Friday, September 30, 2011

ஷம்சுல் இஸ்லாம் சங்க ஏரியாவில் முனாபுக்கு வெற்றி வாய்ப்பு,முதல் ரவுண்டு!!

ஷம்சுல் இஸ்லாம் சங்கத்துக்கு உட்பட்டவார்டுகளில்அதிமுக அப்துல் அஜிஸ் (கொய்யப்பா)திமுக: அஸ்லம்,முஸ்லிம் லீக் முனாப் இம்மூவருக்கு மட்டுமே நேரடி போட்டி நிலவுகிறது.காங்கிரஸ் கட்சிக்கு இந்த பகுதிகளில் வோட்டு விழ வாய்ப்பில்லை.காரணம் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் அழைப்பு விடுத்து இருந்த கூட்டத்துக்கு காங்கிரஸ் சார்பாக யாரும் கலந்துகொள்ளவில்லை என்ற மக்களின
கோபம்தணியவில்லை.அதுமட்டுமல்ல,இதுவரை காங்கிரஸ் சார்பாக மன்றத் தலைவராக இருந்தவர்கள் சொல்லிக்கொள்ளும்படி இந்தப்பகுதிக்கு ஒன்றும்  செய்யவில்லை.பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து வெற்றி பெற்றும்,அல் அமீன் பள்ளி விஷயத்தில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ரெங்கராஜன் கண்டுகொள்ளவில்லை.இதெல்லாம் சேர்த்து காங்கிரஸ் இந்தப் பகுதிகளில் வெல்ல முடியாத நிலையில் உள்ளது.



மற்ற கட்சிகளைப் பொறுத்தவரை,தேமுதிக: பூக்கடை செல்வம்,இடதுசாரி கம்முனிஸ்ட்: கிராணி ரபீக்,வலதுசாரி கம்முனிஸ்ட்: அப்துல் ஹலீம் BJP. ரமேஷ் இவர்களுக்கு வாய்ப்பே இல்லை.இன்னும் சொல்லப்போனால் முஸ்லிம்கள் இந்தக் கட்சிகளை ஆரம்பத்திலிருந்தே புறக்கணித்து வருபவர்கள்.

சரி,திமுக அஸ்லம்?அவருடைய திமுக கட்சியின் இமேஜை மமக ஏற்கனவே (முஸ்லிம்களின் நண்பன் என்ற மாயையை) போட்டு உடைத்து -வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.முஸ்லிம்கள் திமுக என்றாலே இப்போது அலர்ஜியாக இருக்கிறார்கள்.குணசேகரன் என்ற நபர் முஸ்லிம்களுக்கு பல வகைகளிலும் தொந்தரவு செய்து வருபவர். 

திமுக கட்சி உருவானதிலிருந்து அதிரையில் திமுக நகரத் தலைவராக இருந்தN.K.S.ஜெக்கரியா அவர்களின் பேரன்  சகோ.முஹம்மது ஜாஃபர்  திமுக அதிருப்தி வேட்பாளராக சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.அல் அமீன்  பள்ளி விஷயத்தில் பழனி மாணிக்கம் எம் பி (திமுக) பிரச்னையை சுமூகமாக தீர்த்து வைப்பேன் என்று சொல்லி,வோட்டு வாங்கிப் போனவர் திரும்பி வரவேயில்லை.இதுபோன்ற காரணங்களால் திமுக தடுமாறிக்கொண்டுள்ளது என்பதை முதல் கட்ட சர்வே உணர்த்துகிறது.

அதிமுக அப்துல் அஜீஸை பொறுத்தவரை,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (மமக) அதிமுக கூட்டணியுடன் தான் இருக்கிறது என்று இருந்தவரை,அந்தப் பகுதிகளில் மெஜாரிட்டியாக உள்ள த மு மு க,மமகவினர் அவருக்கு ஆதரவு நல்கி வந்தனர்.இதனால் எல்லாப் கட்சிகளின் போட்டிகளிலும் -  இந்தப் பகுதியில் முன்னணியில் இருந்த அவர்,மமகவுடன் அதிமுக கூட்டணியில் இல்லை என்று அறிவிப்பு வந்தவுடன்,அனைவரும் கை கழுவிவிட்டனர்.அதனால் அவருடைய வெற்றி வாய்ப்பு குறைந்துவிட்டது.மேலும் ஷம்சுல் இஸ்லாம் சங்கப் பகுதிகளில் அதிமுகவுக்கு என உறுப்பினர்களே கிடையாது என சொல்லும் அளவுக்கு (ஓரிருவர் தவிர)நிலைமை மோசம்.

சீனியர்களை மட்டுமே கொண்ட கட்சியாகவும்,இளைஞர்கள் என சொல்லிக் கொள்ளும்படி இல்லாத கட்சியாகவும்,இருக்கின்ற முஸ்லிம் லீக் ஆச்சரியப்படும் விதத்தில் இந்தப் பகுதியில் போஷாக்குடன் காணப்படுகிறது.இதற்கு காரணமாக இரண்டை சொல்லலாம்,ஒன்று அட்வகேட் முனாப்.இவரை தெரியாத நபர்களே ஊரில் இல்லை,தொழுகையாளி,நம்பிக்கையானவர்,தன வேளையில் முனைப்புடன் இருப்பவர்,மொத்தத்தில் நல்லவர்.இந்தப் போக்கும்,திமுகவையும்,அதிமுகவையும்,காங்கிரசையும் எதிர்த்து களம் காணும் மமக தொண்டர்கள் - முஸ்லிம் லீக் முனாபுக்கே ஒட்டு என்ற ஒட்டு மொத்த எண்ணத்தில் உள்ளனர்.அதிமுகவுடன் உள்ள உறவை மமக முறித்தது முனாபுக்கு சாதகமாக அமைந்துவிட்டது.தமுமுக தொண்டர்களின் ஆதரவுடன் அவர் ஷம்சுல் இஸ்லாம் சங்கப் பகுதிகளில் - இறைவன் நாடினால் - வெற்றிக் கொடி  நாட்டுவார்.

ஷம்சுல் இஸ்லாம் சங்க வார்டுகளின் முதல் ரவுண்ட் அப் - முனாபுக்கே சாதகமாக உள்ளது.

அல்லாஹ் மிக அறிந்தவன்,

மற்ற தெருக்களின் நிலை என்ன? இன்ஷா அல்லாஹ் நாளை பார்க்கலாம்! 






No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!