Thursday, April 10, 2014

மோடிக்கு தூக்கு தண்டனை

நீதிமன்றங்களும், புலனாய்வு அமைப்புகளும் குஜராத் கலவரம் குறித்து முறையான, நேர்மையான விசாரணையை மேற்கொண்டிருந்தால் நரேந்திரமேடிக்கு தூக்குத்தண்டனை கிடைத்திருக்கும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ.,

திருச்சி தொகுதி சிபிஎம் வேட்பாளர் எஸ்.ஸ்ரீதருக்கு ஆதரவாக புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர், கிள்ளுக்கோட்டை, அண்டக்குளம், ஆதனக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமையன்று பிரச்சாரம் செய்த அவர் பேசியதாவது:

மத்திய அரசு கடந்த 10 வருடங்களில் 100 முறை பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக வரலாறுகாணாத விலைவாசி உயர்வு ஏற்பட்டது. உரத்திற்கான மானியத்தை வெட்டிய மத்திய அரசு பெரு முதலாளரிகளுக்கு மட்டும் 21 லட்சம் கோடி ரூபாயை வரிச்சலுகையாக வாரி வழங்கியது. இதில் வெறும் 5 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்து காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்குத் தந்திருந்தால் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பஞ்சமே வந்திருக்காது. கருப்புப் பணமாக வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருந்த 70 லட்சம் கோடி ரூபாயை மீட்டிருந்தால் இந்தியா வல்லரசாகியிருக்கும்.
 கடந்த 14 வருடங்களாக தொடர்ந்து மத்திய அரசில் அங்கம் வகித்து பாஜக, காங்கிரஸ் கூட்டணி அரசுகள் கொண்டுவந்த மக்கள் விரோத நடவடிக்ககைகளுக்கு துணைபோன கட்சிதான் திமுக. அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் நீலகிரியில் ஆ.ராசாவை அருகில் வைத்துக் கொண்டு ஊழலை ஒழிக்க உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுங்கள் என்கிறார்.
குஜராத் படுகொலையில் சம்மந்தப்பட்ட 32 உயர்போலீஸ் அதிகாரிகள் இன்னமும் சிறையில் இருக்கின்றனர். மோடி அரசில் பங்கேற்ற பெண் அமைச்சர் ஆயுள்தண்டனை கைதியாக இருக்கிறார். அந்த அரசுக்குத் தலைமை வகித்த மோடி பிரதமராக வரலாமா? நீதிமன்றங்களும், புலனாய்வுத்துறைகளும் முறையான விசாரனை மேற்கொண்டிருந்தால் மோடிக்கு தூக்குத்தண்டனை கிடைத்திருக்கும்.
பாஜகையோ, மோடியையோ ஒரு வார்த்தைகூட பேசாத ஜெயலலிதா, ஏற்கனவே செத்த மாட்டைப்போல இருக்கின்ற காங்கிரசைப் போட்டு அடி, அடியென்று அடிக்கிறார். பாஜக கூட்டணியில் உள்ள வைகோ, ராமதாஸ், விஜய்காந்த் போன்றவர்கள் ஜெயலலிதாவை பிரச்சாரத்தில் வறுத்து எடுக்கின்றனர். ஆனால் அந்த கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பிஜேபியினர் அதிமுகவை ஒருவார்த்தைகூட பேசாமல் அசடு வழிகின்றனர். இது அதிமுகவிற்கும் பிஜேபிக்கும் உள்ள கள்ள உறவைத்தானே காட்டுகிறது.
 சில ஆண்டுகளில் பாராளுமன்றத் தொகுதி வாரியாக மாவட்டங்களை பிரிக்கும் சட்டத்தை மத்திய அரசு இயற்ற இருக்கிறது. அப்படி வரும் பட்சத்தில் புதுக்கோட்டை மாவட்டமே காணாமல் போகும் சூழல் உருவாகும். புதுக்கோட்டை பாராளுமன்றத் தொகுதி பறிபோனதற்கு மத்தியிலும், மாநிலத்திலும் ஆண்ட கட்சிகளே காரணம். இழந்த தொகுதியை மீட்பதற்கு அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து சிபிஎம் வேட்பாளர் எஸ்.ஸ்ரீதரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனப் பேசினார்.
-    இரா.பகத்சிங்

 http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=119758

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!