Showing posts with label வெற்றி. Show all posts
Showing posts with label வெற்றி. Show all posts

Sunday, October 9, 2011

வழக்கம் போல விழி பிதுங்கினார் அந்தப் பாதிரியார்


கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் விழி பிதுங்கினார் அந்தப் பாதிரியார்கள். 
வழக்கம் போல வல்ல இறைவன் அந்த விவாதத்திலும் நமக்கு வெற்றியையே தந்தான்.



Sunday, March 13, 2011

மமக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்!. தமீமுல் அன்சாரி


பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்,  இன்று தமிழக அரசியல் அரங்கில் குறிப்பிட்டு  பேசப்படும் முஸ்லீம் அரசியல் கட்சிகளில் ஒன்றான  மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் அரசியல் கட்சியான மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சகோதரர் தமீமுல் அன்சாரி அவர்கள் 11-மார்ச்-2011 வெள்ளிக்கிழமை காலை நம் அதிரைநிருபருக்காக அளித்த பிரத்தியோக நேர்கானல்.


அதிரைநிருபர்: அவசர அவசரமாக அ.தி.மு.க.வுடன் அடைக்கலம் பெற்றுள்ளதாக பரவலாக பேசப்படுகிறதே இதனைப் பற்றி தங்களின் கருத்து என்ன ?

தமீமுல் அன்சாரி: அவசர அவசரமாக என்ற அந்தக் கேள்வியே தவறானது தேர்தல் தேதி அறிவித்த அந்த நேரத்தில் ஏதாவது ஒரு கூட்டனில் அடைக்கலமாவது என்பது அவசர அவரமாக எடுத்த முடிவாக இருக்கும், ஆனால் மனிதநேய மக்கள் கட்சி ஏழுமாதங்களுக்கு முன்பாகவே அனைத்திந்திய அண்ணா திரவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி. ஜெயலலிதாவின் அழைப்பின் பேரிலேயே அதனை ஏற்று முறையான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதனால், நிதானமாக கூட்டனியிலே நாங்கள் இணைந்தோம். எனவே அவசர அவசரமான கூட்டனி என்பது தவறானது, இன்றைய சூழலில் அனைந்திந்த அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான எங்களது அணி இருந்து கொண்டிருக்கிறது. அந்த அணிதான் 200 மேற்பட்ட தொகுதிகளில் இன்ஷா அல்லாஹ் வெற்றியை பெறும்.

அதிரைநிருபர்: எவ்வகையான நிபந்தனைகளை வைத்து மூன்று தொகுதிகளைப் பெற்றீர்கள் ?

தமீமுல் அன்சாரி: அனைந்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்ற கழகத்தில் மனிதநேய மக்கள் கட்சி ஒரு நியாயமான தொகுதிகளைப் பெறுவதிலே பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்தோம். ஆனால் இன்றைய அரசியல் சூழலில் ஒரு மெகாக் கூட்டனியை உருவாக்கக் கூடிய சூழல் தமிழகத்திலே ஏற்பட்டு இருக்கிறது. உதாரணத்திற்கு தமிழகத்தின் "ஹோஸ்னி முபாரக்"காக இருக்கக் கூடிய கலைஞர் கருணாநிதியும், மன்னராட்சிபோல தமிழகத்தில் சுரண்டிக் கொண்டிருக்கும் அவரது குடும்பத்தினரையும் அகற்றுவதுதான் எங்களுடைய முதல் செயல் திட்டமாக இருக்கிறது. அந்த அடிப்படையில பல்வேறு பெரிய கட்சிகளெல்லாம் எங்களது கூட்டனியில் வருகை தந்து கொண்டிருந்த காரணத்தினால், நாங்கள் ஒருசில தொகுதிகளை குறைக்க வேண்டிய ஒரு சூழல் உருவானது.

குறைந்தது 15 தொகுதிகளின் பெயர்கள் பட்டியலை செல்வி ஜெயலலிதா அவர்களிடம் கொடுத்து அதிலிருந்து 12 தொகுதிகளை நேரடியாக எங்களுக்கு வேண்டுமென்று கோறிக்கை வைத்தோம். அவர்கள் பேச்சு வார்த்தை குழுவினருடன் தொடர்ந்து பேசுங்கள் அவர்கள் இறுதி செய்வார்கள் என்றும் சொன்னார்கள். அதன் பிறகு ஐந்து சுற்று பேச்சு வார்த்தைகள் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினருடைய குழுவுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் குழுவுக்கும் நடைபெற்றது. அதன் அடிப்படையிலே கடைசியாக விட்டுக் கொடுங்கள் என்று சொல்லும்போது, ஏழு தொகுதிகள் என்று இறங்கி வந்தோம். பிறகு சூழ்நிலைகள் மிகவும் நெருக்கடியாக இருக்கிறது பல்வேறு அமைப்புகளுக்கு கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருக்கிறோம் என்று வழியுறுத்திச் சொன்னார்கள். கடைசியாக தமிழகத்திலே மூன்று தொகுதிகளும் புதுச்சேரியிலே ஒரு தொகுதியும் தருவதாக அவர்கள் சொன்னார்கள் இதனை ஏற்பதா வேண்டாமா என்ற பல்வேறு சிந்தனை பொறுப்பு எங்கள் மத்தியிலே ஏற்பட்டது. அந்த நேரத்திலே மீண்டும் தனித்து போட்டியிடலாமா அல்லது மூன்றாவது அணி அமைக்கலாமா எனது போன்ற பல்வேறு கருத்துகளை பல சகோதரர்களால் முன் வைக்கப்பட்டது. ஆனால் சமுதாயத்தில் பெரும்பாலான சகோதர்கள், சமுதாய ஆர்வளர்கள், அரசியல் விரும்பிகள், ஜமாத்தார்கள் வந்து கலந்து கொண்டு நீங்கள் எதிர்பார்த்த ஆறு அல்லது ஏழு எண்ணிக்கை கிடைக்காத நிலையில், இந்த மூன்றும் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதியையும் ஏற்றுக் கொள்வதில் தவறில்லை காரணம் மீண்டும் தனித்து நிற்பது ஆபத்தானது. விஜயகாந்த் போன்ற பெரிய கட்சிகளலே தனித்து நிற்கக் கூடிய நிலையில் இல்லை. எனவே அரசியல் விழிப்புணர்வு இல்லாத இச்சமூகத்தில் இதுபோன்ற முடிவுகளை நாம் எடுப்பது தற்போது நல்லதல்ல, முதலில் நல்ல தொடக்கமாக வைத்துக் கொண்டு அதிமுகவுடன் இணைய வேண்டுமென்றும் வேண்டுகோள்களையும், நிர்பந்தங்களையும் அறிவுத்தல்களையும் சொன்னார்கள்.

பலநேரம் நாம் கட்சி அமைப்பை நடத்தினாலும் எந்த சமூகத்தை முன்வைத்து நாம் சமுகப் பணி செய்கிறோமோ அந்தச் சமூகத்தின் பெரும்பான்மையோரின் கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கிறது அந்த அடிப்படியிலே இந்த மூன்று மற்றும் ஒன்று மொத்தம் நான்கு தொகுதிகளை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். அதே நேரம் இந்த நான்குத் தொகுதிகளை நீங்கள் குறைவானது என்று நினைத்து விடக் கூடாது 1991க்கு பிறகு ஒரு முஸ்லீக் கட்சிக்கு தனி சின்னத்தில் நான்கு தொகுதிகள் கிடைத்திருப்பது இதுதான் முதல்முறை. இங்கே காணாமல் போன முஸ்லீம்களுடைய அரசியல் கண்ணியத்தை முதன்முறையாக் மீட்டிருக்கின்றோம். இதில் முழு திருப்தி இல்லாவிட்டாலும் ஒரு நல்ல தொடக்கமாக கருதுகிறோம், எதிர்காலத்திலே கூடுதல் தொகுதி என்ற இலட்சியத்தை அடைவோம்.

அதே நேரத்தில் இன்னொன்றை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும் மனிதநேய மக்கள் கட்சிகளை விட புகழ் பெற்ற பல்வேறு கட்சிகளின் இன்றைய நிலை என்னவென்று பார்த்தோமென்று சொன்னால் பிரபல நடிகர் சரத்குமாருடைய கட்சி தமிழகத்தில் பத்து மாவட்டங்களிலே முழுமையான ஒருங்கினைப்பாக வைச்சிருக்காங்கன்னு சொல்லலாம் அவர்களுக்கே இரண்டு தொகுதிகள்தான் கிடைத்திருக்கிறது. அதேமாதிரி பத்து பதினைந்து மாவட்டங்களில் இருக்கும் டாக்டர் கிருஷ்னசாமி பிரபலமான தலைவர் பல்வேறு தேர்தல்களை சந்தித்தவர் அவருக்கே இரண்டு தொகுதிகள்தான் கிடைத்திருக்கிறது. இப்படிப்பட்ட நிலைகளை பார்க்கும்போது மனிதநேய மக்கள் கட்சி நான்கு தொகுதிகளை சொந்த சின்னத்தில் பெற்றிருப்பதும் மிகப் பெரிய ஒரு தொடக்கம் என்பதை இந்த முஸ்லீம் சமுதாயம் பாராட்டுகிறது.

இது மட்டுமல்லாமல் இந்தச் சமுதாயத்தினுடைய பல்வேறு கோரிக்கைகளை செல்வி ஜெயலலிதாவிடம் வைத்திருக்கிறோம். உதாரணத்திற்கு 3.5 சதவிகித இட ஒதுக்க்கீட்டை எதிர்காலத்தில் கூடுதலாக்குவதற்கான சட்ட முன்நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கின்றோம். உருது பேசக் கூடிய முஸ்லீம்கள் தமிழகத்திலே ஆறு ஏழு மாவட்டங்களிலே பரந்து இருக்கின்றார்கள் அந்த மக்களுக்கு சமச்சீர் கல்வியில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது அதை நிவர்த்தி செய்வதற்கான முன் முயற்சிகளைச் செய்ய வேண்டும். அடுத்ததாக திருமணப் பதிவுச் சட்டத்தில் முஸ்லீம்களின் தனிப்பட்ட உரிமைகளில் சங்கடங்களும் பாதிப்புகளும் ஏற்படுத்தும் விதத்தில் தலைவர் கருனாநிதியின் அரசால் ஏற்பாடு செய்ய்ப்பட்டுள்ள காரணத்தினாலே அவைகளையும் எதிர்காலத்திலே அதிமுக கழக ஆட்சி அமைந்த பிறகு சரி செய்ய வேண்டும் என்பது போன்ற பெரிய கோரிக்கைகளையும் ஏராளமான துணைக் கோரிக்கைகளையும் நாங்கள் வைத்திருக்கிறோம். அவைகளையெல்லாம் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்கள்.

அதிரைநிருபர்: தேர்தல் செலவுகளுக்கு கூட்டனிக் கட்சியிலிருந்து பணம் கிடைக்கிறதா? தேர்தல் ஆனையம் பல கட்டுப் பாடுகளை விதித்துள்ளபோதும் வேறு எந்த வழிகளில் தேர்தல் செலவுகளுக்கு பணம் திரட்டுகிறீர்கள்?

தமீமுல் அன்சாரி: நாங்கள் இரட்டை இலையில் போட்டியிடுவதாக இருந்தால் அனைந்திந்திய அண்ணா திரவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தில் ஒன்பது தொகுதியும் பாண்டிச்சேரியில் ஒரு தொகுதியும் மொத்தம் பத்து தொகுதிகளைக் கூட கொடுத்திருப்பார்கள். தேர்தல் செலவுகளையும் அவர்களே ஏற்றிருப்பார்கள் ஆனால் சுயமாகவும் சுதந்திரமாகவும் செயல்படமுடியாது என்ற காரணத்தினால், எம்.எல்.ஏ.க்களாக பத்து பேரும் ஆகக் கூடிய வாய்ப்பு இருந்தும் கூட சமுதாயத்தின் தன்மானம் மீண்டெடுக்கப் படவேண்டும் என்ற சொந்தச் சின்னம், குறைவான தொகுதிகள் கிடைத்தாலும் பரவாயில்லை, தேர்தல் நிதி அவர்கள் தராவிட்டாலும் பரவாயில்லை என்ற நிலையைத்தான் எடுத்திருகின்றோம். எனவே எங்கள் கூட்டனியிரிடம் பத்து பைசாவைக் கூட பெறவில்லை என்பதை ஊரரிந்த உண்மையரிந்த அரசியல் அறிவரிந்த அனைவருக்கும் தெரியும்.

