Thursday, November 25, 2010

கல்லாமையை இல்லாமை ஆக்கி மிஞ்சுவோம்

“தமிழகம் முழுவதும் முக்கால் பகுதி வக்ப் வாரிய சொத்துக்கள் பயன்படுத்தப் படாமலும் ஆக்கிரமிப்பிலும் உள்ளன. இவற்றை சமுதாயத்தின் ஏழ்மை நிலையிலுள்ளவர்களின் நிதித்தேவைக்குப் பயன்படுத்தலாம் அல்லது கல்வி வளர்ச்சிக்காகப் பயன்படுத்தலாம் என்று எண்ணியபோது கல்வி வளர்ச்சியே சிறந்ததாகத் தோன்றியது. சரி கல்வி வளர்ச்சிக்கு கல்லூரி துவக்கலாம் என்று எண்ணியபோது அதில் மருத்துவக் கல்லூரியே சிறந்ததாகத் தோன்றியது.
எனவே, சமுதாய மக்கள் கல்லூரி துவங்க எண்ணினால் அதற்கு தமிழ்நாடு வக்ப் வாரியம் 
துணை நிற்கும் என்கிற அறிவிப்பை வெளியிட்டு அதற்கு பலரும் முன் வந்துள்ள நிலையில் மருத்துவக் கல்லூரி துவங்குவதற்கான இடங்களை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நேரில் கண்டு ஆய்வு செய்கிற வேளையில் 
நீடூர்-நெய்வாசல் JMH அரபிக் கல்லூரிக்கு வந்திருந்தபோது JMH அரபிக் கல்லூரியின் நிர்வாகத்தினர் தங்களிடம் 30 ஏக்கர் இடம் இருப்பதாக் கூறி அதில் கல்லூரித் துவங்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார்கள். அதன் விளைவுதான் இன்றைய வரலாறு போற்றும் ஆலோசனைக்கூட்டமும் அதன் தீர்மானங்களும். ” விளக்கவுரையாற்றிய தமிழ்நாடு வக்ப் வாரியத் தலைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களின் முயற்சி இறைவனின் பொறுத்தத்திற்குரியது.
தமிழகம் மற்றும் புதுவையிலிருந்து சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்ட இந்நிகழ்ச்சி இதுவரை நீடூர்-நெய்வாசல் வரலாற்றில் யாரும் செய்திடாத ஒரு புதுமையான முயற்சியின் தொடர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும்.
J.M.H.அரபிக்கல்லூரியின் தலைவர் T.S.R.நஜிமுத்தீன் ஹாஜியார் அவர்களின் தலைமையில் இன்று(13-11-2010) காலை J.M.H நிக்காஹ் மஹாலில் துவங்கிய நிகழ்ச்சியில் புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் A.M.H.நாஜிம், காரைக்கால் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் முஹம்மது இஸ்மாயீல், காரைக்கால் அன்னைக் கல்லூரி தாளாளர் நஜிமுத்தீன், மயிலாடுதுறை நகரமன்றத் தலைவர் லிங்கராஜன், சச்சா முபாரக் மற்றும் பல சமூக ஆர்வலர்களும் உரையாற்றினார்கள்.
மருத்துவக் கல்லூரிக்கான அரசு அனுமதியை வாங்குவதற்கு முதலில் கல்லூரிக்கானக் கட்டிடம் கட்டப்பட வேண்டும். அங்கு 2 ஆண்டு காலம் மருத்துவமனையை நடத்த வேண்டும். அதன் பின்னர்தான் முறையான அனுமதியை அரசாங்கத்திடமிருந்து பெற முடியும். கல்லூரித் துவங்க ஆரம்ப கால நிதியாக ரூபாய்.50 கோடி தேவைப் படுகிறது. இந்த 50 கோடியை ஒரு பங்கின் விலை ரூபாய் 10 லட்சம் என்று 500 பங்குகளாக பிரித்து சமுதாய மக்களில் வசதிக்கேற்ப வாங்குவதற்கு வழி செய்யலாம் என்றும், ஜமாத் ரீதியாகவும் தனி நபர்கள் பலர் சேர்ந்தும் பங்குகளை வாங்க வழி செய்யலாம் என்றும் ஆலோசித்து முடிவு செய்யப் பட்டது. பங்குதாரர்கள் நிர்வாகக்குழு அங்கத்தினர்களாக தகுதி பெறுவார்கள். இன்ஷா அல்லாஹ் நமக்கு கிடைக்கும் மருத்துவ சீட்டுகளில் பங்குதாரர்கள் மூலம் சமுதாய மாணவர்கள், குறிப்பாக வசதி வாய்ப்பற்ற மாணவர்கள் பயனடைய செய்ய வேண்டும் என்பதே இத்திட்டதின் குறிக்கோள்.
கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட பங்குகள் இன்றைய தினமே வாங்கப் பட்டுவிட்டன. தமிழகத்தை 4 மணடலங்களாகப் பிரித்து அனைத்து தமிழக முஸ்லிம்களின் பங்களிப்பில் நீடூர் J.M.H.A-வக்ப் மருத்துவக் கல்லூரியை வெற்றிகரமாக துவங்கியபின் இதை முன்மாதிரியாக வைத்து இதர பகுதிகளிலும் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி சமுதாய மருத்துவர்களை உருவாக்க எடுக்கப் பட்டிருக்கும் இம்முயற்சி சாதாரணமான விஷயமல்ல.
இவை அனைத்தும் தீர்மானங்களாய் நிறைவேற்றப் பட்டபோது சமுதாயமே ஆனந்தத்தில் மகிழ்ந்தது. இந்த லட்சியக் கனவு நனவாக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இறைஞ்சுவோம்.
நம்மாலான முயற்சியில் கல்லாமையை இல்லாமை ஆக்கி மிஞ்சுவோம்.

