Friday, November 12, 2010

பட்டதாரிகளும் பாமரர்களும் இங்கே ???





பெண்களுக்கு, ஆண்களுக்கு, திருநங்கைகளுக்கு என அனைத்து பால் இனத்தவர்களும் பொருளாதார ரீதியாக தங்களை உயர்த்திக் கொள்வதற்கு உதவும் எண்ணற்ற தொழிற்பயிற்சிகளை அளித்து வருகின்றது சென்னை, சூளைமேட்டில் இயங்கிவரும் "மக்கள் கல்வி நிறுவனம்'. மத்திய அரசின் ஓர் அங்கம் இது. இம்மையத்தின் தலைவர் கி.கிருஷ்ண மூர்த்தியும், இயக்குனர் தங்கவேலுவும், திட்ட அதிகாரி ராஜாராமனும் நம்மிடம் மையத்தின் பயிற்சி முறைகளைப் பற்றியும் இதனால் பயன் அடைந்தவர்கள் பற்றியும் பேசியதிலிருந்து...
பயிற்சி முறைகளில் குறுகிய கால பயிற்சிகள், நீண்ட கால பயிற்சிகள் என இரண்டு முறைகளில் பயிற்சியளிக்கிறோம். குறுகிய காலப் பயிற்சிகள் பெரும்பாலும் சமூகத்தில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு உதவும் பயிற்சிகளாக வடிவமைத்துள்ளோம். இந்தப் பயிற்சிகளை மேற்கொள்ளும் பெண்கள் தங்களிடையே எளிய திறன்களை வளர்த்துக் கொள்வார்கள்.

செயற்கை நகை தயாரித்தல், ஜாம், ஜுஸ் தயாரித்தல், பினாயில், சோப், மெழுகுவர்த்தி தயாரிப்பு, சாம்பிராணி, அழகுக்கலை பயிற்சி மற்றும் மணப்பெண் அலங்காரம், காளான் வளர்ப்பு, மண் புழு உரம், வீட்டு அலங்காரப் பொருட்களைத் தயாரித்தல், மெது பொம்மை, பரிசுப் பொருட்களைத் தயாரித்தல்... இப்படி பலவற்றையும் குறுகிய காலத்தில், அதாவது ஒரு மாதத்தில் சொல்லிக் கொடுத்து விடுகிறோம். குடும்பத்தின் அன்றாடச் செலவுகளைச் சமாளிப்பதற்கு இத்தகைய குறுகிய காலப் பயிற்சிகளின் மூலமாகப் பெண்கள் தங்களின் தேவைக்கேற்ற வருமானத்தைப் பெறுகின்றனர்'' என்றார் நிறுவனத்தின் தலைவரான கிருஷ்ண மூர்த்தி.

