Thursday, August 4, 2011

ஓர் சுயபரிசோதனை இழை


அன்புமிகு சகோதரசகோதரிகளே அஸ்ஸலாமு அலைக்கும்.

யாரேனும் இறைவனுக்கு அஞ்சி(யவண்ணம் செயல்படுவாரா)னால் இறைவன் அவருக்கு(ச் சிரமங்களிளிலிருந்து வெளியேறுவதற்கு) ஏதேனும் வழிவகையை ஏற்படுத்துவான். மேலும், அவர் நினைத்துப் பார்த்திராத வகையிலிருந்து அவருக்கு வாழ்வாதாரமும் வழங்குவான். யார் இறைவனையே முழுவதுஞ் சார்ந்திருகின்றாரோ அவருக்கு அல்லாஹ் போதுமானவன் 65:3

புனித ரமளான் மூலம் பல்வேறு படிப்பினைகளை வல்ல அல்லாஹ் நமக்கு தந்துள்ளான். பொறுமையும், வீவேகமும் அதிகமாக பயிற்சி தரும் மாதம் இது. மனிதர்கள் சிறுவிசங்களுக்கு கூட பொறுமை இழந்து காணப்படுவதை தினமும் நாம் பார்ப்போம். ஆனால் ரமளானின் மகத்துவத்தால் இதுபோன்றவைகளிலிருந்து விடுப்பட்டு இருப்போம். இந்த ஒரு மாதத்தில் எடுக்கும் பயிற்சிகள் வருடம் முழுவதும் நம் அனைவர்களுக்கும் பயன்தர கூடியது மட்டுமல்ல நம் வாழ்நாட்கள் முழுவதுமே ஒர் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்து காட்டி மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வாய்ப்புள்ளது.

வாழ்க்கை என்பது பல சுற்றுச சூழ்நிலைகளை உட்பட்டு செல்லும் அதில் எத்தனையோ இன்பம், துன்பங்களை கடந்து செல்லுவோம். இறைவன் தரும் கஷ்ட,நஷ்டங்கள் மற்றும் இன்பமான நன்மைகளையும் எந்த விதத்திலும் இறைநம்பிக்கைக்கு குறைவின்றி அதை ஏற்று கொள்ள வேண்டும்.

மேற்கண்ட இறைவனின் வேத வரிகளை பாருங்கள். நம்மில் சிலர் உணர்வாக நடப்பில் பல விசங்களை கண்டு இருக்கலாம், நாம் இறைவனுக்கு அஞ்சி நடந்து வருவோம் அதில் எந்த வித குறைபாடும் இருக்காது. இடையில் எத்தனையோ சோதனையான கஷ்டம், சிரமங்கள் வரும் ஆனால் இறைவனிடம் பொறுப்பை விட்டுவிடுவோம், வல்ல இறைவனும் நமக்கு வந்த சிரமங்களை எளிமைப்படுத்தி விடுவதுடன் முழுவதுமாக துன்பத்திலிருந்து நமக்கு விடுதலை கொடுத்து விடுவான். இதை தான் மேற்கண்ட வசனத்தில் இறைவன் நமக்கு நிணைவுபடுத்துகிறான். நமக்கு ஏற்படும் சிரமங்களுக்கு தீர்வு இறைவனிடம் மட்டுமே உள்ளது. எனவே அவனிடம் மட்டுமே உதவியை நாட வேண்டும். அத்துடன் இறைவனே நமக்கு இத்தகைய சிரமங்களில் விடுப்பட வழிவகையை ஏற்படுத்தி கொடுக்கிறான்.

 
நம் குடும்ப வகையில், நண்பர்கள் வட்டாரத்தில் அல்லது ஊரில் சிலரை பார்ப்போம் அவர் எந்த நேரமும் இறைவனின் திருப்பொறுத்ததை வேண்டியே செயல்படுவார், அவருக்கு அவர் நினைத்து பார்த்திராத வகையில் வசதி, வாய்ப்பு மற்றும் செல்வாக்கை கொடுத்து வாழ்வில் மேன்மைப்படுத்தி காட்டுவான். அதே சமயத்தில் இப்படி கொடுக்கப்பட்டவர்களில் சிலர் இறைவனை மறந்து இந்த வசதி வாய்ப்புகள் அனைத்தும் என் உழைப்பு, திறமையால் வந்தது என்ற கர்வமிக்கவர்களாக வளம் வருவார்கள், இவர்கள் சிறிது காலம் மனிதர்களால் பெரிய அளவில் புகழப்படுவார்கள் ஆனால் திடீர் என்று ஏதோ ஒரு வகையில் வசதி, வாய்ப்புகளை இழந்து தனி ஒரு ஆளாக ஒதுக்கப்படும் நிலைக்கு வருவதை நாம் கண்டு இருக்கிறோம்.

 இறைவனுக்கு எந்த நேரத்திலும் நன்றியை நாம் உகந்த வகையில் கொடுத்து வர வேண்டும். இறைவன் நம்மிடமிருந்து எந்த தேவையும் அற்றவன் ஆனால் நாம் முழுவதும் இறைவனிடமிருந்து தான் தேவையுடையவர்களாக இருக்கிறோம்

சுயபரிசீலனை இன்ஷா அல்லாஹ் நாளைதொடருவோம்.

உங்கள் அன்பு சகோதரன்
தோப்புத்துறை .முகம்மது நூர்தீன்
அமெரிக்காவிலிருந்து.

உங்களின் இறைவன் கருணை பொழிவதைத் தன்மீது கடமையாக்கிக்கொண்டுள்ளான்உங்களின் எவரேனும் அறியாமையால் ஒரு தவறைச்செய்து விட்டு பின்னர் அதற்காக மன்னிப்புக்கோரிமேலும் தன்னைதிருத்திக் கொண்டால் திண்ணமாக இறைவன் (அவரைமன்னித்துவிடுகிறான்மேலும் அவருடன் இரக்கத்தோடு நடந்து கொள்கிறான் (6:54)




No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!