Showing posts with label ஏக இறைவன் அல்லாஹ். Show all posts
Showing posts with label ஏக இறைவன் அல்லாஹ். Show all posts

Wednesday, April 7, 2010

வெற்றிக்கு வழி! இன்றையச் சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும்.தொடர் 8

சண்முகம் பிள்ளை ஆச்சரியத்துடன் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தார். ரயில் அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது.தினசரி பேப்பர்களை ஒரு சிறுவன் விற்றுக்கொண்டிருந்தான்.பஷீர் அதை வாங்கிக் கொண்டு வந்தார்.தலைப்புச்செய்தியாக அது இருந்தது,"பெரியார்தாசன் இஸ்லாத்தைத் தழுவினார்"தலைப்பைப் பார்த்துவிட்டு,சுபானல்லாஹ்,அல்லாஹ் தூய்மையானவன்.என மொழிந்துவிட்டு செய்திகள் போனார்,

"தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரும் பேராசிரியருமான முனைவர் பெரியார் தாசன் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். அவர் இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்று அறிவித்தார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார் தாசன். திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் சிசுக் கொலைகள் குறித்த திரைப்படமான கருத்தம்மாவில் நடித்துள்ளார்.பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டு மக்களின் அபிமானத்தைப் பெற்றவர்.

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை தந்த பெரியார் தாசன் அங்கு வைத்து இஸ்லாத்தைத் தழுவினார். நேற்று (மார்ச் 12) அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார். தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சனிக்கிழமை (மார்ச் 13) அன்று அவர் புனிதமக்கா சென்று உம்ரா நிறைவேற்றுகிறார்."

படித்துமுடித்தவுடன் ஆனந்தத்தால் கண்கள் பனித்தன,இதைக்கண்ணுற்ற சண்முகம் பிள்ளையும்,ரஞ்சிதம் அம்மாளும் பதறிப்போயினர்.அவர்களின் கைகளில் அந்த செய்திப் பேப்பரை கொடுத்துவிட்டு,இறைவனின் அந்த அற்புதத்தை எண்ணி கையேந்தி துவா செய்யலானார்,பஷீர் பாய்.

அந்த செய்தியை படித்துமுடித்த சண்முகம் பிள்ளையும்,ரஞ்சிதம் அம்மாளும் ஒரு முடிவுக்கு வந்தவர்களாக சொன்னார்கள்."இவ்வளவு அற்புதமான,அறிவுப்பூர்வமான,உண்மையான இந்த இஸ்லாம் மார்க்கத்தை ஏற்காமல் இருக்க எங்களுக்கு என்ன நேர்ந்தது,இப்போதே ஏற்றுக்கொள்கிறோம்,அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை,முஹம்மத் நபி ஸல் அவர்கள் அவனின் தூதர் ஆவார்கள்"

அதைக்கேட்ட பஷீர் பாய்,சலீம் நானா மற்றும் அங்கு கூடியிருந்தவர்கள் சந்தோஷத்தால் குதூகலம் அடைந்தனர்.ரயிலோ அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது.

முற்றும்
முஹம்மத் பிர்தௌஸ் 

Sunday, January 24, 2010

வெற்றிக்கு வழி! இன்றையச் சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும்.தொடர் 7

சிறிது அமைதியாய் இருந்த சண்முகம் பிள்ளை தொடர்ந்தார்," சரி பஷீர், இப்போ உலகத்துல நிறைய பிரச்சனைகள்,சிக்கல்கள் இப்படி எத்தனையோ இருக்கு.அத தீர்ப்பதற்கு இறைவனின் இறுதி வேதம் என்று சொல்கிறீர்களே,அதில் தீர்வு இருக்கிறதா?"

"ஏன் இல்லாமல் சண்முகம் பிள்ளை,இதோ கேளுங்கள்,"இன்றைய உலகம் சந்திக்கும் முதன்மையான சிக்கல்கள் யாவை?

இக்கேள்வியை இன்று யரிடம் கேட்டாலும் - அவர் சமூக ஆர்வலராக இருந்தாலும் சரி, பாமரனாக இருந்தாலும் சரி, அறிவில் சிறந்த சான்றோர்களாய் இருந்தாலும் சரி - பதில் ஒன்று தான்.

வன்முறை, வறுமை, ஒழுக்கச் சீர்கேடுகள், போதை - இது தான் அந்தப் பதில்.

இன்று எவ்வகைச் சிக்கல்களானாலும் அவை மூன்று பரிமாணங்களைக் கொண்டுள்ளன:

1. உளவியல் சார்ந்தது.

2. சமூகம் சார்ந்தது.

3. உலகளாவியது.

அதாவது, தனிமனிதனின் உள்ளம் சார்ந்த பலப் பண்புகள்தாம் இறுதியில் உலகளாவியச் சிக்கல்களாய் வெடிக்கின்றன.

அதனால்தான் திருக்குர்ஆன் 'உள்ளம்' தொடங்கி 'உலகம்' வரை நடைமுறைப்படுத்தும் வகையில் தீர்வுகளைத் தருகின்றது.

எடுத்துக்காட்டாக, மனிதனின் உள்ளத்தில் தோன்றும் பழிவாங்கும் பண்பே இறுதியில் வன்முறையாக - தீவிரவாதமாக உலகைப் பாதிக்கிறது. இது போன்றுதான் இதரச் சிக்கல்களும்!

1. தீவிரவாதம்: தீர்வு என்ன?

திருக்குர்ஆன் இந்தச் சிக்கலுக்கான உளவியல் காரணங்களை முதலில் தடுக்கின்றது. அநீதி இழைத்தலும் பழிவாங்குதலும்தான் தீவிரவாதம் தோன்ற அடிப்படைக் காரணங்கள். ஆகவே, திருக்குர்ஆன் நீதியை நிலைநாட்டும்படியும் அநீதி இழைக்காமல் வாழும்படியும் ஆணையிடுகிறது.

"இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்காக வாய்மையில் நிலைத்திருப்போராயும் நீதிக்குச் சான்று வழங்குவோராயும் திகழுங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்து விடக் கூடாது. நீங்கள் நீதி செலுத்துங்கள். அதுவே இறையச்சத்திற்கு மிகப் பொருத்தமானது" (குர்ஆன் 5:8).

"நீங்கள் எதைப் பேசும்போதும் நீதியுடன் பேசுங்கள்; உங்களின் நெருங்கிய உறவினர் பற்றிய விவகாரமாயினும் சரியே!" (குர்ஆன் 6:15).

"திண்ணமாக அல்லாஹ் நீதி செலுத்தும் படியும் நன்மை செய்யும்படியும் உறவினர்களுக்கு ஈந்துதவும்படியும் கட்டளையிடுகிறான். மேலும், மானக்கேடான, வெறுக்கத்தக்க, அக்கிரமமான செயல்களை விலக்குகிறான்.." (குர்ஆன் 16:90).

நீதி செலுத்துவதைக் கடமையாகக் கூறும் குர்ஆன், அநீதி இழைக்கப் பட்டவனுடைய நியாயமான உணர்வுகளுக்கும் மருந்திடுகிறது.

பொதுவாக அநீதி இழைக்கப் பட்டவனுக்கு நீதி கிடைக்காதபோது அவனுள் பழிவாங்கும் உணர்வு எழுவது இயற்கை. ஆனால் தண்டனை அளிக்கும் அதிகாரத்தை இஸ்லாம் அரசுக்குத்தான் அளித்துள்ளது. தனிமனிதன் பழிவாங்குவதை -அதாவது சட்டத்தைக் கையில் எடுப்பதை- இஸ்லாம் அனுமதிக்கவில்லை. தனிமனிதன் பழிவாங்குவதை இஸ்லாம் ஆதரிக்கவில்லை. மாறாக, மன்னிக்கும் பண்பை ஏவுகிறது.

"..அவர்கள் கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோரையே நேசிக்கிறான்" (குர்ஆன் 3:134).

"நன்மையும் தீமையும் சமமாக மாட்டா. நீர் நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்ளும். அவ்வாறாயின் உம்முடைய கொடிய பகைவனும் உற்ற நண்பனாய் மாறி விடுவான்" (குர்ஆன் 41:34).

இன்று பயங்கரவாதம் உருவாவதற்கு முதன்மைக் காரணம் குற்றங்களுக்குத் தண்டனை கிடைக்காததே ஆகும். இஸ்லாமிய அரசு தண்டனைச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கண்டிப்பாக இருக்கும்.

"...இறைநம்பிக்கையாளர்களே, கொலைக்குப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதியாக்கப்பட்டுள்ளது" (குர்ஆன் 2:178). இது அரசுக்கு குர்ஆன் இடும் கட்டளை.

"எவர்கள் தம்மீது கொடுமை இழைக்கப் பட்டபின் பழி வாங்குகிறார்களோ அவர்கள் மீது ஆட்சேபணை கூற இயலாது" (குர்ஆன் 42:41).

எனவே அநீதி இழைக்கப்பட்டவன் அரசை அணுகித் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஏற்ற அளவு பழி தீர்த்துக் கொள்ள அனுமதி அளிக்கிறது குர்ஆன். இதனால் அவன் உள்ளத்தில் பழிவாங்கும் எண்ணம் அழிந்து விடுகிறது. அதே சமயம் தீங்கிழைத்தவனை மன்னிக்கும் அதிகாரத்தையும அவனுக்குத் திருக்குர்ஆன் வழங்குகிறது.

"கொலை செய்தவனுக்கு அவனுடைய சகோதரனால் (அதாவது கொல்லப்பட்ட உறவினரால்) சலுகை அளிக்கப்பட்டால் பிறகு நியாயமான முறையில் நிர்ணயிக்கப்படும் உயிரீட்டுத் தொகையை நேர்மையான முறையில் அவன் வழங்கிட வேண்டும். இது உங்கள் இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட சலுகையும் கருணையுமாகும்" (குர்ஆன் 2:178).

