Sunday, November 21, 2010

பிஞ்சு உதிர்ந்தது! நெஞ்சு அதிர்ந்தது!!

முபீன்! இதுதான், பதினைந்து வயதே நிரம்பிய அச்சிறுவனின் பெயர்.

இன்று அதிகாலை, நண்பர் ஏ.ஜே. தாஜுத்தீன் அவர்கள் இச்சிறுவனின் அகால மரணத்தைத் தொலைபேசியில் சென்னையிலிருந்து அறிவித்தபோது, அதிர்ந்தேன்!

ஊரின் பொதுத் தொண்டுகளில் ஆர்வமுடைய சகோதரர் அ. இ. அப்துர்ரஜாக் (புது ஆலடித் தெரு. சேஸ்காம், சென்னை) அவர்களின் அருமை மகன் இவர். பெற்றோருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு!

சென்னையில் பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த சிறுவர் முபீன், தன் வீட்டில் நடந்த விபத்தில் படுகாயமுற்று, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய ஊர்களின் விரைவான சிகிச்சைகள் ஏதும் பலனின்றி, விரைந்து சென்றுவிட்டான், அல்லாஹ்விடம்!

மற்றவர்களுக்கு ஓர் எச்சரிக்கையையும் விட்டுச் சென்றுள்ளான் இச்சிறுவன். ஆம்! எதிலும் எச்சரிக்கை தேவை என்பதுதான் அது! இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹிராஜிஊன்!

'மூனா மீயன்னா' குடும்பக் குலக் கொழுந்து முபீன், தன் பெற்றோருக்கும் தன் பள்ளித் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. கருணையுள்ள இறைவன் அல்லாஹ், இவரின் பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் பொறுமையை வழங்கி, இவரைத் தன் சொர்க்கச் சிறார்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக! ஆமீன்.

மஃரிபுத் தொழுகைக்குப்பின், தக்வாப் பள்ளியில் ஜனாஸாத் தொழுகை நடந்து, அங்குள்ள மையவாடியில் நல்லடக்கம் நிகழ்ந்தது.

தகவல்: அதிரை அஹமது 

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!