Wednesday, April 25, 2012

உங்கள் பிரார்த்தனையில்...,


அன்புச் சகோதரர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


பல ஆண்டுகளாக ஜித்தா துறைமுகத்தில் பணியாற்றி கொண்டே,

மார்க்க நிகழ்ச்சிகளுக்கும், வகுப்புகளுக்கும் நேரம் ஒதுக்கி பணியாற்றிய

"தஃப்ஸீர் ஆசிரியர்" என்று மக்களால் சிலாகித்து சொல்லப்படும்

மவ்லவி.சித்தீக் மதனி அவர்களுக்கு, இன்ஷா அல்லாஹ்

நாளை சென்னை விஜயா மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை

நடைபெற உள்ளது.


அவர்களின் உடல் பூரண குணமடைய தாங்கள் அனைவரும் வல்ல ரஹ்மானிடம்

துஆச் செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

அல்லாஹ்வை அஞ்சி கொள்

ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய்....
உன்னை குளிப்பாட்டுவார்கள்... 
நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். 
நீ பள்ளிவாசல் போ க மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள்.
நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும்
நீ அல்லா்ஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள்.
அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள்.
அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள். .
அது தான் மௌவுத் (மரணம் ).

சகோதர சகோதரிகளே அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள்....

இந்திய முஸ்லிம்கள் கொதிப்பு,இலங்கை தூதரகம் முற்றுகை


இலங்கை தம்புல்ல ஜும்மா பள்ளிவாசலை உடைத்த  சிங்கள அரசை,புத்த வெறி பிடித்த பிக்குகளையும் கண்டித்து  இலங்கை தூதரகத்தை முற்றுகை இடும்  போராட்டத்தை அறிவித்திருக்கிறது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் .

இந்த அநீதிக்கு எதிராக இன்ஷா அல்லாஹ் வருகின்ற 28/04/12(சனிகிழமை) மாலை 4 மணியவில் இலங்கை தூதரகத்தை முற்றுகை இட இருக்கிறது இந்த போராட்டத்தில் அணியணியாய் குடும்பத்துடன் பங்கேற்க அழைக்கிறது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.

Tuesday, April 24, 2012

அதிரை கவுன்சிலர்களுக்கும்,இயக்க நண்பர்களுக்கும் அவசர வேண்டுகோள்......


மே 1 முதல் நடைபெற இருக்கும் சாதி,மத,வகுப்புவாரி கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் சரியான தகவல்களை அளிப்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி , பதிவுகள் ஏதாவது ஏற்பாடு செய்தால் நல்லது.

பொதுவாக வெளிநாட்டில் வசிப்பவர்களை அதிகாரிகள் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்து விடுகின்றனர். குடும்ப அட்டைக்கு (ரேஷன் கார்டு) பதிவு செய்வதற்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கும் வேறுபாடு உள்ளது. முன்னது உணவுப் பொருள் விநியோகத்திற்காக கணக்கிடப்படுகிறது. அதில் வெளிநாட்டில் வசிப்பவர்களை சேர்க்காவிட்டால் பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை. பின்னது அரசு நலத்திட்டங்கள் இடஒதுக்கீடு வேலைவாய்ப்பு ஆகியவற்றை தீர்மானிப்பதில் முக்கிய காரணியாக இருக்கிறது. 

கணக்கெடுப்பு தொடர்பான விவரங்கள் எழுத்துப்பூர்வமாக இல்லாமல் நேரடியாக கம்ப்ïட்டரில் பதிவு செய்யப்படுகின்றன..எனவே இக்கணக்கெடுப்பில் அதிரையில் பிறந்த அணைவரையும் பதிவு செய்ய வேண்டியது அவசியம்.
 

இந்த விஷயத்தில் அசிரத்தையாக இருந்து விடக்கூடாது.

- வழிகாட்டி பதிவுகளை அணைத்து அதிரை வலைப்பக்கங்களிலும் பதிவது.
- அதிரையின் சமுதாய அரசியல் இயக்கங்கள், மற்றும் சங்கங்கள் இவ்விஷயத்தை வீடுகளில் வலியுறுத்துதல்
- பதிவு செய்ய வரும் அதிகாரிகளுடன் தெருவாரியாக தன்னார்வலர்களை உடன் அனுப்புதல்
- கவுன்சிலர்கள் உடனிருப்பதும் அவசியம்.
மிகச்சிரமமான பணியான இந்த கணக்கெடுப்பு அடிக்கடியோ ஆண்டுதோறுமோ ஐந்தாண்டுகளிளோ எடுக்கப்படுவதில்லை. எப்போதாவது அத்தி பூத்தாற்போல் எடுக்கப்படுகிறது. எப்படியும் அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்த கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே அரசு திட்டங்களும் ஒதுக்கீடுகளும் இருக்கும். நாளேடுகளில் இதர சாதி சங்கங்களின் அறிக்கைகளை படித்து பார்த்தால் இதன் முக்கியத்துவம் விளங்கும்.