"ஆயினும் யார் பொறுமையை மேற்கொண்டு மன்னித்து விடுகிறார்களோ அவர்களின் இந்தச் செயல் திண்ணமாக உறுதி மிக்க (வீரச்) செயலைச் சேர்ந்ததாகும்" (குர்ஆன் 42:43).

மன்னிப்பது தான் வீரமிக்கது என்று குர்ஆன் கூறுகிறது.

இவ்வாறு அநீதிக்கு நீதமான முறையில் தீர்வு கண்டு விட்டால் வன்முறை எனும் எண்ணமே அடியோடு நீங்கி விடும் அல்லவா?

2. வறுமை: தீர்வு என்ன?

நவநாகரீக உலகில் வறுமையா? தொலைக்காட்சிப் பெட்டியின்முன் வெட்டியாய்ப் பொழுதைக் கழிக்கும் நமக்கு வறுமை பற்றிய சிந்தனையா? ஆயினும் உலகில் பெரும்பகுதி இன்று வறுமையில் வாடுகிறது என்பது உண்மை. ஏன், வளர்ந்த நாடு என்று அழைக்கப்படும் அமெரிக்காவில்கூட வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வறுமைக்கான காரணங்களாகத் திருக்குர்ஆன் இரண்டு முக்கிய விஷயங்களைக் கூறுகிறது:

அ) தவறான பொருள் பங்கீடு

ஆ) வட்டியும் பதுக்கலும்.

அ) செல்வம் உங்களிலுள்ள செல்வர்களிடையே மட்டும் சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது என்று திருக்குர்ஆன் கூறுகிறது (59:7).

ஆனால் இன்று வளர்ந்த நாடுகள் செல்வர்களை மேலும் செல்வர்களாக்கிக் கொண்டிருக்கின்றன. ஏழைகளை மேலும் ஏழைகள் ஆக்கிக் கொண்டிருக்கின்றன. அண்மைக்காலப் புள்ளி விவரங்கள் இதனை மெய்ப்பிக்கின்றன. உலகின் 0.13 விழுக்காடு மக்கள் 25 விழுக்காடு உலக வளங்களை அனுபவிக்கின்றனர் (பார்க்க: குளோபல் இஷ்யு -2004).

ஆ. வட்டி: இன்று உலக நாடுகளின் கடன் சுமையை ஆண்டுதோறும் அதிகரிக்கச் செய்வதில் வட்டியின் பங்கு முதன்மையானதாகும். வட்டிக் கொடுமையைப் பற்றி நாம் விளக்க வேண்டிய அவசியமே இல்லை. அனைவரும் அறிந்ததே.

"இறைவன் வணிகத்தை ஆகுமானதாக்கி வட்டியைத் தடுத்து (ஹராமாக்கி) விட்டான்" (குர்ஆன் 2:215).

"மக்களுடைய பொருள்களுடன் கலந்து பெருக வேண்டும் என்பதற்காக நீங்கள் வட்டிக்கு விடும் பணம் அல்லாஹ்விடத்தில் பெருகுவதில்லை" (குர்ஆன் 30:39).

"உங்களில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்" (குர்ஆன் 2:188).

மேற்கூறிய வசனங்களைப் பொருளாதார விதிகளாக மனிதர்களுக்குக் குர்ஆன் வழங்குகிறது. மேலும் செல்வம் என்பது இறைவன் வழங்கிய அமானிதம் எனும் அடிப்படையை இஸ்லாம் வலியுறுத்துகிறது. எனவே இறைவன் கூறியவாறு செல்வத்தைச் செலவு செய்யப் பணிக்கிறது.

* "உங்கள் செல்வத்திலிருந்து வறியவர்களுக்கும் ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் பங்கு உண்டு" (குர்ஆன் 9:60).

* ஒவ்வோர் ஆண்டும் செல்வர்கள் தங்களின் செல்வத்திலிருந்து 2.5 விழுக்காடு தொகையை ஜகாத்தாக (கட்டாய அறமாக) ஏழை எளியோருக்கு வழங்க வேண்டும் என்று குர்ஆன் விதித்துள்ளது. இஸ்லாமிய நெறியின் ஐந்து அடிப்படைக் கடமைகளில் இதுவும் ஒன்று.

* கடன் கொடுக்கல் - வாங்கல் முறைகளையும் அவற்றின் ஒழுங்குகளையும் குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது.

இவ்வாறு குர்ஆன் படிப்படியாக சமுதாயத்திலிருந்து இல்லாமையைப் போக்கி விடுகிறது. இத்தகைய சமுதாயத்தில் வாழும் ஒரு மனிதனிடம் பிறர் பொருளை அபகரித்தல் எனும் எண்ணம் ஏற்பட வாய்ப்பே இல்லை. அதையும் மீறி ஒருவன் அடுத்தவனின் பொருளைத் திருடுவானேயானால் அதற்கான தண்டனையையும் குர்ஆன் கூறுகிறது:

"திருடுபவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, அவர்களுடைய கைகளைத் துண்டித்து விடுங்கள். இது அவர்களுடைய சம்பாதனைக்கான கூலியாகும். மேலும் அல்லாஹ் வழங்கும் படிப்பினை மிக்க தண்டனையாகும்" (குர்ஆன் 5:38).

நல்லுரை, இறையச்சம், தண்டனை ஆகிய இம்மூன்றும் சமூகத்தில் பொருளியல் சிக்கல்களைத் தீர்த்து விடும் என்பது திண்ணம்.

3. ஒழுக்கக்கேடுகளும் புதிய நோய்களும்

இன்று புதிது புதிதாக உருவாகும் நோய்களுக்கு ஒழுக்கச் சீர்கேடுகளும் விபச்சாரமும்தான் முதன்மைக் காரணங்கள். "விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள்" என்று குர்ஆன் கட்டளையிடுவதுடன் "அது மானக்கேடான செயலாகவும் தீய வழியாகவும் இருக்கிறது" (17:32) என்றும் எச்சரிக்கிறது.

ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பைக் காத்துக் கொள்ளுமாறு கூறுகிறது.

"(நபியே) இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம் அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளும்படியும் தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும்" (குர்ஆன் 24:30).

"மேலும் (நபியே) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்: அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும். தங்கள் வெட்கத்தலங்களைப் பாதுகாக்கட்டும்" (குர்ஆன் 24:31).

இறுதியாக, கற்பைப் பாதுகாத்துக் கொள்ள மிகச் சிறந்த வழியாகத் திருமணத்தை முன்னிறுத்துகிறது.

"உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவர்களுக்குத் திருமணம் செய்து வையுங்கள்" (குர்ஆன் 24:32).

இன்று மேலை நாடுகளில், "தவறே இல்லை; இயற்கையானது" என்று விவாதிக்கப்படும் ஓரினத் திருமணங்களையும் ஓரினச் சேர்க்கையையும் இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது (குர்ஆன் 26:165).

4. சுற்றுச் சூழல் பாதிப்பு

இந்தச் சிக்கல் இன்று உலகைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கிறது. நிலநடுக்கங்கள், ஆழிப்பேரலை (சுனாமி), புயல், வெள்ளம், வறட்சி என அனைத்திற்கும் மனிதனின் செயல்கள்தாம் காரணம். அறிவியல் முன்னேற்றங்களும் தொழில் மயமாக்கலும் கால நிலையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.

திருக்குர்ஆன் இது குறித்தும் கவலை தெரிவிக்கிறது. பூமியிலும் கடலிலும் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம். இதனால் முன் சென்ற சமூகங்கள் அழிந்தன என எச்சரிக்கிறது.

"மக்கள் தங்கள் கைகளால் எதைச் சம்பாதித்தார்களோ அதன் காரணமாகத் தரையிலும் கடலிலும் அராஜகமும் குழப்பமும் தோன்றி விட்டிருக்கின்றன. அவர்கள் செய்த சில செயல்களின் விளைவை அவர்கள் சுவைப்பதற்காக" (குர்ஆன் 30:41).

18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாவீரன் நெப்போலியன் கூறுகிறார்:

"நான் உலகிலுள்ள அறிவாளிகளை அழைத்து குர்ஆனின் அடிப்படையிலான சமநீதிமிக்க அரசை அமைக்க எண்ணுகிறேன். அதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை. ஏனெனில் குர்ஆன் மட்டுமே உண்மை. குர்ஆனால் மட்டுமே மனிதர்களுக்கு மகிழ்ச்சியைத் தர முடியும்.(பார்க்க: Bonaparte et I'Islam Paris, France PP 105-125)

சென்ற நூற்றாண்டின் தலை சிறந்த அறிவாளி எனக் கருதப்படும் ஜார்ஜ் பெர்னாட்ஷா கூறுகிறார்:

"முஹம்மத் அவர்களின் மார்க்கம் எதிர்காலத்திலும் ஏற்றுக் கொள்ளப்படும். ஏனெனில் ஐரோப்பியர் அதனை இப்பொழுதே ஏற்றுக் கொள்ளத் தொடங்கி விட்டார்கள்.....முஹம்மத் அவர்களைப் போன்ற ஒரு மனிதர் இப்பூமியின் அதிகாரியாகப் பொறுப்பேற்பாரானால் புதிய உலகின் சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து அமைதியும் மகிழ்ச்சியும் மலரும்."(A collection of writings of some of the eminent scholars - 1935 ed P. 77)",சொல்லிமுடித்த பஷீர் காக்காவை,உற்றுப் பார்த்துகொண்டிருந்தார் சண்முகம் பிள்ளை.

இறைவன் நாடினால் தொடரும்.....

முஹம்மத் பிர்தௌஸ்

Sunday, January 10, 2010

வெற்றிக்கு வழி! தீயசெயல்களைச் செய்ய அவர்களைத் தூண்டும் சக்தி எது? தொடர் 6

இஸ்லாத்தினை பற்றிய ஒவ்வொரு விளக்கமும் சண்முகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.ஒரு முடிவுக்கு வந்தார்.இந்த ரயில் பயணத்தை வைத்து,என்ன என்ன சந்தேகங்கள் உண்டோ அத்தனையையும் கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ள வேண்டும்.

