Friday, September 30, 2011

ஷம்சுல் இஸ்லாம் சங்க ஏரியாவில் முனாபுக்கு வெற்றி வாய்ப்பு,முதல் ரவுண்டு!!

ஷம்சுல் இஸ்லாம் சங்கத்துக்கு உட்பட்டவார்டுகளில்அதிமுக அப்துல் அஜிஸ் (கொய்யப்பா)திமுக: அஸ்லம்,முஸ்லிம் லீக் முனாப் இம்மூவருக்கு மட்டுமே நேரடி போட்டி நிலவுகிறது.காங்கிரஸ் கட்சிக்கு இந்த பகுதிகளில் வோட்டு விழ வாய்ப்பில்லை.காரணம் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் அழைப்பு விடுத்து இருந்த கூட்டத்துக்கு காங்கிரஸ் சார்பாக யாரும் கலந்துகொள்ளவில்லை என்ற மக்களின
கோபம்தணியவில்லை.அதுமட்டுமல்ல,இதுவரை காங்கிரஸ் சார்பாக மன்றத் தலைவராக இருந்தவர்கள் சொல்லிக்கொள்ளும்படி இந்தப்பகுதிக்கு ஒன்றும்  செய்யவில்லை.பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து வெற்றி பெற்றும்,அல் அமீன் பள்ளி விஷயத்தில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ரெங்கராஜன் கண்டுகொள்ளவில்லை.இதெல்லாம் சேர்த்து காங்கிரஸ் இந்தப் பகுதிகளில் வெல்ல முடியாத நிலையில் உள்ளது.மற்ற கட்சிகளைப் பொறுத்தவரை,தேமுதிக: பூக்கடை செல்வம்,இடதுசாரி கம்முனிஸ்ட்: கிராணி ரபீக்,வலதுசாரி கம்முனிஸ்ட்: அப்துல் ஹலீம் BJP. ரமேஷ் இவர்களுக்கு வாய்ப்பே இல்லை.இன்னும் சொல்லப்போனால் முஸ்லிம்கள் இந்தக் கட்சிகளை ஆரம்பத்திலிருந்தே புறக்கணித்து வருபவர்கள்.

சரி,திமுக அஸ்லம்?அவருடைய திமுக கட்சியின் இமேஜை மமக ஏற்கனவே (முஸ்லிம்களின் நண்பன் என்ற மாயையை) போட்டு உடைத்து -வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.முஸ்லிம்கள் திமுக என்றாலே இப்போது அலர்ஜியாக இருக்கிறார்கள்.குணசேகரன் என்ற நபர் முஸ்லிம்களுக்கு பல வகைகளிலும் தொந்தரவு செய்து வருபவர். 

திமுக கட்சி உருவானதிலிருந்து அதிரையில் திமுக நகரத் தலைவராக இருந்தN.K.S.ஜெக்கரியா அவர்களின் பேரன்  சகோ.முஹம்மது ஜாஃபர்  திமுக அதிருப்தி வேட்பாளராக சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.அல் அமீன்  பள்ளி விஷயத்தில் பழனி மாணிக்கம் எம் பி (திமுக) பிரச்னையை சுமூகமாக தீர்த்து வைப்பேன் என்று சொல்லி,வோட்டு வாங்கிப் போனவர் திரும்பி வரவேயில்லை.இதுபோன்ற காரணங்களால் திமுக தடுமாறிக்கொண்டுள்ளது என்பதை முதல் கட்ட சர்வே உணர்த்துகிறது.

அதிமுக அப்துல் அஜீஸை பொறுத்தவரை,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (மமக) அதிமுக கூட்டணியுடன் தான் இருக்கிறது என்று இருந்தவரை,அந்தப் பகுதிகளில் மெஜாரிட்டியாக உள்ள த மு மு க,மமகவினர் அவருக்கு ஆதரவு நல்கி வந்தனர்.இதனால் எல்லாப் கட்சிகளின் போட்டிகளிலும் -  இந்தப் பகுதியில் முன்னணியில் இருந்த அவர்,மமகவுடன் அதிமுக கூட்டணியில் இல்லை என்று அறிவிப்பு வந்தவுடன்,அனைவரும் கை கழுவிவிட்டனர்.அதனால் அவருடைய வெற்றி வாய்ப்பு குறைந்துவிட்டது.மேலும் ஷம்சுல் இஸ்லாம் சங்கப் பகுதிகளில் அதிமுகவுக்கு என உறுப்பினர்களே கிடையாது என சொல்லும் அளவுக்கு (ஓரிருவர் தவிர)நிலைமை மோசம்.

சீனியர்களை மட்டுமே கொண்ட கட்சியாகவும்,இளைஞர்கள் என சொல்லிக் கொள்ளும்படி இல்லாத கட்சியாகவும்,இருக்கின்ற முஸ்லிம் லீக் ஆச்சரியப்படும் விதத்தில் இந்தப் பகுதியில் போஷாக்குடன் காணப்படுகிறது.இதற்கு காரணமாக இரண்டை சொல்லலாம்,ஒன்று அட்வகேட் முனாப்.இவரை தெரியாத நபர்களே ஊரில் இல்லை,தொழுகையாளி,நம்பிக்கையானவர்,தன வேளையில் முனைப்புடன் இருப்பவர்,மொத்தத்தில் நல்லவர்.இந்தப் போக்கும்,திமுகவையும்,அதிமுகவையும்,காங்கிரசையும் எதிர்த்து களம் காணும் மமக தொண்டர்கள் - முஸ்லிம் லீக் முனாபுக்கே ஒட்டு என்ற ஒட்டு மொத்த எண்ணத்தில் உள்ளனர்.அதிமுகவுடன் உள்ள உறவை மமக முறித்தது முனாபுக்கு சாதகமாக அமைந்துவிட்டது.தமுமுக தொண்டர்களின் ஆதரவுடன் அவர் ஷம்சுல் இஸ்லாம் சங்கப் பகுதிகளில் - இறைவன் நாடினால் - வெற்றிக் கொடி  நாட்டுவார்.

ஷம்சுல் இஸ்லாம் சங்க வார்டுகளின் முதல் ரவுண்ட் அப் - முனாபுக்கே சாதகமாக உள்ளது.

அல்லாஹ் மிக அறிந்தவன்,

மற்ற தெருக்களின் நிலை என்ன? இன்ஷா அல்லாஹ் நாளை பார்க்கலாம்! 


Thursday, September 29, 2011

அதிரை பேரூராட்சி-கரையூர் தெருவில் வெற்றிப் படியில் கொய்யப்பா அப்துல் அஜீஸ்.முதல் கட்ட நிலவரம்


அதிரையில் பேரூராட்சி மன்ற தேர்தலுக்கு கட்சிகள் சார்பாக சிலரும்,சுயட்சையாக பலரும் போட்டி இடுகின்றனர்.இவர்களில் யாருக்கு மக்களிடையே செல்வாக்கு,அது ஓட்டாக மாறுமா என பலரிடம் கருத்து கேட்ட போது கிடைத்த பதில்கள்,அதிரையில் தற்போது நிலவும் நிலைமையை எடுத்துரைப்பதுபோல் உள்ளது,இனி ரிசல்ட்டுக்கு வருவோம்,


அதிரை பட்டினம் முஸ்லிம்கள் நிறைந்த ஊர்.முஸ்லிம் ஜமாஅத் என்ன சொல்கிறதோ அதை செவி சாய்க்கும் மக்கள்.அதைப்போலவே இந்துக்கள்.அவர்களின் பஞ்சாயத் என்ன முடிவெடுக்கிறதோ,அதற்கு கட்டுப் பட்டவர்கள்.


