Thursday, March 13, 2014

நான்கு பேரின் தூக்கு உறுதி செய்தது நீதிமன்றம்

டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகள் 4 பேரின் தூக்குத் தண்டனையை உறுதி செய்து, டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.
நால்வரின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வந்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ரேவா கேத்ராபால், பிரதீபா ராணி தலைமையிலான அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.
முன்னதாக, டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பாலத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவி, சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் ஒரு குற்றவாளிக்கு, சிறார் என்ற அடிப்படையில் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது சிறார் நீதிமன்றம். ராம்சிங் என்ற முக்கிய குற்றவாளி, திகார் சிறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதனிடையே, மற்ற 4 குற்றவாளிகளான முகேஷ் (26), அக்‌ஷய் தாக்கூர் (28), பவன் குப்தா (19), சர்மா (20) ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதித்து, டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த 2013 செப்டம்பர் 13-ம் தேதி தீர்ப்பளித்தது.
இந்தத் தூக்கு தண்டனையை எதிர்த்து, குற்றவாளிகள் நால்வரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
இந்த நிலையில், குற்றவாளிகள் நால்வரின் தூக்குத் தண்டனையை உறுதி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. 

THE HINDU,TAMIL PUBLICATION

2:178. ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை; பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.


 2:179. நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம்.

THE QURAN

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!