"பஷீர்,கடவுள் மறுப்பு என்று ஒரு சிலர் கூறி வருகின்றனர்.அதை எப்படி இஸ்லாம் எதிர் கொள்கிறது,கொஞ்சம் விளக்க முடியுமா?"

என்ன,இப்படி கேட்டுவிட்டீர்கள் நண்பரே,தெரிந்ததை சொல்கிறேன்,என்ற பஷீர் சொல்ல ஆரம்பித்தார்," பகுத்தறிவற்ற எண்ணற்ற பிராணிகளைப்போல், பகுத்தறிவுள்ள மனிதனும் ஒரு பிராணியே. சிலர் சொல்லுவது போல் அவனுக்கு மறுமை வாழ்க்கை என்று ஒன்றில்லை. மனிதன் மரணிப்பதோடு அவனது வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. மற்ற பிராணிகளைப் போல் அவனும் வாழந்து மடிந்து மண்ணாகிப் போவதே அவனது இறுதி முடிவு என்பது நாத்திக நண்பர்களின் உறுதியான முடிவு.

இந்த அவர்களின் முடிவின் அடிப்படையில் எமக்குச் சில ஐயங்கள் எழுகின்றன. அவற்றைத் தீர்த்து வைப்பது அவர்களின் கடமையாகும்.

நாத்திகர்கள் தாங்கள் தான் அசலான பகுத்தறிவாளர்கள் என்று பறைசாற்றிக் கொள்வது ஊர் அறிந்த உண்மை. எனவே எமது சில பகுத்தறிவுக் கேள்விகளுக்கு விடை தருவது அவர்கள் மீதுள்ள பொறுப்பாகும். அவர்கள் தரும் பதில்களிலிருந்து அவர்கள் பகுத்தறிவுப் பாசறையிலுள்ளவர்களா? அல்லது ஐயறிவு பாசறையிலுள்ளவர்களா? என்பதை எம்போன்றவர்கள் விளங்கிக் கொள்ள முடியும்.

உலகில் காணப்படும் கோடான கோடி ஜீவராசிகளைப் போல் அதாவது புழு பூச்சிகளைப் போல் மனிதனும் ஒரு புழு -பூச்சியே - ஒரு பிராணியே ஜீவராசியே! அனைத்து உயிரினங்களும் மடிந்து மண்ணணாகிப் போவது போல் மனிதனும் மடிந்து மண்ணாகி போகின்றவன்தான். மற்றபடி அவனுக்கொரு ஆத்மாவோ, மறுமை வாழ்க்கையோ இல்லை என்பதே நாத்திகர்களின் பகுத்தறிவு வாதம். அதாவது உலக வாழ்வோடு மனித வாழ்வு முற்றுப் பெற்று விடுகிறது. அதன் பின் ஒரு தொடர்ச்சியும் இல்லை என்பதே அவர்களின் வாதம். இப்போது அவர்களின் வாதத்தில் நமக்கு ஏற்படும் ஐயங்கள் இவைதான்.

மற்ற படைப்பினங்களைப் போன்றதொரு சராசரி படைப்பினமே மனிதன் எனும் போது மற்ற படைப்பினங்களுக்குரிய சட்டங்களே மனிதனுக்கும் பொருந்த வேண்டும். மற்ற படைப்பினங்களைப் பொருத்தமட்டிலும் "வல்லனவற்றின் வாழ்வு வளம்" (Survival of the fittest) என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே அவற்றின் வாழ்வு அமைந்துள்ளது. அதாவது வலிமையுள்ளவை வலிமையற்றவற்றை வீழ்த்தி, அல்லது அழித்து தம்மை வளப்படுத்திக் கொள்கின்றன. உதாரணமாக பெரிய மீன்கள் சிறிய மீன்களைக் கொன்று தமக்கிரையாக்கி கொள்கின்றன. சிங்கம், புலி போன்றவை மான், மாடு போன்றவற்றைக் கொன்று தமக்கிரையாக்கிக் கொள்கின்றன. இந்த "வல்லனவற்றின் வாழ்வு வளம்" புழு, பூச்சியிலிருந்து, ஊர்வனவற்றிலிருந்து, நாலு கால் பிராணிகள் வரை பொருந்தும், தரையிலுள்ள பிராணிகளுக்கும் பொருந்தும். இந்த சித்தாந்தத்தை நாத்திக பகுத்தறிவாளர்கள் அநீதி என்று தீர்ப்பு அளிப்பதில்லை.

அப்படியானால், அந்த ஜீவராசிகளைப் போன்றதொரு புழு, பூச்சி-மிருகம் போன்ற ஜீவராசிதான் மனிதன் என்று நாத்திக பகுத்தறிவாளர்கள் கூறும் போது, அதே "வல்லனவற்றின் வாழ்வு வளம்" (Survival of the Fittest) என்ற சித்தாந்தம் மனிதனுக்கும் பொருந்திப் போக வேண்டுமல்லவா? மனிதர்களிலும் வலியவர்கள் வலிமை அற்றவர்களை வீழ்த்தி தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்வதை அநீதி என்று கூற முடியுமா? இல்லை; இது அநீதி என்று நாத்திகர்கள் கூறுவார்களேயானால், எந்த அடிப்படையில் அநீதி என்று கூறுகிறார்கள்? மற்ற படைப்பினங்களைப் போன்றதொரு, மண்ணோடு மண்ணாகிப் போகும் ஒரு படைப்புத்தானே - புழு பூச்சிதானே, மிருகம் போன்றவன்தானே மனிதனும் நாத்திகர்களின் கூற்றுப்படி அப்படியானால் மற்றப் படைப்பினங்களுக்குப் பொருந்திப் போகும் "வல்லனவற்றின் வாழ்வு வளம்" (Survival of the fittest) என்ற கோட்பாடு மனிதனுக்கு மட்டும் ஏன் பொருந்திப் போகாது? இதற்குரிய சரியான விளக்கத்தை பகுத்தறிவு அடிப்படையில் தரக் கடமைப்பட்டிருக்கிறார்கள் நாத்திகர்கள். அது மட்டுமல்ல; மற்ற படைப்பினங்கள் விஷயத்தில் அது நீதியாகும்; மனிதப்படைப்பு விஷயத்தில் அது நீதியாகும்; மனிதப்படைப்பு விஷயத்தில் மட்டுமே அது அநீதியாகும் என்று பிரித்துச் சட்டம் சொன்ன அதிகாரம் பெற்ற சக்தி எது? இதற்கு பகுத்தறிவு ரீதியாக விளக்கம் தரக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

நீதிக்கும், தர்மத்திற்கும் கட்டுப்பட்டு வாழ்பவர்களில் பெரும்பாலோர் வறுமையிலும், துன்பங்களிலும் சதா உழன்று மடிகிறார்கள். அவர்கள் நீதிக்கும், தர்மத்திற்கும் உட்பட்டு வாழ்ந்ததற்குரிய நற்பலனை இவ்வுலகில் அனுபவிக்கவில்லையே! அப்படியானால் எங்கே பெறுவார்கள்?

அடுத்து வலுவில்லாதவர்கள் வலுவானவர்களை அடக்கி ஒடுக்கி தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வது அநீதியே என்ற பகுத்தறிவு ரீதியாகவும் மனச்சாட்சியின் படியும் அப்பட்டமாக ஒப்புக் கொண்டிருக்கும் நாத்திகர்களில் பலர், இன்று அதற்கு மாறாக மக்களையும் அரசையும் அதிகாரிகளையும் ஏமாற்றி அல்லது லஞ்சம் கொடுத்து கோடி, கோடியாகக் கொள்ளை அடித்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சொத்துக்களைக் குவித்துக் கொண்டிருக்கிறார்களே? இதற்குக் காரணம் என்ன? அவர்கள் அநீதி என்று ஒப்புக் கொண்டுள்ளதற்கு மாற்றமாக - மக்களிடம் அநீதி என்று அப்பட்டமாக அறிவிப்பதற்கு மாற்றமாக அந்த அநீதியான கொள்ளை அடிக்கும் செயலை செய்ய அவர்களைத் தூண்டும் சக்தி எது? அவர்களது பகுத்தறிவும், மனச்சாட்சியும் பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமற்ற செயல் என்று ஒப்புக்கொள்ளும் குடி, விபச்சாரம், சூது போன்ற தீய காரியங்களில் அவர்களில் பலர் மூழ்கி இருக்கிறார்களே? இத்தீய செயல்களைச் செய்ய அவர்களைத் தூண்டும் சக்தி எது?

இறைவனையும், மறுமையையும் உறுதியாக நம்பிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களோ மனிதனின் உடம்பில் இரத்தம் ஓடும் இடங்களிலெல்லாம் அவனது பகிரங்கப் பகைவனான ஷைத்தான் ஓடிக்கொண்டு மனிதனை வழிகெடுத்து நரகில் கொண்டு தள்ளி அதை நிரப்ப கங்கணம் கட்டிச் செயல்படுகிறான். அவனது வலையில் சிக்கியே மனிதன், தானே பாவம், அநீதி, அக்கிரமம், ஓழுக்கமற்ற செயல் என்று பகிரங்கமாக ஒப்புக் கொள்ளும் துர்ச்செயல்களைச் செய்து பாவியாக நேரிடுகிறது என்று கூறிவிடுவார்கள். நிச்சயமாக நாத்திகர்கள் இறைவனையும், மறுமையையும், ஷைத்தானையும் மறுப்பதால் இந்தக் காரணத்தை ஒப்புக் கொள்ளவும் மாட்டார்கள்; சொல்லவும் மாட்டார்கள். அப்படியானால் பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமற்ற செயல் என்று மனிதனே பகிரங்கமாக ஒப்புக்கொண்டுவிட்டு, அடுத்த கனமே அவற்றைச் செய்வதற்குரிய காரணம் என்ன? பகுத்தறிவு செய்வதற்குரிய காரணம் என்ன? பகுத்தறிவு பாதையில் பயிற்சி பெற்ற நாத்திகர்கள் அதற்குரிய காரணம் கூறக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

அடுத்து அவர்களே பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டு விட்டு அதற்கு மாறாக அந்த பாவமான செயல்களை, அநீதியான செயல்களை, அக்கிரமமான, ஒழுக்கமற்ற காரியங்களைச் செய்து கோடி, கோடியாக கொள்ளை அடித்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் குவித்து வைத்துள்ளனர். அவர்களுக்கு இன்று மக்களுக்கு மத்தியில் பெருஞ்செல்வாக்கு ஆள், அம்பு, பட்டம், பதவி, பலவித அதிகார ஆதிக்கம், அரசியல் செல்வாக்கு என்று மன்னாதி மன்னர்கள் போல் உல்லாச புரிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வுலகில் வாழ்நாள் பூராவும் அவர்கள் கொள்ளை அடித்து சேர்த்த சொத்துக்கள் அவர்களுக்கு இவ்வுலகை சுவர்க்கப்பூமியாக ஆக்கித் தருகிறது.