ஒகே,இனி மக்களின் நாடி துடிப்பு என்ன...

கரையூர் தெருவை பொறுத்தவரை அங்கு வாழும் மக்கள் இந்துக்களே,இருப்பினும் பல கட்சிகளிடம் அடைக்கலமானவர்கள். அங்கு நிலவும் கட்சி பூசலும்,இந்து மதத்துக்கான சாதி பாகுபாடும்,நீ அவனை நிறுத்துனா - அவன் அந்த சாதி,இவன் இந்த சாதி என்ற மனோ நிலை காணப்படுகிறது.இதனால் அவர்கள் நிறுத்தும் வேட்பாளர் இந்த வழக்கமான சாதிய பிரச்சனைகளால் வெல்வது கடினம்.

அதேவேளை,கட்சியை பொறுத்தவரை- அவர்கள் எம் ஜி ஆர் காலத்திலிருந்து அதிமுகவை மட்டுமே ஆதரித்து வருபவர்கள்.திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.எனவே அதிமுக சார்பாக நிற்கும் அப்துல் அஜீஸ் கணிசமான ஓட்டுக்களை பெறுவார் என நம்பலாம்.

அவர்கள் பஞ்சாயத் முடிவு என்னவோ அவர்கள் நிறுத்தும் சுயேட்சையை ஆதரிப்பதுதான்.ஆனால் சாதி பிரச்சனை இருப்பதால் - அது ஓட்டுக்களாக மாறுவது கடினமே.

அதே போன்று - கரையூர் தெரு மக்கள் இந்துக்கள்தான் - ஆனால் முஸ்லிம்களுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள்.அதனால் - அந்த சகோதர மனோபாவத்தால் இதுவரை அந்த தெருவில் பா ஜ க காலூன்ற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேமுதிக இங்கு செல்லாக் காசு .
ஆக - கூட்டிகழிக்க,கரையூர் தெருவில் அப்துல் அஜீஸ் ஓரளவு வாக்குகள் பெற வாய்ப்புண்டு.

மேலும்,பா ஜ க,காங்கிரஸ்,திமுக,முஸ்லிம் லீக்,இரு கம்யூனிஸ்ட்கள்,மற்றும் சுயேச்சை அந்த தெருவில் மண்ணைக் கவ்வப் போவது உறுதி போல் தெரிகிறது,

இனி மற்ற பகுதிகளில்,எந்த கட்சிக்கு ஆதரவு எப்படி,இன்ஷா அல்லாஹ் நாளை ..................
முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் 

1.     காங்கிரஸ்:  MMS பசீர் அகமது
2.     அதிமுக: அப்துல்அஜிஸ் (கொய்யப்பா)
3.     திமுக: அஸ்லம்
4.      முஸ்லிம் லீக் முனாப்
5.     தேமுதிக: பூக்கடை செல்வம்
6.     இடதுசாரி கம்முனிஸ்ட்: கிராணி ரபீக்
7.     வலதுசாரி கம்முனிஸ்ட்: அப்துல் ஹலீம்
8.     BJP. ரமேஷ்

Tuesday, September 27, 2011

இந்தியாவின் தீவிரவாதம்!காஷ்மீரில் அடுக்கடுக்கான பிணக் குவியல்கள்.


சில நாட்களுக்கு முன்னால் காஷ்மீரில் அடையாளம் தெரியாத ஆயிரக்கணக்கான இளைஞர்களின் இறந்த உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன  உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய 

இந்தச் சம்பவத்தை மத்திய அரசும் ஊடகங்களும் அப்படியே மூடி மறைத்தது ஞாபகமிருக்கலாம் அதைத்தொடர்ந்து இப்பொழுது ஜம்முவிலும் ஆயிரக்கணக்கான அடையாளம் தெரியாத இளைஞர்களிண் சடலங்கள் அங்குள்ள சவக்குழிகளில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதை சடலங்களை குழிவெட்டி அடக்கம் செய்த முதியவரான பரித்கான் என்பவர் வெளிப்படுத்தியுள்ளார்

 காஷ்மீர் பற்றியெரிந்து கொண்டிருந்த முதல் பத்து வருடம் அதாவது 1990 முதல் போலிசும் ராணுவமும் கொண்டுவந்த 2500 க்கும் மேலான அடையாளம் தெரியாத சடலங்களை தான் அடக்கம் செய்திருப்பதாக அந்த முதியவர் கூறியுள்ளார் போன மாதம் வடக்கு காஷ்மீரின் சில மாவட்டங்களில் 38 சவக்கிடங்குகளில் 2730 அடையாளம் தெரியாத சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன  இவற்றுள் 574 சடலங்கள் பின்னர் அடையாளம் காணப்பட்டது 

இதன் பின்னர்  மாநில மனித உரிமைக் கமிஷன் மாநிலத்தின் வேறு பல இடங்களிலும் இது போன்று பல்லாயிரம் பேரை ராணுவமும் போலிசாரும் கொன்று  புதைத்திருக்கலாம் என்று தெரிவித்ததைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரனைகளில் ஜம்முவில் உள்ள பூஞ் மாவட்டத்தில் மூன்றறை ஏக்கரில் பரந்துவிரிந்துள்ள அடக்கஸ்தலத்தில் 2500 அடையாளம் தெரியாத இளைஞர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது போலிசும் ராணுவமும் கொண்டு வந்த சடலங்களை நானும் என்னுடன் உள்ள மற்ற சிலரும் சேர்ந்து அடக்கம் செய்துள்ளதாக அங்குள்ள ஸோபி அஜிஸ் ஜு வெளிப்படுத்தியுள்ளது நாட்டையே மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கன்றது 

எல்லா உடல்களுமே குண்டு துளைத்த நிலையில் இருந்ததாகவும் யாருடைய முகமும் அடையாளம் தெரியாமல் இருப்பதற்க்காக சிதைக்ப்பட்டிருந்ததாகவும் பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் ராணுவத்தினரும் போலிசும் உடல்களைக் கொண்டுவந்திருப்பதாகவும் ஒருநாள் 16 உடல்களை ஒன்றாக ஒரே (கப்ரில்) குழியில் அடக்கம் செய்ய நேர்ந்த போது சோகத்தால் என்னுடைய மனமே கட்டுப்பாட்டை இழந்து விட்டதாக கண்ணீருடன் கூறுகின்றார் ஸோபி அஜிஸ்.

 ராணுவத்தினருடன் நடந்த சண்டையில் கொள்ளப்பட்ட தீவிரவாதிகள் என்று சொல்லித்தான் போலிசும் ராணுவத்தினரும் உடல்களைக் கொண்டுவந்திருக்கன்றனர் சில நேரங்களில் உடல்களின் சில பாகங்கள் மட்டுமே அடக்கம் செய்ய வந்திருப்பதாகவும் ஒருநாள் உடல்கள் இல்லாமல் ஏழு தலைகள் மட்டும் வந்திருந்ததாகவும் ஆனால் போலிசார் ஏழு முழு உடல்களைக் கொண்டு வந்ததாக எழுதிக் கேட்டதாகவும் பயத்தினால் வேறோன்றும் கேட்காமல் அவர்கள் கேட்டது போல தான் எழுதிக்கொடுத்ததாகவும் ஸோபி அஜிஸ் கூறுகின்றார்.

