Tuesday, September 23, 2014

திருப்பூர் முஸ்லிம்களுக்கு ஆபத்து!அதிர்ச்சியில் மக்கள் !!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மக்கள் அளித்த மனுக்களை ஆட்சியர் கு.கோவிந்தராஜ் பெற்றுக் கொண்டார்.

பாதுகாப்பு அளிக்க வேண்டும்

திருப்பூர், ஸ்ரீ நகரில் மஸ்ஜிதே இ.மதீனா அஹ்லுஸ் சுன்னத் ஜமாத் என்ற பெயரில் மசூதி கட்டி, கடந்த 22 ஆண்டுகளாக தொழுகை நடத்தி வருகிறோம். இந்நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளாக சில நபர்கள், இஸ்லாமியர்கள் யாரும் ஸ்ரீ நகர் பகுதியில் இருக்கக்கூடாது என்று மிரட்டி வருகின்றனர். மேலும், வாடகைக்கு குடியிருந்து வந்த இஸ்லாமிய மக்களை, வீட்டு உரிமையாளர்களிடம் கூறி காலி செய்ய வைத்துவிட்டார்கள். இதேபோன்ற சம்பவம் மீண்டும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு அளிப்பதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி, மஸ்ஜிதே இ.மதீனா அஹ்லுஸ் சுன்னத் நிர்வாகிகள் ஆட்சியர் கு.கோவிந்தராஜிடம் மனு அளித்தனர்.

tamil.thehindu.com/tamilnadu/பாதுகாப்பு-கோரும்-திருப்பூர்-ஸ்ரீ-நகர்-இஸ்லாமியர்கள்/article6438500.ece

இந்தியா ஒரு ஜனநாயக நாடு தானே?ஏன் இந்த பாகுபாடு?அரசு என்பது எல்லாருக்கும் பொதுதான் அல்லவா?ஒருவர் எண்ணிக்கையில் குறைவு அல்லது சிறுபான்மையோர் என்பதற்காக எவ்வாறு சிலர் மிரட்டுவதைக் கண்டிக்காமலும்,தண்டிக்காமலும் இருக்க இயலும்?
ஓட்டு கேட்டு வரும் போது மட்டும்,நாங்கள் சிறுபான்மை மக்களுக்கும் உதவிகள் செய்வோம் என கூப்பாடு இடும் அரசியல் கட்சிகள்,ஓட்டு வேட்டை நடத்திய பின் கண்டும் காணாமல் இருப்பது முறையா?
அரசே,உடனே நடவடிக்கை எடு.பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆவன செய்.இதுவே நடுநிலைமை கொள்கை.

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!