Sunday, March 16, 2014

அதிரையில் பள்ளி வாசல்களுக்கு இடைஞ்சல் கொடுக்கும் காவல்துறை!உடனடி தீர்வு தேவை!!

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் காவல்துறை அனுமதி அளித்துள்ள இடங்களில் மட்டுமே  பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் செய்ய காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

பட்டுக்கோட்டை டிஎஸ்பி செல்லப்பாண்டியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர்  தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. 

அதன்படி அதிராம்பட்டினத்தில் பேருந்து நிலையம், தக்வா பள்ளிவாசல் அருகில் ஆகிய இடங்களில், தேர்தல் பிரசாரம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு டிஎஸ்பி செல்லப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட இரண்டு இடங்களிலும் பள்ளிவாசல்கள் அமைந்துள்ளன.இது சம்பந்தமாக இயக்கங்கள்,சங்கங்கள்,போது மக்கள் ஒன்று கூடி,ஆட்சேபம் செய்து,இடத்தை மாற்ற அரசுக்கும்,தேர்தல் ஆணையத்துக்கும்,காவல் துறைக்கும் நெருக்குதல் கொடுக்க வேண்டும்,அதற்கு அவர்கள் இசையவில்லை என்றால்,உடனடி போராட்டம் நடத்தியோ,நீதிமன்ற முறையீடு மூலமோ,அதிரை அனைத்து முஸ்லிம்களும் nota வுக்கு வாக்களிக்கப் போகிறோம் என்று முடிவு செய்தோ நம் நியாயத்தை நிலை நாட்டலாம்.

இதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால்,அல் ஆமீன் பள்ளி,தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளி,தக்வா பள்ளிகளுக்கு வரும் தொழுகையாளிகளுக்கு மிக அவதியாகப் போய்விடும்.அதன் அருகே வசிக்கும் வீடுகளில் உள்ளவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு நிம்மதி போய்விடும்.

இதை அவசரமாக எடுத்து செய்வது நம் கடமை.



No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!