 1990 காலகட்டங்களில் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியிருந்த போதுதான் அதிக அளவில் சடலங்கள் வந்து கொண்டிருந்ததாகவும் தினமும் இரண்டு மூன்று சடலங்களாவது வந்துவிடும் என்றும் பூஞ்சிலே வேறு சிலரும் உடல்களை அடக்கம் செய்ய உதவியதாகவும் உடல்களை அடக்கம் செய்த பிறகே அதிகாரிகள் அங்கிருந்து செல்வார்கள் என்றும் அவர் கூறுகின்றார்.

 பூஞ் மாவட்டம் என்பதால் நாட்டிற்க்குள் ஊடுறுவ வந்த தீவிரவாதிகள் என்று சொல்லி சுட்டுக் கொள்ள வசதியாக இருந்ததால் வேறு பல இடங்களிலும் உள்ள இளைஞர்களைப் பிடித்துக் கொண்டு வந்து பூஞ்சில் வைத்து சுட்டுக் கொன்று அங்குள்ள அடக்கஸ்தலங்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவையெல்லாமே அடையாளம் தெரியாததாகவும் இருந்துள்ளது தற்பொழுது தெரியவந்துள்ளது.

 ஜம்முவில் உள்ள மன்தி கிராமத்திலும் அடையாளம் தெரியாத நூற்றுக்கணக்கான உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த ஊரைச் சேர்ந்த ஹதிப்கான் கூறுகின்றார் கொண்டு வரப்படும் சடலங்களுக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால் நாங்கள் மட்டுமே இறந்த உடலுக்குச் செய்யவேண்டிய தொழுகை உட்பட இறுதிக் கடமைகளைச் செய்து அடக்கம் செய்திருப்பதாக கூறுகின்றார்.

 கம்பி வேலி கட்டி அடக்கஸ்தலம் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதனால் 1990 முதல் 2000 வரைக்கும் உடல்கள் வந்து கொண்டிருந்ததாகவும் பிதல் என்ற கிராமத்தில் நடந்த சண்டையில் 33 பேரின் உடல்களே முதன்முதலாக கொண்டு வந்ததாகவும் பதினொன்று பதினொன்று வீதம் மூன்று குழிகளில் 33 பேரின் உடல்களையும் அடக்கம் செய்ததாகவும் கூறினார்.

 மேலும் ரஜீர் என்ற கிராமத்தில் உள்ள அடக்கஸ்தலத்திலும் இது போன்ற பல நூறு உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுருக்கின்றன பூஞ் மற்றும் ரஜீரி மாவட்டங்களிலும் அடையாளம் தெரியாத பல உடல்கள் அடக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவைகளையும் தோன்டி எடுத்து டி என் ஏ பரிசோதனை உட்பட மற்ற சோதனைகளையும் நடத்தி அடையாளம் காண வேண்டும் என்று அங்குள்ள மனித உரிமைக் கமிஷன் கூறியுள்ளது  

இந்தியா தன்னை ஜனநாயக நாடு என்று சோல்லிக் கொண்டாலும் காஷ்மீரில் தோண்டத் தோண்ட கிடைக்கும் இது போன்ற ஆயிரக்கனக்கான அப்பாவி இளைஞர்களை (தீவிரவாதிகளை அல்ல)கொன்று குவித்திருப்பதன் மூலம் மத்திய அரசும் இந்திய ராணுவமும் எந்த அளவிற்க்கு மிருகத்தனமாக காஷ்மீரிகளின் விஷயத்தில் செயல்பட்டுள்ளார்கள் என்பதை அறியலாம்

Monday, September 26, 2011

பிரபலமான சண்டைக்கு முழுமையாக தடை!

 ஸ்பெயின் நாட்டின் புகழ் பெற்ற காளைச் சண்டை ஒரு வழியாக முடிவுக்கு வருகிறது. நேற்று இந்த காளைச் சண்டையின் கடைசிப் போட்டி பார்சிலோனாவில் நடைபெற்றது. 2012 முதல் காளைச் சண்டைக்குப் பெயர் பெற்ற காட்டலோனியா பிராந்தியம் முழுவதும் காளைச் சண்டைக்குத் தடை விதிக்கப்படுகிறது.

எப்படி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு பிரபலமாக உள்ளதோ அதேபோல ஸ்பெயின் நாட்டில் மிகவும் பிரபலமான விளையாட்டு இந்த காளைச் சண்டை. கமல்ஹாசன் நடித்த மன்மதன் அம்பு படத்தில் கூட இந்த காளைச் சண்டைக் காட்சியை வைத்திருப்பார்கள். நீண்ட பாரம்பரியம் கொண்ட இந்த பழம் பெறும் வீர விளையாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று விலங்கின ஆர்வலர்கள் தொடர்ந்து போராடி வந்தனர். இதனால் அவர்களுக்கும், காளைச் சண்டைப் பிரியர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதலும் வெடித்து வந்தது.

ஸ்பெயினின் காட்டலோனியா பிராந்தியத்தில்தான் இந்த விளையாட்டு பிரபலமானது. தற்போது இந்தப் பிராந்தியத்தில் காளைச் சண்டைக்குத் தடை விதிக்க ஸ்பெயின் அரசு முடிவு செய்துள்ளது. 2012ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் இந்தத் தடை அமலுக்கு வருகிறது. இதையடுத்து பார்சிலோனாவில் நேற்று கடைசி காளைச் சண்டை நடந்தது. இதையடுத்து கிட்டத்தட்ட 20,000க்கும் மேற்பட்ட சீட்களைக் கொண்ட அரங்கில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

காளைச் சண்டைப் பிரியர்கள் கடைசிச் சண்டையை மிகுந்த உணர்ச்சிப் பெருக்கோடு பார்வையிட்டு ரசித்தனர். பார்சிலோனாவின் லா மொனுமென்டல் அரங்கில் இந்த விளையாட்டு நடந்தது.
Spain Bullfight
இந்தத் தடை காரணமாக காளைப் பிரியர்கள் பெரும் சோகமடைந்துளளனர். அதேசமயம், இந்தத் தடைக்காக போராடி வந்த எதிர்ப்பாளர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். இனி காளைகள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

லத்தின் அமெரிக்க நாடுகளில் இந்த காளைச் சண்டை பிரபலமானது. இருப்பினும் ஸ்பெயினில் அதிலும் பார்சிலோனாவில் நடக்கும் காளைச் சண்டைதான் மிகப் புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவிப்பு


நம் 'அதிரை அறிஞர்' புலவர் அல்ஹாஜ் அஹ்மது பஷீர் அவர்கள் இன்று பிற்பகல் 3.45 மணிக்கு இறப்பெய்திவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

நம் சிறார்கள் கல்வி ஞானம் பெற வேண்டும் என்பதில் புலவர் பஷீர் மிகுந்த அக்கறையுடையவர்கள்.

சிறார்களுக்கு எளிதில் இஸ்லாமியப் பாடங்களை விளக்கும் வகையில் புதுமலர்கள் என்ற பெயரில் ஒவ்வொரு வகுப்புக்கும் தக்கவாறு நூல்களை எழுதியுள்ளார்கள்.

 தகவல்: அதிரை அஹ்மது

Sunday, September 25, 2011

இந்து அமைப்புகளை தீவிரவாத பட்டியலில் சேர்க்க போலீஸ் பரிந்துரை!