இரண்டாவது, இந்த தேர்தல் செலவுகளை எப்படி செய்யப் போகிறீர்கள் என்று கேட்டீர்கள், எங்களுடைய தாய் கழகமான த.மு.மு.க. பதினாறு ஆண்டுகளை கடந்து பதினேழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. எங்களுக்கு அம்பானிகளோ, டாட்டாக்களோ, வளைகுடாவில் இருக்கும் பெரும் முதலாளிகளோ உதவி செய்யவில்லை, சாதாரன கூலித் தொழிலாளிகள் நடுத்தர மக்கள் சிறு வணிகர்கள் சிறு முதலாளிகள் என்று சமுகத்தின் சாமானிய மக்கள் அளிக்கும் நிதியை வைத்துதான் எங்களது தாய் கழகமான த.மு.மு.க.வை நடத்தி வருகிறோம் அந்த மக்களின் நிதியைக் கொண்டுதான் இன்ஷா அல்லாஹ் தேர்தலையும் சந்திப்போம்.

அதிரைநிருபர்: போட்டியிடும் தொகுதிகள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய தகவல் உள்ளதா?

தமீமுல் அன்சாரி: நாங்கள் தனிநபர் சார்ந்த அமைப்பல்ல தனிநபர் துதிபாடுவதையும் தரை மட்டமாக்க வேண்டும் என்று சொல்லக் கூடிய ஒரு பேரமைப்பிலிருந்து வெளியே வந்த ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் எங்களுடைய எந்த முடிவாக இருந்தாலும் மாநில செயற்குழுவிலே ஆலோசனை செய்து அதன் பின்னால் மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக் குழுவால் முடிவு அதை நாங்கள் அறிவிப்போம் 15ம் தேதி எங்களுடைய மாநில செயற்குழு கூடி ஆலோசிக்கிறது 16ம் தேதி எங்களுடைய உயர்நிலைக் குழு கூடி அநேகமாக 17ம் தேதி வேட்பாளர் பட்டியலை இன்ஷா அல்லாஹ் அறிவிப்போம்.


அதிரைநிருபர்: ம.ம.க.போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று (இன்ஷா அல்லாஹ்).. எதிரனியினருக்கு அதாவது தி.மு.க கூட்டனிக்கு பெரும்பான்மை பெற தேவையிருக்கும் பட்சத்தில் உங்களது ஆதரவை கோறினால் உங்களது நிலைபாடு என்ன ?

தமீமுல் அன்சாரி: இன்ஷா அல்லாஹ் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் எங்களுடைய அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகக் கூட்டனிதான் ஆட்சி அமைக்கப் போகிறது... தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்பதை நம்புவதே ஒரு பகல் கனவு, கானல் நீர், அத்தைக்கு மீசை முளைத்திருப்பதுபோல்.

அதிரைநிருபர்: ஒற்றுமை ஒற்றுமை என்று வாய்கிழியப் பேசும் இயக்கங்களும் சமுதாய அமைப்புகளும் எதைச் சாதித்தன? த.மு.மு.க. மற்றும் ம.ம.க.வையும் சேர்த்தான் கேட்கிறோம் ?

தமீமுல் அன்சாரி: சமுதாய ஒற்றுமை அவசியம், சமுதாய ஒற்றுமை தேவை என்ற கருத்து நமது சமூகத்திலே அரிதுபெரும்பான்மையாக இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். அந்தக் கருத்திலே நூறு சதவிகிதம் உடன்பாடுண்டு. ஆனால் நடைமுறையில் இந்த உலகம் இந்த ஊர் எப்படி இருக்கிறது இங்கு கூற வேண்டும் ஒரு பதினைந்து நபர்கள் கொண்ட கூட்டுக் குடும்பத்தை ஒற்றுமையாக வழிநடத்த முடியாத நிலைதான் இன்றைய சூழல் இருக்கிறது.

ஒரு பத்தாயிரம் இருபாதிரம் மக்களைக் கொண்ட அதிராம்பட்டினத்தில் கூட ஒரு ஐக்கிய ஜமாத்தை நிறுவி நடத்த முடியவில்லை. அப்படியிருக்கும்போது தமிழகத்தில் ஐம்பது இலட்சத்திற்கும் அதிகமாக முஸ்லீம்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், ஒரு ஊரிலே ஐக்கிய ஜமாத்தை நிறுவுவதற்கு ஒரு போராட்டத்தை நடத்தும்போது ஐம்பது இலட்சத்திற்கும் மேல் பரந்து விரிந்த தலைமையின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய முஸ்லீம் சமுதாயத்தினர் மத்தியில் ஒரு ஒற்றுமை ஏற்படுத்துவது என்பது ஒரு எளிதான காரியம் அல்ல. ஆனாலும் எப்படியாவது அதனை நெருங்கி விடவேண்டும் என்று பாடுபடுகிறோம், அவர்களுடைய கருத்தினை ஏற்றுக் கொள்கிறோம், அதற்காக பல்வேறு முயற்சிகளும் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதான் நான் சொல்வது 2001லே குஜாரத்திலே கலவரம் ஏற்பட்டபோது தமிழகத்திலே எல்லா முஸ்லீம் அமைப்புகளோடு இணைந்து ஒரே மேடையிலே கலந்து கொண்டு எங்களது கண்டனங்களை வலியுறுத்தியிருக்கிறோம், அதே போன்று திருமண பதிவுச் சட்டத்தை கலைஞர் கருனாநிதி அவர்களின் அரசாங்கம் கொண்டு வந்து முஸ்லீம்களுடைய தனியுரிமைகளுக்கு எதிராக செயல்பட்டபோது அனைத்து முஸ்லீம் அமைப்புகளோடு கலந்து இது குறித்து அமைச்சர் துரைமுருகன் அவர்களை பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் தலைமையிலான அனைத்து முஸ்லீம் அமைப்புகள் அடங்கிய குழு சென்று அவர்களை சந்தித்து அதில் திருத்தம் செய்வதற்கான முழு முயற்சியும் செய்தது. அதுவும் அடுத்து திருவிடைச்சேரி எனும் ஊரிலே ஒரு படுகொலைச் சம்பவம் நடைபெற்றபோது அது ஒட்டுமொத்த முஸ்லீம் சமுதாயத்தின் கண்ணியத்தை பாதிக்கக் கூடிய செயலாக இருக்கிற காரணத்தினாலே 19 முஸ்லீம் அமைப்புகள் இணைந்து இது குறித்து பல்வேறு ஆக்கபூர்வமான ஆலோசனைகளிலும் நாங்கள் ஈடுபட்டோம்.

இப்போதும்கூட நாங்கள் தொகுதிகளைப் பெற்ற பிறகு சகோதர அமைப்புக்களை நாங்கள் சென்று சந்தித்து வருகிறோம். நாகர்கோவிலுக்குச் சென்று ஜாக் அமைப்பின் தலைவர் கமாலுதீன் மதனி அவர்களை பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் சந்தித்து பேசினார்கள். அடுத்து பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தலைமையகத்திற்கு சென்று அதன் தலைவர்களை பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் சந்தித்து பேசினார்கள். தொடர்ந்து பாக்கர் அவர்களுடைய இந்திய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பிடமும் பேசியிருக்கிறோம், ஜமாத்துல் உலமா அமைப்புடனும் பேசியிருக்கிறோம், இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம் சந்தித்து பேசியிருக்கிறோம் இதேபோன்று ஜமாத்தே இஸ்லாமி, ஜமியத்துல் அஹ்லே ஹதீஸ் போன்ற சகோதர அமைப்புகளோடு சந்தித்து பேசி அரசியலிலே ஒரு ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியை எடுத்து வருகிறோம். இவைகளெல்லாம் ஒற்றுமைக்கான முயற்சியின் அடித்தளங்கள் என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தேர்தலுக்குப் பிறகு இதனை மேலும் வலுவூட்டுவதற்கு மனிதநேய மக்கள் கட்சியும் எனது பெருமைமிகு தாய் கழகமான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகமும் தொடர்ந்து முயற்சிகள் எடுக்கும் இன்ஷா அல்லாஹ்.

அதிரைநிருபர்: நேற்றைய தினம் பேட்டி அளித்த முஸ்லீம் லீக் மகளிர் அமைப்பு சகோதரி ஃபாத்திமா முசாஃபர் அவர்கள் முஸ்லீம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார் இச்சந்தர்பத்தை பயன்படுத்தி அவரை உங்கள் அணிக்கு சேர்த்துக் கொள்ள முயற்சிப்பீர்களா?

தமீமுல் அன்சாரி: முஸ்லீம் இயக்கங்கள் எந்தக் காலத்திலும் பிளவுபடுவதை நாங்கள் விரும்பவில்லை பல்வேறு அமைப்புகள் செயல்படலாம் அவர்கள் மத்தியிலே மாற்றுக் கருத்துகள் இருக்கலாம் தவறு கிடையாது. ஆனாலும் முஸ்லீம் லீக் காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களால் உருவாக்கப்பட்ட நீண்ட நெருங்கிய அரசியல் பாரம்பரியமிக்க ஒரு கட்சி அந்தக் கட்சிக்கு மூன்று தொகுதிகளை உதயசூரியன் சின்னத்தில் கொடுத்ததே ஒரு அவமானம் என்பது முஸ்லீம் சமுதாயத்தின் கருத்து. மூன்றைக் கொடுத்து அதில் ஒரு தொகுதியைப் பறித்த கலைஞர் கருனாநிதியுடைய சர்வாதிகாரப் போக்கை முஸ்லீம் சமுதாயம் கடும் எதிர்ப்பை தெரிவித்துக்கிறது இந்த நிலையிலே கலைஞர் கருனாநிதி முஸ்லீம் சமுதாயத்தை எப்படியெல்லாம் கிள்ளிக் கீரையாக நினைக்கிறார் என்பதற்கு உதாரணம்.

அவரால் கொங்கு முன்னேற்றக் கழகத்திலிருந்து ஒரு தொகுதியை கூட பெற முடியவில்லை எல்லோரும் சொல்கிறார்கள். கொங்கு முன்னேற கழகத்தின் மதிப்பு என்பது ஐந்துதான் என்று, காங்கிரசை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் கொங்கு முன்னேற்ற கழகத்திற்கு கூடுதலாக இரண்டு தொகுதிகளை கொடுத்து ஏழு தொகுதிகளாக அதிகரிச்சு கொடுத்திருக்காங்க, அதிலிருந்து ஒரு தொகுதியை பறித்திருக்கலாம். அல்லது திருமாவளவன் என்பவருடைய சக்தி என்பது ஏழு அல்லது எட்டு தொகுதிகள்தான் என்பது எல்லோருக்கும் தெரியும் அவர்களிடமிருந்தாவது ஒன்றை கேட்டுப் பெற்றிருந்திருக்கலாம். டாக்டர் ராமதாஸுக்கு அதிகமான தொகுதிகளை கொடுத்தார் ஸ்டாலின் அவர்கள் லண்டன் செல்வதற்கு முன்பாக ப.ம.க.விற்கு மொத்தமே அதிகபட்சமாக இருப்பத்தி ஐந்து தொகுதிகள்தான் தரமுடியும் என்று சொல்லிவிட்டுச் சென்றார் அவர் லண்டனில் இருக்கும்போது கலைஞர் கருனாநிதி காங்கிரஸ் கட்சியை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காகவே முப்பத்தி ஓர் தொகுதியை கொடுத்திருக்கிறார் அவர்களிடமிருந்தாவது அந்த மூன்றை எடுத்து பெற்று கொடுத்திருக்கலாம். ஆனால், மிக மிக குறைவாக முஸ்லீம் லீக்கிற்கு கொடுத்த மூன்றில் ஒன்றை பறித்துக் கொண்டது மிக மிக அநியாயம் சகோதரி ஃபாத்திமா முசாஃபர் அவர்களின் குரல் ஒட்டு மொத்த முஸ்லீம் லீக் தொண்டர்களின் குரலாகத்தான் இருக்கிறது. இது பற்றி முஸ்லீம் லீக் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். முஸ்லீம் லீக்கிற்கு இந்நிலை ஏற்பட்டதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்திடவில்லை, வருத்ததில் இருக்கிறோம் என்பதுதான் உண்மை.

அதிரைநிருபர்: அனைத்து முஸ்லீம்களின் வாக்குகளை ஒன்றிணைக்க வழிகள் என்ன ? எப்போது முஸ்லீம்கள் தங்களது பலத்தைக் காட்ட வாய்ப்பு ஏற்படும் ? அதற்கு ம.ம.க.வின் செயல் திட்டங்கள் என்ன ?

தமீமுல் அன்சாரி: வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முஸ்லீம் முஹல்லாக்களில் முஸ்லீம் வாக்குகளின் நிலைமை பற்றி மனிதநேய மக்கள் கட்சியில் என்ன நினைக்கிறது என்பது பற்றி அவைகளையெல்லாம் வெளிப்படையாக இப்போது விவாதிக்க முடியாது களத்தில் மிகவும் நிதானமாக சமூக மக்களின் பேராதவோடு அதனை நாங்கள் செய்து காட்டுவோம் அந்த வாக்குகள் எங்களது அணிக்கு வருகின்ற காரனத்தினால்தான் திராவிட முன்னேற்ற கழக தலைமியிலான அணி 70க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தோற்கப்போகிறது என்பதை காலம் நிரூபிக்கும். இன்ஷா அல்லாஹ்.

