Saturday, October 29, 2011

துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகளும் உழ்ஹிய்யாவின் சட்டங்களும்!

ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும் ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக.

சிறப்புகள்1- துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும்தான் ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும் உயிரையும் அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : புகாரி

2- நாட்களில் மிகச்சிறந்த நாள் அரஃபாவுடைய நாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்.

இந்த நாட்களில் செய்யும் அமல்கள்;
1- ஹஜ் உம்ரா:- ஒரு உம்ரா மற்ற உம்ராவுக்கு இடைப்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும். மேலும் ஏற்றுக்கொள்ப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம் - புகாரி முஸ்லிம்.

2-உபரியான தொழுகைகள் நோன்புகள் தர்மங்கள் உறவினர்களுக்கு உதவுவது குர்ஆன் ஓதுவது பாவமன்னிப்பு தேடுவது நன்மையை ஏவுவது தீமையை தடுப்பது போன்ற நல் அமல்களில் ஈடுபடுவது.
[குறிப்பு- துல் ஹஜ் மாதத்தின் பத்தாம் நாளாகிய பெருநாளன்று நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டுள்ளது.ஆதாரம் - புகாரிமுஸ்லிம்]

3- அரஃபா நோன்பு :- அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம்-முஸ்லிம்
[குறிப்பு :- அரஃபா நோன்பை ஹாஜிகள் நோற்க்கக்கூடாது ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் சிறந்தது]

அரஃபா தினத்தன்று அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கொண்டுவந்த பாலை அருந்தி தான் நோன்பு நோற்கவில்லை என்பதை மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள்.ஆதாரம் புகாரி முஸ்லிம்.

4- தக்பீர் கூறுவது:- கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும் பள்ளிவாசல் வீடு கடைவீதி போன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறுவது ;

ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை. ஆகவே லாஇலாஹா இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : அஹ்மத்.

இப்னு உமர் (ரலி) அபூஹுரைரா (ரலி) ஆகிய இரு நபித்தோழர்களும் துல்ஹஜ் (மாதம் ஆரம்ப) பத்து தினங்களிலும் கடைவீதிகளுக்கு செல்லும் போதெல்லாம் தக்பீர் கூறுவார்கள் இவ்விருவரும் கூறுவதை கேட்கின்ற மற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள்.
ஆதாரம் - புஹாரி.

5- ஹஜ் பெருநாள் தொழுகை இன்னும் குத்பா பிரசங்கத்தில் கலந்து கொள்வது.
நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப்பெருநாளிலும் கன்னிப்பெண்கள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் (உட்பட) முஸ்லிம்களின் பிரார்த்தனைகளிலும் நல்ல அமல்களிலும் கலந்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழுகையில் கலந்து கொள்ளாமல் தொழுகை நடக்கும் பகுதிக்கு வெளியே இருந்து கொள்ள வேண்டும் என்றார்கள்.
ஆதாரம் :- புகாரி முஸ்லிம்.

6- உழ்ஹிய்யா:- உழ்ஹிய்யா என்பது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு பின் இறை திருப்தியை நாடி அறுக்கப்படும் பிராணிக்கு சொல்லப்படும் இது நபியவர்கள் வலியுறுத்திய சுன்னத்தாகும்.கொம்புள்ள கறுப்பு நிறம் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளை நபி (ஸல்) அவர்கள் உழ்ஹிய்யாவாக கொடுத்தார்கள் அப்போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி அவ்விரண்டின் ஒரு பக்கத்தின் மீது தனது காலை வைத்து கையால் அறுத்தார்கள்.
ஆதாரம் - புஹாரி.


குர்பானி பிராணியின் வயது;

குர்பானி கொடுக்கப்பட வேண்டிய பிராணிகளில் ஒட்டகத்திற்கு ஐந்து வயதும், ஆடு, மாடுகளுக்கு இரண்டு வயதும் பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
முஸின்னா”வைத் தவிர வேறு எதனையும் அறுக்காதீர்கள். அது கிடைக்க வில்லையானால் ஆறுமாதக் குட்டியைக் கொடுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்”.(ஜாபிர்(ரலி) – முஸ்லிம், அபூதாவூத், நஸஈ, இப்னுமாஜா, அஹ்மத் )
இங்கு “
முஸின்னா” என்று கூறப்படும் வார்த்தை ஆடு மாட்டில் இரண்டு பல் முளைத்த பிராணிகளுக்கு பயன்படுத்தப் படுகின்றது. ஒட்டகம் ஐந்து வயது முடிந்தவுடனும், ஆடு, மாடு இரண்டு வயது முடிந்தவுடனும் இரண்டு பற்கள் வருவதால், ஒட்டகம் ஐந்து வயது, ஆடு, மாடு இரண்டு வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டுமெனக் கூறப்படுகின்றது.
முஸின்னா” கிடைக்காவிட்டால் ஆறுமாதக் குட்டியாட்டை அறுப்பது இந்த ஹதீஸில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் பிறிதொரு ஹதீஸின் மூலம் அது ஒரு தோழருக்கு மாத்திரம் வழங்கப்பட்ட சலுகை என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.
“இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்கு) திரும்பிச்சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்துகொள்வாரோ அவர் நமது வழியில் நடந்துகொண்டார். யார் (தொழுமுன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்தினருக்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியின் நன்மை எதுவும் கிடையாது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபுர்தா(ரலி) அவர்கள் (தொழு முன்) அறுத்துவிட்டார். அவர் (நபி(ஸல்) அவர்களிடம்) என்னிடத்தில் 
முஸின்னாவை விட சிறந்த ஆறுமாதக் குட்டியுள்ளது (அதைக் குர்பானி கொடுக்கலாமா) என்றார். முன் அறுத்ததிற்கு இதைப் பகரமாக்குவீராக (அறுப்பீராக). எனினும், உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இதை (குர்பானிகொடுக்க) அனுமதியில்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (பரா(ரலி) – புகாரி, முஸ்லிம்)
உழ்ஹிய்யாவிற்கான கால் நடைகளில் கீழ்க்கண்ட குறைகள் இருக்கக்கூடாது:

  1. கண் குறுடு
  2. கடுமையான நோயானவை
  3. மிகவும் மெலிந்தவை
  4. நொண்டியானவை அங்கங்கள் குறையுள்ளவை.
கூட்டு குர்பானி;
உழ்ஹிய்யாவுக்காக அறுத்துப் பலியிடப்படும் பிராணி ஒட்டகம் அல்லது மாடாக இருப்பின் ஏழு நபர்கள் கூட்டாகச் சேர்ந்து கொடுக்க முடியும். என்பதைப் பின்வரும் நபிமொழி விளக்குகின்றது.
“ஹுதைபியா என்ற இடத்தில் நபி(ஸல்) அவர்களுடன் ஏழு பேர் சேர்ந்து ஓர் ஒட்டகத்தையும், ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டையும் நாங்கள் அறுத்துப் பலியிட்டோம்”(ஜாபிர்(ரலி) – முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி)

குர்பானிப் பிராணி ஆடாக இருப்பின் ஒருவர் தமக்காகவும், தமது குடும்பத்தினருக்காகவும் ஓர் ஆட்டை அறுத்துப் பலியிட முடியும்.

“நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது என்று அபூ அய்யூப்(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒர் ஆட்டையே குர்பானி கொடுப்பார்.(அதாஃ பின் யஸார்(ரலி) – திர்மிதி, இப்னு மாஜா முவத்தா)

அறுக்கும் நேரம் ;
ஹஜ்ஜு பெருநாள் தொழுகைக்கு பின் அறுக்க வேண்டும்யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது உழ்ஹிய்யாவாக ஆகாது அவர் தன் குடும்பத்தின் தேவைக்காக அறுத்ததாகவே கணக்கிடப்படும்.யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அவர் இன்னும் ஒரு முறை குர்பாணி கொடுக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் - புகாரி,

யார் (பெருநாள்) தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது அவரின் குடும்பத்தேவைக்காக அறுத்ததாக கணக்கிட்டுக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

அறுக்கும் முறை~ ஆடு மாடுகளை படுக்கவைத்து ஒருக்கணித்து அறுக்க வேண்டும் (முஸ்லிம்)~ ஒட்டகத்தை நிற்கவைத்து அறுபடும் நரம்புகள் வெட்டப்படும் அளவுக்கு அறுக்கும் கருவியால் கீறிவிடவேண்டும். (முஸ்லிம்)~ அறுக்கும் போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். (புகாரி)


இறைச்சிகளை விநியோகித்தல்;

لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ
தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.[22:28 ]

ஸலமா இப்னு அக்வஃ(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் குர்பானிப் பிராணியை அறுக்கிறவர் (அறுத்ததிலிருந்து) மூன்று நாள்களுக்குப் பின் (அதிலிருந்து எதுவும் அவரின் வீட்டில் எஞ்சியிருக்கும் நிலையில்) காலைப் பொழுதை அடைய வேண்டாம்' என்று கூறினார்கள். அடுத்த ஆண்டு வந்தபோது, மக்கள் 'இறைத்தூதர் அவர்களே! சென்ற ஆண்டு செய்ததைப் போன்றே (இந்த ஆண்டும்) நாங்கள் செய்ய வேண்டுமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள்'நீங்களும் அதிலிருந்து உண்டு (மற்றவர்களுக்கும்) உண்ணக் கொடுங்கள். சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், கடந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. எனவே, நீங்கள் அந்தச் சிரமத்தைப் போக்க (அவர்களுக்கு) உதவ வேண்டும் என்று விரும்பினேன்'என்று பதிலளித்தார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 5569

“உழ்ஹிய்யாக் கொடுப்பவர் தானும் சாப்பிட்டு தனது உறவினர்களுக்கும் அன்பளிப்புச் செய்து ஏழைகளுக்கு தர்மமாகக் கொடுத்தல் சுன்னத்தாகும்.


செய்யக்கூடாதவை;
உழ்ஹிய்யா கொடுக்கப்பட்ட கொடுக்கப்பட்ட பிராணிகளின் முடிகளையோ தோல்களையோ மாமிசங்களையோ அறுத்தவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது.