அபினவ் பாரத் மற்றும் சனாதன் சன்ஸ்தா ஆகிய இந்து அமைப்புகளை தீவிரவாத பட்டியலில் சேர்க்க மகாராஷ்டிர அரசுக்கு மும்பை போலீஸ் பரிந்துரை செய்துள்ளது. கோவாவில் கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக சனாதன் சன்ஸ்தா என்ற இந்து அமைப்பை சேர்ந்த சிலரை மகாராஷ்டிர தீவிரவாத எதிர்ப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த அமைப்பை சேர்ந்த 11 பேர் மீது தேசிய புலனாய்வு அமைப்புஎப்ஐஆர் பதிவு செய்துள்ளது. இதே போல் கடந்த 2008ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தொடர்பாக அபினவ் பாரத் என்ற அமைப்பை சேர்ந்த லெப்டினன்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித்அஜ் ராகிர்கர்ரமேஷ் உபாத்யாய் மற்றும் சாமர் குல்கர்னி ஆகியோரை மும்பை தீவிரவாத எதிர்ப்பு போலீஸ் கைது செய்துள்ளது.

இவருக்கு பெயர் முஹம்மது (ஸல்)....

"ஒருவர் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையானத் தாகம் ஏற்பட்டது. அவர் (வழியில்) ஒரு கிணற்றைக் கண்டார். உடனே அதில் இறங்கித் தண்ணீர் குடித்தார். பிறகு அவர் வெளியே வந்தார். அப்போது நாய் ஒன்று தாகத்தால் நாக்கைத் தொங்கவிட்டபடி ஈரமண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்.

அந்த மனிதர் 'எனக்கு ஏற்பட்டதைப் போன்றதே இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கிறது போலும்' என்று (மனதிற்குள்) சொல்லிக்கொண்டார். உடனே அக்கிணற்றில் இறங்கித் (தண்ணீரைத்) தன்னுடைய காலுறையில் நிரப்பிக்கொண்டு அதைத் தம் வாயால் கவ்வியபடி (மேலேறி வந்து) அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் இதற்கு நன்றியாக அவரை (அவரின் பாவங்களை) மன்னித்தான்" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(இதைச் செவியேற்ற) மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! மிருகங்களுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு (மறுமையில்) நற்பலன் கிடைக்குமா?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(ஆம்:) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும்பட்சத்தில் மறுமையில்) அதற்கான நற்பலன் கிடைக்கும்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி).
ஆதாரம்: புஹாரி

அதிராம்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய ஜமாத்


இன்று மாலை, சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் அழைப்பை ஏற்று, அதிரையில் இயங்கும் கீழ்க்காணும் சங்கங்கள் மஃரிப் தொழுகைக்குப் பின் மரைக்கா பள்ளியில் ஒன்று கூடின. 

* தாஜுல் இஸ்லாம் சங்கம், மேலத்தெரு
* கீழத்தெரு சங்கம்
* தரகர் தெரு சங்கம்
* நெசவுத் தெரு சங்கம்
* கடல்கரைத் தெரு சங்கம்
* மிஸ்கீன் பள்ளி சங்கம் 

தொடக்கமாக, கூட்டத்தின் நோக்கம் பற்றிய பேரா. அப்துல் காதர் அவர்களின் சிற்றுரைக்குப் பின், அப்துல் லத்தீஃப் ஆலிம் சாஹிப் அவர்கள், நமக்கிடையே வரவேண்டிய ஒற்றுமை பற்றி அழகிய சிற்றுரையொன்றை நிகழ்த்தினார்கள்.

அதில் அவர்கள் தலைமைக்குக் கட்டுப்படுதல் என்ற பொருளை எடுத்து விரிவாகப் பேசினார்கள்.  நபி (ஸல்) அவர்களின் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அனுப்பப்பட்ட படை ஒன்றுக்குப் பதினெட்டு வயது வாலிபராக இருந்த உசாமா (ரலி) அவர்களைப் படைத் தளபதியாக்கி, அதில் உமர் (ரலி) போன்ற பெரும் பெரும் நபித் தோழர்களைப் படையணிப் போராளிகளாக்கி அனுப்பியது பற்றிக் குறிப்பிட்டு, தலைமைக்குக் கட்டுப்பட்டு எவ்வாறு அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்பதை எடுத்துரைத்தார்கள்.

இஷாத் தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்ட பின் குறிப்பிட்ட நேரத்தில் தொழுகை நடந்தது. அதன் பின் மீண்டும் கூட்டம் தொடர்ந்து நடந்தது. வந்திருந்த சங்கப் பிரதிநிதிகள் தத்தம் கருத்துகளை எடுத்து வைத்தனர்.

பேரூராட்சித் தலைவர் தேர்தலுக்குக் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுவதை நாம் தடுக்க முடியாது என்ற கருத்தை கீழத் தெரு சங்க உறுப்பினர் எடுத்து வைத்தார்.

ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாக்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிகமாகப் போட்டியில் இருப்பதால், முதலில் அவர்களைத்தான் சரி பண்ண வேண்டும் என்ற கருத்தை மேலத்தெரு சங்க உறுப்பினர் எடுத்து வைத்தார்.

கட்சிப் போட்டியாளர்களையும் கூட்ட முடியும் என்ற கருத்தை தரகர் தெருப் பிரதிநிதி எடுத்து வைத்து, இது உள்ளாட்சித் தேர்தல்தான் என்பதை வலுவாகப் பதிவு செய்தார்.

தலைவர் தேர்தல் கட்சி அடிப்படையில்தான் நடக்கும்; அதை நம்மால் தடுக்க முடியாது என்ற கருத்தைக் கடல்கரைத் தெருப் பிரதிநிதி உறுதியாக எடுத்து வைத்தார்.

போட்டியாளர்களைக் குறைக்க, நமது சங்கங்கள் அவர்கள் அனைவருக்கும் அழைப்புக் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை மேலத்தெரு சங்க உறுப்பினர் தனது வேண்டுகோளாக எடுத்து வைத்தார்.

முடிவாக, "அதிராம்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய ஜமாத்" என்ற பெயரில் சங்கங்களின் கூட்டமைப்பு ஒன்றைத் தொடங்குவது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டு, அனைவராலும் அது ஒருமனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதனடிப்படையில், நாளைக் காலை பத்து மணிக்கு, மரைக்கா பள்ளிக்கு வருமாறு தலைவர் வேட்பாளர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்து, அவர்களுக்கு, நமக்கிடையே நிலவும் அதிகமான போட்டியைக் குறைக்கும் விதத்தில் அறிவுரை கூறுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

தகவல்: அதிரை அஹ்மது

Saturday, September 24, 2011

அதிரை பேரூராட்சித் தலைவர் - அதிரை அன்வர்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ) 
தாங்கள் அனைவரும்   ஊரின்  நன்மைகருதி  சில  முடிவுகள்  எடுக்கவிருப்பதாக  கேள்விப்பட்டோம்.
  
இன்ஷா அல்லாஹ் இங்கு சிட்னியில் சிலவரங்களுக்கு முன்பு இதுபோன்று ஓர் நிகழ்வை ஏற்படுத்தி இருந்தோம்.
    
அதன்படி நம் ஊரில் பல முக்கியமான சமுதாய சேவைகளை செவ்வனே செய்துவரும் அதிரை அன்வர் அவர்களை நமதூர் பேறுர் ஆட்சி மன்ற தலைவருக்கு நிற்க வைக்க முன் மொழியலாம் என்று முடிவு செய்து இருக்கின்றோம்
அதிரை அன்வர் அவர்களை பற்றி சிறு குறிப்பு
சிறு வயது முதல் சமூக சேவையில் ஈடுபடுத்திவருபவர்   
எல்லா இயக்கத்தவரையும் ஒன்று திரட்டி  ஓர் அணியில் கீழ் கொண்டு வர இன்றளவும் பாடு பட்டுவருவதினால்   எந்த இயக்கத்திலும் இதுவரை தன்னை இணைத்துக் கொள்ளவில்லை
ஆனால் சமுதாயத்திற்கு தேவையான மற்றும் இக்கட்டான நேரங்களிலும் அவர் நேரம் கலாம் பாராமல் பல போராட்டங்களில்  தன்னை முன்னிறுத்தி வழி நடத்தியுள்ளார்கள்.  

