Saturday, January 3, 2009

ஆட்டை கழுவி,ஆக்கிய ஊர்!!!

சலீம் நானாவுக்கு இதபத்தி தெரிஞ்சுக்கனும்னு ரொம்ப நாளா ஆச.என்னடா இது,வெளியூர்,கிளியூர் போய,(எதுனாச்சும் வேலையா)அங்க நம்மள அதிராம்பட்டினத்தான்னு தெரிஞ்சப்புறம், "அடடே,நீங்க ஆட்டையே கழுதை ஆக்கின ஊராசேன்னு"கேக்குராணுவ.ஒன்னும் புரியல"பெருமூச்சு விட்டார் நம்ம சலீம் நானா.

"என்ன ஒரே யோசனையா தெரியுது?கேட்ட பஷீர் காக்காவிடம்,விஷயத்தை சொல்லி,காரணம் கேட்டார்.

"ஆமா சலீமு,எனக்கும் இந்த அனுபவம் இருக்கு.நம்ம தம்பி அருட்புதல்வனும் அதிரை எக்ச்பிரசில இத பத்தி சொல்லிஇருக்கு.அதுவும் ஒரு காரணம் தான்,அதே மாதிரி இன்னொரு காரணத்தை நம்ம கட்ட புள்ளையாரு மவன் அப்துர் ரசாக் சொன்னது ஞாபகம் வருது,அது என்னான்னா,அந்த காலத்துல சுத்தம்,பத்தம் கம்மி.அது நேர் ஆபோசிட்டு நம்ம அதிராம்பட்டினம்,சுத்ததுலையும் படு சுத்தம்.அதே மாதிரி இறைச்சி கடை போய,ஆடு வாங்கி வந்தாங்கன்னா,அந்த ஆட்டை (கறியை)நல்லா சுத்தமா கழுவி,ஆக்கி சாப்பிடுவாங்களாம்.அதையே "ஆட்டை கழுவி,ஆக்கிய ஊர்"என்பதுதான் பின்னாடி மருவி "ஆட்டை கழுதை ஆக்கிய ஊர் "அப்படின்னு ஆகிப் போச்சு".பஷீர் காக்கா நயமாக சொல்லி முடித்தார்.

"அட சக்கன்னானா,இப்படி ஒன்னு இருக்கிறது தெரியாம போச்சே,இனிமே யாராச்சும் நம்மள பாத்துக் கேக்கட்டும்,ஆட்டைக் கழுவி ஆக்கித் திண்ட மேட்டர சொல்லி அசத்திர வேண்டியதுதான்"சலீம் நானா நிம்மதி ஆனார்

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!