அவர்கள் செய்த அநீதி, அக்கிரமம், பாவச் செயல்கள், கொலை, கொள்ளைகள் இவை காரணமாக இவ்வுலகில் எவ்வித தண்டனையோ, கஷ்டமோ, துன்பமோ அனுபவிக்காமல் சுவர்க்கவாசிகள் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பாடையில் வைத்து மண்ணறையில் கொண்டு தள்ளும் வரை அல்லது தீயிலிட்டுப் பொசுக்கும் வரை இன்பமே இன்பம்; மற்றபடி துன்பத்தின் சாயல் கூட படாதபடி வாழ்ந்து மடிகிறார்கள். பகுத்தறிவு நாத்திகர்கள் பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று பகிரங்கமாக ஒப்புக் கொண்ட செயல்களைச் செய்தே அவர்கள் இவ்வுலகில் குபேர வாழ்க்கையை- சொர்க்கலோக வாழ்க்கையை அடைந்தார்கள்.

ஆனால் அவர்கள் செய்து முடித்த எந்த பாவமான செயலுக்கும், அநீதியான செயலுக்கும், அக்கிரமமான செயலுக்கும், ஒழுக்கமற்ற செயலுக்கும் அணுவத்தனை கூட தண்டனையோ துன்பமோ அனுபவிக்கவில்லை. மரணத்திற்குப் பின் மனிதனுக்கு வாழ்வு உண்டு என்று உறுதியாக நம்பும் முஸ்லிம்களோ நிச்சயமாக அப்படிப்பட்டவர்கள் இவ்வுலகளில் மக்களையும், அரசுகளையும், அதிகாரிகளையும் ஏமாற்றித் தப்பிக் கொண்டாலும் இறைவனுடைய தர்பாரில் தப்பவே முடியாது. அங்கு வசமாக மாட்டிக் கொள்வார்கள். கடுமையான தண்டனைகள் அவர்களது குற்றச் செயல்களுக்குக் காத்திருக்கிறது என்று உறுதியாகச் சொல்லி விடுவார்கள். ஆனால் இறைவனையும், மறுமையையும் மறுக்கும் நாத்திகர்கள் இப்படிச் சொல்ல முடியாது.

அப்படியாயின் அவர்களின் பகுத்தறிவுக் கொள்கைப்படி இப்படிப்பட்ட பாவமான, அநீதியான, அக்கிரமமான, ஒழுக்கமற்ற செயல்களைச் செய்து வளமான வாழ்வை அமைத்துக் கொண்ட கொடியவர்கள் அதற்குரிய தண்டனையை அனுபவிப்பது எப்போது? பகுத்தறிவு ரீதியாக விடை தரக்கடமைப் பட்டிருக்கிறார்கள். ஒன்று புழு, பூச்சி, மிருகம் போன்ற படைப்பினங்களைப் போல், மனிதனும் "வல்லனவற்றின் வாழ்வு வளம்" (Survival of the fittest) என்ற கோட்பாட்டின்படி வாழக் கடமைப்பட்டவன் என்று ஒப்புக் கொள்ள வேண்டும். இல்லை அது பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று சொன்னால் இந்த சட்டத்தை வகுத்தளித்த சக்தி எது என்பதையாவது தெளிவு படுத்த வேண்டும்.

மேலும் அவர்களே அவர்களது மனட்சாட்சிப்படி பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று அப்பட்டமாக ஒப்புக் கொண்டுவிட்டு மறைமுகமாக அவற்றைச் செய்யத் தூண்டும் சக்தி எது என்பதையும் தெளிவு படுத்த வேண்டும். இப்படி மனட்சாட்சிக்கு விரோதமாகச் செயல்பட்டு சொத்துக்களை குவித்து உலகில் குபேர வாழ்க்கை, சொர்க்கலோக வாழ்க்கை வாழ்ந்து மடியும் சண்டாளர்கள் தங்களின் குற்றங்களுக்குரிய தண்டனைகளை அனுபவிப்பது எப்போது? எங்கே? என்பதையும் தெளிவு படுத்த வேண்டும். இந்த எமது சந்தேகங்களுக்கெல்லாம் பகுத்தறிவு ரீதியான விளக்கங்களை அவர்கள் தரவேண்டும், அப்படியானால் மட்டுமே அவர்களைப் பகுத்தறிவுப் பாசறையில் பயிற்சி பெற்றவர்களாக உலகம் ஒப்புக் கொள்ளும். இல்லை என்றால் புறக்கண்ணால் பார்த்தே கடவுளை, மறுமையை ஏற்பேன் என்ற ஐயறிவு வாதத்தையே அவர்கள் முன் வைக்கிறார்கள் என்ற முடிவுக்கே முறையான பகுத்தறிறவை- நுண்ணறிவை உடையவர்கள் வர நேரிடும்.

பாவமான, அநீதமான, அக்கிரமமான, ஒழுக்கமற்ற செயல்களைச் செய்கிறவனின் மனச்சாட்சியே அவனைக் கொள்ளாமல் கொன்று கொண்டிருக்கும்; அதுவே அவனுக்குரிய தண்டனையாகும் என்ற பிதற்றலான, மழுப்பலான, நழுவலான பதிலை அவர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கவில்லை. காரணம் இந்த வாதம் உண்மையானால், இவ்வுலகிலும் அதே வாதப்படி அக்குற்றச் செயல்களுக்கு அரசுகளும் எவ்விதத் தண்டனையும் அளிக்கக் கூடாது. அவர்களின் மனட்சாட்சியே அக்கயவர்களை கொல்லாமல் கொள்வதே போதுமானதாகும் என்பதையும் நாத்திகர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்? எதைச் சரிகாணப்போகிறார்கள் நாத்திகர்கள்?"

என்ன நண்பர் சண்முகம்,நான் சொல்வது சரிதானே?என்ற பஷீர் காக்காவின் சொல்லை ஆமோதிக்கும் வண்ணம் பலமாக தலையாட்டினார் சண்முகம் பிள்ளை அவர்கள்,கூடவே ரஞ்சிதம் அம்மாளும்.....

இறைவன் நாடினால் தொடரும்.....

முஹம்மத் பிர்தௌஸ்



Saturday, October 17, 2009

வெற்றிக்கு வழி! இஸ்லாத்தை உறுதிப்படுத்தும் அறிவியல் உண்மைகள்!! தொடர் 5





"அதுமட்டுமல்ல,இன்னும் கேளுங்கள் ஷண்முகம்,பஷீர் காக்கா தொடர்ந்தார்,"முதுபெரும் இயற்பியல் அறிஞரும், நோபல் பரிசினை வென்றவருமான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்கூறினார்: மதத்தினை மெய்ப்பிக்காத அறிவியல் முடமானது; அறிவியலை மெய்ப்பிக்காத மதம் குருடானது.

"இஸ்லாத்தினைத் தவிர பிற மதங்கள் அறிவியல் ஆய்வுகளைக் கண்டு கொள்ளுவதில்லை. தங்களுடைய வேதப் புத்தகங்களை தற்கால அறிவியல் உண்மைகளுடன் பொருத்திப் பார்ப்பது இல்லை. அது, அவர்களுக்கு தேவையாகவும் இல்லை. பெரும்பாலான முஸ்லிம் அல்லாதவர்கள், தங்களுடைய வேதப் புத்தகங்களில் எழுதப்பட்டுள்ள வசனங்கள் தற்கால அறிவியலுக்கு முரணாக இருப்பதை அறிந்து கொள்ளவும் முற்படுவதுமில்லை. ஆனால், இஸ்லாம் இவைகளுக்கு மாற்றமாக மக்களை நோக்கி சவால் விடுகின்றது".

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 3:190)

வானங்களும், பூமியும் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்பதை ஆய்வு செய்து குர்ஆனோடு பொறுத்திப் பாருங்கள் என்று அறைகூவல் விடுக்கின்றது.

குர்ஆனில் உள்ள 6 ஆயிரத்திற்கும் அதிகமான வசனங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வசனங்கள் அறிவியல் கருத்துக்களை உட்பொருளாகக் கொண்டுள்ளன. குர்ஆன் என்பது அறிவியல் புத்தகமல்ல; எனினும் நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் எவையும் குர் ஆனோடு முரண்படவில்லை என்பதை நடுநிலையான அனைத்து அறிவியலாளர்களும் ஒத்துக் கொள்வர். திருக்குர் ஆனின் உள்ள அறிவியல் உண்மைகள் எதேச்சேயானவை என்று கூறுவதற்கும் வாய்ப்பில்லை அன்ற அளவிற்கு ஆதாரங்கள் குவிந்து கிடக்கின்றன.

திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள அனைத்து அறிவியல் செய்திகளையும் இப்போது கூறிவிட இயலாது.அந்த அளவுக்கு உள்ளன. எனினும் “ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதை கீழ்க்கண்ட இரு செய்திகளின் மூலம் அறியலாம்.