Monday, April 23, 2012

குடும்பக்”கொல்லி”யை ஊரைவிட்டு(த்) துரத்த....

தமிழகத்தில் முஸ்லிம்கள் பெருபான்மையாக வாழக்கூடிய, வரலாற்று சிறப்பு மிக்க பிரபல கல்வி நிறுவனங்கள், மார்க்கத்தை பயிற்றுவிக்கும் மதரசாக்கள், மனித நேயத்தை வளர்க்க மஸ்ஜித்கள், சமுதாய சேவைகளுக்கென்று இஸ்லாமிய அமைப்புகள், பைத்துல்மால், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிரபல அரசியல் கட்சிகள் அமையப்பெற்ற ஊர்களில் அதிரைப்பட்டினமும் ஓன்று இவ்வூரில் பிரபல தொழில் அதிபர்கள், கல்வி சீமான்கள், கொடை வள்ளல்கள், மார்க்க அறிஞர்கள், கல்வி பயின்ற மேதைகள், கணினி வல்லுனர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், சட்டம் தெரிந்த வல்லுனர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் வாழ்ந்த, வாழ்ந்துகொண்டுருக்கிற ஊரில்.........”மதுக்கடைகள்” !

இவை ஓன்று, இரண்டாகி, மூன்று, நான்காகி, ஐந்து என பெருகிக்கொண்டே வருவது மிகவும் வேதனையளிக்கக் கூடியது மட்டுமல்ல ஊரிலுள்ள குடும்பங்களையே அழிவின் பாதையில்
அழைத்துச் சென்றுவிடும்.

இடம் : பட்டுக்கோட்டை ரோடு ( பாத்திமா நகர் அருகே )

மதுக்கடை + கூடம்” ஜருராகத் தயாராகிறது நமதூருக்கே பெருமை சேர்க்கக்கூடிய மிகப்பெரிய மருத்துவமனை எனும் சிறப்பைப் பெறுகிற “ஷிஃபா” அருகே............
மேலும் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிற சாலைப்பகுதி, அதிரை மின்சார வாரியம், இன்டேன் காஸ் நிறுவனம் போன்றவை அமைந்துள்ளப் பரபரப்பானப் பகுதியின் அருகே...........


இடம் : E.C.R சாலை ( பெரிய ஏரி அருகில் )
ஒரு நிமிடத்திற்கு ஏறக்குறைய 60 வாகனங்கள் கடந்து செல்லக்கூடிய இரு வழிச்சாலைப்பகுதி E.C.R. இச்சாலையில் நமதூரைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் சிலர் அதிகாலைப்பொழுதிலும் வேறுசிலரோ மாலை நேரங்களிலும் “வாக்கிங்” “சைக்கிளிங்”,”ஜாக்கிங்” போன்றவற்றை செய்வதுண்டு.
மேலும் இப்பகுதியில் அதிகமாக விபத்துக்கள் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு நமது அரசு மருத்துவமனையின் இரவு நேர சேவை மற்றும் கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வேண்டி நமதூரைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் ஒரு சில அரசியல் கட்சிகளின் கோரிக்கையாக அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லும் இவ்வேளையில் அப்பகுதியில் குடும்பத்தையே அழித்துவிடக்கூடிய “மதுக்கடை”

சமீபத்தில்தான் மதுவின் பாதிப்புகள் மற்றும் தீர்வுகளைப் பற்றி “குடிக்காதே”எனும் தலைப்பிட்டு விழிப்புணர்வைத் தூண்டும் விதமாகக் கட்டுரை ஓன்றைப் பதிந்த எனக்கே இக்கூடங்களைக் கண்டதும் மிகவும் மன வேதனையடையச் செய்ததே...............!

அப்போ உங்களுக்கு எப்படி இருக்கும் ?


