Sunday, March 30, 2014

முஸ்லிம் லீக்கை தோற்கடிப்போம்

“முஸ்லீம்களுக்கு தொழுவது எப்படி கடமையோ, நோன்பு பிடிப்பது எப்படி கடமையோ, நபிகள் நாயகம் பெயரைக்கேட்டதும் ஸலவாத்து சொல்வது கடமையோ அது போன்று ஜன நாயக முற்போக்கு கூட்டனியை இந்த தேர்தலில் வெற்றி பெற செய்வது நமது பர்லான கடமை”

-முஸ்லீம் லீக் தலைவர் காதர் முஹைதீன்

தேர்தலையும்,நமக்கு இடப்பட்ட பர்லான கடமையையும் சம்பந்தமில்லாமல் முடிச்சு போட்டு,கிடைத்த ஒரு சீட்டுக்கு ,நா கூசாமல் இப்படி பேசும் முஸ்லிம் லீக்கை இன்ஷா அல்லாஹ் முஸ்லிம்களாகிய நாம் தோற்கடிப்பது நம் கடமை.

-
முஸ்லிம் பொது ஜனம்

Friday, March 28, 2014

கூழை கும்பிடு போடாத வேட்பாளர்!


மயிலாடுதுறை நாடாளுமன்ற ம.ம.க. வேட்பாளர் ஹைதர் அலி அவர்கள்  கூழை கும்பிடு போடும் மற்ற வேட்பாளர்களிலிருந்து மாறுபட்டு காணப்படுகிறார்.
காலில் விழுந்தும், கரத்தை பிடித்து கெஞ்சியும் வாக்குகள் சேகரிக்கும்  வேட்பாளர்களை பார்த்து பழகிய மக்களுக்கு, நெஞ்சில் கைவைத்து சலாம் கூறி ஹைதர் அலி அவர்கள் வாக்கு சேகரிப்பது  மயிலாடுதுறை தொகுதியில் உள்ள மக்களுக்கு வித்தியாசமாகவும். சுவாரஸ்யமாகவும் உள்ளது.
வெறும் ஏமாற்று கலாச்சாரத்தில் மக்களை மூழ்க வைத்து போலியாக நாடகமாடி தேர்தல் நேரத்தில் ஓட்டு வாங்கி கொண்டு வெற்றி பெற்றவுடன் மாய பிறவியாக மாறி மறைந்துபோகும் மனிதர்கள் மத்தியில், 
இஸ்லாமிய கோட்பாட்டின்படி இயங்கி, தன்நிலை மாறா மக்கள் பிரதிநிதியாக ஹைதர் அலி விளங்குவார், என்று இத்தொகுதி மக்கள் எதிர் பார்க்கின்றனர்.
 
http://adiraixpress.blogspot.com/2014/03/blog-post_27.html#.UzZjy6ItOSo

Thursday, March 27, 2014

முஸ்லிமாக மதம் மாறுகிறேன் - விஜய நகர கடைசி அரசர் ஸ்ரீரங்க ராயலு

விஜய நகர அரச சாம்ராஜ்ஜியத்தின் கடைசி அரசர் ஸ்ரீரங்க ராயலு பிஜப்பூர் காரர்கள் கர்நாடகத்தை வென்று தெற்கிலிருந்து முன்னேறி வருவதையும் கோல்கொண்டா தளபதிகள் வடக்கிலிருந்து முன்னேறி வருவதையும் கண்டு தன்னுடைய ராஜ்ஜியம் தனது கரங்களிலிருந்து நழவிக் கொண்டிருப்பதை அவர் உணர்ந்தார். எனவே தக்காண சுல்தான்களிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு அளிக்கும் படி வேண்டி ராமராவ் என்ற பிரதிநிதியை ஒளரங்கஜேப்பிடம் அனுப்பி வைத்தார். ஆனால் இதில் தலையிட ஒளரங்கஜேப் விரும்பவில்லை.

ரங்கராயலுக்கு போர் நெருக்கடிகள் இன்னும் அதிகமானபோது ஸ்ரீனிவாஸ் என்ற பிராமணத் தூதுவரை ஒளரங்கஜேப்பிடம் அனுப்பி வைத்தார். 'இரண்டரை கோடி ரூபாயும், இருநூறு யானைகளும், தன்னிடமுள்ள ஆபரணங்களையும் தருவதுடன் வருடாந்திர வரியைத் தொடர்ந்து கட்டிடவும் தனது ராஜ்ஜியத்தை முகலாய சாம்ராஜ்ஜியத்துடன் இணைத்து விட்டு பின் தனது பகுதியை ஒரு ஜாகீராகத் தனக்குத் திரும்பக் கொடுப்பதற்கும் சம்மதம்' என்று ஸ்ரீரங்க ராயலு தெரிவித்தார்.