அதிரைநிருபர்: பிரிந்த சகோதரர்களிடம் அதாவது த.த.ஜ. சகோதரர்களிடம் சமாதானம் பேசி சுமூகமான சூழல் உருவக்க ஏன் பகிரங்கமாக இதுவரை நீங்கள் முயற்சி செய்யவில்லை ? இதுவரை தாங்கள் சந்தித்த அமைப்புகள் பற்றி சொன்னீர்கள் அவர்களிடமும் சமுதாய நலன் கருதி ஒற்றுமைக் கரம் நீட்டலாமே ? கருத்து வேறுபாடுகளை தூக்கியெரிந்து, விட்டுக் கொடுத்துதான் போனால் என்ன ? இதனை ஏன் செய்ய மறுக்கிறீர்கள்?

தமீமுல் அன்சாரி: விட்டுக் கொடுப்போர் கெட்டுப் போவதில்லை என்பது ஒரு பழமொழி. அந்தப் பழமொழியை நாங்கள் உணர்ந்திருக்கிறோம், நாங்கள் வலைந்து போக தயராக இருக்கிறோம், அதற்காக முதுகை ஒடித்துக் கொள்ள முடியாது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கடந்த காலங்களிலே தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாத்துடம் ஆழமான கருத்து வேறுபாடுகள் இருந்தது என்பது உண்மை, மறுக்க முடியாது.

ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் அதை சுமூகம் செய்வதற்கான சில முயற்சிகளை நாங்கள் செய்தும் வந்திருக்கிறோம். குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் அதாவது மனிதநேய மக்கள் கட்சி துவங்கப்பட்ட பிறகு எங்களது அதிகாரப்பூர்வமான பத்திரிக்கையான மக்கள் உரிமையிலே பார்த்தால் அவர்கள் மீது வைத்த விமர்சனங்கள் ஒன்று அல்லது இரண்டாகத்தான் அல்லது மூன்றாகத்தான் இருந்தது. ஆனால் அந்த அளவுக்கு அவர்கள் மீதான எந்த விமர்சனமும் செய்யாமல் நாங்கள் மவுனமாக இருந்து எங்களுடைய களத்திலே எங்களுடைய பணிகளை செய்து வந்தோம். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 2009 தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாகவும் அதற்கு பின்னாலும் அவர்கள் எங்கள்மீது சுமத்திய அநியாமான குற்றச்சாட்டுகளும் எங்களுக்கு அவர்கள் அளித்த தொந்தரவுகளும் எங்களைப் பற்றி அவர்கள் எழுதிய கீழ்த்தரமான மூன்றாம் தர விமர்சனங்களும் கொஞ்ச நஞ்சமல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மைகள். அதையும் மீறி நாங்கள் மவுனம் சாதித்தோம், ஆனால் அந்த மவுனத்தை பலவீனமாவர்கள் என்று நினைத்துக் கொண்டு தொடர்ந்து இவர்கள் தாக்குதல் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எதற்கும் ஓர் எல்லையுண்டு, அவர்கள் எல்லை மீறிப் போய்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

இன்னும் சொல்லப் போனால் அவர்களுடைய மாநாடு ஜூலை 4ம் தேதி ஒன்று சென்னையிலே நடைபெற்றது அந்த மாநாட்டிற்கு எதிராக எந்த வேலையும் நாங்கள் செய்யவில்லை இன்னும் சொல்லப் போனால் எங்களிடம் சிலர் கேட்டபோது கூட அவர்கள் நடத்தினால் நல்லவிதமாக நடத்தட்டும் என்றுதான் சொன்னோம். மறைமுகமாகக் கூட நாங்கள் தொந்தரவு செய்யவில்லை. சகோதரர் பி.ஜே. அவர்களே ஆன்லைன் பி.ஜே.யில் குறிப்பிட்டிருந்தார்கள் என்று உங்களுகே தெரியும் அந்த அளவுக்கு செயல்பாடுகளில் எங்களது கன்னியத்தை செயல்படுத்தினோம்.

இன்னும் சொல்லப் போனால் 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிந்த ஒரு பத்து நாட்களில் சகோதரர் பி.ஜே.அவர்களை கொலை செய்வதற்காக ஒரு செயல் திட்டம் ரகசியமாக முன்னிருத்தப்பட்டது அந்தச் செய்தி எங்களுக்குத் தெரிய வந்த பிறகு உடணடியாக பி.ஜே.அவர்களுக்கு தெரியப்படுத்தி உரிய பாதுகாப்புகளை செய்ய வேண்டும் என்று சொல்லி நானும் எனது தாய் கழகத்தின் பொதுச் செயலாளர் சகோதரர் ஹைதர் அலி அவர்களும் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் மற்றும் தலைமை நிர்வாக குழு அறிவுறுத்தலின் அடிப்படியில் அன்றே உளவுத்துறை ஐஜியாக இருந்த சகோதரர் ஈஸ்வர மூர்த்தியை நேரில் சந்தித்து பி.ஜே.அவர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என்றும் சொன்னோம். காரணம் என்னவென்று கேட்கும்போது எங்களுக்கும் அவர்களுக்கும் இடையே பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இதுபோன்ற வன்முறைகளை பயங்கரவாதங்களை ஒருபோதும் யாரும் யார்மீதும் ஏவிவிடக் கூடாது என்று உறுதியாக இருக்கிறோம். நீங்கள் அவருக்குரிய பாதுகாப்பை கொடுங்கள் என்றும் கேட்டுக் கொண்டோம். அந்த நேரத்திலே சகோதரர் பி.ஜே அவர்கள் பாக்கருடன் இருந்தார்கள் எங்களுடைய பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்கள், பாக்கர் அவர்களை தொடர்பு கொண்டு பி.ஜே.அவர்களுக்கு பாதுகாப்பை கொடுங்கள் அவர் வழக்கமாக இருக்குமிடத்தில் இருக்காமல் வேறு இடத்தில் இருக்க வையுங்கள் என்றும் அறிவுறுத்தினோம். அப்படியெல்லம் நாங்கள் எங்கள் நல்ல எண்ணத்திலே பல்வேறு கால கட்டங்களிலே நெருங்கியிருக்கிறோம்.

இன்னும் சொல்லப் போனால் 2004ம் வருடம் என்று நினைக்கிறேன் கும்பகோனத்தில் அவர் ஒரு மாநாடு நடத்தியபோது பத்திரிக்கையலே ஊடகத்துறையிலே அந்த அமைப்பைச் சேர்ந்த எ.எஸ்.அலாவுதீன், எம்.ஐ. சுலைமான் என்பவர்களின் பெயராலே வெடிகுண்டு கடிதங்கள் வந்தது. இதைப் பற்றி கூட எங்களது பத்திரிக்கையிலே அந்த அமைப்புக்கும் எங்களுக்கும் எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் இத்தகைய பங்கரவாத வன்முறையெல்லாம் செய்ய மாட்டார்கள் என்று உறுதிபட எங்களது மக்கள் உரிமையிலே தெரிவித்தோம். இப்படியாக பல்வேறு காலகட்டங்கள் எங்களது நல்ல எண்ணங்களை அவர்களிடம் தெரிவித்து வந்திருக்கிறோம். ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள் என்றால் கடந்த ரமளானிலே ஆன்லைனில் இணையதளத்திலே சகோதரர் பி.ஜே.அவர்கள் அவருடைய உயிருக்கு ஆபத்து என்று கூறி அதற்கு த.மு.மு.க.வில் உள்ள்ச் பலரும் உடந்தை என்பது போல எழுதியது மிகப் பெரிய கோபத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தியது. நாங்கள் எங்களது வேலையப் பார்த்துச் சென்று கொண்டிருந்த தருணங்களில் வீண் பழிகள் போட்டு கொந்தளிப்பான சூழலை உருவாக்க சகோதரர் பி.ஜே.செய்தார்கள்.

அடுத்து திருவிடச்சேரி சம்பவத்திலே அவர்கள் நடந்து விதமும் அதன் பின்னால் அளித்த தன்னிலை விளக்கவும் சமுதாய மக்களிடையே பெரிய கொந்தளிப்பைதான் ஏற்படுத்தியது. அன்றை நிலையில் எங்களது மாற்றுக் கருத்தையும் தெரிவித்தோம் அதைகூட அவர்கள் ஜனநாயகபூர்வமாக எடுத்துக் கொள்ளாமல் ஒரு மோசமான எதிர் எழுத்துத் தாக்குதலையும் செய்தார்கள்.

இப்போது கூட மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் மூன்று தொகுதிகளிலும் போர்க் கொடி தூக்க சபதம் செய்திருக்கிறார்கள் இத்தகைய நிலையில் அவர்களிடம் எப்படி நாங்கள் பேச்சு வார்த்தை நடத்த முடியும் ? நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். கொஞ்ம் கூட நல்லெண்ணமில்லாமல், கொஞ்சம்கூட நாகரீகம் இல்லாமல், கொஞ்சம் கூட பண்பாடு இல்லாமல் பெருந்தன்மையில்லாமல் குர்ஆன் ஹதீஸ் பேசிக் கொண்டு இப்படிப் பட்ட சமுதயத்தை பிளவுபடுதும் வேலைகளை செய்பவர்களிடம் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்துவதில் நம்பிக்கையில்லை, அதனை நாங்கள் தொண்டர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை சமுதாயமும் விரும்பவில்லை. சமுதாயத்திலுள்ள 99% மக்கள் நம்மோடு இருக்கிறார்கள், அவர்களுடைய ஆதவரவும் எல்லாவற்றிற்கும் மேலாக அந்த ஓரிறைவனின் கிருபையும் எங்களுக்கு இருப்பதாக நம்புகிறோம் அந்த நம்பிக்கையோடு வெற்றிவாகை சூடுவோம், இன்ஷா அல்லாஹ்..


அதிரைநிருபர்: நிறைவாக ஒரு கேள்வி, இதுவரை தமிழக இஸ்லாமிய கட்சிகளிடம் இல்லாத தெளிவும் ம.ம,க.விடம் அப்படி என்னதான் இருக்கிறது ?

தமீமுல் அன்சாரி: எங்களுடைய அரசியலே மாறுபட்டதாகத்தான் இருக்கும், உதாரணத்திற்கு தனிமனித துதிபாடலை முன் வைத்துதான் எல்லா அரசியல் கட்சிகள் செயல்படுது, ஆனால் நாங்கள் ஒரு கூட்டுத் தலைமையை முன்வைத்து செயல்படுகிறோம். தனிநபரின் ஆளுமைகள் வெளிப்படும் அவர்களின் திறன்கள் வெளிப்படும், ஆனால் தனிநபரின் முடிவிலே அல்லது சார்ந்தே எங்களது கட்சி செயல்படுவது இல்லை.

இரண்டாவதாக எங்களிடம் இந்த பணக்காரர்களிடம் மண்டியிடக் கூடிய அரசியலில் நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை. இப்போதிருக்கும் முஸ்லீம் கட்சிகள் என்ன செய்கிறார்கள் என்றால், தங்களுக்கு சீட்டு கிடைத்த உடனே யாராவது கோடீஸ்வரங்க கிட்ட அல்லது கட்சிக்கு தொடர்பில்லாத உறுப்பினரல்லாத, கட்சித் தொடண்டர்களுக்கும் தொடர்பில்லாத ஒரு பெரிய பணக்காரரிடம் அந்த தொகுதிகளைக் கொடுத்து வெற்றி பெற்று வாருங்கள் என்று சொல்லக் கூடிய சூழலைதான் சமுதாயத்தில் இருக்கிறது.

ஆனால் எங்களுடைய கட்சியில அப்படியெல்லாம் இல்லை குறைந்தது மூன்றாண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும், அவரது உழைப்பை உதாரணத்திற்கு இடஒதுக்கீட்டு போராட்டத்தில் அவர் பங்கு பெற்றாரா, சிறைச் சாலைகளுக்குச் சென்றார்களா ? சமுதாய பிரச்சினைகளுக்கு எத்தகைய போராட்டங்களை நடத்தியிருக்கிறார் என்ற அளவுகோளின் அடிப்படையில்தான் எங்களது வேட்பாளர்களை முடிவு செய்கிறோம்.

