Thursday, December 8, 2011

உலகத்திலேயே நம்பர் ஒன் (பொய் & பிராடு) பத்திரிக்கை


உலகத்திலேயே நம்பர் ஒன் (பொய் & பிராடு) பத்திரிக்கையான தினமலர் உண்(பொய்)மையின் உரைகல்லைக் கொண்டு பயங்கரமாக உரசியதால் பத்திரிக்கை தர்மம், நேர்மை போன்றவைகள் ஏற்கனவே அரைகுறையாக எரிந்து அழுகி நாறி போயிருந்த நிலையில் நாற்றம் அதிகமாகவே தன்னை முழுமையாக எரித்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது. இப்போது இருப்பது வெறும் பிணம் மட்டும் தான்.

மறுபடியும் இந்த தினமலர் என்ற தினபிணம் தனது நரித்தனத்தை காட்டியிருக்கிறது. எத்தனை முறை அம்பலப்பட்டாலும் இன்னும் நம்மை நம்பக்கூடியவர்கள் இருக்கிறார்கள் என்ற அசட்டு தைரியத்தில் தினமலருக்கே உரித்தான மட்டரகமான பணியில் 07/12/11 வியாழன் அன்று 

“தீ மிதித்து மொகரம் அனுசரிப்பு இந்துக்களும் பங்கேற்றதால் ஒற்றுமை”
என்ற வழக்கமான போஸ்ட் தந்திர உத்தியோடு ஒரு செய்தி. தலைப்பை பாருங்க என்ன ஒரு நரித்தனம் (செய்தி தலைப்பு போடுவதற்காகவே தனியாக ஸ்பெஷல் வகுப்பு எடுப்பார்கள் போல).இந்த செய்தியின் தலைப்பை மேலோட்டமாக படிப்பவர்களுக்கு இது சமய நல்லிணக்க செய்தி போன்று தெரியும் (அதுதான் தினமலரின் ஸ்பெஷாலிட்டி) ஆனால் செய்தியை ஊன்றி படித்தால் தினமலரின் அக்மார்க் சானக்கியத்தனம் புரியும். 

தினமலர் முன்னர் வெளியிட்ட செய்தி  


அனைவரின் கண்டனத்திற்கு பிறகு தினமலர் இரவோடு இரவாக   மாற்றப் பட்ட  செய்தி

மொகரம் பண்டிகையின் போது, முஸ்லிம் பள்ளி வாசல் முன் நடந்த தீமிதி நிகழ்ச்சியில் இந்துக்களும் கலந்து கொண்டனர்.ராயபுரத்தில் உள்ளது மஜித்த பர்குண்டா பள்ளி வாசல். இங்கு மொகரம் பண்டிகையை ஒட்டி அசேன் உசேன் தீமிதி திருவிழா நடைபெறும். பாத்திமா நாச்சியாரின் மகன்களான அசேன், உசேன் இருவரும் போரில் இறந்த செய்தி கேட்டு, பாத்திமா தீக்குளித்து இறந்தார். அவர் நினைவாக இந்த பள்ளி வாசலில் 183 வது ஆண்டாக தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 40க்கும் மேற்பட்டோர் முறைப்படி விரதம் இருந்து நேர்த்திக்கடனை செலுத்த தீ மிதித்தனர். இதில் 15 பேர் இந்துக்கள்.மொகரம் மாதத்தின் முதல் மூன்று நாள் தீ மிதி நிகழ்ச்சி நடத்துவதற்கான குழியை வெட்டுகின்றனர். ஐந்து நாள் வரை குழியைக் காய வைக்கின்றனர். ஒன்பதாம் நாள் நள்ளிரவுக்குப்பின் அதிகாலை 3 மணிக்கு தீ மிதி நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சியில் 10ம் நாள் மொகரம் பண்டிகை. அன்று தீ மிதிக்கும் குழியை மூடி நிகழ்ச்சி நிறைவு செய்கின்றனர்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதீபா கூறும் போது, ""தீமிதிக்கும் நிகழ்ச்சியில் ஆண்டு தோறும் கலந்து கொள்கிறேன். இந்துக்கள் பலர் கலந்து கொள்கின்றனர்,'' என்றார்.மண்ணடி, ஐஸ்ஹவுஸ், புளியந்தோப்பு, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் பள்ளி வாசல்கள் முன்பும் தீமிதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த செய்தியில் இந்துக்கள் கலந்து கொண்டதால் ஒற்றுமை என்று எழுதியிருக்கும் தலைப்பிற்குள்ளே கலந்து கொள்ளவில்லையென்றால் ஒற்றுமை கிடையாதா? என்ற எதிர் கேள்வி இயல்பாக வரும். ஒற்றுமையை ஏற்படுத்த எத்தனையோ வழிமுறைகள் இருக்க பண்டிகையில் கலந்துக் கொள்வது தான் ஒற்றுமை என்பது போல் உளறிக் கொட்டியிருக்கிறது.


அதற்கு அடுத்தபடியாக பாத்திமா நாச்சியாரின் மகன்களான அசேன், உசேன் இருவரும் போரில் இறந்த செய்தி கேட்டு, பாத்திமா தீக்குளித்து இறந்தார் என்று அசிங்கமாக வரலாற்றை திரித்து, முஸ்லிம்களின் உயிருக்கு மேல் மதிக்கக்கூடிய தலைவர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மகளை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற அவதூறை கை கூசாமல் எழுதுகிறது எவ்வளவு பெரிய அபாண்டம்.

தற்கொலை எந்த சூழலிலும் எந்த காரணத்திற்காகவும் செய்யக் கூடாது. வாழ்க்கையில் எதிர்த்து போராடியே ஆக வேண்டும் என்று போதித்த தலைவரின் மகளை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்கள் என்று புளுகியிருப்பது எதார்த்தமானது அல்ல.


வரலாற்று உண்மை என்ன?

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பாசத்துக்குரிய மகள் பாத்திமா (ரலி) அவர்கள் நபியவர்கள் இறந்த ஆறு மாதத்திற்கு பிறகு இயற்கையான முறையில் இறந்தார்கள்.அப்போது அவரது மகன்கள் ஹசன் (ரலி),ஹுசைன் (ரலி) இருவரும் சிறுவர்கள் (புகாரி 3903)

ஹிஜ்ரி வருடம் 11ஆம் ஆண்டு ரமளான் மாதம் 3ம் நாள் செவ்வாய் இரவு பாத்திமா (ரலி) மரணித்தார்கள்(நூல்:அல் இஸாபா 11583)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். அலீ (ரலி), ஃபழ்ல் (ரலி) ஆகியோர் கப்ரில் இறங்கி இரவில் அடக்கம் செய்தனர். (அல் இஸாபா 11583 பாகம் 2, பக்கம் 128)


பாத்திமா (ரலி) இறந்தது ஹிஜ்ரி 11ல் அவரது மகன் ஹுசைன் (ரலி) போரில் கொல்லப்பட்டது ஹிஜ்ரி 61-ல். கிட்டதட்ட 50 வருட இடைவெளி. கவனிக்கவும் இதுதான் தினமலர் செய்தி தரும் இலட்சணம்.

தற்கொலை செய்யக் கூடாது என்பதற்கான இஸ்லாமிய சட்டங்கள்.

உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளாதீர்கள்(குர்ஆன்2:195)

இதையும் அவசியம் கேளுங்கள், கேட்க்கச் செய்யுங்கள்.  இன்ஷாஅல்லாஹ்



No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!