குர்பானி கொடுப்பதற்கான ஒட்டகங்களை மேற்பார்வை செய்வதற்கு என்னை நபி (ஸல்) அவர்கள் நியமித்தார்கள் அவைகளின் மாமிசம் தோல் ஆகியவற்றை தர்மமாகவே கொடுக்க வேண்டும் என்றும் அவற்றில் எதையும் அறுப்பவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது என்றும் கூறினார்கள் என அலி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.ஆதாரம்:- புகாரி,


ஹஜ் மாதம் பிறந்ததும் உழ்ஹிய்யா கொடுக்க நாடியவர் தன்னுடைய முடி மற்றும் நகத்திலிருந்து எதையும் அகற்றக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.ஆதாரம்:- முஸ்லிம்

குறிப்பு:- இத்தடை உழ்ஹிய்யா கொடுப்பவருக்கு மாத்திரம்தான் அவரின் குடும்பத்தினருக்கு அல்ல.

Thursday, October 27, 2011

சகோ PJ அவர்களுக்கு அவசர வேண்டுகோள்


அன்புச் சகோதரர் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... இந்த மடல் தூய இஸ்லாமியச் சிந்தனையுடனும், பூரண உடல் நலத்துடனும் உங்களைச் சந்திக்கட்டுமாக!

தங்களின் ஆன்லைன்பிஜே இணைய தளத்தின் தொடர் வாசகன் என்ற முறையில், கண்ணில் படும் மிக முக்கியப் பிழையொன்றினைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

கடந்த ஜுன் மாதம் 22 ந்தேதி கூகுள் தளம் தனது பல்வேறு இலவச சேவைகளில் ஒன்றாக தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கும் வசதியை வெளியிட்டது. இதற்கு மறுநாள் ஆன்லைன் பிஜே தளத்தில் கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியாகியிருந்தது.

http://www.onlinepj.com/katturaikal/onlinepj-in-international-language/

கூடவே "பிற மொழியறிந்த உங்கள் நண்பர் அல்லது உறவினருக்கு தஃவா செய்ய இனி சிரமப்பட தேவையில்லை. கூகுள் மொழிமாற்றி வசதி மூலம் அவர்களுக்குக் கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை அனுப்பலாம்" என்ற தள அறிவிப்பினைக் கண்டு அதிர்ந்தேன்.

அதற்குக் காரணம் கூகுள் ஏற்படுத்தியுள்ள இவ்வசதியில் ஏகப்பட்டப் பிழைகள் இன்னும் சீர் செய்யப்படாமலே இருப்பது தான்.

Google Translate Disclaimer என்ற தலைப்பில் இணையத்தில் தேடலை மேற்கொண்டால், இதே இலவச வசதியைப் பயன்படுத்தும் நூற்றுக் கணக்கான தளங்கள் (இஸ்லாமிய தளங்கள் அல்ல) இப்பிழை ஏதேனும் ஏற்பட்டால் அவை எங்களுடைய தவறு அல்ல... மாறாக, கூகுளின் மொழிபெயர்ப்பினால் ஏற்படும் தவறு என்று மறுதலிப்பதைக் காணலாம். (கீழ்க்கண்ட விக்கிபீடியா சுட்டியையும் காணவும்:
http://en.wikipedia.org/wiki/Google_Translate#Translation_mistakes_and_oddities ) - குர் ஆன், ஹதீஸ்களைப் போதிக்கும் ஆன்லைன் பீஜே தளத்திலும் மேற்கூறிய வாக்கியங்கள் இடம் பெற்றிருப்பது எவ்வகையில் பொருந்தும் என்று சிந்திக்கவும்.

ஓரிடத்தில், இத்தளத்தில் காணப்படும் தவறுகளுக்கு நீங்களே பொறுப்பு என்று குறிப்பிட்டுள்ளீர்கள் : http://onlinepj.com/AboutUs/
ஆனால் அதற்கு நேர் முரணாக, கூகுள் மொழிமாற்றத்தில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பல்ல என்றும் எழுதியுள்ளீர்கள்.

உங்கள் தளத்தை நம்பிக்கையுடன் அணுகி வாசிக்கும் ஓர் பிற மொழிச் சகோதரரின் நிலை என்ன? அவருக்குப் பரிந்துரை செய்தவரின் நிலை என்ன?  உங்கள் தள கூற்றைக் கண்டு இவ்வசதியை பயன்படுத்தி மொழிமாற்றம் செய்யப்பட்ட பிற மொழிப் புத்தகங்கள், கட்டுரைகளின் நிலை என்ன? உதாரணத்திற்காக, தளத்தின் ஓரிரண்டு பக்கங்களைப் பார்வையிடும் போது மட்டும் கண்ணில் பட்ட அபத்தங்களை மட்டும் கீழே உங்கள் பார்வை முன் வைத்துள்ளேன்.



---------------------------------------------------------------------------
untitled.JPG

----------------------------------------------------------------------------

aa.JPG
----------------------------------------------------------------------------

22.JPG
----------------------------------------------------------------------------

bb.JPG

----------------------------------------------------------------------------

5.JPG

----------------------------------------------------------------------------

4.JPG

----------------------------------------------------------------------------

2.JPG

----------------------------------------------------------------------------

1.JPG

----------------------------------------------------------------------------

இறைமறை, நபிமொழிகளுக்கான மொழிபெயர்ப்பினைத் தலைகீழாகக் காண்பித்து, பிற மொழி அறிந்தவர்களை நகைப்பிற்குள்ளாக்கவோ அல்லது மோசமான வழியில் இட்டுச் செல்லவோ வாய்ப்பளிக்கும் ஆபத்தான இந்த தானியங்கி மொழிபெயர்ப்பு வசதியை தங்கள் தளத்தில் இருந்து உடனடியாக நீக்கி, உரிய அறிவிப்பினை வெளியிடக் கோருகிறேன்.

எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்குக் கண்ணியத்தைத் தொடர்ந்து அளிப்பானாக!

நன்றி!

அன்புடன்,
முஹம்மத் சர்தார்

Wednesday, October 26, 2011

முடிந்தப்பின்னே முட்டிக்கொள்வதில் பலனில்லை

dd.jpgகொழுத்தச்
செல்வத்தில் செழித்துக்
கொடுக்க மனமில்லையா;
வழங்கிய வாய்ப்பினை
கெடுத்து வணங்கவில்லையா;
இரக்கம் என்பதை
இதயத்தில் இருந்து
இறக்கிவைத்தவனா;
மது மாதுகளில் மூழ்கி
மதி இழந்தவனா!

இறுதி இடம் உனக்குண்டு;
தனிமைச் சிறை
தரையுண்டு;
அனைவரும் அழுது
அனாதையாய்
இருட்டறையில் நீ!

வினாவிற்கு
விடையில்லாமல்;
விழிகள் சொறுகி;
புடைத்த உன் எலும்புகள்
படைத்தவனால் நொறுக்கப்பட்டு;
படுகுழியில் பரிதாபமாய்!

முடிந்தப்பின்னே
முட்டிக்கொள்வதில்
பலனில்லை;
படைத்தவனைப் பயந்து
வாழ்ந்துக் கொண்டால்
பயமில்லை! 

-- 
-யாசர் அரஃபாத்

அல்லாஹ் கூறுகிறான்


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

அல்லாஹ் கூறுகிறான்: -

"(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; 'நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன்பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்என்று கூறுவீராக. அல்-குர்ஆன் (2:186) "

'
என்னிடமே நீங்கள் பிரார்த்தியுங்கள்நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோஅவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.' (அல்குர்ஆன் 40:60)

மேற்கூறிய இந்த வசனங்கள் பிரார்த்தனையின் முக்கியத்துவம் குறித்துக் கூறும் வசனங்களாகும். ஏனெனில் பிரார்த்தனை சிறந்த வணக்கங்களில் ஒன்றாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
பிரார்த்தனை (துஆ) ஓர் வணக்கமாகும். என்னை அழையுங்கள். நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன் என்று உங்கள் இறைவன் கூறுகிறான். (அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் -ரலிநூல்:அபூதாவூத்திர்மிதி)
பிரார்த்தனைகளுக்கு அல்லாஹ் நிச்சயம் பதிலளிக்கிறான்: -

அல்லாஹ்வை பேணுதலான முறைப்படி வணங்கும் ஒரு உண்மையான முஃமின் தன்னுடைய இறைவனிடம் கேட்டால் அந்தப் பிரார்த்தனைக்குப் பதிலளிப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
பாவம் சம்பந்தப்படாத இரத்த பந்தத்தை துண்டிக்காத விஷயத்தில் எந்த ஒரு முஸ்லிமாவது பிரார்த்தனை செய்தால் அல்லாஹ் அவனுக்கு மூன்றில் ஒன்றை கொடுக்காமலில்லை. அவனின் பிரார்த்தனையை உடன் ஏற்றுக் கொள்கின்றான். அல்லது அதனுடைய நன்மையை மறுமைக்காக சேகரித்து வைக்கின்றான். அல்லது அப்பிரார்த்தனையைப் போன்று (அவனுக்கு நேரவிருந்த) ஒரு ஆபத்தை தடுத்து விடுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள்அப்படியானால் நாம் அதிகம் பிரார்த்தனை செய்வோமே என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள்கேட்பதை விட அல்லாஹ் அதிகமாக பதிலளிக்க தயாராக இருக்கிறான்எனக் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரிஆதாரம்: திர்மிதி
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: -
துன்பத்திற்குள்ளான நிலையிலும் கவலையிலும் இருக்கும் அல்லாஹ்வின் அடியான் ஒருவன் இந்த துஆவை கேட்டால் அவருடைய துஆ ஏற்றுக் கொள்ளப்படும்.