நமதூர் பிரபல அரசியல் கட்சிகளே !
சமுதாய அமைப்புகளே !!
இயக்கவாதிகளே !!!
தொண்டு நிறுவனங்களே !!!!
சமூக ஆர்வலர்களே !!!!!
மாணவ, மாணவிகளே !!!!!!
பொதுமக்களே !!!!!!!

எழுந்துருங்கள் ! தயாராகுங்கள் !! புறப்படுங்கள் !!! இதுபோன்ற குடும்பக்கொல்லியை ஊரைவிட்டு துரத்துவதற்கென்றே.................

சேக்கனா M. நிஜாம்

இறைவன் நாடினால் ! தொடரும்......................

தம்புள்ள பள்ளிவாசல்,இந்துக் கோயிலை இடிக்க தீர்மானம்,புத்த பிக்குகள் சண்டித்தனம்


சில நாட்களுக்கு முன்பு தம்புள்ள என்ற இடத்தில் இருந்த பள்ளிவாசல் உடைக்கபட்டு,மீண்டும் மீண்டும் வம்பு செய்யும் நோக்கில் அங்குள்ள புத்த பிக்குகள் ஈடுபட்டுவருகின்றனர்.முஸ்லிம் பொது மக்களையும்,வியாபாரிகளையும் மிரட்டி வருகின்றனர்.இதற்கு அரசின் சில அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களும் உடந்தையாக உள்ளனர் என்பது வெளிப்படையான உண்மையாகும்.


மேலும்,இந்திய முஸ்லிம் மக்களாகிய நாம் இதற்கு என்ன செய்யப் போகிறோம்?நாம் ஏற்கனவே சங்கபரிவார கும்பல்களால் தகர்க்கப்பட பாபர் மஸ்ஜிதை இழந்து நிற்கிறோம்,அதற்கு இன்றுவரை போராடுகிறோம்.இன்ஷா அல்லாஹ்,அது விரைவில் நமக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.இப்போது,இந்த அச்சுறுத்தல் நம் அண்டை நாடான இலங்கையில் நம் மஸ்ஜித் ஒன்றுக்கு ஏற்பட்டிருக்கிறது.
இதற்கிடையே இப்படி ஒரு செய்தி,நமக்கு கிட்டியுள்ளது.
தம்புள்ளயிலுள்ள பள்ளிவாயல் ஆறு மாத காலத்திற்குள் அகற்றப்படல் வேண்டுமென இன்று தம்புள்ளையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று தம்புள்ள பள்ளிவாயல் விவகாரம் தொடர்பான உயர் மட்டக் கூட்டமொன்று தம்புள்ள பிரதேச செயலக கட்டிடத்தில் நடைபெற்ற போது இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் புத்தசாசன அமைச்சின் செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர் உள்ளிட்ட தேரோக்கள் கலந்து கொண்ட போதிலும் இக் கூட்டத்தில் எந்த முஸ்லிம் முக்கியஸ்த்ர்களோ  பள்ளிவாயல் நிருவாகிகளோ கலந்து கொள்ளவில்லையெனவும் தெரிய வருகின்றது.
தம்புள்ளையில் புனித பிரதேச மெனக் கூறப்படும் இடத்திற்குள் 72 சட்டவிரோத கட்டிடங்கள் இருப்பதால் அதை அகற்றிவிடுவதென இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இந்த 72 கட்டிடங்களுக்குள் தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயல் மற்றும் தம்புள்ள இந்து காளிகோயில் என்பனவும் வருவதாகவும் இதை உடைக்கவேண்டுமெனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தக் கூட்டத்தில் ரங்கிரிய பௌத்த விகாரையின் விகாராதிபதி உட்பட பல தேரோக்கள் கலந்து கொண்டுள்ளனர்,என்பதே அந்த செய்தியாகும்.

எனவே,இந்தப் பூமியில் எங்கு பள்ளிவாசலுக்கு எதிரான வன்முறை வெடிக்கிறதோ,அதற்கு நாம் பலியாகிவிடாமல்,பொறுமையுடன்,வேகத்துடன் கூடிய விவேகத்துடன் கூடிய ஆக்கபப் பூர்வ காரியம் செய்யவேண்டும்,இப்போதைக்கு எல்லா முஸ்லிம் அமைப்புக்களும் ஒன்றிணைந்து இந்தியாவின் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு,நம் எதிர்ப்பைக்காட்ட வேண்டும்.