மூன்றாவது விசயம் என்னவென்றால் எங்களுடைய கட்சியிலே வேட்பாளர்கள் செலவு செய்ய முடியாது உதாரணத்திற்கு தமிழ்நாட்டிலே மூன்றும் பாண்டிச்சேரியிலே ஒன்றும் நான்கு தொகுதிகளில் போட்டியிட வேண்டுமென்றால் போட்டியிடும் வேட்பாளர் ஒரு ருபாயைக் கூட அவரது சொந்தக் காசில் செலவிடக் கூடாது என்பதை எங்களது கட்சியின் கொள்கையாக வைத்திருக்கின்றோம். காரணம் சொந்த காசை செலவு செய்யும் போது அந்த வேட்பாளர் வெற்றி பெற்று வரும்போது தான் செலவு செய்த காசை எடுக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடும் வாய்ப்புகள் ஏற்படுகிறது. பல பேர் ஊழலை ஒழிப்போம் என்று சொல்வார்கள், ஆனால் ஊழலை ஒழிப்பதற்கான அடித்தளத்தையே நாங்கள் சரியாக செய்து திட்டமிட்டு வருகிறோம். அந்த அடிப்படையிலே கட்சி பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டி அந்த நிதியிலிருந்துதான் வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவுகள் செய்யப்படும்.

இவைகளெல்லாம் நம் முஸ்லீம் சமுதாயத்திலே ஒரு மாறுபட்ட நல்ல அரசியலாக கருதுகிறோம். அடுத்ததாக இன்றைக்கு பொதுவாகவே அரசியல் என்பது இந்தியாவிலே ஆயிரம் அல்லது ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்ப வலையங்களுக்குள் சுற்றி வரக்கூடிய அரசியலாக சுற்றி வரக்கூடிய சூழலை பார்க்கிறோம். ஒன்று அவர்களிடம் பணம் இருக்க வேண்டும், அல்லது பழைய பாரம்பரியம் இருக்க வேண்டும், அல்லது அரசியலிலே அவர்களது முன்னோர்கள் யாராவது இருந்திருக்க வேண்டும். இப்படிப் பட்ட நிலையில் உள்ள குடும்பங்கள்தான் அரசியலிலே முதன்மைபடுத்தி முன்னிலைக்கு வரக்கூடிய நிலை எல்லா அரசியல் கட்சிகளிடமும் உண்டு அது முஸ்லீம் கட்சிகளிடமும் இருக்கிறது. மனிதநேய மக்கள் கட்சியில் மட்டும்தான் பொருளாதர பின்னனிக்கோ, பாரம்பரிய பின்னனிக்கோ, குடும்ப பின்னனிக்கோ, குடும்ப அரசியல் பின்னனிக்கோ இடமில்லாமல் யாரெல்லாம் சமுதாயத்திற்கா தியாகம் செய்தார்களோ, உழைத்தார்களோ ஆற்றல் இருக்கிறது அறிவு இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் முன்னுரிமை என்ற அடிப்படையிலே வாய்ப்புகளையும் பொறுப்புகளையும் நாங்கள் வழங்கியிருக்கிறோம்.

இதை எல்லாம் ஒரு மாறுபட்ட நல்ல அரசியல் என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் மிக முக்கியமாக இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் நிறைய வாய்ப்புகளைத் தருகிறோம் பெண்களுக்குரிய மரியாதையை கொடுக்கிறோம் ஒட்டுமொத்த முஸ்லீம் சமுதாயத்தின் உணர்வுகளை பிரதிபலிக்ககூடிய வேலையை செய்கிறோம் அதனுடைய ஒரு அம்சம் தான் தேர்தலிலே நாங்கள் தொகுதிகளைப் பெற்ற பிறகு சமுதாயத்தில் இருக்கக் கூடிய பல்வேறு அமைப்புகளோடு கலந்துரையாடி வருகிறோம் இத்தகைய முன் முயற்சிகளை கடந்த காலங்களில் வேறு எந்த முஸ்லீம் அமைப்புகள் யாரும் செய்யவில்லை என்பதை இந்த நேரத்திலே நினைவூட்ட கடமைபட்டிருக்கிறேன்.

எனவே ஒரு மாறுபட்ட அரசியலை, நல்ல அரசியலை, மனிதநேய அரசியலை முன்னிருத்தி, முஸ்லீம் சமுதாயத்தின் எல்லா சகோதரர்களும் அமைப்புகளும் கருத்து வேறுபாடுகளை மறந்து, கட்சி வேறுபாடுகளை மறந்து நான்கு தொகுதிகளிலும் (3+1) நாங்கள் வெற்றி பெறுவதற்கு இந்த சமுதாயத்தின் பேராதரவை நாங்கள் கேட்கிறோம். குறிப்பாக அதிராம்பட்டினம் என்பது தமிழகத்திலே இருக்கக் கூடிய முஸ்லீம் ஊர்களிலே முதல் ஐந்தில் பிரதானமாக இருக்கக் கூடிய ஊர் மறுப்பதற்கில்லை அதிராம்பட்டினத்து சகோதரர்களை இந்த இணைய தளத்தின் வாயிலாக சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். அதிராம்பட்டினம் சகோதர்கள் உலகமுழுவதும் பரந்து விரிந்து வாழ்ந்து வருகிறார்கள் தங்களுடைய அந்த வாய்ப்பினை பயன்படுத்தி எங்களுக்கான ஆதரவை தளத்தை அதிகமாக முன்னிருந்த வேண்டும் என்று இந்த அதிரைநிருபர் வலைத்தளத்தின் வாயிலாக நான் தலைமையின் சார்பாக உங்களை கேட்டுக் கொள்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்.

-----
இது நம் அதிரைநிருபர் வலைத்தளத்தின் முதல் அதிகாரப்பூர்வமான அரசியல் நேர்கானல் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இது முழுக்க முழுக்க அரசியல் உண்மை செய்திகளை அறிந்துக்கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நேர்கானல். இந்த நேர்கானல் பற்றி உங்கள் அனைவரின் கருத்துக்களை அறிய விரும்புகிறோம்.

இன்ஷா அல்லாஹ் மீண்டும் ஒரு நேர்கானலில் சந்திக்கிறோம்.

- அதிரைநிருபர் குழு.

Saturday, January 29, 2011

புரோக்கரும் தேவையில்லை


இவ்வளவு கஷ்டமும் ஒரு மனுஷனுக்கு, ஒரே நாள்ல அடுத்தடுத்து வந்தா அவன் என்ன ஆவான்..? செத்து சுண்ணாம்பாயிர மாட்டான்..? ஆனால் இதுவெல்லாம் வராது என்று நினைக்காதீர்கள். வரும்.. நிச்சயமாக வரும். இதுதான் மனித வாழ்க்கை.. 

கஷ்டங்களெல்லாம் சொல்லி வைத்தாற்போல் சேர்ந்துதான் வரும். நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும். ஏன் இந்தக் கஷ்டங்கள் வருகிறது..? மனிதன் எதையோ செய்கிறான். ஏன் செய்கிறான்? அவனுக்கு அவன் செய்த செயல் தொடர்பாக ஒரு ஆசை. அந்த ஆசையினால் அந்தச் செயலை செய்யப் போய் சிக்கலில் மாட்டுகிறான். ஆக எல்லாவற்றிற்கும் அடிப்படை இந்த ஆசைதான்.

நியாயமான ஆசைகளாக இருந்தாலும் அதற்காக நாம் கஷ்டப்படத்தான் வேண்டும். இங்கே கஷ்டம் என்பது பெற்றோர்களின் கடமை, பிள்ளைகளை வளர்ப்பது, பிள்ளைகள் பெற்றோரை காப்பது.. இதற்காக அவர்கள் சில தியாகங்களைச் செய்வது போன்றவற்றிற்குள் அடங்கும். 

ஆனால் நியாயமில்லாத ஆசைகளினால் துன்பங்களை அனுபவித்தால் யார் அதற்கு பொறுப்பாவது..? 

சுருக்கமாக ஒரு உதாரணத்தோடு சொல்கிறேன்.

ஒரு பையன். பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறான். 50 சதவிகித மதிப்பெண்கள்தான் எடுத்திருக்கிறான். ஆனால் அவனது பக்கத்து வீட்டுப் பையன் 90 சதவிகித மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்கிறான். இவனது அப்பா இவனை பொறியியல் படிக்க வைக்கிறார். 

இதேபோல் 50 சதவிகிதம் மதிப்பெண் எடுத்த பையனையும் அவனது தந்தை பொறியியல் படிக்க வைக்க முயல்கிறார். அரசுக் கல்லூரியில் சீட் கிடைக்கவில்லை. தனியார் கல்லூரியில்தான் கிடைக்கிறது. ஆனால் இதற்கு பணம் நிறைய செலவாகும். ஆனால் வேறு வழியில்லை. தன் பையனை பக்கத்து வீட்டுப் பையனைப் போல பொறியாளனாக்கியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொள்கிறார். 

மனைவியிடம் இருந்த நகைகளை விற்றுக் காசாக்கி பையனை தனியார் கல்லூரியில் நுழைத்துவிடுகிறார். பையனும் பெயருக்கு கல்லூரிக்குப் போகிறான். படிப்பதைப் போல் ஏதோ செய்கிறான். அப்பா அடுத்த செமஸ்டருக்கு பீஸ் கட்ட பணமில்லாமல் கடன் வாங்குகிறார். பின்பு இந்தக் கடனை அடைக்க வேறொருவரிடம் பெரிய அளவிலான வட்டி விகிதத்தில் கடன் வாங்குகிறார். 

கடன் கழுத்தை நெரித்த வேளையில் தாங்க மாட்டாமல் இதனை அடைக்க வேண்டி தான் வேலை பார்க்கும் அரசு வேலையில் முறைகேடாக நடந்து கொள்ள முயல்கிறார். லஞ்சம் வாங்குகிறார். முதல் முயற்சி ஜெயிக்கிறது. தொடர்ந்து கொண்டே செல்கிறார். பையன் அரியர்ஸில் குளித்துக் கொண்டிருக்கும்போது இவர் லஞ்சத்தில் குளிக்கிறார். 

கடைசியாக ஒரு நாள் பிடிபடுகிறார். ஜெயிலுக்கு போகிறார். இப்போது இவரது மனம் சொல்கிறது நான் என் பையனுக்காகத்தான் செய்தேன் என்று.. பையன் சொல்கிறான் இது அப்பாவின் கடமைதானே என்று.. 

இது நியாயமில்லாத ஆசைதானே..? இந்தப் பையனுக்கு இருக்கின்ற அறிவை வைத்து, எடுத்திருக்கின்ற மதிப்பெண்களை வைத்து, அவனால் பொறியியல் படிப்பை படிக்க முடியுமா? முடியாதா? என்றல்லவா அந்தத் தகப்பன் சிந்தித்திருக்க வேண்டும்..? 

பொறியியல் துறை இல்லையென்றால் பாலிடெக்னிக், கம்ப்யூட்டர், ஐ.டி.ஐ. என்று பல்வேறு பிரிவுகளில் திருப்பிவிடலாமே.. நிறைய வழிகள் இருக்கிறதே.. செய்யவில்லையே இந்தத் தந்தை.. 

அவரது இந்த அர்த்தமற்ற ஆசைக்கான விலையை அவர்தானே கொடுக்க வேண்டும். இத்தனையையும் வரிசையாக செய்துவிட்டு "எனக்கு ஏன் இப்படி சோதனையைக் கொடுக்கிறாய்..?" என்றால் என்ன நியாயம்..?

நான் இன்றைக்கும் நிரந்தரமான வேலை கிடைக்கவில்லையே என்று புலம்பிக் கொண்டிருப்பதற்கும் நானேதான் காரணம். எனக்கே நன்கு தெரிகிறது. சினிமா துறையில் இயக்குநர் ஆக வேண்டும் என்றால் இந்நேரம் நான் எத்தனை கஷ்டப்பட்டாலும் ஏதாவது ஒரு இயக்குநரிடம் ஒட்டியிருக்க வேண்டும். நான் செய்யவில்லை. 

சீரியல்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் மட்டுமே எழுதுவேன் என்று நினைத்து முனைப்போடு போராட நினைத்திருந்தால் இந்த பிளாக்கையெல்லாம் இழுத்து மூடிவிட்டு அங்கே ஓடியிருக்க வேண்டும். அதையும் நான் செய்யவில்லை.

இங்கே பாதி கால்.. அங்கே பாதி கால் என்று வைத்து அலம்பிக் கொண்டிருப்பதினால்தான் எனது நிலைமை இப்போதுவரையிலும் திரிசங்கு சொர்க்கமாக இருக்கிறது. எனக்கே நன்கு தெரிகிறது.. தவறு என் மீதுதான் என்று.

"இது தொடர்பாக ஏதாவது ஒரு முயற்சியை நான் எடுக்கிறேன். அதற்கு ஏதேனும் ஒருவகையில் நீ எனக்குத் துணையிரு. அது போதும்.. வழியைக் காட்டு. நான் ஓடுகிறேன். ஆளைக் காட்டு. நான் பேசுகிறேன்.." என்று ஒரு எழுதப்படாத ஒப்பந்தத்தில்தான் எனது நம்பிக்கையான வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆனால் எனது ஆசை சினிமா என்பதால் அதற்கு என்ன விலை கொடுத்தாக வேண்டுமோ அதனை நான் கொடுத்துதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை.