 இன்னும் நம் அல் அமீன் பள்ளிவிசயத்தில் அக்கறை கொண்டு அதை தான் முன்னிறுத்தி சேவை செய்வேன் என்று உறுதி பூண்டுள்ளார்கள்
1997  நம் சகோதர்களின் மேல் காவல் துறையால் போடப்பட்ட 
பொய்வழக்கில் சென்னை தலைமை செயலகம் வரை  சென்று நியாயம் கிடைக்க செய்தார்   
2001  நம் சகோதர்களின் மேல் போடப்பட்ட பொய் வழக்கில் நம் சமுதயத்திர்க்காக அவர்களை வெளி கொணர அரும்பாடு பட்டுள்ளார்கள்
இன்னும் எத்தனையோ குடும்ப பிரட்சனைகளை தீரத்து வைத்துகொண்டுள்ளர்கள்
அனைத்து முஹல்லா மக்களோடும் மற்றும் பிற சமுதாய மக்களோடும் வேறுபட்டு இன்றி பலககூடியவர்  அறியவும்
நாம் அனைவரும் சமுதாய சிந்தனையோடு அல்லாவிற்காக ஒன்று கூடி முயற்ச்சி செய்தால் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் (இன்ஷா அல்லாஹ்)
வஸ்ஸலாம்
சிட்னி அதிரை வாசிகள் சார்பாக
சி. ந. சர்புதீன் மற்றும் மு . அ ஹாலித்
TO READ MR ANWAR'S LETTER,PLEASE CLICK BELOW LINK


முன்பணம் கட்டாதீர்கள்

இன்டர்நெட் மற்றும் இமெயில் வழி பலர் ஏமாற்றப்படுவதாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. சிறிது சலனப் பட்டாலும்நாம் நிதானம் தவறிநம்மை ஏமாற்றத் திட்டமிடுபவர்களின் வலைகளில் விழுந்து நம் நிம்மதியைநிதியை இழந்துவிடுகிறோம். இது போல பலியாகாமல் இருக்கநாம் எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கைகளை இங்கு பார்க்கலாம்.
1. 
முன்பணம் கட்டாதீர்கள்: ஏமாற்றப்படும் பல வேளைகளைப் பட்டியலிட்டால்முன் பணம் கட்டச் சொல்லி அழைக்கும் அழைப்புகளுக்குப் பலியாவோரே அதிகமாய் இருப்பதைப் பார்க்கலாம். பெரிய பரிசு உள்ளதுகடன் தீர்க்கப் பணம் தருகிறோம்பெரிய வேலை உங்களுக்கு மட்டுமே தருகிறோம்,இலவசமாய் இயக்கிப் பார்க்கலாம் என செய்திகளைத் தந்துதூண்டிலிட்டுபின்னர் அதற்கு சரி என்கையில்முன் பணமாக ஒரு தொகையை செலுத்தச் சொல்லி அழைப்பு வரும். இதனை மிக அழகாக நியாயப்படுத்தியும் செய்தி தரப்படும். பெரிய அளவில் தான் பணம் அல்லது உதவி கிடைக்கப் போகிறதேசெலுத்தினால் என்ன என்று ஒரு கணம் எண்ணிவிட்டால்உங்கள் பணம் அவ்வளவு தான். அல்லது தொடர்ந்து மேலும் மேலும் பணம் செலுத்த கட்டாயப்படுத்தப்படுவீர்கள். இது போல செய்திகளைஅது எந்த இடத்திலிருந்து வந்தாலும் உதாசீனப் படுத்திவிடுவதேநாம் பலியாகாமல் இருக்க ஒரே வழி.
2. 
அக்கவுண்ட் எண் தரலாமா? மெயில்களை அனுப்பி உங்களை வீழ்த்தும் பெரும்பாலான ஸ்கேம் செய்திகளில்உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் எண்நெட்பேங்கிங் பாஸ்வேர்ட் கேட்டு வரும் மெயில்களே அதிகம். அக்கவுண்ட் எண் மற்றும் தகவல்களைக் கொடுத்துவிட்டால்உங்கள் அக்கவுண்ட் அவ்வளவுதான். பைசா கூட அதில் இருக்காது. நீங்கள் சரியான இணைய தளத்தில் பொருள் வாங்குவதாக இருந்தாலும்உங்கள் கிரெடிட் கார்டை மட்டுமே பயன்படுத்தவும்.
3. 
தானாக தனி நபர் தகவல் தரலாமா? ஒரு சிலர் மெயில் செய்தியில் வரும் ஏமாற்று வார்த்தைகளை நம்பிதங்களைப் பற்றிய தனி நபர் தகவல்களைத் தந்துவிடுவார்கள். சிலர் தாங்கள் பணியாற்றும் நிறுவனம் குறித்த தகவல்களையும் தங்களை அறியாமல் தந்து மாட்டிக் கொள்வார்கள். இது போன்ற விஷயத்தில் அதிகக் கவனத்துடன் நடந்து கொண்டுமாட்டிக் கொள்ளும் நிகழ்வினைத் தவிர்க்க வேண்டும்.
4.
போலி பேஸ்புக் செய்திகள்: பேஸ்புக்கில் அக்கவுண்ட் இல்லாமல் இருந்தால் கூடஉங்கள் அக்கவுண்ட்டிற்குப் பலவாரியாக செய்திகள் வரும். புகழ்பெற்றவர்கள் மாட்டிக் கொண்டார்கள் - அது பற்றி அறிய வேண்டுமா என ஒரு செய்திஉங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டை ஒருவர் நீக்கிவிட்டார்,நீக்கியவர் யாரெனத் தெரியும். மீண்டும் அக்கவுண்ட் தொடங்கலாமே என்று ஒரு செய்தி வரும். இது போன்ற செய்திகள் எல்லாம்உங்களைச் சிக்க வைக்கத்தான். 
5. 
வீடு தேடி வரும் பொருட்களை இணைய தளத்தில் வாங்க வேண்டாம்: இணைய தள வர்த்தகம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. பலர் இதில் பொருட்களை வாங்கிப் பயன் பெற்று வருகின்றனர். ஆனால்நாம் நாள்தோறும் நம் வீட்டு வாசலில் விற்பனை செய்யப்படும்அடுத்த கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களைஇணைய தளத்தில் வாங்க வேண்டுமாவிலை குறைவாகக் காட்டிப் பின்னர்அனுப்பும் செலவுசெயல்படும் செலவுஇணைய வரி எனப் பல தலைப்புகளில் காசைக் கறந்துவிடுவார்கள்.
6. 
பாதுகாப்பு வழிகளைக் கடைப் பிடியுங்கள்: இந்த மலரில் பல முறை ஆன் லைன் வர்த்தகத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை எழுதி வந்திருக்கிறோம். அவற்றை அவசியம் கடைப்பிடிக்கவும். இணையத்தில் எப்போதும் நாம் ஏமாற்றப்பட்டு விடுவோம் என்ற எச்சரிக்கையுடனேயே அதனை அணுகினால்நிச்சயம் நீங்கள் பலியாக மாட்டீர்கள். 