Tuesday, November 23, 2010

அழகிய அணிகலன்கள் பகுதி 1


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ்,

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, இந்த வலைப்பூவில் எழுத வாய்ப்பு கிடைத்தும் சில பல காரணங்களால், என்னால் உடனே எழுத இயலவில்லை. இதற்கு மேலும் தள்ளிப்போடுவது நல்லதல்ல என்பதால் ஒரு சிறிய தொடரை ஏக இறைவனின் பெயரால் ஆரம்பிக்கிறேன்.  Husn-E-Akhlaq என்னும் இந்த தொடர், அழகிய குணங்களைப் பற்றியது. இந்த குணநலன்களுக்கு முஹம்மது நபி (ஸல்) அவர்கள்தான் முன்னோடி என்றால் அது மிகையாகாது. முற்காலங்களில், இஸ்லாம் வேகமாகவும் வேரூன்றியும் வளர்ந்து கொண்டிருந்தபோது பிள்ளைகளுக்கு akhlaaq அல்லது குணனலன்கள் கற்றுக்கொடுக்கவே தனி துறையும், அதில் ஆசிரியர்களும் இருந்தனர். இமாம் மாலிக் அவர்கள் முதன் முதலில் கல்வி கற்க செல்லும் பொழுது அவரின் தாயும் சொன்னது என்ன, ”முதலில் நீ, உன் ஆசிரியரின் குணங்களை கற்றுக் கொள், அவரைப்போல வாழ ஆசைப்படு, அதன் பிறகே இல்ம் அல்லது படிப்பு”. ஆக, நம் முன்னோர்கள், இஸ்லாத்தில் குணநலன்களுக்கு எவ்வளவு மதிப்பளித்திருக்கிறார்கள் என்பது தெரியும். ஆனால், இப்போதைய வாழ்க்கை முறையில், குணநலன்கள் ஒரு பொருட்டாகவே இல்லாமல் போய்விட்டது. உலகம் முழுதும் சேவை செய்த அன்னை தெரசாவிற்கு தரப்பட்ட நோபெல் விருதை போரினாலும், போலி சட்டங்கள் மூலமும் உலகின் கால்வாசி மனிதர்களை சிறையிலும், தன் நாட்டிலேயே கைதியாகவும் வைத்திருக்கும் அமெரிக்க அதிபருக்கும் தரும்போதே நாம் தெரிந்து கொள்ள இயலும், நாம் எந்த சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். க்ஹைர். அல்லாஹ் போதுமானவன். நம்மால் இயன்றது என்ன, நம்மையும் நம்மை சார்ந்தவர்களையும் அழகிய குணநலன்களை பேண வைப்பதும், அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதுமே ஆகும். இன்ஷா அல்லாஹ், இதன் முதல் பாகத்தை இப்பொழுது காண்போம்.


“மேலும் நபியே நிச்சயமாக நீர் மிக உயர்ந்த, மகத்தான நற்குணமுடையவராக இருக்கின்றீர்” [அல்-கலம்: 4]

இந்த திருக்குர்ஆனின் ஆயத்தில், அல்லாஹ் கூறுவது என்ன? மனிதர்களுக்கு எந்த குணங்கள் நல்லவை என  சொல்லப்பட்டனவோ அத்தனை பெருங் குணங்களும் அத்தனையும் நபி (ஸல்) அவர்களிடம் காணப்பட்டுள்ளன என்பதையே. சிறு வயது முதல் தன் வாலிப வயது வரை நபிகளார் (ஸல்) அவர்களுக்கு சேவை செய்வதையே பாக்கியமாய் பெற்ற அனஸ் (ரலி) அவர்களின் கூற்றே இதற்கு மீண்டும் அழகு சேர்க்கிறது,

“நான் நபிகள் நாயகத்திடம் 10 வருட காலம் வேலை செய்திருக்கிறேன். ஒரு போதும் அவர்கள் என்னைச் ‘சீ’ என்று கூடச் சொன்னதில்லை. ஏதாவதொரு விடயத்தைச் செய்தால் ‘ஏன் இப்படிச் செய்தாய்’ என்று கேட்டதில்லை. நான் ஏதாவது ஒன்றைச் செய்யவில்லையானால் ‘ஏன் இதைச் செய்யவில்லை’ என்றும் கேட்டதில்லை” [நூல்: புகாரி, முஸ்லிம்].
நம்மிடம் வேலை செய்யும் யாரும் நம்மைப்பற்றி இப்படி கூற முடியுமா? அல்லது நம்முடன் வேலை செய்யும் நண்பர்களாவது?? இத்தகைய ஒரு புகழுரையை நபிகள் நாயகம் (ஸல்) தவிர வேறெந்த உலக தலைவர்களிடம் நாம் காண இயலாது, உயிருடன் இருப்பவர்கள், இறந்தவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும். இன்னும் காணலாம்.

அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக; அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக; தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.(ஆலே இம்ரான் :159)


ஏற்கனவே பொறுமைக்கும் அழகிய குணங்களுக்கும் பெயர் பெற்ற திருத்தூதருக்கு(ஸல்), அல்லாஹ் இன்னும் அழகிய முறையில் இங்கு இன்னும் மெருகூட்ட வழிமுறைகளை சொல்லித்தருகின்றான். இறைத்தூதரின் அழகிய குணங்களை போற்றியதோடு நில்லாமல், அல்லாஹ் கூறுகின்றான், தலைவர் என்றால் செருக்குடன் தனியே நிற்காதீர், மாறாக, எல்லா விஷயங்களிலும் உங்களை பின் தொடர்பவர்களை கலந்தாலோசித்து செயல்படுத்துங்கள் என்று. இதே போல பத்ரு யுத்தத்தின் கைதிகளின் விஷயத்திலும் அல்லாஹ்வின் எச்சரிக்கை உங்களுக்கு நினைவிருக்கும். அவர் நபி என்பதற்காக அல்லாஹ் தன் கோபத்தை தடுத்து வைக்கவில்லை, மாறாக, அவர் மக்களின் அறிவுரைகளை கேட்டு அதன்படி நடந்தார் எனவே அண்ணலார் மேல் வரவிருந்த ஆபத்தை தடுத்து வைத்ததாக இறைவன் கூறுவான். எவ்வளவு உண்மை? இன்று வீட்டு விஷயம் முதல் நாட்டு மக்கள் விஷயம் வரை தான்தோன்றியாக நடந்துகொள்ளும் தலைவர்களுக்கு இது பாடமல்லவா? ஒரு தலைவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இதை விட சிறந்த ஓர் அறிவுரை எங்கேயும் காண இயலுமோ??

இன்னுமொரு விஷயம் என்னவெனில், நாம் லட்சங்கள் பல செலவு செய்து மாற்று மதத்தவர்களுடன் விவாதங்களில் ஈடுபடுவதை விட்டும், ஆயிரங்கள் செலவு செய்து குறும்படங்களோ, காணொளிகளோ படைத்து தாவாஹ் / Dawah செய்வதைக் காட்டிலும் மிக அதிக சக்தியை கொண்டது நாம் நடந்து கொள்ளும் விதம். உதாரணத்திற்கு சகோதரி யுவோன் ரிட்லியைப் பாருங்கள், நம்மிடம் இப்பொழுது பரப்பப்படும் பொய்களைப்போல உண்மையிலேயே இந்த சகோதரியை கைதியாக வைத்திருந்தபோது நடந்து கொண்டிருந்தால் இத்தகைய ஒரு சகோதரியை நாம் பெற்றிருக்க முடியுமா?? இன்னும் இந்த லின்க்கில் பார்த்தீர்களானால், சிறு குழந்தைகளின் நடவடிக்கைகளைக் கொண்டும் நாம் கவனிக்கப்படுகிறோம் என்பது புலப்படும். இன்ஷா அல்லாஹ், இன்னும் கற்றுக் கொள்வோம் அழகிய குண நலன்களை. அண்ணல் நபி நாயகம் (ஸல்) அவர்களின் குணங்களில் 10% சதவிகிதமாவது நம் வாழ்விலும் மேம்படுத்த முயல்வோம். மீண்டும் சந்திப்போம், இன்ஷா அல்லாஹ். வ ஸலாம்.