முதலில் இதிலிருந்து ஆரம்பிப்போம்,இன்ஷா அல்லாஹ்.
(மேலும் பல விவரங்களுக்கு இந்த லிங்கில் கிளிக்கவும் )


Saturday, April 21, 2012

மீட்கப்பட்டது பள்ளிவாசல்.சிங்கள பேரினவாதம் முறியடிப்பு

தம்புள்ளை ஒரு புனித பூமி என்பதன் காரணமாக அங்கு இருக்கும் பள்ளிவாசலை அகற்றும் படி கூறி நேற்று  பிக்குமார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பள்ளிவாயல் உள்பகுதி சிறு சேதத்திற்கு உள்ளானதுடன் பொலிசாரினால் பள்ளியினுள் பிரவேசிக்க முடியாதவாறு தடை இடப்பட்டிருந்தது.
இன்று காலை பள்ளிவாயளுக்கு விஜயம் செய்த கௌரவ அமைச்சர்களான பௌஷி மற்றும் ரிஷாத் பதியுதீன், பள்ளிவாயல் நிர்வாக சபையுடன் நடந்த விடயம் தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன் பள்ளிவாயலை உடன் திறப்பதற்கு ஏற்பாடும் செய்தனர்.
அமைச்சர்களின் இந்த விஜயத்தின்போது அப்பிரதேசத்திற்குரிய பிரதேச செயலாளரையும் சந்தித்தனர். பிரதேச செயலாளரின் அறிக்கையை மேற்கோள் காட்டியே அப்பள்ளிவாயல் சட்டபூர்வமற்ற கட்டிடம் என்று பல செய்திகள் வெளியாகியுள்ளதுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டவர்களும் கோஷமிட்டனர்.
இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் பிரதேச செயலாளரை கடுமையாக கடிந்து கொண்டதுடன், பள்ளிவாயல் வக்பு செய்யப்பட்டதற்கான ஆதாரத்தையும் முன்வைத்தனர்.
பள்ளிவாயல் அருகில் உள்ள மாற்று மத சகோதரர்களை அமைச்சர்கள் சந்தித்தபோது அவர்கள், இந்த பள்ளிவாயலால் எங்களுக்கு எந்தவிதமான இடையூறுகளும் இல்லை மாத்திரமின்றி இந்த பள்ளிவாயல் நாங்கள் அறிந்த காலமுதல் இங்கேயே உள்ளது என்றும் தெரிவித்தனர். அத்தோடு இங்கு வன்முறையில் ஈடுபட்டவர்கள் வெளியிடங்களில் இருந்து வாகனங்கள் மூலம் கொண்டுவரப்பட்டவர்கள் என்றும் தெரிவித்தனர்.
இந்தபள்ளிவாயல் விடயம் தொடர்பாக நாம் ஜனாதிபதியுடன் நேரடியாக பேசுவதாகவும் இதற்கு சுமுகமான தீர்வை பெற்றுத்தருவதாகவும் அமைச்சர்கள் உறுதியளித்தார்கள்.
பள்ளிவாயல் உள்ளக சேதம் தொடர்பாக பிரதேச வாசியுடன் தொடர்பு கொண்டபோது அவர் தெரிவித்தார்,
“பள்ளிவாயலின் மிம்பருக்கு (மேடை) சேதம் ஏற்பட்டுள்ளது, குர்ஆன் வைத்திருந்த அலுமாரியின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருந்தது. மின் விசுரிகளின் அலகுகள் வளைக்கப்பட்டு பிறகு நேர் படுத்தப்பட்டிருந்தன, சேதமான மின்விசிறி உட்பட அனைத்தையும்  எதுவம் நடக்காதது போன்று சரிசெய்து இடத்தையும் துப்பரவு செய்யப்பட்டிருந்தது.” என்று தெரிவித்தார்.
தற்பொழுது பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தம்புள்ள பள்ளிவாயலுக்கு சென்றுள்ளதாக எமது செய்தியாளர் ஜெலீஸ் தெரிவிக்கின்றார்.

உடைக்கப்பட்ட இரண்டாவது பாபர் மஸ்ஜித்


ஜெனிவா மனித உரிமை மாநாட்டில் முஸ்லிம் தேசங்கள் இலங்கைக்க்கு ஆதரவாக வாக்களித்தததிற்கு கிடைத்த பரிசா இது?