"
யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உனது அடிமைஉனது அடிமையின் மகன்மற்றும் உனது அடிமைப் பெண்ணின் மகன். எனது நெற்றிப்பிடி உன் கையில் உள்ளது. அதனை உனது சட்டத்தின்படி நீ செயல்படுத்துகிறாய். எனக்கு நீதமான தீர்ப்பு வழங்குகிறாய். உனக்கு நீயே சூட்டிக்கொண்டஉனது வேதத்தில் நீ இறக்கியருளியஉனது படைப்பினங்களில் ஒருவருக்கு (நபிக்கு) நீ கற்றுக் கொடுத்தஉனது மறைவான ஞானத்தில் நீயே தேர்ந்தெடுத்துக் கொண்ட உன்னுடைய அனைத்துப் பெயர்களின் பொருட்டால் கேட்கிறேன். (இறைவா!) குர்ஆனை என் உள்ளத்தை பொலிவூட்டக் கூடியதாகநெஞ்சின் ஒளியாககவலையை நீக்கக்கூடியதாக,துன்பத்தை போக்கக் கூடியதாக ஆக்குவாயாக!"
இந்த வார்த்தைகளடங்கிய துஆ ஏற்றுக்கொள்ளப்படும். அல்லாஹ் அவருடைய துயரங்களை நீக்கிவிட்டு அதற்குப் பகரமாக இன்பங்களையும் மகிழ்ச்சியையும் அளிப்பான். ஆதாரம்: அஹ்மத்
உயர்ந்தவனாகிய உங்களின் இரட்சகன் வெட்கமுள்ளவன்சங்கையானவன் அவனிடம் இரு கைகளையும் உயர்த்தினால் (பிரார்த்தித்தால்) அவ்விரண்டையும் வெறுமையாக திருப்பி விட அவன் வெட்கப்படுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: சல்மான் (ரலி)
மூவரின் துஆ அல்லாஹ்வினால் நிராகரிக்கப் படாது. பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு செய்யும் துஆநோன்பாளியின் துஆ;பிரயாணத்தில் இருக்கும் பயணியின் துஆ.ஆதாரம்: திர்மிதி

"
மூவரின் துஆக்கள் எப்போதும் (அல்லாஹ்வினால்) நிராகரிக்கப்படுவதில்லை. அவர்கள்: ஒருவர் தமது நோன்பு துறக்கும்போது கேட்கும் துஆநீதியான ஆட்சியாளரின் துஆஅநியாயம் இழைக்கப்பட்டவரின் துஆ" ஆதாரம்: திர்மிதி
பிரார்த்தனை செய்ய சிறந்த நேரங்கள்: -
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
இரவின் பாதியோ அல்லது மூன்றில் இரண்டு பகுதியோ கடந்து விட்ட பின் அல்லாஹுத்தஆலா பூமியின் வானத்திற்கு இறங்குகிறான். பிறகுகேட்கக் கூடியவர்களுக்கு கொடுக்கப்படும்பிரார்த்திப்பவர்களுக்கு பதிலளிக்கப்படும். பாவ மன்னிப்புத் தேடுபவர்களுக்கு பாவம் மன்னிக்கப்படும் என்று அதிகாலை உதயமாகும் வரைக்கும் அல்லாஹ் கூறிக்கொண்டிருக்கிறான். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)ஆதாரம்: முஸ்லிம்.
ஒவ்வொரு இரவின் ஒரு பகுதியிலும் கேட்கப்படும் துஆ: -

"இரவின் பகுதியில் ஒரு நேரம் இருக்கிறது அந்நேரத்தில் எந்த முஸ்லிமும் இந்த உலகத்தின் விஷயத்தில் அல்லது மறுமையின் விஷயத்தில் கேட்டு அது அளிக்கப்படாமல் இருப்பது இல்லைஇது ஒவ்வொரு இரவிலும் இருக்கிறது." ஆதாரம்: முஸ்லிம்.
பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் கேட்கப்படும் துஆ: -

'பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் துஆக்கள் நிராகரிக்கப்படுவது இல்லை.அறிவிப்பவர்: அனஸ் (ரலி) ஆதாரம்: அஹ்மத்அபுதாவூத்.
சஜ்தாவின் போது இறைவனிடம் மிகவும் நெருக்கமாக இருக்கும் நேரமாகும்: -

'ஓர் அடியான் தன்னுடைய இறைவனிடம் மிகவும் நெருக்கமாக இருக்கும் நிலை ஸஜ்தாவில் இருக்கும் போதே ஆகும். ஆகையால் அந்நிலையில் அல்லாஹ்விடம் அதிகமாக துஆ செய்து தமது தேவைகளை கேளுங்கள். ஆதாரம்: முஸ்லிம்அபூதாவுத்

(
பிரார்த்தனை) துஆ செய்யும் ஒழுங்கு முறைகள்: -

'நீங்கள் யாராயினும் பிரார்த்தனைப் புரிந்தால் அல்லாஹ்வைப் புகழ்ந்து ஆரம்பிக்கட்டும். பின்னர் இறைத்தூதர் (ஸல்) மீது ஸலவாத்துச் சொல்லட்டும். பின்னர் அவர் விரும்பியதைக் கேட்டு பிரார்த்திக்கட்டும்என்றார்கள். அறிவிப்பவர்: பலாலா இப்னு உபைத் (ரலி) ஆதார நூல்கள்: முஸ்னத் அஹ்மத். ஸுனன் அபூதாவூத். ஸுனன் திர்மிதி.
அவசரக்கார மனிதன்: -

நம்மில் சிலருக்குநான் தொடர்ந்து ஐவேளை தொழுது வருகிறேன்நோன்பு வைக்கின்றேன்கடமையான மற்றும் சுன்னத்தான அமல்களையெல்லாம் செய்கின்றேன்ஆனால் என்னுடைய பிரார்த்தனைகளுக்கு பலனில்லையே ஏன என்ற சந்தேகம் எழலாம்.
பொதுவாக மனிதன் அறியாமையின் காரணமாக அவசரக்காரனாக இருக்கிறான். சில நேரங்களில் ஒன்றை அவன் நல்லது எனக் கருதி அது தனக்கு கிடைத்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் என எண்ணுவான். ஆனால் அது அவனுக்குக் கிடைக்கப்பெறுமாயின் அதுவே அவனுடைய இந்த உலக வாழ்வின் மிகப்பெறும் சோதனையாகவும் வேதனையாகவும் மாறிவிடுகிறது. ஏன் மறுமை வாழ்வுக்காக அவனுடைய செயல்பாடுகளையே பாதித்துவிடும் அளவுக்கு அது அமைந்து விடுகிறது.
அனைத்தையும் அறிந்தவனான அல்லாஹ் மட்டுமே அவனுடைய அடிமைகள் ஒவ்வொருடைய தேவையையும் நன்கறிந்தவனாகவும்,அவர்களுக்கு எது தேவை மற்றும் எது தேவையில்லை எனவும் அறிந்தவனாக இருக்கிறான். எனவே நாம் அல்லாஹ்விடம் துஆ செய்யும் போது நாம் கேட்கும் ஒன்று நமக்கு இம்மைக்கும் மறுமைக்கும் பலனளிக்குமாயின் அதை நல்குமாறும்,அவ்வாறில்லையெனில் அதற்குப் பகரமாக அதைவிடச் சிறந்த ஒன்றை நல்குமாறும் கேட்கவேண்டும். ஏனெனில் எது நல்லது அல்லது எது கெட்டது என்பது நமக்குத் தெரியாதுஆனால் நம்மைப் படைத்த அல்லாஹ்விற்கே நம்மை விட பரிபூரணமாக தெரியும்.
அல்லாஹ் கூறுகிறான்: -
மனிதன்நன்மைக்காக பிரார்த்தனை செய்வது போலவே (சில சமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கின்றான்; (ஏனென்றால்) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான். (அல் குர்ஆன் 17:11)

மேலும் ஒரு விஷயத்தை இங்கு குறிப்பிடுவது பொருத்தம் என நினைக்கிறேன். அதாவது ஒவ்வொரு முஸ்லிமும் கண்டிப்பாக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யத் தவறக் கூடாது. மனிதனாகிய அனைவரும் அல்லாஹ்வின் பால் தேவையுள்ளவர்கள். அல்லாஹ்மட்டும் தான் தேவையற்றவன்.
தேவைகளைக் கேட்கும் ஒருவன் கண்டிப்பாக ஒரு விஷயத்தைக் கவணத்தில் கொள்ள வேண்டும். அதாவது நாம் அடிமைகள்,அல்லாஹ் நமது எஜமான். நாம் எஜமானிடத்தில் கேட்கும் போதெல்லாம் எஜமான் உடனேயே நமக்கு தரவேண்டும் என எதிர்பார்ப்பது நம்மிடம் இருக்கும் குறையாகும். அல்லாஹ்வைப் பொருத்தவரை தனது அடியான் விஷயத்தில் அதிக அக்கறையுள்ளவன். அதனால் பிரார்த்தனை செய்யுமாறு கூறிவிட்டு அப்பிரார்த்தனைக்கு பதில் கொடுப்பதில் சில போது தாமதங்களை ஏற்படுத்துகிறான். காரணம்நாம் ஒன்றைக் கேட்போம் அதனை உடனேயே தந்துவிட்டால் சிலபோது அதுவே நம்மை சிரமத்திற்கு உள்ளாக்கி விடலாம். ஏனென்றால் அதனால் ஏற்படும் எதிர்கால விளைவுகள் பற்றி நாம் அறிய மாட்டோம். ஆனால் அல்லாஹ் நன்கு அறிந்தவன்.
உதாரணமாகஒருவருக்கு நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவர் மீதும் தந்தைக்கு பாசம் இருக்கின்றது. ஏதாவதொரு பொருளை அனைவரும் கேட்கிறார்கள்அப்பொருளை பெற்றுக் கொடுக்கும் சக்தியும் தந்தைக்கு உண்டு. ஆனால் அனைவருக்கும் அதனைப் பெற்றுக் கொடுக்க மாட்டார். காரணம் யாருக்கு கொடுக்க முடியும் யாருக்குக் கொடுக்கக் கூடாது என்பது குழந்தைகளை விட தந்தைக்கு நன்கு தெறியும். இதே போல் தான் அல்லாஹ் நம் விஷயங்களைப் பொறுத்த வரை நம்மை விட நன்கு அறிந்துள்ளான்.
எனவே நமது பிரார்த்தனைகளுக்கான பதிலை உடனேயே காண நினைப்பது நமது பண்பு. அப்பிரார்த்தனைக்கான பதிலை தரவேண்டிய நேரத்தில் தருவது அல்லாஹ்வின் பண்பாகும் என்பதனை உணர்ந்து கொள்ள தவறக் கூடாது.
எனவே நாம் அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையில் நம்பிக்கையிழக்காமலும் நம்முடைய துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லையே என பொறுமையிழக்காமலும் அல்லாஹ்வையே முற்றிலும் ஈமான் கொண்டு அவனையே முற்றிலுமாக சார்ந்து அவனிடமே நம்முடைய பொறுப்புகளை விட்டுவிட வேண்டும்.
மேலும் நாம் அவன் நம்முடைய பிரார்த்தனைகளைக் கேட்டுக் கொண்டான் என்றும் நாம் கேட்ட பிரார்த்தனைகள் நமக்கு இவ்வுலகிலோ அல்லது மறுமையிலோ நமக்குப் பலனளிக்குமாயின் அதை நமக்கு அல்லாஹ் நாடினால் தருவான் என்றும் அல்லது ஈருலகிலும் பலனளிக்கும் அதைவிடச் சிறந்த ஒன்றை நமக்குத் தருவான் என்றும் நாம் உறுதியாக நம்பிக்கைக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்: -
மனிதன் (நம்மிடம் பிரார்த்தனை செய்து) நல்லதைக் கேட்பதற்குச் சோர்வடைவதில்லைஆனால் அவனைக் கெடுதி தீண்டுமாயின் அவன் மனமுடைந்து நிராசையுள்ளவனாகின்றான். (அல்-குர்ஆன் 41:49)
அன்றியும்மனிதனுக்கு நாம் அருள் புரிந்தால் அவன் (நன்றியுணர்வின்றி) நம்மைப் புறக்கணித்துவிலகிச் செல்கிறான் - ஆனால் அவனை ஒரு கெடுதி தீண்டினால் நீண்ட பிரார்த்தனை செய்(பவனா)கின்றான். (அல்-குர்ஆன் 41:51)

