Thursday, September 15, 2011

தேவை தொலைக்காட்சித் தியாகம்.


அரசின் இலவச வண்ணத் தொலைக்காட்சி இன்றைக்கு அனைத்து நடுத்தரஏழை மக்களையும் சென்றடைந்துவிட்ட நிலையில்மக்களின் முக்கிய பொழுதுபோக்குச் சாதனமாக மாறிவிட்டது.

அவ்வப்போதைய நிகழ்வுகளை வீட்டுக்குள் கொண்டு வரும் ஊடகமாக இது இருப்பினும்நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களில் பொதுத் தேர்வுக்காகப் படித்துவரும் மாணவமாணவியருக்கு இப்போது வில்லனாக மாறியுள்ளது

தொலைக்காட்சி அதிக ஆக்கிரமிப்பு இல்லாத காலங்களில்ஆசிரியர் தரும் வீட்டுப் பாடங்களை,மாணவர்கள் கவனச்சிதறல் இன்றி எழுதிச் சென்ற நிலை இப்போது இல்லை.
தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்துபாடல்களிலும்சினிமா உள்ளிட்ட கேளிக்கை விஷயங்களிலும் கவனம் செலுத்திக்கொண்டே வீட்டுப் பாடங்களை எழுதும் மாணவர்களின் எண்ணிக்கைதான் இன்றைக்கு அதிகம். இதை விரும்பாத பெற்றோர்கண்டிக்க முற்பட்டாலோவீடு போர்க்களமாக மாறிவிடுவதும் உண்டு. தொலைக்காட்சி பார்ப்பதில் மனமும்பார்வையும் ஈடுபட,  உடலும்செயலும் மட்டுமே படிப்புக்காகச் செலவிடும் நிலை இன்றைய மாணவர்களின் படிப்புத் திறனையும்,  நினைவுத் திறனையும் மங்கச்செய்து வருவது நடுத்தரக் குடும்பங்களில் காணப்படுகிறது.

வீட்டுப் பணிகளுக்கிடையே பெரும்பாலான பெண்களுக்குப் பொழுதுபோக்கு அம்சமாகவும்உற்ற தோழமையாகவும் தொலைக்காட்சிப் பெட்டிகள் விளங்குவதால்குடும்பத்தில் ஒருவர் விழித்திருக்கும்வரை இயங்கிக்கொண்டே இருப்பதுதான் இன்றைய தொலைக்காட்சிப் பெட்டிகளின் நிலை.  தேர்தல்கள் வரும்போது அரசியல் ஆர்வலர்களின் ஆர்வத்துக்கு  அவ்வப்போது தீனி போடுவது இன்றைய தொலைக்காட்சிகள்தான். போதாக்குறைக்கு IPL கிரிக்கெட் போட்டியும் சேர்ந்துகொண்டதால் இன்றைக்குத் தொலைக்காட்சிப் பெட்டிகள் ஒவ்வொரு வீட்டிலும் நள்ளிரவுவரை இயங்குவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
 இந்நிலையில் தேர்வு எழுதும் மாணவர்களின் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறியுள்ளது.
இத்தகைய நேரத்தில்பெற்றோரும்அண்டை வீட்டாரும் பொறுப்புடன் நடந்துகொள்வது சமுதாயக் கடமை என்பதை உணர வேண்டும்.

இன்றைய மாணவர்களுக்கு அறிவும்திறனும் இருந்தாலும்பெற்றோரின் அன்பும்அரவணைப்பும் அவர்களுக்கு மிகப்பெரிய பக்க பலமாக அமையும் என்பதையும் மறக்கக் கூடாது.

அரசியல் ஆர்வலர்களாகவும்கிரிக்கெட் ரசிகர்களாகவும் உள்ள குடும்பத்தினர்முடிந்தவரை தங்கள் குழந்தைகளின் தேர்வு முடியும்வரை தொலைக்காட்சி பார்ப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். முடிந்தால் கேபிள் இணைப்பைத் தாற்காலிகமாகத் துண்டிப்பதும் நல்லது.

அண்டை வீட்டாரும்தொலைக்காட்சிப் பெட்டிகளின் ஒலி அளவைக் குறைத்துக் கொள்வதுகூட நல்லது.

 தேர்வைச் சந்திக்கும் மாணவர் ஒருவர் வீட்டில் காலை நேரத்தில் படித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்தத் தெருவில் திருமண விழாவையொட்டி வாயிலில் ஒலிபெருக்கி வைத்துப் பாடல்களை ஒலிபரப்பு செய்தனர். இதனால் அந்த மாணவர் பட்ட அவதியைக் கண்ட அவரின் தந்தைநேரடியாக அந்த வீட்டுக்குச் சென்றுஒலிபெருக்கி சத்தம் காரணமாகத் தனது மகன் மட்டுமன்றிசுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும்கூட பாதிக்கப்படக்கூடும் என எடுத்துரைத்தார்.  இதை ஏனோ திருமண வீட்டார் கண்டுகொள்ளவில்லை.

பிரச்னை காவல் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஒலிபெருக்கி துண்டிக்கப்பட்டது. இத்தகைய சூழலைக்கூடபெற்றோர் தயங்காது சந்திக்க வேண்டும்.
இன்றைக்கு அதிக மதிப்பெண் பெறும் மாணவமாணவியர்களிடம் கேட்டால், ""நான் இரவு வெகுநேரம் கண்விழித்துப் படிப்பேன். அப்பாவோஅம்மாவோ எனது சந்தேகங்களுக்கு விடையளிப்பர்.  அப்படி இல்லாவிட்டாலும்அவர்கள் நான் படுக்கைக்குச்  செல்லும்வரை விழித்திருப்பர்'' என்று கூறுவதுண்டு. படித்த தலைமுறையினரிடையே காணப்படும் இத்தகைய ஆரோக்கியமான நடவடிக்கைகளை மற்றவர்களும் பின்பற்றுவதில் தவறில்லை.  தேர்வுக்குச் செல்வதற்கு முன் ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தோர் இறைவழிபாடு செய்துஅனுப்புவதும்அவசரமாகத் தேர்வுக் கூடத்துக்குப் புறப்படும் தங்கள் குழந்தைகள்தேர்வுக்கான அனுமதிச் சீட்டுஎழுதுபொருள்களை விட்டுச் சென்றுவிடாமல் இருக்கத் துணைபுரிவதும்கூட அச்சத்துடன் தேர்வைச் சந்திக்கவிருக்கும் மாணவருக்கு நம்பிக்கை ஊட்டும் செயலாக அமையும்.

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!