Thursday, September 22, 2011

கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும் !


ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் அல்லாஹ்வின் வல்லமையை நாம் சிந்திப்பதில்லை இதைப்பற்றி சிந்திக்க முற்பட்டுவிட்டால் இணைவைத்தலை தவிர்த்து அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடக்கூடிய இறைவிசுவாசியகாகவும் அல்லாஹ்வுக்கு உண்மையான அடியானாகவும் மாறிவிடுவோமே!

நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை ‘அலக்’ என்ற நிலையில் ஆக்கினோம்! பின்னர் அலக் என்பதை ஒரு தசைப்பிண்டமாக்கினோம்! பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்! பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்! (இவ்வாறு படைத்தவனாகிய) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (அல்குர்ஆன் 23:12-14)
 மேற்கண்ட வசனத்தில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டியவை 
 1. நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம்.
 2. இந்திரியத் துளியை ‘அலக்’ என்ற நிலையில் ஆக்கினோம்!
 3. பின்னர் அலக் என்பதை ஒரு தசைப் பிண்ட மாக்கினோம்!
 4. பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்!
 5. பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்!
 6. பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்!
மேற்கண்ட இந்த ஆறு அம்சங்களையும் ஒவ்வொன்றாக அலசுவோம் வாருங்கள்

ஆண் விந்துத் துளி பற்றிய அறிய தகவல்கள்
ஒரு ஆணிடமிருந்து வெளிப்படும் ஒருவகையான நீர் விந்துத்துளி என்று அறிவியல் உலகம் வர்ணிக்கிறது. இந்த விந்துத்துளியைப் பற்றி 1400 வருடங்களுக்கு முன்னர் அல்லாஹ் அருள்மறையில் குறிப்பிட்டள்ளான் இதைப் பற்றி அருள்மறை பின்வருமாறு கூறுகிறது
ஆகவே மனிதன், (தான்) எதிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை அவன் சிந்தித்து பார்க்கவேண்டாமாகுதித்து வெளியாகும் (ஒரு துளி) நீரிலிருந்து அவன் படைக்கப்பட்டான். அது (ஆணின்) முதுகந் தண்டிற்கும் கடைசி நெஞ்செலும்புகளுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகிறது. (அல் குர்ஆன்: 86:5-7) 


இதோ மேலே காணும் படம் ஒரு ஆண் மகனுடைய விந்தணுவாகும் இது உருவாக 74 நாட்களாகிறது என்றும் விந்து நீரில் 100-300 மில்லியன் விந்தணுக்கள் காணப்படுவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

பெண்ணின் சினைமுட்டை பற்றிய அறிய தகவல்கள்
பெண்ணின் சினை முட்டையின் வடிவம் 0..2 மி.மீ அளவு கொண்டது என்றும் இந்த சினை முட்டை வட்ட வடிவமுடையது என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இதோ மேலே கண்ட படம் பெண்ணின் சினை முட்டையாகும் இதை சற்று கவனித்துப் பாருங்கள் இது முட்டையைப் போன்று வட்ட வடிவமாக காணப்படுவதால் இதற்கு சினை முட்டை என்று பெயர் கொடுக்கப்பட்டுள்ளது!
 பெண்ணின் சினைமுட்டையானது அவளுடைய சினைப் பையிலிருந்து வெளியாகிறது என்றும் இந்த சினை முட்டையின் உயிர்க்காலம் ஒருநாள் அதாவது 24 மணி நேரம் என்றும் மேலும் இந்த சினை முட்டை சினைப் பாதையின் புறச் சுவர்களால் உறிஞ்சப்பட்டு சினைப்பையை அடைகிறது ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

விந்தணுவும் சினைமுட்டையும் ஒன்றுடன் ஒன்று சேருகிறது
ஒரு ஆணுடைய விந்தணு ஒவ்வொருமுறை உறவு கொள்ளும்போதும் அவனிடமிருந்து 2-4மிலி விந்து நீர் வெளிப்படுகிறது இந்த விந்து நீரில் உள்ள விந்தணு 0.5 மி.மீ நீளம் உடையது. இதோ விந்தணுவின் படத்தை சற்று கவனியுங்கள்

இந்த ஆணுடைய விந்துநீரிலிருந்து வெளிப்படும் விந்தணு பெண்ணுடைய சினைப் பையிலிருந்து வெளியாகும் சினை முட்டையுடன் கூடுகிறது! ஆணுடைய விந்தணு எவ்வாறு பெண்ணுடைய சினைமுட்டையுடன் கூடுகிறது என்ற நிகழ்ச்சியை படமாக விளக்கியுள்ளேன் கீழே உள்ளதை பாருங்கள்
பெண்ணுடைய சினைப் பையிலிருந்து சினைமுட்டை வெளிப்பட்ட நேரம் முதல், சினைப்பாதையில் நகர்ந்து வர 2 நாட்கள் ஆகும். மேலும் சினைமுட்டை வெளிவந்து 24 மணி நேரத்திற்குள் விந்தணு சினைமுட்டையை அடைய வேண்டும். இவ்வாறு நுழையும்  விந்தணு கருப்பையில் 10 நாட்கள் வரை உயிர்வாழும் என்றும் மேலும் இந்த ஆணின் விந்தணு 24-48 மணி நேரத்தில் ஒரு பெண்ணை கருத்தரிக்கச் செய்யும் சக்தியை இழந்து விடுகிறது என்றும் அதே போன்று பெண்ணின் சினைமுட்டையின் உயிர்க்காலம் ஒருநாள் அதாவது 24 மணி நேரம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இதன் மூலம் நாம் விளங்குவது என்னவெனில் ஆணுடைய விந்தணு பெண்ணுடைய சினைமுட்டையுடன் 24 மணிநேரத்திற்குள் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொண்டு கருத்தரிக்க வைக்க வேண்டும் என்பதே!

ஆணுடைய விந்தணுவிலிருந்து 23 குரோமோசோம்களும் பெண்ணின் சினைமுட்டையிலிருந்து 23 குரோமோசோம்களும் ஒன்றாக இணைந்து செல் அமைப்பாக உருவாகிறது இந்த செல் அமைப்பு உப்பு போன்று காணப்படுகிறது. இதுதான் FERTILIZED EGG  அதாவது கருமுட்டையாகும்

கருமுட்டை கர்பப்பை குழாய் எனப்படும் FALLOPIAN TUBE வழியாக கருப்பையில் சென்றடைகிறது பின்னர் கர்ப்பப் பை படிப்படியாக வளர ஆரம்பிக்கிறது இந்த வளர்ச்சியை கீழே உள்ள படத்தின் உதவியால் காண இயலும்!
பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்!
மேற்கண்ட அருள்மறை வசனம் கூறும் செய்தியை ஆராய்வோம்
 • ஒரு பெண் கர்ப்பம்தரித்த 21 அல்லது 24-ம் நாளிலிருந்து அந்த கருவுக்குள் இதயத்துடிப்பு நிகழ்கிறது இதன்மூலமாக அந்த கருவுக்குள் இரத்த ஒட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது

 • கர்பம்தரித்த 28ம் நாள் முதல் அந்த கருவுக்குள் கை, கால்கள், காதுகள் மற்றும் முதுகுத்தண்டுவடம் ஆகியன துளிர்விடுகின்றன.