நாங்கள் வழங்கும் நீண்ட காலப் பயிற்சிகளின் மூலம் ஒருவரின் தனிப்பட்ட திறன் ஒரு குறிப்பிட்ட பணியில் சிறந்து விளங்கும். அவருக்குத் தேர்வு நடத்தி, மத்திய அரசின் சான்றிதழும் வழங்கப் படுகிறது.
இரு சக்கர வாகனங்கள் பழுது பார்ப்பது, நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்ப்பது, குளிர்சாதனப் பொருட்கள் பழுது பார்ப்பது,கணினி பயிற்சி, மருத்துவமனை உதவியாளர்கள், துரித உணவு தயாரித்தல், பொக்லைன் மற்றும் கிரேன் ஆபரேட்டர், லிஃப்ட் ஆபரேட்டர், மெட்டல் ரூஃபிங், மின் உபகரணப் பொருட்களைப் பராமரித்தல், செல்போன் பழுது பார்ப்பது, ஹோட்டல் மேனேஜ் மென்ட்... இத்தகைய பயிற்சிகளை நாங்கள் மூன்று மாதங்களிலிருந்து ஒரு வருட காலங்களில் சொல்லித் தருகிறோம். இதில் சில பயிற்சிகள் ஆண்களுக்கு மட்டுமே அளிக்கிறோம். சில பயிற்சிகளை பெண்களுக்கு மட்டுமே அளிக்கிறோம். ஒவ்வொரு பயிற்சியையும் துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்டே பயிற்சியளிக்கிறோம்.
பட்டதாரிகளாக இருப்பவர்களும் இங்கே வருகிறார்கள். பாமரர்களும் இங்கே பயிற்சி பெறுவதற்கு வருகிறார்கள். அவரவர் களுக்கு புரியும் வண்ணம் பொறுமையாகவும் தனிப்பட்ட கவனத்துடனும் பயிற்சியளிக்கிறோம். பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய மக்களுக்கு உதவுவதுதான் எங்களின் குறிக்கோள். அதேநேரத்தில் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு, சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு அவர்கள் விரும்பும் பயிற்சிகளை அளிப்பதற்குத் தயாராக இருக்கிறோம். நடுத்தர மக்கள் பயனடையும் வகையிலும் எங்களின் பயிற்சி திட்டங்களை காலத்திற்கேற்ப அவ்வப்போது மாற்றித் தருகிறோம். பெண்களுக்கு இங்கே வழங்கப்படும் பல்வேறுபட்ட பயிற்சிகளின் மூலம் அவர்களை பொருளாதார ரீதியாக உயர்த்துவதே எங்களின் பணி''என்றார் மக்கள் கல்வி நிறுவனத்தின் இயக்குனர் தங்கவேல்.
பெண்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளில் முக்கியமாகச் சொல்ல வேண்டும் என்றால் அழகுக் கலை பயிற்சி, குழந்தை பராமரிப்பு, சிறார் பள்ளி மேலாண்மை, சணல் பொருட்கள் தயாரித்தல், தையற்கலை, ஃபேஷன் டிசைனிங், வீட்டு உள் அலங்காரம், கைவினைப் பொருட்கள் செய்தல் போன்றவற்றைச் சொல்லலாம். இதுபோன்ற பயிற்சிகளை தனியார் அமைப்புகளிடம் கற்றுக் கொள்வதற்கு ஆகும் செலவில் மூன்றில் ஒரு பங்கு கூட எங்களிடம் கற்றுக் கொள்வதற்கு பெண்கள் செலவு செய்ய வேண்டியதில்லை. அதற்கும் குறைவாகவே ஆகும். அதோடு தகுதியான நபரின் வழிகாட்டுதலோடு, சம்பந்தப்பட்ட துறையில் மத்திய அரசின் சான்றிதழோடு கிடைப்பதை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எங்களின் மக்கள் கல்வி நிறுவனத்தின் சார்பாக சிறைத் துறையினரின் அனுமதி பெற்று, சிறைக் கைதிகளுக்கும் பயிற்சியளித்திருக்கிறோம். இதுபோல், இளம் குற்றவாளிகளுக்கான சிறையிலும், திருநங்கைகளுக்கும் தொழிற் பயிற்சிகளை அளித்திருக்கிறோம்'' என்றார் நிறுவனத்தின் திட்ட அதிகாரி ராஜாராமன்.
தொழிற்பயிற்சி நடக்கும் மையத்தைச் சுற்றி வந்தோம். ஜுவல்லரி டிசைனிங்கில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் மீனா, சபீதா பேகம், அபிதா, அருணா தேவி, ராஜாத்தி ஆகியோர். செயற்கை நகைகளை தயாரிப்பதில் பெரிதாக என்ன லாபம் சம்பாதித்துவிட முடியும்? என்றோம் அந்தப் ùóபண்களிடம். ""25 சதவீதம் முதலீடு. 25 சதவீதம் உழைப்பு. 50 சதவீதம் லாபம்... இதுதான் செயற்கை நகை தயாரிப்பின் சூட்சுமம்! இந்த ஃபார்முலாவைச் சொல்லிக் கொடுத்தது மக்கள் கல்வி நிறுவனம்தான்'' என்றனர் சேர்ந்திசையாய்!

sarfudeen
-- 

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!