Sunday, February 13, 2011

EMIGRATION CLEARANCE NOT REQUIRED



நமது சமுதாய மக்கள் அதிகமாக வெளிநாடு சென்றுப் பொருளீட்டுவதால் அவர்களுக்கும்அவர்களது உறவினர்களுக்கும் பயனுள்ளதாக அமையப் பெற்ற உணர்வு பத்திரிகையில் குரல் 32 ல் கணக்கெடுப்பா  புறக்கணிப்பா என்றத் தொடரில் வெளியான சகோ: மர்யம் செல்வன் எம்.ஏ அவர்கள் எழுதிய பயனுள்ளக் கட்டுரையைப் பிரசுரிக்கிறோம்




மக்கள் தொகை ஏற்றத்தாழ்வுக்கும் இடப்பெயர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை உணர்வு வாசகர்கள் அறிவார்கள். முஸ்லீம்களைப் பொறுத்தவரை இடப்பெயர்ச்சி என்னும் மக்கள் தொகை மாற்றக்காரணியே (மூன்றாம் காரணி) அவர்களின் எண்ணிக்கையை பாதிக்கும் முக்கிய அம்சமாகும். அவ்வாறு வேலை வாய்ப்பு நோக்கி இடம் பெயர்வோர் கவனிக்க வேண்டிய அமசங்கள் சிலவற்றை இந்த வாரம் பார்க்கலாம்.

சொந்த நாட்டில் இடம் பெயர்வோர் எங்கிருந்தும் எங்கும் செல்வதற்கு நமது நாட்டைப் பொறுத்தவரை எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை. ஆனால் இதுவே வெளிநாடு எனும்போது மிகுந்த எச்;சரிக்கையும்கவனமும் தேவை என்பதை நினைவில் கொள்ளவும்.

இடம் பெயர்வதில் முதலிடத்தில் இருக்கும் நம் சமுதாய சகோதரர்களுக்கு தெரியாத செய்திகளையா புதிதாக சொல்லப் போகிறீர்கள் என நீங்கள் கேட்பது புரிகிறது நாம் குறிப்பிட வருவது சமீபத்தில் 'வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகார  அமைச்சகம்'  வெளியிட்ட விளம்பரம் மற்றும் செய்திக் குறிப்பு ஆகியனப் பற்றியதாகும்.

பெரியப் படிப்பு படித்து 'ஒயிட்காலர்ஜாப்எனப்படும் நல்ல வேலைக்குச் செல்வோர் ஓரளவு எச்சரிக்கையாகவே உள்ளார்கள். முஸ்லீம் சமுதயாத்தைப் பொறுத்தவரை இத்தகையப் பணிகளை விட உடல் உழைப்பு சார்ந்த வேலைகளுக்கே அதிகம் செல்வதால் இந்த அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திகள் இவர்களுக்குப் பயன் உள்ளதாக இருக்கும் எனலாம்.

'வெளியிடங்களுக்கு செல்லுங்கள்சட்டப்பூர்வமாக செல்லுங்கள்,சந்தோஷமாகயிருங்கள்என்றத் தலைப்புடன் ஆரம்பிக்கும் அந்த செய்திக்குறிப்பு (மற்றும் விளம்பரம்) பின்வரும் தகவல்களைத் தருகிறது.

உங்களை வேலைக்கு அனுப்புவதாகக் கூறும் உங்கள் ஏஜென்டின் வார்த்தைகளை அப்படியே நம்பி விடாதீர்கள் உங்கள் எஜென்டுகள் PGEஎனப்படும் பதிவு சான்றிதழை வைத்திருக்கிறாரா என்பதைக் கவனியுங்கள். இந்த PGE  என்பதன் ஆங்கில விரிவாக்கம் Protector General Emigrantsஆகும். உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் விசாவானது வேலைக்கானதாக(work visa) இருக்க வேண்டும். அது விசிட் விசாரூரிஸ்ட விசா என்ற பெயரில் இருக்கக் கூடாது.

குறிப்பாக வீட்டு வேலைக்கு செல்வோர் 30 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். இன்ன வேலைகள் தான் உங்களுக்கு வழங்கப்படும் எனும் உத்தரவில் இந்திய தூதரகத்தினரின் ஒப்பம் இருக்க வேண்டும். மேலும் PGE அலுவலகத்திலிருந்து உங்களுக்கும் தடையில்லா  (N.O.C) சான்றிதழை ஆள் அனுப்பும் ஏஜென்டானவர் வாங்கித் தந்திருக்க வேண்டும் இச்சான்றிதழை ECR பாஸ்போர்ட் உள்ளவர்களுக்கே. இதுவெ ECNR பாஸ்போர்ட் என்றால்  அந்த (N.O.C)  தேவை இல்லை.

கல்வி அறிவில் மிகவும் பின்தங்கி இருக்கும் நம் சமுதாய ஆண்கள் பெரும்பாலும் ECR பாஸ்போர்ட்கள் தான் வைத்திருப்பார்கள் என்பதை இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது.

பட்டதாரிகள் மட்டுமே ECNR  பாஸ்போர்ட்கள் எடுக்க முடியும் என்ற விதி தளர்த்தப்பட்டு தற்பொழுது பத்தாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் இருந்தாலே போதும் என மாற்றப்பட்டிருந்தாலும் நம்மவர்களில் பெரும்பாலோர் அதைவிடக் குறைந்த கல்வித் தகுதியுடையோரே அதிகம் வெளிநாடு செல்கிறார்கள் என்பதால் இந்தத் தகவலை குறிப்பிட வேண்டியதாயிருக்கிறது.

மிக முக்கியமானதாக வெளிநாடுகளுக்கு புறப்படுவதற்காக நீங்கள் கொண்டு செல்வும் (பாஸ்போர்ட் விசா மற்றும் என்.ஓ.சி உள்ளிட்ட ) அனைத்து ஆவணங்களின் ஜெராக்ஸ் பிரதிகள் உங்கள் வீட்டில் உங்களது குடும்பத்தவர்களிடம் கொடுத்து விட்டே செல்ல வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.

மேலும் இந்த விஷயத்தில் கூடுதல் தகவல் பெறவும்வெளிநாடுகளில் ஏதேனும் பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டால் தொடர்பு கொள்வதற்கும் உள்நாட்டில் உங்கள் சந்தேகங்களுக்கு தெளிவுப் பெறுவதற்கும் இந்த அமைச்சகத்தின் இணையதளம் மற்றும் மினனஞ்சல் முகவரிப் போன்றவற்றிற்கு கீழ் உள்ள முகவரியைக் காண்க. 6762483

ஓவர்சீஸ் ஒர்க்கர்ஸ் ரிசோர்ஸ் சென்டர்,
உலகின் எந்த ஒரு இடத்திலிருந்தும் தொடர்பு கொள்ள  + 91-11-40503090
'வெளிநாடு வாழ் இற்தியர்கள் விவகார  அமைச்சகம்'
இனையதள முகவரி  www.moia.nic.in
கட்டணமில்லா தெலைபேசி எண்: 1800 11 3090

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!