மேலும் 'தானும் தனது உற்றார் உறவினர்களும் குடிமக்களும் முஸ்லிமாக மதம் மாறுவதற்கு சம்மதிப்பதாகவும்' சொல்லி அனுப்பியவர் ஸ்ரீரங்கராயலு.

“….the Raja promised tp turn Muslim with all his relatives and dependents!……”

உள்ளத்தில் மாற்றம் ஏற்படாமல் ஆட்சி போகிறதே என்ற பயத்தினால் இஸ்லாமாவதை தாம் விரும்பவில்லை என்று கூறிய ஒளரங்கஜேப் அந்த அரசரின் கோரிக்கையை நிராகரித்தார்.

Sir Jadunath Sarkar, History Of Aurangzib, Calcutta, 1912 vol. 1, Page 248, 249

இந்த சம்பவத்தைப் பற்றி சொல்லும் போது 'இந்தக் கோரிக்கையின் பெயரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை இந்தியாவில் முகலாயர்கால ஆட்சியின் பண்பைப்பற்றி நல்ல விளக்கத்தைத் தருகிறது.'என்கிறார் ஜாதுநாத் சர்க்கார்.

History Of Aurangzeb, Page 249.


http://suvanappiriyan.blogspot.com/2014/03/blog-post_5097.html

Monday, March 24, 2014

மதுரை விமான நிலைய கஸ்டம்சும்,திருடர்களும்.. அதிரை அமீன் வேதனைக் கடிதம்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

அரசியல் கட்சியினர், தேர்தல் அரசியல் அமைப்பினர்களின் கவனத்திற்கு
 
நடைபெறயிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி தாங்களெல்லாம் பரப்புரையில் மிகவும் பரபரப்பாக இருக்கின்ற இந்த நேரத்தில் எல்லோரும் ஒட்டுமொத்தமாக மறந்த வெளிநாட்டில் (வாழும் அல்ல) வேலை பார்க்கும் இந்தியர்கள் சார்பாக சில கோரிக்கைகள்...

வெளிநாட்டு இந்தியர்கள் என்போர் இருவகைபடுவர். ஒருவர் குடும்பம் குட்டிகளோடு வெளிநாட்டிலேயே நிரந்தரமாக தங்கி, ஒரு தலைமுறைக்குப்பின் இந்திய வம்சாவழியினர் என்ற அழைக்கப்படுபவர்கள். இன்னொரு வகையினரோ சுவற்றில் அடிக்கப்பட்ட பந்தாய் எந்நேரமும் இந்தியாவுக்குள் திரும்பி வருவோர், சுருக்கமாக சொல்வதென்றால் வளைகுடாவாசியினர். மிகச்சிலரைத் தவிர வளைகுடா வாழ்க்கையை யாரும் விரும்பி ஏற்கவில்லை அதிலும் சிறுபான்மையினர் அரசியல் அதிகாரமின்மை, மேற்படிப்பறிவு மறுத்தல், படித்தாலும் அரசு வேலை மறுத்தல், வெகுசிலருக்கு விட்டில்பூச்சி மோகம் என வலிய இந்த வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டவர்கள்.

எங்களில் மிகச்சாதாரண தொழிலாளியும் உண்டு, அரிய வாய்ப்பால் அறிவையும் உழைப்பையும் வெளிநாட்டினருக்காக வழங்கிக் கொண்டிருக்கும் உயர்நிலையோரும் உண்டு, அதாவது இந்தியா பயன்படுத்த தவறிய செல்வங்கள் நாங்கள். மேலும் நாங்கள் சம்பளத்திற்கு மேல் இந்திய அரசு ஊழியர்கள் போல கிம்பளத்தை கனவிலும் காண முடியாதவர்கள். எந்த நேரமும் சவூதியின் 'நிதாகத்' போன்ற சட்டங்களால் பாதிக்கப்பட இருப்பவர்கள், இவையல்லாமல் ஈராக் குவைத்தை ஆக்கிரத்தபோது உலகம் கண்டதே ஓர் காட்சி! பாலைவெளிகளில் உயிரை பிடித்துக் கொண்டு ஒடிவந்தோமே அதைபோன்ற நிலையை இன்னொரு முறை சந்திக்க மாட்டோம் என்பதற்கு எத்தகைய உத்தரவாதமும் இல்லாதவர்கள், இவற்றிற்கெல்லாம் மேல் எத்தனை கோடியை நீங்கள் கொட்டிக் கொடுத்தாலும் ஈடாகாத, வெளிநாட்டில் தனிமையில் தொலைந்த எங்களின் இளமை. அதேவேளை எங்களுக்கு வாழ்க்கைபட்டதற்கு தண்டனையாய் எங்கள் மனைவிமார்களோ கணவனிருந்தும் விதவைகள் போல் வாழும் ஒர் அவல வாழ்க்கை, போனில் மட்டுமே பொங்கும் அப்பன் பிள்ளை பாசம்.

இத்தனை தியாகத்திற்கு இடையே தவறாமல் நாங்கள் எங்கள் தேசத்திற்கு ஈட்டித் தரும் அந்நிய செலாவணி எனும் பெரும் பொருளாதாரம் ஆனால் கைமாறாக???

