Tuesday, November 4, 2008

அடடே இது விளம்பர உலகமப்பா

விளம்பரம் இன்றி தொழில் மட்டுமல்ல,எதுவும் மக்களை சென்றடைவதில்லை.பளிச்சென்ற பற்களை காட்டித்தான் டூத் பேஸ்ட் விற்கமுடியும்!இது மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு மட்டுமல்ல-நாளிதழ்கள்,மாத இதழ்கள் போன்ற பிரிண்ட் மீடியாக்களுக்கும் பொருந்தும்.(பெஸ்ட் கண்ணா பெஸ்ட்,புதுசு கண்ணா புதுசு,ஹிஹி,இது குங்குமம் விளம்பரங்கோ)இது அதிரை எக்ச்பிரசுக்கும் பொருந்தும்.(அட்லீஸ்ட் வாய் வழி விளம்பரமாவது).ஆக,விளம்பரம் அவசியம்.(அடடே இது விளம்பர உலகமப்பா).

இன்று விளம்பரம் தொலைக் காட்சி,இன்டர்நெட்,பத்திரிக்கை,ரேடியோ,படங்கள்,கட் அவுட்கள்,பிட் நோடிஸ்கள்,சுவர்,மற்றும் டிஜிடல் என விளம்பரம் எல்லா வகையிலும் வியாபித்துள்ளன.சரி,சரி,அதுக்கு என்ன ? என கேள்விகள் எழலாம்.இதன் விடை,இந்த விளம்பர யுகத்தை ஏன் நாம் பயன்படுத்தக்கூடாது?இஸ்லாத்தின் அழகிய நெறியை பாரெல்லாம் பரப்ப,இவ்விளம்பரத்தை நாமும் ஏன் பயன்படுத்தக்கூடாது?

பொதுவாக,தொலைக் காட்சி,இன்டர்நெட்,ரேடியோ,பத்திரிகைகள்,என இஸ்லாம் குறித்த விவரங்கள் உலா வருவது நாம் அறிந்ததே.நான் சொல்ல விழைவது,"சுவர் விளம்பரங்கள்" பற்றியதே.

உதாரணமாக நம் ஊரை எடுத்துக்கொண்டால்,ஒரு தெருவில் பல சீர்கள்(லைன்கள்) இருக்கும்.ஆக,அந்த லைனில் உள்ள ஒரு வீட்டை தேர்ந்தெடுத்து,வீட்டாரின் முன் அனுமதி பெற்று,நல்ல அழகு கையெழுத்தில்,பெரிய எழுத்துக்களில் ஆயில் பெயிண்டிங் கொண்டு திருக் குரான்,ஹதீஸ் வசனங்களை எழுதி வைத்தால்,அப்பக்கம் போவோர் வருவோர் கண்களில் பட்டு குரான்,ஹதீஸ் வசனங்கள் மனனம் ஆகும்,மேலும் அல்லாஹ்வின் அச்சமும்,உதாரணமாக,விபச்சாரம்,குடி,வட்டி,ஷிர்க் வைத்தல்,தர்கா வழிபாடு போன்ற செயல்களால் அல்லாஹ்வின் கோபம் ஏற்பட்டு,நரகம் கிடைக்கும் என்பதையும்,தொழுகை,நோன்பு,ஜகாத்,ஹஜ்,போன்ற கடமைகளை செய்வதன் மூலம் கிடைக்கும் கூலியும் அதன் பால் வரும் சொர்க்கம் போன்ற கருத்துக்களையும் மக்களிடம் விளம்பரப் படுத்தினால் இன்ஷா அல்லாஹ்,இதன் மூலம் பயன் கிடைக்கும்.

நம் ஊரின் விசாலமான தெருக்களும்,அந்த தெருக்களினூடே உள்ள லைன்களையும் கணக்கிட்டால் நிறைய குரான் ஹதீஸ் எழுத முடியும்.அப்ப என்ன சுவர் விளம்பரம் எழுத ரெடிதானே!

'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்

ஆதாரம் புகாரி

2 comments:

  1. I well come your suggestion. and you can try start local cable vision for our community , Religiouse,medical, and useful events and news. It is also one of the method

    ReplyDelete
  2. Abuhasan: அமைதி ரயிலின் வேண்டுகோள் நல்ல யோசனை தான். இருப்பினும் ஹதீஸ் எழுதப்பட்ட சுவற்றில் யாரும் தெரிந்தோ, தெரியாமலோ எச்சில் (அ) வெற்றிலையை உமிழ்ந்து விட்டாலோ (அ) மாடு, நாய் போன்றவைகள் சிறுநீர் கழித்துவிட்டாலோ (அ) அதன் மேல் யாரும் சுவரொட்டிகளை ஒட்டி விட்டாலோ நம் புனித திருக்குர்'ஆன் வசனங்களை உதாசீனப்படுத்தியதாக ஆகிவிடும். இதிலும் அதிகம் கவனம் செலுத்தப்பட வேண்டும். நாம் யாரும் யோசித்திராத சில அசம்பாவிதங்களும் அல்லது மதக்கலவரங்கள் கூட வர வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக தேர்தல் நேரத்தில் இது மிகவும் சாத்தியமானதாக இருக்கிறது. அல்லாஹ் எல்லா முசீபத்துக்களை விட்டும் நம்மை பாதுகாப்பானாக...

    ReplyDelete

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!