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹூரைரா (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்: -
பொறுமையை இழக்காமலும்மேலும் 'நான் பிரார்த்தனை புரிந்தேன் ஆனால் என்னுடைய பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படவில்லை'என்று கூறாத நிலையிலும் உங்களுடைய துஆ ஏற்றுக்கொள்ளப்படும்'
அல்லாஹ்வின் வாக்கு என்றுமே உண்மையானது: -

அல்லாஹ் கூறுகிறான்: -
பிரார்த்தனைக்கு பதிலளிப்பதில் நாமே சிறந்தோர் ஆவோம். (அல்-குர்ஆன் 37:75)

அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதுஇன்னும் வார்த்தைப்பாட்டில் அல்லாஹ்வைவிட உண்மையானவர்கள் யார்? (அல்-குர்ஆன்4:122)

எனவே அல்லாஹ்வையும்அவனது தூதரையும் அவனது இறுதி வேதத்தையும் நம்பும் ஒருவர் உறுதியான நம்பிக்கையுடன் ஏதாவது ஒரு வகையில் அல்லாஹ் நிச்சயம் நமது பிரார்த்தனைக்கு பதிலளிப்பான் என்ற நம்பிக்கையில் அவனிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.

2) 
ஹராமான செயல்களில் மூழ்கியுள்ள ஒருவரின் துஆ: -

ஹராமான செயல்களில் மூழ்கியுள்ள ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை பெரும் பாலும் துஆக்கள் அங்கீகரிக்கப்பட வாய்ப்பில்லை என்பதையும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

''
ஒரு நீண்ட பயனத்தில் ஒருவன் இருக்கிறான். அவனுடைய தலை பரட்டையாகவும்அவன் புழுதியினால் அழுக்கடைந்தவனாகவும் இருக்கும் நிலையில் வானத்தை நோக்கி தம் இரு கரங்களையும் உயர்த்தியவனாகஇறைவா! இறைவா! எனப்பிரார்த்திக்கின்றான். (ஆனால்) அவனது உணவும் ஹராமாகும்குடிப்பவையும் ஹராமாகும்அவனது ஆடையும் ஹராமாகும்அவனோ ஹராத்திலேயே தோய்ந்துள்ளான் (இந்நிலையில்) அவனது பிரார்த்தனை எங்ஙணம் ஏற்றுக் கொள்ளப்படும்". என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்.
எனவே எமது பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமாயின் இந்நிபந்தனைகளை கட்டாயம் கவணத்திற் கொள்ள வேண்டும். வட்டிகள்ளக் கடத்தல்திருட்டுமோசடிபிறர் சொத்தை அபகரித்தல்ஹராமானவற்றை விற்றல்அதனோடு தொடர்பாயிருத்தல்,ஹராமானவற்றை உண்ணுதல்பருகுதல்... போன்ற அனைத்து வகையான ஹராமான செயல்களில் இருந்தும் விலகியவர்களாக எல்லா நேரத்திலும் அல்லாஹ்வை அஞ்சியவர்களாக வாழ்ந்து அவனிடம் கையேந்தினால் நிச்சயமாக ஒருபோதும் நமது பிரார்த்தனைகளை மறுக்க மாட்டான்.
அளவுக்கு மீறி பாவம் செய்திருப்பினும் மன்னிக்கக் கூடியவனாக அல்லாஹ் இருக்கிறான்: -
அல்லாஹ் தன்னுடைய திருமறையில் அத்தியாயம் 39வசனங்கள் 53-54 ல் கூறுகிறான்: -

'
என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும்அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்மிக்கக் கருணையுடையவன்' (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.

எனவே நான் பாவங்கள் அதிகம் செய்த பாவியாக இருக்கிறேன் என்று பாவத்திலேயே மீண்டும் மூழ்கியிருக்காமல் உடனடியாக இந்த பாவச் செயல்களிலிருந்து மீண்டுஇந்த பாவச் செயல்களை திரும்பவும் செய்ய மாட்டேன் என்ற உறுதியுடன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரிய பிறகு தொடர்ந்து நற்கருமங்களைச் செய்தவர்களாக அல்லாஹ்விடம் தமது தேவைகளைப் பிரார்த்தித்தால் இன்ஷா அல்லாஹ் அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவான்.
யா அல்லாஹ்! தூய்மையான இறைவிசுவாசிகளாக எம்மை வாழ வைப்பாயாக.

3) 
அநீதியிழைக்கப்பட்டவனின் துஆ: -

ஹராமான செயல்களோடு தொடர்புள்ள ஒருவனாக இருந்தாலும் (நிராகரிப்பாளனாகக் கூட இருக்கலாம்) அப்பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். யாரும் யாருக்கும் எக்காரணம் கொண்டும் அநீதியிழைக்கக் கூடாது. எனவே தான் அநீதியிழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை தங்குதடையின்றி அல்லாஹ்வை சென்றடைகின்றன என்பதனை ஒரு சந்தர்ப்பத்தில் பின் வருமாறு கூறினார்கள்.

முஆத் (ரழி) அவர்களை யமனுக்கு அனுப்பும் போது "அநீதியிழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை விஷயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்! எனென்றால் அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் திரை கிடையாது" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