1.    தமிழக விமான நிலையங்களில் குறிப்பாக, வளர வேண்டிய மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கினால் கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு நாங்கள் திருடர்களாய் மட்டுமே தெரிகிறோம், நாய்கள் கடித்துக் குதறுவதுபோல் எங்கள் பொருட்களை சின்னாபின்னப்படுத்துகிறார்கள். வீட்டுத்தேவைக்கு கொண்டு வரும் பொருட்களுக்குத் தான் எத்தனை சோதனைகள்?, கட்டுப்பாடுகள்? இதை தடுத்து நிறுத்தப்போவது யார்?

2.    திருவனந்தபுரத்திற்கு வரும் தமிழக விமான பயணிகளை குதறும் கஸ்டம்ஸ், மலையாளிகளை மட்டும் மனிதர்களாய் மதிக்கின்றது. இந்த இன மாச்சரியங்களை களைந்து அனைவரையும் இந்தியர்களாக நடத்த உழைக்கப்போவது யார்?

3.    அபுதாபியில் இருந்து திருச்சிக்கும் சென்னைக்கு மிக லாபத்துடனும், முழுமையான பயணிகளுடனும் இயக்கப்பட்டுவந்த ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானங்கள் பல, மலேசிய விமானத்திற்கு முன்பே மர்மமாய் காணாமல் போய்விட்டன, அவைகளை இன்றுவரை மீட்டுத்தரவோ, பேசவோ ஆளில்லை. இனியாவது எங்களுக்காக மீண்டும் இயக்கிட பாடுபடுவீர்களா?

4.    துபையிலிருந்து திருச்சிக்கு இயக்கப்பட்ட ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானங்களும் தற்போது ஒவ்வொன்றாய் மாயமாக தொடங்கியுள்ளது. இவை முழுமையாய் மறைந்து தனியார் விமானங்களும் அண்டை நாட்டு விமானங்களும் அதிக பயண கட்டணத்துடன் எங்களை அச்சுறுத்துமுன் தடுத்து நிறுத்தப்போவது யார்?

5.    திருச்சியிலிருந்து சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளுக்கு பட்ஜெட் கட்டண தனியார் மற்றும் அரசு விமான சேவைகள் அதிகரித்து வரும் நிலையில், வளைகுடா நாடுகளிலிருந்தும் திருச்சி மற்றும் மதுரை விமான நிலையங்களை இணைத்து நேரடி பட்ஜெட் மற்றும் ஏர் இந்தியா விமான சேவைகளை துவங்கலாமே, இத்திட்டத்திற்கு மணி கட்டப்போவது யாரோ?

6.    சொந்த பந்தங்களை காண வருடத்திற்கு ஒரு மாதமோ அல்லது இரு வருடத்திற்கு இரு மாதமோ விடுமுறையை பிச்சையாய் பெற்று வரும் நாங்கள் முன்பெல்லாம் அனைத்து நிறுவன விமானத்திலும் 40 கிலோ பயண பொதியை (+Cabin Baggage) கொண்டு வர அனுமதிக்கப் பெற்றிருந்தோம். அதிக பொதிக்கு ஆசைப்பட்டே உருப்படாத நிர்வாகம், குறித்த நேர புறப்பாடு உத்திரவாதமில்லாத சர்வீஸ் என தெரிந்தும் ஏர் இந்தியா (எக்ஸ்பிரஸ் அல்ல) விமானத்தில் சென்னைக்கும், இதர நகரங்களுக்கும் பயணித்தோம் இப்போது அதிலும் கை வைத்து 10 கிலோவை குறைத்து விட்டார்கள், 40 கிலோ பொதியை (+Cabin Baggage) மீண்டும் அனுமதித்தால் நாங்களும் பயன்பெறுவோம் அதன் மூலம் தொடர் நஷ்டத்தில் இயங்கிவரும் ஏர் இந்தியாவுக்கும் வருமானம் தானே? இந்த உண்மையை விமானத்துறையிடம் எங்களுக்காக யார் எடுத்துச் சொல்ல போகிறீர்கள்?

7.    வளைகுடா இந்திய தொழிலாளிக்கும் எத்தனையோ பிரச்சனைகள் தான் பணிபுரியும் கம்பெனியுடன் ஏற்படத்தான் செய்கின்றன ஆனால் அண்டை நாடான இலங்கை தூதரகத்திற்கும், தன் பிரஜைகளின் உரிமைகளுக்காக எந்நேரமும் வரிந்து கட்டும் பிலிப்பைன்ஸ் தூதரகத்திற்கும் இருக்கும் அக்கரையில் நம் தூதரகத்தின் அக்கறை எத்தனை சதவிகிதம் என சொல்ல முடியுமா? மலையாளிகளின் வெளியுறவுத் துறை இந்திய அரசின் வெளியுறவு துறையாக மாற பாடுபட போவது யார்?

