Sunday, March 2, 2014

குஜராத் கலவரம் தொடர்பான அமெரிக்க நிலைப் பாட்டில் மாற்றம் இல்லை, அமெரிக்கா மோடிக்கு மூக்குடைப்பு

குஜராத் கலவரம் தொடர்பான அமெரிக்க கொள்கையில் மாற்ற மில்லை என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாஜகவின் பிரதமர் வேட்பா ளராக மோடி அறிவிக்கப்பட் டுள்ள நிலையில், 9 ஆண்டுகள் புறக்கணிப்புக்குப் பின் இந்தியா வுக்கான அமெரிக்கத் தூதர் நான்சி பாவல் அண்மையில் அவரைச் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில் 2013-ம் ஆண்டுக்கான மனித உரிமைகள் அறிக்கையை அமெரிக்கா அண்மையில் வெளியிட்டது. அந்த அறிக்கையில் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற மோச மான சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன. ஆனால் அதில் நரேந்திர மோடியின் பெயர் இடம்பெறவில்லை.
இதைத் தொடர்ந்து நரேந்திர மோடி மீது அமெரிக்கா இப் போது மென்மையான போக்கை கடைப்பிடிப்பதாக பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
குஜராத் கலவரம் தொடர்பான அமெரிக்க நிலைப் பாட்டில் மாற்றம் இல்லை. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அமெரிக்க தூதர் நான்சி பாவல் சந்தித்துப் பேசி யதை உள்நோக்கத்தோடு பார்க் கக்கூடாது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடை பெறவுள்ளதால் முக்கிய தலை வர்களை நான்சி பாவல் சந்தித்துப் பேசி வருகிறார். மோடியுடனான வேறு எந்த முக்கியத்துவமும் இல்லை.
இந்தியாவுடனான உறவுக்கு அமெரிக்கா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. அந்த வகையில் அமெரிக்க வெளியுறவுத் துறை உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வால் விரைவில் இந்தியா செல்கிறார். அங்கு முக்கிய அரசியல் தலைவர்களை அவர் சந்தித்துப் பேச உள்ளார் என்றார்.

 http://tamil.thehindu.com/world/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article5741487.ece?homepage=true

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!