இந்நேரம் எனக்கு சாதாரணமாக ஐயாயிரம் ரூபாயில் டிடிபி வேலை கிடைத்தாலும் பரவாயில்லை. வாழ்க்கையில் செட்டிலானால் போதும் என்று நான் நினைத்திருந்தால் இந்தப் பிரச்சினைகளெல்லாம் எனக்கு வந்திருக்காதே.. ஆக.. இந்த மாதிரியான பிரச்சினைகள் உருவாவதே நமது ஆசைகளினால்தான்..


போதும் என்ற மனதோடு.. வாழ்க்கையை ஆண்டவனின் கைகளில் ஒப்படைத்துவிட்டு.. எப்போது வேண்டுமானாலும் எதிர்நோக்கி காத்திருப்பவனுக்கு எந்த ஒரு வழிபாடும் தேவையில்லை.

 மனசு நிறைய கனவுகளோடு, நிறைய எதிர்பார்ப்புகளோடு உழைத்துக் கொண்டிருப்பவர்களை திடீரென்று அழைத்துக் கொள்கிறானே என்பதை நினைக்கின்றபோது அவனை தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை.

நான் இப்போதே இறக்கத் தயார் என்று சொல்வதாலேயே உடனேயே எனக்கு இறப்பு வந்துவிடாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இதில் இருக்கும் ஒரு கூடுதல் வசதி என்னவெனில், எதன் மீதும் அதிகம் நாட்டம் வராது.. இருப்பதே போதும் என்று ஆசையை அளவோடு வைத்துக் கொள்ளலாம்.

"நாம் உழைத்துக் கொண்டேயிருப்போம். இறப்பை பற்றிக் கவலைப்படாமல் உழைப்போம். இறைவன் எப்ப கூப்பிடுறானோ அப்போ போய்க்குவோம்... எதுக்கு அதைப் பத்தி நினைக்கணும்"னு சொல்கிறவர்களும் உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த மாதிரி மனப்பான்மை உள்ளவர்கள்தான் ஒரு போதும் நித்தி மாதிரியான சாமியார்களிடமோ, பாதிரியார்களிடமோ அல்லது ஏமாற்றும் ஹஜ்ரத்துகளிடமோ போகவே மாட்டார்கள்.

வெற்றியும், தோல்வியும், இன்பமும், துன்பமும், லாபமும், நஷ்டமும் வாழ்க்கையில் சகஜம். அதற்காக துவண்டு போகக் கூடாது. அதைத் தூக்கிப் போட்டுட்டு மேலும், மேலும் உழைக்க வேண்டும்.. எல்லாமே கடந்து போகும் என்கிற மனநிலை நமக்குக் கிடைத்தால் நிச்சயம் இந்த மாதிரியான மனித போலிகளான சாமியார்களின் தயவு நமக்குத் தேவையிருக்காது.

நானும் இதுவரையில் இது மாதிரியான எந்த சாமியாரிடமும் போனதில்லை. ஆர்வமும் கொண்டதில்லை.. காரணம் எனக்கும், என்னை படைத்த இறைவனுக்கும் இடையில் எந்த புரோக்கரும் தேவையில்லை. நமக்கு அவன் மட்டுமே உதவுவான். இதுவே எங்களுக்கு போதும்..

Sunday, January 9, 2011

அல்லாஹ்விடம் மட்டுமே கேட்ப்போம் , வெற்றி நிச்சயம் (இன்ஷா அல்லாஹ்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...
தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?
      தற்போது தேர்வுகாலம், பல்வேறு போட்டி தேர்வுகள், அரசு நடத்தும் 10 ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் மாணவ மாணவிகளை நெருங்கி கொண்டு இருக்கின்றன. இந்த சூழ் நிலையில் நாம் நுழைவு தேர்வுகளிலும், அரசு பொது தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் எடுத்தால் தான், நாம் நினைக்கும் படிப்பை குறைவான செலவில் படித்து, நாம் நினைத்த வேலைக்கு போக முடியும். இந்தியாவை பொருத்தவரை நாம் எடுக்கும் மதிப்பெண் தான் நம்முடைய அறிவு திறனை தீர்மானிக்கும் அளவுகோலாக இருக்கின்றது. எனவே நாம் கல்வி துறையில் முன்னேற அதிகமாக மதிப்பெண் எடுப்பது கட்டாயமாகின்றது.
அதிக மதிப்பெண் எடுப்பதினால் கிடைக்கும் நன்மைகள்  :
நல்ல கல்லூரியில் இடம் : அதிக மதிப்பெண் எடுப்பதினால் நல்ல கல்லூரியில் குறைந்த (அரசு நிர்ணயித்த) கட்டணத்தில் எளிதில் இடம் கிடைக்கின்றது. மதிப்பெண் குறையும் போது பல லட்சம் கொடுத்துதான் இடம் (சீட்) வாங்க வேண்டியுள்ளது அல்லது தரம் குறைந்த கல்லூரியில்தான் இடம் கிடைகின்றது. மேலும் அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் அதிக மதிப்பெண் எடுப்பதினால் மட்டுமே இடம் கிடைக்கும்.
நல்ல தரமான கல்வி :  நல்ல கல்லூரிகளில் இடம் கிடைப்பதால் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் மூலம் நமக்கு நல்ல தரமான கல்வி கிடைக்கின்றது. இதன் மூலம் நாம் எந்த துறை பற்றி படிக்கின்றோமோ அதை பற்றிய ஆழ்ந்த அறிவு (Subject knowledge) வளர்கின்றது. மேலும் பட்ட படிப்பிலும் அதிக மதிப்பெண் எடுக்க முடிகின்றது. குறைவான மதிப்பெண் எடுத்து தரமற்ற கல்லூரிகளில் சேர்வதினால் பாடங்களில் தேர்ச்சி பெற இயலாமல் ஃபெயிலாகக்கூடிய (அரியர் வைக்க வேண்டிய) நிலைக்கு ஆளாகின்றோம். படித்து தேர்ச்சி பெறுவதே (பாஸ் பன்னுவதே) மிகப்பெறிய விஷயமாகின்றது.
வேலை வாய்ப்பு : நல்ல கல்வி கிடைக்கும் போது நம்முடைய பிற திறன்களை (Extra curricular activities)  வளர்த்து கொள்ள வாய்ப்பு கிடைக்கின்றது. குறிப்பாக நல்ல வேலையில் சேருவதற்கு ஆங்கில பேச்சாற்றல், (English speaking skill) பிறருடன் கலந்துரையாடும் திறன் (communication skill) மிக மிக அவசியமாகும். படிக்கும் காலத்தில் நமது துறை சார்ந்த அறிவோடு (Subject knowledge) இது போன்ற திறன்களை (English speaking skill and communication skill) வளர்த்து கொள்வது மூலம் எளிதில் வேலை பெறலாம். 

    மேலும் படிக்கும் காலத்தில்  பிற கல்லூரிகளில் நடக்கும், (நாம் படிக்கும் துறை சார்ந்த) போட்டிகளில் (Technical competitions : Paper presentation and technical debate etc..) கலந்து கொள்வதன் மூலமும், வெற்றி பெறுவதன் மூலமும் நமக்கு சான்றிதழ்கள் கிடைக்கின்றன. இந்த சான்றிதழ்கள் படித்ததிற்க்கு தகுந்த வேலை கிடைப்பதற்க்கு பெறிதும் உதவியாக இருக்கின்றன, நல்ல கல்லூரிகளில் படிப்பதன் மூலமே இது போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதற்க்கான வாய்ப்புகளும் தொழில் நுட்ப உதவிகளும் (Technical assistance) கிடைக்கும்.    தரமற்ற கல்லூரிகளில் படிக்கையில் தேர்ச்சி பெறுவதே (பாஸ் பன்னுவதே) மிகப்பெறிய விஷயமாக இருக்கும் போது பிற திறன்களை வளர்த்துகொள்ள இயலாமல் போகின்றது.
கல்வி உதவி :  அதிக மதிப்பெண் எடுத்தால் கல்வி உதவி எளிதில் கிடைக்கின்றது. ஏனெனில் கல்வி உதவி செய்யும் செல்வந்தர்கள் முதலில் பார்ப்பது மதிப்பெண்னைத்தான், பிறகுதான் குடும்ப வறுமையை பார்கின்றார்கள். மதிப்பெண் குறைவாக இருந்தால் வறுமையான குடும்பமாக இருந்தாலும் கல்வி உதவி செய்ய தயங்குகின்றனர்.  அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு அரசும் பல்வேறு உதவி தொகைகளை வழங்குகின்றது. உதாரணத்திற்க்கு +2 தேர்வில் 80% மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு அரசு மாதம் ரூ.1000  வழங்குகின்றது.
அதிக மதிப்பெண் எடுக்க என்ன செய்ய வேண்டும்
    நம் அனைவருக்கும் எவ்வளவோ கனவுகள், ஆசைகள் இருக்கும், நம்முடிய ஆசைகளும் கனவுகளும் நிறைவேற வேண்டும் என்றால்  நமக்கு நம்பிக்கையும், ஆர்வமும், கடின உழைப்பும் இருக்க வேண்டும்.
நம்பிக்கை
         முதலில் நாம் அதிகமாக மதிப்பெண் எடுப்போம், என்ற நம்பிக்கையை வளர்த்துகொள்ள வேண்டும் (Increase your confident level).  இதற்க்கு தடையாக இருப்பது உங்களை பற்றிய உங்களுடைய எண்ணம். என்னால் இது இயலாது, எனக்கு வசதி இல்லை, பெற்றோர்கள் படிப்பறிவில்லாதவர்கள் எனக்கு உதவ யாரும் இல்லை, எனக்கு படிப்பு வராது போன்ற எதிர்மறை சிந்தனைகளை (Negative thoughts) தூக்கிபோடுங்கள். ஒரு காரியம் நம்மால் இயலாது என நினைக்கலாம், ஆனால் நம்மை படைத்த இறைவனால் அது இயலும். இலக்கை அடைய அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க வேண்டும், அல்லாஹ் நமக்கு நிச்சயம் உதவி செய்வான் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.
      உறுதியான நம்பிக்கை இருந்தால்தான் எதையும் சாதிக்க முடியும். நீங்கள் அதிகமாக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தால், நிச்சயம் அல்லாஹ்வின் உதவியோடு அதை உங்களால் சாதிக்க முடியும், நமக்கு பண வசதி இல்லாமல் இருக்கலாம், நம் பெற்றோர்கள் படிக்காதவர்களாக இருக்கலாம் இப்படி  என்ன தடை இருந்தாலும் அதை எல்லாம் தகர்த்தெரிந்து நமக்கு உதவி செய்ய அல்லாஹ் இருகின்றான்.

"(நபியே!) அல்லாஹ்வையே நீர் முற்றிலும் நம்புவீராக அல்லாஹ்வே (உமக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன்". (அல் குர் ஆன் : 33:3 ).
நமக்கு உதாவாமல் போவதற்க்கு அல்லாஹ் இயலாதவனோ, இரக்கம் இல்லாதவனோ இல்லை.  உங்களுக்கு உதவ அல்லாஹ்விடம் செல்வமும் உண்டு, பேரறிவும் உண்டு, கொடுக்கக்கூடிய கருனையும் உண்டு. அல்லாஹ்விடம் கேளுங்கள் அல்லாஹ் நிச்சயம் உங்கள் கனவை நினைவக்குவான் .
".....நம்பிக்கை கொண்டோருக்கு உதவுவது நம் மீது கடமையாக ஆகி விட்டது".  (அல் குர் ஆன் : 30: 47 ).
 நாம் அதிகமாக மதிப்பெண் எடுப்பதற்க்கு ஒரு வழியும் இல்லையே என கவலை பட வேண்டம், நமக்கு அல்லாஹ் இருக்கின்றான் வழிகாட்டுவதற்க்கு.
"அவ்வாறு இல்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான் என்று அவர் கூறினார்". (அல் குர் ஆன் : 26 : 62).
ஆர்வம்

