Showing posts with label ஆர்.எஸ்.எஸ். Show all posts
Showing posts with label ஆர்.எஸ்.எஸ். Show all posts

Sunday, July 31, 2011

ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை ஒடுக்க புதிய சட்டம் வருகிறது!


மத்திய அரசு கொண்டு வர உள்ள மத வன்முறை தடுப்புச் சட்ட மசோதா அபாயகரமானது மற்றும் ஜனநாயகத்திற்கு விரோதமானது,'' என, விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பயங்கரவாதி அசோக் சிங்கால் கூறியுள்ளார்

காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையிலான தேசிய ஆலோசனைக் குழு, "மத வன்முறைகள் மற்றும் குறிப்பிட்ட பிரிவினரை குறிவைத்து தாக்கும் வன்முறைகள் தடுப்புச் சட்ட வரைவு மசோதாவை' தயாரித்துள்ளது. பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. புதிய சட்டத்தை இயற்றி, சிறுபான்மையோரை திருப்திபடுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது.

சோனியா தலைமையிலான தேசிய ஆலோசனைக் குழு என்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. அதன் உறுப்பினர்கள் பெரும்பாலோர் இந்து மதத்திற்கு எதிரானவர்கள். மத வன்முறை தடுப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் நிச்சயம்  இனக் கலவரங்கள் ஏற்படும் போது, இந்துக்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை பாய்ச்சவே இந்த ஏற்பாடு.

இந்த சட்ட மசோதாவின் விளைவுகளை அறிந்தவர்கள் நிச்சயமாக, நாடு தழுவிய போராட்டங்களை நடத்துவர். அவர்களுக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். தேவைப்பட்டால், அரசியல் கட்சிகளின் ஆதரவும் கேட்கப்படும். புதிய சட்ட மசோதா குறித்து, விஸ்வ இந்து பரிஷத் சார்பில், நாடு தழுவிய விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும். பார்லிமென்ட் கூட்டத் தொடரில், எம்.பி.,க்களை நேரில் சந்தித்து, மத வன்முறை தடுப்புச் சட்டத்தை எதிர்க்க வேண்டும் என, கேட்டுக் கொள்வோம்.

சிந்திக்கவும்:  இந்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கங்களால் கலவரம் நடத்தி சிறுபான்மையினரை கொன்று குவிக்க முடியாமல் போகும். அப்படி மீறி கலவரங்கள் நடத்தினால் அவர்கள் மீது இந்த சட்டம் பாயும். இதனால் தான் வலதுசாரி ஹிந்து தீவிரவாத இயக்கங்களான ஆர்.எஸ்.எஸ். , பாரதிய ஜனதா, விஸ்வ இந்து பரிஷத், மற்றும் அதன் துணை அமைப்புகள் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம் 1925 யில் தொடங்கப்பட்டது. இதன் துணை அமைப்புகள் பல்வேறு பெயர்களில் செயல்பட்டு வருகின்றன. ஹிந்து தீவிரவாத இயக்கங்களின் ஊற்று கண் ஆர்.எஸ்.எஸ். என்று சொல்லலாம். இந்த இயக்கம் தொடங்கப்பட்டது முதல் இந்தியா முழுவதும் நடத்திய இனக்கலவரங்கள் பல்லாயிரக்கணக்கில் அடங்கும். அதில் குறிப்பிட்டு சிலவற்றை சொல்லலாம்.

அவை,  பாகல் பூர், பீவாண்டி, குஜராத், மும்பை, நெல்லி, ஒரிசா, ரத யாத்திரை என்கிற ரத்த யாத்திரை இவைகளை கலவரங்கள் என்ற பெயரில் சேர்க்க முடியாது  இவை ஒரு இன அழிப்பு என்றே சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அதில் பல்லாயிரக்கணக்கில் சிறுபான்மை மக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டனர். இதை நிகழ்த்தியவர்கள் இதுவரை சட்டத்தின் பிடியில் தண்டிக்கப்படாததும், அவர்கள் சார்ந்த இயக்கங்கள் தண்டிக்கப்படாததும் குறிப்பிடத்தக்கது.இந்த பயங்கரவாதிகளை சட்டத்தின் பிடியில் கொண்டுவரவே இந்த சட்டம் வருகிறது. அதனாலேயே இத்தனை ஆர்ப்பாட்டமும், எதிர்ப்பும்.

Wednesday, July 27, 2011

நார்வே தீவிரவாதி - இந்துத்துவ தொடர்பு - திடுக் தகவல்கள்

நார்வேயில் 92 நபர்களை படுகொலை செய்த தீவிரவாதி அண்டேர்ஸ் ப்ரிவிக் இந்தியாவில் உள்ள இந்துத்துவ தலைவர்களை புகழ்ந்தும் அவர்களின் திட்டங்களை மேற்கோள் காட்டியும் எழுதியுள்ள ஆவணங்கள் பரபரப்பையும் இந்துத்துவ தலைவர்களுக்கு சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 
 ”2083: ஐரோப்பாவின் சுதந்திர பிரகடனம்” எனும் தலைப்பில் ப்ரிவேக் எழுதியுள்ள 1500 பக்க திட்ட ஆவணத்தில் 100 பக்கங்களுக்கு மேல் இந்தியா மற்றும் இந்துத்துவ சக்திகளை குறித்தும் விரிவாக எழுதியுள்ளார். மேலும் இஸ்லாம் ஐரோப்பாவில் பரவுவதை தடுக்க தன் சகாக்களோடு இந்துத்துவ சக்திகள் தோளாடு தோளாய் போராட வேண்டும் என்றும் எழுதியுள்ளார். இந்திய தேசியவாதிகளையும் சனாதன தர்மத்தை பாதுகாப்பவர்களையும் உண்மையான வீரர்கள் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.

தன்னுடைய ஆவணத்தில் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஏ.பி.வி.பி (BJP, RSS and ABVP) யை குறித்தும் அவர்களின் இணையதளங்களிலிருந்து சான்றுகளை எடுத்ததாகவும் குறிப்பிடுகிறார். ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலையின் பெயரை மாற்ற இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் படுகொலை செய்யப்பட்ட இந்துக்களின் பெயராலேயே அம்மலை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வலதுசாரி வரலாற்றாசிரியர் ராவை மேற்கோளிட்டு இந்துக்கள் முஸ்லீம்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் பிரேவிக் தான் இந்தியாவில் உள்ளவர்களோடு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளான். இது குறித்து கருத்து தெரிவித்த ஆர்.எஸ்.எஸ்ஸின் ராம் மாதவ் இது உள்நோக்கத்துடன் செய்யப்படும் பிராசரம் என்றும் வி.எச்.பியின் வினோத் பன்சால் பிரேவிக் இந்து தேசியவாதிகளை புகழ்ந்தது தேவையற்றது என்றும் கூறியுள்ளார். ஆனால் பி.ஜே.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிங்கால் அத்தீவிரவாதியின் வழிமுறைகள் தவறென்றாலும் அவரின் சித்தாந்தத்தை தான் ஆதரிப்பதாக கூறினார்.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!