பெருவெடிப்புக் கொள்கை:


வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் 21:30)

பெருவெடிப்புக் கொள்கை (‘The Big Bang’) மூலமாகவே, இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்பதில் வானியற்பியல் வல்லுனர்களிடையே கருத்து வேறுபாடு இல்லை. பெருவெடிப்புக் கொள்கை என்பது,

1. இந்த முழுப் பிரபஞ்சமும் முன்னதாக மாபெரும் பருப்பொருளாக (Primary Nebula) இருந்தது.

2. பின்னர், பெரு வெடிப்பு ஏற்பட்டு பிரபஞ்சங்கள் உருவாகின.

3. அவை பிறகு நட்சத்திரங்கள், கோளங்கள், சூரியன் - சந்திரன்களாக உருவாகின.
- என்பதாகும்.

அணு சக்தி ஆய்வுக்கான ஐரோப்பிய அமைப்பு (European Organization for Nuclear Research-CERN),இந்த பெருவெடிப்பை ஆய்வுக்கூடத்தில் நடத்தி அணு ஆற்றல் பருப்பொருளாக எவ்வாறு மாறுகின்றது என்பதை ஆய்வு செய்வதற்காக, பிரா‌ன்‌ஸ்-சு‌வி‌ட்ச‌ர்லா‌ந்து எ‌ல்லை‌யி‌ல் பூ‌மி‌க்கு அடி‌யி‌ல் 100 ‌மீட்டர் ஆழ‌த்‌தி‌ல் 27 ‌‌கி.‌மீ. நீள வட்ட வடிவிலான சுரங்கப்பாதையைப் போன்ற சோதனைக்கூடத்தில் தான் அணுக்களை உடைத்து நொறுக்கும் இயந்திரம் கடந்த செப்டம்பர் மாதத்தில் உருவாக்கியது.


சுமார் 595 கோடி டாலர் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பெருவெடிப்பு சோதனை‌யை துவக்கினர். சுரங்கத்தின் 2 இடங்களில் இரு‌ந்து புரோ‌ட்டா‌ன்களை செலு‌‌த்‌தி நேரு‌க்கு நே‌ர் மோத‌வி‌ட்டு, அ‌‌ப்போது உருவாகு‌ம் மாற்ற‌ங்களை ஆ‌யிர‌க்கண‌க்கான கரு‌விக‌ள் மூல‌‌ம் ஆ‌ய்வு செ‌ய்து ‌பிரப‌‌ஞ்ச‌ம் எவ்வாறு தோன்றியது என்பதைக் கண்டு‌பிடி‌க்க‌ திட்டமிட்டனர். இதற்காக உருவாக்கப்பட்ட ராட்சத ஹட்ரான் கொலைடர் (Large Hadron Collider-LHC) இயந்திரத்தை கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி வெற்றிகரமாக இயக்கி முதற்கட்ட சோதனையை முடித்தனர். ஆனால் பெருவெடிப்பு சோதனைக்காக உருவாக்கப்பட்ட இயந்திரத்தில் கோளாறு ஏ‌ற்ப‌ட்டது. கு‌ளிரூ‌ட்டு‌ம் கரு‌வி ஒ‌‌ன்‌றி‌ல் இரு‌ந்து ஒரு ட‌ன்‌னி‌ற்கு‌‌ம் மே‌ற்ப‌ட்ட ‌திரவ ‌நிலை‌யிலான ஹீ‌லிய‌ம் வாயு க‌சி‌ந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அடுத்தக் கட்ட ஆய்வுகள் அடுத்தாண்டில் நடக்கும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு சிரமப்பட்டு நடத்தப்படும் ஆய்வு உண்மையை திருக்குர்ஆன் எளிதாக 21:30ல் நமக்குக் கூறுகின்றது.

பூமிக்கும் வானிற்கும் இடைப்பட்ட பகுதி:
சில காலத்திற்கு முன்பு வரை, பூமிக்கு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் உள்ள விண்வெளியானது வெறும் வெற்றிடம் என்றே அறிவியலாளர்கள் கூறி வந்தனர். ஆனால், தற்போது விண்வெளியானது திட, திரவ, வாயு நிலைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பருப்பொருளான “பிளாஸ்மா” என்ற அயனிய பொருண்மை பாலங்களால் (bridges of matter) ஆனவை என்பது கண்டுபிடிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வானிற்கும், பூமிக்கும் இடைப்பட்ட பரப்பு வெற்றிடமல்ல என்பது தெளிவாகி உள்ளது.
அவனே (இறைவேனே) வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் படைத்தான். (அல்குர்ஆன் 25:59) என்பதாக அல்லாஹ், தன் இறைவேதத்தில் குறிப்பிடுகின்றான். பூமிக்கும், வானிற்கும் இடைப்பட்ட பகுதி வெற்றிடமாக (vacuum) இருந்தால், இறைவன் பூமியையும், வானங்களையும், “இடைப்பட்ட பகுதியையும்” என்று சேர்த்துக் கூறத் தேவையில்லை.

பால்வெளி பகுதியில் அயனிய பொருண்மை வெளி (வெற்றிடம் அல்ல என்பதற்கு சான்று)

1400 ஆண்டுகளுக்கு முன்னதாக எந்த ஒரு தனி மனிதனின் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட செய்தியை, அறிவியல் உணமையை இஸ்லாம் எடுத்துக்காட்டுகின்றது.
மேற்கண்ட இரு எடுத்துக்காட்டுகளும், இஸ்லாம் இன்றைய நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளோடு எவ்வாறு ஒத்துள்ளது என்பதை விளக்குகின்றது. தோண்டத் தோண்டக் கிடைக்கும் புதையல் போல குர்ஆனை ஆய்வு செய்தால், இஸ்லாம் இவ்வுலகிற்கு வழங்கிய அறிவியல் கொடைகளை அனைவரும் அறிய முடியும்.
அவர்களுக்கு உண்மை தெளிவாக வேண்டும் என்பதற்காக (பூமியின்) பல பாகங்களிலும், அவர்களுக்கு உள்ளேயும் நமது சான்றுகளை அவர்களுக்குக் காட்டுவோம். உமது இறைவன் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா? (அல்குர்ஆன் 41:53).

ஷண்முகம் கண்கொட்டாது,ஆச்சரியத்தில் மூழ்கி கேட்டுக் கொண்டிருந்தார். புகைவண்டி அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது.


இறைவன் நாடினால் தொடரும்.....

முஹம்மத் பிர்தௌஸ்

Monday, October 12, 2009

சிலை,கல்,மண்ணை வணங்கும் இந்துவே,சற்று சிந்திப்பாயா!

இன்னும், நாம் முன்னரே இப்ராஹீமுக்கு அவருக்குத் தகுந்த நேர்மையான வழியைத் திடனாக கொடுத்தோம் - அவரைப் பற்றி நாம் அறிந்திருந்தோம். (21:51)

அவர் தம் தந்தையிடமும், தம் சமூகத்தாரிடமும் "நீங்கள் வழிபடும் இந்த உருவங்கள் என்ன?" என்று கேட்ட போது (21:52)

அவர்கள், "எங்கள் மூதாதையவர்கள் இவற்றை வணங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம் என்று கூறினார்கள். (21:53)

(அதற்கு) அவர், "நிச்சயமாக நீங்களும், உங்களுடைய மூதாதையவரும் - பகிரங்கமான வழி கேட்டில் தான் இருந்து வருகிறீர்கள் என்று கூறினர். (21:54)

(அதற்கு) அவர்கள் "நீர் எங்களிடம் உண்மையைக் கொண்டு வந்திருக்கிறீரா? அல்லது விளையாடுபவர்களில் ஒருவராக இருக்கின்றீரா?" என்று கேட்டார்கள். (21:55)

"அப்படியல்ல. உங்களுடைய இறைவன் வானங்களுக்கும் பூமிக்கும் இறைவனாவான். அவனே அவற்றைப் படைத்தவன்; இதற்குச் சாட்சியம் கூறுபவர்களில் நானும் ஒருவனாக இருக்கின்றேன்" என்று (இப்ராஹீம்) கூறினார். (21:56)

"இன்னும்; நீங்கள் திரும்பிச் சென்ற பின்னர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்கள் சிலைகளுக்கு ஒரு சதி செய்வேன்!" (என்றும் கூறினார்.) (21:57)

அவ்வாறே அவர், அவற்றில் பெரியதைத் தவிர (மற்ற) எல்லாவற்றையும் துண்டு துண்டாக்கினார்; அவர்கள் அதன்பால் திரும்புவதற்காக (அதை விட்டு விட்டார்). (21:58)

"எங்கள் தெய்வங்களுக்கு இவ்வாறு (தீங்கு) செய்தது யார்? நிச்சயமாக அவன் அக்கிரமக்காரர்களில் ஒருவனாக இருப்பான்" என்று கூறினார்கள். (21:59)

அதற்கு (அவர்களில் சிலர்) "இளைஞர் ஒருவர் இவற்றைப் பற்றி (அவதூறாகக்) குறிப்பிட்டு வந்ததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், அவருக்கு இப்றாஹீம் என்று பெயர் சொல்லப்படுகிறது" என்று கூறினார்கள். (21:60)

"அப்படியானால் அவரை மக்கள் கண் முன்னே கொண்டு வாருங்கள்; அவர்கள் சாட்சியம் கூறும் பொருட்டு" என்று சொன்னார்கள். (21:61)

"இப்றாஹீமே! எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர் தாமோ?" என்று (அவர் வந்ததும்) கேட்டனர். (21:62)

அதற்கு அவர் "அப்படியல்ல! இவற்றில் பெரிய சிலை இதோ இருக்கிறதே, இது தான் செய்திருக்கும்; எனவே, இவை பேசக்கூடியவையாக இருப்பின், இவற்றையே நீங்கள் கேளுங்கள்" என்று கூறினார். (21:63)

(இதற்கு பதில் கூறத் தெரியாத) அவர்கள் தங்களுக்குள் திரும்பி, (ஒருவருக்கொருவர்) "நிச்சயமாக நீங்கள் தாம் (இவற்றை தெய்வங்களாக நம்பி) அநியாயம் செய்து விட்டீர்கள்" என்று பேசிக் கொண்டார்கள். (21:64)