Tuesday, October 25, 2011

குர்ஆன் - கேள்வி - பதில்கள்


Q1) குர்ஆன் என்பதற்கு என்ன பொருள்?
A) ஓதுதல்! (that which is recited; or that which is dictated in memory form)
Q2) குர்ஆன் யாரால் அருளப்பட்டது?
A) அகிலங்கள் அனைத்தையும் படைத்த அல்லாஹ்வால் அருளப்பட்டது
Q3) குர்ஆன் எந்த இரவில் அருளப்பட்டது?
A) லைலத்துல் கத்ர் இரவில்
Q4) குர்ஆன் யார் மூலமாக அருளப்பட்டது
A) கண்ணியமிக்க வானவர் ஜிப்ரயீல் (அலைஅவர்களின் மூலமாக.
Q5) குர்ஆன் எந்த தூதருக்கு அருளப்பட்டது?
A) இறுதி தூதர் முஹம்மது (ஸல்அவர்களுக்கு.
Q6) முதன் முதலாக குர்ஆன் எந்த இடத்தில் வைத்து அருளப்பட்டது?
A) மக்காவிலுள்ள ஹிரா குகையில் அருளப்பட்டது
Q7) எந்த கலிபாவின் ஆட்சிக் காலத்தில் குர்ஆன் எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டது?
A) அபூபக்கர் (ரலிஅவர்களின்ஆட்சிக்காலத்தில்
Q8) எந்த கலிபாவின் ஆட்சிக் காலத்தில் குர்ஆன் முதன் முதலாகபிரதியெடுக்கப்பட்டது?
A) உதுமான் (ரலிஅவர்களின் ஆட்சிக் காலத்தில்.
Q9) கலிபா உதுமான் அவர்களின் காலத்தில் பிரதியெடுக்கப்பட்ட குர்ஆன் தற்போதுஎங்கிருக்கிறது?
A) ஒன்று தாஸ்கண்டிலும்மற்றொன்று துர்கியின் இஸ்தான்புல் அருங்காட்சியகத்தில்உள்ளது.
Q10) அல்லாஹ்விடத்தில் உயர்ந்த அந்தஸ்து உடையவர்கள் யார் என குர்ஆன்கூறுகிறது?
A) தக்வா (இறையச்சம்உடையவர்கள்
Q11) குர்ஆனில் மிகப்பெரிய அத்தியாயம் எது?
A) சூரத்துல் பகரா (இரண்டாவது அத்தியாயம்)
Q13) குர்ஆனில் மிகச் சிறிய அத்தியாயம் எது?
A) சூரத்துல் கவ்ஸர் (108 வது அத்தியாயம்)
Q14) குர்ஆனை பாதுகாப்பது யார் பொறுப்பில் உள்ளது?
A) அதை இறக்கிய இறைவனே அதன் பாதுகாவலன் ஆவான்.
Q15) நபி (ஸல்அவர்களின் எத்தனையாவது வயதில் முதன் முதலாக குர்ஆன்அருளப்பட்டது?
A) 40 ஆவது வயதில்
Q16) குர்ஆனுக்கு இருக்கும் மற்ற பெயர்களில் சிலவற்றைக் கூறுக:
A) அல்-ஃபுர்கான்அல்-கிதாப்அத்-திக்ர்அல்-நூர்அல்-ஹூதா
Q17) இறைவன் நம்மோடு இருக்கிறான் என கூறிய நபி யார்?
A) முஹம்மது (ஸல்அத் தவ்பா(9:40)
Q18) ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியுமா?
A) ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியாதுஅஸ் ஸபா(34:14) மற்றும் அல்ஜின்னு(72:10)
Q19) குர்ஆனில் மூன்றில் ஒரு பகுதி என சிறப்பித்துக் கூறப்பட்ட சூரா எது?
A) சூரத்துல் இக்லாஸ் (112 வது அத்தியாயம்)
Q20) குர்ஆனில் எத்தனை அத்தியாயங்கள் இருக்கிறது?
A) 114 அத்தியாயங்கள்
Q21) நபி முஸா (அலைஅவர்களோடு இறைவன் பேசிய பள்ளத்தாக்கின் பெயர் என்ன?
A) துவா பள்ளத்தாக்குஅந் நாஜிஆத்(79:16), தாஹா(20:12). இது தூர் மலையின் அடிவாரத்தில்உள்ளது. (19:52)
Q22) அல்-குர்ஆனை மனனம் செய்த முதல் மனிதர் யார்?
A) முஹம்மது நபி (ஸல்அவர்கள்
Q23) நபி (ஸல்அவர்களின் பெயர்கள் குர்ஆனில் எத்தனை முறை இடம் பெற்றுள்ளது?
A) முஹம்மது (ஸல்என நான்கு முறையும்அஹ்மது என ஒரு முறையும் இடம்பெற்றுள்ளது.
Q24) இறைவனை வணங்குவதற்காக கட்டப்பட்ட முதல் இறையில்லம் எது என குர்ஆன்கூறுகிறது?
A) கஃபா
Q25) எதிர்கால சந்ததியினருக்கு அத்தாட்சியாக விட்டு வைக்கப்பட்டுள்ளவற்றில்இரண்டைக் கூறுக:
A) நூஹ் (அலைஅவர்களின் கப்பல் (54:15), மற்றும் பிர்அவ்னின் உடல் (10:92)
Q26) நூஹ் நபியின் கப்பல் எங்கு ஒதுங்கியது என குர்ஆன் கூறுகிறது?
A) ஜூதி மலையில் (11:44 )
Q27) குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே ஒரு ஸஹாபியின் பெயர் என்ன?
A) ஜைத் பின் ஹாரித் (ரலிஅஹ்ஜாப் (33:37)
Q28) ஷைத்தான் எந்த இனத்தைச் சேர்ந்தவன் என குர்ஆன் குறிப்பிடுகிறது?
A) ஜின் இனம்
Q29) இஸ்ராயிலின் வழித்தோன்றல்களுக்கு கடமையாக்கப்பட்ட வணக்கங்கள் எனகுர்ஆன் குறிப்பிடுபவை எவைகளை?
A) தொழுகை மற்றும் ஜக்காத்
Q30) ‘பிஸ்மில்லாஹ்’ கூறி ஆரம்பம் செய்யப்படாத சூரா எது?
A) சூரத்துத் தவ்பா
Q31) ‘பிஸ்மில்லாஹ்’ இரண்டு முறை வரும் சூரா எது?
A) சூரத்துந் நம்ல் -எறும்புகள் (27:30)
Q32) குர்ஆன் முழுவதுவதுமாக இறக்கியருளப்பட எத்தனை வருடங்கள் ஆனது?
A) 23 வருடங்கள்
Q33) தொழுகையில் அவசியம் ஓதப்பட வேண்டிய சூரா எது?
A) அல்-பாத்திஹா
Q34) துஆ (பிரார்த்தனைஎன குறிப்பிடப்படும் சூரா எது?
A) அல்-பாத்திஹா
Q35) திருமறையின் தோற்றுவாய் என குறிப்பிடப்படும் சூரா எது?
A) அல்-பாத்திஹா
Q36) குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்ட ஒரே ஒரு பெண்மணி யார்?
A) மர்யம் (அலை)
Q37) நபிமார்களின் பெயரால் எத்தனை சூராக்கள் இருக்கின்றன?
A) 6 சூராக்கள் (யூனுஸ்ஹூத்யூசுப்இப்ராஹீம்நூஹ்முஹம்மது (ஸல்))
Q38) ஆயத்துல் குர்ஸி குர்ஆனில் எந்த பாகத்தில்சூராவில் உள்ளது?
A) மூன்றாவாது பாகத்தின் ஆரம்பத்தில்இரண்டாவது அத்தியாயத்தின் 255 ஆவது வசனம்.
Q39) அல்-குர்ஆனில் இறைவனின் திருநாமங்களாக எத்தனை பெயர்கள்குறிப்பிடப்பட்டுள்ளது?
A) 99 பெயர்கள்
Q40) மதினா வேறெந்த பெயரில் குர்ஆனில் குறிப்பிடப்படுகிறது?
A) யத்ரிப் (33:13)
Q41) பனி இஸ்ராயில் என யாரை குர்ஆன் குறிப்பிடுகிறது?
A) யாகூப் (அலைஅவர்களின் சந்ததியினர்களை
Q42) ஈமான் கொணடவர்களுக்கு உதாரணமாக அல்லாஹ் தன் திருமறையில் கூறும்இரு பெணமணிகள் யாவர்?
A) பிர்அவ்னின் மனைவி (66:11), இம்ரானின் புதல்வி மர்யம் (அலை) (66:12)
Q43) காபிர்களுக்கு உதாரணமாக இறைவன் தன் திருமறையில் கூறும் இரு பெண்கள்யாவர்?
A) நூஹ் (அலைஅவாகளின் மனைவி (66:10), லூத் (அலைஅவர்களின் மனைவி (66:10)

Q44) உள்ளங்கள் எவ்வாறு அமைதி பெறுகிறது என அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்?
A) அல்லாஹ்வை நினைவு கூறுவதன் முலம் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன. (13:28)
Q45) நபி ஈஸா (அலைஅவாகள் செய்ததாக இறைவன் குறிப்பிடும் அற்புதங்கள்யாவை?
A) 1) குழந்தையில் பேசியது, 2) களிமண்ணினால் பறவையை செய்துஇறைவனின்அனுமதியைக் கொண்டு உயிர் கொடுத்தல், 3) பிறவிக் குருடனுக்குப் பார்வையளித்தல், 4)வெண்குஷ்ட ரோகியைக் குணப்படுத்துதல், 5) இறந்தவரை அல்லாஹ்வின் உத்தரவுகொண்டு உயிர் பெறச் செய்தல் (5:110), 6) பிறா உண்பதை வீடடில் உள்ளவற்றை பார்க்காமலேஅறிவித்தல் (3:49)
Q46) சுவனத்தில் இருக்காது என்று இறைவன் குறிப்பிடுவது எவை?
A) 1) பசி, 2) நிர்வானம், 3) தாகம், 4) வெயில் (20:118,119)
Q47) வீரமுள்ள செயல் என குர்ஆன் எதைக் கூறுகிறது?
A) எவரேனும் (பிறர் செய்யும் தீங்கைபொறுத்துக் கொண்டு மன்னித்து விடடால் அது மிகஉறுதியான (வீரமுள்ளசெயலாகும். (42:43), (31:17), (3:186)
Q48) நபி முஸா (அலைஅவர்கள் கற்பாறையில் அடித்த போது எத்தனை நீர் ஊற்றுக்கள்பீறிட்டு எழுந்ததாக இறைவன் கூறுகிறான்?
A) பன்னிரணடு நீர் ஊற்றுகள் பீறிடடு எழுந்தது. (2:60) & (7:160)
Q49) தொழாதவர்களுக்காக இறைவன் சித்தப்படுத்தி வைத்திருப்பதாகக் கூறும்நரகத்தின் பெயர் என்ன?
A) ஸகர் என்ற நரகம்அல் முத்தஸ்ஸிர்(74:41,42,43)
Q50) இறைவன் என்னோடு இருக்கிறான் என்று கூறிய நபி யார்?
A) முஸா (அலைஅஷ் ஷுஃரா(26:62)
 

Sunday, October 23, 2011

இந்து தீவிரவாதி என்று அழைக்காதீர்கள்... வெக்கமாயிருக்கு


சாமியார்கள்-இந்து தீவிரவாதி என்று அழைக்காதீர்கள். வெக்கமாயிருக்கு விக்கவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ….

தனக்கு வந்தால் தெரியும் தலைவலியும் திருகு வலியும்தனக்கு வந்தால் தெரியும் தலைவலியும் திருகு வலியும்.

கடந்த சில நாட்களாக நாட்டு மக்களிடையே ஆச்சரியத்துடனும் அதிகமாகவும் புழங்கி வரும் வார்த்தைதான் இந்து தீவிரவாதம்.

இதுவரை திரைமறைவில் இந்துத் தீவிரவாதிகளால் சாமர்த்தியமாக திட்டமிட்டு நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகளைக் குறித்து மக்களைச் சிந்திக்கத் தூண்டியிருக்கும் அந்தப் பெருமைக்குரியவர், சாத்வி என்றழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸின் பெண்கள் அமைப்பான துர்கா வாகினியில் பயிற்சி பெற்ற பெண் சாமியார்.

நாட்டின் எந்த மூலையில் குண்டு வெடித்தாலும் காவல்துறை சம்பவ இடத்துக்கு வந்து சேரும்முன்பே, வடநாட்டு இந்துத் தீவிரவாதிகளான அத்வானி, ராஜ்நாத் சிங், மோடிகள் முதல் தமிழக இராம கோபாலன் வரை "இஸ்லாமிய தீவிரவாதம்" என்று கூச்சல் போட்டு, ஒட்டுமொத்த மக்களையும் விசாரணை அமைப்பையும் திசை திருப்பிக் கொண்டிருந்தனர். அவர்களது தலையில் பேரிடியாக இறங்கியதுதான் மாலேகோன் குண்டு வெடிப்பு தொடர் விசாரணைகள்.
எப்பொழுதும்போல் இந்தக் குண்டுவெடிப்பையும் "சிமி, இந்தியன் முஜாஹிதீன் அமைப்புகள்தான் நடத்தின" என சங் பரிவாரத்தின் சுவடு பிடித்து ஆரம்பத்தில் அறிவித்தது. காவல்துறையின் ஐயப் பார்வையும் சிமியின் மீதே ஆரம்பத்தில் இருந்தது. சிலரைக் கைது செய்து விசாரணையை நடத்தி வந்த மகாராஷ்டிரா காவல்துறைக்குக் குண்டுவெடிக்கப் பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தின் உரிமையாளரைத் தேடிச் சென்ற வேளையிலேயே உண்மையை அறிந்து கொள்ள முடிந்தது.

