்க முடியுமா...?

ஒரு ஆங்கிலேயர் முஸ்லிம் ஒருவரிடம் கேட்டார்;

''நீங்கள் ஏன் பெண்களிடம் கை குலுக்குவதை தவறு என்று சொல்லி தடுக்கின்றீர்கள்..?''

முஸ்லிம் கேட்டார்;

'உங்கள் நாட்டு எலிஸபெத் ராணியின் கரங்களை உங்களால் குலுக்க முடியுமா...?

அதற்கான அனுமதி உங்களுக்குக் கிடைக்குமா...?''

அவசர அவசரமாக மறுத்தார் அந்த ஆங்கிலேயர்...

''அதெப்படி முடியும்..? அவர்கள் மகாராணியாயிற்றே....!''


முஸ்லிம் உதட்டில் புன்னகைத் தழுவ சொன்னார்;

''எங்களைப் பொருத்தவரை எல்லாப் பெண்களுமே மகாராணிகளே.

அந்த மகாராணிகளுக்கு உரிமையானவர்கள் மட்டுமே அவர்களது கரங்களை தொட முடியும்.

எனவேதான் அந்நிய ஆடவரிடம் எந்த ஒரு முஸ்லிம் பெண்ணும் கை குலுக்குவதை நாங்கள் அனுமதிப்பதில்லை.''


No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!