பிறகு அவர்கள் (அவமானத்துடன்) தங்கள் தலைகளைத் தொங்கப் போட்டுக் கொள்ளுமாறு செய்யப்பட்டார்கள்; "இவை பேச மாட்டா என்பதைத் தான் நீர் நிச்சயமாக அறிவீரே!" (என்று கூறினர்). (21:65)

"(அப்படியாயின்) அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாத உங்களுக்கு தீங்கும் அளிக்காதவற்றையா வணங்குகிறீர்கள்" என்று கேட்டார். (21:66)

சீச்சீ! உங்களுக்கும், நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றுக்கும் கேடு தான்; நீங்கள் இதனை அறிந்து கொள்ளவில்லையா?" (என்று இப்ராஹீம் கூறினார்). (21:67)

(இதற்கு) அவர்கள் நீங்கள் (இவரை ஏதாவது செய்ய நாடினால் இவரை (நெருப்பிலிட்டு) எரியுங்கள்; (இவ்வாறு செய்து) உங்கள் தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள்" என்று கூறினார்கள். (21:68)

(இப்ராஹீம் தீக்கிடங்கில் எறியப்பட்டவுடன்) "நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு!" என்று நாம் கூறினோம். (21:69)
மேலும், அவர்கள் அவருக்குச் சதி செய்ய நாடினார்கள், ஆனால் நாம் அவர்களையே நஷ்டவாளிகளாய் ஆக்கினோம்! (21:70)

Monday, September 14, 2009

"தவக்குல்"

ஒருவர் இறைவனை முழுமையாகச் சார்ந்து நின்று, அவர்தம் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெற இறைவனே பொறுப்பேற்கக் கூடியவன் என்ற உறுதியுடன் செயல்படுவது "தவக்குல்' எனும் இறைச் சார்பு நெறியாகும்.

இந்த நெறியானது, "கடவுளை நம்பினோர் கைவிடப்படார்' என்ற முதுமொழியைப் பிரதிபலிப்பதாக உள்ளது. இதுபற்றி கீழ்க்காணும் திருக்குர்ஆன் வசனங்கள் விளக்கமளிப்பதாக உள்ளன.

"இறைவனே சிறந்த பொறுப்பேற்பவனாக இருக்கிறான்' (3:173); "நீங்கள் இறைவனையே சார்ந்து நில்லுங்கள்; அவனே உங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளப் போதுமானவன்' (33:3); "நிச்சயமாக இறைவன் (தன்னிடம்) பொறுப்பை ஒப்படைப்பவர்களை மிகவும் நேசிக்கிறான் (3:159).

இதன் மூலவசனங்களில் இடம் பெற்றுள்ள அரபி மொழிச் சொற்களான "தவக்குல்' என்பதும், "வக்கீல்' என்பதும் முறையே இறைவன் மீது முழு நம்பிக்கை கொண்டு அவனைத் தன் பொறுப்பாளனாக்கிக் கொள்வதையும், பொறுப்பேற்பவனாகிய இறைவனையும் குறிப்பவை.

இங்கு, "நம் காரியங்கள் அனைத்துக்கும் இறைவனே பொறுப்பேற்கிறான்' என்பதன் பொருள் என்னவெனில், "நம்மை முழுமையாக அவனிடம் ஒப்படைத்துவிட்டோம்; இனி அவனே நமக்கு வேண்டியவற்றை எல்லாம் வழங்குவான்' என்று வாளாவிருப்பதல்ல; மாறாக இறைவன் நமக்குத் தந்துள்ள அறிவையும், ஆற்றலையும் முறையாகப் பயன்படுத்தி முழுமையாக உழைத்த பின்னர், "அவ்வுழைப்பின் பயன் இறைவன் புறத்தே உள்ளது' என்று திடமாக நம்புவதேயாகும்.

இதனை, நபி (ஸல்) அவர்கள் நல்லதோர் எடுத்துக்காட்டின் மூலமாக மேலும் தெளிவுப்படுத்திக் கூறியுள்ளார். அதாவது, ""நீங்கள் இறைவனிடம் முழு நம்பிக்கை கொள்பவர்களாக இருந்தால், பறவைகளுக்கு உணவளிப்பது போன்று இறைவன் உங்களுக்கும் உணவளிப்பான். ஒட்டிய வயிற்றுடன் காலையில் கிளம்பிச் செல்லக்கூடிய பறவை, வயிறு நிரம்பிய வண்ணம் மாலையில் திரும்புகிறது.'' இவ்வெடுத்துக்காட்டில் முக்கியமாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது யாதெனில், "இறைவன் உணவளிப்பான்' என்பதற்காக பறவை கூட்டினுள் இருந்தால் அதற்குத் தேவையான உணவு, பறவையின் கூட்டினை வந்தடைவதில்லை. பறவை உணவைத் தேடிப் பறந்து செல்கிறது; அதற்கு உணவு கிடைக்கிறது. அதைப் போன்றுதான் மனிதனும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதற்கான பலனை இறைவன் வழங்குகிறான். (அறிவிப்பாளர் உமர் (ரலி); ஆதாரம்-மிஷ்காத்.)

இறை நம்பிக்கையும், முழு முயற்சியும் இணைந்தே நம் செயல்பாடுகள் இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்துகின்ற மற்றொரு நபிமொழி : "நீ இறைவனை நம்பு; ஆனால் உன் ஒட்டகத்தைக் கட்டி வை' என்பதாகும். (அறிவிப்பாளர் அனஸ் (ரலி); ஆதாரம் - திர்மதி)

"இறைவனைச் சார்ந்து நிற்றல்' என்ற இந்த நிலைப்பாடு, மனித வாழ்வின் எல்லாத் துறைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

உதாரணத்திற்கு உழவுத் தொழிலை எடுத்துக் கொண்டால், முதலில் உழவன் நிலத்தை உழுது, விதைவிதைத்து, நீர்ப்பாய்ச்சி, உரமிட்டு, களை எடுத்து- இவ்வாறெல்லாம் செய்த பின்னர் நல்ல விளைச்சலை ஆவலுடன் எதிர்பார்க்கிறான் அல்லவா? இறைவனிடமிருந்து அவன் இதனை எதிர்பார்க்க வேண்டும். அப்பொழுது இறைவன் உழவனுடைய இப்பயிர்களுக்குப் பாதுகாப்பு வழங்குகிறான்; பயிர் செழித்து வளர்வதற்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கி, உழவன் எதிர்பார்த்தவாறு நல்ல விளைச்சலை இறைவன் அளிக்கிறான்; இதனால் உழவன் உளம் மகிழ்கிறான்; மனநிறைவுடன் அந்த இறைவனுக்கு அவன் நன்றி செலுத்துகிறான். தவக்குலின் பொருளடக்கம் இதுதான்.

ஓர் அடியான் இறைவனிடம் பொறுப்பை ஒப்படைத்தலின் மற்றுமோர் முக்கிய அம்சம் என்னவென்றால், தன் விவகாரங்களை முடிந்த வரை முயற்சி செய்து முடித்துவிட்ட பிறகு, "இறைவா! நான் சக்தியற்றவனாக இருக்கிறேன்; பலவீனனாகவும் இருக்கிறேன். நீயே வல்லமை மிக்கவன்! எனவே நான் மேற்கொண்ட பணிகளில் குறைகளிருப்பின் நீயே நிறைவு செய்து நற்பயன் அருள்வாயாக!' என்று இறைவனை வேண்டி நிற்பதாகும்.

இவ்வாறாக, "தவக்குல்' எனும் இறைச் சார்பு நெறியை உறுதியாகக் கடைபிடிப்பதன் மூலமாக, நமக்கு இறைவனுடைய அருளும், உதவியும் கிடைக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இதனையே "நம்பிக்கை கொண்டோருக்கு உதவி செய்வது தம் கடமை' (30:47) என்றும், "தம் அருட்கொடையைப் பற்றி எவரும் நம்பிக்கை இழக்க வேண்டாம்' (39:53) என்றும் இறைவன் திருமறையில் திட்டவட்டமாக எடுத்துரைத்துள்ளான்.

எனவே, நாம் இறை நம்பிக்கையுடன் செயல்படுவோம்; அவன்தன் அருளைப் பெற்றிடுவோம்.

எம்.கே.எஸ். பாவா

Friday, September 4, 2009

வெற்றிக்கு வழி! கண்ணை மூடிக்கொண்டு,கடவுளை நம்ப வேண்டுமா?தொடர் 4

ட்ரைன் அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது.டிரைனின் சப்தம் தவிர வேறு சத்தம் இல்லை.ஷண்முகமும்,ரஞ்சிதம்மாலும் சிந்தனையில் மூழ்கி இருந்தனர்.எப்படி இவ்வளவு அருமையான முறையில் இஸ்லாம் அமைந்திருக்கிறது.இன்னும் அது பற்றி தெரியவேண்டும் என்ற உந்துதல் இருவருக்கும் ஏற்பட்டத்தில் வியப்பில்லை.

"பாய், ஏக இறைவன்தான் எல்லாவற்றையும் படைத்தான் என்பதை ஒத்துக்கொள்கிறேன்,சரி,குர்ஆனில் அவன் படைத்தவைகளின் செயல்,அதிசயம்,இன்னும் பலவற்றை பற்றி ஏதும் செய்தி உண்டா?ஏனெனில்,இன்னைக்கு பல சமயங்களில் விஞ்ஞானமும்,மருத்துவமும் சொல்லிக் கொண்டே இருக்கிறதே,அதனால் கேட்டேன்,அதுமட்டுமல்ல,குர்ஆன் இறைவன் அருளிய வேதம் என்றால்,கூறப்பட்டிருக்க வேண்டும் அல்லவா?என்றார் ஷண்முகம்.
"ஒ அதுபற்றி கடல் அளவு செய்திகள் சொல்லப்பட்டிருக்கு,என்னால் இயன்ற அளவு,தெரிஞ்ச அளவு சொல்கிறேன்"என்று ஆரம்பித்தார் பஷீர் காக்கா.