ஒருவேளை மாலேகோன் குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட அந்த இரு சக்கர வாகனத்தின் எஞ்சின் சேஸ் எண்கள் கண்டு பிடிக்கப் படாமல் போயிருப்பின், இப்பொழுதும் இந்தக் குண்டுவெடிப்புப் பழியும் சிமியின் தலைமீதே விழுந்திருக்கும்.

"உண்மை நீண்டநாள் உறங்குவதில்லை" என்பது போல், சங் பரிவாரத்தால் நீண்ட காலமாக மூடி மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுவெடிப்புகளின் உறைவிடங்களைக் குறித்த உண்மை, எரிமலை போன்று வெடித்துச் சிதறி வெளியாகி உள்ளது.

உலக வாழ்வைத் துறந்து இறையடியைத் தேடி பிரயாணம் செய்பவர்களாக நாட்டு மக்களால் கருதப் பட்ட சாமியார்களும் நாட்டைப் பாதுகாக்க வேண்டிய மிக முக்கிய அமைப்பான இராணுவமும் கூட்டுக் களவாணித்தனம் செய்து சங் பரிவாரத்தின் தேச விரோத நடவடிக்கைகளுக்குத் தம்மை அடமானம் வைத்து விட்டன என்பதை மாலேகோன் குண்டுவெடிப்புத் தொடர் விசாரணைகளில் கைதாகும் இராணுவ அதிகாரிகளின் மூலம் தெளிவாகி வருகின்றன.

சாமியார்கள் என்போர் கொலைகாரர்கள், கிரிமினல்கள், பெண் பித்தர்கள் என்பதைப் பலமுறை நாடு அறிந்திருந்தாலும் முக்கியமாக பாபரி மஸ்ஜித் தகர்ப்பில் இந்துத் தீவிரவாத அமைப்பான விஷ்வ ஹிந்து பரிசத்தின் சாதுக்கள் ஈடுபட்டு, தெருப்பொறுக்கிகளை விடவும் கேவலமாக நடந்து கொண்டதை நாடு கண்ட பொழுதும் சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரி கைது செய்யப்பட்டு தொடர் விசாரணையில் பல பெண்களை மானபங்கப்படுத்திய தகவல் வெளியான பொழுதும் சாமியார் வேசத்தைப் போட்டுக் கொண்டு உலா வருபவர்கள் கிரிமினல்கள் என்பதை நாடு கண்டு கொண்டது.

ஆனால், இந்து தீவிரவாத அமைப்புகளோடு இணைந்து நமது இராணுவமே நாட்டுக்கு எதிராகத் தீவிரவாதத்திலும் ஈடுபடுகிறது என்பதை மாலேகோன் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டுள்ள சாத்வியின் விஷயத்திலிருந்து அறிந்து கொண்ட பொழுது நாடு அதிர்ச்சியில் உறைந்து விட்டது!.

குண்டு வெடிப்பை நிகழ்த்தியது, குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளில் அரபி ஸ்டிக்கர்களை ஒட்டியது, அதை சிமியின் (பழைய) அலுவலகத்துக்கு அருகில் நிறுத்தி வைத்திருந்தது, "முஸ்லிம் தீவிரவாதி(!)களைக் கைது செய்" என்று கூச்சல் போட்டுக் காவல்துறையைத் திசை திருப்பியது, காவல்துறை சிமியின் முன்னாள் உறுப்பினர்கள் 20 பேரைக் கைது செய்தது வரை எல்லாம் தங்கள் திட்டப்படி நடந்து கொண்டிருப்பதாக மனப்பால் குடித்துக் கொண்டிருந்தனர் தீவிரவாத சாமியாரினிகளைக் கைவசம் வைத்துள்ள இந்து தீவிரவாத அமைப்புகள்.

இந்து மதத் துறவியான ஒருவர், இந்துக்களால் ஏறக்குறைய ஒரு கடவுளைப்போல் கருதப்படுபவர். ஓர் இந்துத் துறவி இந்து மதத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாலும் மாலேகான் குண்டுவெடிப்பின் ஆணிவேர் ஓர் இந்துத் துறவியான சாத்வீ ப்ராக்யா என்பதாலும் ஊடகங்கள் இப்போது 'இந்துத் தீவிரவாதி' என்று அவரையும் அவரின் கூட்டாளிகளையும் அடையாளப் படுத்தின.

"நாட்டில் நடக்கும் குண்டு வெடிப்புகளை நடத்துபவர்களைத் தீவிரவாதிகள் என்றுதான் அழைக்க முடியும்" என்று சொல்லி, அத்தோடு இஸ்லாத்தையும் இணைத்து நேற்றுவரை தாங்கள் வைத்த குண்டுகளுக்கு இஸ்லாமியர்களை இரையாக்கி வந்த சங் கூட்டம் இன்று அதே வாசகம் தங்களுக்கு எதிராக திரும்பி விட்டதைப் பார்த்து விக்கவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கின்றனர்.
மாலேகோன் குண்டு வெடிப்பில் துர்காவாகினியின் சாமியாரினி சாத்வி பிடிபட்டவுடன், காந்தியைக் கொன்ற கோட்சேயை, "எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவன் அல்ல" என கழட்டி விட்டது போன்று, "எங்களுக்கும் சாத்விக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என கழட்டி விட்ட சங் அமைப்புகள், அவ்வாறு "குண்டு வெடிப்பில் ஈடுபட்ட இந்துக்களை இந்துத் தீவிரவாதி என அழைக்கக் கூடாது" எனவும் முராரி பாட ஆரம்பித்து விட்டன.

தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பது போல், நேற்று வரை தாங்கள் செய்த கயமைத்தனங்களுக்கு இஸ்லாமிய சமுதாயத்தை படிக்க.. "இஸ்லாமியத் தீவிரவாதி" என காவு தந்து கொண்டிருந்த தேச விரோத கும்பலுக்கு இன்று அதே வாசகம் தங்களுக்கு எதிராக திரும்பியவுடன் அதன் வலி தெரிகிறது போலும்.

தமிழகத்தில் இந்துத் தீவிரவாதத்தை முழு நேரப்பணியாக ஏற்று செயல்பட்டு வரும் இந்து தீவிரவாத அமைப்பான இந்து முன்னணியின் தலைவர் இராம கோபாலன் "இந்துத் தீவிரவாதம்" என்ற சொல்லைக் கேட்டவுடன் கதி கலங்கிப் போய் கீழ்கண்டவாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்:

"இந்து மற்றும் பயங்கரவாதம் என்ற 2 சொற்களும் முரண்பட்டவை, பொருந்தாதவை. இந்து அறநெறி நூல்கள் வன்முறையையோ, பயங்கரவாதத்தையோ ஆதரிக்கவில்லை, கற்பிக்கவும் இல்லை.

மாலேகாவ்ன் நகரில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். ஆனால் இந்து தீவிரவாதம் என்று இல்லாத ஒன்றை கற்பனையில் உருவாக்கி இருப்பது வெட்கக் கேடாகும்.

இந்துக்களுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் போலி மதச்சார்பின்மைவாதிகள் இந்து பயங்கரவாதம் என்ற சொல்லை பயன்படுத்தி வருவது இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு இழைக்கப்படுகிற துரோகம், அவமதிப்பு, அவமானம் ஆகும்.

மத அடிப்படையில் நமது நாடு ஏற்கனவே பிரிவுபட்டுத்தான் இருக்கிறது. இந்து பயங்கரவாதம் என்று சொல்லி இச்சம்பவத்தை ஊதி பெரிதாக்க நினைப்பவர்கள், பிளவை மேலும் அகலப்படுத்தி நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் சமாதானத் தையும் சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள்.
 "

முன்னர் இதே இந்துத் தீவிரவாதிகள் தாங்கள் செய்த அநியாயங்களுக்காக முஸ்லிம் சமுதாயம் பலிகடாவாக்கப்பட்டபோது "இஸ்லாமியத் தீவிரவாதிகள்" என்ற சொல்லைப் பயன்படுத்துவதைத் தங்களின் அடையாளமாக ஆக்கிக் கொண்ட வேளையில் முஸ்லிம் சமுதாயத்தில் இருந்து, "இஸ்லாம் என்றால் சமாதானம், அமைதி என்று பொருள். இஸ்லாம் உலகில் சமாதானத்தையே விரும்புகிறது; அது சமாதானத்தையே போதிக்கிறது; தீவிரவாதத்திற்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை; நேர் எதிர் முரணான அவ்வாசகங்களை உபயோகிக்கக் கூடாது" என்று எழுந்த குரல்களைக் கண்டு கொள்ளாத இந்தக் கயவர் கும்பலின் மேற்கண்ட வாசகங்கள் எவ்வளவு போலியானவை என்பதை விளங்கிக் கொள்ள இயலும்.
மத அடிப்படையில் நாட்டைத் துண்டாடி ஆட்சியைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் இந்துத் தீவிரவாதிகள், நாட்டின் ஒருமைபாட்டையும் சமாதானத்தையும் ஒற்றுமையையும் குறித்து இப்போது அச்சம் கொள்வதாகச் சொல்வது எவ்வளவு தேர்ந்த நடிப்பு என்பதும் அனைவருக்கும் விளங்கும்.

நாட்டின் சமாதானத்தினையும் ஒற்றுமையையும் விரும்பும் ஒரே காரணத்திற்காகத்தான், இந்நாட்டின் விடுதலைக்காக இரத்தத்தால் காவியம் படைத்த இஸ்லாமிய தியாகச் சமுதாயம், நாட்டு விடுதலைப்போரில் ஆங்கிலேயனுக்குக் கோவணம் தூக்கி அலைந்த பார்ப்பனீய தேச விரோதிகளின் "இஸ்லாமியத் தீவிரவாதிகள்" என்ற பொருந்தா, அநியாயப் பொய் குற்றச்சாட்டையும் பிரச்சாரத்தையும் கேட்டு அவமானப்பட்டாலும் கொதிக்காமல் அமைதி காத்து வந்தது.