  எந்த ஒன்றில் வெற்றி பெருவதாக இருந்தாலும் அதில் அதிக ஆர்வம் இருக்கம் வேண்டும். படிக்கும் போது ஆர்வத்துடன் படிக்க வேண்டும்.  படிக்கும் போது “இந்த பாடம் கடினமான பாடம்” என நீங்கள் நினைப்பது தான் உங்களுடைய ஆர்வத்தை குறைக்கின்றது,” கடினமான பாடம்” என்று எதுவும் இல்லை, சில பாடங்கள் ஒரு முறை படித்தால் புரியும், சில பாடங்கள் பல முறை படித்தால் புரியும். நீங்கள் கடினம் என நினைக்கும் பாடத்தில் ஆயிரக்கணக்கானோர் Centum (100%) எடுக்கின்றனர். முயற்சி எடுத்து மீண்டும் மீண்டும் படித்தால் எல்லா கடினமான பாடங்களும் எளிதாகிவிடும். விரும்பி படித்தால் எதுவும் கடினமில்லை.
மறதி : மாணவர்களுக்கு பொதுவாக உள்ள குறை மறதி, நன்றாக படித்தேன் ஆனால் தேர்வறைக்கு சென்றவுடன் எல்லாம் மறந்துவிட்டது, என பல மாணவர்கள் கூறுவார்கள். இதை மறதி என்று கூற முடியாது, நம்முடைய ஆர்வமின்மையை இது காட்டுகின்றது. சினிமா படல் மறப்பதில்லை, ஆனால் படிக்கும் பாடம் மறக்கின்றது, சினிமா பாடல் கேட்க்கும் போது கவனத்துடன் கேட்கின்றனர், கவனமாக பாடல் கேட்க்கும் போதே பாடல் வரிகளை மனனம் செய்கின்றனர். ஆனால் பாடம் படிக்கும் போது பல மாணவர்கள் பாட்டு கேட்டுக்கொண்டு படிப்பது, ,டிவி பார்த்து கொண்டு படிப்பது, வீட்டில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டு படிப்பது, இப்படி கவனமில்லாமல்  படிக்கின்றனர். இதானால் நமது கவனம் சிதறடிக்கப்பட்டு நாம் படிப்பது முழுமையா நமது மனதில் பதிவதில்லை, அல்லது தேர்வு வரைக்கும் நினைவில் நிற்ப்பதில்லை.
மறதியை போக்க  : கவனமாக படியுங்கள், படிக்கும் போது யாரிடமும் பேசாதீர்கள், பாட்டு கேட்க்காதீர்கள், டிவி பார்க்காதீர்கள் இரவு படிப்பை (Night study) தவிர்த்துவிடுங்கள், அதிகாலையில் படியுங்கள். படித்தை எழுதி பாருங்கள். ஆர்வமாக படித்தால் எதுவும் மறக்காது
நாம் நமக்காக படிக்கின்றோம் :  நாம் ஏன் படிக்கின்றோம் என்பதை முதலில் நாம் விளங்கி கொள்ள வேண்டும். ஆசிரியர் சொல்வதற்க்காகவோ அல்லது பெற்றோர்கள் சொல்வதற்க்காகவோ படித்தல் நிச்சயம் மறக்கத்தான் செய்யும், நீங்கள் படிப்பது உங்களுக்காக படிக்கின்றீர்கள், நீங்கள் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் உங்கள் எதிர்கால வாழ்க்கைதான் வீணாபோகும், இதில் ஆசிரியருக்கோ, பெற்றோருக்கோ எந்த நஷ்டமும் இல்லை. எனவே நான் படிப்பது என்னுடைய நலனுக்காதான், என்பதை நீங்கள் உணர வேண்டும். நீங்கள் நல்ல மதிப்பெண் எடுத்து நல்ல கல்லூரியில் சேர்ந்து, நல்ல வேலையில் சேர்ந்தால் உங்கள் எதிர்கால வாழ்க்கைதான் சிறப்பாக அமையும். (இன்ஷா அல்லாஹ்)
      சினிமா பாட்டு கேட்க்கும் போது உள்ள கவனம் படிப்பதில் குறைவாக உள்ளது, கிரிக்கெட் விளையாட்டில் உள்ள கவனம் படிப்பில் இல்லாமல் போகின்றது, நம்முடைய நேரத்தை நம்மை வளர்த்துகொள்ள பயன்படுத்த வேண்டும். சினிமா பார்ப்பதினாலும், கிரிக்கெட் பார்ப்பதினாலும், நடிகர்களும், கிரிக்கெட் விளையாடுபவர்களும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர், நீங்கள் செலவிடும் உங்கள் பொன்னான நேரத்தின் மூலம் அவர்கள் சம்பாதிக்கின்றனர், மாணவர்கள் படிப்பை கோட்டைவிட்டு வேலை தேடுவதே வேலையாக அலைகின்றனர்.  இதை மாற்ற உங்கள் நேரத்தை உங்களுக்காக செலவளியுங்கள் (படியுங்கள்)
கடின உழைப்பு

  அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துவிட்டோம், இனிமேல் படிக்க வேண்டாம் எல்லம் தானாக நடந்துவிடும் என்று படிக்காமல் இருக்கக் கூடாது. அல்லாஹ்விடம் நாம் பிரார்த்தனை செய்துவிட்டு கவனத்துடனும் படிக்க வேண்டும்,  கடுமையாக உழைக்க வேண்டும்
"நம் விஷயத்தில் உழைப்போருக்கு நமது வழிகளைக் காட்டுவோம். நன்மை செய்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்."  (அல் குர் ஆன் : 29: 69).

1. அதிக நேரம் : அதிக நேரம் படிப்பிற்க்காக செலவு செய்ய வேண்டும், படிக்கும் காலத்தில் வீண் விளையாட்டு, நண்பர்களுடன் வீண் பேச்சு என்றும், ஊர் சுற்றுவது என்றும் நேரத்தை வீணடிக்காமல் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும், நமது படிப்பில் இலக்கை நிர்னையித்து அதை அடைய தொடர்ந்து முயற்சிக்க வேண்டும், பள்ளி கூடம் சரியில்லை, கல்லூரி சரியில்லை, ஆசிரியர்கள் சரியில்லை எனவே நான் நன்றாக படிக்க முடியவில்லை என்று அடுத்தவர்களை குறை சொல்லி நம் வாழ்க்கையை வீணாக்க கூடாது, நாம் எந்த பள்ளியில் படித்தாலும் கவனமாக உழைத்து படித்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும். இன்ஷா அல்லாஹ்.
 2. எவ்வளவு நேரம் படிக்கின்றோம் என்பதைவிட  எப்படி படிக்கின்றோம் என்பது முக்கியம். ஒரு பாடத்தை படிக்கும் போது  அந்த பாடத்தில் என்ன கேள்வி கேட்டாலும், எப்படி கேட்டாலும் பதில் எழுத முடியும் என்ற நம்பிக்கை (Confident) வந்த பிறகே அடுத்த பாடத்திற்க்கு செல்ல வேண்டும்.

3. படிப்பதை தள்ளிபோடாதீர்கள் :  படிக்க நினைத்தவுடனே படிக்க ஆரம்பித்துவிடுங்கள், பிறகு படிப்போம், இரவு படிப்போம், நாளை படிப்போம் என்று படிப்பதை தள்ளி போடாதீர்கள், இப்படி தள்ளி போட்டுக்கொண்டே போனால் தேர்வு நாள் வரை நேரம் வீணாகிவிடும், நம் வாழ்க்கையும் வீணாகிவிடும், எப்போது சுறுசுறுப்பாக (Active -ஆக) இருங்கள்.
4. குறிபிட்ட பாடத்திற்க்கு அதிக கவனம் செலுத்தி படிப்பது :  பொறியியல் சேர்வதாக இருந்தால் கணக்கு, இயற்பியல், வேதியியல் பாடத்தில் எடுக்கும் மதிப்பெண் மட்டுமே முக்கியமானதாகும், இதே போல் மருத்துவம் படிக்க இயற்பியல், வேதியியல், உயிரியல் (அல்லது தாவரவியல், விலங்கியல்) முக்கியமானதாகும்.  எனவே குறிபிட்ட பாடத்தில் அதிக கவனம் செலுத்தி படிக்க வேண்டும்.

தேர்வு எழுதும் முன்

  தேர்விற்க்கு முன்னதாக நாம் பாடங்களை  படிக்கும் போது மேற்கொள்ள வேண்டிய சில நடைமுறைகளை பார்ப்போம்
1. படிக்கும் முறை  : பொதுவாக நாம் தேர்விற்க்காக  படிக்கும் போது வெறுமனே புத்தகத்தை புரட்டி கொண்டிருந்தால் படித்தது நினைவில் நிற்காது, படிக்கும் போது வெள்ளை தாள், பேனா அல்லது பென்சில் வைத்து கொண்டு,  படிக்கும் ஒவ்வொறு பக்கத்தையும் எழுதி பார்க்க வேண்டும், ஒரு பக்கமோ அல்லது ஒரு பகுதியோ (chapter) படித்து முடித்த பிறகு உடனே அடுத்த பகுதிக்கு போகாமல் இதுவரை படித்ததை  கண்டிப்பாக பார்க்காமல் எழுதி பார்க்க வேண்டும், இப்படி செய்தால் படித்தது மறக்காமல் இருக்கும்.
2. திட்டமிடுதல் :  எந்த ஒன்றும் திட்டமிடுதல் இல்லாமல் செய்தால் சரியான பலன் கிடைக்காது. தேர்வுக்கு படிப்பதற்க்கு முன்னால்  நாம் எந்த நேரத்தில் என்ன படிக்க வேண்டும் என்பதை முன் கூட்டியே திட்டமிட வேண்டும் (Time table- போட்டு படிக்க வேண்டும்). ஒரு நாளில் குறைந்தது 12 மணி  நேரம் படிப்பிற்க்காக செலவு செய்ய வேண்டும். இதில் நாம் 10 மணி நேரம் படிபதற்க்காக செலவு செய்ய வேண்டும். மீதமுள்ள 2 மணி நேரத்தில் படித்ததை மீண்டும் நினைவில் நிறுத்த (Revise பன்ன) பயன்படுத்த வேண்டும். அதே போல் நாம் படிக்கும் ஒவ்வொறு  மணி நேரத்திலும் 10 நிமிடங்களை படித்ததை நினைவில் நிறுத்த (Revise பன்ன) பயன்படுத்த வேண்டும்.
 3. சுயபரிசோதனை  (Check list) : ஒரு நாளில் எந்த எந்த நேரத்தில் என்ன என்ன படிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்ட பிறகு, தினமும் நாம் தூங்க போகும் முன், இன்று நாம் திட்டமிட்டதை சரியாக செய்து முடித்துள்ளோமா என சுயபரிசோதனை செய்ய (Check - பன்ன) வேண்டும். இதை தினமும் செய்தால் தான் ஒவ்வொரு நாளும் நாம் எவ்வளவு படித்துள்ளோம், இன்னும் எவ்வளவு படிக்க வேண்டி உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும். திட்டமிடும் போது (Time table- போடும் போது) வாரத்தில் 6 நாள்களுக்குதான் நாம் படிப்பதற்க்கு திட்ட மிட வேண்டும். மீதமுள்ள ஒரு நாளில் அந்த வாரத்தில் நாம் படிக்காமல் விட்ட பாடங்களை படிக்க ஒதுக்க வேண்டும்.
4. தேர்விற்க்கு 2 அல்லது 3 வாரம் இருக்கும் போதே படிப்பதை நிருத்திகொள்ள வேன்டும், புதிதாக எதையும் படிக்காமல் இது வரை படித்ததை நினைவில் நிறுத்த (revise பன்ன) வேண்டும். எனவே நாம் திட்டமிடும் போது (Time table- போடும் போது) தேர்விற்க்கு 2 அல்லது 3 வாரத்திற்க்குள் எல்லா பாடத்தையும் படித்து முடித்து விடும் படியாக திட்டமிட வேண்டும்.
5. பிரார்த்தனை : படிக்கும் முன் நாம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து விட்டு படிக்க வேண்டும், நம் பெற்றோர்களையும் நமக்காக பிரார்த்தனை செய்ய சொல்ல வேண்டும், எதாவது பாடம் கடினமாக இருந்தால் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
. ……. என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து எனக் கூறுவீராக! (அல்-குர் ஆன் 20 : 114)
என் இறைவா! எனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்து! (அல்-குர் ஆன் 20 : 25)
என் இறைவா! எனக்கு நீ வழங்கும் நன்மையில் தேவையுள்ளவனாக இருக்கிறேன்......(அல்-குர் ஆன் 28 : 24.)
…….. எங்கள் இறைவா! உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்குச் சீராக்குவாயாக …..(அல்-குர் ஆன் 18 : 10.)
6. நம்பிகையுடன் படிக்க வேண்டும் :  படிக்கும் போது இந்த பாடத்தை நம்மால் படித்து தேர்வில் சரியான முறையில் எழுதிவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் படிக்க வேண்டும் (Confident- இருக்க வேண்டும்). பாடம் கடினமாக உள்ளதே! எவ்வாறு இதை நாம் படிப்பது என்ற கவலையுடனோ அச்சத்துடனோ படிக்க கூடாது. Negative thoughts இருக்க கூடாது. நம்முடன் அல்லாஹ் இருக்கின்றான் நிச்சயம் அல்லாஹ் தேர்வில் நமக்கு உதவுவான் என நம்பிக்கையுடன் படிக்க வேண்டும் (Positive attitude இருக்க வேண்டும்).
7. படிக்கும் போதே முக்கியமான சமன்பாடுகள், சூத்திரங்களை தனியாக எழுதி வைத்துகொள்ள வேண்டும், பின்னர் நாம் பாடத்தை Revise -பன்னுவதற்க்கு இது எளிதாக இருக்கும்.
8. படிக்கும் போது பாட்டு கேட்பது, டிவி பார்த்து கொண்டு படிப்பது, வீட்டில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டு படிப்பது போன்றவற்றை கண்டிப்பாக தவிற்க்க வேண்டும். பாடத்தில் கவனத்தை செலுத்தி படிக்க வேண்டும்.
9. தேர்விற்க்கு முந்தய நாளே பேனா, பென்சில், இரப்பர், இன்னும் தேவையான அனைத்தையும் வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.  தேர்வு எழுத செல்லும்முன் எல்லவற்றையும் நாம் எடுத்து வைத்துவிட்டோமா என சோதனை செய்துவிட்டு செல்லவேண்டும்.
தேர்வு எழுதும் போது