"மனிதப் படைப்பை ஓர் உதாரணமாகக் கொள்வோம். தந்தையால் வெளிப்படுத்தப்படும் இலட்சக்கணக்கான விந்தணுக்களில் ஒன்றே ஒன்று மட்டும் தாயின் கருவறையில் சினை முட்டையுடன் இணைந்து ஒரு கருவாகிறது! ஆரம்ப நிலையிலிருக்கும் இக் கருவுக்கு தான் பிறந்து செல்லவிருக்கும் வெப்பம், குளிர், காற்று, ஒளி, ஒலி எல்லாம் உள்ள உலகத்தைக் குறித்த எந்த அறிவும் இருப்பதில்லை! ஆனால் இவற்றை எல்லாம் அறிந்து கொள்ள உதவும் திசுக்களாக சுயமாகவே பெருக்கமடைகிறது! ஒன்றாக இருந்தது சுயமாகவே பலகோடி திசுக்களாகப் பெருக்கமடைகின்றன. இதயம், நுரையீரல், இரைப்பை முதலான உடலின் உள்ளுறுப்புகள் உருவாகின்றன.. எல்லாவற்றுக்கும் மேலாக இவற்றையெல்லாம் நிர்வகிக்கின்ற மிகப்பெரிய அற்புதமாகிய மூளை உருவாகின்றது! எவ்வாறு இது நடை பெறுகிறது? அற்பமான, புறக்கண்ணால் பார்க்க இயலாத வேறுபட்டிருந்த இரு அணுக்களை ஒன்றிணையச் செய்து, இவ்வளவு அற்புதச் செயல்களை நடைபெறச் செய்பவன் யார்? இவற்றக்குப் பின்னால் உள்ள ஒரு படைப்பாளனை ஏற்றுக் கொள்வதன்றோ அறிவுடைமை?"


படைப்புகளைப் பற்றிய சிந்தனையின் மூலம் படைத்தவனின் உள்ளமையை அறிந்து கொள்ளுங்கள் என்ற அறிவுப்பூர்வமான கோட்பாடைத் திருக்குர்ஆன் கூறுகிறது.

“ஒட்டகத்தை, அது எவ்வாறு படைக்கப் பட்டுள்ளது என அவர்கள் (கவனித்துப்) பார்க்க வேண்டாமா? வானத்தை, அது எவ்வாறு உயர்த்தப் பட்டுள்ளதென்றும், மலைகள், அவை எவ்வாறு நடப்பட்டுள் ளனவென்றும். பூமி, அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ள தென்றும் (அவர்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா?)” (அல்குர்ஆன் 88: 17-20)


கண்ணை மூடிக் கொண்டு கடவுளை நம்ப வேண்டும் என்பதை விட படைத்தவனைக் குறித்து அறிந்து நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த தத்துவத்தை இஸ்லாம் கற்றுத் தருகிறது. இறை கொள்கையில் இஸ்லாம் நமக்குக் கற்றுத் தரும் இத்தகைய உயர்ந்த கொள்கை இன்று நடைமுறையில் உள்ள எந்த மதத்திலும் கிடையாது என்பது இஸ்லாமினுடைய தனிச்சிறப்புகளில் ஒன்றாகும். தன்னைப் பற்றியும் தன்னைச் சூழ்ந்துள்ள பிரபஞ்சத்தைக் குறித்தும் ஆராய்வதன் மூலம் இதற்குப் பின்னாலிருக்கும் அந்த இறைவனின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளுமாறு மனிதனுக்கு அழைப்பு விடுக்கும் குர்ஆனிய வசனங்கள் பாமரர் முதல் விஞ்ஞானிகள் வரை புரிந்து கொள்ளக் கூடிய அளவில் தெளிவாகவும் எளிதாகவும் உள்ளது. நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முதன் முதலில் அருளப்பட்ட வசனங்களைப் பாருங்கள்

யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக ‘அலக்’ என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். (96: 1 -4)
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள். (2:28)

நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம். பின்னர் நாம் அவனை ஒரு பாதுகாப்பன இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (23:12-14)

(கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா? (56: 58, 59)

"அறியாத பாமரன் முதல் அறிவியலாளன் வரை இத்தகைய சிந்தனையால் தன் இறைவனைப் பற்றி அறிய உதவும் எளிய கோட்பாடை குர்ஆன் கற்றுத் தருகிறது."



இறைவன் நாடினால் தொடரும்.....

முஹம்மத் பிர்தௌஸ்

Tuesday, August 4, 2009

வெற்றிக்கு வழி! பெண்கள் கண்ணியமானவர்கள்!!தொடர் 3

ஆச்சரியப்பட்ட சண்முகம் ஏதோ யோசிக்கலானார்.இதற்கிடையே, டிய், டிய், சாய்,சாய் என்ற குரல் கேட்டு அனைவரும் செங்கல்பட்டு வந்துவிட்டதை அறிந்து,தங்கள் உணவுப் பொட்டலங்களை அவிழ்த்து உண்ண ஆரம்பித்தனர்.சலீம் நானாவும்,பஷீர் காக்காவும் கொண்டு வந்த சிக்கன் பிரியாணியை சண்முகம்,ரஞ்சிதம்மாளிடம் பகிர்ந்துகொள்ள,அவர்கள் கொண்டு வந்த இட்லி,சாம்பார் வகைகளை இவர்களும் பகிர்ந்து கொண்டு சாப்பிட்டு முடித்தனர்.

சாப்பிடும் போது ஏக இறைவனின் திருப்பெயரை சொல்லி,சலீம் நானா,பஷீர் காக்கா சாப்பிட்டதையும்,எதையும் வீணாக்காமல் ,சுத்தமாக வழித்து உண்டதையும்,இடை இடையே இறைவனை துதிப்பது, சாப்பிட்டபின் இறைவனை புகழ்ந்தது,என எல்லாவற்றையும் அந்த தம்பதிகள் கவனிக்காமல் இல்லை.


திடீரென "அல்லாஹு அக்பர்,அல்லாஹு அக்பர்,"என்ற ரம்மியமான குரலில் தொழுகைக்கான அழைப்பொலி கேட்கவே,எல்லாரும் குரல் வந்த திசை நோக்கி,திரும்பினர்.அங்கே இரு முஸ்லிம் தம்பதிகள் பாங்கு சொல்லிவிட்டு, இஷா என்ற இரவு நேர தொழுகை தொழ ஆரம்பித்தனர்.சலீம் நானாவும்,பஷீர் காக்காவும் ஒழு செய்துவிட்டு,தொழுது முடித்தனர்.சண்முகம்,ரஞ்சிதம்மால் கவனித்துக்கொண்டிருந்தனர்.

இப்போது ரஞ்சிதம்மால் கேட்டார்,"பாய்,எனக்கொரு சந்தேகம் பாய்.தல,உடம்பு என்று மூடி இருக்கிற அந்த பாயம்மாவை பாத்தொனே என் மனசில தோனுச்சி,எதுக்கு பொம்பளைங்களை இப்படி முக்காடு போட்டு மூடி வக்கிறீங்க,இது அடிமைத்தனம் இல்லையா?"

பஷீர் காக்கா சொன்னார்,"நல்ல கேள்விதாம்மா கேட்டிருக்கீங்க.அதாவது,இஸ்லாம் இவ்வுலகில் மனிதன் எவ்வாறு வாழ வேண்டும், எப்படி வாழ்ந்தால் கண்ணியமாக வாழ முடியும் என்பதை தெளிவாக கற்றுத்தருகிறது.

மனிதனின் இயற்கையான உணர்வான வெட்கம் என்பது மனிதர்களுக்கே உரித்தான உயர்ந்த சிறந்த பண்பாகும். வெட்கமின்றிச் செயல்படுதலை இஸ்லாம் நடை, உடை, பாவனை என எல்லா காரியங்களிலும் தடை செய்கிறது.

நாகரீகம் வளர்ச்சி அடையாத காலங்களில் கூட மனிதன் தன் உடம்பை இலை, தழைகளை வைத்து மறைப்பதில் அதிக கவனம் எடுத்துக் கொண்டான். எனில் உடம்பை மறைத்தல் என்பது மனிதர்களுக்கு இடையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கண்ணியத்திற்கும் மரியாதைக்கும் உரிய செயல் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

அத்தகைய சமூகத்தில் மரியாதையும் கண்ணியமும் பெற்றுத் தரும் உடை விஷயத்தில் இஸ்லாம் அதிகக் கவனம் செலுத்துகிறது. உடை என்பது சமூகத்தில் ஒழுக்க வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணியாக அமைகிறது. எனவேதான் ஒருவர் உடை அணியும் விதம் மற்றவர்களின் கவனத்தை திசை திருப்பாத விதத்தில் இருப்பதற்கும், தங்களது மறைவான பகுதிகள் வெளியில் தெரியும்படியான இறுக்கமான ஆடைகளை தவிர்க்கும்படியும் இஸ்லாம் அறிவுறுத்துகிறது. இது இருபாலருக்குக்கும் பொதுவானதுதான்.

பெண்களைப் பொறுத்தவரை முகம் மற்றும் கை மணிக்கட்டுக்கு கீழ் தவிர மற்ற எல்லா பகுதிகளையும் மறைத்துக் கொள்ள இஸ்லாம் அறிவுறுத்துகிறது. இவ்வாறு மறைப்பதற்கு ஏதுவான உடையாக தற்காலத்தில் வடிவமைத்திருக்கும் பர்தா இருப்பதனாலேயே இஸ்லாம் கூறும் அறிவுரையை மனப்பூர்வமாக பேணும் பெண்கள் இதனை அணிகின்றனர். கண்ணியத்தையும் பாதுகாப்பையும் சமுதாயத்திலிருந்து பெற விரும்பும் பெண்களுக்கான சிறப்பான பரிந்துரையாகவே இஸ்லாம் இதனைக் கூறுகிறது. இதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட பெண்கள் மட்டுமே பர்தாவை அணிகின்றனர். இதனை தங்கள் உடலை முழுமையாக மறைத்துக் கொள்ளும் முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கையை வைத்து தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

பர்தா போன்ற உடை அணிய வேண்டியதற்கான காரணத்தை அருள் மறை திருக்குர்ஆனின் 33 வது அத்தியாயம் ஸூரத்துல் அஹ்ஜாப்பின் 59வது வசனம் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும் உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக: அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன். மிக்க அன்புடையவன்.