8.    வளைகுடா தொழிலாளர்கள் சந்திக்கும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பிரச்சனைகளை கேட்டு, அவற்றிற்கேற்றவாறு உதவிட வளைகுடா நாடுகளின் விடுமுறை நாட்களான வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இந்திய தூதரகம் சார்பாக சிறப்பு முகாம்களை தொடாந்து வாரம் ஒரு முறையோ அல்லது இரு வாரத்திற்கு ஒரு முறையோ நடத்தினால் எங்களுடைய பல்வேறு பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு கிட்டுமே, உள்நாட்டில் ஆண்களில்லா பல குடும்பங்கள் பல்வகை கிரிமினல்கள், ஆக்கிரமிப்பாளர்களின் தொந்தரவிலிருந்து தப்பிக்க, எங்களின் உணர்வுகளை புரிந்து உதவப்போவது யார்?

9.    வளைகுடாவிலிருந்து நாங்கள் விரட்டி அடிக்கப்பட்டால் அல்லது நாங்களாகவே முடித்துக்கொண்டு வந்தாலோ நாங்கள் இந்தியதன்மையை புரிந்து காலூன்றவே பல வருடங்கள் ஓடிவிடும், எங்களுக்கு உதவிட வட்டியில்லா கடன், மானியம், வாரியம் போன்றவற்றை நிறுவிட சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் முயற்சிக்கலாமே? எங்களுக்கு உதவ யாருக்கு இந்த நல்ல மனம் இருக்கிறது, செயலில் காட்டுவீர்களா?

10.    இது தனியார் டிவி சேனல்களுக்கு: ஷேர், ஸ்டாக் மார்க்கெட், ஆன்லைன் வர்த்தகம், கம்மாடிட்டி, வருமானவரி, இன்ஷுரன்ஸ் என நிபுணர்களை கொண்டு எத்தனையோ ஆலோசனைகளை வழங்கும் தனியார் சேனல்களே, இரவு நேரத்தில் எங்களின் வெளிநாட்டு உரிமைகள் பற்றியும், வெளியுறவு துறை பற்றியும், தூதரகத்தின் பணிகள் பற்றியும், கஸ்டம்ஸ், இமிக்கிரேஷன் போன்றவை பற்றியும் வெளிநாட்டில் உழைக்கும் இந்தியர்கள் பற்றி அவ்வப்போது வரும் சட்டங்கள் மற்றும் திருத்தங்கள் பற்றியும் தமிழில் ஆலோசணை வழங்க முன்வரலாமே, குறைந்தபட்சம் வாரம் அல்லது மாதம் ஒருமுறையாவது வருவீர்களா?

இறுதியாக ஒன்றை கூறி நிறைவு செய்கின்றோம், நாங்கள் யாரும் தனி ஆட்கள் அல்ல மாறாக நாங்கள் சொன்னால் மதித்து கேட்கக்கூடிய, மதுவுக்கோ பணத்திற்கோ மயங்காத குடும்ப வாக்காளர்கள் என்ற ஜன சமுத்திரம் எங்கள் பின்னால் உள்ளதை புரிந்து கொண்டு வெளிநாட்டில் வேலை பார்க்கும் எங்களின் குறைகளையும் களைய முன் வருவீர்கள் என்ற நல்லெண்ணத்துடன் இப்போதைக்கு இத்துடன் நிறைவு செய்கின்றோம்.
 
வளைகுடாவில் பணியாற்றும் இந்தியர்கள் சார்பாக
அபுதாபியிலிருந்து
அதிரை அமீன்

 http://aimuaeadirai.blogspot.com/

Thursday, March 20, 2014

முகேஷ் அம்பானி வக்ப் நிலம் அபகரிப்பு

வக்ஃப் நிலத்தில் கனவு இல்லம் கட்டியதாக பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மீது விசாரணை வேண்டி முஸ்லிமே ஹிந்த் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2002-ஆம் ஆண்டு கரீம்பாய் இப்ராஹீம் கோஜா என்ற அநாதை நிலையத்திற்கு சொந்தமான நிலம் 21 கோடி ரூபாய்க்கு அம்பானிக்கு சொந்தமான ஆண்டிலியா கமர்சியல் ப்ரைவட் லிமிடடிற்கு அவர்கள் விற்றுள்ளனர். நிலத்தின் அன்றைய சந்தை மதிப்பு 105 கோடி ரூபாய் ஆகும்.
அப்போது அப்போதைய மஹராஷ்ட்ரா வக்ஃப் துறை அமைச்சர் நவாப் மாலிக் இந்த விற்பனையை எதிர்த்தார்.இதனைத்தொடர்ந்து இந்நிலத்தை விற்பனைச் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
மேலும் கடந்த 2003-ஆம் ஆண்டு வக்ஃபு போர்ட் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதற்கிடையே வக்ஃபு போர்டு அம்பானியிடம் 16 லட்சரூபாய் பெற்றுக்கொண்டு புகாரை வாபஸ் பெற்றுள்ளது.
இதனை அடுத்து வக்ஃபு போர்டு சொத்து அபகரிப்பில் தொடர்புடைய முகேஷ் அம்பானி, மற்றும் அரசு அதிகாரிகள் அப்போதைய வக்ஃபு அமைச்சர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முஸ்லிமே ஹிந்த் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Sunday, March 16, 2014

அதிரையில் பள்ளி வாசல்களுக்கு இடைஞ்சல் கொடுக்கும் காவல்துறை!உடனடி தீர்வு தேவை!!

