Friday, September 19, 2014

சபாஷ் மோடி! இன்னும் எதிர்பார்க்கிறோம் !

பிரதமராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சிக்கு மோடி பேட்டியளித்துள்ளார். இந்தப் பேட்டி ஞாயிற்றுக்கிழமை சிஎன்என் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. அதன் சில பகுதிகளை இன்று சிஎன்என் வெளியிட்டுள்ளது.

அல்கொய்தா அமைப்பினர் இந்திய இஸ்லாமியர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுகின்றனர். அல்கொய்தா தாளத்துக்கு, இந்திய முஸ்லிம்கள் ஆடுவார்கள் என்று யாராவது நினைத்துக் கொண்டிருந்தால் அவர்கள் மாயையில் உள்ளனர் என்று அர்த்தம். இந்திய முஸ்லிம்கள் இந்தியாவுக்காக வாழ்வார்கள், இந்தியாவுக்காகத்தான் சாவார்கள். அவர்களின் தேசப்பற்று சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டது என்று மோடி கூறியுள்ளார்.
இந்தியாவில் உள்ள 170 மில்லியன் முஸ்லிம்களில் அல்கொய்தாவுக்கு ஆதரவு அளிப்பவர்கள் கிடையாதா என்ற கேள்விக்கு பதிலளித்த மோடி "உலகில் மனிதாபிமானம் இருக்க வேண்டுமா இல்லையா என்பதுதான் இப்போதுள்ள பிரச்சினை. மனிதாபிமானத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோர் எல்லோரும் ஓரணியின் நிற்க வேண்டிய தருணம் இது. உலகில் தற்போது எழுந்துள்ள சிக்கல் எந்த ஒரு நாட்டுக்கும் அல்லது இனத்துக்கும் எதிரானது கிடையாது, மனிதாபிமானத்துக்கு எதிரானது. எனவே நாங்கள் மனிதாபிமானத்துக்கும், மனிதாபிமானம் இல்லாதவர்களுக்கும் நடுவே நடக்கும் போராட்டமாகத்தான் இதை பார்க்கிறோம்" என்று மோடி பதிலளித்துள்ளார்.

இம்மாத இறுதியில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது குறித்து கருத்து தெரிவித்து மோடி கூறுகையில், இந்தியாவுக்கும் அமெரிக்காவும் கலாச்சாரம் மற்றும் வராலாற்று அடிப்படையில் பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன. இந்தியா- அமெரிக்கா உறவில் சில ஏற்ற இறக்கங்கள் உள்ளன என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். 21ம் நூற்றாண்டில் இந்திய அமெரிக்க உறவில் புதிய வடிவம் கிடைக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

மோடியின் இந்த மனமாற்றம் உண்மையாகவே இருக்குமானால்,அவரை நாம் பாராட்டித்தான் ஆகவேண்டும்.அதே வேலை,வெறும் வாய் வார்த்தை ஆக இல்லாமல்,அதை மோடியும் முஸ்லிம்கள் விஷயத்தில் நடந்துகொள்ள வேண்டும்.
முஸ்லிம்களுக்கு எதிரான rss கொள்கைகள் வாபஸ் பெறப்பட்டு,எல்லா மக்களும் சமமே என்ற அடிப்படியில் அவர்கள் நடந்து கொண்டால்,இந்தியா வல்லரசாக,நல்லரசாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.இந்துக்கள்,முஸ்லிம்கள்,கிறிஸ்தவர்கள் மற்றும் இன்ன பிற மக்கள் அனைவரும் இந்த நாட்டின் மண்ணின் மைந்தர்கள் என ஒன்று சேரவேண்டும்.அதற்கு,மோடி மற்றும் rss அமைப்பு உண்மையாகவே நடந்து கொள்ளவேண்டும்.
இஸ்லாம்,தீவிரவாதத்தை ஏற்கவில்லை.அனைவருக்கும் பொதுவாக,சமமாக நடக்கவே சொல்கிறது.எனவே,அல் காய்தா மிரட்டலுக்கு யாரும் செவி சாய்க்க போவதில்லை.எனவே,அரசும் கலவர படத்தேவை இல்லை.மேலும்,அந்த மிரட்டலை காரணம் காட்டி,அப்பாவி முஸ்லிம்களை கைது செய்தும்,தண்டித்தும் வரும் போக்கு மாறிட வேண்டும்,அந்த அப்பாவி மக்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்.
இதையும் மோடி செய்ய வேண்டும்.பேச்சுக்காக அல்லாமல்,செயலில் காட்டினால் - அதுவே நம் நாட்டிக்கு நல்லது.
---------------------------------------------------------------------------------------
நபிகள் நாயகம் ஸல் அவர்கள், இரண்டு உமரில் ஒரு உமருக்கு ஹிதாயத் கொடு யா அல்லாஹ் என கேட்டார்கள்.அல்லாஹ் ஏற்றுக் கொண்டான்.நமக்கு உமர் ரலி அவர்கள் கிடைத்தார்கள்.அதே போல நாமும் கேட்போம்,யா அல்லாஹ்,இந்திய பிரதமர் மோடிக்கு ஹிதாயத் கொடுப்பாயாக.அதன் மூலம் இன்னும் வலுவூட்டுவாயாக.எல்லா மக்களும் சுபிட்சமாக வாழ அருள்வாயாக

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!