    தேர்வு எழுத பள்ளிக்கு சென்றவுடன் நேராக தேர்வறைக்கு சென்றுவிடவும், நண்பர்களிடம் கலந்துரையாட வேண்டாம், நாம் படிக்காத கேள்விகளை பற்றி நம்மிடன் அவர்கள் விவாதித்தால் அது நம்மை பலகீன படுத்தகூடும். தேர்வு எழுத முக்கியமான தேவையே நமது நம்பிக்கையாகும் (Confident), நம்பிக்கை இழந்துவிட்டோம் என்றால் தெரிந்த கேள்வியாக இருந்தாலும் கோட்டைவிட்டுவிடுவோம், எனவே நமது நம்பிக்கையை பலகீனபடுத்த கூடிய எந்த விஷயத்திலும் ஈடுபட வேண்டாம்.
1. தேர்வறைக்குள் நுழைந்த உடன் உங்கள் சட்டை பை, ஃபேண்ட் பாக்கெட், ஜாமென்ட்ரி பாக்ஸ் போன்றவற்றை முழுவதுமாக பரிசோதித்து கொள்ளுங்கள், தேவையில்லாத பேப்பர்களை தூக்கி எறிந்து விடுங்கள், தேர்வு எழுதும் நார்காலியின் மீது ஏதாவது எழுதிருந்தால் அழித்து விடுங்கள், அழிக்க முடியவில்லை எனில் தேர்வு கண்காணிப்பாளரிடம் சொல்லிவிடுங்கள்.
2. கேள்விதாள் வந்ததும் கவனமாக படிக்கவும், தெரியாத கேள்விகள் முதலில் வந்தால் மனம் தளர்ந்துவிட வேண்டாம் (Don’t loose your confident). தொடர்ந்து கேள்விதாளை படிக்கவும் இன்ஷா அல்லாஹ் நிச்சயம் எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதுவோம் என்ற நம்பிக்கையுடன் கேள்விதாளை கவனமாக படிக்கவும்.
3. தேர்வு எழுதுவதற்க்கு முன் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அவனுடைய அருளை வேண்டி பிரார்த்தனை செய்துவிட்டு எழுத ஆரம்பிக்கவும்.
என் இறைவா! மன்னித்து அருள்புரிவாயாக! நீ அருள்புரிவோரில் சிறந்தவன் என கூறுவீராக! …..(அல்-குர் ஆன் 23 : 118.)
விடை தாளில் 786 என எழுதுவது, நாகூர் ஆண்டவர் துணை என்று எழுதுவது போன்ற காரியங்களை  கண்டிப்பாக தவிற்த்துவிடுங்கள், இப்படி எழுதுவது இஸ்லாத்தில் மாற்றமானது.
4. நன்றாக தெரிந்த கேள்விகளை முதலில் எழுதுங்கள், பிறகு ஓரளவிற்க்கு தெரிந்த கேள்விகளை எழுதுங்கள், இறுதியாக தெரியாத கேள்விகளுக்கு உங்களுக்கு தெரிந்த பதிலை எழுதுங்கள், தவறாக இருக்குமோ என அச்சம் வேண்டாம், எந்த கேள்வியையும் விடாமல் எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதுங்கள்.
5. பக்கம் பக்கமாக பதில் எழுதாமல், குறிப்பு குறிப்பாக எழுதுங்கள் (Points points-ஆக எழுதுங்கள்), முக்கியமான வரிகளை அடிகோடிடுங்கள்.
6. சூத்திரங்களையும், சமன்பாடுகளையும் (Formulas and equations) கட்டத்திற்க்குள் எழுதுங்கள், தேவைபடும் போது வரைபடத்தின் மூலமும், அட்டவணை மூலமும் பதிலை விளக்குங்கள்.
 7. பொதுவாக முதலில் எழுதும் கேள்விகள் அதிக நேரம் பிடிக்கும், எனவே முதல் மூன்று கேள்விகளை நேரத்தை பார்த்து குறுகிய நேரத்தில் எழுத முயற்சி செய்யுங்கள்.
 8. ஒவ்வொறு கேள்விக்கும் நேரம் ஒதுக்கி அதற்க்குள் என்ன எழுத முடியுமோ அதை எழுதுங்கள், ஒரு கேள்விக்கான நேரம் முடிந்ததும் உடனே அடுத்த கேள்விக்கு சென்றுவிடுங்கள், ஒரே கேள்வியை நீண்ட நேரம் எழுதிகொண்டு இருக்க வேண்டாம்.
9. விடைதாளை அளிக்கும் முன் கேள்வி எண்ணையும் பதில் எண்ணையும் சரிபார்த்துகொள்ளுங்கள்.
10. புதிய பேனாவை வைத்து எழுத வேண்டாம், வேகம் கிடைக்காது, நீங்கள் எழுதி பழகிய பேனாவின் மூலமே எழுதுங்கள்.
11. எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதிய பிறகு நேரம் இருந்தால் விடைதாளை அழகு படுத்தும் வேலையை செய்யுங்கள்.
தேர்வு எழுதி முடித்தபிறகு :

தேர்வு எழுதியவுடன் நேராக வீட்டிற்க்கு செல்லவும். நண்பர்களுடன் வினா, விடை பற்றி விவாதிக்க வேண்டாம். நாம் தேர்வுகளில் செய்த சிறிய தவறுகளை சுட்டிகாட்டி நமக்கு மன உலைச்சலை ஏற்படுத்திவிடுவார்கள், இது நம்மை கவலையில் ஆழ்த்திவிடும்.  இது நாம் அடுத்த தேர்வுக்கு ஆயத்தமாவதை பாதிக்கும், நாம் என்னதான் வருத்தப்பட்டாலும், கவலைபட்டாலும் எழுதிய தேர்வை திரும்பி எழுதமுடியாது, நமக்கு தெரிந்ததை எழுதிவிட்டோம் மீதத்தை அல்லாஹ் பார்த்துகொள்வான், எனவே தேர்வு எழுதியவுடன் நேராக வீட்டிற்க்கு சென்று தொழுதுவிட்டு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துவிட்டு அடுத்த தேர்விற்க்கு படிக்க ஆரம்பியுங்கள்.
 
அல்லாஹ்விடம் மட்டுமே கேட்ப்போம் , வெற்றி  நிச்சயம் (இன்ஷா அல்லாஹ்)

      நம் பிரார்த்தனை அல்லாஹ்விடம் மட்டுமே இருக்க வேண்டும். அல்லாஹ்வை தவிற வேறு யாரிடமும் நாம் உதவி தேடக்கூடாது.
(இறைவா!) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம். எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக! …..(அல்-குர் ஆன் 1 : 4,5)
அல்லாஹ்வை தவிர வேறு யாரிடமும் பிராத்தனை செய்வது எந்த பலனையும் தராது. எனவே தர்ஹா, தகடு, தாயத்து என எதையும் நம்ப வேண்டாம், அல்லியாக்களிடம் பிரார்த்தனை செய்ய வேண்டாம், அல்லாஹ்விடம் மட்டுமே கேளுங்கள், அவ்லியாக்களிடன் கேட்பது, தர்ஹாக்களுக்கு நேர்ச்சை செய்வது, தகடு தாயத்து அணிவது போன்றவை அல்லாஹ்விற்க்கு பிடிக்காக காரியம், அல்லாஹ்விற்க்கு  கடுமையான கோபத்தை ஏற்படுத்தக்கூடிய காரியம், அல்லாஹ்வுடைய அன்பையும் கருனையையும் பெறுவதுதான் நமக்கு முக்கியம்.  எனவே கண்டிப்பாக இது போன்ற (தர்ஹா, தகடு, தாயத்து) காரியத்தில் ஈடுபட வேண்டாம். அல்லாஹ்வின் மீது நம்பிக்கைவைத்து கடினமாக உழைத்து படியுங்கள் வெற்றி நிச்சயம் இன்ஷா அல்லாஹ்.
பிள்ளைகளின் படிப்பில் பெற்றோர்களின் கடைமை!
  மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்க வைப்பதில் பெற்றோரின் பங்கு மிக முக்கியமானது. மேலே குறிபிட்ட நடைமுறைகளை தங்களுடைய பிள்ளைகள் நடைமுறைபடுத்துகின்றார்களா என்பதை பெற்றோர்கள்தான் உறுதி செய்ய வேண்டும், ஏனெனில் மாணவர்கள் வயது குறைந்தவர்கள், பெற்றோர்கள்தான் மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். எனவே பெற்றோர்கள் மேற்சொன்ன வழிமுறைகளை படித்து அதை தங்களுடைய பிள்ளைகளுக்கு தினமும் சொல்லி கொடுத்து கொண்டு இருக்க வேண்டும், தங்களுடைய பிள்ளைகள் சரியா படிக்கின்றதா என கண்கானிக்க வேண்டும். படித்ததை உங்களிடம், பார்க்காமல் எழுதி காண்பிக்க சொல்ல வேண்டும், படிப்பை தவிற மற்றதின் பக்கம் கவனத்தை திரும்பிவிடாமல் பார்த்துகொள்ள வேண்டும்.
1.  டிவி பார்ப்பதை தவிற்க்கவும், நீங்கள் டிவி பார்க்காமல் இருந்தால்தான் உங்கள் பிள்ளைகளும் டிவி பார்க்காமல் இருப்பார்கள்  கேபிள் இனைப்பை கட்டாயம் துண்டித்துவிடவும்.
2.  மாணவ மாணவிகளிடம் இருந்து கட்டாயம் செல்போனை பறித்துவிடவும், தேர்வு முடியும் வரை செல்போனை தரவேண்டாம். (பெண் பிள்ளைகளுக்கு தேர்வு முடிந்தாலும் செல்போனை தர வேண்டாம்). படிப்பில் சிறந்து விளங்குவதற்க்கும் செல்போனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
3. வெளியில் விளையாட அனுமதிக்காதீர்கள், கணினியில் (Computer -ல்) படிப்பதற்க்கு தவிற வேரெதற்க்கும் பயன்படுத்த கொடுக்காதீர்கள். கம்ப்யூட்டரில்  பாட்டு கேட்பது, சினிமா பார்பது, கேம் விளையாடுவது போன்றவற்றிக்கு முழுமயாக தடை போடுங்கள்.
4.. மாணவர்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்தவும் நல்ல சத்துள்ள உணவுகளை கொடுக்கவும். பிள்ளைகளை திட்ட வேண்டாம் சபிக்க வேண்டாம், அன்பாக அவர்களுடைய தவறை சுட்டிகாட்டவும்.
5. பிள்ளைகளை வெறுமனே படி படி என்பதைவிட படிப்பதற்க்கான சூழ் நிலையை ஏற்படுத்திகொடுங்கள். படிப்பதை கண்கானியுங்கள். அதிகமாக மதிப்பெண் எடுத்தால் பரிசு தருவதாக சொல்லுங்கள். திட்ட மிடுதல், படித்தை நினைவில் நிறுத்துதல், பார்க்காமல் எழுதி பார்த்தல் போன்றவற்றில் உதவுங்கள்.
6. கல்வி கற்பது மார்க்க கடமை என்பதை புரியவையுங்கள். இஸ்லாம் கல்விக்கு வழங்கிய முக்கியதுவத்தை எடுத்துகூறுங்கள். கல்வி கற்பதினால் இம்மையிலும் மறுமையிலும் கிடைக்கும் நன்மையை எடுத்துகூறுங்கள்.
6. மாணவர்கள் குறைவான மதிப்பெண் எடுத்தால், நீங்கள்தான் அதிகமாக பணத்தை கொடுத்து கல்லூரியில் சேர்க்க வேண்டும். உங்கள் பிள்ளை நல்ல மதிப்பெண் எடுத்தால் மிக குறைவான பணத்தில் கல்லூரியில் சேர்க்கலாம். எனவே உங்கள் பிள்ளை அதிக மதிப்பெண் எடுப்பது உங்களுக்குத்தான் மிக முக்கியம். ஏனெனில் கல்வி  கட்டணம் கட்டுவது நீங்கள்தான். அதை கவனத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்.
7. உங்கள்வீட்டு பொருளாதார சூழ் நிலையையும், கல்வியின் அவசியத்தையும் தொடர்ந்து வழியுறுத்துங்கள். தேர்வுகாலம் முடியும் வரை உங்களுடைய முழுகவனத்தையும் உங்கள் பிள்ளைகளின் மீது வையுங்கள்.உங்கள் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக தொடர்ந்து அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டு இருங்கள்.
மேலும் தேர்வுகள் சம்ந்தமான கேள்விகளுக்கும், ஆலோசனைகளுக்கும்sithiqu.mtech@gmail.com என்ற மெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும்.
நமது முஸ்லீம் சமுதாயம் கல்வியில் சிறந்து விளங்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.