இந்திய இந்துத்துவ வாதிகளின் மதவாத மிதமிஞ்சிய போக்கு முஸ்லிம்களின் பழைமைவாய்ந்த பாபர் மஸ்ஜித் எனும் ஒரு இறை இல்லம் தகர்கப்பட்டது.

அந்த காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு இந்திய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக்கூட நாம் இன்னும் மறக்க வில்லை.

அதற்கிடையில் மதம் பேசும் பெளத்த பிக்குகளின் இந்த பள்ளி உடைப்பு இன்று நடந்தேறி இருக்கின்றது.

2000க்கும் அதிகமான பிக்குகள் அணிதிரண்டு இந்த பள்ளி உடைப்பை நடத்தி இருக்கின்றார்கள்.

அண்மையில் நுவரெலியாவில் திறந்துவைக்கப்பட்ட பள்ளிவாயல் ஒன்றுக்கு நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ சென்று பங்கேற்றதும் பழைய செய்தியல்ல.

பெளத்த மததின் புனித பூமி என்பதால் இந்த பள்ளி இடிக்கப்பட்டது என்றால்,
ஏன் இன்று மட்டும் இந்த காரணம்?

இது புனித பூனி என்பதற்கு என்ன ஆதாரம்?

இந்த எல்லைக்குள் மதுக்கடைகள் இயங்க முடியுமா? இல்லையென்றால் அவைகளை எப்போது அகற்றுவீர்கள்?

இங்கு இயங்கும் சுற்றுலா விடுதிகளில் மதுபானம் பரிமாறப்படுகின்றதுதானே, இது பரவாயில்லையா?

புனித பூமியில் சர்வதேச விளையாட்டு மைதானம் நிர்ணயிக்கப்பட்டு, புனித பூமி கேளிக்கூத்தாக்கப்படுவது பரவாயில்லையா?

பிறமதத்தவர்கள் பிரவேசிக்க முடியுமா? முடியாது என்றால் வெளிநாட்டு சுற்றுலாதாரர்களின் அனுமதி நிறுத்தப்படுமா?

பெளத்த மதத்தை போதிக்கும் பிக்குகள் இவ்வாறு நடந்துகொள்ளுவதற்கு தங்களது வேத நூலில் அனுமதி இருக்கின்றதா?

இந்த படையெடுப்பில் இடம்பெற்ற எவருக்கும் அல்லது தலைமைதாங்கிய மத குருக்களுக்கு இந்த நாட்டில் முஸ்லிம்களின் பங்கு என்ன என்பது பற்றி தெரியாதா?

ஜெனிவா மனித உரிமை மாநாட்டில் முஸ்லிம் தேசங்கள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தமைக்கு கிடைத்த பரிசா இது?

இங்கு வாழும் முஸ்லிம்கள் இந்த தேசத்தில் ஒரு துண்டை கேட்டு ஆயுதம் தூக்கினார்களா?
அதற்காக சர்வதேச நாடுகளில் முறையிட்டார்களா?

இலங்கைக்கு நிதியுவதி வழங்கிவரும் இஸ்லாமிய நாடுகளின் நிதி மற்றும் ஏனைய உதவிகள் இன்றுடன் நிருத்தப்படுமா?

சர்வதேச மனித உரிமைகள் தொடர்பாக தலையைப் பிய்த்துக்கொள்ளும் அமெரிக்கா இதில் தலையிடுமா?

இலங்கையின் மனித உரிமை மீரல் தொடர்பாக கவலைப்படுகின்ற இந்தியா வாய் திறக்குமா?

காத்திறுக்கின்றோம் உங்கள் நியாயங்களுக்கு……….

ஜனாதிபதியினதும் நீதித்துறையினரதும் நேரடி நடவடிக்கைக்கு காத்திருக்கின்றோம்.

இனியும் நடக்காமல் இருக்கட்டும்.

From BBC News:
Sri Lanka mosque protestBuddhist monks were also involved in the protest

Sri Lankan mosque forced to abandon prayers by protesters

A mosque in Sri Lanka has been forced to abandon Friday prayers amid community tensions in the central town of Dambulla.

From adaderana News:
Thousands of Buddhist monks and lay supporters have protested the construction of a mosque and a Hindu temple built within the area designated as a Buddhist sacred zone in Dambulla.

The protestors, shouted slogans and waved the Buddhist flag and marched from the Dambulla town towards the mosque located in the Kandalama Junction, during Friday prayers.


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

Is it gift for Muslims who support the Srilankan Government in Geneva Summit for Human Rights and Democracy?

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!