Monday, November 22, 2010

பட்டதாரிகளே

தமிழக சட்ட மேலவைத் தேர்தலில் வாக்காளராகப் பதிவு செய்துகொள்வதில் பட்டதாரிகளிடையே போதிய ஆர்வமில்லை. இதனால், தங்களுக்குச் சாதகமான வேட்பாளர்களை நிறுத்துவதில் அரசியல் கட்சிகளுக்கு எவ்விதத் தடையும் இருக்கப்போவதில்லை என்ற கருத்து வலுத்துள்ளது.
தமிழக சட்ட மேலவைத் தொகுதிகளுக்கான வாக்காளர்கள் சேர்க்கை பணி கடந்த இரு மாதங்களாக நடந்து வருகிறது. இதில், பட்டதாரிகளும், ஆசிரியர்களும் வாக்காளர்களாகப் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழக வடக்கு தொகுதியான வேலூரில் 12,585, திருவண்ணாமலையில் 13,893, கிருஷ்ணகிரியில் 7,181, தருமபுரியில் 9,807 என 43,466 பேர் பதிவு செய்துள்ளனர்.
இதேபோல, 4 மாவட்டங்களிலும் ஆசிரியர்கள் மொத்தம் 14,238 பேர் பதிவு செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் 5,441, திருவண்ணாமலையில் 2,834, கிருஷ்ணகிரியில் 3,106, தருமபுரியில் 2,857 பேர் பதிவு செய்துள்ளனர்.
வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பி.எட். பட்டதாரிகள் வேலை கேட்டு தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். அதேபோல, பிற பட்டதாரிகள் சுமார் 60 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.
இதவிர, மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்யாத பட்டதாரிகள் எண்ணிக்கை பல ஆயிரம். மேலும், அரசுப் பள்ளிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கையும் 10 ஆயிரத்தைத் தாண்டுகிறது. ஆனாலும், வாக்காளர் பட்டியலில் இதுவரை பதிவு செய்திருக்கும் பட்டதாரிகள் எண்ணிக்கை 10 சதவீதம் தான்.
பட்டதாரிகள் இடையே ஆர்வமில்லாததற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஒவ்வொரு வட்டத்திலும் வட்டாட்சியர் அலுவலகத்தில் மட்டும் பதிவு செய்ய வேண்டும் என்பதால், வேலையைவிட்டு வர முடியாத நிலை இருப்பதாகக் கூறுகின்றனர். மேலும், 1986-ம் ஆண்டோடு சட்ட மேலவை கலைக்கப்பட்ட பிறகு, அதைப் பற்றிய தெளிவு தற்போதைய தலைமுறையினருக்குக் கிடையாது. சட்ட மேலவையின் பணி என்ன? என்பதும் இன்றைய தலைமுறையினருக்குத் தெரியவில்லை.
இதனால், வாக்காளராகப் பதிவு செய்வதில், பட்டதாரிகளிடையே போதிய ஆர்வமில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால், தற்போது வாக்காளராகப் பதிவு செய்து கொண்டிருக்கும் பட்டதாரிகளில் பெரும்பாலானோர் தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், அவர்களது ஆதரவாளர்கள், பழைய மாணவர்கள் என்றும் கூறப்படுகிறது. காரணம், தனியார் கல்வி நிறுவனங்களில் வசூலிக்க வேண்டிய கட்டணங்கள் மற்றும் கல்வி நிலையப் பாதுகாப்பு போன்ற பல விவகாரங்களில் இவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க பிரதிநிதிகள் தேவை என்ற நோக்கிலேயே, கல்வி நிறுவனங்கள் இதில் முனைப்பு காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல, பட்டதாரி தொகுதிகளில் வாக்காளர்கள் அதிகமாவதில் அரசியல் கட்சியினருக்கு ஆர்வமில்லை. காரணம், 10 பட்டதாரிகள் பரிந்துரைத்தால் எழுதப் படிக்கத் தெரியாதவர் கூட பட்டதாரி தொகுதியில் போட்டியிடலாம். இதே நிலைதான் ஆசிரியர் தொகுதிக்கும் இருக்கிறது.
அரசியல் கட்சிகள் தங்களது ஆதரவாளரை இறுதி நேரத்தில் களமிறக்கத் தயாராக இருக்கின்றன. இதில் பட்டதாரி வாக்காளர்கள் அதிகம் இருந்தால், அவர்களது ஆதரவைப் பெறுவதில் பெரும் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்ற அச்சமும் இதற்குக் காரணம் என்றே கூறப்படுகிறது. இதனாலேயே, பட்டதாரி வாக்காளர்கள் சேர்க்கையில், அரசியல் கட்சிகள் ஒதுங்கியிருக்கின்றன.
இறுதி நேரத்தில் இதிலும் கூட்டணி அமைத்துக்கொண்டு, அரசியல் கட்சியினரின் பிரதிநிதிகளுக்கு வாக்களிக்க கல்வி நிறுவனங்கள் இறங்கி வரலாம்; அல்லது கல்வி நிறுவன பிரதிநிதிகளை ஆதரிக்க அரசியல் கட்சியினர் முன்வரலாம் எனும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
எனவே, எவ்வளவு குறைந்த எண்ணிக்கையில் வாக்காளர்கள் வருகிறார்களோ அவ்வளவும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் லாபம். இதைத் தவிடுபொடியாக்கும் பொறுப்பு இன்றைய பட்டதாரிகள் கையில் இருக்கிறது. பட்டதாரிகள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட ஒருவர் மேலவை உறுப்பினராக வர வேண்டிய அவசியத்தை உணர்ந்தால், பட்டதாரிகள் பெரும்பாலானோர் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முன்வருவார்கள் என்ற கருத்தும் வலுத்துள்ளது.  
நன்றி - தினமணி

Sunday, November 21, 2010

அறிவை அடகு வைக்கும் நிலை ........