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் காவல்துறை அனுமதி அளித்துள்ள இடங்களில் மட்டுமே  பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் செய்ய காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

பட்டுக்கோட்டை டிஎஸ்பி செல்லப்பாண்டியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர்  தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. 

அதன்படி அதிராம்பட்டினத்தில் பேருந்து நிலையம், தக்வா பள்ளிவாசல் அருகில் ஆகிய இடங்களில், தேர்தல் பிரசாரம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு டிஎஸ்பி செல்லப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட இரண்டு இடங்களிலும் பள்ளிவாசல்கள் அமைந்துள்ளன.இது சம்பந்தமாக இயக்கங்கள்,சங்கங்கள்,போது மக்கள் ஒன்று கூடி,ஆட்சேபம் செய்து,இடத்தை மாற்ற அரசுக்கும்,தேர்தல் ஆணையத்துக்கும்,காவல் துறைக்கும் நெருக்குதல் கொடுக்க வேண்டும்,அதற்கு அவர்கள் இசையவில்லை என்றால்,உடனடி போராட்டம் நடத்தியோ,நீதிமன்ற முறையீடு மூலமோ,அதிரை அனைத்து முஸ்லிம்களும் nota வுக்கு வாக்களிக்கப் போகிறோம் என்று முடிவு செய்தோ நம் நியாயத்தை நிலை நாட்டலாம்.

இதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால்,அல் ஆமீன் பள்ளி,தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளி,தக்வா பள்ளிகளுக்கு வரும் தொழுகையாளிகளுக்கு மிக அவதியாகப் போய்விடும்.அதன் அருகே வசிக்கும் வீடுகளில் உள்ளவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு நிம்மதி போய்விடும்.

இதை அவசரமாக எடுத்து செய்வது நம் கடமை.



Friday, March 14, 2014

அவதூறு

24:4. எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.


145. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங் களைத் தவிர்த்திடுவீர்!" என்று கூறினார்கள். அப்போது, "அல்லாஹ்வின் தூதரே! அவை எவை?" என்று கேட்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, (சட்டபூர்வமான) உரிமையின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் தடை விதித்துள்ள உயிரைக் கொல்வது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, வட்டியை உண்பது, போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது, அப்பாவிகளான, இறை நம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்கள்மீது அவதூறு கூறுவது ஆகியவைதாம் (அந்தப் பெரும் பாவங்கள்)" என்று பதிலளித்தார்கள்.
Book :1

Thursday, March 13, 2014

நான்கு பேரின் தூக்கு உறுதி செய்தது நீதிமன்றம்

டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகள் 4 பேரின் தூக்குத் தண்டனையை உறுதி செய்து, டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.
நால்வரின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வந்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ரேவா கேத்ராபால், பிரதீபா ராணி தலைமையிலான அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.
முன்னதாக, டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பாலத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவி, சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் ஒரு குற்றவாளிக்கு, சிறார் என்ற அடிப்படையில் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது சிறார் நீதிமன்றம். ராம்சிங் என்ற முக்கிய குற்றவாளி, திகார் சிறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதனிடையே, மற்ற 4 குற்றவாளிகளான முகேஷ் (26), அக்‌ஷய் தாக்கூர் (28), பவன் குப்தா (19), சர்மா (20) ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதித்து, டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த 2013 செப்டம்பர் 13-ம் தேதி தீர்ப்பளித்தது.
இந்தத் தூக்கு தண்டனையை எதிர்த்து, குற்றவாளிகள் நால்வரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
இந்த நிலையில், குற்றவாளிகள் நால்வரின் தூக்குத் தண்டனையை உறுதி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. 

THE HINDU,TAMIL PUBLICATION

2:178. ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை; பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.


 2:179. நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம்.

THE QURAN

Wednesday, March 12, 2014

இந்திய தூதரகத்தில் 70 பாஸ்போர்ட்கள் காணவில்லை,அமெரிக்க போலீஸ் தேடுதல் வேட்டை,அதிர்ச்சியில் இந்தியர்

அமெரிக்காவில் ஒரு தனியார் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 70 இந்தியர்களின் பாஸ்போர்ட்கள் காணமல் போய் உள்ளன. காணாமல் போன 70 இந்தியர்களின் பாஸ்போர்ட்டுகளை அந்நாட்டு போலீசார் தேடி வருகின்றனர். 
 