 • கர்ப்பம் தரித்த 30ம் நாள் கருவுக்குள் மூளை துளிர்விடுகிறது
 • கர்ப்பம் தரித்த 35ம் நாள் விரல்கள் துளிர்விடுகின்றன

 • கர்ப்பம் தரித்த 40ம் நாள் மூளை செயல்பட ஆரம்பிக்கிறது

 • கருவுற்ற 6-வது வாரம் முதல் கருவின் மூளை கருவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறது.

 • கருவுற்ற 7-வது வாரம் முதல் பற்களின் தாடைகள் துளிர்விடுகின்றன மேலும் பால்பற்கள் முளைப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன
பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்)செய்தோம்
மேற்கண்ட அருள்மறை வசனம் கூறும் செய்தியை ஆராய்வோம்
 • கருவுற்ற 8-வது வாரத்தில் கரு மனித உருவத்தில் தென்படுகிறது மேலும் அனைத்து அங்கங்களும் உறுப்புக்களும் கண்டறியப்படுகிறது
 • கருவுற்ற 9-வது வாரத்தில் குழந்தையின் கை விரல்களில் ரேகைகள் படர ஆரம்பிக்கிறது பின்னர் குழந்தை தன் விரல்களை அசைக்க முற்படுகிறது

 • கருவுற்ற 10-வது வாரத்தில் குழந்தை கர்ப்பப் பையில் உள்ள அமிலங்களை பருக முற்படுகிறது

 • கருவுற்ற 11-வது வாரத்தில் குழந்தை உறங்க கற்றுக் கொள்கிறது பிறகு விழிக்க கற்றுக்கொள்கிறது இறுதியாக சிறுநீர் கூட கழிகக் ஆரம்பிக்கிறது. அதே சமயம் சுவாச உறுப்புகளை இயக்குவதற்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் இந்த குழந்தை பயிற்சி எடுக்கிறது!

 • கருவுற்ற 13-வது வாரத்தில் குழந்தையின் மர்மஸ்தான உறுப்புகள் தெரிய ஆரம்பிக்கின்றன மேலும் நாக்கில் ருசியை அறியக்கூடிய நரம்புகள் வேலை செய்கின்றன.

 • கருவுற்ற 14-வது வாரத்தில் குழந்தையின் செவிப்புலன்கள் வேலை செய்ய ஆரம்பிக்கின்றது.

 • கருவுற்ற 17-வது வாரத்தில் கண்களில் அசைவுகள் தென்படுகின்றன. குழந்தை கனவு காண முற்படுவதாக அறிவியல் வல்லுனர்கள் தங்கள் ஆய்வில் கூறுகிறார்கள்.
 • கருவுற்ற 20-வது வாரத்தில் குழந்தை வெளிச்சத்தை உணர ஆரம்பிக்கிறது தாயின் வயிற்றினுள் ஏற்படக்கூடிய சப்தங்களை காது கொடுத்து கேட்கிறது!

 • கருவுற்ற 5-வது மாதத்தில் குழந்தையின் அசைவுகள் நன்றாக வெளிப்படுகின்றது.


 • கருவுற்ற 6-வது மாதத்தில் வியர்வை சுரப்பிகள் முளைக்க ஆரம்பிக்கின்றன. மேலும் உடலில் முடிகள் முளைப் பதற்கான செயல்பாடுகள் நடைபெறுகின்றன

 • கருவுற்ற 7-வது மாதத்தில் விழிகள் திறந்து மூடுகிறது, குழந்தை சுற்றுமுற்றும் பார்க்கிறது, சுவையை அறிகிறது, தாயின் கர்ப்பப் பையை மெதுவாக தொட்டு உணருகிறது.

 • கருவுற்ற 8-வது மாதத்தில் குழந்தையின் மிருதுவான தோல் சருமங்கள் சற்று மேம்பட ஆரம்பிக்கிறது.

 • கருவுற்ற 9-வது மாதம் அதாவது 266 அல்லது 294ம் நாள் தன் கருவளர்ச்சியை முழுவதுமாக அடைந்து குழந்தை இந்த உலகில் காலடி எடுத்துவைக்க தயாராகிவிடுகிறது.
மேலே தாங்கள் கண்ட அனைத்து அறிவியல் அதிசயங்சளையும் கீழ்கண்ட அருள்மறை குர்ஆனின் வசனம் மெய்ப்படுத்துகிறதா? என்பதை சற்று யோசித்துப்பாருங்கள்
நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை ‘அலக்’ என்ற நிலையில் ஆக்கினோம்! பின்னர் அலக் என்பதை ஒரு தசைப்பிண்டமாக்கினோம்! பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்! பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்! (இவ்வாறு படைத்தவனாகிய) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (அல்குர்ஆன் 23:12-14)
 நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இஸ்லாத்திற்குள் வாருங்கள் அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக!
குறிப்பு – பல்வேறு இணைதளங்கள் இந்த கட்டுரைக்கு உதவின நன்றிகள் பல!
அறிவையும் சிந்திக்கும் ஆற்றலையும் கொடுத்தவன் அல்லாஹ் அவனுக்கே புகழனைத்தும்!
 
அல்ஹம்துலில்லாஹ்! சுப்ஹானல்லாஹ்! அல்லாஹு அக்பர்Wednesday, September 21, 2011

இஹ்ராமின் போது..............


இஹ்ராமின் போது தவிர்க்க வேண்டிய ஆடைகள் 

இஹ்ராம் கட்டியவர் ஹஜ்ஜை நிறைவேற்றி முடிக்கும் வரை சில ஆடைகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். 
இஹ்ராம் கட்டியவர் எதை அணியலாம்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியவர் சட்டையையோதலைப்பாகையையோ,தொப்பியையோகால்சட்டையையோ அணிய வேண்டாம். குங்குமச்சாயம்,வர்ஸ் (எனும் மஞ்சள்) சாயம் தோய்க்கப்பட்ட ஆடைகளையும் அணிய வேண்டாம். செருப்பு கிடைக்காவிட்டால் தவிர காலுறைகளையும் அணிய வேண்டாம். அவ்வாறு காலுறைகளை அணியும் போது கரண்டைக்குக் கீழே இருக்குமாறு மேற்பகுதியை வெட்டி விடுங்கள் என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)  நூல்: புகாரி 134, 366, 1542, 1842, 5794, 5803, 5805, 5806, 5852. 
இஹ்ராம் கட்டிய பெண் தனது முகத்தை மறைக்க வேண்டாம். கையுறைகளையும் அவள் பயன்படுத்த வேண்டாம்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)  நூல்: புகாரி 1838 
தைக்கப்படாத ஆடைகள் கிடைக்கும் போது தான் இவற்றைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். தைக்கப்படாத ஆடைகள் கிடைக்காத பட்சத்தில் தைக்கப்பட்டதையும் அணிந்து கொள்ளலாம். 
யாருக்குச் செருப்பு கிடைக்கவில்லையோஅவர் காலுறைகளை அணிந்து கொள்ளட்டும். யாருக்கு வேட்டி கிடைக்கவில்லையோஅவர் கால் சட்டைகளை அணிந்து கொள்ளட்டும்என்பது நபிமொழி.  அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)  நூல்: புகாரி 1841, 1843, 5804, 5853. 