படத்தில் இருப்பது புட்டபருத்தி சாய்பாபா! இந்த சாமியார் ஒரு டுபாகூர்  என்பதை பிபிசி செய்தி நிறுவனம், விடியோ ஆதாரத்துடன்வெளி்யிட்டு இவனின் உண்மை முகத்தை மக்களுக்கு தோலுரித்து காட்டி இருக்க, இந்திய நாட்டின் முதல் குடிமகனாக கருதப்படும் குடியரது தலைவர் இந்த சாமியாருக்கு கூன் போடும் காட்சி நேற்று சாமியாரின் பிறந்த நாளையோட்டி நடைபெற்ற மகளீர் நிகழ்ச்சியில் நிகழ்ந்துள்ளது.
இதில் இன்னும் கொடுமையான விசயம் என்வெனில் 23 ஆம் தேதி நடக்க இருக்கும் இந்த சாமியாரின் பிறந்தாள் விழாவுக்கு பாரத நாட்டின் பிரதர் மன்மோகன் சிங் கலந்து கொள்கிறாராம்.
இந்த சாமியார் மக்களை ஏமாற்றுகிறான் என்பதை பிபிசி வீடியோவை பார்க்கும் பாமரனும் புரிந்து கொள்வான் என்றிருக்க பாரத பிரமருக்கும் குடியரசு தலைவருக்கு புரியாமல் போனது ஏன் என்று தெரியவில்லை.
நாட்டின் தலைவர்கள் சாமியார்களிடம் தங்களது அறிவை அடகு வைக்கும் நிலை மாறினால் தான் நாடு முன்னேறும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து..

பிஞ்சு உதிர்ந்தது! நெஞ்சு அதிர்ந்தது!!

முபீன்! இதுதான், பதினைந்து வயதே நிரம்பிய அச்சிறுவனின் பெயர்.

இன்று அதிகாலை, நண்பர் ஏ.ஜே. தாஜுத்தீன் அவர்கள் இச்சிறுவனின் அகால மரணத்தைத் தொலைபேசியில் சென்னையிலிருந்து அறிவித்தபோது, அதிர்ந்தேன்!

ஊரின் பொதுத் தொண்டுகளில் ஆர்வமுடைய சகோதரர் அ. இ. அப்துர்ரஜாக் (புது ஆலடித் தெரு. சேஸ்காம், சென்னை) அவர்களின் அருமை மகன் இவர். பெற்றோருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு!

சென்னையில் பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த சிறுவர் முபீன், தன் வீட்டில் நடந்த விபத்தில் படுகாயமுற்று, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய ஊர்களின் விரைவான சிகிச்சைகள் ஏதும் பலனின்றி, விரைந்து சென்றுவிட்டான், அல்லாஹ்விடம்!

மற்றவர்களுக்கு ஓர் எச்சரிக்கையையும் விட்டுச் சென்றுள்ளான் இச்சிறுவன். ஆம்! எதிலும் எச்சரிக்கை தேவை என்பதுதான் அது! இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹிராஜிஊன்!

'மூனா மீயன்னா' குடும்பக் குலக் கொழுந்து முபீன், தன் பெற்றோருக்கும் தன் பள்ளித் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. கருணையுள்ள இறைவன் அல்லாஹ், இவரின் பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் பொறுமையை வழங்கி, இவரைத் தன் சொர்க்கச் சிறார்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக! ஆமீன்.

மஃரிபுத் தொழுகைக்குப்பின், தக்வாப் பள்ளியில் ஜனாஸாத் தொழுகை நடந்து, அங்குள்ள மையவாடியில் நல்லடக்கம் நிகழ்ந்தது.

தகவல்: அதிரை அஹமது 

Wednesday, November 17, 2010

”இந்தியாவுக்கு வருமா இஸ்லாமிய வங்கி” நாணய விடகன்


சமீபத்தில் பாரத பிரதமர் மன்மோகன் சிங் இஸ்லாமிய வங்கியை இந்தியாவில் கொண்டு வர வேண்டும் என ஆர்பிஐ க்கு அறிவுருத்தியதை தொடர்ந்து நாணய விகடன் பத்தரிக்கையில்இந்தியாவுக்கு வருமா இஸ்லாமிய வங்கி என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகியுள்ளது.
வட்டியில்லா வங்கியின் (இஸ்லாமிய வங்கி முறை) அவசியம் இந்திய நாட்டில் மேலும் அதிகரித்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!.

-நாணய விகடன் செய்தி அனுப்பியர்: முஹம்மது அலி
குறிப்பு-இந்த கட்டுரையை எழுதியவர் சரணவன் என்ற பிற சமயத்தை சார்ந்த ஒரு சகோதரர். எனவே இதில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் நடைமுறையில் உள்ளவைகளே தவிர மார்க்க அடிப்படையில் கூடுமா கூடாது என்பது பற்றி அல்ல.
tntj.net

Monday, November 15, 2010

வாழ்த்துக்கள்.

 PEACE TRAIN சார்பில் இனிய தியாக திருநாள் வாழ்த்துக்கள். 

Saturday, November 13, 2010

தீவிரவாத செயலில் கைதான இந்துக்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் காரர்கள்

 நாடு முழுவதும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ள அனைத்து இந்துக்களுக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்பு உள்ளது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
நாக்பூரில் செய்தியாளர்களிடம் இது குறித்து  அவர் பேசுகையில், முஸ்லீ்ம்களை தேச விரோதிகள் என்று தொடக்கத்திலிருந்தே ஆர்.எஸ்.எஸ். கூறி வருகிறது. ஆனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக கைதான இந்துக்கள் அனைவருமே ஆர்.எஸ்.எஸுடன் தொடர்பு கொண்டவர்களாக உள்ளனர். இதற்கு ஆர்.எஸ்.எஸ். என்ன பதில் சொல்லப் போகிறது.
 

முஸ்லீம்கள் தீவிரவாதத்தைப் பரப்புகிறார்கள், ஆதரிக்கிறார்கள், அடைக்கலம் தருகிறார்கள் என்று கூறுகிறது ஆர்.எஸ்.எஸ். ஆனால் அவர்களது அமைப்பைச் சேர்ந்தவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு கைதானால் சதி நடக்கிறது என்று கூக்குரலிடுகிறது.  நாட்டில் நிலவும் வறுமையை ஒழிக்க மதச்சார்பற்ற சக்திகள் ஒருங்கிணைய வேண்டும். முஸ்லீம்களும் அவர்களுடன் கை கோர்த்து நாட்டை வலிமைப்படுத்த பாடுபட வேண்டும் என்றார் திக்விஜய் சிங்,