 
சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகம் பாஸ்போர்ட் "விசா" தொடர்பான பணிகளை தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்திருந்தது. அதில் 70 இந்தியர்களின் பாஸ்போர்ட்டுகள் கடந்த ஆண்டு டிசம்பரில் மாயமாகி விட்டன. அமெரிக்காவில் திருட்டுப் போன இந்திய பாஸ்போர்ட்கள் - 70 பேர் தவிப்பு அந்த நிறுவனம் அளித்த புகாரை அடுத்து அமெரிக்க போலீசார் பாஸ்போர்ட்டுகளை தேடி வருகின்றனர். காணாமல் போன பாஸ்போர்ட்டுகளை இந்திய தூதரக அலுவலகம் ரத்து செய்துள்ளது. எனவே அந்த பாஸ்போர்ட்டை வைத்து யாரும் இனி பயணிக்க முடியாது. 
 
ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பயணம் மேற்கொள்பவர் இந்த நாட்டைச் சேர்ந்தவர்தான் என்பதை தெரிவிக்கும் ஆதாரமாக பாஸ்போர்ட் உள்ளது. விசா ஒரு நாட்டைச் சேர்ந்தவர் இன்னொரு நாட்டிற்கு செல்லும் வேலைக்கான அனுமதி அல்லது ஒப்புதல் சான்றாக விளங்குகிறது. 70 இந்தியர்களின் பாஸ்போர்ட்கள் அமெரிக்காவில் காணமல் போய் உள்ளது அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே அச்சத்தை உண்டாக்கி உள்ளது.

Read more at: http://tamil.oneindia.in/news/international/70-indian-passports-stolen-from-san-francisco-report-195421.html

Tuesday, March 11, 2014

கீழ் தாடையில் ஒரு குத்து,கிழிந்தது பிடரி

நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கி, 'இன்றிரவு உங்களில் யாரும் கனவு கண்டீர்களா?' என்று கேட்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். எவரேனும் கனவு கண்டு அதைக் கூறினால், 'அல்லாஹ் நாடியது நடக்கும்' எனக் கூறுவார்கள்.

இவ்வாறே ஒரு நாள், 'உங்களில் யாரும் இன்றிரவு கனவு கண்டீர்களா?' என்று கேட்டதும் நாங்கள் இல்லை என்றோம். அவர்கள், 'நான் இன்றிரவு ஒரு கனவு கண்டேன்; அதில் இருவர் என்னிடம் வந்து என்னுடைய கைகளைப் பிடித்து என்னைப் புனித பூமியொன்றுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே ஒருவர் உட்கார்ந்திருந்தார். நின்றிருந்த இன்னொருவரின் கையில் இரும்பாலான கொக்கிகள் இருந்தன. அவர் அதைக்கொண்டு உட்கார்ந்திருப்பவரின் கீழ்த்தாடையின் ஒருபுறம் குத்த அது அவரின் பிடரி வழியாக வெளியேறியது. இப்படியே தாடையின் இன்னொரு புறமும் செய்தார். இதற்குள் தாடையின் முதற் பகுதி ஒழுங்காகி விட்டது. பின்பு இது குத்தப்பட்டதும் அது பழைய நிலையை அடைந்தது. உடனே நான் இது யார் என்று கேட்டேன்... அவர் பெரும் பொய்யர். அவர் பொய் பேச அது பலர் வழியயாக உலகம் முழுவதையும் அடையும். நீர் பார்த்த அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை  கொடுக்கப்படும்...1386. ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவித்தார்.

Monday, March 10, 2014

இவர்தான் பீ.ஜைனுல் ஆபிதீன் ???


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹ்) இந்த பதிவை எல்லா சகோதரர்களும் முழுவதுமாக நிச்சயம் படிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
 

மேலும் இந்த சம்பவத்தில் ஒரு வார்த்தை கூட மிகைபடுத்தி எழுதவில்லை என்று அல்லாஹுவின் மீது ஆணையிட்டு கூறிக்கொள்கிறேன். 
 

இன்று தோஹாவில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற போது"என்னுடைய மாமா சென்னையில் இருந்து உம்ரா செய்வதற்கு வந்திருக்கிறார்" என்று ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார்.அவர் பெயர் ரபியுல்லாஹ்.சுமார் 70 வயது மதிக்கத்தக்க அந்த சகோதரர் உருது மொழியை தாய்மொழியாக கொண்டவர்.அவரிடம் மார்க்க விஷயங்களை பற்றி பேசிக்கொண்டிருதந்த போது விஷயம் ஊரில் நடக்கும் ஏகத்துவ பிரசாரங்களை பற்றி வந்தது.
 