எனவே, நாட்டு ஒற்றுமையை முன் நிறுத்தி இந்த இந்து முன்னணித் தீவிரவாதி கோரிக்கை வைத்துள்ளதால், அதனைப் பரிசீலிக்கும் விதத்தில்,

படிக்க:.. குண்டு தயாரிப்பவன்,
படிக்க.. வெடி மருந்துகளை சேகரிப்பவன்,
படிக்க...அப்பாவி பொதுமக்களைத் தாக்கும் நோக்கில் குண்டுகளை வெடிக்கச் செய்பவன்,
படிக்க.. அதன் பழி வேறொரு சமூகத்தார் மீது விழ வேண்டும் என்பதற்காகப் போலி வேடம் போடுபவன்,
படிக்க... பெண்கள், முதியோர், குழந்தைகள் என்று பாராமல் ஈவிரக்கமில்லாமல் கொடூரமாகக் கொன்று குவிப்பவன்,
படிக்க... சிறு குழந்தைகளையும் விடாமல் பாலியல் பலாத்காரம் செய்பவன்,
படிக்க... ஆட்சி அதிகாரம் கிடைக்கப்பெற்றால் அதனைத் துஷ்பிரயோகம் செய்பவன்,
படிக்க.... அப்பாவிகளை என்கவுண்டர் என்ற பெயரில் படுகொலை செய்பவன்,
படிக்க... அதுபோன்ற கொலைகளுக்குக் காரணமாக இருப்பவன்,
படிக்க... பொதுச் சொத்துக்களை நாசம் செய்பவன்,
படிக்க... இனவாதம் என்ற பெயரால் அராஜகம் செய்பவன்,
படிக்க.. பிறமத வழிபாட்டுத் தலங்களைத் தாக்கி அழிப்பவன்,
கலவரம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத ஊர்வலங்கள், ரத யாத்திரைகளை நடத்துபவன்...

ஆகியோர் எல்லாம் இந்துக்களாக இருப்பதால் மேற்காண்பவர்களைத் தவிர்த்த அனைவரும் சாதாரண இந்துக்கள் என்றும் மேற்காண்பவர்களை மட்டும் "இந்துத் தீவிரவாதிகள்" என்றும் அடையாளப் படுத்துவது பொருத்தமாக இருக்கும்.
http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1086&Itemid=51

- Ziavu Deen

அழிந்த குட்டையில் மீன் பிடிக்கவா தெரியாது அன்னியருக்கு?


1947 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்ததும், 'அரசியல் சுதந்திரம் அடைந்தால் மட்டும் போதாது, மாறாக பொருளாதார சுதந்திரமும் அடைய வேண்டும்' என்றார் மகாத்மா காந்தி. அவர் கனவு கண்டது சிலர் சொல்வதுபோல ராம ராஜ்யமில்லை, மாறாக கிராம ராஜ்யம் பெற வேண்டும் என்றார். அதாவது கிராமம் தன்னிலை அடைய வேண்டும் என்றார். செல்வம் ஒரு சிலரிடமே பிரமிடு போன்று குவியாது, கடல் போன்று பரந்து அனைவரும் பலன் பெற வேண்டும். இஸ்லாத்திலும் வறியவர் மேன்மைப்பட சொத்து வரி என்ற ஜகாத், சதகா, பித்ரா போன்ற பொருளாதார உதவிகள் செல்வந்தர் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது. மகாத்மா கூட கலிபா உமர் (ரளி) போல ஜனநாயக நல்லாட்சி செய்ய வேண்டும் என்று ஆசைப் பட்டார்.
சங்கத் தமிழ் இலக்கியங்களில் கிராமங்களில் எவ்வாறு ஜனநாயகம் தழைத்திருந்தது என்று விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. சோழ மன்னன் ராஜேந்திரன் காலத்தில் கிராமத்தில் குடவோலை முறையில் பஞ்சாயத்து உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்பட்டு கிராம நிர்வாகம் செயல்பட்டு வந்தது. அதேபோன்று அனைத்து கிராமங்களும் முன்னேற தங்களால் தேர்ந்தேடுக்கும் பிரதிநிதிகளால் நிர்வாகம் நடைபெறும். சுதந்திரத்திற்குப் பின் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 40 இன் படி மெட்ராஸ் கிராம பஞ்சாயத் சட்டம் 1959 இயற்றப்பட்டது. அதில் 500 பேர் மற்றும் அதற்கு அதிகமாக வாழும் மக்களைக் கொண்டது ஒரு கிராமப் பஞ்சாயத்தாக மற்றும் பஞ்சாயத் யூனியன் ஆக அறிவிக்கப்பட்டது. இந்திய மக்கள் 80 சதவீதம் பேர் கிராமத்தில் வாழ்வதால் அவர்கள் ஜனநாயகத்தின் பயனை உண்மையாக சுவைக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆசைப் பட்டார். அதன் விளைவாக அரசியல் சட்டம் 73 மற்றும் 74 திருத்தங்கள் கொண்டு வரப் பட்டது. அந்த திருத்தங்களின் விளைவு கிராமப் பஞ்சாயத், பஞ்சாயத் யூனியன், மாவட்ட பஞ்சாயத் போன்ற மூன்று அடுக்கு பஞ்சாயத்து அலுவலகங்கள் தோன்றின.

2006 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின்பு 17, 19.10.2011 ஆகிய நாட்களில் இரண்டு அடுக்கு தேர்தல் நடைபெற்றது. பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களுடைய பலத்தைக் காட்டுவதிற்காக தனித்தனியே போட்டியிட்டன. அதேபோல் சமுதாய அரசியல் கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டன. சில சமுதாய இயக்கங்களும், உதிரி சமுதாய அரசியல் கட்சிகளும் வலியச்சென்று பிற அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தன. சென்ற 2011 மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சில சமுதாய அரசியல் கட்சிகளுடன் வந்து சேர்ந்தவர்கள் திரும்பவும் தாங்கள் முன்பு ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சிக்கே காவடி தூக்கச் சென்று விட்டன. இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகளிடம் பல லகரம் கொடுத்துத்தான் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சீட்டு வாங்கினார்களாம். அப்படி சீட்டு கிடைக்காதவர்கள் முறையான அரசியல் கட்சி வேட்ப்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டர்களாம். போட்டிப்போடுவது ஒன்றும் புதிதல்லதான். ஆனால் முஸ்லிம்கள் ஊரில் பணம் பாதாளம் வரை பாயும் என்பதை இந்தத் தேர்தல் காட்டிவிட்டதாம்.

பல இடங்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கும், அவர்களுடைய ஆதரவாளர்களுக்கும் சுடச்சுட பணியாரத்திலிருந்து, சுவையான பிரியாணியில் தொடர்ந்து, மேன்சன் ஹவுஸ் பிராந்தியை வயிறு முட்ட ஏத்திவிட்டு, சுருட்டிய ரூபாய் 500 நோட்டினை காதில் வைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்ற காட்சி எல்லாம் ஜெக ஜோதியாக இருந்ததாம். சில ஊர்களில் காலையில் பற்ற வாய்த்த அடுப்பு நடு இரவு வரை பற்றி எரிந்து கொண்டு இருந்ததாம். இவை எல்லாம் சாதாரண வார்டு தேர்தலுக்குக் கூட இருந்ததாம். ஒரு கடல்கரை சமுதாய ஊரில் இரு தரப்பிதனரிடையே சண்டை உச்சக்கட்டத்தில் போய் "உன்னை ஒழித்துக் கட்டுகிறேன் பார். உன் வண்டவாளங்களை எல்லாம் காட்டிகொடுக்கிறேன் பார்" என்று ஒலிபெருக்கி மூலம் சவால் விட்டார்களாம் நமது சமுதாய சகோதரர்கள் என்றால், அந்த ஊரில் வாழும் மற்ற சமுதாயத்தினர் எப்படி எல்லாம் மகிழ்ச்சி அடைந்து இருந்து இருப்பார்கள் என்று எண்ணிப் பாருங்கள். நமது சமுதாயத்தினரை தோற்கடிக்க வேறு வெளி ஆட்களை நாம் தேட வேண்டாம். மாறாக நமக்குள்ளே இருக்கின்றார்கள் என்று அரபு மற்றும் ஆப்ரிக்க முஸ்லிம் நாடுகளில் ஏற்படுகின்ற கொந்தளிப்புகளை வைத்தே தெரிந்து கொள்ளலாம். அழிந்த குட்டையில் மீன் பிடிக்கவா தெரியாது அன்னியருக்கு?

அப்படி நடந்த தேர்தலில் நாம் சாதித்தது என்ன? ஒரு சில வார்டு தேர்தலிலும், கிராமப் பஞ்சாயத்துகளிலும் தான் வெற்றிப் பெற்றுள்ளோம். ஏன் இந்த வெட்கக் கேடு. ஏழு சதவீதம் உள்ள நாம் இணைந்து ஒரு கூட்டமைப்பை ஏற்ப்படுத்தி தேர்தலில் நமக்கென்ற ஒரு தனி அங்கீகாரம் பெற முடியாதா? இன்று பெரும்பாலான சமுதாய இயக்கங்களில் இளைஞர்கள் அதிகம் இருக்கிறார்கள். அந்த இளைஞர் பட்டாளத்தை ஒன்று திரட்டி, ஓர் அணியினை உருவாக்கக் கூடாது? பலர் இணைய தளங்களில் அதற்கான கட்டுரைகள் எழுதுகிறார்கள். ஆனால் பூனைக்கு மணி கட்ட யாரும் முன் வரவில்லையே ஏன் என்று உங்களுக்கு ஆச்சரியமாகத் தோணவில்லையா? அந்த சமுதாய அரசியல் கட்சிகளிடம் இருக்கின்ற சிலரின் வரட்டுக் கௌரவமே காரணம் என்றால் மிகையாகாது. ஆகவே பொய்யான வரட்டுக் கௌரவத்தை விட்டு சமுதாய நலன் கருதி சமுதாய ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை மாநிலத்திலும், மாவட்டத்திலும், நகரங்களிலும், ஒவ்வொரு குக்கிராமத்திலும் ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும். நாம் அடுத்தவர்களுக்கு வெண் சாமரம் இனிமேலும் வீசத் தான் வேண்டுமா? கஷ்டப்பட்டு சம்பாதித்த நாலு காசுகளை மார்கத்துக்குப் புறம்பான காரியங்களில் நான் முன்பு குறிப்பிட்டதுபோல வீண் செலவு செயத் தான் வேண்டுமா? அதனை ஏழை எளிய சமுதாய மக்களுக்கு வழங்கினால் என்ன என்று சிந்திக்க வேண்டாமா சொந்தங்களே? 