பெண்கள் கண்ணியமானவர்கள் என்று அறியப்படுவதற்காகவும், அவர்கள் சமூகத்தில் மோசமானவர்களால் விளையும் தொல்லைகளிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்காகவும் தான் பர்தா போன்ற உடையை உபயோகிக்க இஸ்லாம் பெண்களுக்குப் பரிந்துரைக்கிறது."

ரஞ்சிதம்மால் அந்தக் கருத்தை ஆமோதிக்கும் வண்ணம்,தன்னை அறியாமலே தன தலையை மூடிக்கொண்டதை,பஷீர் காக்கா கவனிக்கத் தவறவில்லை.

இறைவன் நாடினால் தொடரும்.....

முஹம்மத் பிர்தௌஸ்

Sunday, August 2, 2009

வெற்றிக்கு வழி! தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன். தொடர் 2

"ரொம்ப அருமையான கருத்தா இருக்கே"

"ஆமாம்,சண்முகம்,இஸ்லாத்தில் எல்லாவற்றுக்கும் ஒரு ஒழுங்கு இருக்கு.இத செய்,அத செய்யாதே என்று சொல்வதோட நிருத்திக் கொள்ளாமே,ஏன் செய்யனும்,ஏன் செய்யக்கூடாது என்று விளக்கமும் துல்லியமான முறையில் இருக்கும்."

அப்படியா ஆச்சரியமா இருக்கு.சரி ஒரு விஷயம் ஞாபகம் வருது,இது பத்தி இஸ்லாத்துல சொல்லப்பட்டிருக்கா? என்று ஆவலோடு கேட்ட சண்முகத்தைப் பார்த்து பஷீர் சொன்னார்,:தயங்காம எது வேணுன்னாலும் கேளுங்க நண்பரே,என்னால் முடிந்த அளவு சொல்றேன்".

"பொதுவா மனுஷன் தப்பு பண்ணிண்டே இருக்கான்.அதுக்கு ஒரு இலக்கணம் இல்லாம போச்சு, தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்கிற மாதிரி நிலமையில இப்போ இந்த உலகம் போய்க்கிட்டு இருக்கு,எனவே பாவங்கள் செய்றதா பத்தி இஸ்லாத்துல என்ன சொல்லப்பட்டிருக்குன்னு கொஞ்சம் சொல்லேன்"சண்முகம் வேண்டிக்கொண்டார்.

"நல்லது சண்முகம்,இத பத்தி குரானிலும் இறைவன் கூறி இருக்கிறான்,நபிகள் நாயகமும் தங்களுடைய ஹதீஸிலும் கூறி இருக்கிறார்கள்.அது இதுதான்"


பெரும் பாவங்களில் மிகப் மிகப் பெரியதை நான் உங்களுக்கு அறிவிக்கவா? என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் வினவினர். அதற்கு நாங்கள் சரி என்றோம். அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும் பெற்றோர்களுக்கு மாறு செய்வதும் (அநியாயமாக) கொலை செய்வதுமாகும் என்று கூறிச் சாய்ந்து வீற்றிருந்த நபி صلى الله عليه وسلم நிமிர்ந்து அமர்ந்து மேலும் கூறினர்; அறிந்து கொள்ளுங்கள். பொய்யுரைப்பதும், பொய்ச்சான்று பகர்வதுமாம் என்று திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்கள் (அவற்றைத் திரும்பத் திரும்ப கூறாது) வெறுமனே இருந்து விடட்டுமே என்று கூறும் வரை. அறிவிப்பாளர்: அபூபக்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம் புகாரி, முஸ்லிம், திர்மிதீ

பெரும் பாவங்களைப் பற்றி ஒருவர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வினவினார். அதற்கு அவர்கள், அவை ஒன்பதாகும். [1] இணை வைப்பதும் [2] சூனியம் செய்வதும் [3] கொலை செய்வதும் [4] வட்டியை உண்பதும் [5] அனாதிகளின் பொருள்களை உண்பதும் [6] போர்க்களத்தில் பின்வாங்கி ஓடுவதும் [7] கணவர்களைப் பெற்றுள்ள குற்றமற்ற பெண்கள் மீது அவதூறு கூறுவதும் [8] பெற்றோர்களுக்கு மாறு செய்வதும் [9] உங்களுடைய கிப்லாவான கஃபதுல்லாஹ்வில் செய்யத் தகாததைச் செய்ய, ஒருவன் வாழும்பொழுதும் இறந்த பின்பும் பிறர் செய்து வருவதையும் ஆகுமாக்குவதாகும் என்று கூறினர். அறிவிப்பவர்: உபைதுப்னு உமைர் அவர்கள் தமது தந்தை மூலம் அறிந்து, ஆதாரம்: அபூதாவூத், நஸயீ

அல்லாஹ்வுடைய நபியே! அல்லாஹ்விடம் எந்த பாவம் மிகப்பெரியது என்று நான் கேட்டேன். (அதற்கு) அவர்கள், நீர் அல்லாஹ்வுக்கு இணைவைப்பதாகும். அவன்தான் உம்மைப் படைத்தவன் என்று கூறினார்கள். பின்னர் எது? என்று நான் கேட்டேன். (அதற்கு) அவர்கள், உம்முடைய குழந்தைகள் உம்முடைய உணவில் பங்காளிகளாக வந்து விடுவார்களென்று அஞ்சி அவர்களைக் கொலை செய்வதாகும்' என்று கூறினர். பின்னர் எது? என்று நான் கேட்டேன். (அதற்கு) அவர்கள் 'நீர் உம்முடைய அண்டை வீட்டுக்காரரின் மனைவியைச் சோரம் செய்வதாகும்' என்று கூறினர். அறிவிப்பவர்: இப்னுமஸ்வூத்رَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ

'ஒருவன் தனது பெற்றோர்களை ஏசுவதும் நிச்சயமாகப் பெரும் பாவங்களைச் சேர்ந்ததேயாகும்' என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர். (அப்பொழுது) மனிதன் தன் பெற்றோர்களையும் ஏசுவதுண்டா? என்று நாங்கள் வினவினோம். ஆம்! இவன் மற்றவனின் தந்தையை ஏசுகிறான். அவன் இவனுடைய தந்தையை (பதிலுக்கு) ஏசி விடுகிறான். இவன் மற்றவனின் தாயை ஏசி விடுகிறான் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: இப்னு அம்ருப்னுல் ஆஸ்رَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ



இதைக்கேட்டுக்கொண்டிருந்த சண்முகம்,இவ்வளவு நுணுக்கமான முறையில நபிகள் சொல்லி இருக்கிறார்களே என்று ஆச்சரிப்பட்டுப் போனார்.

இறைவன் நாடினால் தொடரும்.....

முஹம்மத் பிர்தௌஸ்

Friday, July 31, 2009

வெற்றிக்கு வழி!இதை வசப்படுத்தி தந்தவன் தூயவன்!!தொடர் 1

நபிகள் நாயகம் எக்ஸ்பிரஸ் என்ற அந்த ரயில் புறப்பட தயாரான நிலையில் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தது.சலீம் நானா,பஷீர் காக்கா மற்றும் பல பிரயாணிகள் தத்தம் லக்கேஜ்களுடன் ஏறிக்கொண்டும்,தங்கள் எண் கொண்ட சீட்டில் உட்காரவும்,இடம் பிடிப்பதுமாகவும் ,இப்படி அந்த ரயில் பரபரப்பாக இருந்தது.

"அடடே பஷீர்,சலீம்,பார்த்து எவ்ளோ நாளாச்சு?" குரல் வந்த திசையில் பார்த்தால்,"அட நம்ம கிளாஸ் மேட சண்முகம்,எங்கடா ஆளையே காணோம்,பார்த்து ரொம்ப நாளாச்சே?சலீமும்,பஷீரும் சந்தோஷப்பட்டனர்.

"ஆமாம்,பஷீர்,சலீம்.எம் மவன் டெல்லியில ஒரு பெரிய கம்பெனியில ஜெனெரல் மானேஜரா இருக்கான்,அதுனால நானும்,என் மனைவியும் அங்கேயே செட்டில் ஆகிட்டோம்.டெல்லி அலுத்துப் போச்சி,கொஞ்ச நாள் நம்ம ஊர்ல இருக்கலாமேன்னு என் மனைவியுடன் அதிராம்பட்டினம் கெளம்பிட்டேன்".அப்போதுதான் அவர் மனைவியை இருவரும் கவனித்தனர்.இருவருக்கும் புன்னகை தந்தாள் அந்த அம்மாள் ரஞ்சிதம்.

ரயில் புறப்பட தயாரானது,அப்பொழுது,சலீம் நானாவும் - பஷீர் காக்காவும் பயண துவா சொல்ல ஆரம்பித்தனர்."ஸுப்ஹாநல்லதீ ........"அரபி மொழியில் அமைந்த அந்த துவாவை ஓதிவிட்டு,தமிழிலும் இவ்வாறு பிரார்த்தித்தனர்."

அல்லாஹ் மிகப்பெரியவன். இதை வசப்படுத்தி தந்தவன் தூயவன். நாங்கள் இதன்மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். யா அல்லாஹ்! எங்களின் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். யா அல்லாஹ்! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு. இதன் தொலைவை எங்களுக்கு குறைத்துவிடு. யா அல்லாஹ்! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். யா அல்லாஹ்! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும் மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். (நூல்: முஸ்லிம் 2392.)

இதை கவனித்துக்கொண்டிருந்த சண்முகம் சொன்னார்.

இறைவன் நாடினால் தொடரும்..........


by முஹம்மத் பிர்தௌஸ்

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!