அப்போது அவர் "நான் நீண்ட காலமாக தாவா பணிகளை மேற்கொண்டு வருகிறேன். "1984 காலகட்டங்களில் சென்னை பூந்தமல்லியில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம்.அதில் யாரை உரையாற்ற அழைப்பது என்று ஆலோசித்தப்போது பிஜே என்ற இமாம் ஒருவர் தொண்டி என்ற ஊரில் இருக்கிறார்.நல்ல பேச்சாற்றல் உள்ளவர் அவரை அழைக்கலாம் என்று சிலர் ஆலோசனை சொன்னார்கள்.
 

அவரிடம் டெலிபொன் வசதி இல்லாத காரணத்தால் நேரில் சென்று அழைப்பதற்காக என்னை நியமித்தனர்.என்னிடம் அவருடைய வீட்டை விசாரிக்கும் போது அவருடைய தந்தை மளிகை கடை வைத்திருக்கிறார். அவரை காண வேண்டும் என்று விசாரிக்குமாறு அறிவுறுத்த பட்டது.
 

ஏனென்றால் பிஜே விற்கு அந்த அளவு எதிர்ப்பிருந்த காலகட்டம் அது. நானும் தொண்டியில் பஸ்விட்டு இறங்கி அடுத்துள்ள கடையில் சென்று விசாரித்தேன்.கடைக்காரருக்கு ஆரம்பத்தில் யாரென்று புரியவில்லை.பின்னர் நான் பிஜேவை பற்றி சொன்னபோது "ஓ கிறுக்கனுடைய வீடா?அப்படி தெளிவாக சொல்லுங்கள் என்று எனக்கு வழி காண்பித்தார்.நான் அவருடைய வீட்டை கண்டுபிடித்து விட்டேன்.சிறிய குடிசை வீடு.வாசலில் கதவிற்கு பதிலாக துணியை மறைப்பாக தொங்க விட்டிருந்தனர்.வாசலில் அவருடைய தந்தை என்னை கண்டதும் என்னவிஷயம் என்று வினவினார்.

 நான் வந்த விஷயத்தை சொன்னதும் "ஏனப்பா அவன் உயிரோட இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா?டைபாய்டு ஜுரம் வந்து சாககிடக்கிறான் என்புள்ளை.தயவு செய்து அவனை எங்கேயும் கூப்பிடாதீர்கள்"என்று கோபப்பட்டார்.

இதை கேட்டு ரூமில் படுத்து கிடந்த பிஜே யாரு அத்தா அது"அவரை உள்ளே வரசொல்லுங்கள் என்று சொன்னதும் நான் உள்ளே சென்றேன் ஒரு சிறிய அறையில் அவர் சோர்வாக படுத்து கிடந்தார்.அவரை பார்த்ததும் சலாம் சொல்லிவிட்டு நான் வந்த விஷயத்தை சொன்னேன்.ஆனால் தற்போது உள்ள நிலைமையில் தங்களால் வரமுடியாதல்லவா?என்று கூறி வருத்தப்பட்டேன்,அதற்க்கு அவர் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை.நான் கண்டிப்பாக வருவேன் எனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் என்னோடு மார்க்கப்பணிகள் முடிந்துவிட போவதில்லை.என்னை விட திறமையான ஆலிம்கள் நிறையப்பேர் உள்ளனர் என்றார்.

சரி என்று டாக்ட்டரை பார்க்க இருவரும் கிளம்பினோம்.டாக்டர் பரிசோதித்து விட்டு 104 டிகிரி விஷ காய்ச்சல் உள்ளது.அதனால் பயணம் செய்வது நல்லது இல்லை என்று அறிவுறுத்தினார்.ஆனால் பிஜேவோ நிச்சயம் போகவேண்டும் ஏதாவது செய்யுங்கள் என்று டாக்டரிடம் சொன்னார்.டாக்டர், அதற்க்கு மேல் உங்கள் இஷ்டம் என்று சொல்லிவிட்டு ஒரு ஊசி போட்டு விட்டு மாத்திரை கொடுத்து 3 மணிநேரம் நன்றாக தூங்கிவிட்டு பயணம் செய்யுங்கள் என்றார்.நாங்கள் வீட்டுக்கு வந்ததும் பிஜேவின் தாய் எங்களுக்கு டீயும் பண்ணும் சாப்பிடதந்தார்கள். சாப்பாடு முடிந்ததும் பிஜே என்னிடம் "பாய் நீங்களும் சோர்வாக இருப்பீர்கள்.என்னுடைய அருகில் படுத்து கொள்ளுங்கள்" என்றார்.