மருத்துவக் கல்லூரி தேவை நமக்கு

தமிழகம் முழுவதும் முக்கால் பகுதி வக்ப் வாரிய சொத்துக்கள் பயன்படுத்தப் படாமலும் ஆக்கிரமிலுமாக உள்ளன. இவற்றை சமுதாயத்தின் ஏழ்மை நிலலயிலுள்ளவர்களின் நிதித்தேவைக்குப் பயன்படுத்தலாம் அல்லது கல்வி வளர்ச்சிக்காகப் பயன்படுத்தலாம் என்று எண்ணியபோது கல்வி வளர்ச்சியே சிறந்ததாகத் தோன்றியது. சரி கல்வி வளர்ச்சிக்கு கல்லூரி துவக்கலாம் என்று எண்ணியபோது அதில் மருத்துவக் கல்லூரியே சிறந்ததாகத் தோன்றியது.
எனவே, சமுதாய மக்கள் கல்லூரி துவங்க எண்ணினால் அதற்கு தமிழ்நாடு வக்ப் வாரியம் துணை நிற்கும் என்கிற அறிவிப்பை வெளியிட்டு அதற்கு பலரும் முன் வந்துள்ள 
நிலையில் மருத்துவக் கல்லூரி துவங்குவதற்கான இடங்களை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நேரில் கண்டு ஆய்வு செய்கிற வேளையில் 


நீடூர்-நெய்வாசல் JMH அரபிக் கல்லூரிக்கு வந்திருந்தபோது JMH அரபிக் கல்லூரியின் நிர்வாகத்தினர் தங்களிடம் 30 ஏக்கர் இடம் இருப்பதாக் கூறி அதில் கல்லூரித் துவங்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார்கள். அதன் விளைவுதான் இன்றைய வரலாறு போற்றும் ஆலோசனைக்கூட்டமும் அதன் தீர்மானங்களும். ” விளக்கவுரையாற்றிய தமிழ்நாடு வக்ப் வாரியத் தலைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களின் முயற்சி இறைவினின் பொறுத்தத்திற்குரியது.


தமிழகம் மற்றும் புதுவையிலிருந்து சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்ட இந்நிகழ்ச்சி இதுவரை நீடூர்-நெய்வாசல் வரலாற்றில் யாரும் செய்திடாத ஒரு புதுமையான முயற்சியின் தொடர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும்.


J.M.H.அரபிக்கல்லூரியின் தலைவர் T.S.R.நஜிமுத்தீன் ஹாஜியார் அவர்களின் தலைமையில் இன்று காலை J.M.H நிக்காஹ் மஹாலில் துவங்கிய நிகழ்ச்சியில் புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் A.M.H.நாஜிம், காரைக்கால் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் முஹம்மது இஸ்மாயீல், அன்னைக் கல்லூரி தாளாளர் நஜிமுத்தீன், மயிலாடுதுறை நகரமன்றத் தலைவர் லிங்கராஜன், சச்சா முபாரக் மற்றும் பல சமூக ஆர்வலர்களும் உரையாற்றினார்கள்.
மருத்துவக் கல்லூரிக்கான அரசு அனுமதியை வாங்குவதற்கு முதலில் கல்லூரிக்கானக் கட்டிடம் கட்டப்பட வேண்டும். அங்கு 2 ஆண்டு காலம் மருத்துவமனையை நடத்த வேண்டும். அதன் பின்னர்தான் முறையான அனுமதியை அரசாங்கத்திடமிருந்து பெற முடியும். கல்லூரித் துவங்க ஆரம்ப கால நிதியாக ரூபாய்.50 கோடி தேவைப் படுகிறது. இந்த 50 கோடியை ஒரு பங்கின் விலை ரூபாய் 10 லட்சம் என்று 500 பங்குகளாக பிரித்து சமுதாய மக்களில் வசதிக்கேற்ப வாங்குவதற்கு வழி செய்யலாம் என்றும், ஜமாத் ரீதியாகவும் தனி நபர்கள் பலர் சேர்ந்தும் பங்குகளை வாங்க வழி செய்யலாம் என்றும் ஆலோசித்து முடிவு செய்யப் பட்டது. பங்குதாரர்கள் நிர்வாகக்குழு அங்கத்தினர்களாக தகுதி பெறுவார்கள். இன்ஷா அல்லாஹ் நமக்கு கிடைக்கும் மருத்துவ சீட்டுகளில் பங்குதாரர்கள் மூலம் சமுதாய மாணவர்கள், குறிப்பாக வசதி வாய்ப்பற்ற மாணவர்கள் பயனடைய செய்ய வேண்டும் என்பதே இத்திட்டதின் குறிக்கோள்.


கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட பங்குகள் இன்றைய தினமே வாங்கப் பட்டுவிட்டன. தமிழகத்தை 4 மணடலங்களாகப் பிரித்து அனைத்து தமிழக முஸ்லிம்களின் பங்களிப்பில் நீடூர் J.M.H.A-வக்ப் மருத்துவக் கல்லூரியை வெற்றிகரமாக துவங்கியபின் இதை முன்மாதிரியாக வைத்து இதர பகுதிகளிலும் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி சமுதாய மருத்துவர்களை உருவாக்க எடுக்கப் பட்டிருக்கும் இம்முயற்சி சாதாரணமான விஷயமல்ல.


இவை அனைத்தும் தீர்மானங்களாய் நிறைவேற்றப் பட்டபோது சமுதாயமே ஆனந்தத்தில் மகிழ்ந்தது. இந்த லட்சியக் கனவு நனவாக எல்லாம் வல்ல 


அல்லாஹ்விடம் இறைஞ்சுவோம்.
நம்மாலான முயற்சியில் கல்லாமையை இல்லாமை ஆக்கி மிஞ்சுவோம்.

தகவல்
A.J. Tajudeen
Cell # +91 9840885773
by velichcham 

Friday, November 12, 2010

பட்டதாரிகளும் பாமரர்களும் இங்கே ???





பெண்களுக்கு, ஆண்களுக்கு, திருநங்கைகளுக்கு என அனைத்து பால் இனத்தவர்களும் பொருளாதார ரீதியாக தங்களை உயர்த்திக் கொள்வதற்கு உதவும் எண்ணற்ற தொழிற்பயிற்சிகளை அளித்து வருகின்றது சென்னை, சூளைமேட்டில் இயங்கிவரும் "மக்கள் கல்வி நிறுவனம்'. மத்திய அரசின் ஓர் அங்கம் இது. இம்மையத்தின் தலைவர் கி.கிருஷ்ண மூர்த்தியும், இயக்குனர் தங்கவேலுவும், திட்ட அதிகாரி ராஜாராமனும் நம்மிடம் மையத்தின் பயிற்சி முறைகளைப் பற்றியும் இதனால் பயன் அடைந்தவர்கள் பற்றியும் பேசியதிலிருந்து...
பயிற்சி முறைகளில் குறுகிய கால பயிற்சிகள், நீண்ட கால பயிற்சிகள் என இரண்டு முறைகளில் பயிற்சியளிக்கிறோம். குறுகிய காலப் பயிற்சிகள் பெரும்பாலும் சமூகத்தில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு உதவும் பயிற்சிகளாக வடிவமைத்துள்ளோம். இந்தப் பயிற்சிகளை மேற்கொள்ளும் பெண்கள் தங்களிடையே எளிய திறன்களை வளர்த்துக் கொள்வார்கள்.