டாக்டர் ஏ.பீ. முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)

Saturday, October 22, 2011

ரொம்ப கொழுப்புதான் போங்க!


எல்லா உற்பத்தி நிறுவனங்களும் அவை உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்கள்காஸ்மெடிக் பொருட்கள் (சோப்புஷாம்பூமுகக் கிரிம்,ஹேர் கிரிம்..) மற்றும் மருந்துப் பொருட்களின் அட்டையில் அவற்றில் கலந்துள்ள கலவைகளை (ingredients) கண்டிப்பாக குறிப்பிடவேண்டும் என்று. இதனால் பன்றிக் கொழுப்பு கலந்துள்ள பொருட்களில் இதை பன்றிக் கொழுப்பு (Pig Fat) என்றே குறிப்பிட்டு வெளியிட்டுக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இஸ்லாமிய நாடுகளில் இதுபோன்ற பன்றிக் கொழுப்பு சேர்க்கப்பட்ட பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. இத்தடையின் விளைவாக பன்றிக் கொழுப்பைச் சேர்த்துள்ள பொருட்களின் விற்பனையில் பின்னடைவு ஏற்பட்டது.

இதன் முடிவாக அவர்கள் விலங்குகளின் கொழுப்பு என்பதை எழுதுவதும் தவிர்த்து குறியீட்டு மொழியைப் (Coding Language)பயன்படுத்தத் துவங்கினர். குறியீட்டு முறையானது உணவு தரக்கட்டுப்பாடுத் துறையின் நிர்வாகத்தினருக்கு மட்டுமே தெரியும். அப்பொருட்களைப்பயன்படுத்தும் பொதுமக்களுக்கு குறியீட்டு கலவைகள் (E-INGREDIENTS) பற்றி சற்றும் அறிய வாய்ப்பில்லை.

E-INGREDIENTS 
என்ற கலவைகளை பெரும்பாலான உற்பத்தி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. பற்பசைஷேவிங் கிரீம்,சிவிங்கம்சாக்லேட்இனிப்புப் பண்டங்கள்பிஸ்கட்ஸ்கார்ன் பிளாக்ஸ் (Corn Flakes), டோஃபி (Toffees), டின் மற்றும் குப்பிகளில் நிரப்பப்பட்ட உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் என்று எல்லா பொருட்களிலும் இந்த வகையான கலவைகளை கலக்கின்றனர். விட்டமின் மாத்திரைகள் மற்றும் பல மருந்துப் பொருட்களிலும் பன்றிக்கொழுப்பின் கலவைகளைக் கலந்து முஸ்லிம் நாடுகளில் விற்பனைக்காகப் பரவச்செய்துள்ளனர்.


பன்றிக் கொழுப்பை உட்கொள்வதாலும்பயன்படுத்துவதாலும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் வெட்கம் அகன்றுவிடுதல்தீய எண்ணங்களை உருவாகிவிடுதல்வன்முறை எண்ணங்களை வளர்த்துவிடல் போன்ற தன்மைகள் தங்களையறியாமலே மாற்றம் அடையச் செய்யக்கூடிய தன்மை பன்றிக் கொழுப்பு கொண்டுள்ளது என்பது மற்றுமொறு செய்தி. முஸ்லிம்களை இதுபோன்ற தீய தன்மைக்கு ஆளாக்க முயற்சிசெய்யும் அவர்களின் யுக்திகளில் இதுவும் ஒன்று.
இக்கட்டுரையின் நோக்கம் என்னவென்றால் தாங்கள் அன்றாடம் பயன்படுத்கூடிய பொருட்களில் கீழ்கண்ட கலவைக் குறியீடுகள (E-INGREDIENTS) இருக்கின்றனவா என ஒப்பிட்டுப்பார்த்து அதை முற்றிலும் நிராகரிக்க வேண்டும். ஏனெனில் இவையனைத்தும் பன்றியின் கொழுப்பிலிருந்து செய்யப்பட்டவையாகும்..


E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635, E904.
தானாகவே செத்ததும்இரத்தமும்பன்றியின் மாமிசமும்,அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக (தடுக்கப்பட்டவையாக) ஆக்கிருக்கிறான். ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும்மன்னிப்பவனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன்-2:173)

இதுபோன்ற பன்றிக் கொழுப்பைக் கொண்டுள்ள பொருட்களை நாம் நிராகரிப்போம்மற்றவர்களுக்கும் இச்செய்தியை எடுத்துரைப்போம்!

Friday, October 21, 2011

அல்லாஹ்தான் தந்தான்

ஆகவே, அவரை [அந்தக் குழந்தையை] அவருடைய இறைவன் அழகியமுறையில் ஏற்றுக்கொண்டான். அதை நல்ல பயிராக வளரச் செய்தான். அதற்கு ஜக்கரியாவைப் பொறுப்பாக்கினான். மர்யம் இருந்த மாடத்திற்குள் ஜக்கரிய்யா நுழைந்த போதெல்லாம் அவருக்கருகில் ஏதேனும் உணவுப் பொருள்  இருப்பதைக் கண்டு, ''மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?'' என்று கேட்டார். அதற்கு அவர், ''இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது; அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்'' என்று கூறினார்'' 


அல்-குர்'ஆன் 3 ;37

மேற்கண்ட வசனத்தில் அன்னை மரியம் அவர்களுக்கு உணவு கிடைத்த விதம் பற்றி நபி ஜக்கரிய்யா[அலை] அவர்கள் விசாரிக்கும் போதெல்லாம், ''இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது; அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்'' என்று அல்லாஹ்வை கண்ணியப்படுத்தும் வார்த்தையை அன்னை மர்யம்[அலை] பயன்படுத்தினார்கள் என்பதை அல்லாஹ் அருள்மறையில்
சொல்லிக் காட்டுகின்றான். அன்னை மர்யம்[அலை] அவர்களைப் போன்றவர் என்று நபி[ஸல்] அவர்களால் பாராட்டப்பட்டவர் யார் தெரியுமா? அறிந்து கொள்ள கீழே உள்ள பொன்மொழியை படியுங்கள்;

ஜாபிர்[ரலி] அவர்கள் கூறியதாவது;
ஒரு தடவை நபி[ஸல்] அவர்கள் பல நாட்கள் சாப்பிடாமல் இருந்ததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். எனவே, தம்முடைய துணைவியாரின் வீடுகளுக்குச் சென்று பார்த்தஹர்கள். அவர்களிடமும் எதுவும் கிடைக்கவில்லை. உடனே [தம்முடைய மகள்] ஃபாத்திமா[ரலி] அவர்களிடம் வந்து, மகளே! நான் பசியோடு இருக்கின்றேன்; சாப்பிடுவதற்கு உன்னிடம் ஏதேனும் இருக்கிறதா?'' என்று கேட்டார்கள்.

அதற்கு பாத்திமா[ரலி], ''என் தந்தையும் தாயும் தங்களுக்கே அர்ப்பணம்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! [என்னிடம்] எதுவுமில்லை'' என்று கூறினார்கள். அதனால் நபி[ஸல்]அவர்கள் அங்கிருந்து போய்விட்டார்கள். சிறிது நேரத்திற்கு பிறகு ஃபாத்திமா[ரலி] அவர்களுக்கு பக்கத்து வீட்டுப் பெண்மணி இரு ரொட்டிகளையும் சில இறைச்சி துண்டுகளையும் கொடுத்தனுப்பினார்.

அவற்றை வாங்கிக்கொண்ட ஃபாத்திமா[ரலி] அவர்கள் ஒரு பாத்திரத்தில் வைத்து, ''இந்த உணவு விசயத்தில் என்னைவிடவும், என்னைச் சேர்ந்தோரை விடவும் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்போகிறேன்'' என்று கூறினார்கள். முன்னதாக அவர்கள் அனைவரும் வயிறார உண்ணவேண்டிய தேவையுடையவர்களாகவே இருந்தனர்.

பின்னர் ஹசன்[ரலி] அல்லது ஹுசைன்[ரலி] அவர்களை அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களிடம் அனுப்பி அவர்களை அழைத்து வரச் செய்தார்கள். நபி[ஸல்] அவர்கள் ஃபாத்திமா[ரலி] அவர்களிடம் திரும்ப வந்தார்கள். அப்போது ஃபாத்திமா[ரலி] ''அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் தாயும் தங்களுக்கே அர்ப்பணம்! அல்லாஹ் சிறிதளவு உணவுப் பொருளை கொடுத்துள்ளான். அதைத் தங்களுக்காக பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்'' என்று கூறினார்கள். மகளே! அதைக் கொண்டுவா'' என நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்.

தொடர்ந்து அன்னை பாத்திமா[ரலி] அவர்கள் கூறினார்கள்; அந்த உணவுத்தட்டை எடுத்து வந்து திறந்து பார்த்தேன். அப்போது தட்டு நிரம்ப ரொட்டியும், இறைச்சியும் இருந்தன. அதைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட நான், அது அல்லாஹ்விடமிருந்து கிடைத்த அருள்தான் என்பதைப் புரிந்து கொண்டேன். அதனால் அல்லாஹ்வை புகழ்ந்தேன். அல்லாஹ்வின் தூதர் மீது ஸலவாத் கூறினேன்.

பின்னர் நபி[ஸல்] அவர்களுக்கு முன்னால் அந்த தட்டை கொண்டு வந்து வைத்தேன். அதைப் பார்த்த நபி[ஸல்] அவர்கள், அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்துவிட்டு, ''மகளே!இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?''என்று கேட்டார்கள். அதற்கு நான், ''என் தந்தையே! இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது; அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்'' என்று கூறினேன்.''

உடனே அல்லாஹ்வை புகழ்ந்த நபி[ஸல்] அவர்கள், ''மகளே! இஸ்ரவேல பெண்களுக்குத் தலைவி[யான மர்யமைப்]போன்று உன்னை ஆக்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! அவருக்கு [மர்யம்] அல்லாஹ் ஏதேனும் உணவளித்து, அது குறித்து யாரேனும் அவரிடம் வினவினால், ''இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது; அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்'' என்று கூறுவார்.'' என்று கூறினார்கள்.



ஹதீஸ் சுருக்கம்; நூல் முஸ்னது அபீயஅலா.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!