இஹ்ராமின் போது கடைப்பிடிக்க வேண்டியவை 

இஹ்ராம் கட்டும் போது குளித்து விட்டு நறுமணம் பூசிக் கொள்ள வேண்டும். 
இஹ்ராம் கட்டிய பிறகு நறுமணப் பொருட்களைப் பயன்படுத்தத் தடை இருந்தாலும் இஹ்ராமுக்கு முன் நறுமணம் பூசிஅந்த நறுமணம் இஹ்ராமுக்குப் பின்பும் நீடிப்பதில் தவறு ஏதுமில்லை. 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டும் போது என்னிடம் உள்ள நறுமணத்தில் மிகச் சிறந்ததைப் பூசி விட்டேன்.  அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)  நூல்: புகாரி 5928, 267, 5923. 

இஹ்ராம் கட்டியவர் தவிர்க்க வேண்டியவை 

இஹ்ராம் கட்டியவர் ஹஜ்ஜை முடிக்கும் வரை சில காரியங்களைத் தவிர்த்துக் கொள்வது அவசியம். 
1. திருமணம் 
இஹ்ராம் கட்டியவர் அந்த நிலையில் திருமண ஒப்பந்தம் செய்தல்,திருமணம் சம்பந்தமான பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டியது அவசியம். மற்றவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. 
இஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்யக் கூடாது. பிறருக்குத் திருமணம் செய்து வைக்கவும் கூடாது. பெண் பேசவும் கூடாதுஎன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)  நூல்: முஸ்லிம் 2522., 2524 
2. தாம்பத்தியம் 
மனைவியுடன் ஹஜ்ஜுக்குச் சென்றவர் இஹ்ராம் கட்டிய நிலையில் மனைவியுடன் கூடக் கூடாது. 
ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும். அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன் மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோகுற்றம் செய்வதோவிதண்டா வாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை அல்லாஹ் அறிகிறான்.(ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்!  (அல்குர்ஆன் 2:197) 
இந்த வசனம்இஹ்ராம் கட்டியவர் உடலுறவில் ஈடுபடக் கூடாது என்பதைக் கூறுவதுடன்வீணான விவாதங்களில்சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதையும் தடை செய்கின்றது. 
3. வேட்டையாடுதல் 
இஹ்ராம் கட்டியவர் வேட்டையாடக் கூடாதுதனக்காக வேட்டையாடுமாறு பிறரைத் தூண்டவும் கூடாது. 
நம்பிக்கை கொண்டோரே! தனிமையில் (தன்னை) அஞ்சுபவர் யார்?என்பதை அல்லாஹ் அடையாளம் காட்ட (நீங்கள் இஹ்ராமுடன் இருக்கும் போது) உங்கள் கைகளுக்கும்உங்கள் ஈட்டிகளுக்கும் எட்டும் வகையில் சில வேட்டைப் பிராணிகளைக் காட்டி உங்களைச் சோதித்துப் பார்ப்பான். இதன் பின்னர் வரம்பு மீறுபவருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.  (அல்குர்ஆன் 5:94) 
நம்பிக்கை கொண்டோரே! இஹ்ராமுடன் இருக்கும் போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! உங்களில் எவரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால் அவர் கொன்ற பிராணியுடன் ஒத்துப் போகும்கால்நடை (ஆடுமாடு ஒட்டகம் ஆகியவை) பரிகாரமாகும். அது கஅபாவைச் சென்றடைய வேண்டிய காணிக்கை(ப் பிராணி). அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்கு ஈடான அளவு நோன்பு நோற்க வேண்டும். உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும். தனது வினையின் விளைவை அவர் அனுபவிப்பதற்காக (இது அவசியம்). இதற்கு முன் நடந்தவற்றை அல்லாஹ் மன்னித்தான். மீண்டும் செய்பவரை அல்லாஹ் தண்டிப்பான். அல்லாஹ் மிகைத்தவன்தண்டிப்பவன்.  (அல்குர்ஆன் 5:95) 
உங்களுக்கும்ஏனைய பயணிகளுக்கும் பயன்படும் பொருட்டு கடலில் வேட்டையாடுவதும்அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இஹ்ராமுடன் இருக்கும் போது நீங்கள் தரையில் வேட்டையாடுதல் தடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.  (அல்குர்ஆன் 5:96) 
வேட்டையாடுவது இவ்வசனங்கள் மூலம் தடை செய்யப்படுகின்றது. கடல் பிராணிகளை வேட்டையாடுவதற்கு அனுமதியும் வழங்கப்படுகின்றது. 
வேட்டையாடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. ஆடுமாடுஒட்டகம் போன்ற வளர்ப்புப் பிராணிகளை அறுப்பது வேட்டை யாடுவதில் அடங்காது. எவருக்கும் உரிமையில்லாமல் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் மான்முயல் போன்றவற்றைக் கொல்வதே வேட்டை யாடுவதில் அடங்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 
கடல் வாழ் உயிரினங்கள்ஆடுமாடுஒட்டகம் போன்ற வளர்ப்புப் பிராணிகள் தவிர மற்றவற்றை யாரேனும் இஹ்ராம் கட்டிய நிலையில் வேட்டையாடி விட்டால் அதற்கு அவர் பரிகாரம் செய்ய வேண்டும். 
ஆடுமாடுஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகளில் எதையேனும் அவர் பலியிட வேண்டும். ஒருவர் வேட்டையாடிய பிராணியின் அளவுஅதன் தன்மை ஆகியவற்றை நேர்மையான இரண்டு நபர்கள் ஆராய்ந்து முடிவு கூற வேண்டும்அந்த முடிவுப் படி நடந்து கொள்ள வேண்டும். 
மான் வேட்டையாடப்பட்டால் அதற்குப் பரிகாரமாக ஆட்டையும்முயல் வேட்டையாடப்பட்டால் அதற்குப் பரிகாரமாக நான்கு மாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டியையும் கொடுக்க வேண்டும் என்று பல நபித்தோழர்கள் தீர்ப்பளித்துள்ளனர். நேர்மையான இரண்டு நபர்கள் ஆராய்ந்து கூறும் முடிவே இதில் இறுதியானதாகும். 
இதற்கு வசதியில்லாதவர்கள் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்;அல்லது நோன்பு நோற்க வேண்டும். 
மேற்கண்ட வசனங்களிலிருந்து இதை நாம் அறிந்து கொள்ளலாம். 
ஹுதைபிய்யா சமயத்தில் நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டேன். எனது தோழர்கள் இஹ்ராம் கட்டினார்கள். நான் இஹ்ராம் கட்டவில்லை. அப்போது ஒரு (காட்டுக்) கழுதையை நான் கண்டு அதைத் தாக்கி வேட்டையாடினேன். நான் இஹ்ராம் கட்டவில்லை என்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களை சாப்பிடச் சொன்னார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)  நூல்: புகாரி 1821, 1822, 1823, 2570, 2914, 5407, 491, 5492 
இஹ்ராம் கட்டியவர் வேட்டைப் பிராணிகளை உண்பது பொதுவாகத் தடுக்கப்படவில்லை. அவர் வேட்டையாடுவதும்அவருக்காகவே வேட்டையாடப்படுவதும் தான் தடுக்கப்பட்டுள்ளது. அவரேவேட்டையாடினாலோஅவருக்காகவே வேட்டையாடப் பட்டிருந்தாலோ அதை அவர் உண்ணக் கூடாது என்பது இந்த ஹதீஸ்களிலிருந்து தெளிவாகின்றது. 
இதில் சில பிராணிகள் விலக்குப் பெறுகின்றன. 
வெறி நாய்எலிதேள்பருந்துகாகம்பாம்பு ஆகியவற்றை இஹ்ராம் கட்டியவர் கொல்லலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.  நூல்: புகாரி 1828, 3315 
காணத் தவறாதீர்கள் :

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!