செயற்கை நகை தயாரித்தல், ஜாம், ஜுஸ் தயாரித்தல், பினாயில், சோப், மெழுகுவர்த்தி தயாரிப்பு, சாம்பிராணி, அழகுக்கலை பயிற்சி மற்றும் மணப்பெண் அலங்காரம், காளான் வளர்ப்பு, மண் புழு உரம், வீட்டு அலங்காரப் பொருட்களைத் தயாரித்தல், மெது பொம்மை, பரிசுப் பொருட்களைத் தயாரித்தல்... இப்படி பலவற்றையும் குறுகிய காலத்தில், அதாவது ஒரு மாதத்தில் சொல்லிக் கொடுத்து விடுகிறோம். குடும்பத்தின் அன்றாடச் செலவுகளைச் சமாளிப்பதற்கு இத்தகைய குறுகிய காலப் பயிற்சிகளின் மூலமாகப் பெண்கள் தங்களின் தேவைக்கேற்ற வருமானத்தைப் பெறுகின்றனர்'' என்றார் நிறுவனத்தின் தலைவரான கிருஷ்ண மூர்த்தி.

நாங்கள் வழங்கும் நீண்ட காலப் பயிற்சிகளின் மூலம் ஒருவரின் தனிப்பட்ட திறன் ஒரு குறிப்பிட்ட பணியில் சிறந்து விளங்கும். அவருக்குத் தேர்வு நடத்தி, மத்திய அரசின் சான்றிதழும் வழங்கப் படுகிறது.
இரு சக்கர வாகனங்கள் பழுது பார்ப்பது, நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்ப்பது, குளிர்சாதனப் பொருட்கள் பழுது பார்ப்பது,கணினி பயிற்சி, மருத்துவமனை உதவியாளர்கள், துரித உணவு தயாரித்தல், பொக்லைன் மற்றும் கிரேன் ஆபரேட்டர், லிஃப்ட் ஆபரேட்டர், மெட்டல் ரூஃபிங், மின் உபகரணப் பொருட்களைப் பராமரித்தல், செல்போன் பழுது பார்ப்பது, ஹோட்டல் மேனேஜ் மென்ட்... இத்தகைய பயிற்சிகளை நாங்கள் மூன்று மாதங்களிலிருந்து ஒரு வருட காலங்களில் சொல்லித் தருகிறோம். இதில் சில பயிற்சிகள் ஆண்களுக்கு மட்டுமே அளிக்கிறோம். சில பயிற்சிகளை பெண்களுக்கு மட்டுமே அளிக்கிறோம். ஒவ்வொரு பயிற்சியையும் துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்டே பயிற்சியளிக்கிறோம்.
பட்டதாரிகளாக இருப்பவர்களும் இங்கே வருகிறார்கள். பாமரர்களும் இங்கே பயிற்சி பெறுவதற்கு வருகிறார்கள். அவரவர் களுக்கு புரியும் வண்ணம் பொறுமையாகவும் தனிப்பட்ட கவனத்துடனும் பயிற்சியளிக்கிறோம். பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய மக்களுக்கு உதவுவதுதான் எங்களின் குறிக்கோள். அதேநேரத்தில் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு, சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு அவர்கள் விரும்பும் பயிற்சிகளை அளிப்பதற்குத் தயாராக இருக்கிறோம். நடுத்தர மக்கள் பயனடையும் வகையிலும் எங்களின் பயிற்சி திட்டங்களை காலத்திற்கேற்ப அவ்வப்போது மாற்றித் தருகிறோம். பெண்களுக்கு இங்கே வழங்கப்படும் பல்வேறுபட்ட பயிற்சிகளின் மூலம் அவர்களை பொருளாதார ரீதியாக உயர்த்துவதே எங்களின் பணி''என்றார் மக்கள் கல்வி நிறுவனத்தின் இயக்குனர் தங்கவேல்.
பெண்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளில் முக்கியமாகச் சொல்ல வேண்டும் என்றால் அழகுக் கலை பயிற்சி, குழந்தை பராமரிப்பு, சிறார் பள்ளி மேலாண்மை, சணல் பொருட்கள் தயாரித்தல், தையற்கலை, ஃபேஷன் டிசைனிங், வீட்டு உள் அலங்காரம், கைவினைப் பொருட்கள் செய்தல் போன்றவற்றைச் சொல்லலாம். இதுபோன்ற பயிற்சிகளை தனியார் அமைப்புகளிடம் கற்றுக் கொள்வதற்கு ஆகும் செலவில் மூன்றில் ஒரு பங்கு கூட எங்களிடம் கற்றுக் கொள்வதற்கு பெண்கள் செலவு செய்ய வேண்டியதில்லை. அதற்கும் குறைவாகவே ஆகும். அதோடு தகுதியான நபரின் வழிகாட்டுதலோடு, சம்பந்தப்பட்ட துறையில் மத்திய அரசின் சான்றிதழோடு கிடைப்பதை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எங்களின் மக்கள் கல்வி நிறுவனத்தின் சார்பாக சிறைத் துறையினரின் அனுமதி பெற்று, சிறைக் கைதிகளுக்கும் பயிற்சியளித்திருக்கிறோம். இதுபோல், இளம் குற்றவாளிகளுக்கான சிறையிலும், திருநங்கைகளுக்கும் தொழிற் பயிற்சிகளை அளித்திருக்கிறோம்'' என்றார் நிறுவனத்தின் திட்ட அதிகாரி ராஜாராமன்.
தொழிற்பயிற்சி நடக்கும் மையத்தைச் சுற்றி வந்தோம். ஜுவல்லரி டிசைனிங்கில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் மீனா, சபீதா பேகம், அபிதா, அருணா தேவி, ராஜாத்தி ஆகியோர். செயற்கை நகைகளை தயாரிப்பதில் பெரிதாக என்ன லாபம் சம்பாதித்துவிட முடியும்? என்றோம் அந்தப் ùóபண்களிடம். ""25 சதவீதம் முதலீடு. 25 சதவீதம் உழைப்பு. 50 சதவீதம் லாபம்... இதுதான் செயற்கை நகை தயாரிப்பின் சூட்சுமம்! இந்த ஃபார்முலாவைச் சொல்லிக் கொடுத்தது மக்கள் கல்வி நிறுவனம்தான்'' என்றனர் சேர்ந்திசையாய்!