ஆக்கம்
S.சித்தீக்.M.Tech

Saturday, June 12, 2010

தென் கொரியாவிடம் வீழ்ந்தது கிரீஸ்

உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் தென் கொரிய அணி, கிரீஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, அதிர்ச்சி கொடுத்தது.
தென் ஆப்ரிக்காவில் 19வது <"பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று "பி' பிரிவு லீக் போட்டியில் தென் கொரியா, கிரீஸ் அணிகள் மோதின.
கொரியா ஆதிக்கம்:
 துவக்கம் முதலே தென் கொரிய அணியினர் ஆதிக்கம் செலுத்தினர். இந்த அணிக்கு 7வது நிமிடத்தில் "பிரீ கிக்' வாய்ப்பு கிடைத்தது. இதைப்பயன்படுத்திய லீ யங்-பியோ பந்தை வேகமாக அடித்தார். அப்போது கோல் பகுதிக்குள் இருந்த முன்கள வீரர் லீ ஜங் ஜூ, தனது காலால் பந்தை வலைக்குள் அடித்து, தனது அணியின் முதல் கோலை பதிவு செய்தார்.
ஆக்ரோஷமாக ஆடிய தென் கொரிய அணியின் முன், கடந்த 2004ல் "யூரோ' சாம்பியன் பட்டம் வென்ற, கிரீஸ் வீரர்களது ஆட்டம் எடுபடவில்லை. முதல் பாதி முடிய சில நிமிடங்களுக்கு முன் கிரீஸ் அணிக்கு, சமன் செய்ய இரண்டு வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் தென் கொரிய கோல்கீப்பர் சன்கிரேயாங் அருமையாக தடுக்க, முதல் பாதியில் தென் கொரிய அணி 1-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது கோல்:
கிரீஸ் அணியின் தற்காப்பு பகுதி மிகவும் பலவீனமாக இருந்தது. இரண்டாவது பாதியின் துவக்கத்தில் (52வது நிமிடம்) தென் கொரிய கேப்டன் ஜி சங், கிரீஸ் வீரர் டி ஜோர்வசை ஏமாற்றி, பீல்டு கோல் அடித்து அசத்தினார்.
அதிரடி தாக்குதல்:
இரண்டு கோல் பின்தங்கிய நிலையில், கிரீஸ் அணியினர் அடுத்தடுத்து தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும், இவர்களது இலக்கு இல்லாத தாக்குதல்கள் பலன் அளிக்கவில்லை. இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் தென் கொரிய அணி அசத்தல் வெற்றி பெற்றது. கடந்த 2004ல் "யூரோ' சாம்பியன் பட்டம் வென்று, தரவரிசையில் 13வது இடத்திலுள்ள கிரீஸ் அணி, 47வது இடத்திலுள்ள தென் கொரியா அணியிடம், கிரீஸ் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளது.
முதல் நாளில் மெக்சிகோ-தென் ஆப்ரிக்கா, பிரான்ஸ்-உருகுவே இடையிலான போட்டிகள் "டிரா' வில் முடிந்தன. இதையடுத்து இத்தொடரின் முதல் வெற்றியை தென் கொரியா பதிவு செய்தது.
அடுத்த வாய்ப்பு:
 "பி' பிரிவில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ள தென் கொரிய அணி, அடுத்து அர்ஜென்டினா (ஜூன் 17), நைஜீரியா (ஜூன் 23) அணிகளை எதிர்கொள்ளவுள்ளது. இதில் ஒரு போட்டியில் வென்றால், இரண்டாவது முறையாக உலக கோப்பை வரலாற்றில், "ரவுண்ட்-16' சுற்றுக்கு முன்னேறலாம்.

Monday, May 24, 2010

படி அல்லது மடி

'எந்த ஒரு சமுதாயத்தவரும் தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில் அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை.' (அல் குர்ஆன் : 13:11)
தமிழகத்தில் முஸ்லிம் சமூகத்தில் கல்விக்கு உதவக்கூடிய நல்ல உள்ளங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இது முஸ்லிம்களிடம் ஏற்பட்டுள்ள மார்க்கப் பிடிப்பையும் சமூகப் பற்றையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

ஒரு காலத்தில் ஒரு சில அறக்கட்டளைகள் மட்டுமே இந்த அறப்பணியைச் செய்து வந்தன ஆனால் இன்று தனிப்பட்ட முறையிலும் கூட தங்களால் இயன்ற அளவு படிக்கின்ற மாணவர்களின் நிலையை அறிந்து மனமுவந்து பலர் உதவி வருகின்றனர். இதன்மூலம் படித்து பட்டம் பெறும் முஸ்லிம் மாணவ மாணவியரின் எண்ணிக்கை ஆண்டு தோறும் பெறுகி வருகிறது என்பதில் மாற்றமில்லை.

'கல்வி கற்றவராக இருங்கள்; கற்றுக் கொடுப்பவராக இருங்கள் கற்பவர்களுக்கும் கற்றுக கொடுப்பவர்களுக்கும் உதவி செய்பவராக இருங்கள் என்று பெருமானார் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காட்டிய வழியில் வசதி வாய்ப்பைப் பெற்றவர்கள் செய்கின்ற இந்த அர்ப்பணிப்பு நிச்சயமாக சமூகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது என்பதில் ஐயமில்லை.

இந்த அறப்பணியை மேலும் ஊக்கப்படுத்திடவும் உதவி செய்திடும் நல்ல உள்ளங்களின் எண்ணிக்கையை அதிகரித்திடவும் யாரெல்லாம் கல்வி நிதியுதவி அளித்து முஸ்லிம் சமுதாயத்தின் வறுமையை ஒழித்திட சேவை செய்து வருகின்றனரோ அந்த முஃமீன்களோடு சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.

பொதுவாக கல்வி நிதியுதவி கோரி வரும் விண்ணப்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஓரளவிற்கு தங்கள் குழந்தைகளின் கல்விச் செலவை தாங்களே பூர்த்தி செய்திட முடியும் என்ற நிலையில் உள்ளவர்களும் கூட உதவி கோரி அறக்கட்டளைகளுக்கு விண்ணப்பிப்பது சற்று கவலை அளிக்கிறது.

மேலும் அனைத்து நிறுவனங்களுக்கும் விண்ணப்பித்து அதன்மூலம் கிடைக்கின்றவரை லாபம் என்ற எண்ணம் உடையவர்களும் அதிகரித்து வருகின்றனர்.

எங்கே முஸ்லிம் சமூகத்தின் ஒரு சிலர் தங்களது கடமைகளையும் பொறுப்புகளையும் மறந்து வசதியுடையவர்களின் அர்ப்பணிப்பு எண்ணத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

முஸ்லிம்கள் சிலரின் அறியாமையால் பெருகி வரும் இதுபோன்ற சிறிய சிறிய இடையூறுகளைத் தவிர்த்து இந்தக் கல்விச சேவை வெற்றியடைந்திடவும் அதன் மூலம் முஸ்லிம் சமூகம் முழுமையான பலனைப் பெறவும் கல்வி உதவி செய்யக்கூடியவர்கள் தயவு கூர்ந்து கீழ்வரும் வழிமுறைகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு அறப்பணிகளை மேலும் மேலும் தொடர்ந்திடவேண்டுகிறோம்.

1. அறக்கட்டளைகள் மற்றும் தனவந்தர்கள் தாங்கள் அளிக்கின்ற கல்வி நிதியுதவி மூலம் பயன்பெறும் மாணவ, மாணவியர்களும் பிற்காலத்தில் இந்தச் சமூகப் பணியில் இணைத்துக்கொள்ளக்கூடிய அளவிற்கான வழிகாட்டுதல் மிகவும் அவசியம். அப்போதுதான் உதவியவர்களின் நோக்கமும் சமுதாயத்தின் தேவையும் தொடர்ந்து பூர்த்தியாகும்.

2. இன்றைய இந்தியச் சமூகத்தில் முஸ்லிம் சமுதாயம் பெரிதும் சிக்கலைச் சந்திக்கும் துறைகளுக்கான படிப்புகளைத் தேர்வு செய்யும் மாணவ, மாணவியர்கே நிதியுதவியில் முன்னுரிமை கொடுப்பது நல்லது. இது சமூகத்தின் பாதுகாப்பு நிலையை பெரிதும் உயர்த்தும். அந்த வகையில் அரசுப் பணியை நோக்கிய கல்விப் பயணத்திற்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம். அதிலும் குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ், உளவுத்துறை, காவல்துறை மற்றும் இதழியல்(ஜர்னலிசம்), சட்டம் ஆகிய துறை சார்ந்த படிப்புகளைப் படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தி உதவி செய்திட வேண்டும். இவற்றிற்கு முழு முன்னுரிமை கொடுப்பது அடுத்த தலைமுறையின் சமூகப் பாதுகாப்பிற்கு வழிவகுக்கும்.

3. உதவி செய்துவரும் பெருமக்கள் மிகக் குறிப்பாகச் செய்ய வேண்டியது ஒரு மாணவனின் அல்லது மாணவியின் கல்வித் தொகை முழுவதற்கும் பொறுப்பேற்று படிப்பு முழுமை பெறும் வரை நிதியுதவி செலுத்திட வேண்டுகிறோம். இருக்கின்ற பணத்தை குறுகிய தொகையாகப் பிரித்துப் பெறுகின்ற மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் தேவை முழுமையாக பூரத்தியாகாமல் இன்னும் யாரெல்லாம் உதவி செய்திகிறார்கள் அவர்களிடமும் பெற வேண்டும் என்கிற மோசமான பழக்கத்தை சமுதாயத்தில் ஏற்படுத்திவிடும், ஏற்படுத்தி வருகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

4. பட்ட மேற்படிப்பு மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ளும் மாணவ, மாணவியற்க்குத்தான உதவிகள் அதிகம் தேவைப்படுகிறது. இயற்பியலில், வேதியியலில், கணிதத்தில், வேளாண்மையில், மருத்துவம், விண்வெளி போன்ற படிப்புகளில் ஆய்வுகள் மேற்கொள்பவர்களுக்கு ஆய்வுகள் முடிவுபெறும் வரை உதவிட வேண்டுகிறோம். அத்தகைய ஆய்வுகள் மனிதகுலத்திற்கும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் பல அரிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டு வரும். பல புதிய விஞ்ஞானிகள் கிடைப்பதற்கு வழிவகுக்கும்.

5. இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் கல்வியின் அவசியத்தையும் ஆர்வத்தையும் எடுத்துச் சொல்லும் பிரச்சாரத்திற்கு (propogation)நிதியுதவி தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும். துண்டுப்பிரசுரங்கள், கருத்தரங்கஙகள், பொதுக்கூட்டங்கள் என்று கல்விப் பணிகள் முஸ்லிம் சமூகத்தில் தொடர்ந்து நடைபெற வேண்டும்.

ஆக சமுதாயத்தின் தேவையை பூர்த்தி செய்யும் துறைகளுக்கு முழு முன்னுரிமை கொடுப்பது படிக்கின்ற காலம் முழுமைக்கும் கொடுப்பது; ஆய்வுகளை ஊக்கப்படுத்துவது; தொடர் பிரச்சாரம் செய்வது. இதன்படி நமது அறப்பணிகளை அமைத்துக் கொண்டு கைகோர்த்துச் செயல்படுவோம் என்றால இன்ஷா அல்லாஹ் ஒரு மாபெரும் சமூகப்புரட்சி நமது சமூகத்தில் நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை. அவை முஸ்லிம் சமூகத்தை முன்னேறிய சமூகமாக வெகு விரைவில் மாற்றிவிடும் இன்ஷா அல்லாஹ்.

ஆக்கம் நன்றி: CMN சலீம்

கல்விதொடர்பான ஆலோசனைகளுக்கு :தொலைபேசி எண் 91 9382155780.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!