இருவரும் உறங்கிவிட்டு லுஹருடைய பாங்கு சத்தம் கேட்டு எழுந்தோம்.பிஜே எழுந்ததும் மலர்ச்சியுடன் காணப்பட்டார்.காய்ச்சல் குறைந்துள்ளதாகவும் என்னிடம் கூறினார்.லுஹர் தொழுது விட்டு புறப்பட தயாரானோம்.தொண்டி_எழும்பூர் பஸ்ஸில் ஏறினோம்.டிக்கெட் எடுக்க நான் பணம் எடுத்த போது அவர் "பாய் நான் எடுக்கிறேன் என்றார்"அதற்க்கு நான் இது என்னுடைய பணம் இல்லை.ஜமாஅத் பணம்.நம்முடைய செலவிற்கு தந்தது என்றேன்.அதற்க்கு அவர் அப்படியானால் நீங்கள் உங்கள் டிக்கெட் எடுத்துகொள்ளுங்கள் நான் என்னுடையதை எடுத்துகொள்கிறேன்"என்றார்.

நான் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்க்க வில்லை.பின்னர் மறக்க விஷயங்களை பற்றி பேசி கொண்டு எழும்பூரை அடைந்தோம்.அன்றய பூந்தமல்லி சொற்ப்போழிவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பிஜேவின் உரையும் மிக சிறப்பாக அமைந்தது. அன்றிலிர்ந்து சுமார் 30 வருடமாக நானும் பிஜேவும் நல்ல நண்பர்களாக உள்ளோம்.பழகுவதற்கு மிகவும் எளிமையானவர்.முடிவுகள் எடுப்பதில் யாருக்கும் வளைந்து கொடுக்காதவர் என்று தன் நண்பனை பற்றி பெருமையாக என்னிடம் சொன்னார்.
 

கேட்டு கொண்டிருந்த எனக்கு பிஜே மீது உள்ள மரியாதை கூடியது என்றே சொல்லலாம்.இதன் மூலம் இஸ்லாமிய சகோததர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒருவர் மீது அவதூறு சொல்லும் முன்பு ஆயிரம் முறை யோசியுங்கள்.காரணம் நாம் சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும் நாளை மறுமையில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்."இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம்மீது என்றென்றும் உண்டாவட்டுமாக.....!!!!!





நன்றி அதிரை பாரூக்  


 


 http://peacetrain1.blogspot.com/2012/05/blog-post_08.html

Saturday, March 8, 2014

வெடிக்க கூடும் வானம்

(மனிதர்கள் செய்யும் பாவங்களின் காரணமாக) அவர்கள் மீது வானம் வெடித்து (விழுந்து) விடவும் கூடும். (அந்நேரத்தில்) மலக்குகளும் (பயந்து) தங்கள் இறைவனைப் புகழ்ந்து துதிசெய்து, பூமியில் உள்ளவர்க(ளின் குற்றங்க)ளை மன்னிக்குமாறு கோருவார்கள். (மனிதர்கள் பாவத்திலிருந்து விலகி மன்னிப்பைக் கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், மிக கிருபை யுடையவனாகவும் இருக்கின்றான் என்பதை (நபியே! நீங்கள்) அறிந்து கொள்ளுங்கள்.

THE QURAN

Sunday, March 2, 2014

குஜராத் கலவரம் தொடர்பான அமெரிக்க நிலைப் பாட்டில் மாற்றம் இல்லை, அமெரிக்கா மோடிக்கு மூக்குடைப்பு

குஜராத் கலவரம் தொடர்பான அமெரிக்க கொள்கையில் மாற்ற மில்லை என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாஜகவின் பிரதமர் வேட்பா ளராக மோடி அறிவிக்கப்பட் டுள்ள நிலையில், 9 ஆண்டுகள் புறக்கணிப்புக்குப் பின் இந்தியா வுக்கான அமெரிக்கத் தூதர் நான்சி பாவல் அண்மையில் அவரைச் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில் 2013-ம் ஆண்டுக்கான மனித உரிமைகள் அறிக்கையை அமெரிக்கா அண்மையில் வெளியிட்டது. அந்த அறிக்கையில் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற மோச மான சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன. ஆனால் அதில் நரேந்திர மோடியின் பெயர் இடம்பெறவில்லை.
இதைத் தொடர்ந்து நரேந்திர மோடி மீது அமெரிக்கா இப் போது மென்மையான போக்கை கடைப்பிடிப்பதாக பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
குஜராத் கலவரம் தொடர்பான அமெரிக்க நிலைப் பாட்டில் மாற்றம் இல்லை. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அமெரிக்க தூதர் நான்சி பாவல் சந்தித்துப் பேசி யதை உள்நோக்கத்தோடு பார்க் கக்கூடாது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடை பெறவுள்ளதால் முக்கிய தலை வர்களை நான்சி பாவல் சந்தித்துப் பேசி வருகிறார். மோடியுடனான வேறு எந்த முக்கியத்துவமும் இல்லை.
இந்தியாவுடனான உறவுக்கு அமெரிக்கா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. அந்த வகையில் அமெரிக்க வெளியுறவுத் துறை உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வால் விரைவில் இந்தியா செல்கிறார். அங்கு முக்கிய அரசியல் தலைவர்களை அவர் சந்தித்துப் பேச உள்ளார் என்றார்.

 http://tamil.thehindu.com/world/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article5741487.ece?homepage=true

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!