sarfudeen
-- 

Tuesday, November 9, 2010

ஹிந்து புரோகிதர் இஸ்லாத்தில் இணைந்தார்

சுஷில் குமார் ஷர்மா எனும் அப்துர் ரஹ்மான் ஹரியானா மாநிலத்தில் உள்ள அமதல்பூர் எனும் குக்கிராமத்தை சேர்ந்தவர். அக்கிராமத்தில் உள்ள கோவிலில் மத சடங்குகளை செய்யும் இந்து வைதீக குடும்பத்தில் பிறந்தவர்.மே மாதம்12,2002 அன்று சவூதி அரேபியாவின் ஜித்தா நகருக்கு பணி நிமித்தமாக வந்தார்.
ஜித்தாவில் கம்பெனி இருப்பிடத்தில் தங்கி இருந்த போது உடன் வேலை செய்யும் ஒரு நண்பர் சில இஸ்லாமிய புத்தகங்களை கொடுத்துள்ளார். பிறகு சுஷில் குமார் சர்மா ரியாத் நகரில் உள்ள நௌரா மகளிர் பல்கலைகழகத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அப்துர் ரஹ்மான் கூறுகிறார்.
நௌரா மகளிர் பல்கலைகழகத்தில் கம்பெனி கேம்ப்-ல் இஸ்லாத்தை பற்றி கூறிய நிறைய இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த பல நண்பர்களை சந்தித்தேன். அவர்கள் ஒய்வு நேரத்தில் இறைத்தூதர்கள் பற்றியும், இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களது பொன்மொழிகள் பற்றியும் கூறுவார்கள்
எனது இதயம் நடுக்கத்திற்கு உள்ளானது. எனது மரணத்திற்கு பிறகு எனது நிலை என்னவாகும்? என்னுடைய பாவங்கள் என்னை நரகத்திற்கு கொண்டு சேர்க்குமா? என்று என்னை நானே கேட்டு கொண்டேன்.நிராகரிப்பாளர்கள் மற்றும் பாவிகளின் மண்ணறை வேதனை பற்றி நான் மிகவும் அச்சப்படேன்.
தூக்கமின்றி இரவுகளை கழித்தேன். இஸ்லாத்தை தழுவவும், முஹம்மது நபி(ஸல்) அவர்களை உண்மையாக பின்பற்றுபவனாகவும் மாற இதுவே சரியான தருணம் என உணர்ந்தேன்.என்னுடைய வாழ்வின் உண்மையின் தேடுதல் இஸ்லாத்தில் முழுமை அடைந்தது.
இன வேறுபாடுகள் இல்லாமல் சகோதரத்துவத்தை பேணும் பண்பே இஸ்லாத்தை நோக்கி என்னை ஈர்த்தது.
அல் ஃபத்தாவில் உள்ள இஸ்லாமிய அழைப்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் என்னை கலிமா கூற இமாம் அவர்கள் அழைத்தார்.
“அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்” என்று முழுமனதுடன் கூறினேன்.இமாம் அவர்கள் அப்துர் ரஹ்மான் என்று எனது பேரை மாற்றி கொள்ள ஆலோசனை வழங்கினார்கள்.நானும் உடனே முழுமனதுடன் ஒப்புக்கொண்டேன்.
எனக்கு மனைவியும் 16 வயதில் மற்றும் 7 வயதில் இரு மகன்களும் உள்ளனர். இஸ்லாமிய தூதை என்னுடைய குடும்பத்திற்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பு என் முன்னால் இருக்கிறது. நான் தொலைபேசி மூலம் இஸ்லாத்தை தழுவியதை குடும்பத்தாரிடம் தெரிவித்தேன். அவர்கள் முதலில் நம்பவில்லை. என்னுடைய மனைவி நான் விடுமுறைக்கு இந்தியா வரும் போது முடிவு செய்வதாக கூறுகிறாள்.
ஒவ்வொரு நாளும் அல்லாஹ்விடம் என குடும்பத்தாருக்கு நேர்வழி காட்டவும் அவர்களுடைய இதயங்களை இஸ்லாத்தின் பால் இணக்கமாக்கவும் கண்ணீரோடு அழுது பிரார்த்தித்து கொண்டே இருக்கிறேன்.
ஊர்மக்கள், உறவினர்கள், குடும்பத்தாரின் எதிர்ப்புகளை நான் சந்திக்க வேண்டியிருக்கும்.ஆனால் அவற்றை எதிர்கொள்ள நான் உறுதியாக இருக்கிறேன். “அல்லாஹ் எனக்கு உதவி செய்வான்” என உறுதியாக நம்புகிறேன்.
“இம்மை மறுமையில் வெற்றி பெற இஸ்லாத்தை தழுவுங்கள் என்று முஸ்லிமல்லாத சகோதரர்களை பார்த்து அப்துர் ரஹ்மான் இறுதியாக அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.”
-சவுதிகேசட் நியுஸ்
தமிழாக்கம்: அப்துல்லாஹ் முஹம்மது
tntj.net

Thursday, November 4, 2010

துல்ஹஜ் மாதத்தின் சிறப்புகளும், செய்ய வேண்டியவைகளும்

காலச் சக்கரத்தை சுழற்றும் கருணையாளனாகிய அல்லாஹ் தன் திருமறையில்...
வைகறையின் மீது சத்தியமாக! பத்து இரவுகள் மீதும் சத்தியமாக!  (அல்குர்ஆன் 89:1, 2)

இந்த பத்து இரவுகளைப் பற்றி அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறும் போது...
(
துல்ஹஜ் மாதத்தின்) 'பத்து நாட்களில் நல்லறங்கள் செய்வது ஏனைய நாட்களில் அவற்றைச் செய்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும்'; என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், 'அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத்(அறப்போர்) செய்வதை விடவுமாஎன்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதை விடவும் சிறந்தது தான். ஆயினும் தனது உயிருடனும்தனது செல்வத்துடனும்  புறப்பட்டுச் சென்று அவ்விரண்டில் எதையும் திரும்பக் கொண்டு வராத போராளியைத் தவிரஎன்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: திர்மிதீ 688

(
துல்ஹஜ்) பத்து நாட்களில் செய்யும் எந்த நல்லறமும்'அய்யாமுத்தஷ்ரீக் நாட்களில் செய்யும் எந்த நல்லறத்தையும் விட சிறந்ததல்லஎன்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஜிஹாதை விடவுமாஎன்று நபித்தோழர்கள் கேட்டனர். 'தன் உயிரையும் பொருளையும் பணயம் வைத்து புறப்பட்டு இரண்டையும் இழந்து விட்டவன் செய்த ஜிஹாதைத் தவிரஎன்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி 969

இஸ்லாமிய ஆண்டுக் கணக்கில் இறுதி மாதமான துல்ஹஜ் மாதத்தை இறையருளால் நாம் அடையவுள்ளோம். இஸ்லாம் குறிப்பிடும் புனித மாதங்களில் இந்த துல்ஹஜ் மாதமும் ஒன்றாகும். மனித இனத்தின் உயர்வுகளுக்கு வழிகாட்டும் ஏக இறைமார்க்கம்இம்மாதத்திலும் மனிதர்கள் இறையருளையும் இறையச்சத்தையும் பெறுவதற்குண்டான நேரிய காரியங்களைக் கற்றுத் தருகிறது.

இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றான ஹஜ் மற்றும் அதன் கிரியைகளுக்கான காலகட்டம் இம்மாதத்தின் முதல் பத்து நாட்களிலேயே அடங்கியுள்ளது. இன்னும் உம்ராஅரஃபா தின நோன்புபெருநாள் தொழுகை,குர்பானி போன்ற நல்லறங்களும் அல்லாஹ்வின் கிருபையால் துல்ஹஜ்ஜின் பத்து நாட்களிலும் அதைத் தொடர்ந்து அய்யாமுத்தஷ்ரீக் நாட்களிலும் அனுகூலமாயிருப்பதை உணரலாம்.

அந்த நாட்களில் 'லா இலாஹ இல்லல்லாஹ்அல்லாஹு அக்பர்,அல்ஹம்துலில்லாஹ் ஆகியவற்றை அதிகமாக கூறுங்கள்என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: தப்ரானி)

அரஃபா தினத்தில் (ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முதல் நாள்) நோன்பு நோற்பதுஅதற்கு முந்தைய ஒரு வருடம்அதற்கடுத்த ஒரு வருடம் ஆகிய இரு வருடங்களின் பாவங்களுக்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் நம்பிக்கை வைக்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுகதாதா(ரலி) நூல்: திர்மிதீ680 எனவே அரஃபா தினத்தன்று  நோன்பு நோற்பது நபிவழியாகும்.

பெருநாள்!

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவை வந்தடைந்த போது,மதினாவாசிகளுக்கு விளையாடுவதற்கென இரண்டு நாட்கள் இருந்தன. அந்த இரு நாட்களில் மதீனாவாசிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் 'இந்த இரு நாட்கள் எவ்வகையைச் சேர்ந்ததுஎனக் கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'அறியாமை காலத்தில் (இந்நாட்களில்) நாங்கள் விளையாடக் கூடியவர்களாக இருந்தோம் என்றனர். (அதைக்கேட்ட) அல்லாஹ்வினதூதர்(ஸல்) அவர்கள் 'நிச்சயமாக அல்லாஹ் அவ்விரு நாட்களை விடச் சிறந்ததாகவும்அவ்விரு நாட்களுக்குப் பதிலாகவும்'அள்ஹா (எனும் ஹஜ்ஜுப் பெரு) நாளையும்ஃபித்ரு (எனும் ரமளான் பெரு) நாளையும் வழங்கியிருக்கிறான்என்று கூறினார்கள்.  அனஸ்(ரலி) நூல்: ஸஹீஹ் அபுதாவுத் 1004

அறியாமைக் காலத்திலிருந்த இரு நாட்களுக்குப் பகரமாக  மாட்சிமைமிக்க அல்லாஹ் தன் அடியார்களுக்கு நல்கிய நாட்கள்தான் இந்த இரு பெருநாட்கள். இந்த இரண்டு நாட்களிலும் தொழுவதுகுத்பா (பிரசங்கம்) நிகழ்த்துவதோடு வேறு சில காரியங்களைச் செய்வதும் நபிவழியாகும்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் உண்ணும் வரை ஈதுல்ஃபித்ர் பெருநாளன்று (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள். ஈதுல் அள்ஹா பெருநாளன்று தொழுது முடிக்கும் வரை உண்ண மாட்டார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புரைதா(ரலி) நூல்: ஸஹீஹ் இப்னுமாஜா 1756

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஈது (தொழுகை)க்கு நடந்தவர்களாக வந்து, (தொழுதபின்) நடந்தே திரும்பிச் செல்வார்கள். அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் ஸஅது(ரலி)  நூல்: ஸஹீஹ் இப்னுமாஜா 1070

நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும்ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்கு செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன்;முதலில் தொழுகையையே துவக்கு வார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப் பார்கள். அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள். (வலியுறுத்த வேண்டியதை) வலியுறுத்துவார்கள். (கட்டளையிட வேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்கு படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப்பற்றியேனும் உத்தரவிட வேண்டியிருந்தால் உத்தரவிடுவார்கள். பின்னர் (இல்லம்) திரும்புவார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத்(ரலி) நூல்: புகாரி 956

நபி(ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும்மாதவிடாயுள்ள பெண்களையும் (தொழும் திடலுக்கு) புறப்படச் செய்யும்படி எங்களை ஏவினார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் தொழுமிடத்தை விட்டு விலகி இருப்பார்கள். உம்மு அதிய்யா(ரலி) நூல்: புகாரி 974

நோன்புப் பெருநாளிலும்ஹஜ்ஜுப் பெருநாளிலும் பாங்கு சொல்லப்பட்டதில்லை. அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: புகாரி 960

(
ஈதுல்)ஃபித்ருவிலும், (ஈதுல்)அள்ஹாவிலும் நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் ருகூவின் தக்பீர் நீங்கலாக (இரண்டு ரக்அத்களிலும் கிராஅத்துக்கு முன்) ஏழு-ஐந்து தக்பீர்களை கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: ஸஹீஹ் அபூதாவுத் 1043

நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். 'யார் நமது தொழுகையைத் தொழுதுநாம் குர்பானி கொடுப்பது போல் கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி கொடுத் தவராவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர். என்று குறிப்பிட்டார்கள். பரா பின் ஆஸிப்(ரலி) நூல்: புகாரி 955
 
பெருநாள் வந்து விட்டால் நபி(ஸல்) அவர்கள் (போவதற்கும்,வருவதற்கும்) பாதைகளை மாற்றிக் கொள்வார்கள். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: புகாரி 986

பெருநாட்களையும்திருநாட்களையும் வீணான கேளிக்கைகளிலும் ஆடம்பரங்களிலும் திளைத்துக் கழிக்கின்ற உலகோர்க்கு மத்தியில் அந்த தினங்களையும் இறைவனுக்கு உவப்பான வழிகளில் கண்ணியப்படுத்தச் செய்யும் மார்க்கத்தின் அம்சங்களை கடைப்பிடிப்போமாக! அல்லாஹ் கருணையாளன்!

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!