Sunday, April 13, 2014

PJ என்ன சொல்லப் போகிறார்? எதிர் பார்க்கும் தமிழகம்!

தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவுக்கு எதிராகப் பேசாததால் அதிமுவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தவ்ஹீத் ஜமாஅத் அறித்துள்ளது. 

தவ்ஹீத் ஜமாஅத் கட்சியின் உயர்நிலைக்குழு சென்னையில் சனிக்கிழமையன்று கூடியது. இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தியபிறகு, அதிமுகவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மாநில தலைவர் PJ கூறுகையில், ‘‘நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்து ஆதரவு அளித்து வந்தோம். ஆனால், தற்போது தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வரும் முதல்வர் ஜெயலலிதா, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் மீது புகார் கூறி பேசி வருகிறார். ஆனால், பாஜக பற்றி இதுவரையில் எதுவும் பேசவில்லை. எனவே, எங்களின் ஆதரவை வாபஸ் பெறுகிறோம். அடுத்து என்ன நிலைப்பாடு எடுப்பது என்பது குறித்து வரும் திங்கள் கிழமை ஆலோசித்து அறிவிப்போம்’’ என்றார். 


இந்த திடீர் அறிவிப்பால் முதல்வர் ஜெயலலிதா அரண்டு போய்,இப்போது பீ ஜே பீ பற்றியும் வாய் திறக்க ஆரம்பித்துள்ளார்.ஆனாலும்,கர்நாடக பாஜக பற்றி மட்டுமே குறை கூறியுள்ளார்,மோடி பற்றியோ அகில இந்திய அளவிலோ பாஜக பற்றி வாய் திறக்கவில்லை.எனவே,இது முஸ்லிம்களை ஏமாற்றும் தந்திரம் என்பதில் சந்தேகமில்லை.எனவே,த த ஜ தலைவர் பீ ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மீண்டும் அதிமுகவிற்கு ஆதரவளித்து விடாமல்,முஸ்லிம்கள் அனைவரது ஓட்டுக்களும் சிதறி விடாமல் திமுக விற்கு வாக்களிக்க வேண்டுமென்பதே முஸ்லிம்களின் விருப்பம்.





No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!